Monday, September 25, 2006

177. சில நேரங்களில் சில பதிவர்கள்.


பதிவர்: 1


வெளியூர் பதிவர் ஒருவர்; பின்னூட்டங்கள் மூலமாக ரொம்பவே தெரிஞ்சவர். மதுரை வரப் போகதாகவும், வந்ததும் தகவல் சொல்வதாகவும் தொலைபேசியில் சொன்னார். சொன்னது போலவே மதுரை வந்தபின் சொன்னபடி தொலை பேசினார். காலம் சிறிதேயிருந்ததால் நானே அவரை அவர் தங்கியிருக்குமிடம் சென்று பார்ப்பதாகச் சொல்லியிருந்தேன். பேசும்போது வேறொரு பெயரைச் சொன்னார். நான் திகைத்ததை ஊகித்து, மறு முனையிலிருந்து விளக்கம் வந்தது: நானேதான் அது; அதுவே என் உண்மைப் பெயர் என்றார், நேரில் பார்த்தபோது விளக்கம் தொடர்ந்தது. தான் உண்மைப் பெயரைச் சொல்லுவதில்லையென்றும்,
அந்தப் பெயரில் எந்த user id-யும் கிடையாது என்றும் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினார். போட்டுக்கிற போட்டோகூட 'ஜூஜா' தான் என்றார்!

அவ்வளவு 'ஆட்டோக்களா' இருக்கு நம்ம ஊரில...?

"கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் உண்மையல்ல"

பதிவர்: 2

அடுத்த பதிவர். இவரும் பின்னூட்டங்கள் மூலம் பழகியவர். என்னைப் பார்த்ததும் எல்லோரையும் மாதிரி, 'என்னங்க, எப்படியிருக்கீங்க? நல்லா இருக்கீங்களா' அப்டின்னெல்லாம் ஒண்ணும் கேட்காம எடுத்த எடுப்பிலேயே 'உங்க பதிவில் போட்டிருக்கிற உங்க புகைப்படம் எடுத்தது யார்?' என்று கேட்டார், நானும் அப்பிராணியா விவரம் சொல்லிட்டு 'எதுக்கு அதையெல்லாம் கேக்குறீங்க' அப்டின்னு கேட்டேன்.
'இல்ல, உங்கள மாதிரி கொஞ்சம்கூட இல்லாம எப்படி நல்லபடியா வேற மாதிரி படம் எடுத்தாருன்னு தெரிஞ்சுக்கத்தான்' என்றார், நான் ஒரு குழல்விளக்கா? டக்குன்னு புரியலை. 'ஏங்க, அந்த படத்தில இருக்கிறதைப் பார்த்தா என்ன மாதிரி தெரியலையான்னு' கேட்டேன். அதுக்கு அவர்: 'அந்தப் படம் மாதிரி நீங்க இல்ல; ஆனா அந்தப் போட்டோகிராபர் நல்ல தொழில் தெரிஞ்சவர் மாதிரிதான் இருக்கு' அப்டின்னார்.

அதுக்கப்புறம்தான் அவர் என்ன சொல்ல வர்ரார்னு புரிஞ்சுது !

Appearances are deceptive; photographic appearances could be all the more deceptive - அப்டின்னு ரெண்டு பேருக்கும் புரிஞ்சுது.

பதிவர்: 3

நடு உச்சி எடுத்து, கலைஞர் ஸ்டைலில் (அதாவது அந்தக் காலத்துக் கலைஞர்!) உச்சி வகிடெடுத்து தாடி மீசையுடன் ஒரு படம் போட்டு இதுதான் நான் என்று பதிவில் காண்பிச்சிக் கிட்டுருந்த ஒரு பதிவரைப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி இருந்தார் யெஸ். பால பாரதி. முன்ன பின்ன பார்த்ததில்லை; பின்னூட்டங்களில் கூட சந்தித்தது கிடையாது. ஆனால் மனுஷன் பார்த்ததும், ரொம்ப நாள் பழகிய தோரணையில் மிக அண்மைக்குள் என்னை நினைக்க வைத்து விட்டார் - மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தும் கூட ! (அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை, போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா). - இது நான் சொல்லலைங்க; அவரது தோஸ்த் / மாப்பிள்ளை சொன்னது; ஜஸ்ட், மேற்கோளிட்டேன். அவ்வளவே!

பதிவர்: 4

அடுத்த பதிவர்: ஞானவெட்டியான். திண்டுக்கல்லில் இருந்து மதுரை புத்தக விழாவுக்குச் செல்லும் வழியில் எங்கள் மதுரை புறநகர்ப் பகுதியைத் தாண்டித்தான் போகணும். சொல்லியிருந்தார். மெயின் ரோட்டில் காத்திருந்து வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு சென்றேன். இருவரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றாக புத்தக விழா செல்ல நினைத்திருந்தேன். சொந்த வேலை காரணமாக அது முடியாது போக, அவர் சாப்பிடிருந்துவிட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடை பெற்றார்.

நுணுக்கமான மனிதர். சாப்பிடும்போது கூட அது தெரிந்தது. கொஞ்சூண்டுன்னா கொஞ்சூண்டுதான் சாப்பிட்டார். ஆனல் அதைப் பிரித்து 'நொறுங்க தின்னா நூறு வயசு'ன்னு சொல்லுவாங்களே அத மாதிரி ஆர அமர சாப்பிட்டார்.

அடுத்த முறை காசி செல்லும்போது என்ன செய்ய வேண்டுமென சொல்லியனுப்பியிருக்கிறேன்.

பதிவர்: 5

மொத்தமே ஆயிரம் பதிவர்களுக்குள்தான் இருக்கும்போலும். இருப்பினும் அதிலும் எப்படி 'மிஸ்' பண்ணக் கூடாத சில பதிவர்களை இதுவரை 'மிஸ்' செய்திருக்கிறேன் என்பது சென்னையில் கூடிய பதிவர் கூட்டத்தைப் பற்றிய பதிவுகளைப் படித்தபோதுதான் தெரிந்தது. 'சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறது' என்பதன் மூல ஆசிரியர் அவர்தான் என்று கேள்விப்பட்டும் கூட அவரது பதிவைப் படிக்க முந்தியே தோன்றாம போச்சு. இப்போ அவரது பதிவுகள படிச்சிட்டு, அதிலயும் - ""அடப்பாவி நீ வெறும் செவன் அப்பே ஒத்துகாதா ஆளா" - அப்டின்னு எழுதியிருக்கறத படிச்சதும் ஒரேயடியா அவரது பதிவுகள் எல்லாத்தையும் ஒரே மூச்சில படிச்சேன். மனுஷன் பின்றாரு. என்ன நகைச்சுவை...சும்மா அப்டியே வெள்ளமால வருது. வாழ்க வரவனையான்; வளர்க அவர் எழுத்து.

ஆனா ஒண்ணு...'வாட்டர்' பத்தி இவ்வளவு ஓப்பனா எழுதறாரேன்னு ஒரு சந்தேகம் வந்திச்சி. அடிக்கடி வேற அதப்பத்தி எழுதறாரேன்னு தோணிச்சி. ஒரு வேளை இந்த ஆளு playing with the psyche of readers -அப்டின்னு இருக்குமோன்னு தோணிச்சுது, அதாவது இந்த ஆளு teetotaller -ஆக இருக்கணும்; சும்மா ஒரு 'இதுக்காக' இப்படி 'ரூட்' உடுறது. லொல்லலாங்காட்டி... 'வாட்டர்' போடறவுங்க எல்லாம் இப்படியா அடிக்கடி 'வாட்டர்' பத்தி பேசுறாங்க. இப்போ பாருங்க நான் என்னைக்காவது 'வாட்டர்' பத்தி பேசுறேனா, என்ன?

45 comments:

பொன்ஸ்~~Poorna said...

தருமி,
நெஜமாத் தான் கேட்குறேன்.. அந்த போட்டோ எடுத்தவர் யாரு? - நானும் என்னை நல்லா தெரியற மாதிரி நாலு போட்டோ எடுத்துக்கிடத் தான்..

இராம்/Raam said...

ஐயா,

இந்த சனிக்கிழமை மதுரை வரேன். வந்து உங்களை பார்க்கிறேன், அடுத்ததா என்னையும் உங்க லிஸ்ட்'ல சேர்த்துக்கங்க........ :-)))))

Thekkikattan|தெகா said...

அடடா, அதெல்லாம் சரி, நான் அந்தப்பக்கமா வர்ட்டா இல்ல வரவேண்டாமா ;-)?

நீங்க பாட்டுக்கு சட்டைப் போடாத ஒரு காட்டான், மாட்டு வண்டியில வந்து தார் குச்சியோட பார்க்கவராத சொல்லியிருக்கிறான்னு நினைச்சுக்கிட்டு காத்திட்டு இருப்பீங்க.

ஆனால் இங்க ஒரு 36 வயது இளைஞன் :-) ஜீன்ஸ் பேன்ட்டும், ட்டி சர்ட்டுமா வந்து நிக்கிறான்னு எழுதி வைக்கப் போறீங்க.

நல்ல அனுபவம் போங்க.

rv said...

வந்தேன். ப்ளாஸ்திரி (+) போட்டேன். சென்றேன். வணக்கம். :)

ENNAR said...

தருமி
நல்லவேலை நான் உங்களை சந்திக்க வில்லை சந்தித்து இருந்தால் என்னையும் போட்டுடைத்திருப்பீர்கள்

Anonymous said...

இன்னொரு பதிவர். இவர் பின்னூட்டங்களில் அதிகம் அறிமுகம் ஆகாதவர். ஆனால் ஜோதிடத்தில் ஒரு விளக்கம் வேண்டும் என்று கேட்டு தனிமடல் அனுப்பியர்.

முன்பொரு முறை மதுரை வருவதாகத் தொலைபேசியில் அறிவித்தவர். அப்போது தருமி ஐயா மதுரையில் இருப்பாரா அல்லது சென்னையில் இருப்பாரா என்று குழம்பியவர். ஆனால் மதுரை வரும் திட்டத்தை திடீரென கைவிட்டார்.

தற்போது புரட்டாசி 3ம் சனிக்கிழமை மதுரை வரத் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அறிவித்துவிட்டால் முன்பு போலல்லாமல் சொல்லைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் அறிவிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

7ம் தேதி மதுரை வரத் திட்டமிருக்கும் இவர் காலையில் கள்ளழகர் கோவில் சென்றுவிட்டு, மாலையில் மீனாட்சி அம்மன் கோவில் செல்ல திட்டமிட்டுள்ளார். இடைப்பட்ட மதிய நேரத்தில் பதிவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யலாமா என்று யோசித்தும் வருகிறார்.

பூனைக்குட்டி said...

நீங்க சொல்ற முதல் நபரை எனக்கும் தெரியும், அந்த விஷயத்தை என்னிடம் சொன்ன பொழுதும் என்னிடமிருந்தும் அதே மாதிரியான ஒரு ஆச்சர்யம் தான் வந்தது.

ஆனா நான் யாருன்னு சொல்ல மாட்டேனே.

Costal Demon said...

நான் கூட உங்களை மாதிரிதான். த‌ண்ணீர் ப‌த்தியெல்லாம் அதிகமா எழுதுறது இல்லீங்க... ;-))

தருமி said...

குமரன்,
ரகசியம்னா ரகசியம்தான் தருமிகிட்ட, தெரியுமா? அதனால உங்க பின்னூட்டத்தை முடக்கிவிட்டேன். மன்னிச்சுக்கங்க...சரியா?

தருமி said...

வாங்க ராம், நானும் 31 புத்தகம் வாங்குன ஆள பார்க்கணும்னு நினச்சுக்கிட்டுத்தான் இருந்தேன். தொலைபேசி எண் தெரியுமா?

தருமி said...

ஜீன்ஸ் பேன்ட்டும், ட்டி சர்ட்டுமா ஒரு 36 வயது இளைஞன் வந்து நிக்கிறாரு ..அவர ஒரு 63 வயசு ஆளு ஜீன்ஸ் பேன்ட்டும், ட்டி சர்ட்டுமா வரவேற்றார்னு வேற யாராவது எழுதி வைக்கப் போறாங்க ! :)

தருமி said...

இராமநாதன்,
டாக்டர்னா டாக்டர்தான்...எப்படி ஒரு ப்ளாஸ்த்ரி..நன்றி. இந்த ஓட்டு போடுறது இன்னும் இருக்கா என்ன..?

G.Ragavan said...

நானும் மொத ஆளக் கண்டு பிடிச்சிட்டேன். :-)

நெறையப் பேரச் சந்திச்சிருக்கீங்க. நானும் மதுரைக்கு வந்தா சந்திக்கிறேன். அப்ப என்ன போடுவீங்கன்னு யோசிச்சுப் பாக்குறேன். :-))))

பாபாவை நானும் நேரில் சந்தித்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

என்னோட பின்னூட்டத்தைக் காணாம சரி முடக்கிட்டீங்கன்னு தான் நெனைச்சேன் தருமி ஐயா. ரகசியத்தை உடைச்ச பகுதியை மட்டும் வெட்டியெடுத்துட்டுப் போட்டிருக்கலாமே. இல்லாட்டி நான் போட்ட பின்னூட்டத்தை மின்னஞ்சல்ல அனுப்புங்க. ரகசியத்தை மட்டும் வெட்டிட்டு இன்னொரு பின்னூட்டமா போடறேன். :-)

துளசி கோபால் said...

பயந்துக்கிட்டே பதிவைப் படிச்சேன். நல்லவேளை தப்பிச்சாச்சு:-)

ஓட்டெல்லாம் கட்டாயம் போட்டுரணும். கள்ள ஓட்டு காலமப்பா இது.

காசிக்கு போக ரூட் போட்டாச்சா?

- யெஸ்.பாலபாரதி said...

//நடு உச்சி எடுத்து, கலைஞர் ஸ்டைலில் (அதாவது அந்தக் காலத்துக் கலைஞர்!) உச்சி வகிடெடுத்து தாடி மீசையுடன் ஒரு படம் போட்டு இதுதான் நான் என்று பதிவில் காண்பிச்சிக் கிட்டுருந்த ஒரு பதிவரைப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் "லால் சேட்ஜியின் சோட்டா பச்சா" மாதிரி இருந்தார் யெஸ். பால பாரதி. முன்ன பின்ன பார்த்ததில்லை; பின்னூட்டங்களில் கூட சந்தித்தது கிடையாது. ஆனால் மனுஷன் பார்த்ததும், ரொம்ப நாள் பழகிய தோரணையில் மிக அண்மைக்குள் என்னை நினைக்க வைத்து விட்டார் - மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தும் கூட ! (அந்த பக்கம் பாலபாரதி யாருகிட்டையோ கடலை, போன்லெயே வறுத்துகிட்டு இருந்தாரு(நாராயனா). - இது நான் சொல்லலைங்க; அவரது தோஸ்த் / மாப்பிள்ளை சொன்னது; ஜஸ்ட், மேற்கோளிட்டேன். அவ்வளவே!
//

அய்யா... தருமியாரே..
பா.க.ச மதுரை கிளை-1,ன் அமைப்பாளர் யாருன்னு தெரிஞ்சு போச்சு.
:-((((((((
அட!நீங்களுமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தருமியார்!
ஐந்து விரலும் சமனல்ல! என்பதை நிருபித்துள்ளார்கள். எனினும் ஞானவெட்டியான் ஐயாவின் உணவுமுறையைக் கடைப்பிடிக்கலாமா??என எண்ணவைத்தது. நன்றி
யோகன் பாரிஸ்

தருமி said...

ஜி ரா,
//நானும் மொத ஆளக் கண்டு பிடிச்சிட்டேன்.//
என்ன எல்லோருக் ஆளாளுக்கு இப்படி சொல்றீங்க...அவ்வளவு ஃபேமஸான ஆளா...லாஜிக் உதைக்குதே...அவ்வளவு ஃபேமஸான ஆளுக்கு எதுக்கு அப்புறம் முகத்திரையெல்லாம்...

ஞானவெட்டியான் said...

அன்பின் தருமி,
நம்மப் பற்றி நாலு நல்ல வார்த்தை எழுதியதற்கு நன்றி. காசிக்குப் போகும்போது ஞாவகப் படுத்துங்கள்!

இராம்/Raam said...

//வாங்க ராம், நானும் 31 புத்தகம் வாங்குன ஆள பார்க்கணும்னு நினச்சுக்கிட்டுத்தான் இருந்தேன். தொலைபேசி எண் தெரியுமா?//

இல்லங்கய்யா உங்களுடைய தொலைப்பேசி எண் தெரியாது. இந்த பின்னூட்டம் என்னுடைய மெயில் ஐடியுடன் வரும், அதில் ரிப்ளை செய்யவும்.

நீங்கள் மதுரையில் எந்த காலேஜ்,ஸ்கூல் டீச்சரு இல்லலே... உங்களைப் பார்த்த எங்க வாத்தியார் ஞாபகம்தான் வருது. அவரு காதை பிடிச்சு திருகி நச்சுன்னு தலையிலே வேற குட்டுவாரு..... :-(

Sivabalan said...

தருமி அய்யா

படிக்க சுவாரசியமாக இருந்தது..

நன்றி

தருமி said...

Johan-Paris,
எங்க வயசென்ன...உங்க வயசென்ன...கல்லப் போட்டாலும் செரிக்கிற வயசு..அதெல்லாம் மெல்ல பாத்துக்கலாம்.

தருமி said...

மோகன்தாஸ்,
//யாருன்னு சொல்ல மாட்டேனே. //
இது...
நல்ல பிள்ளை :)

தருமி said...

என்னார்,
//என்னையும் போட்டுடைத்திருப்பீர்கள் //

அய்யோடா! நான் என்ன அவர்களைப் போட்டுடைத்திருக்கிறேனா என்ன?

தருமி said...

அனானிமசாக வந்த சிபி அவர்களே,
வரவேண்டும்...இந்த முறை நாம் கட்டாயம் சந்திக்கிறோம்.. சரியா ?

தருமி said...

பாபா, (இந்தப் பெயரும் நல்லா இருக்கே!)
//அட!நீங்களுமா? // என்ன இப்படி சொல்லிட்டீங்க...இல்லாதது எதாவது சொல்லியிருக்கேனா என்ன?

தருமி said...

பாபா.
(இந்தப் பெயரும் நல்லா இருக்கே!)
//அட!நீங்களுமா? //
என்ன நீங்க...அப்படி என்ன இல்லாதது பொல்லாதது ஏதாவது சொல்லிட்டேனா என்ன?

தருமி said...

ராம்ஸ்,
//நான் கூட உங்களை மாதிரிதான். த‌ண்ணீர் ப‌த்தியெல்லாம் அதிகமா எழுதுறது இல்லீங்க... ;-)) //

ஆமாங்க, நாம எல்லாம் ரொம்ப அடக்கமான ஆளுக இல்லியா..? :)

தருமி said...

சிவபாலன்,
//படிக்க சுவாரசியமாக இருந்தது..//

நல்ல வார்த்தைக்கு நன்றி.

கால்கரி சிவா said...

//பாபா.
(இந்தப் பெயரும் நல்லா இருக்கே!)
//அட!நீங்களுமா? //
என்ன நீங்க...அப்படி என்ன இல்லாதது பொல்லாதது ஏதாவது சொல்லிட்டேனா என்ன?//

தருமி சார் பாபா என்றால் பாஸ்டன் பாலா அல்லவா?

குமரன் (Kumaran) said...

//தருமி சார் பாபா என்றால் பாஸ்டன் பாலா அல்லவா?
//

பாபா என்று பலருண்டு சிவாண்ணா.

பாலக்கரை பாலன் உதயகுமார் ஐயாவையும் பாபா என்று அழைப்பதுண்டு.

பால பாரதியும் பாபா ஆனால் தவறென்ன? :-)

தருமி said...

குமரன்,
என்னைக் குறிப்பிடுவது மாதிரியே உதயகுமாரையும் நீங்கள் 'அய்யா' என்று கூப்பிடுவது பார்த்த எனக்கு ஒரே 'ஜாலி'! :) ஆனா பாவம் உதயகுமார் என்ற பாபா என்ற பாலக்கரை பாலன்! ஆனாலும் மனுஷனுக்கு எங்கேடா ஒரு நரை தெரியுதுன்னு பாத்துக்கிட்டு இருப்பீங்களோ?

தருமி said...

குமரன் சொன்னது:

தருமி ஐயா,
பதிவர் 1 & பதிவர் 2 யாருன்னு சொல்லவேயில்லையே? பதிவர் 1 தான் வெளிய சொல்ல மாட்டார். அதனால் அவரோட ரகசியத்தை நீங்களும் ரகசியமா வச்சுக்கலாம். பதிவர் 2மா?

எத்தனையோ பேர் பதிவர் 1 மாதிரி இருந்தாலும் நீங்க விவரிச்சிக்கிறதைப் பாத்தா யாருன்னு எனக்க்குத் தெரியும்னு தோணுது. ......?

தருமி said...

செல்வன் சொன்னது:
அந்த முதல் பதிவர் யாருன்னு எனக்குத் தெரியுமே!....

கசி said...

கண்டிப்பாக என்ற ஊட்டுக்காரை ஒரு தபா நீங்க சந்திக்கோனும்!

பொன்ஸ்~~Poorna said...

//குமரன் சொன்னது:
பதிவர் 1 தான் வெளிய சொல்ல மாட்டார். பதிவர் 2மா?
//
குமரன், நீங்க முதல் பின்னூட்டத்தைப் படிக்கலியா? பதிவர் 2 ஒரு பெரீரீரீரீய :O (ஓட்டைவாய்) :)

தருமி,
இத்தனை கஷ்டப்பட்டு குமரன், செல்வன் பின்னூட்டத்தை எடுத்துப் போட்டிருக்கீங்களே, இதைப் பார்க்கலியா?

பொன்ஸ்~~Poorna said...

சொல்ல மறந்துட்டேனே தருமி!, இத்தனை பேருக்குத் தெரிஞ்ச அந்த ரகசிய பதிவர் யாருன்னு எனக்கும் இப்போ புரிஞ்சிடுச்சு :)

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. உங்களையும் கோவி.கண்ணனையும் உதயகுமாரையும் ஐயான்னு கூப்புடறது நீங்க வயசுல மூத்தவங்கங்கறதுக்கு மட்டும் இல்லை. சார்ன்னு எங்கே எல்லாம் சொல்லணும்ன்னு தோணுதோ அங்கே எல்லாம் ஐயான்னு சொல்றேன் நான். அம்புட்டுத் தான். :-) நரையைப் பாத்தா எனக்கு மீசையில கூட நரை வந்தாச்சு (தலையில ஒரு நரை முடியும் இல்லை). :-)

தருமி said...

சீரியஸா ஒரு விஷயம்:

நான் என்னவோ எந்தவொரு clue-வும் கொடுக்காதபடிதான் முதல் பதிவர் பற்றி செய்தி சொன்னேன். அவர் விரும்பும் ரகசியத்தைச் சபைக்குக் கொண்டு வரும் எண்ணம் சிறிதும் இல்லாமல், யாரும் கண்டுபிடிக்கமுடியாது என்ற நினைப்பில் எழுதினேன். ஒருவேளை எல்லா பதிவர்களும் என்னைப்போலவே மொடாக்குகளாக நினைத்து விட்டேன் போலும். பலர் இப்போது அவரை அடையாளம் கண்டதாகச் சொல்லும்போது அந்தப் பதிவர் என்மீது வைத்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்துவிட்டது போல் ஒரு குற்ற உணர்வு. இப்பதிவால் அவருக்கு ஏதும் மனக்குறை ஏற்பட்டிருப்பின் - அது என் அறியாமையால் விளைந்தது என்றாலும் - பொதுவில் அவரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்.

தருமி said...

பொன்ஸ்,
//நல்லா தெரியற மாதிரி நாலு போட்டோ எடுத்துக்கிடத் தான்.. //
அட போங்க பொன்ஸ். இந்த மாதிரி ட்ரிக் போட்டோ எல்லாம் எங்கள மாதிரி ஆளுகளுக்காகவே உள்ள விஷயமாக்கும்.

இப்படி ஒரு பின்னூட்டம் முந்தியே போட்டேன்; என்ன ஆச்சுன்னே தெரியலை!

பொன்ஸ்~~Poorna said...

புது டெம்ப்ளேட், புது போஸ்ட், கலக்கறீங்க தருமி :))

இது நீங்க திருத்திப் பார்ப்பதற்காக போடும் சோதனைப் பின்னூட்டம் :)

திருத்துற வழி தெரிஞ்சு போச்சுல்ல...ஆனா திருத்த மாட்டோமுல்ல.. :)

Narayanaswamy G said...

அய்யா வணக்கம்.

ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே இந்த பின்னூட்டம் எல்லாம்!

நான் எதாவது எடுத்து உடவா?

அது இருக்கட்டும், இந்த புது லே அவுட் ரொம்பவே செமத்தியா இருக்கு சார்!!!

அட்டகாசம்!!

பழூர் கார்த்தி said...

திரும்பவும் ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்துட்டீங்களா, வாங்க, வாழ்த்துக்கள் !!

***

புனைப்பெயர்கள் வைத்திருப்பது வசதிதானே :-))

***

PRABHU RAJADURAI said...

நானும் போட்டோவைப் பார்த்துதான், இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்...அதற்குள் வேறு யாரோ சொல்லிவிட்டனர் போல:-)

இயக்குஞர் மகேந்திரனை ஞாபகப்படுத்துகிறது...with no offense to you...புகைப்படம் எடுத்தவருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவிக்கவும்.

தருமி said...

ப்ரபு ராஜதுரை,
//நானும் போட்டோவைப் பார்த்துதான், இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்...அதற்குள் வேறு யாரோ சொல்லிவிட்டனர் போல:-)//

இப்படி ஒரு குரூப்பாவே அலைவீங்களா'ய்யா..? :(

//இயக்குஞர் மகேந்திரனை ஞாபகப்படுத்துகிறது...with no offense to you...//

மகேந்திரன் கேள்விப் பட்டு offense ஆக எடுக்காம இருந்தா சரி..

//புகைப்படம் எடுத்தவருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவிக்கவும்.//
கட்டாயமா..

Post a Comment