பத்து பத்து நிமிடங்களாக ஓடும் 13 பாகங்கள். -u tube documentaries
சமீபத்தில் பார்த்த ACCAPULCO படம் கூட நினைவுக்கு வந்தது.
http://www.youtube.com/watch?v=AT6XsVnuz6o&mode=related&search=
அத்தனையும் பார்த்து முடித்ததும் சில கேள்விகள் மனத்துக்குள்:
* ஆப்ரிக்காவில் உருவான மனித இனம் அங்கிருந்து இடம் பெயர்ந்து உலகின் பல இடங்களுக்கும் சென்றதாக மனிதனின் Y நிறமிகள் (chromosomes) மூலமாக நிறுவப்பட்டுள்ளதை இந்தத் தொடர் மிக அழகாகக் காண்பிக்கிறது.
என் ஐயம்: ஏற்கெனவே கேட்ட கேள்விதான். இந்தக் காலத்தில் கூட தாங்கள் வாழ்ந்த இடத்தை முற்றாக விட்டு விட்டு புது இடம் போக நாம் தயங்குகிறோம். ஆனால் 30 -50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக competition for survival கடுமையாக இல்லாமல் இருந்திருக்கக் கூடிய காலத்தில், fear of unknown இருந்திருக்கக்கூடிய காலத்தில் இடப் பெயர்ச்சி மிகவும் கடினமாக இருந்திருக்கக் கூடிய அந்தக் காலத்தில் எதனால் மனித வர்க்கம் இந்தத் தொடர் இடப் பெயர்ச்சியை மேற்கொண்டிருந்திருக்கும்?
ஆப்ரிக்காவில் ஆரம்பித்த இந்த தொடர் இடப் பெயர்ச்சி இந்தியா வழியாக ஆஸ்த்ரேலியாவுக்குச் சென்றதாக நிறுவப்படுகிறது. அதற்கு ஆதாரமே மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் ஓர் ஊரிலுள்ள விருமாண்டியின் மூலமாகத்தான்! குறும்படத்தின் மூன்றாவது பகுதியில் இதுபற்றி உள்ளது.
ஆக திராவிடரோ, ஆரியரோ எல்லோருமே வந்தேரிகள்தான் போலும். என்ன சிலருக்கு வேண்டுமானால் கொஞ்சம் சீனியாரிட்டி இருக்கலாம்; அவ்வளவே. அதைப் பார்த்ததும் நான் என் பதிவொன்றின் கடைசிப் பகுதியான ஏழாம்பகுதியில் எழுதியதுதான் நினைவுக்கு வந்தது.
இந்த வம்பு வழக்கெல்லாம் வேணாம்னு நினைக்கிறவங்க கூட கட்டாயம் அந்த விருமாண்டி எபிசோட் பாருங்க. அட, அது இல்லாவிட்டாலும் 10-ம் பதிவு மட்டுமாவது பார்க்கணும். ஆர்க்டிக் பகுதியின் உட்பகுதி, சைபீரியாவின் ஒரு மூலை, எங்கும் பனிமூடிய நிலம், -30டிகிரி செல்ஷியஸ், உடன் வாழும் உயிரினங்கள் இரண்டே இரண்டு - lichens அதை மட்டுமே உணவாகக் கொள்ளூம் reindeers - மட்டுமே, சாப்பாடு, உடை, உறையுள், போக்கு வரத்து எல்லாமே அந்த மான்களை வைத்துதான் என்ற நிலை, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் It is an out and out a god forsaken place. The question is how come mankind has not STILL forsaken it? வாழ்வாதாரங்கள் ஏதுமில்லாத அந்த அத்துவான தேசத்தில் ஏன் மனிதர்கள் இயற்கையோடு மல்லுக்கட்டிக் கொண்டு வாழவேண்டும்? 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து அங்கு குடியேறிய அந்த மக்கள் - அவர்களின் பெயர் Chuksi - இன்னும் ஏன் அந்த பனிப்பிரதேசத்தில் கஷ்டப் படணும்? பழகிவிட்டது என்றாலும் தங்களின் அடுத்த தலைமுறையாவது வேறெங்காவது போய் நன்றாக வாழட்டும் (நமது கிராம மக்கள் நினைப்பது போல் ) என்ற நினைவு வராமல் போவதெப்படி? இன்றைய மக்களுக்கு அப்படிப் புது இடங்களுக்குப் போவது கடினமென்றால், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நம் மூதாதையர்களுக்கு மட்டும் அந்த பிரச்சனை இல்லையா? அவர்கள் எப்படி அந்தக் காலத்திலேயே நாடு விட்டு நாடும், கண்டம் விட்டு கண்டமும் மாறி மாறி இடம் பெயர்ந்தார்கள்?
அதுவும் ஏன் இடம் பெயர்ந்தார்கள்?
ஒண்ணும் புரியலை ... புரிந்தவர்கள் விளக்குங்களேன்.
பாவம் தருமி! கோவில் மண்டபத்தில் நின்று கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டு நிற்கிறான்.
17 comments:
ஒண்ணும் புரியலை ... புரிந்தவர்கள் விளக்குங்களேன்.
முதலில் அந்த வீடியோவை பார்த்துவிட்டு வருகிறேன்.
அப்படியே வந்தாலும்!! மேலே உள்ளதைத்தான் சொல்லுவேன். :-))
பார்ப்போம் யாராவது வருகிறார்களா? என்று
நெருப்பு,விவசாயம் இரண்டையும் மனிதன் முழுமையாக கைக்கொள்ளும் வரையில் இடப்பெயர்ச்சி விரைவாக இருந்திருக்கலாம்.மிருகங்களும் இடப்பெயர்ச்சி செய்துகொண்டிருக்கின்றன.
விவசாயம் தோன்றியதிலிருந்து குடும்பம்,அரசு,தனிச்சொத்துடைமை தோன்றியுள்ளது.
வேற்று தெரு நாய் வந்தால் கொலைவெறியோடு துரத்தும் நாய்களின் நிலைமையில் தான் மனிதனும் இருக்கிறான்.அதனால் இப்போது கட்டற்ற இடப்பெயர்ச்சி சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.
(நாய்களுக்கும்,மனிதனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.நாய்கள் வேற்று நாயை நேரடியாக தாக்குமே தவிர ,நீ தாழ்ந்த சாதி நாய் ,உன்னைப்பார்த்தாலே தீட்டு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரும்பிக்கொண்டு ஓடாது.)
தருமி அய்யா சிறு சந்தேகம் .மனிதனின் வளர்ச்சியில் சிந்தனை எப்படி உருவானது என்பது பற்றி ஒரு பதிவாக இடுங்களேன் என்று வாசகர்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
"The journey of man" - தமிழகத்திலுள்ள பல கல்விக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்குத் திரையிட்டு வகுப்பெடுக்க வேண்டிய ஒரு குறும்படம். விருமாண்டி தவிர மேலும் வேறு சிலரிடம் அப்படிப்பட்ட ஆதாரங்கள் சிக்கியதா. அது பற்றி கொஞ்சம் விளக்குங்களேன்.
தருமி,
ஜாலி கூறியதில் நிறைய உண்மைகள் உள்ளது. கட்டற்ற வலசை போதல்(இடம் பெயர்வு) இன்னமும் வன விலங்குகளில் நடந்து தானே வருகிறது. உதாரணத்திற்கு வட துருவத்தில் உள்ள நீர்ப் பறவைகள் பனிக்கலாங்களில் தென் துருவத்தை நோக்கி வருவதும், முதுமலை யானைகள் கோடை காலத்தில் உணவு, நீர் பற்றாக்குறையின் பொருட்டு கர்நாடாக காடுகளுக்கு வலசைப் போதலும் இன்னமும் விலங்குகள் உலகில் நடப்பதுதான்.
அப்படிப் பார்க்கையில் அவைகளுக்கு இன்னமும் இந்த நாடு, இனம், ஜாதி போன்ற வரையறைகள் இல்லாதிருப்பதும், மனிதனின் நாடுகள் தோறும் இன்னமும் திறந்தே இருக்கும் எல்லைகளும் ஒரு காரணங்களாக இருக்கிறது.
மனித இனம் என்று எழுந்து நடக்க ஆரம்பித்ததோ அன்றே பறவைகளுக்கு வலசை போதல் என்ற ஒன்று அத்தியவசியத் தேவை போல அவனுக்கும் புது இடங்களில் தனது விருத்திதை வளர்ப்பதனைப் போன்று செய்திகள் மரபணுக்களில் வைத்திருக்கப் படலாமல்லவா... அதன் பொருட்டு எல்லைகளற்ற நாடாக, இன, மொழி பாகு பாடுன்றி இயற்கையை மட்டுமே கையகப் படுத்தி புதுப் புது இடங்களை ஆக்கிரமிக்க மற்ற விசயங்கள் ஒரு தடையாக இருந்திருக்க முடியாது.
ஆனால், அதே இடப் பெயர்வு (வலசை போதல்) தனது carrying capacityயை தொட்டவுடன், அங்கே terrritorial protection issues காட்டப் பட நேரும் பொழுது மேலும் மேலும் நடக்கும் இடப் பெயர்வு ஊக்குவிக்கப் படாமல் இன்று நடப்பதைப் போல தன் இன மக்களுடன் வாழ்வதே பாதுகாப்பு என நினைத்து விட காரணமாக இருக்கலாமல்லவா?
அன்று நம் மூதாதையர்கள் செய்தது மரபணுக்களின் உந்துதல் சார்ந்தது, ஆனால் அண்மைய இடம் பெயர்வு இந்த காலனிகள் நாடு நாடாக சென்று இடம் பிடிப்பதெல்லாம் பேரசையின் பொருட்டும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் சார்ந்தது தான். உதாரணம் பிரிட்டிஷ் இந்தியாவுற்குள் நுழைந்தது... இத்தியாதிகள்...
இங்கு ஒரு கேள்வி இப்பொழுது எங்காவது நாம் இடம் பெயர்ந்த்தால் துண்டைப் போட்டு இலவசமாக கண்ணுக்கெட்டிய தொலைவு நிலங்களை நம்முடையதாக எடுத்துக் கொள்ள முடியுமா? இதில் வசிக்க முடியாத ஆர்டிக், அண்டார்டிக்கும் அடங்கும்... :-)
தருமி சார்
வணக்கம். "out of Africa" கோட்பாடு முற்றும் முழுதான கோட்பாடு அல்ல. ஆனால் பிரபலமான ஒன்று. மனித இனம் ஆசியாவில் தோன்றியிருக்கலாம். இந்தியக் காடுகளிலோ? போர்னியோ காடுகளிலோ தோன்றியிருக்கலாம். இப்படித்தான் பெர்க்கிலி பல்கலைக்கழக மரபணு ஆய்வு சுட்டுகிறது. நான் இதை வலுவாய் நம்புகிறேன். ஏனெனில் உலகின் மூத்த, வளச்சியடைந்த நாகரீகம், மொழி வளர்ச்சி ஆசியாவிலேயே காணக்கிடைக்கிறது. ஆப்பிரிக்கா மிக வளமான பிரதேசம். அங்கிருந்து மனித இனம் இடம் பெயரக் காரணமே இல்லை! அப்படி மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியிருந்தால் அங்கு ஏன் மக்கள் இன்னும் ஒலிக்குறிப்புகள் அடங்கிய வளர்ச்சியடையாத மொழிகளைப் பேசி வருகின்றனர், ஏன் மிகப்பெரிய சாம்ராஜ்ஜயங்கள் தோன்றாமல் மக்கள் இன்னும் இனக்குழுக்களாய் பிரிந்து வாழ்கின்றனர்? எனக்கென்னமோ இந்தியாவில் இன்னும் நல்ல ஆய்வுகள் செய்தால் பல அரிய விஷயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
விவசாயம் வளர்ந்த பின் மக்கள் இடம் பெயர அந்த விவசாயமே காரணமாக இருந்திருக்கிறது. வளமான நிலம் நோக்கிய பயணம் இன்று கூட மனித ஆசையுள் ஒன்று (அமேரிக்கா, தென் அமெரிக்கக் குடிப்பெயர்வுகளைக் கவனிக்க).
உங்கள் கேள்விகள் வலுவானவை. ஆராயப்பட வேண்டியவை!
உங்கள் கேள்விகளே எனக்கும் கேட்க(மட்டும்) தோன்றுகின்றன:-)
நா. கண்ணனின் பார்வையும் சரியாக இருக்கிறதாகவே படுகிறது. பெரியவங்களா பாத்து பதிலும் தேடிச் சொல்லிட்டீங்கன்னா வசதியாப் போகும்.:-)
தருமி சார்,
அருமையான பதிவு....கேள்விக்கு பதில் இல்லையென்றாலும், கண்ணன் சார் சொன்னது போல, பெர்க்கிலி பல்கலைக்கழக மரபணு ஆய்வுக் கட்டுரைகள் சிலவற்றை நண்பன் மூலமாக படித்தவன் என்பதால் நானும் கண்ணன் சார் சொல்வதையே வழி மொழிகிறேன்.
கோவில் மண்டபத்தில் தருமி புலம்புவதைத்தானே பார்த்திருக்கிறேன்...
நீங்க சொன்னதெல்லாம் அந்த லிஸ்ட்ல வராதே பாஸ்...ஹி..ஹி
சார்! நான் தொல்காப்பியன் பேசறேன்! ஜாலிஜம்பர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை, நெருப்பு, விவசாயம் இதுதான் காரணம். விவசாயம் அப்போஒ தானா நடந்துச்சு. அவனவன் கொறிச்சு போடும் நெல் விதையிலிருந்து காடு மாதிரியான நெல் கூட்டத்தில் காட்டு மிராண்டி மனித குழந்தைகள் விட்டு விளையாடிய கற் துண்டுகள் உரசி வந்த நெருப்பு அந்த கூட்டத்தின் சொந்த பந்தமான விலங்குகள் பசு எருமை போன்றவும் அந்த நெல் வயலோடு எரியவே மிச்சமிருந்த மனித கூட்டம் அணைந்து முடிந்தது ஓடி வந்து எட்டி பார்த்து வாஞ்சையாய் தொட வெந்த பசு எருமை நாய் உடல் சருக்கூன்னு விரல் உள்ளே போக சூட்டின் காரணம் அந்த காட்டுமிராண்டி கூட்டம் வாயில் விரல் வைக்க முதல் ருசி கண்டானே! பின்ன தனக்கு ருசி வேணும் எனும் ஓதெல்லாம் ஊரை கொலுத்த ஆரம்பிச்சு இன்னிக்கு கோவை மாணவி கேகில வாணி வரை வந்துடுச்சே, ஆக எல்லாத்துக்கும் காரணம் ருசி ருசி ருசியே என தீர்ப்பு கூறி.......................
சார் சார் நான் அபிஅப்பா! நான் டாய்லெட் போயிட்டு வரும் முன்ன இவன் என் கம்பியூட்டர் ஊஸ் பண்ணிட்டான்...கொஞ்ச இருங்க நான் சொல்றேன் மனித உயிர் தோன்றியது எங்கன்னு தானே கேள்வி! நான் சொல்றேன்,
அதாவது மனித உயிர் தோன்றியது நம்ம தமிழ்நாட்டிலே காரைக்குடி பக்கத்துல இலுப்பூர்ன்னு ஒரு கிராமத்துல
ஏன்னு கேட்டா, ஒரு தடவை என் தங்கமணி கோவிச்சுகிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போக அப்போ அவங்க அம்மா ஏதோ பிரச்சனையில அவங்க அம்மா வீட்டுக்கு போய்விட அதை தொடந்து என் தங்கமணியும் போக நானும் பின்னாலயே தொரத்திகிட்டு போக கடேசியா நான் என் தங்கமணியை பிடிச்ச் வீடு ஏவால் வீடு! அடங்கொக்கமக்கா!!
சார்! நான் ரொம்ப நாலா பினாநானா எழுத ஆசப்பட்டு இப்ப தான் சார் நிறைவேறுச்சு:-))
இனிமே இது போல பதிவு போட்டா சொல்லியனுப்புங்க:-)) கண்டிப்பா வர்ரேன்!
நீங்க சொன்ன படங்கல் எதையும் பார்க்கலை(-:
ஆனால்............. ஆர்டிக்லே இருக்கறவங்க, என் தங்கள் பிள்ளைகளை வேற இடத்துக்கு அனுப்பலைன்னு கொஞ்சமா யோசிச்சேன்.
அவுங்க தேவைகள் ரொம்பவும் கம்மி. இன்னும் வெளி உலகத்தொடர்பு, டிவி சீரியல்கள் எல்லாம் பார்க்கலை போல இருக்கு.
மண்டபத்துக்கு பக்கத்துலெ இருக்கும் காப்பிக்கடையில் உக்கார்ந்துருக்கென். பதில் கிடைச்சதும் சொல்லுங்க.
போய் படத்தைப் பார்க்கிற வழியைப் பார்க்கிறேன்.
இந்த விசயம் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்படடு் உசிலம்பட்டி விருமாண்டியின் இரத்த மாதிரிகளும் ஆப்பிரிக்கர்களுடையதும் ஒன்றாக இருப்பது கண்டுபிடிக்க்ப்பட்டதாக எப்போட்தோ விகடனில் படித்த ஞாபகம். மத்தபடி வாத்தியாரய்யா .. நான் ரொம்ப சின்ன பையன் .. கருத்தெல்லாம் ஒன்னுமில்லீங்கோ.. எனவே ஓரமா நின்னு வாய் பாக்குறேன்.
:))))
போன பின்னூட்டத்திலே ஸ்மைலி போட மறந்துட்டேன். ;).
தருமி சார்,
நல்லதொரு குறும்படத்தை அறியத்தந்தீர்கள்..எந்த அளவுக்கு இந்த தியரி சாத்தியம் அல்லது கன்ஸிஸ்டன்ட் என்பது தெரியவில்லை.ஒரு விருமாண்டியின் Y குரோமோசோமும் ஒரு மங்கோலியரின் Y குரோமோசோமும் இந்தத் தியரியை தாங்கிப் பிடிக்கப் போதுமானதா? அப்புறம் விளக்கப் படாத சுமார் 150மைல் கடல் பிரயாணம்-ஆஸ்திரேலியாவை அடைவதற்கு..அதுவும் கற்காலத்தில் ? சாத்தியம் கம்மிதான் போல் தோன்றுகிறது!!!!
நான் படம் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
ஏழு பகுதிகள் பார்த்து முடித்தாகி விட்டது.இன்னும் மீதமுள்ளவைகளைப் பார்க்கும் முன் ஆப்பிரிக்கா தியரி எந்தளவுக்கு சரியென்று தெரியவில்லை.படத்தில் வருகிறவர்களே தாங்கள் அந்தந்த இடத்துக்குரியவர்கள் என்கிறார்கள்.இடப்பெயர்ச்சி என்பதனை விட பைபிளில் வருகிறமாதிரி பிரளயத்தில் துண்டு படுவதற்கு சாத்தியங்கள் உண்டோ?டி.என்.எ விசயம் பாதியிலேயே முடிந்து விட்டதால் குழப்பம்.நேரம் கிடைக்கும் போது மீண்டுமொரு முறை பார்க்கவேண்டும்.
Post a Comment