Wednesday, June 01, 2005

14. சொந்தக்கதை...சோகக்கதை

சொந்தக்கதை...சோகக்கதை

அம்மாடி, போதுண்டாப்பா சாமி. புது வீடு கட்டினால், வேறு வீட்டில் தங்கிக்கொண்டே கட்டிக்கொள்ளலாம். இருக்கும் வீட்டையே மராமத்து பார்க்கிறதோ, புதுசா ஏதாவது சேர்க்கிறதோ இருக்கிறதே... அனுபவிச்சாதான் தெரியும். அகதிகள் கெட்டார்கள், போங்கள்.

உடைச்சிப்போட்ட சுவர்கள், தோண்டிப் போட்ட தரைகள், குவிச்சு வச்ச குப்பைகள், புதிதாக வெட்டிப் போட்ட பள்ளங்கள்... musical chair விளையாட்டு மாதிரி சாமான் செட்டுகளோடு இந்த அறையிலிருந்து அந்த அறைக்கும், அந்ததிலிருந்து அடுத்ததற்கும் நாளொரு அறையும், பொழுதொரு இடமுமாக மாறி மாறி... தூசி படக்கூடாதுன்னு நீங்க நினைக்கிற உங்க கம்ப்யூட்டர், இன்னும் மற்ற சாமான்களை மூடிப் பாதுகாத்து... இது போதாதுங்கிறது மாதிரி, சூடம் அடிக்காத குறையா நாளைக்கு இந்த வேலையென்று உங்கள் காண்டிராக்டர் / கொத்தனார் / பெயிண்டர் சொல்லிச் சென்றதை நம்பி நீங்களும் எதையாவது எங்காவது மாற்றி விட்டு, வெளி வேலைக்கும் மாற்று சொல்லிவிட்டு பாவம்போல உட்கார்ந்திருப்பீர்கள் - உறுமீனுக்குக் காத்திருக்கும் கொக்கு மாதிரி... அதெல்லாம் உங்கள் தலையில் அவர்கள் வைத்த வெண்ணைய் என்று தெரியாமல். அடுத்த நாள் வந்து அவர்கள் கொடுக்கும் சால்ஜாப்புகள் உங்களை மெய்சிலிர்க்க வைத்துவிடும். கத்தினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு ஆயிடுமோங்கிற பயத்தில் நீங்கள் மவுனமாக ஆனால் உணர்ச்சிபூர்வமாக அவர்களது விளக்கங்களோடு - ஜோதியில் கலப்பதுமாதிரி -கலந்தேயாக வேண்டும்.

சீச்சீ..இந்தப் பழம் புளிக்கும் என்ற முன்யோசனையோடு, அல்லது இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று புத்திசாலித்தனமாக முடிவெடுக்காமல், அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு வீட்டைப் புனருத்தாரணம் பண்றேன்னு முடிவு பண்ணி இந்த சிக்கலில் மாட்டிக்கிட்டீங்கன்னு வச்சுக்குவோம்; அதுவும் மனைவி சொல்லே மந்திரம்னு (என்னை மாதிரி ) நினைச்சு இந்த மாயவலையில் சிக்கிட்டீங்கன்னு வச்சுக்குவோம். அடுத்தடுத்து வரும் சிக்கல்களை எதிர்கொண்டு, இருக்கும் கொஞ்ச தலைமுடியையும் பிச்சுக்கிட்டு, பல்லைக்கடிச்சுக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கும்போது 'நான் அப்பவே நினைச்சேன் இதெல்லாம் தேவையான்னு' அப்டீன்னு ஒரு அசரிரீ கேட்கும்; உங்களை இந்த சிக்கலில் சிக்க வைத்த அந்த ஆத்மாதான் அதைச் சொல்லியிருக்கும். இதிலும், உங்க மனைவி சொல்லி இதில் இறங்கியிருந்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பாவம் நீங்கள்.. உங்கள் அகதி வாழ்க்கை ரொம்பவே கஷ்டம்தான். இப்போ பழிபூராவையும் நீங்கள்தான் தாங்கிக்கொள்ளவேண்டும். Day in and day out 'வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்; நான் சொன்னா கேட்டாதானே' என்ற பல்லவி காதில் விழுந்துகொண்டேயிருக்கும். ரொம்ப புத்திசாலித்தனமாக ஏற்கெனவே அவர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் quote பண்ணி, உன்னால்தானே எல்லாம் என்று சொன்னீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்; தொலைந்தீர்கள். 'நான் சொன்னதே வேறு; நீங்கள்தான் ரொம்ப மேதாவிமாதிரி நினைச்சு தப்புக்கு மேல் தப்பாகச் செய்துவிட்டீர்கள்' என்று புதுப்புது கணைகள் பாயும்; வேறு வேறு தண்டனைகள் வரும். இந்தக் குப்பைக்குள் போய் சமையல் எல்லாம் செய்யமுடியாது என்பது சர்வ நிச்சயமான முதல் விஷயமாயிருக்கும். இப்போது உங்களுக்கு புது வேலை ஒன்று வந்துவிட்டது - வேளாவேளைக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்தாகவேண்டும். வேலை நடக்கும் நாளெல்லாம் புதுப்புது ஹோட்டல் தேடியாகவேண்டும்.

இதில் எனக்கென்று இன்னொரு கஷ்டம் என்னவென்றால் - புதிதாக ஒரு blog தொடங்கி, ஏறக்குறைய புது மாப்பிள்ளை ஜோரில் சில நாட்களுக்கு ஒரு பதிவாகப் பதிந்து, மயிலிறகை புத்தகத்தில் வைத்துவிட்டு குட்டி போட்டுவிட்டதா என்று தினம் தினம் பார்க்கும் குழந்தைபோல, பின்னூட்டங்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று தினம் தினம் பார்த்து ஏமாந்து, கன்னா பின்னாவென்று பின்னூட்டங்கள் பெறும் blogகளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, எல்லாம் நேரம் என்று காலத்தை நொந்து நூலாகி, blog browsing ஒரு addictionஆக ஆகிவிட்ட நிலையில், இந்த வீட்டு வேலையால் திடீரென்று நிறுத்தியதால் ஏற்பட்ட withdrawal syndrome-ஆல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு ஓரிரு தடவை browsisng centre போய் மெயில் பார்த்து, பின் வழக்கம்போல் பின்னூட்டங்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று பார்த்து, வழக்கம்போல் ஏமாந்து, வழக்கம்போல் கன்னா பின்னாவென்று பின்னூட்டங்கள் பெறும் blogகளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, வழக்கம்போல் எல்லாம் நேரம் என்று காலத்தை நொந்து நூலாகி, சரி..சரி இனி நல்ல நல்ல விஷயங்களைப் பற்றி எழுதி பொறி கலக்கிடணும்னு மனசில ஒரு வைராக்கியத்தை வச்சுக்கிட்டு, மூடிவச்சிருந்த கம்ப்யூட்டரைக் கட்டவிழ்த்து..........

20 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

:))

nallarukku, unga pulambal!

-/பெயரிலி. said...

அதே!

ஏஜண்ட் NJ said...

விட்டாக்க, எல்லாரும் உங்கள பாத்து,
நல்லா பொலம்புரீங்க, அப்டியே இன்னுங்கொஞ்சம் நல்லா பொலம்புங்கன்னு சொல்லுவாக போல இருக்கே !

கவலப்படாதீக தருமி,
காலம் ஒரு நாள் மாறும்;

எதுக்கும் நீங்களும் பல blog-ல போயி
ஒரு ரெண்டு வரில comment-குடுத்துட்டு
மிச்சத்த ஒரு பதிவா போட்டு அங்கயே link கொடுத்துடுங்க ;-)

தருமி said...

ஓ..இவ்வளவு சூட்சுமம் இருக்கா இந்த விஷயத்தில்...

வீ. எம் said...

///////எதுக்கும் நீங்களும் பல blog-ல போயி
ஒரு ரெண்டு வரில comment-குடுத்துட்டு
மிச்சத்த ஒரு பதிவா போட்டு அங்கயே link கொடுத்துடுங்க ;-) /////////


ஞானப்பீடம் சொன்னா சரியா இருக்கும்... ! அனுபவம் பேசுது..புரிஞ்சுக்கோங்க தருமி.. !
அப்புறம் இது உங்கள் சொந்த புலம்பல் தானே??? இல்ல மண்டபத்துல யாரச்சும் புலம்பி..அதை நீங்க காப்பி அடிச்சி....

சரி சரி ... !

வீ .எம்

தருமி said...

//அப்புறம் இது உங்கள் சொந்த புலம்பல் தானே??? இல்ல மண்டபத்துல யாரச்சும் புலம்பி..அதை நீங்க காப்பி அடிச்சி.... //
ஆமாங்க...அங்க நம்ம ராசா ஆயிரம் பொன்னு வச்சுக்கிட்டு காத்துக்கிட்டு இருக்காரு..நான் காப்பி அடிச்சிட்டு 'பின்னூட்டத்தில' (I mean 'feedback'!! வேறெங்க?) அடி வாங்கப்போறேன்!

குழலி / Kuzhali said...

சாதாரணமாக வீட்டில் வெள்ளையடிக்கவே இந்த அறையிலிருந்து அங்கே, அங்கேயிருந்து இங்கேயென இதே வீடு புணருத்தானம் என்றால் மிக கடினம்தான்.

வசந்தன்(Vasanthan) said...

நாங்களெல்லாம் உங்கட வலையப் பாத்துப் பொறாமைப்பட நீங்கள் என்னடாண்டா ஆற்றையோ பதிவுகளப்பாத்துப் பொறாமைப்படுறியள்.
அப்ப உங்களுக்கு வலைப்பதிய வந்து இளமை திரும்பீட்டுது போல.

ஞானபீடத்தக் காணேல எண்டு தேடிக்கொண்டிருந்தாங்கள். ஆள் இஞ்ச நிக்குது.

துளசி கோபால் said...

தருமி,

ஆஹா....

//blog browsing //



இந்த வார்த்தை எனக்குப் பிடிச்சிருக்கு.

தருமி said...

"அப்ப உங்களுக்கு வலைப்பதிய வந்து இளமை திரும்பீட்டுது போல."
வசந்தன் - போயிருந்தாதான திரும்புறதுக்கு...! மனச சொன்னேன்!!

"ஞானபீடத்தக் காணேல எண்டு தேடிக்கொண்டிருந்தாங்கள். ஆள் இஞ்ச நிக்குது" -து ஜூன் மாசத்தில் அல்லவா? அதுக்குப் பிறகுதான் ஆளைக்காணும்...

நன்றி துளசி...இதெல்லாம் ரொம்ப சகஜம'ம்மா! அப்பப்போ எடுத்து உடறதுதான! அதுசரி, எப்படி திடீரென்று இந்தப் பதிவுக்கு வந்தீர்கள்...நாளான விஷயமாச்சேன்னு கேட்டேன்.

தருமி said...

ஆனாலும் இது நல்லா இல்ல, இனோமீனோ...அது என்ன தருமின்னு புனைப்பெயர் வச்சாலும் வச்சுக்கிட்டேன்...எல்லாருக்கும் நான் 'மண்டபத்தில' எழுதி வாங்கிட்டு வந்தமாதிரியில்ல தோணுது..
துளசிகிட்ட கேள்வி உங்களுக்கும்தான்..

Thangamani said...

unga blog padikkirom. neenga thodarnthu ezuthunga. neenga oruththar thaan religion paththi sontha anubavaththa ezuthuravar. Naan padikkiren.

தருமி said...

மக்களே!
ஒரே குழப்பமா இருக்கு. இந்தப் பதிவு ஜூன் ஒன்றாம் தேதி எழுதியது. இப்போது எப்படி திடீரென்று இதற்குப் பின்னூட்டங்கள்?
இரண்டாவது, தங்கமணி, உங்கள் பின்னூட்டம் நான் மதம் பற்றி எழுதிய பதிவுக்கு என்று நினைக்கிறேன். அது எப்படி இங்கு வந்தது??

ஒண்ணுமே புரியலையடா, சாமி!

தருமி said...

வசந்தன்..கேக்குதா உங்களுக்கு??

இனோமினோ - "Appo appadi polambana neenga.. eppa enna ninikaringa ? "
இப்ப வேறமாதிரி புலம்பல்னு வச்சுக்குவோமே!
எப்படியோ, வசந்தனுக்கு ஒரு 'ஓ' போட்டுட்டேன்.

துளசி கோபால் said...

என்ன தருமி,
புடிச்சிருக்கு ன்னு உண்மையாச் சொன்னாலும் தப்பா?

அதான் தமிழ் மணத்துலே மறுமொழி அளிக்கப்பட்ட முந்தியநாள் ஆக்கம் வருதுல்லே அதாலே வந்த 'திடீர் புகழ்'

தருமி said...

அடடா, கோவிச்சுக்கிறீங்களே துளசி! ஜுன் 1-பதிவுக்கு இப்போ பின்னூட்டம் வருதே எப்படி இதுன்னு ஓர் ஆராய்ச்சி; ஏன் போட்டீங்கன்னா கேட்டேன்; கேட்பேனா? ஆமா, நீங்க ஒரு பழைய பதிவின் நகல் அனுப்பறேன்னீங்க; என்னங்க ஆச்சு?
மதுவுக்கு மூடு வரலையா, வாசிக்க?

Thekkikattan|தெகா said...

அடுத்த நாள் வந்து அவர்கள் கொடுக்கும் சால்ஜாப்புகள் உங்களை மெய்சிலிர்க்க வைத்துவிடும். கத்தினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு ஆயிடுமோங்கிற பயத்தில் நீங்கள் மவுனமாக ஆனால் உணர்ச்சிபூர்வமாக அவர்களது விளக்கங்களோடு - ஜோதியில் கலப்பதுமாதிரி //

ஹூம், எங்கோ கேள்விப்பட்டதுமாதிரி இருக்கிறது. எனக்கும் இதில் கொஞ்சம் அனுபவமுண்டு, கடந்த முறை பட்டேன், நல்லா பட்டேன். என் கற்றுக் கொண்ட அமெரிக்கா வேகத்தை வைத்துக்கொண்டு அவர்களை சில நேரத்தில் அணுகப் போயி அங்கே ஒரு பிரளயமே நடந்து போனது... :-)

என்று தினம் தினம் பார்க்கும் குழந்தைபோல, பின்னூட்டங்கள் ஏதாவது வந்திருக்கின்றனவா என்று தினம் தினம் பார்த்து ஏமாந்து, கன்னா பின்னாவென்று பின்னூட்டங்கள் பெறும் blogகளைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு,//

;-))

அடடா, சீனியர்கள் எப்படி படிப்படியாக பி.கயமை பண்ணாமல் முன்னேறி இருக்கிறார்கள் என்பதனை இதனைப் படித்தால் தெரிய வருகிறது. இருந்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்களே...

தருமி said...

புரிஞ்சா சரி, தெக்ஸ்.

// இருந்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்களே...// எவ்வளவு கஷ்டப்பட்டு, கஷ்டப்படுத்தி... :)

வடுவூர் குமார் said...

ha!ha!
அடுத்த மராமத்து வேலை எப்ப என்று முடிவு செய்தாகிவிட்டதா?
:-)

தருமி said...

எங்க வீட்டில் இது ஒரு பெரிய ”தொடர்கதை”யாகிப் போச்சுதுங்க ..
:-(

Post a Comment