Tarre Zamin Par
எல்லாரும் எழுதியாச்சி; புதுசா சொல்ல என்ன இருக்குது? ஒரு காலத்தில மாஞ்சி மாஞ்சி பார்த்தது போய், இந்திப் படங்கள் அப்டின்னாலே கேவலம் அப்டின்னு பல வருஷம் இந்திப் படம் பக்கம் தல வச்சதே இல்லை. ஆனால் இப்போ நிலமை ரொம்பவே மாறிப் போச்சு. கடைசியா பார்த்த படங்கள் வரிசையை நினைவுக்குக் கொண்டுவந்தாலே நம்ம தமிழ்ப்படங்கள நினச்சு கவலையா இருக்குது. Mrs. & Mr.Iyer, The Water, Black, Tarre Zamin Par.... இந்த லெவலுக்கு நம்ம படங்களில் ஒண்ணுகூட வரலையே ...
*
*
*
அஞ்சாதே- இயக்கம்: மிஷ்கின்
மிஷ்கின்னின் முதல் படம் பார்த்ததில்லை. அட, காதல் அப்டின்ற விஷயத்தை மையமா வைக்காமலேயே ஒரு படம் போறது எம்புட்டு சந்தோஷமா இருக்கு. காதலை மட்டுமே வைத்துதான் நம்ம படங்கள் ஏறக்குறைய எல்லாமுமாக இருக்கும்போது அதை ஊறுகாய் அளவு கூட வைக்காமல் உப்பு மாதிரி படத்தில் கொஞ்சூண்டு மட்டும் வைத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள். அதே போல் நம் தமிழ்ப்படங்களில் காலங்காலமாய் வரும் தத்துவம்: கதாநாயகன் மனித குணக்குன்றாக இருப்பார். பழைய தமிழ்ப்படங்களில் பார்த்தால் எல்லா கதாநாயகனும், கதாநாயகியும் ஸ்டேட்டிலேயே முதல் ராங்கில்தான் தேர்ச்சி பெறுவார்கள். கதாநாயகன் பார்ப்பது எந்த வேலையாக இருந்தாலும் நிச்சயமாக கராத்தே கறுப்புப் பட்டை பெற்றவரையே தூசிமாதிரி அடித்து தூள் பண்ணக்கூடியவராகவே இருப்பார். அதேமாதிரி வில்லன் என்றால் கொடூரத்தின் உச்சத்திலிருந்து கீழெ இறங்காத மனிதனாகவே புனையப்பட்டிருப்பார். இருந்தாலும் கடைசியில் காவல் துறை ஆட்கள் தாமதமாக வந்து இழுத்துப் போகும்போது மனம் மாறி, கதாநாயகனின் அம்மாவிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிடுவார். Characters will all be either pure black or white, none in middle grays - இதுதான் நம் தமிழ் சினிமாவின் வழமையான கதாபாத்திரப் படைப்புகள்.
இப்படம் இந்த பார்முலாக்கள் எதுவும் இல்லாமல் ரொம்பவும் வித்தியாசமான இரு பாத்திரங்கள்; நண்பர்கள். அடிப்படைக் குணங்கள் வெவ்வேறாக இருக்க, வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் அவர்களின் குணங்களையே மாற்றிப் போட ... அதன் பின் ஏற்படும் கதைப் போக்கில் அடுக்கடுக்கான நிகழ்வுகளை ஒரு க்ரைம் த்ரில்லராக வைத்து இருவரையும் இரு எதிர்முனைகளில் வைத்துக் கதையை இயக்குனர் அழகாகக் கொண்டு சென்றிருக்கிறார்.
*
*
*
சாது மிரண்டால் ...
No comments:
Post a Comment