Friday, April 29, 2005

7 நப்பாசைன்னா இதுதாங்கோ...!

எனக்கு மணிரத்தினத்தின் 'அஞ்சலி' படத்தில் உள்ள பாட்டு, நடனம் எல்லாம் எடுத்துவிட்டு 'படம்' மட்டும் பார்க்க ஆசை. அப்படியிருந்தால் அந்தப் படம் தரமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

150 நிமிடங்களுக்குப் படம் தந்தாக வேண்டிய சூழ்நிலையில் தேவையில்லாத சண்டை, பாட்டு, 'இப்படி போடு..இப்படி போடு' நடனங்கள் என்று போட்டு நம்மைத் தாளித்து விடுகிறார்கள்.

நம் தமிழ்ப்படங்களைத் தரமானதாக்க எனக்கு ஒரு வழி தெரியும். 90 நிமிடங்களுக்கு மேல் படங்கள் தயாரிக்கக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டாலென்ன அப்படின்னு ஒரு யோசனை வந்தது. சாத்தியமில்லை என்று உடனே தெரிந்தது. ஆனால், பிறகு அதை ஒட்டி தோன்றிய யோசனை தாராளமாக சாத்தியமுள்ளதாகத் தெரிகிறது.

90 நிமிடங்களுக்குள் எடுக்கப்படும் படங்களுக்கு 30-50% மட்டுமே வரி என்று சட்டம் கொண்டுவந்தால் (சினிமாவுக்கும் subsidy-தான்!), இப்போது வந்த படங்களான 'காதல்', 'ராம்' போன்ற படங்களின் இயக்குனர்கள் போன்றவர்கள் 90 நிமிடப்படங்கள் எடுக்க முன்வர மாட்டார்களா? (மணிரத்தினம்,கமல் பாட்டு இல்லாத படம் எடுப்பதைப்பற்றி பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்.)

இந்த காலக்கட்டுப்பாட்டால் சொல்லவந்ததை மட்டும் சொல்லவேண்டிய கட்டாயத்தால் கொஞ்சம் சிரத்தையோடு நம் இயக்குனர்கள் செயல்படமாட்டார்களா என்ற ஆதங்கம். அதனால் நல்ல படங்கள் வந்து விடாதா என்ற நப்பாசை.

நடனக்கலைஞர்களும், பாட்டெழுதியே பெயர் வாங்கும் - தருமி அல்ல!- பாடலாசிரியர்களும் வீடியோ தயாரிக்கப் போகட்டும். அதுவும் தனித் தொழிலாக விரியட்டும்.


நடக்குமாங்க...?

தருமி இன்னும் வருவான்...!

6 comments:

துளசி கோபால் said...

தருமி,

இப்படி நடந்தாலெனக்கு மிகவும் சந்தோஷமே!!!

என்றும் அன்புடன்,
துளசி.

Unknown said...

இண்டி பாப் மாதிரி தமிழிலும் பாப் பாடல்கள் பிரபலமானால் பாடல் இல்லாத தமிழ்ப்படங்கள் சாத்தியமாகலாம்

ரோஸ்விக் said...

இதில் முழுவதும் உடன்பாடில்லை.

1 சில இடங்களில் பாடல்கள் தேவைப்படுவதுண்டு. அது வலிய திணித்ததாக இருக்கக் கூடாது.

2 சில கதா பாத்திரங்களின் குணங்களை எளிதாக புரிய வைப்பதற்கும், பல நிகழ்வுகளை துரிதமாக சில நிமிடங்களில் சொல்வதற்கும்

3 மணிரத்தினத்தின் பல படங்களில் பாடல்கள் முரண்பாடு இல்லாமல் வரும். முரண்பாடுக்கு உதாரணம் வேண்டுமென்றால் அஜீத் நடித்த அட்டகாசம் திரைப்படத்தின் பொள்ளாச்சி இளநீரே பாடலையும் அது வரும் சூழ்நிலையையும் பார்க்கவும். விஜய் படத்தில் கேட்கவே வேண்டாம்.

4 கமல் பாடல் இல்லாமல் படம் எடுத்திருக்கிறார் (குருதிபுனல்)

5 தேவையில்லாத குத்துப்பாட்டுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

6 பாடல்களுக்காகவே தான் நடிகைகள் தேவைப்படுகிறார்கள் :-)

7 என்னைப்போன்ற வாலிபர்களுக்கு பாடல்கள் தான் குஜாலாக்கீது :-)))

ரோஸ்விக் said...

ஒன்னு மட்டும் ஒத்துக்கிறேன். 5 பாட்டு வச்சே ஆகணும்னு படம் எடுத்து என்னத்தையாவது பாட்டாக்கி அதை படத்துல எங்கையாவது சொருகிவிட்டு எவளையாவது ஆடவிடுற பாட்டு தேவையில்லாதது தான்.
:-)

தருமி said...

//7 என்னைப்போன்ற வாலிபர்களுக்கு பாடல்கள் தான் குஜாலாக்கீது :-)))//

இதெல்லாம் இல்லாம இங்கிலிபீசு படம் பார்க்குறீக .. அது எப்படி?

செங்கோவி said...

நடக்க ஆரம்பித்துவிட்டது!

Post a Comment