Friday, September 09, 2005

65. வந்தாச்சு...வந்தாச்சு

வந்தாச்சு...வந்தாச்சு... broad band வந்தாச்சு.

இரண்டு நாள்ல வந்திடும்னு பணம் கட்டும்போது சொன்னாங்க; ஒரு வாரம் ஆனதும், தொலைபேசியில் அழைத்துக் கேட்டபோது ' நாங்கள் என்ன செய்யமுடியும்' என்று சொல்லி, பிறகு, modem வரலைன்னு சொல்லி, அதன் பிறகு password வரலை software வரலைன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இப்ப என்னடான்னா, திடீரென்று ஒரு மாருதி ஆம்னி வந்து நிற்க, மூன்று பேர் வந்து எல்லாத்தையும் முடிச்சுக்கொடுத்திட்டாங்க. கொடுத்த grape juice-யைக் (நானே செஞ்சதாக்கும்)குடித்து முடிக்கும் நேரத்தில் இணைப்பையும் கொடுத்திட்டாங்க.

நான் நினைக்கிறேன் - கேப்டன் எனக்குக் கொடுத்த கொ.ப.செ. பற்றி எப்படியோ அவங்களுக்கு நியூஸ் போயிரிச்சி; அதுதான் அவசர அவசரமா கொண்டு வந்து மாட்டிட்டாங்கன்னு. எப்படி அந்த நியூஸ் வெளியே போச்சு? இதுதான் இந்த வலைப்பதிவாளர்களோட; இந்த நியூஸை வெளிய சொல்லிராதீங்கன்னு நான் சொல்லியும் யாரோ வெளிய் லீக் அவுட் பண்ணீட்டாங்க போல.

14-ம் தேதி நெருங்குது. அதுக்குப் பிறகுதான் வேலை நிறைய இருக்கு.

17 comments:

வீ. எம் said...

தருமி சாரே... போதும் தூக்கம்..எழுந்துருங்க.. !
இங்க இருந்து மெனகெட்டு தம்பி தயாக்கு (அதான்பா தயாநிதி மாறன்.. அப்படிதான் செல்லமா கூப்பிடுவேன் எப்பவும்) கால் போட்டு.. நம்ம friend தருமினு ஒரு வலைப்பூகாரர் அப்ளை பண்ணி ரொம்ப நாளாச்சுப்பா..என்ன நடக்குதுனு .. சரி சரி விடுங்க.. சொன்னா நம்பவா போறீங்க...
வந்தா சரி.. சந்தோஷம்.. தயாகிட்ட நான் பேசிக்கிறேன்...

நேரமிருந்தா வலைப்பக்கம் வாங்க தருமி சார்!

வீ. எம் said...

போங்க , 1 ஓட்டும் போட்டுடேன் , + தான் பா...ஏற்கனவே யாரோ 2 - போட்டுடாங்க .. எனக்கு வருவது போலவே..யாரந்த 2 பேருனு தெரியல..

தருமி said...

அடடே, முதல்லே சொல்லப்படாதா. நானும் நினைச்சேன். ஆளுங்க என்னடா திடீர்னு வந்து நிக்கிறாங்களேன்னு. இப்பதான் புரியுது. உங்க ரெக்கமெண்டேஷந்தானா அது. ரொம்ப டாங்ஸ் வாத்தியாரே! உங்கள் மாதிரி நல்ல மனுஷங்க இருக்கிறதினாலதான மழ இப்டி பெய்து. தயாகிட்ட சொல்லிடுங்க.

அப்பப்போ வர்ரேனே. வந்ததை இனி ஊர்ஜிதம் பண்றேன்; சரியா. வர்ட்டுமா?

அவ்வை - அதெல்லாம் உன்ன மாதிர் ஸ்பெஷல் ஆளுங்களுக்குதான். இவங்களுக்கு plain and preserved.

தாணு said...

கருமிக்களுக்கெல்லாம்(sorry)தருமிகளுக்கெல்லாம் ப்ராட் பேண்ட் வருது, எங்களை மாதிரி ஏழை பாழைங்களுக்கு எப்போ வருமோ?

ilavanji said...

அப்பறம் என்ன? கலக்குங்க! ஒலக தகவலுகலையெல்லாம் சும்மா மடைதிறந்த வெள்ளமா பாய்ச்சுங்க! சீக்கிரமா 1000 வது பதிவையும் போடுங்க!

rv said...

என்ன தருமி சார்

DataOne -ஆ? BSNL ஒரு நல்ல காரியம் பண்றாங்க.

ஏன் தாணு, உங்க ஊர்ல இது இல்லியா?

தருமி said...

தாணு, அப்போ நீங்க பாளையன்கோட்டைன்னு துப்பறிஞ்சிட்டேன்; சரியா?

எதுக்கும் நம்ம வீ.எம்.மிடம் நான் சொன்னேன்னு சொல்லுங்க. அவருக்கு பெரீஈஈஈஈஈஈஈஈஈஈய இடமெல்லாம் தெரிஞ்சிருக்கு.

இளவஞ்சி, சைபருக்கு மதிப்பு இல்லைன்னு சும்மானாச்சுக்கும் நிறைய போட்றதா?

ராமனாதன், எனக்கு இந்த ஃபார்முலா1-ல் சில சந்தேகங்கள் - pit stop time, pole position...கேட்றலாமா, தனி மடல்ல?

சத்யா, நெல்லிக்குப்பம்..town..ஹா..ஹா!
அது எங்க இருக்கு நியூ ஜெர்ஸி பக்கத்திலேயா??!!

தருமி said...

"எனக்கு வருவது போலவே..யாரந்த 2 பேருனு தெரியல"

வீ.எம்.,
ஒருவேளை நீங்க காணவில்லைன்னு போஸ்டர் அடிச்சீங்களே..அந்த ஆளுகளா இருக்குமோ? நான் அவங்களை 'லொள்ளு'ன்னேன்ல; அந்த கோபம்தான்!

rv said...

தருமி சார்,
என்னோட ஐடி travis2001ATmailDOTru

கண்டிப்பா அனுப்புங்க.

Balaji-Paari said...

Dharumi,
kalakkunga..:)

துளசி கோபால் said...

அப்பாடா... இப்பத்தான் மனசுக்கு நிம்மதி. இல்லே தருமி?

கிரேப் ஜூஸ்( நீங்களே செஞ்சது) குடிச்சுட்டுத் துண்டைக்காணோம் துணியைக்காணோமுன்னு செஞ்ச வேலைக்கு அன்பளிப்பு வாங்கிக்காம ஓடிட்டாங்கன்னு தயா நேத்து சொல்லிச் சொல்லிச் சிரிச்சாரு!

எப்பவா, சாயங்காலம் வீட்டுப் பக்கம் வந்துருந்தாருல்லெ.

தருமி said...

"தயா நேத்து சொல்லிச் சொல்லிச் சிரிச்சாரு!"
துளசி, இன்னைக்கு காலைல வயித்துவலியோட தயா இங்க வந்திருந்தாரு. கை மருந்து கொடுத்திருக்கேன். எல்லாம் நீங்க கொடுத்த கொழுக்கட்டைதானாம்; இப்டியா நீங்க...

ராமநாதான்,
இதோ போட்டுட்டேன் மெயில்...

நன்றி பாலாஜி-பாரி

துளசி கோபால் said...

//கை மருந்து...//

நல்லது டாக்டர்( நாட்டு?)தருமி.

rv said...

தருமி சார்,
மெயில் வந்தது. பதில் அனுப்பிருக்கேன். பாருங்க.

தருமி said...

//நல்லது டாக்டர்( நாட்டு?)தருமி. //

சரியா சொல்லுங்க, துளசி - 'நல்லது நாட்டு வைத்தியர் தருமி'ன்னு!

டிபிஆர்.ஜோசப் said...

அடேங்கப்பா, அப்பவேவா?

டிபிஆர்.ஜோசப் said...

அப்போ பின்னூட்டம் போட்டவங்கள்ல நிறைய பேர் இன்னைக்கி எங்க இருக்காங்கன்னே தெரியல.... ஆனா உங்க எழுத்து மட்டும் 'துளசி' மாதிரி மணம் வீசிக்கிட்டே இருக்கு.... வாழ்த்துக்கள்.

Post a Comment