Thursday, February 11, 2010

375. பின்னூட்டப் பதிவு -- இஸ்லாம்

*

ஒரு பதிவில் நடந்து வந்த பின்னூட்ட விவாதங்களில் ஒரு கேள்விக்கு நான் இருமுறை  கேட்ட மறு கேள்விகளும், அதை மீண்டும் இருமுறை நினைவுபடுத்தியும் அவைகள் பதிவிடப்படாததால், அவைகளை ஒரு நினைவுறுத்துதலுக்காக இங்கே ஒரு பதிவாக இட எண்ணியுள்ளேன். பதிவருக்கு அதில் ஏதும் மறுப்பிருக்காதென்றே நினைக்கிறேன்.



//இஸ்லாம் பெண்களை கண்ணிய படுத்துவது மட்டுமில்லாமல் ஒரு படி
மேலே போய்

அவர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்திருக்கிறது.
இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா?//

இந்தப் பதிலுக்கு கீழேயுள்ள இரு காணொளிகளும் சரியான பதிலளிக்கும் என்றே நினைக்கிறேன்.





எப்படி அடிக்கலாம்; எங்கெங்கு அடிக்கலாம்; அடிக்கும் குச்சியின் சைஸ் என்னவாக இருக்க வேண்டும்  - ஒருவேளை இந்தக் "கட்டுப்பாடுகளை" வைத்து அவைகளை நல்லக் கட்டுப்பாடுகள் என்றழைக்கிறார்களோ?!

பெண்கள் மட்டும்தான் தவறிழைப்பார்களா? ஆண்கள் தவறிழைத்தால் அப்போது மனைவியர் தங்கள் கணவனைக் 'கவனித்துக் கொள்ளலாம்' என்று உங்கள் மார்க்கம் சொன்னாலாவது இரு பாலாரையும் சமமாகப் பாவிக்கிற அளவில் உங்கள் மதம் உள்ளது என்று கூறலாம். இதென்ன ஒரு பக்க சார்பு ?

பெண்களுக்கு // நிறைய சலுகைகளை கொடுத்திருக்கிறது// என்றும் சொல்கிறார். என்ன வித சலுகைகள்? தலாக் சொல்வதில் சம பங்கு என்று சொல்லலாமென நினைக்கிறேன். ஆனாலும் சமூகச் சூழலில் எந்த அளவு அன்றும் இன்றும் பெண்கள் தலாக் சொல்லிவிட முடியும்?

அடி உதை ஒரு பக்கம் இருக்கட்டும் .. எத்தனைப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாமென்ற வரையறை இன்னொரு 'விளையாட்டாக' இருக்கிறது.

நபியின் காலத்தில் நடந்த போர்களால் பெண்கள் அதிகமாகவும், ஆண்கள் குறையாகவும் இருந்த காலத்தில் ஒரு வேளை இந்த நடைமுறையை ஒத்துக் கொள்ளலாம். அதிலும் நபிக்கு மட்டும் அதில் ஏதும் கணக்கில்லை; காரணம் 'அல்லாவே வழிநடத்தினார்' என்று நபியே கூறிவிடுக்கிறார். இதைப் பற்றி என் பழைய பதிவில் கீழ்க்கண்டவாறு கூறியிருந்தேன்:

//எனது கேள்வி: கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தனி மனிதனின் செயல்களை அல்லாவே இவ்வாறு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளச் சொல்வார் எனபதை நம்புவதா? அல்லது அப்படி அல்லாஹ் என்னிடம் சொன்னார் என்று சொல்வதை நம்புவதா? (குற்றம் சுமத்தப்பட்டவரே சாட்சி சொல்வதுபோல் அல்லவா இது இருக்கிறது!) Is it not strange to accept that God himslef would have come to give excuses to the excess of his disciple?

14.) இன்னொன்று. நம் ஊரில் இப்போதும் ஒன்று பார்க்க முடியும். Our law makers are the first law-breakers. நான்கு மனைவிகள் வைத்துக்கொள்ளலாம் என்று மற்றவர்க்குச் சொன்ன நபி தான் மட்டும் எப்படி இப்படி...? "Those who regard him as the inventor of these Qur'anic rules see this as a case of a leader enjoying privileges he denied to his followers!"//

ஆண்கள் சுவனத்திற்குச் சென்றால் என்னென்ன கிடைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது; நன்றாகவே அவைகள் உள்ளன. நல்லது. ஆனால் இதிலும் பால் சார்ந்த வேறுபாடுகள் உள்ளன. இதைப் பற்றியும் ஏற்கெனவே  என் பழைய பதிவில் ஒரு கேள்வி:

//இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? (நம்ம ஊர் நித்திய கல்யாணி மாதிரி, லாய்லாஹ் பற்றிக் கேட்டாலும் யாரும் விளக்கம் தரவில்லை!!)  முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் அவர்கள் கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste. (நரகத்தில் பெண்களே அதிகமாயிருப்பார்கள் என முகமதுவே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.) ஆயினும் ஆண்களுக்குக் கிடைக்கும் இந்தப் பரிசிற்குச் சமமாக மோட்சம் செல்லும் பெண்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் காத்திருக்கப் போகிறது என்பதைப் பற்றி 'நல்ல வேளை' எதுவும் சொல்லப்படவில்லை!//

நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்; மனைவியை அடிக்கலாம்;பெண்களுக்கு சுவனத்தில் கிடைப்பது பற்றிய மெளனம்   -- இப்படியெல்லாம் மார்க்கமே வழி சொல்வது பற்றி அறிந்த பின் //இஸ்லாமைப்போல் வேறு எந்த மார்க்கம் இதுபோல பெண்களுக்கு சலுகையளித்திருக்கிறது உங்களால் கூற முடியுமா?// என்று பதிவர் கேட்டால்,  இல்லை ... இல்லை .. இதுபோன்ற சலுகைகளை எந்த மார்க்கமும் அளி(ழி)க்க வில்லை; அளி(ழி)க்கவும் வேண்டாம் என்றுதான் கூறத்தோன்றுகிறது.



*

7 comments:

வால்பையன் said...

எப்படி அடிக்கலாம் என்று குரானிலியே சொல்லியிருக்கும் போது அது எப்பேர்பட்ட கூமுட்டை கடவுள் என்பது தெரிகிறது!

குட்டிபிசாசு said...

//சமூகச் சூழலில் எந்த அளவு அன்றும் இன்றும் பெண்கள் தலாக் சொல்லிவிட முடியும்//

இதற்கு இஸ்லாம் நல்ல மார்க்கம். ஆனால் அதனை பின்பற்றும் சமூகம் தான் தவறிழைக்கிறது என்று யாராவது கூறுவார்களேயானால், மனிதனை நெறிப்படுத்தாத மதம் எதற்கு? குரான், பைபிள், பகவத்கீதை, மனுநீதி எல்லாம் நாலடியார், திருக்குறள் போன்ற அந்தக்கால அறிவுஜீவிகளின் அறிவுரை தொகுப்புகள் மட்டுமே. குரான் இன்னும் ஒருபடி மேலே போய் dress code, toilet code, bathing code, sex code,... என பல முந்திரி கொட்டை வேலை செய்துவிட்டு சென்றுள்ளது.

Thekkikattan|தெகா said...

தருமி, நிறைய பேக் ரெஃபரன்ஸ் பதிவுகள் எல்லாம் இணைச்சு hmm :)) ... இந்த மாதிரி பதிவுகளுக்கு எல்லாம் வீனஸ் பெண்கள் வந்து பதிலுரைத்தால்தான் உண்டு. என்ன பண்றது unfortunately they won't come! keep knocking ...

தருமி said...

நன்றி வால்ஸ் & கு.பிசாசு (நல்ல பேருகள் வச்சிருக்கீங்க'ப்பா!)

தருமி said...

//பேக் ரெஃபரன்ஸ் பதிவுகள் எல்லாம் இணைச்சு ..//

எல்லாம் தூசி தட்டி எடுத்துப் பார்க்கிறதுதான் ...

//வீனஸ் பெண்கள் வந்து பதிலுரைத்தால்தான் உண்டு.//

அவுக சொல்லிடுவாக..? அவுக காதல் தேவதையாச்சிங்களே ..!

கபீஷ் said...

test

Anonymous said...

இஸ்லாம் பத்தி நெறைய தெரிஞ்சிகிட்டேன்... நன்றி.

Post a Comment