எனக்கே என்னைப் பற்றிய ஆச்சரியம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் மேலே சொன்னது ஒரு பெரிய zen தத்துவ ஞானி. ஆனால் நான் எனது 8-12 வயதுகளில் இதைப்போன்று யோசித்திருக்கிறேனே; அது எப்படி? காலையில 5 மணிக்கே எழுப்பி கோயிலுக்கு விரட்டி விடுவார்கள். 'பூசை' பாத்துட்டு, அதன் பிறகு அங்கே பக்கத்திலேயே சாமியார்கள் நடத்தும் பால் பண்ணையில் வீட்டுக்குப் பால் வாங்கிட்டு வரணும். அப்படி காலங் கார்த்தால தனியா அந்த அரை இருட்டில ஒண்ணு எதையாவது எத்திக்கிட்டே நடந்து போகணும்; இல்லாட்டி எதையாவது நினச்சுகிட்டு - சில பேரு அதை 'கொசுவத்திச் சுருளு'ம்பாங்க; நம்ம parlance-ல 'குதிர ஓட்டுறது'ன்னு பேரு; ஏன்னா, அந்தக் கால கதையில எல்லாம் 'அவன் மனம் என்னும் குதிரையில் ஏறி...' அப்டின்னுதான எழுதுவாங்க - நடந்து போகணும். இது Frost கவிதையில வர்ர மாதிரி..
The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep. - before I sleep அப்டிங்கிறதுக்குப் பதிலா, before i go home அப்டின்னு வச்சுக்க வேண்டியதுதான். அப்போ, நம்ம 'குதிர' அதுபாட்டுக்கு வாயு வேகத்தில, மனோ வேகத்தில பாஞ்சு பாஞ்சு போகும்.
அப்போ, அடிக்கடி வர்ர ஞாபகம் என்னன்னா, ' இப்போ இருக்கிற வாழ்க்கை, நடக்கிற நடப்புகள் எல்லாமே ஒரு கனவுதான்; முழிச்சி எழுந்திரிச்சா அம்மாவை நிஜமாவே பார்க்க முடியும்; அதுவரை கொஞ்சம் adjust பண்ணித்தான் ஆகணும்; அதுதான் உண்மையான வாழ்க்கையா இருக்கும். ' அப்டின்னு அடிக்கடி நினைப்பேன்.
All that we see or seem
Is but a dream within a dream. .....................அப்டீங்கிற Alan Poe-வின் கவிதையும் நினைவுக்கு வருகிறது.
zen master நினச்சதுக்கும், நான் நினச்சதுக்கும் என்ன பெரிய வேறுபாடு சொல்லுங்க.
ஆனா, பாருங்க இப்ப என்னய. எப்படியிருந்த நான் . . . இப்படி ஆயிட்டேன்...
இதுக்கும், கீழே வர்ர கவிதைக்கும் என்ன தொடர்புன்னு கேக்காதீங்க; சரியா...?
கரும்பெடுத்து ஆலையிட்டேன்.
சாறும் வந்தது.
சக்கையும் மீந்தது.
கனியெடுத்துப் பிழிந்திட்டேன்.
சாறும் வந்தது.
சக்கையும் மீந்தது.
இப்பிறவியெடுத்து
வாழ்ந்து களித்தேன்;
வாழ்ந்து கழித்தேன்.
என்னதான் மிஞ்சியது ?
no...no...கை தட்றதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்ல...!
12 comments:
அருமையான கவிதைங்க!
மனசு பற்றி என் பக்கத்தில் நானும் சில எழுதியிருக்கேன் படிச்சீங்களா?
அருமை தருமி அருமை.
//என்னதான் மிஞ்சியது ?//
இப்படி ஒரு ப்ளொக்தான் மிஞ்சியது.ஆஹா ஆஹா....
துளசி,
எவ்வளவு பெரிய தத்துவத்தைப் புளிஞ்சி கொடுத்திருக்கேன்; உங்களுக்கு விளையாட்டா இருக்கா?
"ஒரு ப்ளொக்தான் மிஞ்சியது" - ஒருவேளை எனக்குப் பிறகும் ப்ளாக் நின்னு நிலைக்கும் அப்டீங்கிறிங்களா?
பாஸிடிவ்ராமா,
நன்றி.
வாசிக்கிறேன்.
கரும்பு இனிப்பு,
கனி இனிப்பு,
வாழ்க்கை இனிப்பு,
வாழ்வது இனிமை.
****
மிஞ்சுவது என்ன ?
*****
களிப்பு மிச்சம்
களைப்பு மிச்சம்
சொந்தம் மிச்சம்
சொத்து மிச்சம்,
வாழ்வு முடியும் வேளை
வரும் வெறுமை மிச்சம்!
தருமி பாட்டுக்கு எதிர்ப் பாட்டா? 'யாரங்கே... இந்த 'சோம்பேறிப்பையனை'பிடித்து காராக்கிருகத்தில் போட்டு, என் கவிதைகளையும், பதிவுகள் அனைத்தையும் படிக்க வையுங்கள். அதுதான் சரியான தண்டனை!'. ஹ..ஹா...ஹா...(வீரப்பா சிரிப்பை நினைவில் கொள்க)
வாழ்வைக் களித்தாலும்,கழித்தாலும் மிஞ்சுவது-
`சாலை வழியே தனிவழிப் பயணம்
சாலையின் முடிவிலே சந்திப்பது மரணம்'- யார் சொன்னதுன்னு மறந்திடுச்சு.
சாலைக்கு ஏது முடிவு?
நமக்குத்தான் அங்கங்கே..
என்னோட ஒரு பதிவில இந்த கனவு பற்றி சிலத எழுதி இருந்தேன்.
அது உங்கள் பார்வைக்கு.
http://paari.weblogs.us/archives/category/star/
2. டைக்கோவின் இறப்புக் கவிதை:
” நான் ஒரு பனித்துளி யென பிறந்தேன்
பனித்துளியாக மறைகின்றேன்
ஓசாகா கோட்டையும் மேலும் யான் புரிந்த மற்றவைகளும்
ஒரு கனவுக்குள் ஒரு கனவே”
இதை படித்தவுடன், பாரதி சொன்ன பாடல் நினைவுக்கு வந்தது.
“உலகெ லாமொர் பெருங்கன வஃதுள்ளே
……………………………………
……………………
மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங்கன வாகும்.” (சுயசரிதை : முன்னுரை: பாடல் 3)
இதை பற்றி மேல் விவரங்கள் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்
பாலாஜி,
நன்றி.
ஒன்று புரிகிறது பாலாஜி. இந்த வாழ்வின் நிலையாமை - நீர்மேல் குமிழி - குறித்து பலருக்கும் ஒரே விதமான சிந்தனை இருந்திருக்கிறது.(என்ன சொல்லவர்ரேன்னா, great people think alike!!!)
concept of Maya - நம்மூரில்; ஜப்பானில் ஆத்மா /ஆவி மனிதன் இறந்தபின் சில நாட்கள் கழித்து மற்றொரு மனித உடலில் புகுந்துவிடும்.இக்காரணம் பற்றியே ஜப்பானிய சாமுராய்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள - கரகிரி மூலம் - தயங்கியது கிடையாது என்று ஜேம்ஸ் க்ளவெல்லின் கதையொன்றில் படித்த நினைவு. நீங்கள் சொல்லியிருக்கும்
இந்நாவலையும் ஜப்பானை பின்புலமாக வைத்து எழுதிய மற்ற நாவல்களை (king Rat மற்ற தலைப்புகள்..?)படித்த 'நினைவு'மட்டும் உள்ளது. 80-களில் படித்திருக்க வேண்டும்.
பாரதியின் வரிகளில் ஒரு ஐயம், பாலாஜி.
மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங்கன வாகும்.” - என்ற பாரதி, அதற்கு 4 வரிகளுக்கு முன்,
"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்" என்கிறாரே.. ஏன், எப்படி?
விழிப்பு கனவுநிலை ஆழ்நிலைத்தூக்கம் - இதெல்லாம் க்ளாஸ்லே அங்கிள் கேள்வி கேட்கிறாரெண்டா நீங்களுமா தருமித்தாத்தா?
ஆ.நி.தூக்கத்திலேருந்து விடுபட்டா கனவு நிலை
கனவுநிலையிலேருந்து விடுபட்டா விழிப்பு
விழிப்பிலேருந்து விடுபட்டா ஒரேயடியான தூக்கம்!!!
Post a Comment