Tuesday, July 07, 2009

323. BLOWING MY OWN TRUMPET ...

*

நிர்மல் சேகர் அப்டின்னு ஒருத்தர் இந்து தினசரியில் விளையாட்டுப் பகுதியில் எழுதுவார். தொடர்ந்து விம்பிள்டன்னுக்கு நேரே சென்று எழுதுவார். ஒவ்வொரு முறையும் அவர் எழுத்தை வாசிப்பது மிகவும் ரசிக்கும்படி இருக்கும்; அந்த அளவு அவரது ஆங்கிலம் எனக்குப் பிடிக்கும். ஆங்கில இலக்கியம் கற்றவராக இருக்க வேண்டும் - ஏனெனில், அவர் எழுதுவது என்னவோ டென்னிஸாக இருந்தாலும் பழைய ஆங்கில இலக்கிய பாத்திரங்கள் நடு நடுவே வந்து தலைகாட்டும். அதுவும் ஒரு பெரிய விளையாட்டுக்காரர் வென்றாலும், தோற்றாலும் அவரது ஆங்கில நடை தீவிரமாகி விடும். மொழி இழைந்தோடும். வாசிப்பதே பேரின்பம்.

இதை என் வகுப்புகளில் சொன்னதுண்டு. நேற்று திடீரென ஒரு sms வந்தது:

sir you said about articles written in Hindu after tennis matches. when read it today thought of you ....

வந்தது வெறும் எண்ணோடு வந்ததால் யாரென்று தெரியவில்லை. இருப்பினும் ...

some good seeds on some good ground!
Good.
Thanks.
but still not sure who u r ...

பதில் வந்தது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் முந்திய ஒரு மாணவியின் எண்.


ம்ம்..ம்.. சில நல்ல விதைகள் நானும் விதைத்து, அதுவும் சில நல்ல நிலங்களில் விழுந்து முளைத்திருப்பதைப் பார்த்து சந்தோஷமாயிருந்தது.


****** ****** ******* *******


விம்பிள்டன் பார்க்க ஆரம்பிக்கும்போது பெடரர் பக்கம்தானிருந்தேன். ஆனால் விளையாட ஆரம்பித்ததும் service தவிர மற்றவற்றில் ராடிக்கின் ஆட்டம் அழகாயிருந்தது. அதுவும் கடைசி ஆட்டம் தவிர எந்த ஒரு game-லும் அவர் தோற்கவில்லை. முதல் செட் வென்றது, இரண்டாவது செட் tie breaker-ல் தோற்றது - இரண்டுமே எதிர்பார்க்காமல் நடந்தது போலிருந்தது.


****** ******* ******** *********


நாடல் அடுத்து வந்து பெடரரோடு இறுதியாட்டத்தில் மோதும் காட்சியைக் காண இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

நிச்சயம் நன்றாக இருக்கும் அந்தப் பந்தயம்.

****** ******** ******** ********


*

11 comments:

வால்பையன் said...

இதற்கு பலசரக்கு என்று லேபிள் கொடுத்தது ஏனோ!?

தருமி said...

இது 54-வது பலசரக்கு! Lebels பார்க்கலையா? அந்த குரூப்ல போட்டாச்சு இதை ..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

sorry again wrong no. டென்னிசுன்னா பந்தை உதைச்சு விளையாடுவாங்கன்னு மட்டும் தெரியும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு நல்ல ஆசிரியரின் சந்தோஷம்.. வாழ்த்துகள்..

Unknown said...

ayyoo... I don't remember you saying about tennis articles in Hindu..!! Maybe short term memory loss :) or I missed (dozed??!!) any banyan tree sessions.. but I do appreciate/admire your efforts in taking time to discuss with students about world out of book/college which helped me personally.

When visiting India this Feb, I was going through my practical records and laughed at some comments your wrote as well thoughts sprawled into how you gave marks based on questions student choose to answer which still has some impact on me.

Hope you sowed another (many more) good seed too :)

தருமி said...

நன்றி கார்த்திகை

தருமி said...

விஜய்,
எந்த விஜய்னு ஒரு போட்டோ அனுப்பலாமே ..........

மிக்க நன்றி இப்பின்னூட்டத்திற்கு

தருமி said...

sridhar,
நாங்களும் அப்படித்தான் .. சின்னப் பிள்ளைல டென்ன்ஸ் பந்தை உதைச்சிதான் விளையாடினோம் ..

தருமி said...

கார்த்திகை,
பாம்பின் கால் பாம்பறியும்!

நன்றி.

நாகை சிவா said...

:) நேத்து டென்னிஸ் பற்றி பதிவில் குறிப்பிடும் போதே நினைத்தேன், என்னடா மற்ற போட்டிகளுக்கு எல்லாம் அன்றே பதிவு வந்துச்சு. பைனல் முடிந்து இரு நாட்கள் ஆச்சேனு... நீங்க பெடரர் அணி தான் என்று நினைத்தேன், அதை குறிப்பிட்டும் இருந்தேன். :)))

தருமி said...

thank you vijay for the photos.

Post a Comment