Friday, April 04, 2008

255. ஒரு தீர்க்க தரிசனம்!

Tuesday, October 04, 2005 அன்று நான் எழுதிய பதிவில் இருந்து ...


// ....இந்த பீடி, சிகரெட் குடிக்கிறவங்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் கேளுங்கள்; சிகரெட் வாசனைஎன்பார்கள். அவர்களைத் தவிர மற்ற ஆட்களைக் கேளுங்கள்; அவர்கள் எல்லோரும் சிகரெட் நாற்றம் என்பார்கள். இது எப்படின்னு கேட்டா ‘மனசுதான் காரணம்’ என்பீர்கள். சரி, போகுது..ஆனா என்னை மாதிரி ஆட்களுக்கு ஏன், எப்படி ரொம்ப சின்ன வயசிலேயே அந்த ‘வாசனை’ பிடிச்சுப் போகுது? genetically ஏதோ இருக்கணும்.. அதிலயும் அம்மாவோட வழியில், தாத்தா மட்டும்தான் புகை பிடிச்சவர். என்ன கணக்கோ, என்ன மாயமோ, இல்ல, என்ன ஜீன்ஸோ தெரியலை . ஆனா சின்ன வயசில இருந்தே அந்த வாசனை ரொம்ப பிடிச்சதென்னவோ உண்மை..... //

சே! என்ன ஒரு தீர்க்க தரிசனம் பாருங்க! அன்று நான் சொன்னது இப்போ பாருங்க ஓர் அறிவியல் உண்மையாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விட்டார்கள்.
Scientists have pinpointed a genetic link that makes people more prone to get hooked on to tobacco ...

அதோடு, இந்தப் பழக்கம், இன்னும் நல்ல, கெட்ட பழக்கங்கள் எல்லாவுமே இப்படி ஜீன்களால்தான் கட்டுப் படுத்தப் படுகின்றன என்றால் ...
"ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா..." என்ற பாட்டும், 'அவனன்றி அணுவும் அசையாது' என்பதுவும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அப்படியானால், 'எந்த பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே; அவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பதிலே..' என்ற தலைவர் பாட்டு தப்புதானோ? நம் ஜீன்கள்கள்தான் நம்மை உருவாக்குகின்றன என்றால் ...'எல்லாம் அவனவன் தலையெழுத்து' என்பதுதான் உண்மையோ?

இப்படியெல்லாம் சொல்வதால் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது என்று பொருளல்ல. நம் பிறப்போடு வரும் ஜீன்களின் தொகுப்பு just at random என்பது ரொம்ப நல்லாவே தெரியும்.

பாருங்களேன் ... மனுசன் காதல் வயப்படுவதுகூட சில ஜீன்களின் தாக்கத்தால் உடம்பில் சுரக்கும் சில நுதிப் பொருட்களால்தான் என்று ஏற்கெனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
"Raised Plasma Nerve Growth Factor Levels Associated With Early-Stage Romantic Love"

ஆக, எல்லாமே ஜீன்ஸ் அல்லது அவைகள் சுரக்கச்செய்யும் நுதிப் பொருட்கள்தான்!

28 comments:

வால்பையன் said...

ஜீன்ஸ், ஜீன்ஸ் ன்னு சொல்றிங்களே அது எந்த கடையில விக்குது!!
:)))

இந்த ஜீன் பழக்கம் ஏன் பெண்களுக்கு வருவதில்லை

வால்பையன்

Thekkikattan|தெகா said...

தருமி எப்படியோ தேடிப் பிடித்து உங்க மனசில வைச்சிருந்த ஹைபோதீஸிஸ்யை நிறுபிச்சிக்கிட்டீங்க... இது ரொம்ப நாட்களுக்கு முன்னமே கேள்விப் பட்ட மாதிரி தெரியுதே, இந்த ஆட்டுவிக்கிற விசயம்...

தலீவரு பாட்டு பொய்யப் போனதில ஒண்ணும் வருத்தமில்லை :)...

வால்பையா, ஏன் பெண்களுக்கு இந்த லெவைஸ் ஜீன் வருவதில்லையா, அப்படின்னு யாரு சொன்னதுன்னு நான் கேக்கிறேன்...

சிறில் அலெக்ஸ் said...

ஜீன்ஸ் ஏல்லாம் ஒரு டெண்டன்சியை உருவாக்குமே தவிர இவர் இப்படித்தான் ஆவார் என உறுதியாகச் சொல்லிவிட முடியாது. This person will be prone to it. Highly likely. இதற்கும் மேலே மனித செய்கையை பாதிக்கிற விதயங்கள் எத்தனையோ இருக்குது.

அமெரிக்காவில் காதல் ஜீன்ஸ் உள்ளவரின் செய்கைக்கும் இந்தியாவில் உள்ளவரின் செய்கைக்கும் வித்தியாசம் இருக்குது.

ஜீன்ஸ் உடல் ரீதியான உந்துதல் ஒன்றைத் தருகிறது என்றால் அதை மனதக் கொண்டு கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பலர்.

இப்போதைக்கு இதுதான் தோணுது. ஜீன்ச குறை சொல்லிட்டு தம் அடிக்க ஆரம்பிக்காதீங்கப்பா :)

கோவி.கண்ணன் said...

//இப்படியெல்லாம் சொல்வதால் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது என்று பொருளல்ல.//

தருமி ஐயா,

நாத்திகம் என்ற கெட்ட பழக்கத்துக்கும் ஜீன்ஸ்தான் காரணமா ? ஜீஸஸ் காரணமா ? உங்க பதில் என்ன ?
:)

புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.
சாத்தானின் தூண்டுதல் தான் காரணம் என்று(ம்) நினைக்கிறேன். :)

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாத்துக்கும் அடுத்தவங்க மேல் பழி போடும் தருமி ஐயாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

நண்பன் said...

தீர்க்கதரிசனம் என்று எழுதியதால், கடவுள் நம்பிக்கை வந்து விட்டது என்று பொருள் அல்ல என்பதை நம்புகிறேன். ஆனால், பின் நிகழப் போவதை முன் கூட்டி சொல்வதை "தீர்க்க தரிசனம்" என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியதே - ஏன்?

போகட்டும்

ஜீனை விட வலுவான ஒன்று உண்டு. அது தான் social conditioning of the mind. J கிருஷ்ண மூர்த்தியைப் படித்திருக்கிறீர்களா?

பெண்களிடத்தில் ஏன் இந்த ஜீன் வம்பு செய்வதில்லை என்று வால் பையன் கேட்டிருக்கிறார் - அது தான் இந்த social conditioning of the mind. இதுவே மனிதனின் மதத்தையும், அது சார்ந்த நம்பிக்கைகளையும், இறைவனையும் படைத்துத் தருகிறது. கூடவே தீர்க்க தரிசனங்களையும்.

எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் ரசித்துக் கொண்டிருப்பான் இறைவன்....

துளசி கோபால் said...

வாலுக்கு ரொம்பத்தான் வால்:-))))

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

வால் பையா ..
இருக்குப்பு உங்களுக்கு ஆப்பு .. மேல பாருங்க அப்படியே ...

தருமி said...

தெக்ஸ்,
//இது ரொம்ப நாட்களுக்கு முன்னமே கேள்விப் பட்ட மாதிரி தெரியுதே..//

இந்த ஜீன் புதுவிசயமில்லைதான். ஆனா சிகரெட்டுக்குன்னு தனியா ஒரு ஜீன் இருக்குன்னு இப்ப கண்டுபிடிச்சிருக்காங்கல்லா .. அத சொன்னேன்.

தருமி said...

சிறில்,
அதைத்தான் தலைவர் E.O.Wilson Sociobiology அப்டின்ற தலைப்பில் சொல்லிட்டாரே.
அதோட இந்த nature vs nurture, from being to becoming - எல்லாமே அதத்தான சொல்லுது.

// ஜீன்ச குறை சொல்லிட்டு தம் அடிக்க ஆரம்பிக்காதீங்கப்பா :)//

இல்லப்பா...அது (06-07)ஜனவர் 1990-ல் ராத்திரி 11 மணியோடு நின்னது நின்னதுதான். ம்ம்..ஏக்கப் பெருமூச்சுதான் இப்போ..

தருமி said...

கோவி,
//நாத்திகம் என்ற கெட்ட பழக்கத்துக்கும் ஜீன்ஸ்தான் காரணமா ? ஜீஸஸ் காரணமா ? உங்க பதில் என்ன ?//

இதுக்கும் அறிவியலாளர்களே பதில் சொல்லிட்டாங்களே. சிறில் பதிவில் பார்க்கலையா...
கொடுக்கப் பட்ட தொடுப்பிலுள்ள கட்டுரையை வாசிச்சிடுங்க.

சிறில் பதிவில் நான் சொன்னது:

// These reports suggested that religiosity originates specifically in the brain’s temporal lobe, and that religious visions are the result of epileptic seizures that affect this part of the brain.//

அப்போ என் temporal lobe வேலை செய்றதை கம்ப்ளீட்டா நிப்பாட்டிருச்சின்னு தெரிஞ்சு போச்சு. உங்க temporal lobe- இல் ப்ரச்சனை ஆரம்பிச்சிருச்சின்னு நினைக்கிறேன்! பாத்துக்கிடுங்க!!//

கோவி, எனக்குத் தெரிஞ்ச வரை உங்க temporal lobe-ம் கம்ப்ளீட்டா அவுட்டுன்னுதான் நினைக்கிறேன்!

வால்பையன் said...

//வால் பையா ..
இருக்குப்பு உங்களுக்கு ஆப்பு .. மேல பாருங்க அப்படியே .//

எதை சொல்றிங்கன்னு தெரியல
இருந்தாலும் மேலே பாத்தேன்
fan சுத்துது
:)
வால்பையன்

தருமி said...

கொத்ஸ், கோவி,

பாருங்க இந்த தெக்ஸ், சிறில் அலெக்ஸ் ரெண்டுபேரையும். நெருக்கமா ஆயிட்டதால இந்த 'ஐயா .. குய்யா' எல்லாம் இல்லாம எப்படி தோழமையா 'தருமி'ன்னு விளிக்கிறாங்க...ம்ம்..ம்.. நீங்களும் இருக்கீங்களே... :(

தருமி said...

நண்பன்,
வாங்க .. 'பார்த்து' நாளாயிற்றே!

//...."தீர்க்க தரிசனம்" என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியதே - ஏன்?//

பதில் நிரம்ப எளிது; வந்த வழி!
அதோடு 'அது'தானே உங்களை இங்கு இப்போது இழுத்துவந்தது. அதற்கும்தான்!

//(ஜீன்) ... இது மனிதனின் மதத்தையும், அது சார்ந்த நம்பிக்கைகளையும், இறைவனையும் படைத்துத் தருகிறது.//

கொஞ்சம் புரியலையே! அப்போ man's best creation is god அப்டின்னு சொல்றதை ஒத்துக்கொள்றீங்களா, என்ன?

//எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் ரசித்துக் கொண்டிருப்பான் இறைவன்....//

என்ன சொல்றீங்க? இப்போ மனுசப் பசங்க நிறைய அறிவியல் வளர்ச்சி அடைஞ்சிக்கிட்டே போறாங்க.. அதப் பார்த்து இறைவன் அட பரவாயில்லையே அப்டின்னு ரசிக்கலாம்.
ஆனால் சுனாமியையும், கும்பகோணத்தையும் பார்த்து பாவம் என்ன செய்வார்? அதையுமா ரசிப்பார்?

தருமி said...

துளசி,
ஆமாங்க இந்த வால்பையன் தொல்லை தாங்கலை...

நண்பன் said...

// நண்பன்,
வாங்க .. 'பார்த்து' நாளாயிற்றே!//

நான் வந்து போய்க் கொண்டு தான் இருக்கின்றேன். எழுத இன்னமும் நேரம் பிடிக்கலாம்.

//
//(ஜீன்) ... இது மனிதனின் மதத்தையும், அது சார்ந்த நம்பிக்கைகளையும், இறைவனையும் படைத்துத் தருகிறது.//

கொஞ்சம் புரியலையே! அப்போ man's best creation is god அப்டின்னு சொல்றதை ஒத்துக்கொள்றீங்களா, என்ன? //

இறைவன் என்ற சக்தியை, தனது வசதிக்கேற்ப, வாழுமிடத்திற்கேற்ப, தேவைகளுக்கேற்ப வடிவமைப்பதில் ஒரு மனிதனின் பாரம்பரிய குணங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏக இறைவனுக்கு தன் விருப்பப்படி உருவம் படைத்ததும், பெயர் வைத்ததும், பிறகு அந்த விதிகளை நீர்த்துப் போகச் செய்வதுவும் என இந்த ஜீன்கள் படுத்தும் பாடு அளவிட முடியாதது.

இறைவனுக்கு வடிவம் படைத்ததும், தன் சகமனிதனையே இறைவனாக உயர்த்தியதும், அந்த இறைவனின் பெயராலயே உயர்வு தாழ்வுகளைப் படைத்ததும் - இதைத் தான் நான் குறிப்பிட்டேன்.

God is not the creation of the man. But naming him is, indeed, the man's biggest creation ever in his known history.

// ஆனால் சுனாமியையும், கும்பகோணத்தையும் பார்த்து பாவம் என்ன செய்வார்? அதையுமா ரசிப்பார்?
//

கும்பகோணம் மனித அகங்காரத்தின் உச்சம்.

சுனாமி - கண்டறிய முடியாத பெரும் ரகசியமில்லையே? தங்களுக்கு எங்கே நிகழப் போகிறது இத்தகைய விபத்துகள் என்ற அசட்டையுடன் இருந்தவன் தானே மனிதன்? தனது நிலத் தகடுகளை அசைத்துப் பொருத்திக் கொள்ள நிலம் தொடர்ந்து இயங்குகிறது. அதன் பக்க விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள இயலும். என்றாலும் அதை மதிப்பதில்லை. பொருட்படுத்துவதில்லை. இயக்கமற்ற இயற்கை எப்பொழுதுமே மனிதனுக்குக் கிடைக்கப் போவதில்லை. அந்த இயற்கையை மனிதன் மதிக்கக் கற்றுக் கொள்ளும் பொழுது, இறைவனையும் மதிக்க ஆரம்பிப்பான். இயற்கைய அரவணைத்து வாழ கற்றுக் கொள்ளும் பொழுது, இந்த விவாதங்கள் கூட தேவையாக இருக்காது. தன்னைத் தானே இறைவனாக உயர்த்திக் கொள்ளும் மனநிலையிலிருந்தும் விடுபடுவான். இப்பிரபஞ்சத்தின் எல்லா விதிகளையும் எழுதியவன் யார் என்று தெரிந்து கொள்ள இயலும்...

Radha Sriram said...

ஆஹா எனக்கும் tobacco வாசனை ரொம்ப பிடிக்கும்......அத விட பெட்ரோல் வாசனை..அப்படியே குடிச்சிடலாமான்னு இருக்கும்.......:):)

தருமி said...

Radha Sriram,
உங்க ஜீன்கள் கொஞ்சம் தொல்லை பிடிச்சதுதான் போலத்தான் தெரிகிறது. பார்த்து இருந்துக்குங்க

Hakuna Matata - அப்டின்னா என்னங்க? என்ன மொழி அது?

உண்மைத்தமிழன் said...

தருமி ஐயா..

எனக்கு சிகரெட் வாடையைக் கண்டா கோபம்தான் வருது..

பீடி வாடையை முகர்ந்தா ஆத்திரமா வருது..

சுருட்டு வாடை.. ஐயையோ.. கொலையே செஞ்சுரலாம்னு தோணுது..

ஆனா எங்கப்பாவுக்கு மேலே சொன்ன மூணுமே உடன் பிறந்த வியாதி மாதிரி இருந்துச்சு..

ஆனா எனக்கு..?

இது எப்படி ஜீன்ல இருக்கும்..?

குயப்பமா கீதே நைனா..

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

உண்மைத் தமிழன்,

அப்பாவை மட்டும் யோசிச்ச நீங்க அம்மா வழியில் என்பது பற்றி ஏன் யோசிக்கவில்லை. எனக்கு அப்பா வழியில் எல்லோருமே tee totalers தான்! வெற்றிலை போடுறதுகூட தப்புன்னு சொல்ற ஆளுக.

ஆனா உங்களுக்கு இந்த சிகரெட்டு ஜீன்கூட வந்திருக்கலாம் போல தெரியுது அதை விட்டுட்டு, 'கோபம்,ஆத்திரம்,கொலையே செஞ்சுரலாம்னு தோண்றது' - இப்படி விசயங்களால்ல சேர்ந்து வந்திருக்கு. உங்கள விட்டு கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிறேனுங்க ஐயா...

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

நண்பன்,

//நான் வந்து போய்க் கொண்டு தான் இருக்கின்றேன்.// எங்க நம்ம இடத்துக்குமா வந்து போய்க்கிட்டு இருக்கீங்க? அப்டின்னா சந்தோஷம்தான்.

//இறைவனுக்கு வடிவம் படைத்ததும், தன் சகமனிதனையே இறைவனாக உயர்த்தியதும், அந்த இறைவனின் பெயராலயே உயர்வு தாழ்வுகளைப் படைத்ததும் ..//
இதுக்கெல்லாம் போய் ஏன் ஜீன்களை இழுக்கிறீர்கள்? நேரடித்தொடர்பு இருப்பதாக ஏதும் எனக்குத் தோன்றவில்லையே!

the best creation of man is god and IF god indeed created, his / her worst creation is man - என்ற மேற்கோள் எனக்குப் பிடித்தது.

//கும்பகோணம் மனித அகங்காரத்தின் உச்சம். //
ஐயோ! இதில் அகங்காரம் எங்கே வந்தது. முடியாமை, மடத்தனம் என்ற வேறு சொற்கள் பொருத்தமாக இருக்கலாம்.

//தனது நிலத் தகடுகளை அசைத்துப் பொருத்திக் கொள்ள நிலம் தொடர்ந்து இயங்குகிறது.// - தானாகவே ... இல்லையா? "மேலே"யிருந்து யாரும் கயறு கட்டி இழுப்பதில்லை; அப்படித்தானே?

//அந்த இயற்கையை மனிதன் மதிக்கக் கற்றுக் கொள்ளும் பொழுது, இறைவனையும் மதிக்க ஆரம்பிப்பான்.// இயற்கையை 'மதிக்க' என்பதற்குப் பதில் 'புரிந்து கொள்ள' என்றிருந்தால் எனக்குச் சம்மதம். global warming என்ற அச்சுறுத்தல் இருந்தால் அது ஏன், எப்படி, என்ன செய்யும், என்ற அறிவோடு, இதனைத் தடுப்பது எப்படி என்ற புரிதல்தான் தேவை. global warming-ன் அச்சுறுத்தலுக்கு இயற்கையை மதித்தாலோ, கடவுளை மதித்தாலோ, இல்லை முட்டிக்கால் போட்டு ஜெபம் செய்வதாலோ, மண்டியிட்டு தொழுதாலோ ஏதும் பயன் இருக்குமா என்ன?

இயற்கையின் இயக்கங்களுக்கும், இறைவனுக்கும் முடிச்சு போட நான் தயாரில்லை.

//இப்பிரபஞ்சத்தின் எல்லா விதிகளையும் எழுதியவன் யார் என்று தெரிந்து கொள்ள இயலும்...//

நீங்கள் இதன் மூலம் "இயற்கையின் இயக்கங்களுக்கும், இறைவனுக்கும்" முடிச்சு போடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் நமது விவாதங்கள் back to square one-க்குத்தான் போகவேண்டும். உங்கள் வார்த்தைகளிலுள்ளது போல் Omniscient god (எல்லா விதிகளையும் எழுதியவன் ) என்று ஒன்றிருந்தால் கும்பகோண நெருப்பும், சுனாமியின் கொடூரமும் "அங்கிருந்து" தானே வரவேண்டும். judeo-christian-islamic concept ஆன நல்லதெல்லாம் கடவுளிடமிருந்து, தீயவை எல்லாம் கடவுள் படைத்த ஆனால் கடவுளுக்கு almost சமமான (!?) ஷாத்தான்களிடமிருந்து என்பது எனக்குப் பிடிபடாத ஒன்று. Is your god omniscient or not - என்பது தான் இந்த விவாதத்தின் ஆரம்பப் புள்ளியாகவும், இறுதிப் புள்ளியாகவும் எப்போதுமே இருக்கிறது.

உண்மைத்தமிழன் said...

//தருமி said...
உண்மைத் தமிழன், அப்பாவை மட்டும் யோசிச்ச நீங்க அம்மா வழியில் என்பது பற்றி ஏன் யோசிக்கவில்லை.//

தப்புதான் பேராசிரியரே.. எங்க அம்மா சிகரெட் வாடை அடிச்சாலே சேலையை எடுத்து மூக்கைப் பொத்திக்கிற ஆளு.. ஸோ.. அவுகளும் என்னை மாதிரிதான்..

//எனக்கு அப்பா வழியில் எல்லோருமே tee totalers தான்! வெற்றிலை போடுறதுகூட தப்புன்னு சொல்ற ஆளுக. ஆனா உங்களுக்கு இந்த சிகரெட்டு ஜீன்கூட வந்திருக்கலாம் போல தெரியுது.//

தப்பு பேராசிரியரே.. ரொம்பத் தப்பு..

என் அப்பாதான் எனக்கு ஞான குரு. எதுவெல்லாம் தப்பு என்பதை தன்னை வருத்தி எனக்கும், என் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்துவிட்டு பரலோகத்தில் ஐக்கியமான தியாகி.

பீடி, சிகரெட், சுருட்டு, புகையிலை, குடி என்று பரந்துபட்ட தனது உலகத்தினால், வாய்ப்புற்று நோய் தாக்கி 2 ஆண்டுகள் எனது வீட்டை சுடுகாட்டு அமைதியாகிவிட்டுச் சென்றார்.

அதன் விளைவுதான் எனது முதல் கமெண்ட்..

//அதை விட்டுட்டு, 'கோபம்,ஆத்திரம்,கொலையே செஞ்சுரலாம்னு தோண்றது' - இப்படி விசயங்களால்ல சேர்ந்து வந்திருக்கு. உங்கள விட்டு கொஞ்சம் தள்ளியே நின்னுக்கிறேனுங்க ஐயா...//

நீங்கள் ஒதுங்கினாலும், நான் விடப் போவதில்லையே..

தருமி said...

அப்பாவைப் பற்றி எழுதியுள்ளதை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். உங்கள் இளம்பருவத்தில் நடந்த அந்த காரியங்களுக்காக வருந்துகிறேன்.

////எனக்கு அப்பா வழியில் எல்லோருமே tee totalers தான்! வெற்றிலை போடுறதுகூட தப்புன்னு சொல்ற ஆளுக. ஆனா உங்களுக்கு இந்த சிகரெட்டு ஜீன்கூட வந்திருக்கலாம் போல தெரியுது.//
ரெண்டு பத்தியிலுள்ளதை ஒன்றாக்கிப் போட்டதும் அர்த்தம் மாறிடிச்சே!

//நீங்கள் ஒதுங்கினாலும், நான் விடப் போவதில்லையே..//
அன்புக்கு மிக்க நன்றி. கேட்க மகிழ்ச்சியாயிருக்கிறது.

சாலிசம்பர் said...

//ஆக, எல்லாமே ஜீன்ஸ் அல்லது அவைகள் சுரக்கச்செய்யும் நுதிப் பொருட்கள்தான்!//

தருமி அய்யா,தீர்ப்ப மாத்துங்க.சிகரெட் பிடிக்க காரணம் ஜீன்ஸ் தான் என்பது முழுமையாக இல்லை.இதற்கு உளவியல் அறிஞர் ஏதேனும் காரணம் சொல்லலாம்.சமூகவியலாளர் ஏதேனும் காரணம் சொல்லலாம்.வலைப்பக்கம் தலைவைக்காத படிக்கு பின்நவீனர் ஏதேனும் காரணம் சொல்லலாம்.எனவே ஜீன்ஸ் தான் காரணம் என்று சொல்வது கொலைகாரனுக்கும்,காமுகனுக்கும் சாதகமாகி விடாதா?

hakuna matata என்று தொடங்கும் ஒரு பாடல் லயன் கிங் படத்தில் வருகிறது.நண்பர்களின் கொண்டாட்டத்தை இந்த சுட்டியில் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=ejEVczA8PLU

வேளராசி said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment