Tuesday, September 06, 2011

527. பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் பின் - 2

*
அப்பா ஊரிலிருந்து கிளம்பி அடுத்து அம்மாவின் ஊருக்கு - குறும்பலாப்பேரிக்கு - சென்றோம்.  நெல்லை -தென்காசி சாலையில், ஆலங்குளத்திலிருந்து ஏறத்தாழ 10-12 கி.மீட்டர் தாண்டி பாவூர்சத்திரம். அதிலிருந்து  ஓரிரு கி.மீட்டர் சென்றால் குறும்பலாப்பேரி. ஊரின் மேற்குக் கடைசியில் தாத்தா - பாட்டி வீடு. இப்போது மாமாவின் பிள்ளைகளின் குடும்பங்கள் இருக்கின்றன. கிராமத்தில் இருந்ததாலோ என்னவோ மாமாவின் பிள்ளைகள் பள்ளியோடு தங்கள் படிப்பை முடித்துக் கொண்டனர். ஆனால் தங்கள் பிள்ளைகளை நன்குப் படிக்க வைத்து சென்னையிலும், அமெரிக்காவிலும் ‘ஆணி பிடுங்க’ வைத்து விட்டார்கள் என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.

தாத்தாவின் பழைய வீட்டில் எனக்குப் பிடித்த இடமே கீழே காணும் வாசல்தான். புதிய சாலைகள் வீட்டுப் படிகளின் உயரத்தைக் கபளீகரம் செய்து விட்டன. மூன்று நான்கு படிகள் சாலைகளில் முங்கி விட்டன போலும். அதன் பின் பூச்சு ஏதுமின்றி இருந்த நுழை வாயில் இப்போது பெரிதும் மாறி வண்ணக்
பழைய வீட்டின் நுழைவாயில்
கலவையோடு நிற்கின்றன. அதனால் முன்பு ‘தர்பார்’ போன்று காட்சியளித்தது இப்போது இல்லாமல் போய்விட்டது. ஆனால்  உள்ளே பழைய வீடுகள் வரலாற்றுச் சின்னங்களாக ஆகிவிட்டன.அழகிய புதிய வீடுகளைக் கட்டிக் கொண்டதால் பழைய வீடு இன்னும் பழமையோடு நிற்கின்றன.  சின்ன வயதில் எனக்குப் பிடித்த மாடியில் உள்ள வளைவுகளும், தூண்களும் இப்போது சிறிது செம்மைப் படுத்தப் படுகின்றன.

மாடி
வீட்டிற்கு வெளியே பூட்டன்-பூட்டியின் சமாதிகளைச் சுற்றி மனோரஞ்சிதச் செடிகளும், ஏனைய செடிகளும் முன்பு நிறைந்திருந்தன. பக்கத்தில் இருந்த கிணறு இப்போது பயன்படுத்தப் படாததால் இப்போது அந்த தோட்டம் காய்ந்து

பூட்டையா & பூட்டி சமாதி
பிள்ளையார் கோவில்
போய் நிற்கின்றது. நல்ல நிலையில் இருந்த போதே அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்க எனக்குப் பயம். இம்முறை மிகவும் ‘பாதுகாப்பாக’ நின்று கொண்டு கிணற்றை எட்டிப் பார்த்தேன். குப்பையும் கூளமும் அடிவாரத்தில் சிறிதே நீரோடு இருந்தது. 




பூட்டனாருக்கு மிக்க தெய்வ பக்தி இருந்திருக்குமென நினைக்கிறேன். பழைய வீட்டிற்குள்ளேயே  பெரிய திண்ணையோடு ஒரு  கோவில்; வீட்டிற்கு வடக்குப் பக்கம் ஒரு உயரமான பிள்ளையார் கோவில். மற்றொன்று ஊருக்கு நடுவில் பத்திரகாளியம்மன் கோவில். இந்தக் கோவில் பூட்டையாவின் பெயரிலேயே இன்றும் இருப்பதாகச் சொன்னார்கள்.

படத்தில் பார்க்கும் பிள்ளையார் கோவிலில் மண்டபப் பகுதி மட்டுமே இன்றும் முழுமையாக இருக்கிறது. கோவிலுக்கு முன்னால்  ஓடு போட்ட ஒரு நீண்ட திண்ணை இருந்தது. சிறு வயதில் இங்கு வரும்போது நிழலில் அசந்து தூங்கும் மக்கள், ஆடு-புலி ஆட்டம் ஆடும் மக்கள், ஊர்க்கதை பேசும் மக்கள் என எப்போதும் அந்த திண்ணை நிறைந்திருந்தது. காலம் திண்ணையைக் காப்பாற்றவில்லை போலும். இப்போது வெறும் கல்தூண்களோடு மட்டும் நிற்கின்றன.


மண்டபத்தின் இரு வெளித் தூண்களிலும் பூட்டையா - பூட்டியின் சிலைகள் இருக்கின்றன. பூட்டையாவின் மீசை .. ம்ம் .! சிவப்பழமாக இருந்திருப்பார் போலும். உடலெங்கும் உத்திராட்சக் கொட்டை மாலைகள். பூட்டியின் மூக்குதான் சிறிது சிதைபட்டு இருக்கிறது.




பூட்டன்





பூட்டி
ஊருக்கு நடுவேயுள்ள பத்திரகாளியம்மன் கோவில் பெரிதாக உள்ளது. இங்கு புரட்டாசி மாதம் விழா எடுப்பார்களாம். அன்று கோவிலின் முதல் மரியாதை இன்றும் மாமா குடும்பத்தினருக்கு நடக்குமாம்.
பத்திர காளியம்மன் கோவில்



தாத்தா வீட்டிற்கு மேற்குப் பக்கம் வெறும் புளியம் விளை ஒன்றிருந்தது. வறண்ட பூமியாகத்தான் அதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அது பச்சைப் பசேலென்று அழகான தோட்டமாக மாறியிருந்தது. தோட்டத்தில் ஒரு கிணறு, ஆனால் இந்தக் கிணறு பட்டினங்களில் sump  கட்டுகிறார்களே அதே போல் பயன்பட்டு வருகிறது. சற்று தள்ளி எப்போதும் ஊற்றெடுக்கும் மற்றொரு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து இந்தக் கிணற்றுக்கு குழாய்

பழைய புளியந்தோப்பு
மாமா மகன்


வழியே வந்து விழுகிறது. தேவைப்படும் போது இக்கிணற்றிலிருந்து தோட்டத்திற்குத் தண்ணீர்  பாய்கிறது. வெங்காயமும், மிளகாயும் நன்கு காய்த்திருந்தன.
இன்றைய தோப்பு
ஊரும், உறவினரும், தோட்டமும் துறவும் நன்கிருந்ததைப் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சி.  விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் பிள்ளைகள் தோட்டத்தில் உடன் வந்து துணை செய்வதைப் பெருமையுடன் பகிர்ந்து கொள்ளும் பெற்றோரைப் பார்த்ததும் மகிழ்ச்சியே.

பட்டினங்களில் வீடு கட்டும்போது முதல் வேலையாக ஒரு architect பார்த்து வீட்டுப் படம் தயாரிக்கிறார்கள். ஆனால் அம்மா ஊரில் நிறைய புதிய கட்டிடங்கள். well designed houses. யாருப்பா உங்க architect? என்றேன். அப்படியெல்லாம் யாரும் கிடையாது; எல்லாம் எங்கள் ப்ளான் தான் என்றார்கள். உறவினர்கள் வீடுகள் மட்டுமல்லாது ஊரில் பார்த்த பல வீடுகளும் மிக அழகாகக் கட்டப்பட்டிருந்தன. வீட்டின் சுற்றுச் சுவர்களில் கூட அந்த அழகு தெரிந்தது. வீடுகள் எல்லாமும் பல வண்ணக் கலவைகளோடு, பட்டினத்து வீடுகளுக்குப் போட்டியாக நின்றன.பழைய கட்டுமானக் கலை இன்னும் அங்கே செழிப்பாக நிற்கின்றது.


*

குறும்பலாப்பேரி பற்றிய வேறு சில பதிவுகள்:

DAYS AT KURUMBALAPERI

KURUMBALAPERI DAYS - CONTINUED


*

8 comments:

SURYAJEEVA said...

வரலாற்றில் உங்கள் ஊர் விவரத்தை பொறித்தாகி விட்டது.. வரவேற்கத்தக்கது..

naren said...

nice photos - conveyed much more than words.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல விவரணை . வாய்ப்பிருந்தால் உங்கள் ஊரை ஒருமுறை பார்க்க வேண்டும்.

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!! அந்த மாடி அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுதே!!!!!

கோவிலெல்லாம் கட்டி இருக்கார் பூட்டன். ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்க. நேரில் பார்க்கவும் ஆவல். நான் சொல்றது அந்தக் கோவிலை:-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடடா? நீங்கள் கொடுத்துவைத்தவர். அத்தனையையும் பார்க்கவேண்டும் போலுள்ளது.எல்லாம் பளிச்சென குறிப்பாக கோவில் மிகச் சுத்தமாகப் பேணப்படுவது , பிரபல கோவில்களில் காணமுடியாதவை.
தமிழகம் கிராமங்களில் வாழ்வதை 2 தரம் வந்தும் நான் உணரவில்லையென வருந்துகிறேன்.

Unknown said...

குறும்பலாப்பேரி my native

தருமி said...

google + போனா பயங்கர போஸ் இருக்கு.
//குறும்பலாப்பேரி my native//.... அதுக்கு மேல சொல்ல ஒண்ணும் இல்லியா?
போட்டோவில் போட்டிருக்கிற கோவில், வீடு எல்லாம் தெரியுமா?

renovatally said...

Thennarasu pauldurai

Post a Comment