Monday, April 28, 2008

257. ஸ்ரீராம ராஜ்யம் வேண்டாம்

*




JUDAISM:
The March 5 attack on an important Jewish seminary by a Palestinian has hit Israel hard in several ways.
Rabbi Kook’s core doctrine revolved around the belief that the “messianic age” had already dawned, and that it would end with the arrival of a Jewish Messiah. The arrival of the messiah could be hastened by establishing settlements on land over which Jews have had a divine right, as revealed in the Hebrew Bible.



CHRISTIANITY:
Bush: "God is at work in world affairs, he(Bush) says, calling for the United States to lead a liberating crusade in the Middle East ..."



ISLAM:
Safdar Nagori and SIMI’s jihad ... “Mohammad is our commander; the Quran our constitution; and martyrdom our one desire.”


மேலே சொன்னவைகள் எல்லாம் தினசரிகளிலும் அல்லது மற்றைய ஊடகங்களிலும் வந்த செய்திகள். அவைகள் சொல்லும் செய்திகள் எல்லாமே "அரசியல் + மதங்கள்" என்ற கலப்பு பற்றியவைதான்.

மத்திய கிழக்காசியாவின் நீண்ட நாள் தலைவலியான இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனை தீருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க பெரும் காரணியாக இருப்பது இரு தரப்பினரும் தம் தம் மதநூல்களின் அடிப்படையில் தங்கள் தரப்பிற்கு நியாயம் கற்பிப்பதே. பிரச்சனையில் உள்ள இடத்தை யூதர்கள் அது தங்கள் "divine right" என்று தங்கள் டோராவை வைத்துக் கற்பிதம் செய்து கொண்டபின் அங்கு மற்ற எந்த நியாய விவாதங்கள் எடுபடும்?

கிறித்துவ மதத்தின் "அரசியல் + மதங்கள்" என்ற ஒருமைப்பாடு ஐரோப்பிய கண்டங்களின் வரலாற்றையே முழுமையாக மாற்ற துணை நின்றது. அரசர்களும், அவர்களின் அரசுகளும் மதத்தலைவர்களின் முழு ஆள்மைக்கு அடிபணிந்தே பலகாலம் நடந்து வந்துள்ளன. ஆனாலும், கடந்த ஓரிரு நூற்றாண்டுகளாக இந்தப் பிணைப்பு சிறிதே தளர்ந்து விட்டது என்ற நிலை வந்த நேரத்தில் 11-செப்ட். நிகழ்வுக்குப் பிறகு ஜார்ஜ் புஷ் அதை மீண்டும் மறு உருவெடுக்க வைத்துள்ளார். நடக்கும் போர் எண்ணெய்க்காக நடக்கும் போரென்றாலும் அதை ஏதோ இரு மதங்களுக்கு நடுவேயான ஒரு போராகச் சித்தரித்து, புதிய உலகப் பிரச்சனைக்கு வழிகோலிட்டு விட்டார். அந்த நெருப்பு என்று இனி அணையுமோ?

இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையே மனித வாழ்வின் எல்லா கூறுகளுக்குமே அவர்களின் வேத புத்தகமே அடிப்படை என்பதே. முழுமையாக ஷாரியத் சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள் அரசியலில் மதம் என்பதையும் தாண்டி, மதமே தங்களது அரசியலமைப்பு என்பதாக மாற்றிக் கொண்டுள்ளன. மதக் கோட்பாடுகள் என்ற பிறகு அங்கே வேறு மாற்று எண்ணம், நிலை என்பது வரும் என்று நினப்பது கனவுதான். அதோடு, 11-செப்ட்.க்குப் பிறகு நிலை மேலும் தீவிரமாகி விட்டது. மதங்களுக்காக, தங்கள் மத நம்பிக்கைகளுக்காக உயிர் விடுதல் உயர்ந்த விசயமாக்கப்பட்டு, அவர்களுக்காக சுவனம் காத்திருப்பதாகக் கற்பிக்கப் பட்டபின் நம்பிக்கையாளர்களின் வாழ்வை எதிர்நோக்கும் போக்கே மாறிவிடுகிறது. (நல்லவேளை! இதற்கு இணையான நம்பிக்கையாகக் கிறிஸ்துவர்களின் மத்தியில் இருந்த 'வேதசாட்சிகள்' என்ற சொல்லும், அதோடு இணைந்த அவர்களது கருத்துக்களும் இப்போது கொஞ்சம் நீர்த்து விட்டன என்றே நினைக்கிறேன்.)

மதங்களும் அரசியலும் ஒன்றோடு ஒன்றாக இப்படி பின்னிப் பிணைந்தபின் சமூகங்கள் மேலும் மேலும் பிளவு பட்டே நிற்கும் என்பது வெள்ளிடைமலை. காரண காரியங்கள் (reasoning) புறந் தள்ளப்பட்டு நம்பிக்கைகள் (faith) மட்டுமே பெரிதாக இருக்கும். 'தெய்வத்தின் வார்த்தைகள்' நமக்குள் பிளவுகளை வளர்க்க மட்டுமே பயன்படும். மனித ஒற்றுமை, மனித நேயம் எல்லாமே பின் தள்ளப் படும்.

இப்படியெல்லாம் இல்லாமல் இருந்த நம் சுதந்திர இந்திய நாட்டிலும் "அரசியல் + மதங்கள்" என்ற இந்த ஃபார்முலா வந்து விட்டது. அந்தக் காலத்திலேயே இந்த மண்ணிலும் மதங்கள் தங்கள் அரசியலை செய்து வந்திருக்கின்றன. மக்களும் மாற்றுக் கருத்துகளும் அழித்தொழிக்கப்பட்டுதான் வந்துள்ளனர். ஆனாலும் அந்த வரலாற்றுக் காலங்களுக்குப் பிறகு, விடுதலைக்குப் பிறகு - பெருமளவிற்கு நேருவுக்கு நன்றி - அரசியலும் மதமும் சிறிது இடைவெளியோடுதான் இருந்து வந்துள்ளன. ஆனால் இங்கும் நிலை மாறிக் கொண்டிருக்கிறது; இன்னும் முழுவதுமாக முற்றவில்லையெனவே நம்புகிறேன்.


அரசியலும் மதநம்பிக்கைகளும் கலக்கும்போது எப்போதும் பிறப்பது கலகமேயொழிய வேறில்லை. ஒரு வேளை ஒரே மதக்காரர்கள் மிகப் பெரும்பான்மையாயிருப்பின் அந்நாட்டில் குழப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற நாடுகளில், அதுவும் இந்தியா போன்று கலவையான மக்கள் நிறைந்த நாட்டில் இந்த அரசியல் + மதப் பிணைப்புகளில் கேடுமட்டுமே மிஞ்சி நிற்கும். தண்ணீருக்குள் இழுக்கும் தவளையும், நிலத்துக்கு இழுக்கும் எலியும் கூட்டு சேர்ந்த கதைதான் நடக்கும். சேது சமுத்திரத் திட்டம் நல்லதா இல்லையா என்பதையும் மீறி, அத்திட்டத்திற்கு நேர்ந்த கதிதான் பலவற்றிலும் நடந்தேறும்.

அரசியலோடு கலக்க வேண்டியது பொருளாதாரக் கொள்கைகளேயன்றி நிச்சயமாக மதங்கள் அல்ல.

ராம ராஜ்ஜியம் என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருக்கலாம்; கொண்டாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் ராமரின் கதையே பள்ளியில் பிள்ளைகளுக்குக் கதையாகக் கூட சொல்லிக் கொடுக்கப் படக்கூடாது; அவ்வளவு ஏன், சிறுவர்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகக் கூட இருக்கக் கூடாது என்பதற்கும் - அது ஆர்ய-திராவிட என்ற வேறுபாட்டைச் சொல்லியோ, தந்தையேயாயினும் தன் உரிமையை நிலை நாட்டாததாலோ, தன் மனைவியையே சந்தேகித்ததாலோ - நியாயமான காரணங்களாக மற்றொரு சாரார் சொல்ல முடியும். ஒரு மதத்தின் கோட்பாடுகள் மற்றோருக்கு அதர்மமாகத் தோன்றுவது நித்தம் காணும் காட்சி. யார் கடவுள், யார் நபி என்பதிலோ, எந்தக் கடவுள் ஆர்யக் கடவுள், எந்தக் கடவுள் திராவிடக் கடவுள் என்றோ நமக்குள் என்றாவது ஒரே தீர்மான முடிவு வருமா? மத தர்மங்கள் பொதுவாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடியவனவாக இருத்தல் அரிது இல்லை. மனித தர்மங்களே எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க முடியும்; இருக்க வேண்டும். அரசியலில் மதங்கள் கலந்தால் அரசியல் விஷமாவது உறுதி. உலகில் நம்மைச் சுற்றி நடந்த வரலாறே, இன்று நடக்கும் நிகழ்வுகளே இதற்கு சாட்சி. இதில் எந்த மதமும் மனிதனுக்கு நல்லது செய்ததாக நமக்கு வரலாறு காண்பிக்கவில்லை.

இதில், ஓட்டு கேட்டு வரும்போது மதத்தைக் கையில் எடுத்துக் கொள்வதும் ஆட்சிக்கு வந்தால் பல காரணங்களை முன்னிட்டு மதத்தை ஓரமாக ஒதுக்கி வைப்பதுமாக "விளையாட்டு" காண்பிப்பதும் இதுவரை பி.ஜே.பி. நமக்குக் காண்பித்த கண்ணாமூச்சி விளையாட்டு. ஒரு தடவை விளையாடியது போதுமென்றே நினைக்கிறேன். இன்னும் 'இந்துக்கள்' என்ற ஒற்றைப் போர்வையால் பெரும்பான்மையரை மூடி வைத்து, ராம ராஜ்யம் என்ற கானல் நீரை நோக்கி ஓடும் விளையாட்டை நிறுத்துவதே நல்லது. அவர்கள் விளையாடிக் கொண்டு தானிருப்பார்கள். நாம்தான் நிறுத்த வேண்டும்.

2011- நடக்கப் போகும் மக்கள் கணக்கெடுப்பில் ப.ம.க. தலைவர் சாதிவாரியாகக் கணக்கெடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். அதோடு, மதவாரியாகவும் கணக்கெடுக்கவும் கோரிக்கை வைத்தால் நலமே.

ஆனால் அதற்கு முன்பே யார் யார் இந்துக்கள்; யார் யாருக்கு தாய்மதம் எது எது? என்பதையும் முடிவு செய்வது அவசியம். இக்கருத்தைப் பற்றி சமீபத்தில் சிறில் எழுதிய பதிவும், அப்பதிவின் பின்னூட்டத்தில் லெமூரியன் தந்துள்ள கருத்தும் (கீழே தந்துள்ளேன்.) இந்தப் பதிவுக்குத் தொடர்புள்ளதாகக் கருதுகிறேன்.




லெமூரியன்:
இந்து என்கிற சொல் சிந்து என்கிற சொல்லில் இருந்து மறுவி வந்தது என்கிற பின்னணி மட்டும்தான் இருக்கிறது. ஆனால் வேதங்களிலோ, புராணங்களிலோ, மற்ற இந்து மத நூல்களிலோ இந்து என்கிற சொல்லே இடம்பெறவில்லை. இந்து என்கிற சொல்லிற்கு பாரசீக மொழியில் இந்திய கண்டத்தைச் சேர்ந்தவன். அடிமை மற்றும் பெரியார், கலைஞர் கூறிய அர்த்தமும் உண்டு. 5000 ஆண்டு தொன்மையுடையது என்று கூறப்படும் ஒரு சமயத்திற்கு 1000 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்து வந்த பாரசீகர்கள்தான் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்து மதம்தான் இந்தியாவின் தொன்மையான மத நம்பிக்கை என்கிற வாதமே பொய்யானது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா?. ஆரியர்களால் பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை இனம்பிரிக்கும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட‌ சனாதானம் என்கிற கட்டமைப்பே பாரசீகர்கள் இந்திய கண்டத்தினரை இழிவாக விளிக்க உபயோகித்த இந்து என்கிற சொல்லை கடன் வாங்கி இன்று இந்து மதம் என்று அழைக்கப்படுகிறது.

13 comments:

கோவி.கண்ணன் said...

மிஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் தருமி,
ஐயா போடாமால் சாதாரணமாக கூப்பிட்டால் போதும் என்று சொல்கிறீர்களே ! :)

நேரம் கிடைத்தால் படிக்கலாம், இந்த இடுகையுடன் தொடர்புடையதுதான்.

Unknown said...

80 கள் மற்றும் 90 களில் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் தாழ்த்தப் பட்டோர் மத்தியில் ஏற்பட்ட அரசியல் எழுச்சியின் தாக்கம் உ.பி, பீகார் போன்ற இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது. தமிழகத்திலோ பெரியார்/அண்ணா/கலைஞர் ஆகியோரின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் விளைவால் 60 களிலேயே பார்ப்பனீயத்தின் வளர்ச்சி தடுக்கப் பட்டது.

இந்த எழுச்சியைத் தடுத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரை மீண்டும் தங்கள் மேலாதிகத்தின் கீழ்க் கொண்டுவர பார்ப்பனீயவாதிகளால் கண்டுப்பிடிக்கப் பட்ட புதிய யுக்திதான் சிறுபான்மையினரை பொது எதிரியாக சித்தரித்து சிறுபான்மையினர் அல்லாதவரை இந்துத்துவம் என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது.

ஆர்.எஸ்.எஸ் சின் பார்ப்பனீயத்தை எற்றுக் கொண்டதால்தான் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்திர மோடி இன்று இந்துத்துவாவின் போஸ்டர் பாயாக கொண்டாடப் படுகிறார். ஆனால் எங்கு மோடியின் வளர்ச்சி பார்ப்பன/பனியா களின் அதிகார கனவிற்கு தடையாக இருக்குமோ என்றுதான் அவசர அவசரமாக அத்வானிக்கு பா.ஜ.க வின் பிரதம மந்திரி வேட்பாளர் என்று முடி சூட்டப்பட்டது.


ராம ராஜ்யம் அமைப்போம் என்பது நதிகளை இணைப்போம் என்பது போன்ற வெத்து கோஷமே.

வோட்டாண்டி said...

RSS ஓட அடுத்த target இப்ப நீங்க தான்.
மதத்தை bjp என்றும் ஓரமாக ஒதுக்கியதில்லை. அடுத்த யாத்திரைக்கு அத்வானி கிளம்பிட்டார். எங்க எங்கலாம் மசூதி இருக்குன்னு MAP போட்டு RSSku குடுக்க வேணாம்? Modi வேற தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு mapa already sketch போட்டு எடுத்துட்டு போனதா பேசிட்டு இருக்காங்க. இந்த bloga vedanthiri படிச்சிருந்தா உங்க தலைய எடுக்குறவனுக்கு கிலோ கிலோவா தங்கம் குடுப்பாரு.
ஜெய் ஸ்ரீராம்.

Thekkikattan|தெகா said...

மற்றுமொரு அவசியமானதொரு அலசல் பதிவு, தருமி - நன்றி!

சமீபகாலமாக இந்த அரசியலில் மதங்களை கலந்து ஓட்டு வங்கியாக மாற்ற முயல்வது அழிவுப் பாதையில் மிக நேர்த்தியாகத்தான் நாம நடக்க ஆரம்பித்திருக்கிறோமென்பதற்கு ஒரு சாட்சியே.

நீங்கள் சரியாக சுட்டிக்காட்டியபடி இங்கே புஷ் உலகம் தழுவிய முறையில் தொடங்கி வைத்த இந்த விளையாட்டு என்றுமே அணையப் போவதாக பட வில்லை எனக்கு, வேண்டுமானால் அந்த மத Cold warயை சற்றே கிளறி மீண்டும் உயிருட்டீக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்த பிஜேபி ஆரம்பித்து வைத்திருக்கும் இந்த விளையாட்டு வட இந்தியாவில் மதம் சார்ந்த, இங்கு தென்னியந்தியாவில் மொழி சார்ந்த (ஒக்கேனக்கல் பிரச்சினை) விசயத்தை வைத்து அரசியல் நடத்தும் பாங்கு, நாமும் அவ் அழிவுப் பாதையில் மிகச் சரியாகத்தான் வழி நடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறோமென்பதற்கும் ஒரு சாட்சிதான்.

ஆக மொத்தத்தில் மனித மூளை பரிணாமத்தின் உச்சத்தில்...

எண்கோணம் [18222036756861491748] said...

பிஜேபி எலக்சன் நேரங்களில் எல்லாம் ராம ராஜ்ஜியம் பேசுகிறது, ஆட்சிக்கு வந்தபின்னால் மத அரசியல் செய்யாமல் இருக்கிறது என்கிறீர்கள்.

அப்படியானால், மதத்தை வைத்து மக்களைக் கொடுமைப்படுத்தாத அக்கட்சிக்குத்தானே ஓட்டுப்போட்டாக வேண்டும்?

ஆனால், அதற்கு ஓட்டுப் போடாதீர்கள் என்கிறீர்கள்.

பிஜேபிக்கு மாற்று எது எனப் பார்த்தால் இருக்கும் கட்சிகளில் ஆகப் பெரியது காங்கிரஸ். அந்தக் கட்சியை கைப்பற்றி காபந்து செய்யும் மகாராணி உத்தரவின்படி, மன்மோகன் எனும் பொம்மை "சிறுபான்மையினருக்காக உழைப்பதே எங்கள் வேலை" என்கிறார். வெறுமே எலக்சன் பிரச்சாரத்திற்காக மட்டும் அல்ல. ஆட்சியின்போது அதை செயல்படுத்தவும் செய்கிறார். முஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்காகவும் பல சலுகைகள், அறிவிப்புக்கள் வருகின்றன.

ஆனால், மதவாதத்தை பிஜேபி போல வெறுமே பேச்சில் மட்டும் வைத்திருக்காமல், செயலிலும் காட்டுகிற காங்கிரஸுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று தருமிக்கு எழுத வரவில்லை.

முதலில் மதம் என்பதே தேவையில்லை எனச் சொல்லி, பிறகு யாருடைய தாய் மதம் எது என முடிவு செய்வது அவசியம் என எழுதுகிறீர்கள். அதற்கு கிருத்துவமே என் தாய் மதம் எனச் சொல்லுகின்ற சிறில் அலக்ஸின் பதிவையும், அதற்காக வெளிவந்த லெமூரியனின் கமெண்டையும் வெளியிடுகிறீர்கள்.

தாய் மதம் என்பதன் சரியான பொருளை அழகாய் விளக்கியுள்ள அரவிந்தன் நீலகண்டனும் அதே பதிவில் பின்னூட்டம் போட்டுள்ளார். ஆனால், அதை நீங்கள் சுட்டவில்லை.

உண்மையில், அவருடைய பின்னூட்டம்தான் எல்லைகள் அற்ற மத உணர்வை தாய்மதமாகச் சுட்டுகிறது.

அங்கனம் இருக்கையில், தாங்கள் ஸெலக்ட்டிவ்வாக தகவல்கள் தரும் காரணம் என்ன?

தானாடாவிட்டாலும் ஆடுகிறது தருமியின் தற்போதைய மதம் என எடுத்துக்கொள்ளலாமா?

அல்லது பசுத்தோலுக்குள்ளிருந்து எழும் கிருத்துவ சிங்கத்தின் கர்ஜனை என இதை எடுத்துக்கொள்ளலாமா?

எண்கோணம் [18222036756861491748] said...

அங்கனம் இருக்கையில், தாங்கள் ஸெலக்ட்டிவ்வாக தகவல்கள் தரும் காரணம் என்ன?

Karnataka election.

Thamizhan said...

அறுபதுகளில் தமிழகம் இருந்த நிலையில் இருந்த வடக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞசமாக இந்துத்துவாவின் பார்ப்பனீய ஏமாற்று வித்தைகளைப் புரிந்து கொண்டு வருகிறது.
அப்போது பிள்ளையாரைக் கும்பிட்டு ஆரம்பிக்காத,பிள்ளையார் சுழி போட்டு எழுதாத தமிழரும்,ஸ்ரீ ராம ஜெயம்,எதற்கெடுத்த்தாலும் ராமா ராமா சொல்லாதப் பெரியவர்களும் இல்லை.இன்றோ எவ்வளவோ மாறி விட்டது.
பாபு ஜகஜீவன்ராம் சென்னையிலே எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்று உண்மையான வருத்தத்துடன் சொன்னார்.
பி ஜே பி யின் எல்லோரும் இந்துக்கள் ஆனால் தலைமை மட்டும் பூணூலிட்ந்தான் என்பது உடையப் போகிறது.அப்போதுதான் அவர்களுக்கு
பார்ப்பன இந்துத்துவாவின் உண்மையான முகம் தெரியும்.
உதை பட்டவர் உமாபாரதிகள் மட்டு மல்ல மோதிகளுந்தான் என்று வரும் போது குட்டு வெளிப் பட்டு விடும்.

Unknown said...

ஸ்ரீராமராஜ்யமும் வேண்டாம்,பெரியார்
ராஜ்யமும் வேண்டாம்.

Nivedan said...

Recently a very dangerous thing has happened in Karnataka. BJP has won! thanks to the sympathy wave caused by Mr. Kumaraswamy and his dad. Why I'm calling it as a dangerous phenomenon is that the south that has resisted the saffron so far has finally let BJP in.

We have seen in history that how this cancer of Hindutva spreads over a region once BJP gets into power. Hindutva is the term used to refer to the political form of Hinduism; It is a full-fledged fascist force mainly brainwashes the Hindu 'Kshatriya' caste groups against religious minorities and the Dalits also with the help of RSS and other such arms. So wherever this Hindutva comes, oppression and counter-oppression happen. South has not seen Communal riots as the north.

This Hindutva is not just a phenomenon, it's a hegemony. It spreads out in all possible forms of hatred towards all kinds of minorities. Congress, which usually plays a docile role in compromising and negotiating has even felt successful getting the Kannadiga votes stimulating them against the Cauvery issue pointlessly. BJP is known for hitting the hotspots of hatred. In order to retain power they will play the same game in a harsher way. With a sizable Tamil population In Bangalore, they will do everything to threaten them out of the state. The chances of ethnic violence has increased multifold with the advent of BJP.

Usually no upper caste person gets caught in such riots. This is because the usual style of RSS is to give Bhagavath Geetha to Brahmins and swords and Trishul (trident) to the OBCs and Dalits (Recently they included the Dalits also in Gujarat just to destroy the sworn enemies, the Muslims. However untouchability and extreme discrimination is still there against Dalits).

They have been clearly establishing the order prescribed by the "Manu Dharma". These things have to be nipped in the bud. Otherwise the south will become nonsecular and intolerant to ethnic diversities.

For that it is essential to have a better give-and-take relationship with other southern states without joining the bandwagon of ethnic superiority. We should approve and appreciate other southern languages. Solidarity with the Dravidian states is essential. We should leave the theories of relative superiority of Tamil over other Dravidian languages and encourage sharing of literature and translation of works. Already, Kerala and Tamilnadu are strongholds of secular parties. If the people can socially and linguistically relate with each other, politically also it is possible to kick out Aryan parties out of South.

Robin said...

//பசுத்தோலுக்குள்ளிருந்து எழும் கிருத்துவ சிங்கத்தின் கர்ஜனை என இதை எடுத்துக்கொள்ளலாமா?// சூப்பர் :)

தருமி said...

ராபின்,
புரிந்துதான் ’சூப்பர்’ என்று போட்டிருக்கிறீர்களா என்று சின்ன சந்தேகம்!

yuvatirupur said...

உலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை கணக்கிடுங்கள் யாரால் நடத்தப்பட்டது ? 50% கிறிஸ்தவம் 50% இஸ்லாமிய தீவிரவாதத்தினால் நடத்தப்பட்டது முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களை விட இந்தியாவில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழுகின்றார்கள் கிருஸ்தவர்களும் அப்படியே பிராமணர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல இந்து மதம் பிராமினர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல அமைதியான மனிதர்கள் இந்துக்கள் அவர்களை குட்டிக் கொண்டே இருக்கும் கடவுள் இல்லை கோஷ்டிகளும் மத மாற்ற கும்பல்களும் என்றுதான் திருந்துவீர்களோ

Robin said...

//புரிந்துதான் ’சூப்பர்’ என்று போட்டிருக்கிறீர்களா என்று சின்ன சந்தேகம்!// யோசித்து பாருங்கள் புரியும்.

Post a Comment