Monday, October 08, 2007

237. அட தமிழ்ப்பட இயக்குனர்களே ...

அரை மணி நேரத்துக்கு முன்னால விசிடியில் ஒரு படம் பார்த்தேன்.
மலையாளப் படம்.
படம் முடிஞ்ச பிறகும் அந்த இடத்திலேயே ஆணியடிச்சது மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
ஏறக்குறைய இருபது இருபத்தஞ்சு நிமிஷம்.
ஒண்ணுமே செய்யத் தோணலை.
என்னென்னமோ மனசுக்குள்ள ஓடியது.
கஷ்டமா இருந்தது.
மனசு ரொம்ப பாரமா ஆயிரிச்சி.
வசனங்கள் அனேகமா எதுவுமே புரியவில்லைதான்.
கேரளாவின் எந்தப் பகுதின்னும் தெரியலை.
Backwaters உள்ள அந்தப் பகுதி மிகவும் புதுசா தோன்றியது.
அழகான இடம்.
நல்ல மக்கள்.
இடத்தைப் போலவே மக்கள் மனசுக்குள் எல்லாம் ஈரம்.
இருட்டை இருட்டாக காண்பிக்கும் படப் பிடிப்பு.
நடிப்பு, கதை, படப்பிடிப்பு - சுத்தமாக எதிலும் மிகையில்லை.
cinematic, dramatic அப்டின்னு எல்லாம் சொல்லுவாங்களே.
அவைகளுக்கு இப்படத்தில் இடமே இல்லை.
எப்படி இப்படி படம் எடுக்கிறார்கள்?
இந்த மாதிரி படம் எடுக்கும் துணிச்சலைத் தரும் மக்களை எப்படிப் பாராட்டுவது?

இப்படியெல்லாம் நினச்சிக்கிட்டு இருந்தப்போ ...
நமது தமிழ்ப்பட டைரடக்கர்கள் ஒவ்வொருவராக மனசுக்குள் வந்து நின்றார்கள்.
அடச் சீ! போங்கடான்னு சொல்லணும்போல இருந்தால் அது என் தப்பா?


குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு கேரளாவிற்கு வந்து சேர்ந்த மொழி தெரியாத சிறுவன்.
மம்முட்டியின் குடும்பத்தோடு ஐக்கியமாகிறான்.
சட்டதிட்டங்களின் குறுக்கீடு.
அதன்படி அவன் குடும்பத்தைத் தேடி பையனோடு மம்முட்டி குஜராத் பயணம்.
அழிந்து உருக்குலைந்த வீடு.
அனாதையான சிறு பிள்ளைகளோடு பையன் சேர்க்கப் படுகிறான்.
அறியாச் சிறுவனின் மனத்தில் குடும்பம் வந்துவிடும் என்ற நம்பிக்கை.
அந்த நம்பிக்கையில்லாமல் பையனை விட்டுவிட்டு வரும் மம்முட்டி.



சமீபத்தில் பார்த்த சில ஈரானியப் படங்களைப் பார்த்து(Where is my friend's house?) பெருமூச்சு விட்டதுண்டு.
இப்படியெல்லாம் என்றைக்கு நம்மூரில் படம் எடுப்பார்கள் என்று நினத்ததுண்டு.
பக்கத்தூரிலாவது எடுத்திருக்கிறார்களே.

மலையாளப் படங்களின் உச்சங்களைப் பார்த்து மலைத்தது உண்டு.
இதோ இன்னொரு படம்.

படப் பெயர்: காழ்ச்சா.
Tag line Edge of Love
இயக்குனர்: Blessy
நடிப்பு: மம்முட்டி ...

நம்ம ஊரு நிலைமைக்கு யார் காரணம்?
நிச்சயமா நம்மை மடையர்களாக நினைத்து (புரிந்துகொண்டு..)படம் எடுக்கும் நம் டைரடக்கர்களா? என்ன மசாலா கொடுத்தாலும் விசிலடிச்சி படம் பார்க்கும் நாம்தானா? இதையும் தாண்டி நம் ஊடகங்கள் ... அடடா, மலைக்கோட்டை படத்தின் முன்னோட்டம் பார்க்கும்போதே படத்தின் அருமை புரிந்துவிடுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் நம்பர் 1 ஆ.வி.யில் அதற்கு நூத்துக்கு நாற்பத்து ஒன்று. தாராளப் ப்ரபுகள் .. சில வாத்தியார்கள் மாதிரி .. நிறைய மார்க் போட்டுட்டா பசங்கட்ட இருந்து எந்த தொல்லையும் இருக்காதே .. என்னமோ நடக்குது ...

59 comments:

jeevagv said...

பார்க்க முயற்சிக்கிறேன் சார்!

We The People said...

காழ்ச்சா ஒரு அருமையான படம் தான் நான் பார்த்துவிட்டேன்!

கேரளாவில் நட்சத்திரங்கள் கிடையாது! கதை தான் ஹீரோ! அதற்கு ஏற்றார் போல நட்சத்திரங்கள் தேர்வு, இயக்குனர் தான் சாரதி! இங்கு நட்சத்திரம், அவருடைய கமேர்ஷியல் தேவை, குத்து பாட்டு என்று படத்தை கொடுமை படுத்தறாங்க! அங்கும் சில அதுபோல வருவதுண்டு படம் நல்லா இல்லை என்றால் முதல் நாள் இரண்டாவது ஷோவே நடக்காது! முதல் காட்சி பார்த்தவர்கள் இரண்டாவது காட்சிக்கு வருபவர்களிடம் கதையை சொல்லி ஓட்டி விட்டுவிடுவாங்க! இதை நான் மோகன்லாலின் 'குரு' என்ற சினிமா பார்க்க போனபோது உண்மையாவே நடந்தது! அதுபோல ஒரு நிலமை வந்தா நம்ம ஊரு இயக்குனர்களும் கொஞ்சம் யோசிச்சு படம் எடுப்பாங்க! எல்லாம் நம்ம கையிலேயே தான் இருக்குன்னு நினைக்கிறேன் :)

பி.கு: காழ்ச்சா என்ற வார்த்தைக்கு அர்த்தம் Edge of Love இல்லை :) அதற்கு அர்த்தம் காட்சிகள் என்று நினைக்கிறேன் :)

ச.மனோகர் said...

'நம்ம ஊரு நிலைமைக்கு யார் காரணம்?'

தருமி சார்..

தங்கள் பதிவிலேயே அதற்கான பதிலும் உள்ளது..

'இந்த மாதிரி படம் எடுக்கும் துணிச்சலைத் தரும் மக்களை எப்படிப் பாராட்டுவது?'

எல்லா மொழிகளிலும் நல்ல படங்களுக்கான முயற்சி நடை பெறுகிறது.ஆனால் சினிமா வியாபாரிகளின் கையில் உள்ளது. கேரளா போன்ற இடங்களில் மக்களின் மனப்போக்கு,கல்விஅறிவு போன்றவை வியாபாரிகளை சற்று ஒதுக்கி வைத்துள்ளது.அதனால் இன்னமும் சில நல்லப் படங்கள் வருகின்றன.

ஆனால் அங்கும் நாயகர்கள் பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை போட்டு ஆடத் தொடங்கிவிட்டார்கள்.

ஒரு சிறந்த படத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி.உடனே பார்க்க வேண்டும்.

இலவசக்கொத்தனார் said...

இவங்களைக் கேட்டா வர படத்தைத்தானே பார்க்க முடியும் என்பார்கள். அவர்களைக் கேட்டா மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்பார்கள். என்ன செய்ய?

கண்மணி/kanmani said...

நாம ஹீரோவுக்காகத் தானே சார் படம் எடுக்கிறோம் ...பார்க்கிறோம்.
பத்திரிக்கைகளும் அவங்க ஸ்டில்லை நம்பித்தானே அட்டைப் படம் போடுது.
அப்புறம் கதையை ஏன் தேடுறீங்க.

இரண்டாம் சொக்கன்...! said...

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை...

ஆனால் சமீப காலமாய் அங்கும் நமது மசாலாக்களின் தாக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கு விஷயம்...

முகவை மைந்தன் said...

ஒன்றுமே இல்லாமல் இல்லை. முயற்சிக்கிறார்கள்.

நீங்கள் இன்னும் கற்றது தமிழ் பார்க்கவில்லையா? ஒருவேளை உங்களுக்கு பிடிக்கலாம். திட்டிக் கொண்டே தான் பார்த்தேன். முடிவில் சொன்ன செய்தி மனதுக்கு மிகவும் தொல்லை தருவதாக இருந்தது.

நாலைந்து முறை அசை போட்ட பின் (அசை போட வைத்தது படம்) புது முயற்சி மாதிரியும் தோன்றியது. இது போதும் ஒரு நல்ல படத்திற்கு.

உண்மைத்தமிழன் said...

தருமி ஐயா, இது மாதிரி படம் எடுக்க தமிழ்நாட்டிலும் இயக்குநர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் முன் வரவில்லை. அவர்களைக் கேட்டால் ரசிகர்களைக் கை காட்டுவார்கள். ரசிகர்களைக் கேட்டால்..? யார் ரசிகர்கள்..? நீங்களும் நானுமா..?

கேரளாவின் மண்ணின் மைந்தர்களுக்கும், நம்முடைய மைந்தர்களுக்கும் என்ன வித்தியாசம்..? எதில் எதிலோ போட்டியிடுகிறோம்.. சேலத்தை விட்டுக் கொடுக்க முடியாது.. பொள்ளாச்சியை விட்டுத் தர முடியாது.. முல்லையாறு பிரச்சினையில் விட்டுத் தர முடியாது என்கிறோம்.. ஆனால் அடிப்படையான மக்களின் கல்வியறிவு, புத்தக அறிவு, அனுபவ அறிவை மேம்படுத்தும் முயற்சியை மட்டும் யாரிடமிருந்தும் கற்றுக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறோம். ஏனெனில் அவ்ளோ அறிவுள்ள மக்கள் நமது அரசியல்வாதிகளுக்குத் தேவையில்லை. அது இருந்துவிட்டால் கேரளாவைப் போல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு கட்சி என்று ஆட்சி மாறி மாறி வந்து நமக்குத்தான் தொல்லை என்று யோசிக்கிறார்கள்.

இந்தப் படம் கேரளாவில் மிக நன்றாகவே ஓடியது.. படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தன. இதே இயக்குநர் பிளஸ்ஸி இயக்கிய இன்னொரு படம் தன்மந்திரா.. இதையும் அவசியம் நீங்கள் பார்க்க வேண்டும்.. அருமையான திரைப்படம். இந்தப் படமும் திரைவிருதுகளை வாரிச் சென்றது..

திரு.பிளஸ்ஸி இயக்குகிய திரைப்படங்கள் அனைத்திலும் சிறுவர்கள், அவர்களுக்கான படிப்புகள்தான் முக்கியம் என்பதை முன்னிலைப்படுத்தியே வருகிறார். தன்மந்திராவைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

தருமி said...

ஜீவா,
பாத்துட்டு சொல்லுங்க - வெண்பாவில் அல்ல.

தருமி said...

we the people,
//காழ்ச்சா என்ற வார்த்தைக்கு அர்த்தம் Edge of Love இல்லை :) அதற்கு அர்த்தம் காட்சிகள் என்று நினைக்கிறேன் :)//
மலையாளம் தெரியாதே. மாற்றி விட்டேன். பொருள் கொடுத்தமைக்கு நன்றி.

இங்கே நீங்க சொல்ற டெக்னிக் நடக்காது. முதல் காரணம்: hero worship. எங்க ஆளு படம்னு நினச்சு போனா தேருமா?
அடுத்து நாம எல்லாம் ரொம்ப scietific aptitude உள்ள ஆளுங்க. படம் நல்லா இல்லைன்னு சொன்னாலும் விட மாட்டோம். ஏன் நல்லா இல்லைன்னு "கண்டுபிடிக்கும்" analytical டைப்புகள்!

பாலராஜன்கீதா said...

அன்புள்ள தருமி அய்யா, நீங்கள் பார்த்த படத்தின் பெயர் காழ்ச்சா என்று நினைக்கிறேன். (இதுதான் அது என்ற வாழைப்பழ நகைச்சுவை நினைவிற்கு வருகிறது). மற்றபடி மலையாளத் திரைப்படங்கள் குறித்த மடத்து வாசல் கானா பிரபாவின் சில இடுகைகளின் சுட்டிகள் :
http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_115131412458814385.html

http://kanapraba.blogspot.com/2007/04/blog-post_21.html

http://kanapraba.blogspot.com/2007/03/blog-post.html

http://kanapraba.blogspot.com/2006/07/blog-post_115188773395994139.html

http://kanapraba.blogspot.com/2006/03/blog-post_31.html

தருமி said...

பாபு,
//கேரளா போன்ற இடங்களில் மக்களின் மனப்போக்கு,கல்விஅறிவு போன்றவை ..//
ஏங்க, நம்ம ஊர்ல கல்வியறிவு உள்ள மக்களுக்குக் குறைச்சலா என்ன? அந்த ஆளுகள்கூட இந்த மாதிரி படங்களைப் பார்ப்பாங்களான்னு தெரியலையே.
நம்ம படங்கள் இன்னும் எத்தனை காலத்துக்குக் காதலை மட்டுமே சுத்தி சுத்தி வருமோ? இன்னும் எத்தனை நாள்தான் ஹீரோ அடிக்கிற அடியில ஆளுகளும், G-force-ம் காணாம போகுமோ, தெரியவில்லை. அதுக்கு நம்ம படிச்ச ஆளுகளும்ல விசிலடிக்கிறாங்க. அந்த மாதிரி படங்களே வேணாம்னு சொல்லலை. அது மட்டுமேதான் வேணும்னுதான் சொல்ல வேண்டாம் அப்டிங்கிறேன்.
:(

தருமி said...

கொத்ஸ்,
//அவர்களைக் கேட்டா மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்பார்கள்.//

"அவர்களை"க் குறை சொல்ல முடியாது; கூடாதுன்னு நினைக்கிறேன். அவர்கள் லெவல்லேயே நம்மள காலங்காலமா வச்சிருக்காங்களே, அதுவே அவங்க திறமைதான். சும்மா சொல்லக்கூடாது அவங்களுக்கு மண்டையில ஒண்ணும் இல்லாட்டியும் நம்ம தலையில் மொளகா அறைக்கத் தெரிஞ்சிருக்காங்கல்ல...

தருமி said...

கண்மணி டீச்சர்,
தப்புதான். என்ன பண்றது? பக்கத்து ஊரு படம் பார்த்ததும் வந்த பொறாமை .. ஆதங்கம் .. கோபம்.. ஆற்றாமை etc...

Anonymous said...

இந்தப்பட சிடியை சிங்கப்பூரில் வாங்கினேன். யாருக்கும் கடன் குடுக்க மனசு வரல்லை. திருப்பிக்குடுக்கமறந்துட்டாங்கன்னா. அவ்வளவு நல்ல படம்

SurveySan said...

absolutely my thoughts.

இவனுங்க, சொதப்பி சொதப்பி தமிழ் படத்தின் தரம் மேலெழும்ப முடியா லெவலுக்குப் போகப் போவுது.

என்ன பண்ணா திருந்துவாங்க?

மட்டமான படம் வரும்போது, பதிவர்கள் எல்லாரும் பல்லக் கடிச்சாவது படம் பாத்துட்டு, கன்னா பின்னான்னு விமர்சனம் எழுதணும்.

ச.மனோகர் said...

சார்..literacy rate அதிகமிருப்பதால் ரசனையில் மாற்றம் இருக்கலாம் எனச் சொல்ல வந்து கல்விஅறிவு எனக் கூறி சொதப்பிவிட்டேன். கையை நீட்டுகிறேன்பிரம்பை எடுத்து விளாசுங்கள்... அல்லது பெஞ்ச் மீது ஏறி நிற்கிறேன்.

வடுவூர் குமார் said...

தமிழ் படத்தின் வெற்றி தோல்வியை உங்கள் நகரம் தான் நிர்ணயிக்கிறது என்று எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து எழுதப்படாத விதியாக இருப்பதாக கேள்வி!!!
உங்களுக்கே சந்தேகமா? :-))

துளசி கோபால் said...

ப்ச்..............நம்ம படங்களை என்னான்னு சொல்றது? (-:

வீ த பீப்பிள் ஜெய்சங்கர் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு.

ஆளை வச்சுப் படம் ஓட்டறதுலே நம்மை யாராவது அடிச்சுக்க முடியுமா?

இராம்/Raam said...

ஐயா,

தமிழ் படமே hero worship Base பண்ணிதானே எல்லா படமும் வந்து தொலைக்கிது.

அதிசயமா வந்த மொழி படத்திலே கூட கமர்ஷியல் டச்'க்கா ஒரு ஜொள்ளு பொண்ணு.... :(

லக்கிலுக் said...

சமீபத்தில் அம்முவாகிய நான் பார்த்தேன். உருப்படியான படம். தியேட்டர்களில் ஓடுகிறதா?

குசும்பன் said...

என்னையும் ஒரு நல்ல மலையாளப் படம்!!! பார்க்க தூண்டி இருக்கீங்க தருமி சார்:))) பார்த்துட்டு சொல்கிறேன்!!!

தருமி said...

மாயாவி,
ரொம்ப நன்றி.

அது சரி. நீக்கிரம் நீங்கள் ஒரு நட்சத்திரப் பதிவர் ஆகிறீர்கள் அப்டின்னு ஜோசியம் சொல்லுதே..! அப்டியா?

தருமி said...

முகவை மைந்தன்,
அந்த இயக்குனர் எங்கள் கல்லூரி மைந்தன். பார்க்கணும். ரொம்ப வசனம் இருக்கிறதா சொன்னாங்க.
சீக்கிரம் பார்த்து விடுகிறேன்.

மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. said...

ஏய், ஏய் என்ற இரு வார்த்தைகளின் மூலம் உலக சினிமாவையே அதிரவைத்த,

சுள்ளான் , முனி, நரசிம்மா போன்ற
இறவாப் புகழ்பெற்ற,காலத்தால் அழியாத காவியங்களை தன்னகத்தே
கொண்டுள்ள தமிழ்திரையுலகைத்
தூற்றாதீர்கள்.

வள்ளுவர் வாக்கிற்கேற்ப,
இத்தகைய திரைக் காவியங்களைக் காண முகக்கண் மட்டும் போதாது,
கலைக் கண் வேண்டும்.

தவறு உங்களிடம் தான்.

தருமி said...

உண்மைத் தமிழன்,
//இது மாதிரி படம் எடுக்க தமிழ்நாட்டிலும் இயக்குநர்கள் தயாராக இருக்கிறார்கள்.//

ஐயா, எனக்கு இதில் நம்பிக்கை கிடையாது. என் பழைய பதிவொன்றில் சொன்னதைத் திரும்பவும் சொல்கிறேனே:

"மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று இயக்குனர்கள் சொல்வது அவர்களது இயலாமையை மறைத்துக் கொள்ள அவர்களே வைக்கும் ஒரு வாதம். வீணை செய்யும் ஒரு கலைஞனால் வீணைதான் செய்ய முடியும். அகப்பைக்கு நல்ல டிமாண்ட் இருக்குன்னு சொல்லி மாதத்திற்கு ஒரு வீணை செய்யும் அவனால் தினத்திற்கு நாப்பது அகப்பைகள் செய்ய முயன்றாலும் முடியாது; செய்யவும் மாட்டான். பிரச்சனை என்னவென்றால் நம்மிடம் இருக்கும் இயக்குனர்கள் எல்லாம் அகப்பைகள் மட்டுமே செய்யத் தெரிந்தவர்கள்தான்; வீணை ஆக்கும் கலைஞர்கள் அல்ல. ஒரு அடூர் கோபாலகிருஷ்ணனை ஜனரஞ்சகமாக ஒரு ‘ஆக்ஷன் மூவி ‘ எடுக்கச் சொல்லுங்களேன். அந்தப் புலிகள் புல்லைத் தின்பதில்லை." நம் "புளிகள்" பற்றிச் சொல்லணுமா ..?

தன்மந்திரா பாத்துருவோம்.
நன்றி

ILA (a) இளா said...

சத்தியமா , நாம் தான் காரணம். நாம் இந்த மாதிரி மசாலா படங்களை ஒதுக்க ஆரம்பிச்சா வேற வழி இல்லாம நல்ல படங்களை குடுப்பாங்க.

இப்போ எல்லாம் அங்கேயும் மசாலா படங்களுக்கு குறைச்சல் இல்லீங்க. ரன்வே அதுக்கு ஒரு உதாரணம்

தருமி said...

பாலராஜன்,
உங்களுக்கும் நான் அய்யாதானா?

நல்ல படங்களும், நல்ல விமர்சனங்களும் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

தருமி said...

பாபு,
//literacy rate அதிகமிருப்பதால் ரசனையில் மாற்றம் இருக்கலாம் எனச் சொல்ல வந்து கல்விஅறிவு எனக் கூறி சொதப்பிவிட்டேன்//
நீங்கள் சொன்னதில் தப்பு ஏதும் தெரியவில்லை. நான் சொல்ல வந்தது
literacy rate / கல்விஅறிவு இரண்டில் எது இருந்தாலும் (நம்ம ஊர்ல ரொம்ப ஒண்ணும் மோசமில்லையே) அது நம் ரசனையில் மாற்றம் கொடுத்திருக்கிறதா என்பதுதான் என் கேள்வி.

தருமி said...

சின்ன அம்மணி,
சரியான ரசிகைதான் நீங்க ..

தருமி said...

surveysen,
உங்கள மாதிரி எத்தினி ஆளுகள நாங்க பாத்திருப்போம். சும்மா போவீங்களா ..வந்துட்டாங்க... பெருசா சொல்றதுக்கு ----- அப்டின்னு நம்ம இயக்குனருக சொல்லிக்கிணு போய்க்கினே இருப்பாங்க.. நம்மபப்பு இப்பதைக்கு ஒண்ணும் வேகாதுங்க.

தருமி said...

வடுவூர் குமார்,
வேதனையே அதனாலதாங்க அதிகமா இருக்கு ..

தருமி said...

துளசி,
//ஆளை வச்சுப் படம் ஓட்டறதுலே நம்மை யாராவது அடிச்சுக்க முடியுமா?//

முடியாதுங்க .. முடியாது. தலையிலதான் அடிச்சுக்கணும்.

தருமி said...

டெல்பின்,
அது ஏன்னு தெரியலை. நம் தமிழ் மக்கள் பலருக்கும் (என்னையும் சேர்த்து)இந்த வங்காளிகள் மேல் ஒரு தனிப் பாசம்தான். மலையாளத்து மக்கள் மேல இருக்கிறதுக்கு அண்மையில் இருப்பது காரணம்னு வச்சுக்கலாம். ஆனால் ஏன் வங்காளத்து மேல இந்த ஈர்ப்பு.

தருமி said...

இராம்,
என்று தணியும் இந்த தந்திர மோகம்...


குசும்பன்,
கட்டாயம் பாருங்க. நிச்சயமா திட்ட மாட்டீங்க

தருமி said...

லக்கி லுக்,
ஓடுதுன்னு நினைக்கிறேன். அதைவிட நல்ல பெயர் வாங்கிக் குடுத்துருக்குன்னு நினைக்கிறேன்.

தருமி said...

பூச்சாண்டி,
நெஜமாலுமே நல்லாவே பயம் காட்டுரீங்க ..

கலைக்கண்ணுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க ... புண்ணியமா போகும்
:)

தருமி said...

இளா,
மசாலா படங்கள் இருக்கட்டும் - ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மாதிரி.
ஆனா மசாலா படம் மட்டும்தான் எடுப்போம்னு ஒத்த கால்ல நம்ம இயக்குனர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமா நிற்கிறதும், அந்த மாதிரி படங்களுக்கு நான் பதிவில சொன்னமாதிரி மதிப்பெண்கள் கொடுக்கிற பொதுஜனப் பத்திரிகைகளையும் மற்ற ஊடகங்களையும்தான் குறை சொல்லவேண்டியதிருக்கு.

G.Ragavan said...

ஒரு நல்லபடம் பாத்தோங்குற திருப்தியைப் பெரும்பாலும் மலையாள வங்காளப் படங்களப் பாத்துத்தான் தீத்துக்குறது. நீங்களும் அப்படித்தானா? அது சரி. நம்ம ஒற்றுமைதான் தெரிஞ்சதாச்சே.

மலையாளத்துலயும் பாண்டிப்படா, ராஜமாணிக்கம் எல்லாம் வரும். ஆனா நல்ல படங்களும் கண்டிப்பா வரும்.

ஒரு படம். பேரு நெனவில்லை. மோகன்லால், ரேகா, முரளி (டும்டும்டும் ஜோதிகா அப்பா), சுகுமாரி நடிச்சிருப்பாங்க. பழைய படம். ரேகா முரளி ஜோடி. மோகன்லால் கல்யாணமாகாத பணக்காரரு. சுகுமாரிதான் வேலைக்காரி மாதிரி சின்ன வயசுல இருந்து பாத்துக்கிறது. லாலுக்குக் கொழந்த ஆசை வரும். அப்ப முரளியோட ஆப்பரேஷனுக்கா ரேகாவுக்குப் பணம் தேவைப்படும். செயற்கை முறைல கருவுண்டாக்கி ரேகா சுமப்பாங்க. ஆனா கொழந்தை பொறந்ததும் தரமாட்டேன்னு அடம் பிடிப்பாங்க. சிலபல பிரச்சனைகளுக்குப் பிறகு மோகன்லால் போகட்டும்னு விட்டுருவாரு. கார்ல முரளி, ரேகா, கொழந்தை எல்லாம் ஏறிப் போனதும் பக்கத்துல இருக்குற சுகுமாரியப் பாத்துக் கேப்பாரு "அந்தக் கொழந்தைய அவ பாத்துக்கிற மாதிரி....நீ என்னையப் பாத்துக்குவியா"...அப்பா சுகுமாரியோட முகபாவங்கள்..அடடா. அவ்வளவுதான். படம் முடிஞ்சு போச்சு. இதே முடிவு தமிழ் சினிமால இருந்திருந்தா? "சுகுமாரி, அதோ போறாளே....என்னோட குழந்தையத் தன்னோட கொழந்தையாத் தூக்கிக்கிட்டு...அவ எவ்வளவு அன்போட ஆசையோட அந்தக் கொழந்தையப் பாசமா பாத்துக்கிறாளோ...அதே அளவு ஆசையோடயும் பாசத்தோடயும் என்னையப் பாத்துக்கிறதுக்கு ஒரு அம்மா வேணும். அந்த அம்மாவா நீங்க இருப்பீங்களா? சொல்லுங்கம்மா சொல்லுங்க" அப்படீன்னு கதாநாயகன் கதறீருப்பாரு. ஏன்னா..அப்பத்தான் நம்மாளுகளுக்கு மோகன்லான் சுகுமாரி கிட்ட என்ன கேக்குறாருன்னே புரியும். இல்லைன்னா என்ன கேக்குறாருன்னே புரியாது.

இயக்குனர்களை மட்டும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை. நம்ம மக்களையும் சொல்லனும். ஏன்னா..இயக்குனர்கள் மக்களுக்குள்ள இருந்துதான வர்ராங்க. ஆகையாலதான் இப்பிடியிருக்கு.

ஒரு பாட்டாவது உருப்படியா எடுக்குறாங்களா....விட்டாப் பொலம்பிக்கிட்டேயிருப்பேன்.

கதிர் said...

மூன்று மாநில விருதுகள் பெற்ற தரமான படம். முண்ணனி நடிகர் என்ற பந்தாவெல்லாம் இல்லாம சாதாரண பிலிம் ஓட்டும் பாத்திரம். மம்முட்டியின் வீடும் அந்த பெண்ணும் அழகு.

மம்முட்டியும் பல மொக்கைகள்ல நடிச்சிருக்காரு ஆனா கதையுள்ள படங்கள்லயும் அப்பப்ப நடிக்கறாரு. ஆனா நம்மாளூங்க அபூர்வமா கதையுள்ள படங்கள்ல நடிப்பாங்க. மலையாள படவுலகில் மட்டும்தான் தரமான படம் வருதுன்னு சொல்றது ஏத்துக்க முடியாது. தரமான படங்கள் அதிகமா வரும். தமிழ்ல எப்பவாச்சும் வரும். நீங்க தமிழ்மணம் படிக்கறவரா இருந்தா தரமான தமிழ்படங்கள கூட ரசிக்க முடியாது. :)

குசும்பா...

அய்யனார்கிட்ட இருக்கு வாங்கி பாரு.
ரொம்பநாள் தேடினேன் இந்த படத்தை லுலுல கிடைச்சிது. கானாப்ரபா கூட பதிவிட்டிருக்கிறார்.

கானா பிரபா said...

வணக்கம் தருமி சார்

இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களைப் பாடல் காட்சிக்காக மட்டும் பார்ப்பதோடு சரி, மற்றப்படி கிடைக்கும் நேரத்தை பழைய மலையாளப் படங்கள் கொண்டு தான் நிரப்புகின்றேன். இன்னும் இதுபோல் நிறையப் படங்கள் இருக்கு.

துளசி கோபால் said...

சொல்ல விட்டுப்போச்சுங்க.

'காழ்ச்ச' அப்படின்னா 'பார்வை'ன்னு ஒரு அர்த்தம் இருக்கு.

மங்கை said...

தருமி ஐயா

மலையாளிகளும் சரி வங்காளிகளும் சரி...they are very close to their culture. நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் இப்படித்தான் இருக்காங்க
உடை, உணவு, பழக்க வழக்கம் இது எல்லாம் பெருசா மாறலை..
வங்காள மொழியில்..''தின் பிரதி தின்'' படம்..நம்ம அவள் ஒரு தொடர்கதை மாதிரி...ஆனா அந்த படத்தை பார்த்தா தான் தெரியும் வித்தியாசம்...

குசும்பன் said...

"குசும்பா...

அய்யனார்கிட்ட இருக்கு வாங்கி பாரு.
ரொம்பநாள் தேடினேன் இந்த படத்தை லுலுல கிடைச்சிது. கானாப்ரபா கூட பதிவிட்டிருக்கிறார்."

இந்த படத்த கேட்க போனா இதுக்கு முன்பு வாங்கிய படத்தை எல்லாம் திரும்ப கேட்பார் சோ வேற ஆள்தான் புடிக்கனும்:))) தம்பி இன்னொரு சீடி வாங்கிதர முடியுமா?:)

தருமி said...

ஜிரா,
//ஏன்னா..அப்பத்தான் நம்மாளுகளுக்கு மோகன்லான் சுகுமாரி கிட்ட என்ன கேக்குறாருன்னே புரியும். இல்லைன்னா என்ன கேக்குறாருன்னே புரியாது.//

இதைத்தான் நான் "நோட்ஸ்" போடுறதுன்னு சொல்றது!! இந்தமாதிரி foot notes போட்டே நம்மளையும் அவங்க லெவல்லேயே நம்ம இயக்குனர்கள் வச்சிருக்காங்க.

தருமி said...

தம்பி, எனக்கு ஒரு உதவி உங்களிடமிருந்து வேணும்.
//தமிழ்ல (தரமான படங்கள்) எப்பவாச்சும் வரும்.// - அப்டின்னு சொல்லியிருக்கீங்க.

எனக்கு ஒரு சந்தேகம். இதுவரை கடந்த 10 ஆண்டுகளில் (அல்லது எல்லாக் காலங்களிலும் சேர்த்துகூட வச்சுக்குவோமே) காதலும் காதலைச் சேர்ந்ததும் இல்லால கதையோடு வந்த தமிழ்ப் படங்கள் ஒரு ஐந்து பெயர் கொடுங்களேன்.
வரலாற்றுப் படங்களை விட்டு விடுங்கள். எனக்கு 2 பெயர் நினைவுக்கு வருது:
1. அந்த நாள்
2. ப்ரகாஷ்ராஜின் தயாரிப்பில் (இரண்டாவது தயாரிப்பு என்று நினைக்கிறேன். பெயர் நினைவில் இல்லை) ஒரு கடத்தல் பற்றிய படம்.

நீங்க இன்னும் மூணு மட்டும் கொடுங்க.

தருமி said...

கானாப்ரபா,
அடப் பாவமே! //இப்போதெல்லாம் தமிழ்ப்படங்களைப் பாடல் காட்சிக்காக மட்டும் பார்ப்பதோடு சரி// என்ன இப்படி சொல்லிட்டீங்க.
அங்க பாருங்க ஜிரா என்ன சொல்லியிருக்காருன்னு: //ஒரு பாட்டாவது உருப்படியா எடுக்குறாங்களா....//

நானும் ஜிரா கட்சி. பாட்டு கேட்க மட்டும்தான் பிடிக்கும்; பார்க்க அல்ல.

ஒரு உதாரணம்: ஹாரிஸின் முதல் ஹிட்: வசீகரா...என்ன அழகான பாட்டை என்ன வக்கிரமாக எடுத்திருக்கிறான்.

தருமி said...

மங்கை,
அவர்கள் படங்கள் யதார்த்தமாக இருப்பது சரி. ஆனால் நமக்கு ஏன் அவர்களை அவர்கள் இலக்கியங்களை படங்களை மொழியை பிடிக்கிறது என்று தெரியவில்லையே.

தருமி said...

//இந்த படத்த கேட்க போனா இதுக்கு முன்பு வாங்கிய படத்தை எல்லாம் திரும்ப கேட்பார் சோ வேற ஆள்தான் புடிக்கனும்:))) //

குசும்பா,
நல்ல பெயர் வைத்துக் கொண்டீர்கள். காரண இடுகுறிப் பெயர் என்பார்களே அது உங்களுக்குத்தான் செமையா பொருந்துகிறது.

மருத புல்லட் பாண்டி said...

என்ன பெருசு அவுட் சோர்சிங் வேல முடிச்சு சும்மா இருக்கீகலா, நல்ல(?!)படங்க பாக்கீக போல

ராஜ நடராஜன் said...

திரைப்படங்களிலுருந்து அகன்று வரும் என்னை மீண்டும் அந்தப் பக்கம் தள்ளுகிறீர்கள்.மலையாளப் படங்கள் யதார்த்தங்களை அளித்தாலும் இந்த மொழி ருசி கொஞ்சம் விட்டுப் போவதால் தமிழே துணை என்றாகி விடுகிறது.அப்புறம் நமது படங்கள் வணிகத்தன்மையில் வெற்றி பெற்று விடுவதால் அவர்களும் நம்ம இயக்குனர்களின் வழியில் நடை போடுவது போல் உணர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

மீண்டும் ஒரு முறை பின்னூட்டமிடுகிறேன்.இந்த ருத்ரையா மாதிரி இயக்குனர்கள் தமிழ் சினிமாவை மாற்ற முயற்சி செய்தார்கள்.மெட்ராஸிலேயே பகல் காட்சிகளோடு ஊத்திகிட்டவை அவை.மாற்றங்களை பாரதிராஜா கொண்டு வந்தார்.இப்போது தமிழும் மாற்றங்கள் கொண்டேயுள்ளது.என்ன போட்ட காசை எடுக்க கொஞ்சம் செண்டிமெண்ட் ஊசி ஏற்ற வேண்டியுள்ளது.உளவியல் என்று ஒன்றையும் கூட்டாளியாக்கி கொள்ள வேண்டியுள்ளது.

சூரியப்பிரகாஷ் said...

I will tell our audience also one of the reason for the current situation Of Tamil Cinema.

Neenga Sonnenga
10 Varusathula Vantha Siratha Tamilpadam
Antha Naal, One Prakashraj Filmnu, Ungaluke antha padam theriyale illa, athan nellama,Antha Naal Oducha, illa antha padatha edutha producerthan odiyruparu.Enakum Kavali Iruku Illanu Sollale. Nelamaye Sonen.

Unga Mundai Nan Oru podipaya, Ithuthan Ennoda second comment. Ethavuthu thapu iruntha manchitunga

தருமி said...

மருத புல்லட் பாண்டி,
ஆமாப்பு ...

தருமி said...

நட்டு,
மாற்றங்கள் எல்லாப் பக்கமிருந்தும் - இயக்குனர்கள், பார்வையாளர்கள் - வரவேண்டியுள்ளது. மறுக்கவில்லை.

தருமி said...

சூரியா,
உங்கள் பின்னூட்டத்தின் கடைசி இரு வரிகளைக் கடுமையாக மறுக்கிறேன்; எதிர்க்கிறேன்.

துளசி கோபால் said...

படம் இப்பத்தான் கிடைச்சது. பார்த்துட்டேன்.

Jackiesekar said...

சார் அந்த படத்தை நானும் பார்த்து இக்கின்றேன்... ஆனால் ஒரு வருத்தமான விசயம் மலையாளபடமும் தடம்மாறிக்கொண்டு இருக்கின்றது,..... அதமிழ் படங்களை பார்த்து அவைகள் சூடு போட்டுக்கொள்ள தொடங்கி வெகு கதலம் ஆகிவிட்டது...
கடைசியல் அனாதை ஆசிரமித்தில் சேர்க்கும் காட்சிகள் கண்ணில் நீர் வர வைப்பவை...

தருமி said...

நன்றி ஜாக்கி

Post a Comment