22 மே 2010
இன்று காலை சிங்கை வந்து சேர்ந்தோம்; மாலையில் முதல் சந்திப்பு நடந்தது.
ஊரெங்கும் .. இல்லை .. இல்லை .. அந்த நாடெங்கும் பல நூலகங்கள் இருக்குமாம். அதில் ஒன்றான - ANG MO KIO - அங் மோ கியோ - என்ற நூலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அங் மோ கியோ என்றால் "(உடைந்த) தக்காளி" என்று பொருளாம்; அங்கு சிங்கப்பூரின் "வாசகர் வட்டம்" என்ற குழுவினரால் ஒரு அறிமுக - வாழ்த்துக் கூட்டம் நடத்தப் பட்டது. கூட்டம் நடந்த அறையின் பெயர்: தக்காளி அறை
தக்காளி அறைக்குள் செல்லும் முன் நூலகத்தை ஒரு பார்வையிட்டோம். தமிழுக்கென்று ஒரு தனிப் பகுதி. அப்பகுதியின் சில படங்கள் இங்கே ...
**
பின் எல்லோரும் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப் பட்டோம். வாசகர் வட்டத்தின் வரலாறும், வளர்ச்சியும் வாசகர் வட்டத்தின் திரு. இராம கண்ணப்பன் அவர்களால் விளக்கப்பட்டது.
ஜோசப் பால்ராஜ் அனைவரையும் வரவேற்றார். (படத்தில் இருப்பது போல் 'சோகமாக' அல்ல; மிக்க மகிழ்ச்சியாக ...!) வேறெங்கும் இல்லாத அளவு எப்படி இந்தப் போட்டியை சிங்கைப் பதிவர்கள் நடத்த முனைந்ததைப் பற்றிய என் கேள்விக்கு, எங்களின் நேரமும் வாய்ப்பும் கொடுத்த முனைப்பு என்றார். அதோடு அவர்கள் எல்லோரின் ஒருமித்த கருத்தும், மனதும் முக்கிய காரணிகளாக எனக்குப் பட்டன.
அடுத்து, ஜோ 'மணற்கேணி'யினைப் பற்றிய அறிமுகம் அளித்தார். பலராலும் மணற்கேணி என்ற பெயர் மிகவும் போற்றப்பட்டது. இந்த ஆண்டு நடத்திய போட்டி போலவே தொடர்ந்து நடத்தும் திட்டம் இருப்பதாகவும் கூறினார்.
முதலாண்டு பரிசு வாங்கியவர்கள் இரண்டாமாண்டில் வெற்றி பெற்றோருக்கு 'கைடு'களாக வரவழைக்கப்படலாமே என்ற என் கோரிக்கை (!!)அடியோடு நிராகரிக்கப்பட்டது. :(
வாசகர் வட்டத்தின் திருமதி சித்ரா ரமேஷ் மணற்கேணி இந்த ஆண்டுக்கு வெளியிட்ட
நினைவு நூலின் கட்டுரைகள் அனைத்தையும் பற்றிய தன் கருத்துக்களை தொகுத்தளித்தார்.
இந்த மணற்கேணி நூலினால், 'இணையப் பதிவர்களா'க இருந்த நண்பர்கள் இப்போது 'எழுத்தாளர்கள்' என்று promote ஆகிவிட்டார்கள்! மேலும் .. தொடர்ந்து .. வளர்க.
பரிசு பெற்ற மூன்று கட்டுரைகளின் அறிமுகமும், நடுவர்கள் அளித்த குறிப்புகளும் அதற்குப் பின் பரிசு பெற்றோரின் பதிலுமாகக் கூட்டம் தொடர்ந்தது.
முதலில் என் கட்டுரையை குழலி அறிமுகம் செய்வித்தார். இருபுற அலசல்கள், உணர்ச்சிகரமான அணுகல், நேற்றைய, இன்றைய நிலவரங்கள், வழக்குகள், புள்ளி விவரங்கள், pace ஆகியவை பற்றி குறிப்பிட்டார். இடப்பங்கீடு என்ற தலைப்பை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.
என் பதிலில் க்ரீமி லேயர் என்பது பிற்படுத்தப்பட்டோரின் கேள்வியாக இருக்க வேண்டும்; அந்த அளவிற்கு பிற்படுத்தப்பட்டோருக்கு இடப்பங்கீட்டின் முக்கியத்துவம் புரிய வேண்டும். ஆனால் இன்னும் அந்த நிலை வரவில்லை. இரண்டாவதாக, நியாயமான க்ரீமி லேயருக்கு என் பதிலை அளித்துள்ளேன். அதற்கு வாசகர்களின் கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு (இந்த நிமிடம் வரையிலும் கூட ) எந்த வித பதிலும் இதுவரை வரவில்லை என்று கூறினேன்.
அடுத்து மருத்துவர் தேவன்மாயத்தின் கட்டுரையை கோவி கண்ணன் ஆய்வு செய்தார். சரியான சொல்தேடலால், புரிதல் எளிதாகிறது என்பதிலிருந்து, நம் மேற்படிப்புகளைத் தமிழில் நடத்த முடியுமா என்ற வினாவையும் எழுப்பினார். இலங்கையில் மருத்துவம் தமிழில் சொல்லிக் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.
தேவன்மாயம் அறிவியல் சொல்லாடல்கள் பற்றிய விளக்கங்களை அளித்தார்.
மூன்றாவதாக, பிரபாகரின் கட்டுரையை முகவை ராம் அறிமுக செய்வித்தார். கட்டுரையில் தமிழ் இசையின் முழு வரலாறு, பக்தி இசை, இசையில் சமயங்களின் ஈடுபாடு, இசை ஆர்வலர்களின் அளிப்புகள், அரசியலின் தாக்கம் என்பவற்றைக் கூறி இசை நோக்கிய பயணத்தின் அடுத்த அடிக்குச் செல்லும் சிறப்பான கட்டுரை என்று கூறி முடித்தார்.
அதன்பின் நடுவரின் குறிப்புகளும் வாசிக்கப்பட்டன. பிரபாகர் தன் ஏற்புரையில் தான் கட்டுரையில் எடுத்துக் கொண்டவைகளைப் பற்றியும், இசையைப் பற்றிய பொதுப்பார்வையையும், தமிழிசையின் இன்றைய நிலைப்பாடுகள், வேறுபாடுகள் பற்றியும் அளித்தவையும், குட்டி musical demo-வும் அவையோரைக் கட்டி வைத்தது.
இறுதியாக 20 நூல்கள் வெளியிட்டிருக்கும் வாசகர் வட்ட திருமதி ஜெயந்தி சங்கரின் நூல்கள் பரிசு பெற்றோருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டன்.
இன்னும் கொஞ்சம் 'தக்காளி'ப் படங்கள் பார்க்க இங்கே வாருங்களேன் ...........
வேறு பதிவுகள்:
http://abidheva.blogspot.com/2010/06/blog-post_04.html
http://abidheva.blogspot.com/2010/06/2.html
http://dharumi.blogspot.com/2010/06/397-1.html
http://dharumi.blogspot.com/2010/06/400.html
22 comments:
பயணக்கட்டுரைகள் ஆரம்பமா? நடத்துங்க.. படங்கள் எல்லாமே தெள்ளத்தெளிவுங்க ஐயா..:-)))
மிகவும் அருமையாக பயண அனுபவங்களை தந்துள்ளீர்கள். புகைப்படங்கள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். பயணம் அடுத்து ....காத்திருக்கிறேன்.
படங்கள் அசத்தல்.
:)
நல்லத் துவக்கம். நாள்தோறும் நிகழ்வுகளாக தொடர்ந்து வெளிவருவதைப் படிக்க ஆவலாக உள்ளேன்.
தருமி அய்யா, படங்களுடன் எழுதியிருப்பது அருமை! இன்னும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்..
கலக்கல் .தொடருங்கள் வாத்தியாரே!
இடுகைக்கு நன்றி.
தெரிந்த முகங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.
அதிலும் தோழிகள் இருவரைப் பார்த்து கூடுதல் மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் ஜயா.
மதுரையின் புகழ் சிங்கையிலும்..
முன்னெடுத்து செல்லுங்கள் ஜயா..
தொடர்ந்து பயண கட்டுரைகளை நோக்கி...
போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்துக்கள்.
Start music
ம் .. ஆரம்பித்து விட்டீர்களா!!
தாங்களை சிங்கையில் கண்டதில் மகிழ்ச்சி.... நல்ல பகிர்வுக்கும் நன்றிங்க ஐயா,...
தருமி ஐயா,
கலக்கல்.. படங்கள் அருமை!
தங்களுடைய இடப்பங்கீடு கட்டுரை மூலம் நிறைய தகவல்கள், உண்மைகள் அறிந்துகொண்டேன்.
சிங்கையில் தங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
படங்கள் அசத்தல்.
தருமி அய்யா வணக்கம்.
படங்கள் நல்லாயிருக்கு.
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிகனும் ஐயா.
அருமையா ஆரம்பிச்சுருக்கிங்க. தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்கிறோம்.
நல்லது ஐயா...சிங்கப்பூர் சந்திப்பு அனுபங்களை மேலும் எழுந்துங்கள்..;-)
கா.பா.,
சரவணன்,
கோவீஸ்,
குசும்பன்,
ஜோ,
துளசி,
ஆப்பீசர்,
சங்கர்,
கணேஷ்,
ரவிச்சந்திரன்,
தேவன் மாயம்,
ஜோசப்,
ஞானசேகரன்,
பிரபு,
கருணாகரசு,
டொன்லீ
.............. அனைவருக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள்.படங்கள் அருமை. அறிக்கை வாசிக்காமல் அடுத்து வரும் பதிவுகளில் அமர்க்களப்படுத்துங்கள்.
வாழ்த்துக்கள்.படங்கள் அருமை. அறிக்கை வாசிக்காமல் அடுத்து வரும் பதிவுகளில் அமர்க்களப்படுத்துங்கள்.
வாழ்த்துக்கள்.படங்கள் அருமை. அறிக்கை வாசிக்காமல் அடுத்து வரும் பதிவுகளில் அமர்க்களப்படுத்துங்கள்.
ப்ரபா
//அடுத்து வரும் பதிவுகளில் அமர்க்களப்படுத்துங்கள்//
எப்பூடி ...?
Post a Comment