Monday, August 30, 2010

429. அமினா -- பொள்ளாச்சியில் பரிசளிப்பு விழா




*
முந்திய பதிவு காண ...
*

நான் ஒரு பெரிய  பொறாமைக்காரன். குறிப்பாக,  இசை, எழுத்து, ஓவியம் சார்ந்த படைப்பாளிகளைப் பார்த்தாலே ரொம்ப பொறாமையாக இருக்கும்.
ஏனெனில் நான் இசை கற்க முயற்சித்து தோல்வியடைந்தவன்.
எழுத ஆரம்பித்து தோல்வியடைந்தவன்.
படம் வரைய ஆரம்பித்து தோல்வியடைந்தவன்.
இப்படிப்பட்ட எனக்கு மொழியாக்க விருது என்றதும் நிரம்ப மகிழ்ச்சி. அதிகமானோர் மொழியாக்கமும் படைப்பாக்கத்திற்கு குறைந்ததல்ல என்று சொன்னார்கள். அதை 'ஒரு பக்கமாக' ஏற்றுக் கொண்டேன்!

11-ம் தேதி விழாவிற்கு 10-ம் தேதி மாலையே பொள்ளாச்சி சென்றோம். நல்ல விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அறை கிடைத்து அமைந்ததும் குறிஞ்சி வேலன் அறைக்கு வந்தார். தன் வாழ்வு, இலக்கிய வாழ்க்கை, திக்கு எட்டும் பற்றிய அவரது பணி, இது நாள் வரை இந்த விருது வழங்கும் விழாக்கள் என்று பலவற்றையும் பற்றிப் பகிர்ந்தார். 34 நூல்களுக்கு மேல் தானே மொழியாக்கம் செய்துள்ளதாகக் கூறியது எனக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது. நான் 'குட்டு' படப் போவது ஒரு நல்ல 'மோதிரக் கையால்' தான் என்றும் தோன்றியது.

விருது பெற்றோரும் ... அழைப்பிதழும்

நிகழ்ச்சி நிரல்

விழாவுக்கு வரப்போகும் பேச்சாளர்கள், விருந்தினர்கள்,விருது பெற்றோர்கள் பலரையும் பற்றிப் பேசினார். விருது பெற்றோர்கள் இருக்கும் பல துறைகள் பற்றியும் கூறினார். மிகுந்த படிப்பாளிகளையும், சாதாரண நிலையிலும் அவர்கள் இருப்பது பற்றியும் கூறினார். அவரவர் மொழியாக்கத் திறன் மட்டுமே அவர்களை விருது பெற தகுதியுள்ளவர்களாக ஆக்கியது பற்றியும், எப்படி இந்த திறனாய்வு நேர்முறையில் நடந்து வருவது பற்றியும் கூறினார். 

விருது பெற்றோர் பற்றிக் கூறும்போது ஷாஃபி என்ற கொத்தனார் தொழில் பார்த்து வரும் கேரளத்துக்காரர் பல கதைகளும், சாகித்திய அகாடமிக்காக ஒரு நூலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து, இப்போது தோப்பில் முகமது மீரானின் 'அனந்த சயனம் காலனி' என்ற நூலை மலையாளத்தில் மொழி பெயர்த்து அதற்கான விருது பெறுகிறார் என்றார்.  முகமது மீரான் எனக்கு எதிர் அறையில் இருப்பதாகவும், ஷாஃபி அடுத்த அறையில் இருப்பதாகவும் கூறினார். ஷாஃபியை முதலில் பார்க்க நினைத்தேன். 

வேலன் என்னிடம் விடை பெற்றுச் சென்ற சில நிமிடங்களில் ஷாஃபி தன் துணைவியாருடன் என் அறைக்கு வந்தார். முகமன் செய்து கொண்டோம். பெண்கள் இருவரும் பேசிக்கொள்ள மொழி  கொஞ்சம் தடைதான். இருப்பினும் நிறைய பரிமாறிக்கொண்டோம்.
விடுதியின் முன்னறையில் தங்ஸை விட்டு விட்டு சிறிது நேரம் வெளியே போய்விட்டு திரும்பி வந்த போது, தங்ஸ் இன்னொரு பெண்மணியிடம் நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தார். அவரும் இன்னொரு விருது பெற்ற பெண்மணி. கீதா சுப்ரமணியன் - நாஞ்சில் நாடனின் 'எட்டுத்திக்கும் மதயானை' என்ற நூலை ஆங்கிலத்தில் 'Against All Odds' என்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தமைக்காக விருது பெற வந்திருந்தார்.

ஷாஃபி, கீதா மணி இருவருமே இன்றும் தொடர்போடு இருக்கிறார்கள். அவர்களது நட்பு தொடருமென்றே விரும்புகிறேன்.

காலை நிகழ்வுகள்:

மாத்ருபூமியின் நிர்வாகியான திரு. விஜயகுமார் குனிசேரி அவர்கள் தலைமையில் இந்நிகழ்வுகள் நிகழ்ந்தன. மலையாளத்திலிருந்து தமிழுக்கு ப்ல நூல்களைத் தமிழாக்கம் செய்த இவர் ஏற்கெனவே திசை எட்டுவின் விருதினைப் பெற்றவர். மொழியாக்கத்தினைப் பற்றிய அழகான உரை ஒன்றை நிகழ்த்தினார். மூலத்தின் உட்கரு மட்டுமல்லாது அனைத்துப் பகுதிகளுமே முறையாக மொழியாக்கம் செய்யப்படுவதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். தமிழ் எழுத்தாளர் பாமாவின் பெயரைப் போடுவதில் கூட தான் எடுத்த சிரத்தை பற்றிக் கூறினார். பாமாவில் உள்ள 'பா' மலையாளத்தில் உள்ள pa, pha, fa, ba, bha .. இதில் எந்த வகை 'பா' சரியாக இருக்குமென்பதை அறிய பாமாவுடன் நடந்த உரையாடலைக் கூட குறிப்பிட்டார்.



திரு. குனிசேரி
மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவரின் தமிழ்ப்பேச்சு மிக இனிமையாக, நகைச்சுவையோடு அழகாக இருந்தது. எப்படி இப்படி இரு மொழிப் புலமை என்று தனியாகப் பேசும்போது கேட்டேன். மலையாளத்திற்கே தமிழ்தானே ஆரம்பம்;  தமிழுக்கு சேரர் என்ற முறையில் நாங்கள் மூன்றில் ஒரு பங்குக்காரர்தானே என்றார்!



பின்னர் விருது பெற்றோர் ஒவ்வொருவராக மாணவர்களும், விருந்தினர்களும் நிறைந்திருந்த அரங்கத்தில் பேச அழைக்கப்பட்டோம்.அரங்கு ஆரம்பித்ததே 11 மணிக்குத்தான். நடுவில் 12 மணிக்கு ஒரு தேநீர் இடை வேளை. நானும் அழைக்கப்பட்டிருந்த மாணவர்களில் பாதிப் பேராவது இந்த இடைவெளியில் 'தப்பி' விடுவார்கள் என நினைத்தேன்.முன்பிருந்ததை விடவும் அதிகமான மாணவர்கள் இடைவேளைக்குப் பிறகு வந்திருந்தது ஆச்சரியமே!


ஆர்.பி. சாரதி
விருது பெற்றோர் பேசும்போது ஒரு விதயம் புரிந்தது. ஏறத்தாழ விருது பெற்றோரில் பலரும் பல நூல்களை மொழியாக்கம் செய்திருந்தனர். அவர்கள் முன்னே நான் ஒரு தூசு என்று அப்போது நிஜமாகத் தோன்றியது. அனேகமாக திரு ஆர்.பி. சாரதி (குகா அவர்களின் 'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு) அவர்கள் மட்டும் என்னைப் போன்று ஒரே ஒரு படைப்பை மட்டும் படைத்திருப்பாரென நினைக்கிறேன். இவரைப் பற்றி ஒரு வார்த்தை; அனேகமாக விருது பெற்றோரில் மிகவும் வயதில் மூத்தவராக இவர் இருப்பாரென நினைக்கிறேன். ஆனால் வந்திருந்தோரில் நல்ல நகைச்சுவையுணர்வோடு பேசியவர் இவரே. தன்னை இப்பணிக்கு 'இழுத்துச் சென்ற' தன் மகனைப் பாராட்டினார். மகனுக்குப் புகழ் சேர்த்தார். அவரது மகன். பா. ராகவன்.

என் முறை வரும்போது  ...
விருது பற்றி அறிவிப்பு வந்ததும் நான் மிக மகிழ்ச்சி அடைந்தேன். ஆனாலும் மற்ற விருது பெற்றோரோடு ஒப்பிட்டால் என் நிலைமை என்னவென்று எனக்கு இப்போது நன்கு தெரிகிறது.

ஆசிரியனாக இருந்து ஓய்வு பெற்றதும் என் முன்னால் எப்போதுமிருந்த மாணவர் குழாம் இல்லாமல் போன வெற்றிடத்தை நிறைக்கவே ஒரு பதிவாளன் ஆனேன். இப்படி தமிழில் எழுதி கருத்துக்களைப் பரிமாற ஒரு வாய்ப்பு தமிழ் மணத்தால் கிடைத்தது. அந்த தமிழ்மணத்தை உருவாக்கிய திரு காசி அவர்களுக்கு என் நன்றி. பதிவுகளால் பரிச்சியமான எனக்கு ஒரு மொழியாக்க வாய்ப்பைக் கொடுத்த கிழக்குப் பதிப்பகத்திற்கும் அதன் உரிமையாளர் திரு. பத்ரி அவர்களுக்கும் என் நன்றி. என் மொழியாக்கத்திற்கு விருது கொடுத்து என்னை மேலும் ஊக்குவிக்கும் நல்லி - திசை எட்டும் குழுவிற்கும், திரு குறிஞ்சி வேலன் அவர்களுக்கும் என் நன்றி.














மதிய நிகழ்வுகள் ...
மதிய நிகழ்வுகளில் திசைஎட்டும் புரவலரான திரு. நல்லி குப்பு சாமி, விழா நடந்த என்.ஜி.எம். கல்லூரியின் புரவலரான திரு பி.கே. கிருஷ்ணகுமார், முன்னாள் மத்திய அமைச்சராகவும் மாத்ரு பூமி குழுவின் தலைவரான திரு. எம்.பி. வீரேந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி
டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ்
திரு. எம்.பி. வீரேந்திர குமார்
வீரேந்திரகுமாரின் பயண நூலான 'ஹைபவத பூவில்' என்ற நூலின் தமிழாக்கமான 'வெள்ளிப் பனிமலையின் மீது' என்ற நூலும் வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியர்: சிற்பி பால சுப்ரமணியன். 




விருது பெற்றோருக்கு பொன்னாடை (நல்லியிலிருந்துதான்), விருதுக் காசோலை என்ற மரியாதைகள் செய்யப்பட்டு விழா முடிவிற்கு வந்தது. முடியும் போது மணி ஏழினைத் தாண்டியிருந்தது.



அட ! பரிசா ? எனக்கா ..?!
கீதா - மணி - நாஞ்சில் நாடன்
ஷாஃபி
இரவு உணவு நேரத்தில் முகமது மீரானுடன் இருந்து உணவருந்தினோம். படைப்பாளிகளோடு இருந்த அந்த நேரங்கள் இனிதானவை.

முகமது மீரான்
திருமதி&திரு ஷாஃபி - மீரான் - சுப்ரபாரதி


சுப்ரபாரதிமணியன்

முகமது மீரானுடன் சுப்ரபாரதிமணியன் என்ற படைப்பாளியொருவரும் இவ்விழாவிற்காக வந்திருந்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக 'கனவு' என்னும் சிறு பத்திரிகையை நடத்தி வரும் இவர் மிகப்பல கதைகளும் கவிதைகளும் எழுதிவரும் எழுத்தாளர். இவர் ஒரு பதிவரும் கூட ...



 இன்னும் சில படங்கள் பார்க்க .....

முந்திய பதிவு காண ....



*

9 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.:-)))))))
எங்களைத்தான் வரக் கூடாதுன்னு சொல்லீட்டிங்க.:-((((((

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இனிமையான நிகழ்வைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி..
வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் ஐயா...:-)))

Thekkikattan|தெகா said...

தருமி அங்கே இருந்த பொழுது உங்களுக்கிருந்த மன நிலையை சொல்லுற விதத்திலேயே எனக்கே overwhelmingஆ இருக்கிற மாதிரி உணர வைச்சிருச்சு.

கலக்கிட்டீங்க, தருமி. மேலும் மேலும் பல சொந்த படைப்புகளையும், மொழியாக்க படைப்புகளையும் கொடுக்க வாழ்த்தி, விருது பெற்றமைக்கும் ஒரு சல்யூட்.

மதுரை சரவணன் said...

நல்ல பகிர்வு . விழாவிற்கு வந்தது போல உணர்வை எற்படுத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

மருத புல்லட் பாண்டி said...

விளம்பரம் ரொம்ப பிரமாதம்

கையேடு said...

வாழ்த்துகள்ங்க தருமி சார்.

Unknown said...

valthukkal,ungalukkulla ippadi oru tamilan ah?

meenal

தருமி said...

அது என்னங்க மீனாள்,
என் கூட பழகினவங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருது.. ?

Post a Comment