Saturday, February 14, 2009

293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்!

*

கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 2

எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்னும் நம்மவர்களுக்கு ஆர்வக்கோளாறு என்பது கொஞ்சம் அதிகம்தானென்றே நினைக்கிறேன். பொருட்குற்றம் வந்தாலும் பரவாயில்லை சொற்குற்றம் வந்துவிடக்கூடாதென்ற நினைப்போ என்னவோ, சென்னையில் ஒரு பொதுவிடத்தில் நான் பார்த்த ஒரு தமிழாக்கம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது. சாதாரண ஒரு தமிழனை விட சிறிதளவாவது எனக்குத் தமிழ் அதிகமாகத் தெரியும் என்ற நினைப்பில் வாழ்ந்து வரும் எனக்கு, அந்தத் தமிழாக்கம் பார்த்ததும் முதலில் திகைப்பும், பின் சிரிப்பும் கடைசியில் 'அடப் பாவிகளா' என்றும்தான் தோன்றியது.

அந்தத் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன். யாராவது அதற்கு என்ன பொருள் என்று கூற முயன்று பாருங்களேன். நானும் நாலைந்து பேரிடம் கொடுத்துப் பார்த்தேன். பாவம் அந்தத் தமிழர்களுக்கு அதன் பொருள் புரியவில்லை; அவர்களும் என்னைப் போன்றே மொடாக்குகள் போலும். எங்கே, நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.

மெய்ப்புல அறைகூவலர்களுக்கு ..

உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

மேற்கூறியதற்கான ஆங்கில அறிவிப்பைப் பின் தருகிறேன்.

அடடா! ஏதோ நான் தான் முதலில் பார்த்ததுபோல் அதை ஒரு பதிவாகவும் போட்டுட்டேன். முன்னோடிகள்தான் எத்தனை பேர்!

http://elavasam.blogspot.com/2008/08/blog-post_28

http://amarkkalam.blogspot.com/2008/12/cinema-paradiso.html

http://ilayapallavan.blogspot.com/2008/10/blog-post_7520.html

http://govikannan.blogspot.com/2008/12/blog-post_17.html

இப்போது இன்னொரு கேள்வி:
//தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?
- தட்ஸ் தமிழ் // -- இதனோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.ஆனால் கோவி //இதைச் அனுகூலம் ஆக்கிக் கொண்டு தமிழ் எதிர்பாளர்கள்...நக்கலாக சிரித்து...'பாருங்கய்யா தமிழை' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.// என்கிறார். நானும் அப்படித்தான் சொல்கிறேன்:'பாருங்கய்யா தமிழை' அதோடு ஒரு கேள்வியையும் உங்கள் முன் வைக்கிறேன்: இது தேவையா?

இதில் இன்னொன்றும் தெரியவருகிறது. நம் பதிவர்களுக்குத்தான் எப்படி ஒரேமாதிரியான சிந்தனை!

சென்னை விமானநிலையத்துக்காரர்களுக்குத் தமிழில் மட்டும் இப்படிப்பட்ட ஈடுபாடு" என்றில்லை; ஆங்கிலத்திலும்தான் போலும். ஒரு - electronic notice board-ல் - இருந்த ஒரு ஆங்கில அறிவிப்பு -- அடடே! என்ன ஒரு ஆங்கிலப் புலமை! கைத்தொலை பேசியில் படமெடுக்க நினைத்தும் காத்திருக்க முடியாததால் விட்டு விட்டேன்.

*

பட உதவி (படம் ஆட்டை போட்டது): இ. கொத்ஸ்.

*

22 comments:

PRABHU RAJADURAI said...

Physically Challenged....:-))

G.Ragavan said...

மெய் - உடம்பு, உண்மை
புல(ம்) - நிலம்
புல(ன்) - உறுப்பு (அ) உணர்ச்சி
அறைகூவல் - இது எல்லாருக்கும் நல்லாத் தெரியும்

இதெல்லாம் வெச்சிப் பாத்தா,

உடம்பு உணர்ச்சி அறைகூவல் - Body sense requester
உடம்பு நில அறைகூவல் - body land requester
உடம்பு உறுப்பு அறைகூவல் - body part requester
உண்மை உணர்ச்சி அறைகூவல் - true sense requester
உண்மை நில அறைகூவல் - True ground requester
உண்மை உறுப்பு அறைகூவல் - true part requester

இதுல எதாச்சும் சரியா?

குமரன் (Kumaran) said...

Does this mean 'physically challenged'?

Sridhar Narayanan said...

இது பழசாச்சே. கொத்தனார் ஏற்கெனவே புதசெவி-யில போட்டுட்டாரே. அவரோட ‘அறுவை’யெல்லாம் யாரு படிக்கிறதுன்னு நீங்க கேக்கறது புரியுது. நீங்க அவரோட பதிவுகளை படிக்கறதில்லைன்னு அவருக்கு புரியட்டுமேன்னுதான்... ஹிஹி...:))

மெய்ப்புலம் - Physical, presence of body (மெய் - body; புலம் - presence)

அறைகூவல் - to challenge. சண்டைக்கு அழைத்தல்.

மெய்ப்புல அறைகூவலர் - Physically Challenged :-)) அதாவது ’தங்கள் உடல்நிலையால் சண்டைக்கு அழைக்கப்பட்டவர்கள்’

இலவசக்கொத்தனார் said...

என் பதிவை எல்லாம் நீங்க படிக்கிறது இல்லை என்பது நல்லாத் தெரியுது!!

தருமி said...

கொத்ஸ்
மன்னிக்கணும்.
தயவுசெய்து அப்பதிவின் இணைப்பைத் தரலாமா?

தருமி said...

குமரனும் கொத்ஸும் தமிழார்வலர்கள் & விற்பன்னர்கள் என்பது தெரிந்ததுதான். இப்போது அவர்களோடு பிரபு ராஜதுரையையும் சேர்த்துக் கொள்கிறேன்.(இந்த அறைகூவலுக்கு ஜிரா பதில்தராவிட்டாலும் அவர் தமிழறிவைப் பற்றி யாருக்குத்தான் தெரியாது?)

நன்றி.

Unknown said...

தருமி ஐயா,
எங்களுக்கு முன்னமே தெரியும். எப்படி?
http://govikannan.blogspot.com/2008/12/blog-post_17.html

அபி அப்பா said...

தருமிசார்! திருச்சி ஏர்போட்டிலேயும், ஸ்ரீலங்கா ஏர்போட்டிலேயும் பார்த்தேன்.நல்ல தமிழ் வார்த்தை!

குமரன் (Kumaran) said...

அட நான் அப்படி ஐயமாகச் சொன்னதே கொத்ஸ் பதிவுல படிச்சுத் தான்னு நினைக்கிறேன். இது சரியான மொழிபெயர்ப்பு தானான்னு தெரியாது. :-)

தருமி said...

பெனாத்தல் சொல்கிறார்:

u have seen this மெய்ப்புல அறைகூவலர் in Chennai Airport, I bet
I have a mobile foto of that, so does elavasam, Usha, govi kannan :-)

கோவி.கண்ணன் said...

//மெய்ப்புல அறைகூவலர்களுக்கு ..

உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

மேற்கூறியதற்கான ஆங்கில அறிவிப்பைப் பின் தருகிறேன்.//

இது பழைய தகவல் ஆயிற்றே, மருத்துவர் புரோனோ பதிவிலும் வந்தது.

மாற்றுதிரனுடையோர் என்பதே சரியான மொழி பெயர்ப்பு !

தருமி said...
This comment has been removed by the author.
இலவசக்கொத்தனார் said...

இனிமேலாவது நம்ம பதிவை எல்லாம் சாய்ஸில் விடாமப் படியுங்க. இலவசமாக் குடுத்தா இம்புட்டுதான் மருவாதி போல!!

http://elavasam.blogspot.com/2008/08/blog-post_28.html

சிறில் அலெக்ஸ் said...

I've heard of transliteration this is transILliteration :)

தருமி said...

அடடா! ஏதோ நான் தான் முதலில் பார்த்ததுபோல் அதை ஒரு பதிவாகவும் போட்டுட்டேன். முன்னோடிகள்தான் எத்தனை பேர்!

http://elavasam.blogspot.com/2008/08/blog-post_28

http://amarkkalam.blogspot.com/2008/12/cinema-paradiso.html

http://ilayapallavan.blogspot.com/2008/10/blog-post_7520.html

http://govikannan.blogspot.com/2008/12/blog-post_17.html

இப்போது இன்னொரு கேள்வி:
//தமிழ்ப்படுத்த வேண்டியதுதான், அதற்காக இப்படியெல்லாமா 'படுத்துவது'?
- தட்ஸ் தமிழ் // -- இதனோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்.ஆனால் கோவி //இதைச் அனுகூலம் ஆக்கிக் கொண்டு தமிழ் எதிர்பாளர்கள்...நக்கலாக சிரித்து...'பாருங்கய்யா தமிழை' என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர்.// என்கிறார். நானும் அப்படித்தான் சொல்கிறேன்:'பாருங்கய்யா தமிழை' அதோடு ஒரு கேள்வியையும் உங்கள் முன் வைக்கிறேன்: இது தேவையா?

இதில் இன்னொன்றும் தெரியவருகிறது. நம் பதிவர்களுக்குத்தான் எப்படி ஒரேமாதிரியான சிந்தனை!

சென்னை விமானநிலையத்துக்காரர்களுக்குத் தமிழில் மட்டும் இப்படிப்பட்ட ஈடுபாடு" என்றில்லை; ஆங்கிலத்திலும்தான் போலும். ஒரு - electronic notice board-ல் - இருந்த ஒரு ஆங்கில அறிவிப்பு -- அடடே! என்ன ஒரு ஆங்கிலப் புலமை! கைத்தொலை பேசியில் படமெடுக்க நினைத்தும் காத்திருக்க முடியாததால் விட்டு விட்டேன்.

தருமி said...

சிறில்,
transilliteration -அப்டின்னா நல்லாத்தான் இருக்கு. ?!

:-)

வால்பையன் said...

சவுண்ட் என்ற ஆங்கில சொல்லுக்கு நேரடியான தமிழாக்கம்

ஓசை என்பதா?
சப்தம் என்பதா?

இதுவே சரியாக தெரியாத என்னை போல் குழந்தைபசங்களை ஏன் இப்படி சோதிக்கிறார்கள்,

எதாவது செய்யுங்க ஐயாக்களே!

Narayanaswamy G said...

அதீத தமிழ் உணர்ச்சியால் தமிழ் வன்புணரப்படுகிறது.....

இன்னோரு உதாரணம்....

\\தாச் விடுதி்\\

ஒரு பதிவுலக நண்பர் எழுதியதுதான்....
ஆனாலும் ஒரு மாதிரி இருக்கு.....

Narayanaswamy G said...

One doubt....

How will they translate "Janitor"

சிறில் அலெக்ஸ் said...

இப்பத்தான் சுட்டி டிவில பார்த்தேன் Nature Appreciation Festival - இயற்கை பாராட்டு விழாண்ணு மொழி’பேர்த்துட்டாங்க’.

சிறில் அலெக்ஸ் said...

janitor - துப்புரவுப்பணியாளர்

Post a Comment