அதுக்காக நான் ஒண்ணும் யார்கூடயும் போய் சண்டையெல்லாம் போடுறதில்ல. நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருப்பேன். என்ன, காலையில தினசரிகளைப் பார்க்கும்போது, சன் டி.வி. செய்தி பார்க்கும்போது எரிச்சல் வரும். இப்போ அது கூட இல்லை. ஏன்னா, இந்து செய்தித் தாளில் கிரிக்கெட் செய்தி எங்கேயிருக்கோ அத திரும்பிக்கூட பாக்காம போய்க்கிட்ட இருக்கிற மாதிரி மனச வளத்துகிட்டேன்; சன் டி.வி,யில் அந்தப் பகுதி வந்ததும் எழுந்து போய்டுவேன். எதுக்கு டென்ஷன்; பாத்தா கடுப்பாகும். என்ன, தெருவில அசிங்கம் கிடந்தா ஒதுங்கிப் போறதில்லையா; அது மாதிரி.
ஏம்பா, இப்படி கிரிக்கெட்..கிரிக்கெட்டுன்னு அலைறீங்க அப்டீன்னு ரொம்ப நாளைக்கு முந்தி நண்பன் ஒருவனிடம் கேட்டேன்; Oh! What a game! It is filled so much with uncertainities; can you ever say what would happen in the next ball?-ன்னு கேட்டான். அதுக்கு, நான் கூட சின்னப்பிள்ளையில் கிராமத்தில் விளையாண்ட தாயக்கட்டத்தில கூட செம uncertainity இருக்குமே, எப்ப தாயம் விழுகும், யார் காய்க்கு எப்ப வெட்டு விழும்னு தெரியாம ஒரே டென்ஷனா இருக்குமே என்றேன். அதுக்கு அவன் பாத்த பார்வையே சரியாயில்லை. இன்னொரு ஒற்றுமையும் தாய விளையாட்டோடு உண்டு. வியர்க்க விறுவிறுக்க விளையாடவேண்டாம். மற்ற field games பாத்திருக்கீங்களா? உதாரணமா, கால்பந்து விளையாடும்போது அந்த அம்பயர்கூட சட்டை, கால்சட்டை எல்லாம் தொப்பு தொப்புன்னு நனஞ்சி இருப்பார். ஆனா, இங்க நாள் முழுவதும், இல்ல வாரக்கணக்கில கூட விளையாடுவாங்க..அக்குள்ல கூட வியர்வையின் அடையாளம் தெரியாது. அஞ்சு நாள் மாங்கு மாங்குன்னு விளையாடுவாங்க..ஆனா முதல் நாளே அல்லது இரண்டாம் நாளே சொல்லிடுவாங்க இது டிரா ஆகும்னு. கேட்டா 'nail biting finish'!
சரி, அது உங்க விளையாட்டு; எனக்குப் பிடிக்கலைன்னா நான் ஒதுங்கிப் போறதுதான் மரியாதை; அத குத்தம் குறை சொல்லக்கூடாதுதான். ஏன்னா, tastes differ, இல்லீங்களா? பிறகு ஏன் இப்படி ஒரேடியா 'இது'ன்ற அப்டீங்கிறிங்களா?
கடந்த ஒரு வாரத்து The Hindu பாத்தா அப்படி கேக்க மாட்டீங்க. இந்த நாட்கள்ல பூராவும் முதல் பக்கத்து செய்திகளில் கண்டிப்பா கிரிக்கெட் செய்தி உண்டு; ஒண்ணு B.C.C.I. ELECTION சேதிகள்; இல்ல, சாப்பல்-கங்குலி தகராறு. வயத்தெரிச்சல் என்னன்னா, ஏதோ யுத்தச் செய்திகள் மாதிரி பாவர் படம் எல்லாம் போட்டு, அவர் 'மதியாலோசனை' பற்றி எழுதிய அன்று, சானியாவின் முதல் சுற்று வெற்றி முதல்பக்க மூலையில் சிறிதாக (அதாவது போட்டார்களே!)வந்தது. அப்படி என்னப்பா வந்திச்சு, ஏதோ வெளியூர்ல போய் விளையாடினாங்க, ஜெயிச்சாங்க தோத்தாங்க - சரி, நியூஸ் போடுறீங்க; போட்டுத் தொலைங்க..அவங்க குடுமிபிடி சண்டைக்குமா இந்த முக்கியத்துவம்? அதான் கடைசியில விளையாட்டுக்களுக்குன்னு இடம் விட்டுருக்கே; அங்கேயாவது போட்டுத் தொலைக்கக்கூடாதா?
சன் டி.வி. கேட்க வேணாம்.
'மற்ற விளையாட்டெல்லாம் விளையாட்டல்ல; கிரிக்கெட் விளையாட்டே விளையாட்டு'
கிரிக்கெட் விளையாடுபவரே விளையாடுபவர்; மற்றெல்லார்
அவரடி போற்றுவார் காண்' - என்ற தத்துவத்தில் கரைகண்டு, மற்ற விளையாட்டுச் செய்திகள் கூறுவது பாவம் என்றுள்ளனர். 'விளையாட்டுச் செய்திகள்' என்ற பெயரையாவது 'கிரிக் கெட்(ட) செய்திகள்' என்றாவது மாற்றலாம்.
இதல்லாம் போகுது. ஒலிம்பிக்ஸில் நம் வீரர்கள் வெறும் கையோடு (இம்முறை ரத்தோருக்கு நன்றி!) வரும் ஒவ்வொரு முறையும்,'கிரிக்கெட்டுக்கு மீடியாக்களில் கொடுக்கப்படும் அதிதீவிர இடமே மற்ற விளையாட்டுக்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது; அதனால்தான் இந்தப் பின்னடைவு' என்று பிலாக்கணம் பாடுவது இதே மீடியாக்கள்தான் என்பதே irony!
என்ன சொல்லுங்கள், எவ்வளவு சொல்லுங்கள், நல்லதனமாகச் சொல்லுங்கள், லாஜிக்கோடு எடுத்துச் சொல்லுங்கள் ....ஹுஹும்... பப்பு வேகாது; யார் சொல்லி யார் கேட்பது...?
8 comments:
நானும் உங்க கட்சி தான். ஆனா ரொம்ப பொழுது போகலன்னா ஒரு நாள் ஆட்டம் பார்ப்பதுண்டு. இந்தியா விளையாடவில்லை என்றாலும் பார்ப்பேன். கொடுமை என்னவென்றால் நாட்டு பற்றையும் கிரிக்கெட்டையும் ஒன்றாக்கி விட்டார்கள். மக்கள் இந்தியா கிரிக்கெட்டில் தோற்றுப்போனால் ஏதொ யுத்தத்தில் தோற்றது மாதிரி பேசுகிறார்கள். பாக்கிஸ்தானை ஜெயிக்கும் போது மிட்டாய் கொடுக்கும் நிறைய பேரை பார்த்திருக்கிரேன். இவர்களுக்கு இந்தியா வேறு விளையாட்டில் தோற்று போனால் கவலை பாக்கிஸ்தானுடன் தோற்று போனால் கவலை இருப்பதில்லை. அப்படி ஒரு மாயையை இந்த மீடியாக்கள் உண்டு பண்ணி விட்டது. என்னமோ போங்க..
தருமி,
மேல்தட்டு வர்க்கத்தின் விளையாட்டாயிருந்த கிரிக்கெட், ஊடகங்களின் உதவியால் இன்று கிராமங்களிலும் ஊடுருவி மற்ற விளையாட்டுகளையெல்லாம் அழித்துவிட்டது. ஊடகங்கள் பெரும்பாலும் தேவையற்ற விதயங்களை ஊதிப் பெரிதாக்குவது, தேவையான விதயங்களுக்கு இடமளிக்காமல் இருப்பதும் வழக்கமாகிவிட்டது. வருமானம் கிடைக்குமென்றால் எதுவும் செய்ய அஞ்சுவதில்லை
சங்கரய்யா, ஒரு சின்ன addition...மேல்தட்டு வர்க்கத்தின் விளையாட்டாயிருந்த கிரிக்கெட், அவர்களின் பிடியில் இருந்த ஊடகங்களின் உதவியால் விளையாட்டு மைதானமே சென்றறியா பெண்மக்களையும்கூட இந்த விளையாட்டில் மோகம் கொள்ள வைத்தாகிவிட்டது.
அவ்வை,
நீ எப்போது தமிழில் எழுதப்போகிறாய்?
சிவபுராணம்,
நன்றி
அவ்வை,
உங்க இரண்டுபேருக்கும் உள்ள அந்த understanding நல்லா இருக்கு!
அட! தருமி நானும் உங்க கட்சிதான். கேம் பாப்பேன். ஆனா நகம் கடிச்சுக்கிட்டு இல்லை. கையெல்லாம் எச்சியாயிரும் இல்லே:-)
எல்லாம் கொஞ்ச நேரம்தான். அதுவும் ஒருநாள் மேட்ச்தான். இந்த அஞ்சுநாளெல்லாம் நம்மாலே முடியாது. டைம் வேஸ்ட்.
ஆமா, அன்செர்ட்டனிட்டின்னு சொல்லிகிட்டே, கமெண்ட்டரி சொல்றப்ப கேட்டீங்களா? சரியா கட் செஞ்சு பால் போட்டாராம், இப்படி, அப்படின்னு ஒரே வர்ணிப்பு, இவரோ/அவரோ பந்தை இப்ப்டிப் போகணுமுன்னே அடிச்சாராம். இதெல்லாம் கேக்கறப்பத்தான் கொஞ்சம் பத்திக்கிட்டு வரும்.
அப்ப எல்லாம் முன்னேயே முடிவு செஞ்சுதா?
என்னமோ போங்க !
எனக்கும் உங்க எல்லார் மாதிரி தான், விளையாட்டை பார்ப்பேன்... ஆனா இப்போதைய அணியின் விளையாட்டை அல்ல... (ஐயோ வோணாஞ்சாமி அது)
முன்னர் "கபில் தேவ்" அணித்தலைவரா இருந்த காலத்துல இந்திய வீரர்களுக்கு இருந்த மவுசு என்ன?... ஒரு கெவுர்தி என்ன?... இப்போ!
எப்படி இருந்த கிரிகெட் எப்படி ஆயிருச்சி பாத்தீங்களா?
அந்த நேரத்தில் கபிலின் தலைமையில் இருந்த மற்ற வீரர்கள் சிறிகாந், சேத்தன் சர்மா, கிர்மாணி,கவஸ்கார் (இப்போதைய அணியை நாசமாக்கிய நாயகன்), மனீந்தர் சிங், சித்து, ரொஜர்பின்னி, வென்சாகர், சிவராமகிருஷ்ணன், ரவி சாஸ்திரி.
இப்படி நட்சத்திரமாய் ஜொலித்தவர்கள் எங்கே? இப்போது உள்ளவர்கள் எங்கே?.
ஒரு நாள் ஆட்மானாலும் சரி, டெஸ்டானாலும் சரி... அந்த காலங்கள் உண்மையிலேயே இந்திய கிரிகெட் ஒளிவீசிய நாட்கள்.
மேற்கிந்திய தீவுகள் அணி க்ளைவ் லொயிட் தலைமையில் இருந்த போதும், பின்னர் விவியன் ரிச்சட் தலைமையில் இருந்த போதும், பிறகு கபில் தேவ் தலைவராக கொண்ட இந்திய அணியும் தான் எனது அபிமான அணிகள்.
ஆனால் இப்போவெல்லாம் கிரிகெட் என்றாலே! அட போங்கப்பா!.....
எனது இந்த வருத்ததை எனது பதிவில் "எனக்குள் ஒரு வருத்தம்" என்று கிறுக்கியிருக்கிறேன்.
வசதி பட்டால் போய் பாருங்க! ஹீ ! ஹீ !..
துளசி,
நன்றி
ஜோசஃப் இருதயராஜ்,
நீங்க செம கிரிக்கெட் ஆளு போல..! ச்சும்மானாச்சுக்கும் இப்படி சொன்னீங்கதானே..?
இருதயராஜ், உங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்தேன்.
Post a Comment