Thursday, October 27, 2011

532. WHY I AM NOT A CHRISTIAN ... 1
*
அடுத்த 2-ம் பதிவு ...

WHY I AM NOT A CHRISTIAN 
and other essays on religion and related subjects

First published in 1957

*


பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்  - 1872 - 1970


* போர்களுக்கும் காலனியாதிக்கத்திற்கும்  எதிராகக் குரல் கொடுத்தவர். 
* ஹிட்லருக்கு எதிரான கருத்துப் போராட்டத்தை நடத்தியவர். 
* அமெரிக்காவின் வியட்நாம் யுத்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர்; 
* அணுகுண்டு அழிப்புக்கும்  குரலெழுப்பியவர்.

மனிதப் பண்பாடுகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் அவர் எழுதிய இலக்கியத்திற்காக 1950-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.  

*
Richard Dawkins  நூலில் பார்த்தது போலவே இந்நூலிலும் கிறித்துவத்திற்கு என்று சொல்லப்படும் பல கருத்துக்கள் ஆப்ரஹாமிய மதங்களுக்கும் பொதுவானது என்றே கொள்ள வேண்டும்.


CHAPTER I
WHY I AM NOT A CHRISTIAN

மக்கள்  பலரும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதற்கான காரணம் சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு அந்த நம்பிக்கை கற்றுக் கொடுக்கப்படுகிறது.

‘வலது கன்னத்தில்  அடித்தால் அடுத்த கன்னத்தைக் காண்பி’ - இது ஒன்றும் புதியதல்ல.கிறிஸ்துவிற்கு ஐந்து, ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே புத்தரும், Lao-Tze-வும் சொன்னவைகளே. (20)

’உன் சொத்துகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து விடு’  - நல்ல கோட்பாடு; ஆனால் வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத ஒன்று. (21)

கிறிஸ்துவின் நல்லொழுக்கக் கோட்பாடுகளில் எனக்கொரு ஐயம். அவர் நரகத்தை நம்பினார். ஆனால் மனிதத்தன்மையுள்ள எவரும் அப்படியொரு கால வரையற்ற தண்டனையை நம்ப முடியாது. 

அவருடைய போதனைகளுக்கு எதிராகச் செல்லும் எவருக்கும் இத்தகைய கொடூரமான நீண்ட தண்டனை என்பது கிறித்துவின் உயர் பண்புகளுக்கு எதிரானதாக இருக்கிறது. (22)

பாவங்களுக்கான சம்பளம் நரகம் என்பது கொடூரத்தின் உச்சம். கிறிஸ்துவின் இந்தக் கோட்பாடு உலகத்தின் வரலாற்றில்  நடந்த பல வன்முறைகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது.

அத்தி மரத்தை நோக்கிப் பசியோடு வந்த ஏசு அங்கே வெறும் இலைகளே இருப்பதைக் காண்கிறார். கோபமுற்று ‘இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்; உன் கனியை இனி யாரும் உண்ணவே கூடாது’ என்று சாபமளிக்கிறார். பின்னால் வந்த சீடர்கள் அம்மரம் அவரது சாபத்தால் பட்டுப் போனதை அவரிடம் சொல்கிறார்கள். (மத் : 21; 19;  மாற் : 11 : 14)  விநோதமான கதை இது. தவறான கால கட்டத்தில் கனி கொடுக்கவில்லையென்று மரத்தைக் கோவிப்பதா?

அறிவு சார்ந்த விஷயத்திலோ, பண்பாட்டு விஷயத்திலோ வரலாற்றில் வரும் பலரோடு சேர்த்து வைத்துப் பார்க்கும்போது கிறித்துவிற்கு உயர்ந்த இடம் கொடுக்க முடியவில்லை; புத்தரையும் சாக்ரட்டீஸையும் இதைவிட உயர்ந்த இடத்தில் வைக்கலாம். (24)

நம்பிக்கையோடு இருப்பவர்கள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; ஏனெனில் அவர்களது நம்பிக்கைகள் எல்லாமே உணர்ச்சி வசப்பட்டவை. (emotional)
ஆசிரியர் Samuel Butler எழுதிய Erewhon Revisited என்ற அங்கத நாவலின் கதையைக் கூறுகிறார். நல்ல கதை. குட்டிக் கதையாக, இங்கே இருப்பதை வாசித்துப் பாருங்கள். நமது நம்பிக்கைகளின் பிறப்பிடத்தின் ‘ரகசியம்’ புரியும்!

கிறித்துவ நம்பிக்கைகள் இல்லாதவர்கள் மிகவும் கெட்டவர்களாக இருப்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை. ஆனால் மத  நம்பிக்கையுடையவர்கள்தான் அனேகமாக அப்படிப்பட்ட கெட்டவர்களாக இருப்பார்களென நினைக்கிறேன்.

உங்களைச் சுற்றிப் பார்த்தால் உலகத்தில் ஒவ்வொரு மனித உணர்வுகளின்  முன்னேற்றத்திற்கும், குற்றத்தடைச் சட்டம் ஒவ்வொன்றின் முன்னேற்றத்திற்கும், நமக்குள் நடக்கும் யுத்தங்களைக் குறைக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கும், நிறவெறிகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கும்,   அடிமைத்தனத்தை ஒழிக்க எடுக்கப் படும் செயல்களுக்கும், பண்பாட்டு முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கும் கிறித்துவ மதம் எதிர்ப்பாகவே இருந்து வந்துள்ளது. கோவில்கள் மூலமாக இயங்கும் கிறித்துவ மதம் இப்பொதும் எப்போதும் உலகின் பண்பாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளது என்று நான் துணிந்து சொல்வேன்.

மதங்களின் முதல் முக்கியமான அடிப்படையே அச்சம் தான். புரியாதவைகளின் மேலுள்ள அச்சம் பாதியென்றால், அடுத்த பாதி நம் ‘பெரிய அண்ணன்’ ஒருவர் நமக்குத் தோள் கொடுக்க இருக்கிறார் என்ற நினைப்பும் ஒரு காரணமாயுள்ளது. (25)

*

CHAPTER II

HAS RELIGION MADE USEFUL CONTRIBUTIONS TO CIVILIZATIONS?

சமயங்களைப் பற்றிய என் கருத்துக்கள் Lucretius என்ற ரோமானிய தத்துவ ஞானியின் கருத்தோடு ஒன்றிப் போகிறது. சமயங்கள் பயத்தின் அடிப்படையில் பிறந்து மனித  குலத்திற்கு சொல்ல முடியாத மிகுந்த சோகங்களைத் தந்துள்ளன. ஆனாலும் மனித நாகரீகத்திற்கு அவைகள் பங்களித்திருக்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. (27)

கிறித்துவம் பெண்களின் சமூக நிலையை மேலேற்றியதாகக் கூறுவதுண்டு; ஆனால் இது வரலாற்றை மிகவும் திரிக்கும் செயலாகும். (29)

ஏறத்தாழ ஒவ்வொரு கிறித்துவனும் சிறு வயதில் பாலியல் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட தடைகளால் முதிய வயதில் மனக் கோளாறுகளோடு இருப்பதுண்டு. பாலியலைப் பற்றிய செயற்கையான கருத்துக்கள்  மனித மனத்தில் கடுமை, அச்சம், மடத்தனம் போன்றவைகளை முதிய வயதில் ஏற்படுத்துகின்றன. (30)

ஒரு மனிதன் என்ன தவறு செய்வான் என்பது கடவுளுக்கு முன்பே தெரியுமென்றால்,  அப்படி ஒருவனைப் படைத்ததற்கும், அந்த மனிதன் செய்யும் எல்லா தவறுகளுக்கும் கடவுள் தானே பொறுப்பு. 

உலகத்தில் மனிதனுக்கு வரும் துன்பங்கள் எல்லாமே அவனை தூய்மைப்படுத்துவதற்காக; ஆகவே துன்பங்கள் நல்லதே என்பது ஒரு கிறித்துவ விவாதம். ஆனால் இது ஒரு கொடுமையை அறிவுக்குப் பொருத்தமாக்கும்  (rationalization of sadism) முயற்சியேயொழிய வேறில்லை.


சமயங்களுக்கு எதிராக இரு வாதங்கள் உண்டு: ஒன்று அறிவு சார்ந்தது; மற்றொன்று பண்பாடு சார்ந்தது. அறிவு சார்ந்த எதிர்ப்பில் சமயங்கள் உண்மையென்று சொல்ல  சான்றுகள் ஏதும் இல்லை. பண்பாடு சார்ந்து எழும் விவாதத்தில்,  இப்போதிருக்கும் மனிதனை விட மிகவும் கொடூரமாக மனிதக் கூட்டம் இருந்த போது சமயங்கள் ஆரம்பித்தன. அப்போதிருந்த மனிதத் தன்மையற்றவைகளையும், இப்போதைய மனசாட்சிக்கு எதிரானவைகளையும் சமயங்கள் தொகுத்துக் காத்து வருகின்றன. (31)

மெக்ஸிகோவிலும்,. பெருவிலும் ஸ்பானியர்கள்  செவ்விந்தியர்களின் இளம் கைக்குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் (கிறித்துவத்திற்குள் கொண்டு வருதல்) கொடுத்து, உடனே அந்தக் குழந்தைகளைத் தரையிலடித்துக் கொன்று விடுவார்கள். அவர்கள் கொல்லும் குழந்தைகளுக்கு நேரே மோட்சம் ! அப்போதிருந்த அடிப்படை கிறித்துவனுக்கு அது தவறாகப் படவில்லை. ஆனால் இன்றைய நிலையில் எல்லோருக்கும் இது தவறு.

கிறித்துவத்தில் ஆன்மாவையும் உடலையும் பிரித்துப் பார்க்கும் முறையால் மிகவும் மோசமான விளைவுகள் நிகழ்ந்தன. (34)

யூதர்கள் தங்களின் நேர்மைத்தனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கைகளும், தங்கள் யூதக் கடவுளே சரியான கடவுள் என்ற நம்பிக்கையும் தொடர்ந்து வருகின்றன. கிறித்துவ மதம் பரவிய காலந்தொட்டு மற்ற சமயங்கள் உண்மையல்ல என்ற சமய அடிப்படைவாதம் உலகந்தொட்டு வளர ஆரம்பித்தன. 

யூதர்களும் அதிலும் முக்கியமாக  தூதர்களும் தங்கள் நேர்மைத்தனத்தின் மீதான கடும் பிடிப்போடும், தங்கள் மதத்தைத் தவிர வேறு எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை கொள்வதைத் தாங்க முடியாதவர்களாகவும் இருந்தார்கள்.

நம் உலகம் உருவானது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்றால் இப்போது யாரும் நம்புவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இதை நம்பாதது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. (35)

FREE-WILL - சுயாதீனம்:
இயற்கை நியதிகளின் மீதான கிறித்துவர்களின் எண்ணங்கள் நிச்சயமற்றதாகவும், பெரிதும் உறுதியற்றதாகவும் இருந்தன. சுயாதீனம் (free-will) என்பதையே பெரும்பாலான கிறித்துவர்கள் நம்பினார்கள்.  இந்த சுயாதீனத்தால் மனித குலம் இயற்கை நியதிகளுக்கு உட்பட்டவர்கள் அல்ல என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. (36)

சுயாதீனத்தைப் பற்றிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே நிற்கின்றன. யாரும் நடப்பியல் வாழ்க்கையில் அதை நம்புவதாக இல்லை. (37)

கார் ஒன்று கோளாறாகி நின்றால் அதை ஒரு பாவமாகப் பார்ப்பதில்லை; அதில் என்ன தகராறு என்று பார்ப்பதே இயல்பு. அதை விட்டு விட்டு ’இந்த கார் பாவம் செய்து விட்டது’ என்று கூறுவதில்லை. அதைப் போலவே ஒரு மனிதனையும் பார்க்க வேண்டும் என்பது சமயங்களுக்கு எதிரான ஒரு கொள்கையாகப் பார்க்கப்படுகிறது. (38)

ஆபிரஹாமிய மதத் தூதுவர்கள் சொல்வதெல்லாம் உண்மை; ஜெஹோவாவின் எண்ணமும் அதுவே என்று சொல்வதுண்டு. (’இது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நல்லது என்று தெரியும்’. நடவடிக்கை: 25:28) இன்னொரு தூதுவர் வந்ததும் முந்திய தூதர்களின் வார்த்தைகளை விட என் வார்த்தைகளே சரியானவை என்று சொல்வதும் கண்கூடு. (40)

கிறித்துவத்தில் அறிவு பாவமாக முந்திய காலத்தில் பார்த்தைப் போல் இப்போது பார்க்கப்படுவதில்லை. ஆனாலும் அது பாவமில்லாவிட்டாலும் அது ஆபத்தானது; ஏனெனில், அறிவு ஒருவனைப் புத்திசாலியாக்குகிறது; அதன் மூலம் அவன் கிறித்துவக் கொள்கைகளை கேள்வி கேட்கலாம்.(41)

சமயங்கள் பகுத்தறிவான படிப்பினையைக் குழந்தைகளுக்கு மறுக்கின்றன; சமயங்கள் பழைய பழக்க வழக்கங்களை, பாவம் தொடர்பான கருத்துக்களை,  தண்டனைகளைவிடாது பிடித்துக் கொண்டு, புதிய, அறிவியலோடு தொடர்புள்ளவைகளைத் தெரிந்து கொள்ள விடாது தடுக்கின்றன. 

மனித குலம் ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் நுழை வாயிலில் நிற்கிறது. ஆனால் அதில் நுழைவதற்கு முன் ஒரு பெரிய ராட்சத மிருகத்தைக் கொல்ல வேண்டியதுள்ளது. அந்தக் கொடிய மிருகம் நமது சமயங்களே.


*142 comments:

சார்வாகன் said...

வணக்கம் அய்யா!!!!!
அருமையான தொடக்கம்.தொடர்கிறேன்.
நன்றி

சார்வாகன் said...

பெர்டினான்ட் ரஸ்ஸல் ஒரு கணித மேதை என்பது பலருக்கு தெரியாது.அவர் எழுதிய பல புத்தகங்கள் இந்த இணைப்பில் கிடைக்கின்றன.

http://www.users.drew.edu/~jlenz/brtexts.html

http://www.positiveatheism.org/index.shtml

அ. வேல்முருகன் said...

அருமையான விளக்கங்கள். என்னதான் எடுத்துச் சொன்னாலும், அவனின்றி அணுவுமில்லை என சொல்லி விட்டு செல்லும் மனிதர்களை.........

பரவாயில்லை சில காலம் பிடிக்கத்தான் செய்யும், மாற்றுவோம்

suvanappiriyan said...

ஆஹா... அடுத்த ஆட்டம் ஆரம்பிச்சாச்சா....

//அத்தி மரத்தை நோக்கிப் பசியோடு வந்த ஏசு அங்கே வெறும் இலைகளே இருப்பதைக் காண்கிறார். கோபமுற்று ‘இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்; உன் கனியை இனி யாரும் உண்ணவே கூடாது’ என்று சாபமளிக்கிறார். பின்னால் வந்த சீடர்கள் அம்மரம் அவரது சாபத்தால் பட்டுப் போனதை அவரிடம் சொல்கிறார்கள். (மத் : 21; 19; மாற் : 11 : 14) விநோதமான கதை இது. தவறான கால கட்டத்தில் கனி கொடுக்கவில்லையென்று மரத்தைக் கோவிப்பதா?//

இந்த கதையை படிக்கும் போதே பவுலோ அல்லது கிறித்துவின் கொள்கைக்கு எதிரான ஒருவரோ ஏசுவின் பெயரால் கட்டி விடப்பட்ட புனைவு என்பது விளங்குகிறது. இறைவனின் தூதர் இதுபோன்ற ஒரு வார்த்தையை அதுவும் மரத்தை நோக்கி கேட்பாரா?

//ஏறத்தாழ ஒவ்வொரு கிறித்துவனும் சிறு வயதில் பாலியல் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட தடைகளால் முதிய வயதில் மனக் கோளாறுகளோடு இருப்பதுண்டு. பாலியலைப் பற்றிய செயற்கையான கருத்துக்கள் மனித மனத்தில் கடுமை, அச்சம், மடத்தனம் போன்றவைகளை முதிய வயதில் ஏற்படுத்துகின்றன. (30)//

சிறு வயது முதலே கிறித்துவர்களை விட கண்டிப்போடு வளர்க்கப்படும் பல இஸ்லாமிய இளைஞர்கள் திருமணத்துக்கு பிறகே முதன் முறையாக மனைவியோடு கூடுகிறார்கள். இவர்கள் யாரும் மனச்சிதைவுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு உட்காரவில்லை.

மதமே வேண்டாம் என்று எந்த கட்டுப்பாடும் இன்றி அமெரிக்காவில் தெருக்களில் அலைந்து திரியும் பல இளைஞர்கள்தான் இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனவே மனதை ஒரு நிலைப் படுத்த தியானம் அவசியமாகிறது. அதற்கு மார்க்கமும் உறுதுணையாக இருக்கிறது.

தருமி said...

//இந்த கதையை படிக்கும் போதே பவுலோ அல்லது கிறித்துவின் கொள்கைக்கு எதிரான ஒருவரோ ஏசுவின் பெயரால் கட்டி விடப்பட்ட புனைவு என்பது விளங்குகிறது.//

அதாவது, இது ஒரு weak ஹதீஸ் மாதிரி என்கிறீர்கள்; இல்லையா?

தருமி said...

//மதமே வேண்டாம் என்று எந்த கட்டுப்பாடும் இன்றி அமெரிக்காவில் தெருக்களில் அலைந்து திரியும் பல இளைஞர்கள்தான் இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். //

சாரி’ங்க .. அங்க நானெல்லாம் அப்படி யாரையும் பார்க்கவில்லை’ங்க!

வால்பையன் said...

ஆரம்பிக்கட்டும் அடுத்த இன்னிங்ஸ்

தருமி said...

//அருமையான தொடக்கம்.//

//அடுத்த ஆட்டம் ஆரம்பிச்சாச்சா....//

//ஆரம்பிக்கட்டும் அடுத்த இன்னிங்ஸ் //

மூவருக்கும் நன்றி.

வேல்முருகன், நன்றி

Anna said...

நல்ல தொடக்கம். Looking forward to reading the series.

இந்த சுயாதீனத்தைப்பற்றி நானும் சில கிறீஸ்தவ, இஸ்லாமியருடன் வாதாடியுள்ளேன். யாரும் இதுவரைக்கும் திருப்தியான பதில் தரவில்லை. இவர்கள் சொல்வது போல் கடவுள் எல்லாம் வல்லவன், எல்லாம் தெரிந்தவன் என்றே வைத்துக் கொள்வோம். நான் அடுத்த நிமிடம் ஒருவரைக் கொலைசெய்யப் போகிறேன் எனில் நான் அவ்வாறு செய்யப் போகிறேன் என எனக்குத் தெரிவதற்கு முதலே கடவுளுக்குத் தெரிந்திருக்கும் - அப்படியாயின் என் செயலுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? And also If I went to someone with the intention of killing him/her (as god decided I would do), can I change my mind at the last minute? Would god know about it? If he didn't know about it, கடவுள் எல்லாம் தெரிந்தவனாக இருக்க முடியாது. If he knew about it all along, I wouldn't be responsible for my action, as he was the one who created me and decided what paths I would take in life. இப்படித் தான் எல்லோரது வாழ்வும் இருக்குமென கடவுள் ஏற்கனவே தீர்மானித்திருப்பின் நாம் யாருமே எமது செயல்களுக்குப் பொறுப்பாக முடியாது. கடவுள் எக்காலத்தில் என்ன நடக்குமென எல்லாம் தெரிந்தவன் எனில் யாருக்கும் சுயாதீனம் இருக்க முடியாது.

Just to clarify, இதெல்லாம் கடவுள் இவ்வாறிருந்தால் (IF) எனும் hypothetical arguments ஏ). கடவுள் இருக்கிறார் என்பதற்கு இன்னும் ஆதாரம் இல்லை. And we are back to square one again. This is fun :).

Anonymous said...

நல்லது

சார்வாகன் said...

ஸ்லாம் நண்பர் சுவனப் பிரியன்,

/சிறு வயது முதலே கிறித்துவர்களை விட கண்டிப்போடு வளர்க்கப்படும் பல இஸ்லாமிய இளைஞர்கள் திருமணத்துக்கு பிறகே முதன் முறையாக மனைவியோடு கூடுகிறார்கள்./
நீங்கள் கூறிய விஷயம் ஒரு நம்பிக்கை சார்ந்த கருத்து மட்டுமே.இதனை ஏதேனும் புள்ளி விவரம் சார்ந்து கூறினீர்கள் எனில் அதனை தரலாம்.ஒரு மதத்தை மிக சரியாக பின் பற்றுபவர் அனைவரும் ஒழுங்காக(?) இருப்பாபார்கள் என்பது உண்மையா? இது குறித்து எப்படி அறிவது? ஒழுக்கம் என்பதற்கு சரியான வரைமுறை என்ன? ஏனெனில் ஒரு மதக் கோட்பாட்டின் படி ஒரு நாட்டில் அனுமதிக்கப் பட்ட ஒழுக்கம் இன்னொரு நாட்டில் தடை செய்யப் பட்ட குற்ற செயல் ஆகிறது.

கண்டிப்பு என்பது குடும்பம் சார்ந்த விஷயம்.இதனை பொதுப்ப்டையாக கூற முடியாது. கண்டிப்பு மட்டும் ஒருவரை நல்வழிப் படுத்துமா?. எனினும் பிற மதத்தவரை விட இஸ்லாமிய இளைஞர்கள் குறைந்த வயதிலேயே திருமணம் முடிப்பது நீங்கள் கூறிய விஷயத்தை ஒரு அளவிற்கு உண்மை படுத்தும்.

நீங்கள் கூறிய கருத்துக்கு மட்டும் விளக்கம் கூறினேன் மற்றபடி இப்போது இது வேற விளையாட்டு நல்லா பைபிள் படிச்சுட்டு வாங்க!!!!!!!!!.பார்க்கலாம்!!!!
நன்றி

தருமி said...

the analyst,
நீங்கள் சொன்ன விஷயங்களைப் பற்றிய என் கருத்து இங்கே.

Bibleunmaikal said...

GO TO THE LINK BELOW TO READ


பைபிளில் உள்ளவை. ஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....

.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//மதமே வேண்டாம் என்று எந்த கட்டுப்பாடும் இன்றி அமெரிக்காவில் தெருக்களில் அலைந்து திரியும் பல இளைஞர்கள்தான் இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.//

ஓ! இப்படிப்பட்ட அமெரிக்காவிற்கா உங்க ஷேக் "துரை" போய்ட்டாருன்னு ஒரு ஆச்சரியம்தான்!

//பணத்தை சில நேரங்களில் கூடுதலாகவே கூட நோயாளிகளிடம் கறந்து விடுகின்றனரே!//

ஓ! இப்படிப்பட்ட அமெரிக்காவிற்கா "உங்க ஷேக் துரை" போய்ட்டாருன்னு ஒரு ஆச்சரியம்தான்!

naren said...

ஒரு மனிதனுக்கு இவ்வளவு ஆற்றல் இருக்க முடியுமா? எனறு Bertrand Russel பார்த்தால் கேள்விதான் எழும்.

அருமையான தொடக்கப் பதிவு தொடரட்டும், அவருடைய தத்துவம், பதிவுகள் மூலம் அறிய முடியும்.

பாவம் ரஸ்ஸல் ஐயா, அவருடைய காலத்தில், பைபிலில் எது உண்மையான வசனம் எது இல்லை என்று சொல்லித்தரும் “பைபில் வசன கலை”, இல்லை. தற்போது அவர் இருந்திருந்தால், அந்த கலையை பற்றி “அண்ணன்” களிடம் பாடம் கற்றிருப்பார்.

அந்தப் புத்தகத்தில் சுயாதீனம் பற்றி மேலதிக விவரம் இருந்தால் தரவும்.

Anonymous said...

அன்புள்ள தருமி,
உங்கள் மீது ஏக்க அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் (காப்பிரைட் முஸ்லீம்கள்) நிலவட்டும்.

முதலில் ஈஸா நபி அல்லாஹ்வின் இறைதூதர் என்று அறிவியற்பூர்வமாக நிரூபிக்கிறேன். ஈஸா நபி எந்த இடத்திலும் அல்லாஹ் என்ற ஒருவார்த்தை கூட சொல்லவில்லை என்றாலும் அவர் அல்லாஹ்வின் தூதர்தான். அவருக்கு அரபி மொழியே தெரியவில்லை என்றாலும் அவர் அல்லாஹ்வின் இறைதூதர்தான். தன்னை இறைதூதர் என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்றாலும் அவர் அல்லாஹ்வின் இறைதூதர்தான். ஆதாரம் வேண்டுமா? அல்குரானை படியுங்கள். படித்துவிட்டீர்களா? அவ்வளவுதான். அல்குரானிலேயே அல்லாஹ்வின் இரைதூதர்தான் ஈஸா நபி என்று இருக்கிறதல்லவா? இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?

அப்புறம் இந்த பஹாவுல்லா, குலாம் அஹ்மது எல்லாம் தங்களையும் அல்லாஹ்வின் இறைதூதர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் இறைதூதர் இல்லை. அதற்கு ஆதாரம் என்ன என்று கேட்கிறீர்களா? அதற்கும் அல்குராந்தான் ஆதாரம். ஆனால் பஹாவுல்ல்லாவை நம்புபவர்கள் அல்குரானில் சொல்லப்பட்டிருக்கும் இறுதி தூதர் மொஹம்மத் இப்னு அப்தல்லா என்று அவர்களது புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், அல்குரான் மட்டும்தான் அல்லாஹ் கொடுத்தது. பஹாவுல்லாவின் புத்தகம் அல்லாஹ் கொடுக்கவில்லை. ஆதாரம் என்ன என்று கேட்கிறீர்களா? அதற்கும் அல்குரான் தான் ஆதாரம். எப்படி! சூப்பரா இருக்கு இல்ல?

இன்னேரம் உங்களுக்கு ஒரு ஐடியா வந்திருக்கணுமே? நீங்களே ஒரு புத்தகத்தை எழுதி, அதில அல்குரானை கொடுத்ததை மொஹம்மத் இப்னு அப்தல்லா திருத்திட்டாரு. தப்பு தப்பா எழுதிட்டாரு. அதனை திருத்த என்னை அனுப்பியிருக்காரு அல்லாஹ் என்று ஒரு கதை விடுங்கள். இனி நீங்கதான் இறுதி இறைதூதர்.

ஆனாலும் உங்களால கண்ணுமணிமாதிரி கூட்டம் சேக்க முடியாது. அது தாவூது இப்ராஹிம் மாதிரி தாதாவா இருந்தாத்தான்முடியும்.
தாவூது இப்ராஹிமுக்காக அந்த கூட்டத்து ஆள் உசிர கொடுக்க தயாரா இருக்கிறமாதிரி உசிர கொடுக்க தயாரா இருக்கிறமாதிரி கூட்டம் உருவாக்கணும்.

உங்க நல்ல மனசுக்கு அதெல்லாம் முடியாதுன்னு நென்க்கிறேன்.

வால்பையன் said...

//உங்க நல்ல மனசுக்கு அதெல்லாம் முடியாதுன்னு நென்க்கிறேன். //


கண்டிப்பா முடியாது! :))))

suvanappiriyan said...

இப்னு ஷகீர்!

முதலில் இஸ்லாமிய பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவதை தவிர்க்கவும். நீங்கள் என்னதான் வேடம் போட்டாலும் உங்கள் எழுத்து நடை உங்களை காட்டிக் கொடுத்து விடுகிறது. :-)

//ஆதாரம் வேண்டுமா? அல்குரானை படியுங்கள். படித்துவிட்டீர்களா? அவ்வளவுதான்.//

குர்ஆன் மட்டும் அல்ல பைபிளிலிருந்தே ஆதாரத்தைத் தருகிறேன்.

'பின்பு ஏசு கலிலியோ எங்கும் சுற்றித் திரிந்து அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்'
-மத்தேயு 4:23

'இயேசு கலிலயோவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேசத்தைப் பிரசிங்கித்தார்'
-மாற்கு 1:15

'காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேசத்தை விசுவாசியுங்கள் என்றார்.
-மாற்கு 1:15

தேவனுடைய புத்தகமான சுவிசேசத்தை விசுவாசியுங்கள் என்று ஏசு தனது நாவாலேயே சொல்ல ஏசு எப்படி கடவுளாக்கப்பட்டார்? அதற்கும் பைபிளேலேயே விளக்கமும் இருக்கிறது.

'மகாகனம் பொருந்திய தெயோப்பிலுவே! நீங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை ஆரம்பம் முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு அறிவித்தபடியே அவைகளைக் குறித்து சரித்திரம் எழுத அனேகர் ஏற்பட்டபடியினாலே ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து நானும் உமக்கு உபதேசிக்கப் பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.
-லூக்கா 1:2-4

நான் எழுதியது இறைவனின் வேதம் அன்று: பரிசுத்த ஆவியின் தூண்டதலால் எழுதப்பட்டதுமன்று: தான் விசாரித்தறிந்ததையே எழுதியிருக்கிறேன் என லூக்கா ஒப்புக் கொள்கிறார்.கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களின் தொகுப்பை செவி வழியாக கேட்டு தாம் பதித்திருப்பதாக லூக்காவே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்.

இயேசு உபதேசித்த இன்ஜிலை (பைபிளை) மறைத்து விட்டு மற்றவர்களின் செவி வழி செய்திகளையே பைபிள் என்று நமக்கு காட்டுகிறது கிறித்தவ உலகம். எனவே ஏசு உபதேசித்த அந்த சுவிசேசம் நமக்கு கிடைக்குமானால் கிறித்தவர்களில் நாத்திகர்களின் எண்ணிக்கையும் குறையும்: தருமியும் 'நான் ஏன் மீண்டும் கிறித்தவனானேன்?' என்று பல பதிவுகளை போட்டு தள்ளுவார்.

naren said...

நண்பர் சுவனப்பிரியன், உண்மையாகவே ”விவிலிய வசன கலை” வல்லுனர்தான்.

செவிவழி செய்தி என்பது, ஒரு செய்தி உருவாகும்தருணத்தில் அது அச்சில் அல்லது புத்தக வடிவம் பெறும்வரை அது, செவி வழிச் செய்திதான்.

அப்படி பார்க்கும் போது குரானும் முகமது காலத்திற்குப் பிறகு செவி வழிச் செய்தியாக வந்து அவர் இறந்த பிறகு- 18 வருடம் கழித்து எனவும் 100 வருடம் கழித்து எனவும் கருத்து நிலவுகிறது- ஒரே ஒரு புத்தகமாக தொகுகப்பட்டது. அப்படி தொகுகப்பட்டது என்று கூறுவதிலும் சில சர்ச்சைகள் உள்ளன.

அதனால் குரானும் செவி வழிச் செய்திதான். காலம் மாறுப்படும்.

இப்னு சாகிர் மறைந்திருந்து முஸ்லிம் பெயரில் எழுதுகிறார் என்று குற்றச்சாட்டு, அவர் யார் என்று தெரியும் ஆனால் வெளியில் சொல்லமாட்டேன் என்று கூறுவதும் ஒன்று. தெரிந்தால் சொல்லிவிடுங்கள்.

Anonymous said...

ஆஹா,
என்ன அழகாக நம்ம தவ்ஹீத் அண்ணன் மாதிரி எழுதுகிறார் நம்ம சுவனப்பிரியன்.
உங்கள் மீதும் ஏக்க அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் (இருந்தால்) நிலவுதாக!

சுவிசேஷம் என்றால் gospel. gospel என்றால் good news என்று பொருள். இறைவனின் ராஜ்ஜியம் வெகு சீக்கிரம் வருகிறது என்பது good news. அவ்வளவுதான். இதில் என்ன ஈஸா நபியின் ஒரிஜினல் சுவிசேஷம்? ஆ அதெல்லாம் கேட்கக்கூடாது.

அதே மாதிரி நம்ம தருமி அய்யாவும், அல்லாஹ் கொடுத்த ஒரிஜினல் குரானை நம்ம கண்ணுமணி மொஹம்மத் இப்னு அப்தல்லா அமுக்கிட்டார். அந்த ஒரிஜினலை குரானைத்தான் என்கிட்ட அல்லாஹ் அனுப்பியிருக்கான்னு ஆரம்பிச்சிக்கணும். அப்ப கேட்டா, இதே மாதிரி நம்ம சுவனப்பிரியன் மாதிரி பதில் சொல்லலாம். அல்லாஹ் மொஹம்மத் இப்னு அப்தல்லாகிட்ட சொன்னார் . ஆனா மொஹம்மத் இப்னு அப்தல்லாவே அத மறச்சிட்டு நானே இறுதி நபின்னு சொல்லி அல்லாஹ்வையே கேட் போட்டு மூடிட்டாரு. அல்லாஹ்வை கேட் போட்டு மூட முடியுமா?
அதனால்தான் என்னை அனுப்பிச்சிருக்காருன்னு சொல்லி ஆரம்பிக்கலாம்

முன்னாடி அல்லாஹ் மொஹம்மத் இப்னு அப்தல்லாகிட்ட முஸ்லீம்கள் எல்லாம் காஃபிரை எல்லாம் கொல்லணும்னு கட்டளை கொடுத்தான். இப்ப என்கிட்ட தருமியாள்கள் எல்லாம் முஸ்லீமை கொல்லணும்னு கட்டளை கொடுத்திருக்கான்னு அவுத்து உடணும்.

எது கேட்டாலும் அல்லாஹ்வோட கட்ட்ட்ளை.. அத கேக்கலைன்னா நீ நரகத்தில சாவேன்னு பயமுறூத்தனும்

காஃபிர் தருமி அய்யா, இதெல்லாம் உங்களால முடியாதுங்கோ..

வால்பையன் said...

// ஏசு உபதேசித்த அந்த சுவிசேசம் நமக்கு கிடைக்குமானால் கிறித்தவர்களில் நாத்திகர்களின் எண்ணிக்கையும் குறையும்://

எங்கப்பா எனக்கு உபதேசித்த சுவிசேசத்தை வைத்து நான் கூட ஒரு வேதபுத்தகமும், மதமும் உருவாக்கலாம்.

என்ன சார் கொடுமை இது!

வள்ளூவர் கூடத்தான் சுவிசேசத்தை உபதேசித்தார், அவரையும் ஒரு தூதராக்கி வேறொரு மதத்தை உருவாக்கிரலாமா!?

சார்வாகன் said...

வணக்கம் அய்யா
உங்கள் அனுமதியோடு நண்பர் சுவனப் பிரியனுக்கு பட்ஜில் சொல்லுகிறேன்.
அதாவது அவர் சொல்லுவது
A)
***********
1.இயேசு சுவிசேஷம் பிரங்கித்தார் என்று புதிய ஏற்பாட்டில் வருகிறது.

2. லூக்கா விசாரித்து எழுதினேன் என்கிறார்.
B)
*****************

முதலில் இஸ்லாமிய பிரசாரகர்கள் கிறித்தவத்தை விமர்சிப்பதில் அவர்களுக்கு பல சிக்கல்கள்,எல்லைகள் உண்டு.குறைந்த பட்சம் இயேசு ஒரு இறைத் தூதர்,வேதம் வழங்கப் பட்டவர்,அற்புதங்கள் செய்தவர்,கன்னி மேரி மகன்,இரண்டாம் வருகையாக வருவார் போன்றவற்றை குரானும் சொல்வதால் அதனை மறுக்க முடியாது.

இந்த இன்ஜீல் எனப்படும் புதிய் ஏற்பாட்டை(?) முற்றும் முழுதாக விலக்குவதா அல்லது அதில் உள்ள பால் &பிறரின் கடிதங்களை மட்டும் விலக்கி சுவிசேஷங்களை இன்ஜீல் என ஏற்பதா என்ற இறையியல் சிக்கல் இஸ்லாமில் உண்டு.
ஏனெனில் குரான் இயேசுவுக்கு இன்ஜீல் இறைவ‌ன்(அல்லாஹ்) வ‌ழ‌ங்கிய‌தாக‌ கூறுகிற‌து.

நண்பர் சுவனப் பிரியன் குரான் சொல்லும் இன் ஜீல் புதிய ஏற்பாட்டு சுவிசேஷம் அல்ல என்கிறார்.சரி.நம் கேள்வி என்ன எனில் குரான் இஞீல்தான் புதிய ஏற்பாடு என்றோ இல்லை என்றோ வழக்கம் போல் தெளிவாக கூறவில்லை.
இப்போது இன்ஜீலை புதிய ஏற்பாடாக முகமது நினைத்தாரா?
என்பதை ஹதிதுகள் மூலம் அறிவோம்.

முகமதுக்கு முதன் முதலில் இறை செய்தி(வஹி) வந்த போது அவருக்கு அது இறை செய்திதான் என்று உணர்த்திய அன்னை கதிஜாவின் உறவினர் 'வரக்கா இப்னு நவ்ஃபல்'
************
புஹாரி
4953. .....பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான 'வரக்கா இப்னு நவ்ஃபல்' என்பாரிடமும் சென்றார்கள். -'வராக்க' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்;.........
*********
பைபிள் முழுமையாக 3ஆம் நூற்றாண்டிலேயே தொகுக்கப் பட்டது.அதுவும் வரக்கா அரபியில் மொழி பெயர்த்துள்ளது புதிய ஏற்பாடாக் இருக்கவே வாய்ப்பு அதிகம்.
(contd)

சார்வாகன் said...

இப்போது நண்பர் சுவன்ப் பிரியனின் முதல் கேள்விக்கு வருவோம். இயேசு சுவிசேஷம் பிரசங்கித்தார் என்றால் அபோதே சுவிசேசம் இருந்தது அது இப்போதைய புதிய ஏற்பாடு அல்ல என்கிறார்.
இந்த சுவிஷேசம் என்பதின் பொருள் அறிவோம் ஆங்கிலத்தில் gospel எனவும் கிரேக்கத்தில்[புதிய ஏற்பாடு முதலில் கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டது ஹீப்ரு அல்ல] euangelion என்றழைக்கப்படும் வார்த்தைக்கு நல்ல செய்தி என்று பொருள்.

http://www.levitt.com/essays/language.html

The word gospel derives from the Old English gōd-spell [1] (rarely godspel), meaning "good news" or "glad tidings". It is a calque (word-for-word translation) of the Greek word εὐαγγέλιον, euangelion (eu- "good", -angelion "message"). The Greek word "euangelion" is also the source (via Latinised "evangelium") of the terms "evangelist" and "evangelism" in English.

ஆகவே இயேசு பயன்படுத்திய gospel வார்த்தையே பிறகு புதிய ஏற்பாட்டின் பெயராயிற்று.

லூக்கா விசாரித்து எழுதிய புதிய ஏற்பாட்டை குரான் இறைவன்[அல்லாஹ்] இயேசுவுக்கு வழங்கியதாக(?) கூறினால் அருமையாக இருக்கிறது.இதற்கும்கு பதில் சொல்ல முடியும் என்றாலும் அது கிறித்த‌வ்ர்களின் வேலை என்று ஒதுங்குகிறேன்.நம்மை பொறுத்தவரை இபோதைய கிறித்தவ்ர்களின் சுவிசேசங்களே குரான் குறிப்பிடும் இன்ஜீல். மறுப்பு தெரிவிக்க வராக்க மொழி பெயர்த்த அரபு பிரதி இன்ஜீலை கொண்டு வர வேண்டுகிறேன்
அப்பாடா!!!!!!!!!!!!!!!
நன்றி

எண்ணங்கள் 13189034291840215795 said...

அருமையான கருத்துகள்.. தொடர்ந்து படிக்க காத்திருக்கிறேன்.

suvanappiriyan said...

நரேன்!

//அப்படி பார்க்கும் போது குரானும் முகமது ......அப்படி தொகுகப்பட்டது என்று கூறுவதிலும் சில சர்ச்சைகள் உள்ளன.//

முகமது நபி காலத்திலேயே குர்ஆனை எழுதுவதற்கென்றே பலரை நபிகள் நாயகம் நியமித்திருந்தார். அவர்கள் தோல்களிலும், எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் அவ்வப்போது குர்ஆன் வசனத்தை எழுதி வந்தனர். 23 வருடகாலம் இந்த பணி தொடரந்து நடந்தது. முகமது நபியின் மரணத்துக்கு பிறகு ஏற்கெனவே இருந்த குர்ஆன் ஜனாதிபதி உஸ்மான் அவர்களால் தொகுக்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

ஐந்து வசனங்கள் ஒரு நாள் அருளப்பட்டால் அந்த ஐந்து வசனங்களையும் நபிகள் நாயகம் அவர்கள் உடனே எழுதச் சொல்வார்கள். அது தோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். அடுத்த நாள் மூன்று வசனங்கள் அருளப்பட்டால் அதை எழுதச் சொல்வார்கள்; அது தனியாக எழுதப்படும்.
எழுத்து வடிவத்தில் அனைத்து வசனங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.

மனனம் செய்த தலைமுறையினர் மரணித்து விட்டால் அந்த ஏட்டிலிருந்து இந்த வரிசைப்படி தொகுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் ஆலோசனையைப் பரிசீலித்து எழுத்து வடிவில் உள்ளதை முறைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.

எழுதப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்த ஏடுகளையும், தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தவர்களிடம் உள்ள ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.


இது ஏற்கெனவே விரிவாக விளக்கப்பட்ட கேள்வி. புதியவர்களுக்காக மறுபடியும் பதிக்கிறேன்.

வால்பையன்!

//வள்ளூவர் கூடத்தான் சுவிசேசத்தை உபதேசித்தார், அவரையும் ஒரு தூதராக்கி வேறொரு மதத்தை உருவாக்கிரலாமா!?//

தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட தூதராகக் கூட இருக்கலாம். ஆனால் அவரின் வரலாறு அழிந்து விட்டதனால் அவரைப்பற்றிய மேலதிக விபரங்கள் கிட்டவில்லை. ஏனெனில் குர்ஆன் உலக மொழிகள் அனைத்துக்கும் வேதத்தையும், தூதுவரையும் அனுப்பியதாக கூறுகிறது.

suvanappiriyan said...

சார்வாகன்!

//மறுப்பு தெரிவிக்க வராக்க மொழி பெயர்த்த அரபு பிரதி இன்ஜீலை கொண்டு வர வேண்டுகிறேன்//

நீங்கள் விட்ட பாக்கி பாதி ஹதீதையும் முழுவதுமாக படியுங்கள்...

……மேலும் அவர் கண் பார்வையிழிந்த முதியவராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா அவர்கள், 'என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!' என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), 'என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் தாம் பாார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக்கேட்ட 'வரக்கா', '(நீர் கண்ட) இவர் தாம் (இறைத்தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்' என்று கூறிவிட்டு, (மகனே!) உம்மை உம் சமூகத்தார் உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே!' என்று சொல்லி வேறு சில வார்த்தைகளையும் கூறினார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(என் சமூக) மக்கள் என்னை (நாட்டைவிட்டும்) வெளியேற்றவா செய்வார்கள்?' என்று கேட்க, 'வரக்கா', 'ஆம். நீங்கள் பெற்றிருக்கிற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவிபுரிவேன்' என்று கூறினார். அதன் பின்னர் 'வரக்கா' நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (சூவத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்று போயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள். 3

Volume :5 Book :65

இவரோ கண்தெரியாதவர். பைபிளின் ஒரு சில வசனங்களை மட்டுமே(இறைவன் நாடிய...) மொழி பெயர்க்கக் கூடியவராக இருந்தார். இந்த சம்பவம் நடந்த சில காலங்களிலேயே இறந்தும் விடுகிறார். முகமது நபியை உண்மையை அறிந்து இறைத் தூதராகவும் ஏற்றுக் கொண்டார். அவர் சொன்னபடியே முகமது நபியை அந்த மக்கள் மக்காவிலிருந்து மதினாவுக்கு விரட்டி அடித்தனர். இவ்வளவுதான் அவரைப் பற்றிய செய்தி கிடைக்கிறது.

அவரிடமிருந்தது ஏசு உபதேசித்த முழு இன்ஜீலுமே என்று வாதிட்டால் அதற்கான ஆதாரத்தை நீங்கள்தான் தர வேண்டும்.

suvanappiriyan said...

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி பீடம் உள்ளது. இதனை இந்திராணி என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று காலையில் பொன்செல்வி என்பவர் ஆதிபராசக்தி பீடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அம்மன் சிலைக்கு கீழே பால் தேங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அம்மன் சிலையை உற்று நோக்கி பார்த்த போது அம்மன் சிலையின் உட்புறத்தில் இருந்து பால் சொட்டு சொட்டாக வடிவதை அவர் கண்டார். அம்மன் சிலையில் இருந்து திடீரென சொட்டு சொட்டாக பால் வடிவதை கண்ட பொன்செல்வி இது குறித்து கோவில் நிர்வாகியிடம் தகவல் தெரிவித்தார். அம்மன் சிலையில் இருந்து பால் வடியும் சம்பவம் அப்பகுதி மக்களிடம் வேகமாக தெரியவந்தது. தகவலை கேள்விப்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மன் சிலையில் இருந்து பால் வடியும் அதிசயத்தை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மட்டுமல்லாது பயபக்தியுடன் வழிபட்டும் சென்றனர். அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-தினமலர்
30-10-2011

வால்பையன் said...

//முகமது நபி காலத்திலேயே குர்ஆனை எழுதுவதற்கென்றே பலரை நபிகள் நாயகம் நியமித்திருந்தார். அவர்கள் தோல்களிலும், எலும்புகளிலும் மரப்பட்டைகளிலும் அவ்வப்போது குர்ஆன் வசனத்தை எழுதி வந்தனர். 23 வருடகாலம் இந்த பணி தொடரந்து நடந்தது. முகமது நபியின் மரணத்துக்கு பிறகு ஏற்கெனவே இருந்த குர்ஆன் ஜனாதிபதி உஸ்மான் அவர்களால் தொகுக்கப்பட்டு பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.

ஐந்து வசனங்கள் ஒரு நாள் அருளப்பட்டால் அந்த ஐந்து வசனங்களையும் நபிகள் நாயகம் அவர்கள் உடனே எழுதச் சொல்வார்கள். அது தோளிலோ, எலும்பிலோ எழுதப்படும். அடுத்த நாள் மூன்று வசனங்கள் அருளப்பட்டால் அதை எழுதச் சொல்வார்கள்; அது தனியாக எழுதப்படும்.
எழுத்து வடிவத்தில் அனைத்து வசனங்களும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை வரிசைப்படுத்தப்படாமல் இருந்தன.

மனனம் செய்த தலைமுறையினர் மரணித்து விட்டால் அந்த ஏட்டிலிருந்து இந்த வரிசைப்படி தொகுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் ஆலோசனையைப் பரிசீலித்து எழுத்து வடிவில் உள்ளதை முறைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.

எழுதப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்த ஏடுகளையும், தனிப்பட்ட முறையில் எழுதி வைத்திருந்தவர்களிடம் உள்ள ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.


இது ஏற்கெனவே விரிவாக விளக்கப்பட்ட கேள்வி. புதியவர்களுக்காக மறுபடியும் பதிக்கிறேன்.//


ஏற்கனவே விரிவாக விளக்கபட்ட கேள்விக்கு நாங்கள் கேட்ட பதில் கேள்விக்கு இன்றூ வரை பதில் இல்லையே, அப்படியானால் குரான் என்பது பொய்தான் என்றூ நிரூபணமாகிறதே!

அது என்ன கேள்வின்னு தெரியனுமா?
மற்ற நண்பர்களால் தொகுக்கபட்ட மூலகுரான் ஏன் அழிக்கபட்டது, இடைசொருகல்கள் தெரிந்துவிடும் என்று தானே!

நீங்க எனக்கு பத்து லட்சம் கடன் கொடுத்தேன்னு சொல்றிங்க, சரிங்க எங்க பத்திரம்னு கேட்டா கிழிச்சி போட்டுட்டேன்னு சொல்றிங்க, அப்ப உங்களை மற்றவர்கள் பைத்தியம் மாதிரி தானே பார்ப்பார்கள் அதுனால ...................

வால்பையன் said...

வால்பையன்!

//வள்ளூவர் கூடத்தான் சுவிசேசத்தை உபதேசித்தார், அவரையும் ஒரு தூதராக்கி வேறொரு மதத்தை உருவாக்கிரலாமா!?//

தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட தூதராகக் கூட இருக்கலாம். ஆனால் அவரின் வரலாறு அழிந்து விட்டதனால் அவரைப்பற்றிய மேலதிக விபரங்கள் கிட்டவில்லை. ஏனெனில் குர்ஆன் உலக மொழிகள் அனைத்துக்கும் வேதத்தையும், தூதுவரையும் அனுப்பியதாக கூறுகிறது. //

உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழிப்பெயர்க்க பட்டுவிட்டது, ஒருவேளை அல்லாவின் தூதர் வள்ளவர் என்றால் அந்த தூதர் மூலம் வெற்றி பெற்றுவிட்டார், அதன் பிறகு எதற்கு முகமது. மேலும் குரானை விட திருக்குறள் எளிமையாகவும், எதார்த்தமாகவும் இருக்கு!, குரானில் இருப்பது போலவே பெண்ணடிமைதனமும் இருப்பது இன்னும் சிறப்பு! ஆகையால் முகமது ஒரு போலி என்றாகிறது. முகமது போலி இல்லையென்றால் அல்லாவே போலி என்றாகிறது!

வால்பையன் said...

அடைப்புக்குறி இருக்கும் வரை குரான் டுபாக்கூர் தான்,
ஒரு கருத்தை எந்த மொழியில் சொன்னாலும் மொழி பெயர்க்கும் பொழுது அதே கருத்து தான் வரும்!
இந்த குரான் மட்டும் டுபாக்கூர் என்பதால் இவர்களுக்கு அடைப்புகுறி தேவைப்படுகிறது.

நேத்து தான் ஃபேஸ்புக்குல ஒருத்தர் நாறுனாரு!

வால்பையன் said...

//தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் உள்ள அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி பீடம் உள்ளது. இதனை இந்திராணி என்பவர் நிர்வகித்து வருகிறார். நேற்று காலையில் பொன்செல்வி என்பவர் ஆதிபராசக்தி பீடத்தில் உள்ள அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அம்மன் சிலைக்கு கீழே பால் தேங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அம்மன் சிலையை உற்று நோக்கி பார்த்த போது அம்மன் சிலையின் உட்புறத்தில் இருந்து பால் சொட்டு சொட்டாக வடிவதை அவர் கண்டார். அம்மன் சிலையில் இருந்து திடீரென சொட்டு சொட்டாக பால் வடிவதை கண்ட பொன்செல்வி இது குறித்து கோவில் நிர்வாகியிடம் தகவல் தெரிவித்தார். அம்மன் சிலையில் இருந்து பால் வடியும் சம்பவம் அப்பகுதி மக்களிடம் வேகமாக தெரியவந்தது. தகவலை கேள்விப்பட்ட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அம்மன் சிலையில் இருந்து பால் வடியும் அதிசயத்தை ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மட்டுமல்லாது பயபக்தியுடன் வழிபட்டும் சென்றனர். அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-தினமலர்
30-10-2011 //

அல்லா எழுத படிக்க தெரியாத ஒருவருக்கு குரானை ஓதும் போது சிலையில் இருந்து பால்வடிவது மட்டும் சாத்தியமில்லையா?

என்னங்கய்யா இது நியாயம்!

suvanappiriyan said...

வால்பையன்!

//அது என்ன கேள்வின்னு தெரியனுமா?
மற்ற நண்பர்களால் தொகுக்கபட்ட மூலகுரான் ஏன் அழிக்கபட்டது, இடைசொருகல்கள் தெரிந்துவிடும் என்று தானே!//

அட கண்றாவியே! அந்த தோழர்களிடம் இருந்தது முழு குர்ஆனும் அல்ல. ஒருவரிடம் ஐந்து அத்தியாயயம் இருக்கும். மற்றவரிடம் பத்து அத்தியாயம் இருக்கும். ஒரு சிலரிடம் சில வசனங்கள் மட்டுமே இருக்கும். முழுமைபடுத்தப்பட்ட குர்ஆன் எது என்பது குழப்பமாக இருந்தது. இன்றுள்ளது போல் அச்சிடக் கூடிய வசதி அன்று இல்லை. எனவே தான் எவரிடமெல்லாம் குர்ஆனின் சிறிய சிறிய எழுத்துப் பிரதிகள் இருந்ததோ அவை அனைத்தையும் ஆட்சியாளர் அபுபக்கர் கொண்டு வரச் செய்தார். குர்ஆனை முழுதும் மனனம் இட்ட நபர்களையும் அழைத்து அத்தனை குர்ஆன் பிரதிகளையும் வரிசைபடுத்த சொன்னார். பல அறிஞர்கள் சேர்ந்து அதனை வரிசைப படுத்தினார்கள். முகமது நபி அவர்களின் வீட்டில் இருந்த வரிசைப் படுத்தப்படாத குர்ஆனின் பிரதிகளும் கொண்டு வரப்பட்டது. இதனை ஸைத் இப்னு ஸாபித் என்ற நபித்தோழர் ஜனாதிபதி அபுபக்கரின் உத்தரவுக்கிணங்க ஒழுங்குபடுத்தி அதனை ஜனாதிபதியிடம் சேர்ப்பித்தார். அபுபக்கருக்கு பிறகு அந்த பிரதி ஜனாதிபதி உமர் வசம் வருகிறது. அவருக்கு பிறகு ஆட்சியாளர் உஸ்மான் அதனை பல பிரதிகள் எடுக்கிறார். குர்ஆன் மனனம் செய்தவர்கள் அதனை ஒப்பிடுகிறார்கள். அதன்பிறகு தான் உலகின் பல நாடுகளுக்கும் அந்த பிரதிகள் அனுப்பப்படுகிறது. அந்த பிரதிகளில் இரண்டுதான் துருக்கியிலும் தாஸ்கண்டிலும் இன்றும் உள்ளது. பல நபித்தேழர்கள் ஒப்பிட்டு பார்த்து சரி செய்ததனால் இடைச் செருகல் வர வாய்ப்பே இல்லை.

பிற்காலத்தில் குழப்பம் வரக் கூடாது என்பதற்காகத்தான் தனி மனிதர்களிடம் இருந்த சிறு சிறு அத்தியாயாங்களை உஸ்மான் எரித்து விட ஆணையிட்டார். அப்படி செய்யாமல் இருந்திருந்தால் பைபிளின் நிலைதான் குர்ஆனுக்கும் வந்திருக்கும்.

//அடைப்புக்குறி இருக்கும் வரை குரான் டுபாக்கூர் தான்,//

புதிதாக குர்ஆனை வாசிப்பவர்களுக்கு விளங்குவதற்காககத்தான் அடைப்புக் குறிகளை போடுகிறோம். ஒரு அத்தியாயம் முழுவதையும் ஒருவர் வாசித்தால் அவருக்கு அடைப்புக்குறி தேவையில்லை. இந்த அடைப்புக் குறியினால் வசனம் திரிபு ஏற்பட்டால்தான் குறை காண முடியும். இந்த அடைப்புக் குறிகள் புதிதாக படிப்பவர்களுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்துகிறது.

வால்பையன்.....தண்ணி அடித்து கொணடு மப்பில் பின்னூட்டம் இடாமல் சகஜ நிலைக்கு வந்தவுடன் இனி பின்னூட்டம் இடவும். நன்றி!

தருமி said...

//இஸ்லாமிய பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவதை தவிர்க்கவும்.//

அது ஏனுங்க சுவனப்பிரியன் ... உங்களைப் போல் இஸ்லாமியத்தைப் பற்றி எழுதுவோர்களில் மிகப் பலரும் அடையாளம் இல்லாமல் எழுதுகிறார்களே .. ஏன்?

Anonymous said...

அப்படி போடுங்க சுவனப்பிரியன்

உங்களின் தலை மீது ஏக்க அல்லாவின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.

அல்குரானை பற்றித்தான் நான் காஃபிர்களுக்கு விளக்க இஸ்லாமிய பகுத்தறிவு பற்றி விளக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்

காஃபிர்கள் படித்து திருந்தட்டும்


மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு

suvanappiriyan said...

தருமி!

///இஸ்லாமிய பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவதை தவிர்க்கவும்.//

அது ஏனுங்க சுவனப்பிரியன் ... உங்களைப் போல் இஸ்லாமியத்தைப் பற்றி எழுதுவோர்களில் மிகப் பலரும் அடையாளம் இல்லாமல் எழுதுகிறார்களே .. ஏன்?//

நான் இஸ்லாமிய மதத்தை சேரந்தவன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கிறதா? இல்லை... இதுபோல் அராபிய பெயர்களை தவிர்த்து சொந்த மொழிகளில் பெயர்களை வைப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. நீங்கள் கூட உங்கள் பெயரை மறைத்து தருமி என்ற புனை பெயரில்தான் எழுதி வருகிறீர்கள்.

ஆனால் இப்னு ஷகீர் என்ற பெயரிலோ யாசிர் என்ற பெயரிலோ எழுதுபவர்கள் இஸ்லாத்திலும் நாத்திகர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக அராபிய பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதுகிறார்கள். அடுத்து இப்னு ஷகீர் என்றால் ஷகீருடைய மகன் என்று பொருள் வரும். சம்பந்தப்பட்ட நண்பர் ஒரு இந்து அல்லது கிறித்தவ தாய் தந்தைக்கு பிறந்து விட்டு 'நான் ஷகீருடைய மகன்' என்று அவரை அழைத்துக் கொள்வது அவரது பிறப்புக்கே இழுக்கல்லவா? இனிமேலாவது சொந்த பெயரில் தனது கருத்தை வைப்பார் என்று நம்புவோமாக!

வால்பையன் said...

//
பிற்காலத்தில் குழப்பம் வரக் கூடாது என்பதற்காகத்தான் தனி மனிதர்களிடம் இருந்த சிறு சிறு அத்தியாயாங்களை உஸ்மான் எரித்து விட ஆணையிட்டார். அப்படி செய்யாமல் இருந்திருந்தால் பைபிளின் நிலைதான் குர்ஆனுக்கும் வந்திருக்கும்.//

குரானை பாதுகாக்க அல்லா இருக்கிறான் என்ற வசனம் பொய் போல, பிற்காலத்தில் குழப்பம் வரும் என்றால் எப்போது, அல்லா மண்டைய போடும் போதா?

//புதிதாக குர்ஆனை வாசிப்பவர்களுக்கு விளங்குவதற்காககத்தான் அடைப்புக் குறிகளை போடுகிறோம். ஒரு அத்தியாயம் முழுவதையும் ஒருவர் வாசித்தால் அவருக்கு அடைப்புக்குறி தேவையில்லை. இந்த அடைப்புக் குறியினால் வசனம் திரிபு ஏற்பட்டால்தான் குறை காண முடியும். இந்த அடைப்புக் குறிகள் புதிதாக படிப்பவர்களுக்கு மேலும் தெளிவை ஏற்படுத்துகிறது. //

கனிக்கும், மலருக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள் புதிதாக வருபவர்களுக்கு சொல்லி தர்ற போறீங்களாக்கும்!, உங்க தெளியே நட்டமா நிக்கும் போது, படிக்கிறவன் தெளிவுக்கு சங்கு தான்!

//வால்பையன்.....தண்ணி அடித்து கொணடு மப்பில் பின்னூட்டம் இடாமல் சகஜ நிலைக்கு வந்தவுடன் இனி பின்னூட்டம் இடவும். நன்றி! //

உங்களிடன் நான்காவது பொண்டாட்டி நலமா என கேட்டால் உங்களுக்கு என்ன மனநிலை தான் எனக்கும்!

விவாதம், கருத்து மோதலாக தான் இருக்கனும், என் சூத்தை மோத்தும் பார்க்கும் வேலையாக இருக்கக்கூடாது!

suvanappiriyan said...

தருமி!

///இஸ்லாமிய பெயரில் ஒளிந்து கொண்டு எழுதுவதை தவிர்க்கவும்.//

அது ஏனுங்க சுவனப்பிரியன் ... உங்களைப் போல் இஸ்லாமியத்தைப் பற்றி எழுதுவோர்களில் மிகப் பலரும் அடையாளம் இல்லாமல் எழுதுகிறார்களே .. ஏன்?//

நான் இஸ்லாமிய மதத்தை சேரந்தவன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கிறதா? இல்லை... இதுபோல் அராபிய பெயர்களை தவிர்த்து சொந்த மொழிகளில் பெயர்களை வைப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. நீங்கள் கூட உங்கள் பெயரை மறைத்து தருமி என்ற புனை பெயரில்தான் எழுதி வருகிறீர்கள்.

ஆனால் இப்னு ஷகீர் என்ற பெயரிலோ யாசிர் என்ற பெயரிலோ எழுதுபவர்கள் இஸ்லாத்திலும் நாத்திகர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காக அராபிய பெயர்களில் ஒளிந்து கொண்டு எழுதுகிறார்கள். அடுத்து இப்னு ஷகீர் என்றால் ஷகீருடைய மகன் என்று பொருள் வரும். சம்பந்தப்பட்ட நண்பர் ஒரு இந்து அல்லது கிறித்தவ தாய் தந்தைக்கு பிறந்து விட்டு 'நான் ஷகீருடைய மகன்' என்று அவரை அழைத்துக் கொள்வது அவரது பிறப்புக்கே இழுக்கல்லவா? இனிமேலாவது சொந்த பெயரில் தனது கருத்தை வைப்பார் என்று நம்புவோமாக!

தருமி said...

சுவனப்பிரியன்,

இந்தப் பதிவிலும் , இந்தப் பதிவிலும் குரானின் ‘பிறப்பு’ பற்றி வரலாற்றின் அடிப்படையில் இரு நூல்களில் சொன்னவைகளைத் தொகுத்து அளித்தேன். நீங்கள் வழக்கமாக selective ஆக இருப்பீர்களே அதுபோல் அப்பதிவுக்கு நீங்களோ வழக்கமாக வாதிடுவோர்களோ வரவில்லை. முகமதுவின் காலத்திற்குப் பின் ஏற்பட்ட பல நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. குரான் மனிதக் கரங்களால் தீண்டப்படாமல் வைத்திருக்கிறீர்கள் - அதாவது குரான் தொகுக்கப்பட்ட பின். பேஷ்! ஆனால் தொகுக்கப்படும் முன் நடந்த வரலாறு பல கேள்விக்குள்ளாக்குகின்றது.

அதேபோல் வேறு பல கேள்விகளைப் பல இடங்களில் நான் மட்டுமல்ல மற்றைய பதிவர்களும் அடிக்கடி கேட்டாகி விட்டது. ஆனால் பலமுறை பதில் சொல்லிவிட்டதாகச் சொல்கிறீர்கள் - கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது போல் திருப்பி திருப்பி சொல்கிறீர்கள் - 1400 ஆண்டுகளாக!

பதிலில்லா கேள்விகளை சீக்கிரம் ஒரு பட்டியலிட வேண்டும் - பதில் பெற அல்ல; என் தொகுப்பாக.

மனிதனின் வரலாறு 6000 ஆண்டுகள் என்று சொல்கிறீர்களா அல்லது சில லட்சக்கணக்கான ஆண்டுகள் என்கிறீர்களா என்று தெரியவில்லை. இரண்டில் எதுவாயினும், எத்தனை நபிகளை அனுப்பி, ஒவ்வொரு முறையும் ஜிப்ரேலுக்கு வேலை கொடுத்து, editing, copying, pasting, altering, ... இப்படி பல வேலைகளை அல்லா எடுத்துக் கொண்டு இருந்தவர், நிறைய நபிகளை அனுப்பியவர் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து முகமது என்பவரைக் கடைசி நபி என்று நிறுத்தி விட்டார். வந்த நபிகளின் கால வரையறை என்ன? ஏன் இத்தனை முறை மனிதக் கரங்களால் மாற்றம் ஏற்பட்டுக் கடவுள் ஏமாற வேண்டும்? பின் ஏன் இப்போது இவரை மட்டும் கடைசி என்று குறிப்பிடவேண்டும் ... இப்படிப் பல கேள்விகள்; பதிலுக்கு மறுமைக்காலம் வரை பொறுத்திருக்க வேண்டும். ஆனான் என் போன்றோருக்கு இந்த ‘வரலாற்றில்’ எந்த லாஜிக்கும் இல்லை என்பதே முக்கியம்.

//அவர் ஏன் ஒரு படிப்பறிவில்லாதவரை, தான் சொன்னதை அப்படியே மாற்றாமல் கொடுக்க முடியாத ஒருவரை எதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? //

இதற்கும் மறுமைக்காலத்தில் பதில் என்பீர்கள்!

அதைவிட, 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து வஹி வந்தும் எழுதப் படிக்க்த் தெரியாத ஒரு மனிதன் 23 ஆண்டுகளாக அதே போல் எழுதப் படிக்கத் தெரியாதவனாகவே கடைசி வரை இருந்தார் என்பது நம்ப முடியாத கதை! அப்படி ஒரு மனிதரையா அல்லா தேர்ந்தெடுத்திருப்பார்??!! நம்ம ஊரு ஆளுக அஞ்சாறு மாசத்திலேயே அடுத்த மாநில மொழியையோ, அரபி மொழியையோ ( என் நண்பர்கள் இதில் அடக்கம்.) தெரிந்து கொள்கிறார்கள்.

//இறந்ததுமே தலைமைக்குப் போட்டியும் சண்டைகளும் ஆரம்பித்து விட்டன.
முகமது நபி காலத்திலேயே குர்ஆனை எழுதுவதற்கென்றே பலரை நபிகள் நாயகம் நியமித்திருந்தார். 23 வருடகாலம் இந்த பணி தொடரந்து நடந்தது.// இப்படி என் பழைய பதிவில் எழுதியுள்ளேன். வஹி வந்த ஒருவர் இப்படியா 23 ஆண்டு காலம் வரை ஆள் வச்சி எழுதி வைத்திருப்பார்; வேடிக்கைதான்!

தொகுக்கப்பட்ட வசனங்களும் கால வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தால் பொருளுண்டு. ஆனால் நீளம் பார்த்து தொகுக்கப்படுவதே மனிதக் கரம் செய்த லாஜிக் இல்லாத வேலை தானே!? அதிலும் மெக்காவிலும் மெதீனாவிலும் வைத்து சொன்ன வசனங்கள் தீவிரத்தில் மாறுபட்டிருப்பதேன்?

இதுபோல் இன்னும் நிறைய .... 1400 ஆண்டுகளாக .... என்றும் இதே கிளிப்பிள்ளையின் பதில்கள் ....

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

suvanapriyan,

நேர்மையற்ற பதில்.
//நீங்கள் கூட உங்கள் பெயரை மறைத்து தருமி என்ற புனை பெயரில்தான் எழுதி வருகிறீர்கள்.//
ஊரு, பேரு, முகவரி, பார்த்த வேலை, என்று எந்த ஒன்றையும் மறைக்காத என்னப்பார்த்து நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எத்தனை நேர்மையற்றது.

நீங்கள் ஒரு புனைப்பெயரில் UAE-யிலிருந்து என்பதைத் தவிர வேறு என்ன உங்களைப் பற்றி தெரியும்? இப்படி ‘மறைந்த ஜீவியம்’ உங்களுக்கே,இஸ்லாமியத்தை ஆதரிக்கும் உங்களுக்கே, தேவையென்றால் எதிர்த்து எழுதுபவர்களைப் பார்த்து கேள்வி கேட்கக்கூட உங்களுக்குத் த்குதியில்லை. அதுவும் ஒரு இஸ்லாமியன் தன் மதத்தை எதிர்ப்பதற்கு எவ்வளவு பயப்பட வேண்டியதுள்ளது என்பதும் நன்கு எங்களுக்குப் புலனாகிறது. இதைத்தான் மதத்தீவிரவாதம் என்கிறேன்.

பாவம் அந்த மக்கள்!

//அராபிய பெயர்களை தவிர்த்து சொந்த மொழிகளில் பெயர்களை வைப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.//

அடப் பாவமே .. இதற்கும் மதத்திற்கும் என்னய்யா தொடர்பு!! இங்கும் எங்கும் மதம் தானா .. கடவுளே!

தருமி said...

//இனிமேலாவது சொந்த பெயரில் தனது கருத்தை வைப்பார் என்று நம்புவோமாக!//

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புகிறீர்கள் என்பது அவ்வளவு நன்றாக இல்லையாதலால், இன்னொன்று சொல்கிறேன்!

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லால் எறிகிறீர்கள்!

வால்பையன் said...

//அராபிய பெயர்களை தவிர்த்து சொந்த மொழிகளில் பெயர்களை வைப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.//

அடப் பாவமே .. இதற்கும் மதத்திற்கும் என்னய்யா தொடர்பு!! இங்கும் எங்கும் மதம் தானா .. கடவுளே! //

சுவனபிரியன் என்ன சொல்ல வருகிறார், அரபிமொழியே இஸ்லாமிற்கு சொந்தம் என்றா?

அப்படியானால் இஸ்லாத்துக்கு முன் அரபிமொழியே இல்லையா?

தருமி said...

//இது போல் அவசியம் ஏற்பட்டால் என்னை வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கியதே இல்லை//

!!!!!!!!!!

suvanappiriyan said...

வால்பையன்!

//சுவனபிரியன் என்ன சொல்ல வருகிறார், அரபிமொழியே இஸ்லாமிற்கு சொந்தம் என்றா?

அப்படியானால் இஸ்லாத்துக்கு முன் அரபிமொழியே இல்லையா?//

ஒரு முஸ்லிம் அரபியில் பெயர் வைப்பது உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் வேறு மொழிகளில் அதாவது தங்களின் தாய் மொழிகளில் பெயர் வைப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை என்பதைத்தான் சொல்ல வந்தேன். சுவனப்பிரியன், அன்பழகன், அறிவழகன், ஆரோக்கியம் போன்ற அழகிய தமிழ் பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் முருகன், கணபதி, ராமன், ஏசு, போன்ற கடவுளாக மற்றவர்களால் சித்தரிக்கப்படும் பெயர்களை வைப்பதைத்தான் இஸ்லாம் கண்டிக்கிறது. தமிழைப் போலவே தொன்மையான மொழிகளில் ஒன்று அரபி. முகமது நபி இஸ்லாத்தை சொல்வதற்கு முன்பே அரபு மொழி சிறந்து விளங்கியது. பல பாடல்களும் இயற்றப்பட்டுள்ளது. பெரும் கவிஞர்களும் இருந்துள்ளார்கள்.

இப்றாஹீம்(ஆப்ரஹாம்) என்ற பெயர் அராபிய பெயர் அல்ல. ஆனால் முஸ்லிம்கள் பரவலாக வைக்கின்றனர்.

suvanappiriyan said...

தருமி!

//வந்த நபிகளின் கால வரையறை என்ன?//
ஏசு நாதருக்கும் ஆப்ரஹாமுக்கும் ஓரளவு காலத்தை கணிக்க முடியும். மற்ற தூதர்களின் காலம் துல்லியமாக தெரியவில்லை. அது தெரிந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏனெனில் குர்ஆன் இறங்கியவுடன் மற்ற வேதங்களின் சட்டங்கள் மனிதக் கரங்கள் பட்டதால் ஒதுக்க வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளை.

// ஏன் இத்தனை முறை மனிதக் கரங்களால் மாற்றம் ஏற்பட்டுக் கடவுள் ஏமாற வேண்டும்?//
கடவுள் ஏமாற வில்லை. இன்று நானும் நீங்களும் இது சம்பந்தமாக இணையத்தில் விவாதித்துக் கொண்டிருப்போம் என்ற செய்தியும் முன்பே இறைவன் புறத்தில் பதியப்பட்டிருக்கிறது. எனவே ஆதம் நபி முதல் நபிகள் நாயகம் வரை இறைத் தூதர்களை அனுப்புவது என்பது முன்பே இறைவனால் முடிவு செய்யப்பட்டது. இப்படி ஒரு விளையாட்டை இறைவன் ஏன் நம்மோடு விளையாட வேண்டும் என்ற கேள்விக்குத்தான் நியாயத் தீர்ப்பு நாளில் பதில் சொல்வதாக இறைவன் கூறுகிறான்.

// பின் ஏன் இப்போது இவரை மட்டும் கடைசி என்று குறிப்பிடவேண்டும் ...//
முந்தய பதிலே இதற்கும்


//23 ஆண்டுகளாக அதே போல் எழுதப் படிக்கத் தெரியாதவனாகவே கடைசி வரை இருந்தார் என்பது நம்ப முடியாத கதை! அப்படி ஒரு மனிதரையா அல்லா தேர்ந்தெடுத்திருப்பார்??!!//
அதுதான் இவருக்கு உள்ள சிறப்பே! எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தோராவையும், பைபிளையும் படித்து தனது சொந்த சரக்கையும் சிறிது சேர்த்து குர்ஆனாக்கி விட்டார் என்று அநியாயத்துக்கு பழி போடுவீர்கள்.

இந்த விஞ்ஞான யுகத்திலேயே எழுதப் படிக்க தெரியாமலேயே கை நாட்டாகவே இருந்து இறந்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். ஒரு மொழியை ஈஸியாக பேசி விடலாம். ஆனால் இலக்கண சுத்தத்தோடு பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் அதுவம் இன்றைய அறிவியலுக்கு மாற்றமில்லாத ஒரு இலக்கியத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. இதனால்தான் அன்றைய பெரும் கவிஞர்கள் எல்லாம் 'இது முகமதின் வார்த்தைகள் அல்ல' என்று அடித்துக் கூறினார்கள்.

//அதிலும் மெக்காவிலும் மெதீனாவிலும் வைத்து சொன்ன வசனங்கள் தீவிரத்தில் மாறுபட்டிருப்பதேன்?//
இந்த வசனம் மக்காவில் அருளப்பட்டது: இந்த வசனம் மதினாவில் அருளப்பட்டது என்று எந்த குறிப்பும் மூலப்பிரதியில் இல்லை. விரிவுரை எழுதியவர்கள் தாங்களாகவே இங்குதான் அருளப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவில் ஓரத்தில் குறித்திருப்பார்கள். இதற்கு ஹதீது ஆதாரம் கிடையாது. அதை தெரியாததால் வசனங்களின் பொருள்களில் மாறுதல் ஏதும் வந்து விடப் போவதில்லை. எனவே இது தேவையில்லாத ஆராய்ச்சி.

//எனக்கும் பிடித்த பெயராகப் போய் விட்டது.//
இறைவனுக்கு பிடித்தவாறு வாழ்க்கையில் நடந்து நீங்களும் சுவனத்தை அடைய பிரார்த்திக்கிறேன்.

தருமி said...

//அதுதான் இவருக்கு உள்ள சிறப்பே! எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தோராவையும், பைபிளையும் படித்து தனது சொந்த சரக்கையும் சிறிது சேர்த்து குர்ஆனாக்கி விட்டார் என்று அநியாயத்துக்கு பழி போடுவீர்கள்.//

இதைத் தான் கிளிப்பிள்ளைப் பதில் என்று கூறுகிறேன்.

எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும்தான் சொந்த சரக்கைச் சேர்க்க முடியுமா? வாயினால் சொல்லும்போது சேர்க்க முடியாதோ?

இதெல்லாம் என் முயலுக்கு மூன்று கால் கதை தான். நீங்கள் ஏமாந்து நம்பிக்கொண்டிருப்பது போதும்; எங்களையும் அதே போல் ஏமாந்திருக்க சொல்லாதீர்கள் ...

தருமி said...

//நீங்களும் சுவனத்தை அடைய பிரார்த்திக்கிறேன். //

அய்யா ... ஜாலி .. ஜாலி!!!!!!

ஆனாலும் இந்த வாழ்க்கையில் மறுக்கப்பட்டவைகளுக்கு அடுத்த வாழ்வில் ஆசைப்படுவது.,, அனுபவிப்பது .. அவைகளுக்குப் ‘பிரியவனாக’ இருப்பது தவறாகப் படுகிறது!!! ம்ம்.. ம்.. என்ன செய்வது ...?!

தருமி said...

//விரிவுரை எழுதியவர்கள் தாங்களாகவே இங்குதான் அருளப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவில் ஓரத்தில் குறித்திருப்பார்கள். ...எனவே இது தேவையில்லாத ஆராய்ச்சி.//

அப்படிப் போடுங்க ... நமக்கு எப்படி வேணுமோ அப்படி மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். நல்ல philosophy!

பின்னால் சொன்ன வஹித்துகளில் தீவிரத்தன்மை கூடியுள்ளது என்பது நிஜம். அதை மறைக்க அதை தேவையில்லாத ஆராய்ச்சி என்று சொல்லி விடலாம்.

:)

வால்பையன் said...

// தமிழைப் போலவே தொன்மையான மொழிகளில் ஒன்று அரபி.//

ஆனால் தமிழில் ஒருவர் அவரது கருத்தை பகிர அடைமொழி தேவைப்படுவதில்லையே!

//சுவனப்பிரியன், அன்பழகன், அறிவழகன், ஆரோக்கியம் போன்ற அழகிய தமிழ் பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ளலாம். //

வைத்து கொள்ளலாமா அல்லது வைத்த பெயரா?

பிறப்பால் இஸ்லாமியராக இருப்பவர்கள் பின்பு உண்மை அறிந்து கடவுள் மறுத்தாலும் அடையாள பெயர் அதுவாகவே இருப்பதில் அவர்கள் கஷ்டமாக நினைப்பதில்லை. பெயர் என்பது அழைக்கத்தானே ஒழிய இவன் என்ன மதம் என கண்டறிய அல்ல!

சாம் ஜார்ஜ் என்றால் ஓ நீங்கள் கிறிஸ்தவரா என்பீர்கள், இல்லை நான் மனிதன் என்பார்!

//இப்றாஹீம்(ஆப்ரஹாம்) என்ற பெயர் அராபிய பெயர் அல்ல. ஆனால் முஸ்லிம்கள் பரவலாக வைக்கின்றனர். //

நீங்கள் தொங்கி கொண்டிருப்பதே ஆப்ரஹாம மதத்தின் வாலில் தானே!

வால்பையன் said...

//ஏசு நாதருக்கும் ஆப்ரஹாமுக்கும் ஓரளவு காலத்தை கணிக்க முடியும். மற்ற தூதர்களின் காலம் துல்லியமாக தெரியவில்லை. //

அதற்கு முன் அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் என்னாச்சு? அதில் காலம் இருக்குமே. மேலும் ஆதமாமில் இருந்து வரிசையாக வாரிசுகள் பெயர் ஏசு வரைக்கும் அவர்கள் வேதத்தில் உள்ளதே அதை வைத்து கூட கணக்கிடலாமே!

//அது தெரிந்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஏனெனில் குர்ஆன் இறங்கியவுடன் மற்ற வேதங்களின் சட்டங்கள் மனிதக் கரங்கள் பட்டதால் ஒதுக்க வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளை.//

குரானில் பட்டதெல்லாம் மனிதகரங்கள் இல்லையா?

ஒரு விசயத்தை நீங்களே சில வருடங்கள் கழித்து அட்சரம் பிசுகாமல் சொல்லமுடியாது. ஆனால் குரான் அப்படியே இருக்கிறது என்று புருடா விடுகிறீர்கள், அதுவும் நல்லது தான் இல்லையென்றால் அப்போதே கனியை மலராக மாற்றீயிருப்பீர்களே!

வால்பையன் said...

//கடவுள் ஏமாற வில்லை. இன்று நானும் நீங்களும் இது சம்பந்தமாக இணையத்தில் விவாதித்துக் கொண்டிருப்போம் என்ற செய்தியும் முன்பே இறைவன் புறத்தில் பதியப்பட்டிருக்கிறது. எனவே ஆதம் நபி முதல் நபிகள் நாயகம் வரை இறைத் தூதர்களை அனுப்புவது என்பது முன்பே இறைவனால் முடிவு செய்யப்பட்டது. இப்படி ஒரு விளையாட்டை இறைவன் ஏன் நம்மோடு விளையாட வேண்டும் என்ற கேள்விக்குத்தான் நியாயத் தீர்ப்பு நாளில் பதில் சொல்வதாக இறைவன் கூறுகிறான்.//

நம்மோடு விளையாடுகிறாரா? :))

தருமி said...

சுவனப்பிரியன்,

ஏற்கெனவே விவாதங்களின் நடுவே தனிமனிதத் தாக்குதல் வேண்டாமென்று கூறியிருந்தேன். அதையும் மீறி என் பதிவுகளில் நீங்கள் எழுதியதால், அதற்கு மறுப்பாக வந்த பின்னூட்டத்தை, எனக்குப் பிடிக்காத வார்த்தைகள் இருந்தும், அனுமதித்துள்ளேன்.

தருமி said...

இந்த வாழ்க்கையில் நான் சொன்னபடி நடந்தால் மறு வாழ்வில் எல்லையில்லா மது, எண்ணிக்கையில்லா மாது, குறையாத பாலின ஆற்றல் என்று பரிசாகச் சுவனத்தில் தருவேன் என்பது அந்தக் கடவுளுக்கும் கேவலம்.

இந்த வாழ்வில் தீது என்று தள்ளிவைக்கப்பட்ட தீயவைகளை கடவுள் சுவனப்பரிசாகத் தருவாரென்ற நம்பிக்கையில் நல்லவைகள் / தீயவைகள் (தீவிரவாதம்) செய்து அந்தச் சுவனத்தின் மேல் பிரியமுடன் இருப்பது ஒரு மனிதனுக்கும் கேவலம்.

உங்கள் மதத்தின் இந்த அடிப்படை உண்மை எனக்குக் கசக்கிறது.

suvanappiriyan said...

தருமி!

//எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் மட்டும்தான் சொந்த சரக்கைச் சேர்க்க முடியுமா? வாயினால் சொல்லும்போது சேர்க்க முடியாதோ?//

வாயினால் சொல்வதில் தவறுகள் வராதா? 'பின்னோக்கி செல்லும் இரவு' என்பதை கல்லூரி பேராசிரியரான உங்களுக்கே அதுவும் அறிவியல் யுகத்தில் வாழும் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த உங்களுக்கு விளங்கவில்லை. படிப்பறிவற்ற சமூகத்தில் வாழ்ந்த எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் இந்த உண்மைகளை எப்படி சொல்ல முடிந்தது. இது மட்டுமா? இது போல் குர்ஆனில் நூற்றுக்கணக்கான வசனங்களை அவரால் எப்படி சொல்ல முடிந்தது என்ற கேள்விக்கான உங்களின் பதில் என்ன?

'குர்ஆனை முஹம்மது இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் (தருமி போன்றவர்கள்) கூறுகிறார்களா? 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். இறைவனையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்' என்று முஹம்மதே கூறுவீராக!'
-குர்ஆன் 10:38

சித்திரவீதிக்காரன் said...

எனக்கு ஆத்திகமும் முக்கியமில்லை. நாத்திகமும் முக்கியமில்லை. மனிதம் தான் முக்கியம். அதைத்தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
-கமல்ஹாசன்.

பொதுவாக இறை நம்பிக்கை எனக்கு இருந்தாலும் நிறுவன மதங்கள் எதன் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்துவாக பிறந்தாலும் அதற்கு வெளியே இருக்கவே விரும்புகிறேன்.
கமல்ஹாசன் சொல்வதைத் தான் நானும் பின்பற்ற விரும்புகிறேன். நல்ல பகிர்வு. நன்றி.

தருமி said...

//'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். இறைவனையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்து கொள்ளுங்கள்' என்று முஹம்மதே கூறுவீராக!'//

ஒண்ணு சொல்றேன்; கோவிச்சுக்காதீங்க. இந்த ‘அறைகூவல்’ ரொம்ப சின்னப்பிள்ளைத் தனமா இருக்கு!

ஒரு அஞ்சு வயசுப்பிள்ளைட்ட போய் நீங்களோ நானோ ஒரு சவால் இடுவோமா? very pathetic challenge ...பாவம் அந்தக் கடவுள்!

எல்லாம் தெரிந்த எந்தக் கடவுளாவது இப்படியெல்லாம் தன் படைப்புகளையே பார்த்து இப்படி ஒரு சவால் கொடுக்குமா? இந்த ஒரு வசனத்தை வைத்தே இது கட்டாயம் ஒரு சராசரி மனிதனின் வார்த்தைகள் என்பது புரிகிறது.

கடவுளை / அல்லாவை இந்த அளவு கீழே இறக்காதீர்கள். பாவம் அந்தக் கடவுள்!

ஆனால் இதெல்லாம் யோசிப்பவர்களுக்கு மட்டுமே!

தருமி said...

//இந்த வாழ்க்கையில் நான் சொன்னபடி நடந்தால் மறு வாழ்வில் எல்லையில்லா மது, எண்ணிக்கையில்லா மாது, குறையாத பாலின ஆற்றல் என்று பரிசாகச் சுவனத்தில் தருவேன் என்பது அந்தக் கடவுளுக்கும் கேவலம்.

இந்த வாழ்வில் தீது என்று தள்ளிவைக்கப்பட்ட தீயவைகளை கடவுள் சுவனப்பரிசாகத் தருவாரென்ற நம்பிக்கையில் நல்லவைகள் / தீயவைகள் (தீவிரவாதம்) செய்து அந்தச் சுவனத்தின் மேல் பிரியமுடன் இருப்பது ஒரு மனிதனுக்கும் கேவலம்.

உங்கள் மதத்தின் இந்த அடிப்படை உண்மை எனக்குக் கசக்கிறது.//

சுவனப்பிரியன்,
இது பற்றி இன்னும் ஏதும் சொல்லவில்லையே?
காத்திருக்கிறேன்.....

suvanappiriyan said...

தருமி!

//இந்த வாழ்வில் தீது என்று தள்ளிவைக்கப்பட்ட தீயவைகளை கடவுள் சுவனப்பரிசாகத் தருவாரென்ற நம்பிக்கையில் நல்லவைகள் / தீயவைகள் (தீவிரவாதம்) செய்து அந்தச் சுவனத்தின் மேல் பிரியமுடன் இருப்பது ஒரு மனிதனுக்கும் கேவலம்.//

வட்டி வாங்கக் கூடாது என்று யார் சொன்னது? இறைவன்தான் எனக்கு கட்டளையிடுகிறான். எனவே எனக்கு லாபம் என்றாலும் நான் வட்டி வாங்குவதில்லை: குடிப்பதில்லை: விபசாரம் செய்வதில்லை: திருடுவதில்லை: மனிதன் என்ற முறையில் இந்துக்களிலும் பலர் இதுபோன்ற நல்ல குணங்களை பின் பற்றுபவர்கள் உண்ணார்கள். ஆனால் இதனை நான் இறைவன் தடுக்கிறான் என்பதற்காக ஒரு வைராக்கியத்தோடு இருக்கிறேன். இங்கு இழந்த சில சுகங்களுக்காக இறைவன் மறுமையில் பரிசளிப்பதாக வாக்களிக்கிறான். அதுதானே முறையும் கூட.

மனிதனுக்கு கேவலம் என்பது உங்களின் எண்ணம். எனக்கு நான் பொறுத்துக் கொண்டதற்காக இறைவன் எனக்கு தரும் பரிசாக நினைக்கிறேன்.

//உங்கள் மதத்தின் இந்த அடிப்படை உண்மை எனக்குக் கசக்கிறது//

எனக்கு இனிக்கிறது.

தருமி said...

//மனிதனுக்கு கேவலம் என்பது உங்களின் எண்ணம். //

மனிதனுக்கும் மட்டுமல்ல; தரும் கடவுளுக்கும், பெரும் மனிதனுக்கும் கேவலம் என்றல்லவா கூறியுள்ளேன்.

//இறைவன் எனக்கு தரும் பரிசாக நினைக்கிறேன்.//

நல்ல இறைவன்! மிக நல்ல பரிசு!!

ஜமாய்ங்கள்!!!!!!!!!!!!!!

சார்வாகன் said...

வணக்கம் அய்யா!!!!!!!!!!!!!
சில விளக்கங்கள்
/1.நான் வட்டி வாங்குவதில்லை வட்டி வாங்கக் கூடாது என்று யார் சொன்னது? இறைவன்தான் எனக்கு கட்டளையிடுகிறான். எனவே எனக்கு லாபம் என்றாலும் நான் வட்டி வாங்குவதில்லை:/
****************
முதல் வாக்கியத்தை போலவே மற்ற வாக்கியங்களையும் விரிவு படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள்.
*************************
/2.குடிப்பதில்லை/

/3.விபசாரம் செய்வதில்லை/

4./திருடுவதில்லை/:

5/மனிதன் என்ற முறையில் இந்துக்களிலும் பலர் இதுபோன்ற நல்ல குணங்களை பின் பற்றுபவர்கள் உண்ணார்கள். ஆனால் இதனை நான் இறைவன் தடுக்கிறான் என்பதற்காக ஒரு வைராக்கியத்தோடு இருக்கிறேன்./

6/இங்கு இழந்த சில சுகங்களுக்காக இறைவன் மறுமையில் பரிசளிப்பதாக வாக்களிக்கிறான்/
______

அதாக‌ப் ப‌ட்ட‌து இந்த‌ விஷ‌ய‌ங்க‌ள் அனைத்துமே சுக‌ங்க‌ள். அத‌னை இஸ்லாமிய‌ர்க‌ள் அல்லா குரானில் சொல்லி விட்ட‌ ஒரே கார‌ண‌த்திற்காக ம‌ட்டுமே த‌விர்க்கின்ற‌ன‌ர்.ஆனால் சில‌ விவரமில்லாத‌ இந்துக்கள் இயல்பாகவே தவிர்க்கின்றனர். இவர்களுக்கு சுவனத்தில் இதற்கான வெகுமதி கிடைக்காது!!!!!!!!!ஹா ஹா ஹா

இது இஸ்லாமியர்களுக்கு அல்லா இழைத்த அநியாயம்(?) என்பதால் சுவனத்தில் இவைகளை அனுமதித்து ஈடு செய்கிறார்.‌ஆகவே இஸ்லாமியர்கள் குரானை பின் பற்றுவது இஸ்லாமியரல்லாதவர்களுக்கு ஒரு அளவுக்காவது நல்லது, பாதுகாப்பு!!!!!!!!!!!!. .இன்னும் கூட ஷாரிய குற்றவியல் சட்டங்கள் உலக முழுதும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அவர்களை நல்வழிப் படுத்த‌ அமல் படுத்துவதும் அவசியம். ஆகையால் அவர்களை குரானில் இருந்து திசை திருப்பாதீர்கள் என்பது நம் வேண்டுகோள்!!!!!!!!!!

suvanappiriyan said...

சார்வாகன்!

//அதாக‌ப் ப‌ட்ட‌து இந்த‌ விஷ‌ய‌ங்க‌ள் அனைத்துமே சுக‌ங்க‌ள். அத‌னை இஸ்லாமிய‌ர்க‌ள் அல்லா குரானில் சொல்லி விட்ட‌ ஒரே கார‌ண‌த்திற்காக ம‌ட்டுமே த‌விர்க்கின்ற‌ன‌ர்.ஆனால் சில‌ விவரமில்லாத‌ இந்துக்கள் இயல்பாகவே தவிர்க்கின்றனர். இவர்களுக்கு சுவனத்தில் இதற்கான வெகுமதி கிடைக்காது!!!!!!!!!ஹா ஹா ஹா//

'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் (யூத, கிறித்தவ மதத்தை சாராத மற்றவர்கள். எ.கா இந்துக்கள்)இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்'
-குர்ஆன் 2:62

குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதர் தெரஸா போன்றவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகளாக இருந்து இறைபணியை முழுமையாக செய்திருந்தால் நிச்சயம் இறைவனிடம் அவர்களின் செயல்களுக்கேற்ற கூலி தருவதாக இறைவன் குர்ஆனில் கூறுகிறானே சார்வாகன்.....

தருமி said...

//குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதர் தெரஸா போன்றவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகளாக இருந்து இறைபணியை முழுமையாக செய்திருந்தால் நிச்சயம் இறைவனிடம் அவர்களின் செயல்களுக்கேற்ற கூலி தருவதாக இறைவன் குர்ஆனில் கூறுகிறானே //

சாமீ,
இந்த மூணு பேரையும் உட்ருங்க; பாவம் அவங்க .. நல்ல மனுசங்க வேற ...

நானே காத தூரம் ஓடுறேன் உங்க சுவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும்.

உங்க சுவனத்தின் “அழகு” பற்றிக் கேள்விப்பட்டா, அவங்க ஏழு காத தூரம் பறந்திருவாங்க. அவங்களுக்குப் போய் இப்படி ‘தண்டனை’ கொடுக்குறீங்களே ... நல்லா இல்லைங்க!!

கோவி.கண்ணன் said...

//நானே காத தூரம் ஓடுறேன் உங்க சுவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும்.

உங்க சுவனத்தின் “அழகு” பற்றிக் கேள்விப்பட்டா, அவங்க ஏழு காத தூரம் பறந்திருவாங்க. அவங்களுக்குப் போய் இப்படி ‘தண்டனை’ கொடுக்குறீங்களே ... நல்லா இல்லைங்க!!//

எனக்கு நித்ய கன்னிகைகள் மீது ஆசை இல்லை. எனக்கு அந்த சுவனம் வேண்டாம். :)

NO said...

நண்பர் திரு தருமி,

ரஸ்ஸல் ஒரு மாபெரும் மனிதர்! பல வருடங்களுக்கு முன் நான் படித்த முதல் நாத்திகவாத எழுத்துக்கள் அவருடையது!!

என்னை பொறுத்தவரையில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட மாமனிதர்களின் பட்டியலில் டாப் ஐந்தில் வருபவர் இவர் அதாவது என்னைபொருத்தவரை
இங்கிலாந்தில் உதித்து பின்னர் உலகில் பலரை நல்லவிதமாக சிந்திக்க வைத்தவர்கள் - நியூட்டன்,டார்வின், தாமஸ் பெயின், ரஸ்ஸல், ரிச்சர்ட் டாகின்ஸ்!!
(பெர்னார்ட் ஷா ஐர்லாண்டுக்காரர்). இன்னும் பலர் உள்ளார்கள் ஆனால் நான் டாப் ஐந்து என்று கருதுபவர்கள் இவர்கள்!!

நல்லதை சொல்லும்பொழுது நகைச்சுவை தேவைதான் என்பதற்கு எடுத்துக்காட்டாக நண்பர் திரு சுவனப்பிரியன் இங்கே உலாவுகிறார் போலும்!!!
பாவம் இங்கே நல்லவை சொல்லுவது நீங்கள், நகைச்சுவை என்று புரியாமல் பேசும் அவர்!!

இவரைப்போன்ற சுத்தமான முற்றிலுமாக பிரைன் வாஷ் செய்யப்பட்ட ஜந்துக்கள் இந்த மனித சமுதாயத்தையே மூடர்களின் விளையாட்டு திடலாக்கி உளறலுக்கு
புனிதத்துவம் கொடுத்து மேலும் அதை ஏற்காதவர்களுக்கு ஆபத்து விளைவிக்க தயங்காத மத பொம்மைகளாக மாறக்கூடாது என்ற நோக்கத்தில்தான்
இவர்களெல்லாம் எழுதினார்கள்! ஆனால் பாருங்கள் மூடத்தனம் அதைவிட அசாதாரணமானது! அது உதித்துக்கொண்டே இருக்கும்!!

நண்பர் திரு சுவனப்பிரியன் போன்றவர்கள் அணையிடபட்ட மூட வெள்ளத்தின் தழும்பி வரும் அலை! மத மூர்கத்த்னத்தனங்கள் ஓரளவு புரிந்து கொள்ளப்பட்டு
பல இடங்களில் ஓரளவு அடைத்து வைக்கப்பட்ட இந்த காலகட்டங்களிலும் சுவர்களை உடைத்தோ அல்லது கிடைக்கும் சந்துகளில் ஒழுகி வர துடிக்கும்
வன்மமான நினைவலைகள்!!

காலையில் ஆபிசுக்கு செல்ல காருக்கு பதிலாக புஷ்பக விமானம் வரும் என்று ஒருவன் கூறினால் எப்படி அந்த ஒருவனை பார்ப்பார்களோ அப்படி பார்க்கப்பட வேண்டிய எழுத்துக்களை கையில் வைத்துக்கொண்டு, அதை துதித்து, அதற்க்கு சளைக்காமல் ஆயிரத்தெட்டு விளக்கங்கள் கொடுத்து அதற்க்கு அவர் காட்டும் அதே புனித நோக்கை மற்றவர்களெல்லாம் கூட கொடுக்கவேண்டும் ஏனென்றால் அதுதான் உண்மை என்று கொக்கரிக்கும் இவர், ரஸ்ஸல் என்ன எவன் சொன்னாலும் கேட்கப்போவதில்லை!!!

While they enjoy all the privileges that the modern science has to offer and while they will laugh if you say that you can fly a magic carpet, the same is venerated and considered true if told as done by his prophet!! While Science has made men to fly to the moon, religion made men to fly into buildings!! Thats what the beliefs of the fanatics can do! There is no such thing a s a peaceful fanatic. He looks so because he has not got the opportunity. The hate and contempt Mr. Suvanapiriyan and his ilk hold inside their heart against people who do not concur with his god and prophet is matched only by the frustration that beholds him for not having the power to make others relent!!!

People like Bertrand Russell put in a lot of work for stopping such in their tracks! A truely great man indeed!

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//எனக்கு நித்ய கன்னிகைகள் மீது ஆசை இல்லை. எனக்கு அந்த சுவனம் வேண்டாம். :)//

உங்கள் விதிப்படி மறுமையில் நீங்கள் சுவனம் புகுவதாக இருந்தால் நீங்கள் விரும்பாவிட்டாலும் வானவர்கள் உங்களை வலுக்கட்டாயமாக சுவனத்தில் தள்ளி விடுவார்கள். இனி வரும் காலங்களில் உண்மையை உணர்ந்து நாத்திகத்திலிருந்து ஆத்திகராக மாறி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைக்கு நீங்கள் தள்ளப்படலாம். யார் கண்டது? :-(

தருமி said...

NO
நன்றிகோவி,

//எனக்கு நித்ய கன்னிகைகள் மீது ஆசை இல்லை. எனக்கு அந்த சுவனம் வேண்டாம். :)//

ஆமாம் கோவி. ஆசை இருக்கோ இல்லியோ .. வேண்டாங்க .. ரொம்ப அசிங்கமா இருக்கு!

//உங்கள் விதிப்படி மறுமையில் நீங்கள் சுவனம் புகுவதாக இருந்தால் நீங்கள் விரும்பாவிட்டாலும் வானவர்கள் உங்களை வலுக்கட்டாயமாக சுவனத்தில் தள்ளி விடுவார்கள். //

என்னங்க கோவி .. இந்த மாதிரி ஒரு டேஞ்சர் இருக்கே. கழுத்தைப் பிடிச்சி தள்ளுனா என்ன ஆவுறது? ஆக .. நல்ல மனுசனா இருந்தா இப்படியும் நடக்குமாமோ...

என்ன பண்ணலாம் .. யோசிச்சி சொல்லுங்க ..!

Anonymous said...

மார்க்க சகோதரர் சுவனப்பிரியன்

//குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார், மதர் தெரஸா //

72 ஹூரிகளையும் கில்மான்களையும் வைத்துகொண்டு இவர்கள் என்ன செய்வார்கள் என்று சிந்தித்தாலே....

வாணாம் ... அப்புறம் அழுதுருவேன்...

தருமி said...

இ.சா.,
‘கில்மான்கள்’ .... யாரிவர்கள்?

தருமி said...

கில்மான்கள் = அடிமைச் சிறுவர்கள்

பதில் தேடி இது கிடைத்தது. சரிதானே?

இது நான் சொன்னதை விட
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப அசிங்கம்’லா?

Anonymous said...

காஃபிர் தருமி,
உங்கள் மீது ஏக்க அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் (ஏதோ கொஞ்சம் இருக்குன்னு நெனக்கிரேன்) நிலவுவதாக

நீங்கள் சொன்னது சரிதான்.
http://en.wikipedia.org/wiki/Ghilman

சுவனத்தின் மீது பலர் பிரியமாக இருப்பதற்கு இந்த உலகத்தில் சிறுவர்களுடன் கில்மா செய்ய அல்லாஹ்வும் அவரது ஏக்க இறைதூதரும் அனுமதி மறுத்தாலும், சுவனத்தில் கில்மானுடன் கில்மா செய்ய நிறைய தருவார் என்பதுதான்.
(கில்மா என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று தெரிகிறதா? இந்த வார்த்தையை தமிழர்களுக்கு கொடுத்துள்ள இஸ்லாமுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக தமிழர்கள் இருக்க வேண்டுமா கூடாதா? ஆனால் மாவு தமிழர்கள் கில்மா என்றால் ஆணும் பெண்ணும் செய்வதையும் கில்மா என்று எடுத்துகொண்டுவிடுகிறார்கள். அது சரியல்ல என்பதை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்)

இஸ்லாமிய அரசர்கள் சாதாரண முஸ்லீம்களுக்கு சுவனத்தில் மட்டுமே கிடைப்பதை இந்த உலகத்திலேயே அனுபவித்து விடுவார்கள். நிறைய கில்மான்கள் வைத்திருக்கும் அரசரே மிகப்பெரிய அரசர்.. மேலே இருக்கும் இணைப்பை பார்க்கவும்.

ய்ய்ய்யாஅல்லாஹ்...

Anonymous said...

மார்க்க சகோ. சுவனப்பிரியன்,

உங்கள் மீது எக்க அல்லாஹின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக(காப்பிரைட் மூஃமின்கள்)

கோவிக்கண்ணனுக்கு நீங்கள் எழுதியது என் நெஞ்சத்தை நெகிழச்செய்துவிட்டது.

//உங்கள் விதிப்படி மறுமையில் நீங்கள் சுவனம் புகுவதாக இருந்தால் நீங்கள் விரும்பாவிட்டாலும் வானவர்கள் உங்களை வலுக்கட்டாயமாக சுவனத்தில் தள்ளி விடுவார்கள். இனி வரும் காலங்களில் உண்மையை உணர்ந்து நாத்திகத்திலிருந்து ஆத்திகராக மாறி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கைக்கு நீங்கள் தள்ளப்படலாம். யார் கண்டது? :-(
//

கோவிக்கண்னன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சுவனக்கன்னிகைகள் அவரை இழுத்துகொண்டு சென்று ஏதோ செய்வார்கள் என்று சொல்லியதை கேட்டதும், ஆஹா இதுவல்லவா ஈமான் என்று எனக்கு புல்லரித்துவிட்டது.

உங்களையும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கில்மான்கள் இழுத்துகொண்டு போய் ஏதோ செய்ய வேண்டும் என்று அல்லாஹ்விடன் துஆ செய்கிறேன். (சுவனத்தை பற்றி முழுவதும் அறிந்து அதற்காக ஏங்குபவர் அல்லவா நீங்கள். உங்களுக்கு இது நிச்சயம் விருப்பமான விஷயமாகத்தான் இருக்கும். சந்தேகமே இல்லை)


ஆஹா அல்லாஹ்!

suvanappiriyan said...

//கில்மான்கள் = அடிமைச் சிறுவர்கள்

பதில் தேடி இது கிடைத்தது. சரிதானே?

இது நான் சொன்னதை விட
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப அசிங்கம்’லா?//

நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்.' என்று லூத் கூறினார்.
-குர்ஆன் 7:81

'நமது கட்டளை வந்த போது அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து அதன் மேற்பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.

அவை உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் இந்த அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.'
-குர்ஆன் 11:82,83

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்க்காகவே லோத் என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்புகிறான். அவர்கள் திருந்தாத காரணத்தால் அந்த ஊரையே தலைகீழாக புரட்டி எடுத்து விட்டதாக இறைவன் கூறுகிறான். அந்த இடம் இன்று வரை மனிதர்கள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக ஆகியுள்ளது. Dead Sea 'இறந்த கடல்' என்று ஜோர்டான் கடல் பகுதியில் இன்றும் அந்த இடத்தை நீங்கள் பார்வையிடலாம். அந்த கடல் பகுதிகளுக்குள் மீன்கள் வந்தாலும் இறந்து விடுகிறதாம். அந்த அளவு உப்பின் அளவு மற்ற கடல்களை விட அதிகரித்திருப்பதே காரணம். குர்ஆன் பெரும்பாவங்களில் ஒன்றாக ஓரினச் சேர்க்கையை கண்டித்திருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற பொயயை நெஞ்சறிந்து சொல்லலாமா?

'அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்'
-குர்ஆன் 52:24

'இளமை மாறாத சிறுவர்கள் தெளிவான பானம் கொண்ட கிண்ணத்துடனும், குவளைகளுடனும் தட்டுக்களுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்'
-குர்ஆன் 56:17,18

இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!

தருமி said...

//இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!//

fantastic explanation!

//ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்க்காகவே லோத் என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்புகிறான். //

ஆஹா! இதுவும் நல்லா இருக்கு.

ஆனால் ஒரு விசயம் ரொம்ப உதைக்குதே!

இந்த உலகத்தில் தண்ணி அடிக்காதே என்கிற உங்களிறைவன் ஏன் தண்ணியை நதியாகவே சுவனத்தில் ஒட விட்டிருக்கிறான்.

//இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு// இப்படிச் சொல்லிவிட்டு, இந்த உலகத்தில் பாலின உறவுகளுக்குச் சட்ட திட்டம் போட்ட உங்களிறைவன் ஏன் ’தலைக்கு 72 பிடி’ என்று அப்படி ஒரு ‘கூலி’யைச் சுவனத்தில் இவ்வளவு தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுக்கிறான்? அநியாயமாகவும் அக்கிரமாகவும் தெரியுதே!

இதைத்தான் நான் முன்பே கேட்டேன். இந்த உலகில் மதுவும், மாதுவும் தவறானவை என்று சொல்லி நம்மிடமிருந்து ஒதுக்கிய அல்லா எப்படி மறு வாழ்க்கையில் ஒதுக்கிய அத்தீமைகளைக் கூலியாக ‘தாராள மனசோடு’ இப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன் என்றுதான் கேட்டிருந்தேன். அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு என்ன கொடுப்பான் என்று முன்பே கேட்ட என் கேள்விக்கு இதுவரை பதிலேதும் இல்லை.

இதே போல் தான் கில்மான் விவகாரமும். இங்கு தடை; அங்கே அப்படியில்லையோ!

நல்லா இருக்கு உங்க மதச்சட்டங்கள்!

விக்கியில் கில்மானுக்குக் கொடுத்த வாசகங்கள்: The ghilman are also credited with producing a strongly homosexual sub-culture which left literary traces in Persian poetry.

According to the Qur'an, the ghilman are creatures who work in alongside their female counterparts called the houris in Paradise, in the service of the righteous Muslims. The promise of this reward is repeated four different times in the Qur'an.

yasir said...

//எழுதப்படிக்கத் தெரியாத ஒருவரால் எப்படி அறிவுப் பூர்வமாக சொல்ல முடிந்தது? அதுதான் தனிச் சிறப்பு. இது இசுலாமியர்கள் கேட்கும் நவீன கேள்விகளில் ஒன்று.

ஏன் முடியாது? என்பதே அதன் பதிலுக்கான கேள்வியாகும். எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் சிந்தனைத் திறன் கொண்ட,வாய் பேசும்,இரு கைகள் கொண்ட எவராலும் இது முடியும். மனநலம் குன்றிய,வாய் பேச வராத,இரு கைகளும் இல்லாத ஒருவரால் தான் முடியாது. இப்படிப் பட்ட ஒருவரை அல்லா தேர்ந்தெடுத்து தனி ஒருவரால் தன் வேதத்தை பூர்த்தி செய்திருந்தால் தான் தனிச் சிறப்பாக கருத முடியும். பின்னோக்கிச் செல்லும் இரவு என்பதற்கு,எக்காலத்திற்கும் உகந்த விளக்கத்தை அதன் அடைப்புக் குறியிலேயே,மூல வேதத்திலேயே தந்திருந்தால் தான் தனிச் சிறப்பு என்பதாக அர்த்தம். காலத்திற்கேற்ற விளக்கத்தை அந்தந்த காலத்து அறிஞர்கள் தருவதற்கு பெயர் தனிச் சிறப்பல்லவே.....

suvanappiriyan said...

தருமி!

//விக்கியில் கில்மானுக்குக் கொடுத்த வாசகங்கள்: The ghilman are also credited with producing a strongly homosexual sub-culture which left literary traces in Persian poetry.

According to the Qur'an, the ghilman are creatures who work in alongside their female counterparts called the houris in Paradise, in the service of the righteous Muslims. The promise of this reward is repeated four different times in the Qur'an.//

விக்கியில் வரும் செய்திகள் எல்லாம் குர்ஆனுக்கோ அரபு மொழிக்கோ ஆதாரமாக கொள்ள முடியாது. விக்கியில் வரும் செய்திகளை நானோ நீங்களோ கூட உறுப்பினராக இருக்கும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

மதுரையில் அரபு மொழி தெரிந்தவர்களிடம் 'கில்மான்களுக்கு' என்ன பொருள் என்று கேட்டுப் பாருங்கள். இல்லை என்றால் கூகுளில் அரபு டிக்சனரியில் 'கில்மான்கள்' என்று அரபியில் அடித்துப் பாருங்கள். 'யங்மென்' என்றுதான் பதில் வரும். நான் கொடுத்துள்ள ஒரு சுட்டியில் நீங்களும் முயற்ச்சித்து பார்க்கலாம்.
http://www.lexilogos.com/english/arabic_dictionary.htm
gilman=young men

//அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு என்ன கொடுப்பான் என்று முன்பே கேட்ட என் கேள்விக்கு இதுவரை பதிலேதும் இல்லை.//

முன்பு பதிலளித்த கேள்வியையே திரும்பவும் கேட்டால் என்ன செய்வது?

'ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்'
-குர்ஆன் 4:124

'ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்'
-குர்ஆன் 40:40

//இதைத்தான் நான் முன்பே கேட்டேன். இந்த உலகில் மதுவும், மாதுவும் தவறானவை என்று சொல்லி நம்மிடமிருந்து ஒதுக்கிய அல்லா எப்படி மறு வாழ்க்கையில் ஒதுக்கிய அத்தீமைகளைக் கூலியாக ‘தாராள மனசோடு’ இப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன் என்றுதான் கேட்டிருந்தேன்.//

இறைவன் தடுத்ததனால் என்னால் வட்டி வாங்க முடியவில்லை. ஒரு பாருக்கு சென்று மது அருந்த முடியவில்லை. எத்தனையோ பேர் சுலபமாக விபசாரத்தில் ஈடுபடும்போது நான் மட்டும் இறைவனுக்கு பயந்து ஒதுங்கி வாழ்கிறேன். இதனால் என் மேல் பிரியப்பட்ட நமது இறைவன் சொர்க்கத்தில் அத்தனை இன்பங்களையும் தருகிறான். தடுத்தவன்தானே என்னை அனுமதிக்கிறான்? இது ஏன் இவ்வாறு என்பதை மறுமையில் நீங்கள் இறைவனிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

naren said...

@ சுவனப்பிரியன் //அவருக்கு பிறகு ஆட்சியாளர் உஸ்மான் அதனை பல பிரதிகள் எடுக்கிறார். குர்ஆன் மனனம் செய்தவர்கள் அதனை ஒப்பிடுகிறார்கள். அதன்பிறகு தான் உலகின் பல நாடுகளுக்கும் அந்த பிரதிகள் அனுப்பப்படுகிறது. அந்த பிரதிகளில் இரண்டுதான் துருக்கியிலும் தாஸ்கண்டிலும் இன்றும் உள்ளது. பல நபித்தேழர்கள் ஒப்பிட்டு பார்த்து சரி செய்ததனால் இடைச் செருகல் வர வாய்ப்பே இல்லை.//

நண்பர் சுவனப்பிரியன், யார் கேள்வி கேட்கிறார்கள் என்று மூலத்தை பார்க்காமல், நீங்கள் மேலேச்சொன்ன செய்தி பொய் என்று விரிவாக இங்கே http://isakoran.blogspot.com/2011/10/blog-post_28.html சொல்லப்பட்டுள்ளது. பதில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

Anonymous said...

மார்க்க சகோ. சுவனப்பிரியன்

உங்கள் மீது எக்க அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாஹ.

உங்களது சிறப்பான தாவாப்பணியை பாராட்டுகிறேன்

இது மன்ஸூக்கான வசனத்தை (நீக்கப்பட்ட வசனம்)

'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் (யூத, கிறித்தவ மதத்தை சாராத மற்றவர்கள். எ.கா இந்துக்கள்)இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்'
-குர்ஆன் 2:62

இந்த வசனம் நாஸிக் செய்துவிட்டது (நீக்கிய வசனம்)

3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

என்பதை குறிப்பிடாமலேயே நீங்கள் செய்யும் தாவாப்பணியில் தமிழர்கள் நன்றாக ஏமாறுவார்கள்.

நம் அல்லாஹ் நமது நபிஹள் நாயஹத்தின் விருப்பத்துக்கேற்ப, அவர் இருக்கும் நிலைக்கு ஏற்ப நாளுக்கு ஒரு வசனத்தை இறக்கி பட்டையை கிளப்பியிருக்கிறார். எதெல்லாம் முன்பு கொடுத்ததோ அதெல்லாம் பின்பு கொடுத்தது அதனை விட மேலானதாக கொடுத்ததாக அள்ளிவிட்டு நம் மூஃமின்களுக்கு அழகாக தாவா பண்ண இடம் கொடுத்திருக்கிறார்.

இன்னொன்று,

நீங்கள் ஏன் வட்டி வாங்காமல், உட்கார்ந்து ஒன்னுக்கு போய், நின்றுகொண்டு தண்ணீர் குடித்து இவ்வளவு கஷ்டப்பட்டு சுவனத்துக்காக உழைக்கிறீர்கள். ஆனால் அல்லாஹ் ரொம்ப ஈஸியான ஷார்ட் கட் கொடுக்கிறான்.

4:95. ஈமான் கொண்டவர்களில் எந்தக் காரணமுமின்றி உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும் வைத்து ஜிகாத் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் ஜிகாத் செய்வோருக்கோ, உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.

இதனால்தான் நமது ஈமான் உள்ள சகோதரர்கள் எல்லா குற்றங்களையும் செய்தாலும் ஜிகாத் செய்து 72 ஹூரிகளையும் கில்மான்களையும் பெற ஜிகாதுக்கு சென்றுவிடுகிறார்கள்.

ஷார்ட் கட்டை அறிந்துகொள்ளுங்கள்

யா அல்லாஹ்

suvanappiriyan said...

//நண்பர் சுவனப்பிரியன், யார் கேள்வி கேட்கிறார்கள் என்று மூலத்தை பார்க்காமல், நீங்கள் மேலேச்சொன்ன செய்தி பொய் என்று விரிவாக இங்கே http://isakoran.blogspot.com/2011/10/blog-post_28.html சொல்லப்பட்டுள்ளது. பதில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.//

சுட்டியை சொடுக்கினால் திறக்கவில்லையே நரேன். அங்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது? நான் சொன்னதற்கு என்ன மாற்றத்தை அந்த பதிவு காண்பிக்கிறது என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் துணையோடு விளக்குங்கள். நானும் அதற்கு விளக்கம் தருகிறேன்.

naren said...

@ சுவனப்பிரியன்:
நண்பர் சுவனப்பிரியன், நீங்கள் கூறிய கூற்று மார்க்க அறிஞர் பி.ஜே அவர்கள் கூறிய கூற்றுதான். அந்த தளத்தில் என்ன கூறியுள்ளது என்பதை இங்கே தருகிறேன் (within backslash).
(நன்றி isakoran.blogspot.com)

பீஜே அவர்கள் தம்முடைய குர்ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.
பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)
பீஜே அவர்கள் கூறியது உண்மையா?
அன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா?
அல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா?
முஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா?
அல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா?

முஸ்லிம்களின் பொய்யான/தவறான வாதம்:

"வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால்: காலிஃபா உஸ்மான் அவர்களின் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட இரண்டு குர்‍ஆன் பிரதிகள் இன்னும் நம்மிடம் உள்ளது. இந்த குர்‍ஆன் பிரதிகளின் வசனங்களையும், அத்தியாயங்கள் அமைக்கப்பட்ட அமைப்பையும் விருப்பம் உள்ளவர்கள் ஒப்பிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம். அதாவது உலகின் எந்த நாட்டிலும் எந்த கால கட்டத்திலும் அச்சடிக்கப்பட்ட அல்லது கைகளால் எழுதப்பட்ட குர்‍ஆனோடு உஸ்மான் கால குர்‍ஆனை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளட்டும். இப்படி ஒப்பிடும் போது, உஸ்மான் கால குர்‍ஆனும் தற்கால குர்‍ஆனும் ஒன்று போலவே இருக்கும், வித்தியாசம் இருக்காது. (Von Denffer, Ulum al-Qur'an, p 64)//
...contd.

naren said...

//உண்மை என்ன?
இன்று அருங்காட்சியங்களில் இருக்கும் பழங்கால முழு குர்ஆன் கையெழுத்துப் பிரதிகள் முஹம்மது மரித்து 100 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும்:


முஹம்மதுவின் காலத்துக்கு சம்மந்தப்பட்ட குர்ஆன் தங்களிடம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் கூறிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டாலும், உண்மை வேறு விதமாக உள்ளது.

இரண்டு பழங்கால குர்ஆன் பிரதிகளின் ஒரு பகுதி இரண்டு இடங்களில் உள்ளது. தாஸ்கண்ட் என்ற இடத்தில் சமர்கண்ட் (Samarqand MSS) என்ற குர்ஆன் கையெழுத்துப் பிரதி உள்ளது. இன்னொரு குர்ஆன் கையெழுத்துப் பிரதி இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள தாப்காபி (Topkapi) அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளும் "க்யூபிக் (Kufic)" என்ற எழுத்தில் எழுதப்பட்டவைகளாகும். இந்த கையெழுத்து பிரதிகள் முஹம்மது மரித்த பிறகு 200 ஆண்டுகளுக்கு பின்பாக எழுதப்பட்டவைகள் என்று இஸ்லாமிய பண்டிதர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு வேளை இந்த இரு பிரதிகளும் அக்காலத்திற்கு முன்பு எழுதப்பட்டு இருந்தால், அவை இரண்டும் "மைல் (Ma'il)" அல்லது "மஸ்க் (Mashq)" என்ற எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்திருக்கும். ஜான் கிள்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்ஆன்" என்ற புத்தகத்தில் இதே முடிவுரையை கூறியுள்ளார் (John Gilchrist, Jam' Al-Qur'an, Jesus to the Muslims, 1989)

தாஷ்கண்ட் என்ற இடத்தில் இருக்கும் சமர்கண்ட் குர்ஆன் கையெழுத்துப் பிரதி, முழு குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே உள்ளது . மான் தோலில் பெரிய அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட 250 பக்கங்கள் உள்ளன. இந்த அரபி எழுத்துக்கள் "ஹெஜாஜ்" என்ற சௌதி அரேபியா எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது (கியூபிக் – Kufic Script).

நம்மிடம் "மைல் (Ma'il style of script)" என்ற அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட குர்ஆன் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. இந்தப் பிரதி லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (Lings & Safadi 1976:17,20; Gilchrist 1989:16,144). மார்டின் லிங்க்ஸ் (Martin Lings) என்பவர் ஒரு இஸ்லாமியர் மட்டுமல்ல, அவர் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதிகளை பாதுகாக்கும் பதவியில் (Curator) இருந்தவர் ஆவார். அவர் இந்த மைல் கையெழுத்துப் பிரதியை கி.பி. 790 காலத்துக்கு சம்மந்தப்பட்டது என்று கணக்கிட்டுள்ளார். யாசீர் க்ஹாதி என்பவர் "வேறு ஒரு இஸ்லாமிய அறிஞர் (Islamic Masters/PhD scholar)" என்பவர் கூறியதாக அறிவித்ததாவது என்னவென்றால், "மூல குர்ஆனுக்கு ஒத்து இருப்பது சமர்கண்ட் கையெழுத்து பிரதியாக இருக்க வாய்ப்பு உள்ளது".//
....contd.

naren said...

//இஸ்தான்புல் நகரில் உள்ள பழங்கால தாப்காபி குர்ஆன் கையெழுத்துப் பிரதி இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள், அந்த குர்ஆனின் (அனைத்து பக்கங்களின்) புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற விஷயம் இஸ்லாமியர்களுக்கும் தெரியாது. ஆகையால், அந்த கையெழுத்துபிரதி மீது எந்த ஒரு முழுமையான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. இதனால் தான் விவாதம் புரியும் இஸ்லாமிய அறிஞர் எம். ஸைபுல்லாஹ் கீழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்: "தாப்காபி கையெழுத்துப் பிரதி பற்றி கேட்டால், இந்த பிரதியில் எந்த ஒரு ஆராய்ச்சியும் நடந்ததாக தெரியவில்லை "(Who's Afraid Of Textual Criticism?, M. S. M. Saifullah, 'Abd ar-Rahman Squires & Muhammad Ghoniem). இந்த தாப்காபி கையெழுத்து பிரதியில் இருக்கும் விவரங்களை வெளியிட, உலக மக்கள் அவைகளை பார்வையிட இஸ்லாமியர்கள் பயப்படுவதற்கு காரணம் என்ன? குர்ஆன் 2:111ல் "…நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள் என்று கேட்பீராக! " என்று கூறுகிறதல்லவா? இதை இஸ்லாமியர்களே ஏன் செய்யக்கூடாது?

மிகவும் பழமையான குர்ஆன் கையெழுத்துப் பிரதி கூட (fragmentary - ஒரு சிறிய துண்டு கையெழுத்துப் பிரதி) முஹம்மது மரித்த 100 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டது தான்.

இதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் காலத்து கல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள், கையெழுத்து பிரதிகள் என்று எவைகளை பார்த்தாலும், அவைகளில் "முஹம்மது ஒரு நபி" என்ற சான்று இவைகளில் எதிலும் காணமுடியாது.

நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றுச் சொன்னால், மிகவும் இறைநம்பிக்கைக்கொண்ட இஸ்லாமியர் அஹ்மத் வொன் டென்பர் (Ahmad Von Denffer) என்பவர் கூறுவதையாவது கேளுங்கள். இவர் தம்முடைய "உலும் அல் குர்ஆன்" என்ற புத்தகத்தின், "குர்ஆனின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் " என்ற அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:
"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)//
...end

naren said...

மேலே சொன்ன பதிவிற்கு மார்க்க சகோதரர்கள் இந்த பதிவின் http://isaakoran.blogspot.com/2011/10/quran-oldest-manuscript.html மூலம் பதில் அளித்துள்ளனர். ஒரு தெளிவான பதிலை எதிர்ப்பாத்தால் ஏமாற்றமே.

அந்த பதில் பதிலில் ( நன்றி: isaakoran.blogspot.com)
// முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது.

பார்க்க: http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm

இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது "It was completed in the year 651, only 19 years after Muhammad's death." முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று.

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood." அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று..//

//இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

திரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே!!! ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? //

naren said...

அந்த பதில் பதிவிற்கு http://isakoran.blogspot.com/2011_10_01_archive.html பதில்.


//அதாவது உலகின் பழமை வாய்ந்த இஸ்லாமிய புனிதச் சின்னமாகிய குர்‍ஆன், ஒரு தெளிவற்ற, உலகம் அறியக்கூடாத இடத்தில், வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், "ஒரு அதிமுக்கியமான ஒரு பொருளை முக்கியமற்ற இடத்தில் மறைக்கப்பட்டுள்ளது" என்பதாகும்.//


//சரி, போகட்டும், இந்த கட்டுரையில் அவர் கூறவருவதை அவர் ஆய்வு நடத்திச் சொல்கிறாரா? அல்லது செய்திகளை சேகரித்துச் சொல்கிறாரா? என்பதை பார்ப்போம்.//

//இந்த பிபிசி நிருபருக்கு யார் இந்த விவரங்களை கூறினார்கள் என்று பார்த்தால், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு இளம் உதவியாளர்.//

// ஒரு செய்தித்தாளில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு, ஏதோ பெரிய ஆய்வு செய்து அனேக ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை போல,//

//அதாவது செய்திகளைச் சொல்லும்போது, முக்கியமாக மதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்லும்போது, "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி (Muslims believe) " என்று எழுதினால், அதன் அர்த்தம் என்ன?//

//பிபிசி நிருபர் சொல்கிறார், "எந்த வசனங்கள் இறைவனின் வசனங்கள், எவைகள் இறைவன் இறக்காத வசனங்கள் என்ற சண்டையை நிறுத்த, குழப்பத்தை தீர்க்க உஸ்மான், ஒரு பிரதியை உண்டாக்கினாராம்"..இந்த வரிகளை நம் இஸ்லாமியர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்கள் போலும்.

பிபிசி நிருபர்:

About one-third of the original survives - about 250 pages - a huge volume written in a bold Arabic script.

"The Koran was written on deerskin," said Mr Akhmedov. "It was written in Hejaz in Saudi Arabia, so the script is Hejazi, similar to Kufic script."

இன்னும் சிறிது கொஞ்சம் கூர்ந்து படித்தால், அந்த நிருபர் சொல்லவருவது என்ன தெரியுமா? அந்த "A dark stain" என்பது காலிபாவின் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகிறார்களாம். அவர் ஆய்வு செய்து இது இரத்தம் தான் என்றுச் சொல்லவில்லை, அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த வண்ணம் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகின்றார்கள் என்று கூறுகிறார்.//

naren said...

இந்த இரு பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், குரானின் பழமையான மூலப் பிரிதி முகமது இறந்து 200 ஆண்டுகள் பின் தான் இருக்கின்றது. அதுவும் முழுமையானதாக இல்லாமல்.

உத்மானால் தொகுகப்பட்ட குரான் உலகில் இல்லை.

அதனால் குரானும் செவி வழிச் செய்திதான்.

தருமி said...

சுவனப்பிரியன்
//விக்கியில் வரும் செய்திகள் எல்லாம் குர்ஆனுக்கோ அரபு மொழிக்கோ ஆதாரமாக கொள்ள முடியாது.//
நியாயம் தான். மேற்கோள் கொடுத்ததும் இந்தப் பதில் வரும் என்று நினைத்து விட்டேன். கொடுத்து விட்டீர்கள்.

//அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு என்ன கொடுப்பான் என்று முன்பே கேட்ட என் கேள்விக்கு இதுவரை பதிலேதும் இல்லை.//

//முன்பு பதிலளித்த கேள்வியையே திரும்பவும் கேட்டால் என்ன செய்வது?//

என்ன பதில் கொடுத்திவிட்டீர்கள்! எப்போதும் அதே இரு மேற்கோள்களைக் காட்டி விட்டால் பதில் சொல்லி விட்டதாக நான் எடுத்துக் கொள்ள வேண்டுமோ! கொஞ்சம் ‘பச்சையாகக்’ கேட்க கூச்சப்பட்டு கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலென்றால், இப்போது பச்சையாகவே கேட்டு விடுகிறேன்:

56:7-40
22. அழகிய கண்களை ய்டைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்..24, இவைகள் அனைத்தும் உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும். (நீங்கள் இதைத்தானே இனிக்கும் என்று சொன்னீர்கள்?)
மேலும் -
Al Hadis, Vol. 4, p. 172, No. 34
Ali reported that the Apostle of Allah said, "... When a man desires a beauty, he will have intercourse with them."

ஆண்களுக்கு பாலியல் சுகத்திற்காக இப்படி பெண்கள் கிடைக்குமென்றால் பெண்களுக்கு இணையாக அதுபோல் ஆண்கள் கிடைக்குமா; அவர்களும் பாலியல் சுகம் கொள்வார்களா? (//will have intercourse with them//)

Koran 52:24
Round about them will serve, to them, boys (handsome) as pearls well-guarded.
Koran 56:17
Round about them will serve boys of perpetual freshness.

நீங்கள் சொன்னது போல் ’'இளமை மாறாத சிறுவர்கள்’ என்றே எடுத்துக் கொள்வோம். அவர்களைப் பற்றி குரானில் சொல்லும்போது அவர்களை எதற்காக் - as pearls well-guarded - இப்படி வர்ணிக்க வேண்டும். 'வெறும் உதவி’ செய்யும் இளைஞர்களுக்கு இத்தனை adjectives எதற்கு?

இதே போல் பெண்களுக்கும் இவர்கள் அல்லது இளம் பெண்கள் மது ஓடுகின்ற ஊறிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும் பளிங்குக் கிள்ளங்களையும் ஏந்தியவாறு சுற்றிக் கொண்டு இருப்பார்களா?


Koran 83:23-26
The righteous will surely dwell in bliss. Reclining upon soft couches they will gaze around them: and in their faces you shall mark the glow of joy. They shall be given a pure wine to drink, securely sealed, whose very dregs are musk...

சுவனத்தில் ஆண்களுக்கு குடிக்க மது கரை புரண்டோடும்; குடித்தாலும் ஒன்றுமே ஆகாதாமே! (நீங்கள் இதைத்தானே இனிக்கும் என்று சொன்னீர்கள்?) இதே போல் பெண்களும் கரைபுரண்டோடும் மதுவை குடிப்பார்களா?

இதைப் பற்றியெல்லாம் குரானில் சொல்லவில்லை; ஆகவே எனக்குத் தெரியாது என்று கூறினீர்கள் என்றால் - என் கேள்வி: ஏனிந்த பாலியல் வேறுபாடு கடவுளுக்கு என்பது என் கேள்வி; ஆண்களுக்குக் கொடுப்பது போல் பெண்களுக்கு என்ன கொடுக்கப்போகிறார்?

அல்லது, இதைப் பற்றியெல்லாம் குரானில் சொல்லவில்லை; வேண்டுமானால் மறு வாழ்வு சமயத்தில் அல்லாவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற 1400 வருட மழுப்பல் பதிலைத் தரப்போகிறீர்களா?

தருமி said...

நரேன்
நீங்கள் கொடுத்த தொடர்பு நல்ல சுரங்கமாக உள்ளதே. நன்றி

உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. ஆழப்படிக்கிறீர்கள். என் வாழ்த்துகள்.

என் பதிவுகளைப் பொறுத்தவரை எனக்கு ஒரு பெருமையுண்டு; பதிவுகள் எப்படியோ (?!) வரும் பின்னூட்டங்கள் மிக அர்த்தமுள்ளதாக இருக்கும்.

நன்றி

yasir said...

மனிதனுக்கு என்றுமே பேராசை அதிகம் அதன் தாக்கம் தான் இந்த சொர்க்க சுகங்கள். தான் செத்தாலும் சுகமாக மீண்டும் வாழவே ஆசைப்பட்டு ஏற்படுத்திக் கொடுத்த கற்பனை சுக வாழ்வுதான் மறுமை என்றொரு கற்பனையான வாழ்வு. இதை நம்புகிறவன் நாளை நாம் மீண்டும் சுகமாக வாழ்வோம் என்ற நம்பிக்கையிலேயே சாகிறான் இந்த நம்பிக்கையே அவனுக்கு இறுதி சுகம், இதைத் தவிர வேறொன்றும்(பெரியார் மொழியில் சொல்வதென்றால் ஒரு வெங்காயமும்) இல்லை என்பது நம் போன்றோர்களுக்கு நன்றாகவே தெரிந்த விசயம்.

Nanjil said...

கேள்வி:
//ஆண்களுக்கு பாலியல் சுகத்திற்காக இப்படி பெண்கள் கிடைக்குமென்றால் பெண்களுக்கு இணையாக அதுபோல் ஆண்கள் கிடைக்குமா; அவர்களும் பாலியல் சுகம் கொள்வார்களா? (//will have intercourse with them//) //


பதில் இங்கே : http://suvanathendral.com/portal/?p=1340

ஆடியோவிலயும்,வீடியோவிலயும் போட்டிருக்காங்க. வீட்டுல யாருக்கும் தெரியாம ஹெட் போன காதுல மாட்டிட்டு கேளுங்கோ.

தருமி said...

NANJIL
கேட்டேனுங்க ... அதுக்குப் பக்கத்திலேயே தண்ணியடிச்சா தொழுகை ஏத்துக்கப்படாதுன்னு ஒரு அறிவிப்பும் இருக்கு. இந்த லட்சணத்தில இங்க ஒரு தடையைப் போட்டுட்டு சாமி அங்க கடைய தெறந்து வச்சிருக்காரு. சரியான parody!

அதிலும் சுவன்ப்பிரியன் கொடுத்த அந்த மூணு நல்ல் ஜீவன்களையும் சுவனத்தில் வச்சி நினச்சி பார்க்கவே பயமாவும், அசிங்கமாகவும் தோணுது.எப்படி இஸ்லாமியருக்கு மட்டும் அப்படியெல்லாம் தோணலை. அதுதான் மதம் .. இல்லியா! ஆனாலும் ஆச்சரியம் தான். எப்படிப்பட்ட மூளைச் சலவை!

நானும் இந்தக் கேள்வியை நேரடியாகக் கேட்க கூச்சப்பட்டேன். ஆனால் பதில் சொல்ல அவர்களுக்கு கூச்சம் இல்லை.

எனக்கு இதெல்லாம் கசக்கும் என்றால், அவர்களுக்கு அவை இனிக்கிறதாம்.

suvanappiriyan said...

நரேன்!


//உத்மானால் தொகுகப்பட்ட குரான் உலகில் இல்லை. அதனால் குரானும் செவி வழிச் செய்திதான்.//


மிகவும் சிரத்தை எடுத்து பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். கீழே வரும் ஹதீதுகள் அனைத்தும் முகமது நபியின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளின் அடிப்படையிலேயே அனைத்து குர்ஆன் வசனங்களும் இறங்கியதாக அறிகிறோம். அதிகமான குர்ஆன் வசனங்கள் அவருடைய தோழர்கள் அருகில் இருக்கும் போதே இறங்கியது. இவை அனைத்தையும் மனனம் செய்த எழுதி வைத்த ஆயிரமாயிரம் தோழர்களின் வரலாறு இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1200. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் 'தொழுகைகளில் பேணுதலாக இருங்கள்" என்ற (திருக்குர்ஆன் 02:238) வசனம் அருளப்பட்டது. அதன்பின்னர் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்.
Volume :2 Book :21


1269. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(நயவஞ்சகர்களின்தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்" என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை" என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்" என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.

1360. முஸய்யப்(ரலி) அறிவித்தார்.
அபூ தாலிபுக்கு மரணம் நெருங்கியபோது நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கு அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா ஆகிய இருவரும் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ தாலிபிடம், 'என்னுடைய பெரிய தந்தையே! லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகத்தைச் சொல்லிவிடுங்கள்! அதன் மூலம் நான் அல்லாஹ்விடம் உங்களுக்காகச் சாட்சி கூறுவேன்' எனக் கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும், 'அபூ தாலிபே அப்துல் முத்தலிபின் மார்க்கத்தைப் புறக்கணிக்கப் போகிறீரா?' எனக் கேட்டனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஒருபுறமும் அவ்விருவரும் மறுபுறமாக அவரை வற்புறுத்திக் கொண்டிருக்கும்போது அபூ தாலிப் கடைசியாக, 'நான் அப்துல் முத்தலிப் மார்க்கத்திலேயே (மரணிக்கிறேன்)' என்று கூறியதோடு லாஇலாஹ இல்லல்லாஹ் எனக் கூறவும் மறுத்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் தடுக்கப்படும்வரை உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்" என்று கூறியதும், 'இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதன்று" (திருக்குர்ஆன் 9:113) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.

உங்கள் வாதப்படியே செவி வழியாகவே குர்ஆன் தொகுக்கப்பட்டது என்று ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொண்டாலும் அதனால் குர்ஆனுக்கு என்ன சிறுமை வந்து விட்டது?

suvanappiriyan said...

திருக்குறள் முழுவதையும் மனனமிட்ட தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் தமிழக கிராமங்களில் குர்ஆன் முழுவதையும் மனனமிட்ட (ஹாபிழ்கள்) இஸ்லாமிய தமிழ் இளைஞர்களை பல ஆயிரங்களை பார்க்க முடியும். எங்கள் ஊரில் வருடத்துக்கு 7, 8 மாணவர்கள் குர்ஆனை மனனம் இட்டவர்கள் வெளியாவார்கள். இதனை நான் இங்கு சொல்லக் காரணம் வேற்று மொழியான அரபியில் உள்ள குர்ஆனையே ஆயிரக்கணக்கில் மனனமிட ஆட்கள் இருக்கும் போது முகமது நபிக்கு வஹி இறங்கும் நேரிடையாக பார்த்த அந்த தோழர்கள் எந்த அளவு ஈடுபாட்டோடு சிரத்தையோடு மனனமிட்டும் குறித்தும் வைத்திருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை.

உஸ்மான் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்படும் போது அனைத்து ஹாபிழ்களும் அதனை சரிபார்த்தார்கள். அதன் பிறகே இவை அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டன. இந்த வரலாறுகள் அனைத்தும் இன்றும் ஆவணங்களாக பாதுகாக்கப்படுகினறன. ஒரு மனிதனுக்குள் இரண்டு விதமான மொழி நடைகள் தனது வாழ்நாள் முழுக்க இருக்க சாத்தியம் இல்லை. ஹதீதுகளுக்கும் குர்ஆனின் வசனங்களுக்கும் இலக்கிய தரத்தில் மிகுந்த வேறுபாடு காணப்படுகிறது. இதை அரபி இலக்கணம் படித்தவர்களால் நன்கு உணர முடியும். இன்றைய அறிவியல் கருத்துகளோடு முற்றிலும் மோதாத தன்மை, எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக்கூடிய சட்டதிட்டங்கள், எல்லா தூதர்களையும் சமமாக பாவிக்கும் தன்மை, முகமது நபிக்கு எந்த ஆற்றலும் இல்லை: ஆற்றல்களுக்கெல்லாம் சொந்தக்காரன் இறைவனே என்று குர்ஆனிலேயே வரும் வசனங்கள், மேலும்முகமது நபியையே கண்டிக்கும் பல வசனங்கள் என்று பல இடங்களில் வருவதால் இது முகமது நபியின் கற்பனை அல்ல. ஏக இறைவனின் வாக்குதான். இதில் மனிதர்களின் கரம் கொஞ்சம் கூட புகவில்லை என்பதை ஐயத்திங்கிடமின்றி தெரிந்து கொள்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அவ்வப்போது திருக்குர்ஆன் அருளப்பட்டவுடன் அதை அவர்கள் தமது இதயத்தில் பதிவு செய்து கொள்வார்கள்.
இவ்வாறு பதிவு செய்து கொள்வதற்கு மற்றவர்களைப் போல் அவர்களும் ஆரம்பக் கட்டத்தில் மிகுந்த சிரத்தை எடுக்கலானார்கள். அது தேவையில்லை என்று திருக்குர்ஆன் மூலமாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
(திருக்குர்ஆன் 75:16-19, 20:114)
"திரும்பத் திரும்ப ஓதி மனனம் செய்வதற்காக நீர் முயற்சிக்க வேண்டாம், அதை உமது உள்ளத்திலே ஒன்று சேர்ப்பது நமது பொறுப்பு'' என்று திருக்குர்ஆன் கூறியது.
இன்னொரு வசனத்தில் "உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்'' (திருக்குர்ஆன் 87:6) எனவும் அல்லாஹ் உத்தரவாதம் அளித்தான்.
எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும், கூறியவுடனே ஒலி நாடாவில் பதிவது போல் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.
இறைவன் தனது தூதராக அவர்களை நியமித்ததால் அவர்களுக்கு இந்தச் சிறப்பான தகுதியை வழங்கியிருந்தான். எனவே இறை வனிடமிருந்து வந்த செய்திகளில் எந்த ஒன்றையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறதியாக விட்டிருப்பார்கள் என்று கருதவே முடியாது.

திருக்குர்ஆன் நபிகள் நாயகத் தினுடைய உள்ளத்தில் இவ்வாறு பாதுகாக்கப்பட்டது.
நபித்தோழர்களின் உள்ளங்களில்...

suvanappiriyan said...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் எந்தச் சமுதாயத்தைச் சந்தித்தார்களோ அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும் இருந்தது.
பொதுவாக எழுத்தாற்றல் இல்லாதவர்களுக்கு அதிக அளவிலான நினைவாற்றல் இருப்பதை இன்றைக்கும் கூட நாம் காண்கிறோம். நினைவாற்றல் மூலமாக மட்டும் தான் நம்மால் எதையும் பாதுகாத்து வைக்க முடியும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக இத்தகையோரின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அதிகரிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்கின்ற உண்மை.
எழுதவும், படிக்கவும் தெரியாத அந்தச் சமுதாய மக்களில் தம்மை ஏற்றுக் கொண்டவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அவ்வப்போது அருளப்பட்ட வசனங்களைக் கூறுவார்கள். கூறிய உடனேயே அம்மக்கள் மனனம் செய்து கொள்வார்கள்.
திருக்குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரு நாளிலோ, குறுகிய காலத்திலோ அருளப்பட்டிருந்தால் அதை அந்தச் சமுதாயத்திற்கு மனனம் செய்து கொள்ள இயலாமல் போயிருக்கலாம்.
23 ஆண்டுகளில் இந்தக் குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டிருப்பதால் மனனம் செய்வது மிகவும் எளிதாகவே இருந்திருக்கும். 23 ஆண்டுகளுக்கு எட்டாயிரத்திற்கும் அதிகமான நாட்கள் உள்ளன. சுமார் ஆறாயிரம் வசனங்கள் கொண்ட குர்ஆனை தினம் ஒரு வசனம் என்ற அளவில் மனனம் செய்தாலே எட்டாயிரம் நாட்களில் சர்வ சாதாரணமாக முழுக் குர்ஆனையும் மனனம் செய்து விட முடியும்.
மேலும் மனனம் செய்ததை மறந்து விடாமல் இருப்பதற்காக இஸ்லாத்தில் சிறப்பான ஒரு ஏற்பாட்டையும் நபிகள் நாயகம் (ஸல்) செய்தார்கள். "முஸ்லிம்கள் தினமும் நடத்துகின்ற ஐந்து நேரத் தொழுகைகளிலும், தாமாக விரும்பித் தொழுகின்ற தொழுகைகளிலும் திருக்குர்ஆனின் சில பகுதிகளையாவது ஓதியாக வேண்டும்'' என்பது தான் அந்த ஏற்பாடு.
திருக்குர்ஆனை மனனம் செய்த முஸ்லிம்கள் அதை மறந்து விடாமல் இருக்க இந்த ஏற்பாடு உதவியாக இருந்தது. மேலும் மனனம் செய்யாதவர்களும் தொழுகையில் ஓத வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆனை மனனம் செய்யும் நிலை ஏற்பட இது உதவியாக இருந்தது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட வசனங்களைச் சிரத்தை எடுத்து மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
எங்கெல்லாம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இருந்தார்களோ அவர்களுக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுப் பதற்காக சில தோழர்களை அனுப்பி வைத்தார்கள். உள்ளங்களில் திருக் குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு இது மேலும் உறுதுணையாக அமைந்தது.
இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுபடுத்தி, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திச் செல்வார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த கடைசி வருடத்தில் ஜிப்ரீல் இரண்டு முறை வந்து இவ்வாறு தொகுத்து வழங்கியதாக நபி வழித் தொகுப்பு நூல்களில் ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(நூல்: புகாரி 6, 1902, 3220, 3554, 4998)
இவ்வாறாக திருக்குர்ஆன் மனிதர்களுடைய உள்ளங்களில் பாதுகாக் கப்பட்டது. ஏராளமான தோழர்கள் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.

குறிப்பாக,அபூபக்ர் ,உமர்,உஸ்மான், அலீ, தல்ஹா, ஸஅது, இப்னு மஸ்வூத், ஹுதைஃபா, ஸாலிம், அபூஹுரைரா, இப்னு உமர், இப்னு அப்பாஸ், அம்ர் பின் ஆஸ், அப்துல்லாஹ் பின் அம்ர், முஆவியா, அப்துல்லாஹ் பின் ஸுபைர், அப்துல்லாஹ் பின் ஸாஇப்,ஆயிஷா, ஹஃப்ஸா, உம்மு ஸலமா, உபை பின் கஅபு, முஆத் பின் ஜபல், ஸைத் பின் தாபித், அபூதர்தா, மஜ்மா பின் ஹாரிஸா, அனஸ் பின் மாலிக், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

suvanappiriyan said...

இவர்களில் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்திருந்தார்கள். சிலர் நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பிறகு மனனம் செய்தார்கள்.

இவ்வாறு கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாகக் குர்ஆனும் கூறுகிறது. (திருக்குர்ஆன் 29:49)

எழுத்து வடிவிலும்...
கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப் போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

இந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத் தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.

இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக் குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.
திருக்குர்ஆன் 98:2 வசனத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூய்மையான ஸுஹுஃபுகளை ஓதுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட வேதம் பல வசனங்களில், கிதாப் என்று கூறப்படுவது போல் இவ்வசனத்தில் ஸுஹுஃபு என்று கூறப்பட்டுள்ளது.
தனித்தனி ஏடுகளாக இருக்கும் போது ஸுஹுஃபு என்றும், அந்த ஏடுகள் அனைத்தையும் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கும் போது அது கிதாப் என்றும் சொல்லப்படும்.
நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது.

நபிகள் நாயகம் காலத்தில் திருக்குர்ஆன் முழுமையாக எழுதப்பட்டிருந்தாலும் அனைத்து வசனங்களும் வரிசைப்படி அமைக்கப்பட்டிருந்தாலும், அத்தியாயங்களைப் பொறுத்த வரை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாமல் இருந்தது என்பதற்கு மேற்கண்ட 98:2 வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு வரிசைப்படுத்தித் தொகுக்கப்படும் என்று இறைவ னுக்குத் தெரியும். எனவே திருக்குர்ஆனை கிதாப் என்றும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

suvanappiriyan said...

அபூபக்ர் (ரலி) ஆட்சியில்...

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு "யமாமா' என்ற ஒரு போர் நடந்தது.
முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத் தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித் தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்து மாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்'' என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணி தான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்த வராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.

அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார். (நூல்: புகாரி 4988, 4989)

திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், "இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்'' என்று நபிகள் நாயகம் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள்.
(பார்க்க: திர்மிதீ 3011)

இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில், எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது.

வசனங்களின் வரிசை அமைப்பும், ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்ற வசனங்கள் எவை என்பதும் நபிகள் நாயகத்தின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டது.

அப்படியானால் அபூபக்ருக்கு இதில் என்ன வேலை என்ற சந்தேகம் ஏற்படலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும் போது வெளியூரில் இருந்தவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள்.
இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.
ஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளது தான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும் போது. குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.

அனைத்து எழுத்தர்களின், அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையில் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியா யங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்று கண்டறிய இயலும்.
இந்தப் பணியைத் தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவ மாக்கினார்கள்.

suvanappiriyan said...

இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளை வரிசைப்படுத்தி னார்கள்.
பாதுகாக்கப்பட்ட இந்த மூலப் பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்களெல்லாம் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்து விட முடியும்.
அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவரது மகளும், நபிகள் நாயகத்தின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.

உஸ்மான் (ரலி) ஆட்சியில்...
இந்தக் குர்ஆன் ஆவணம் பொது மக்களுக்குப் பரவலாக சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.

மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில், அரை குறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.
இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் "இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத் தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்'' என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.
அத்தியாயங்களை வரிசைப்படுத்துதல்
ஹப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்த அந்த ஒரே மூலப் பிரதியைப் பெற்று அதைப் போல் பல பிரதிகள் தயாரிக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்யலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தயாரித்த மூலப் பிரதியில் ஒவ்வொரு அத்தியாயமும் முழுமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இது முதல் அத்தியாயம், இது இரண்டாவது அத்தியாயம் என்று அத்தியாயங்கள் வரிசைப்படுத்தப் படாமல் இருந்தன.
உதாரணமாக, பல பக்கங்களைக் கொண்ட தனித்தனியான ஐம்பது கட்டுரைகளை தனித்தனியாகச் சுருட்டி ஒரு பெட்டியில் போட்டு வைத்தால், எது முதலில் வர வேண்டும், எது இரண்டாவதாக வரவேண்டும் என்று அறிய முடியாது. ஆனால் அந்தக் கட்டுரைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் எது முதலாவது, எது இரண்டாவது என்ற வரிசை அமைப்பை அறிய முடியும்.
வரிசைப்படுத்தி அடுக்கி வைக்கும் இந்தப் பணியைத் தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். அத்தியாயங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இப்போது இருக்கும் வரிசைப்படி அமைத்தார்கள் என்ற கூற்று தவறாகும்.

ஆயிஷா (ரலி) அவர்களிடம் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து, "உங்கள் குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். ஏன் என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். "குர்ஆன் அத்தியாயங்களை சரியான வரிசைப்படி அமைத்துக் கொள்வதற்காக'' என்று அவர் கூறினார். அதற்கு ஆயிஷா (ரலி), "எதை முன்னால் ஓதினாலும் அதனால் உனக்கு எந்தக் கேடும் இல்லை'' என்று குறிப்பிட்டார்கள்.
(நூல்: புகாரி 4993)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில், பகரா (எனும் 2வது) அத்தியாயத்தையும், பின்னர் நிஸா (எனும் 4வது) அத்தியாயத் தையும், பின்னர் ஆலு இம்ரான் (எனும் 3வது) அத்தியாயத்தையும் ஓதினார்கள்.

(நூல்: முஸ்லிம் 1291)
உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில் குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்படும் அத்தியாயம்; தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதப்படக் கூடிய அத்தியாயம் என்பதால் "அல்ஃபாத்திஹா' என்ற அத்தியாயத்தை முதல் அத்தியா யமாக அமைத்தார்கள். "இதை நீங்கள் முதல் அத்தியாயமாக வைக்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.
அதன் பிறகு குர்ஆனுடைய அளவை அடிப்படையாகக் கொண்டு பெரிய அத்தியாயத்தை முதலாவதாக வும், அதற்கடுத்த அளவிலான அத்தியாயத்தை அதற் கடுத்ததாகவும், அமைத்து குர்ஆனுடைய அத்தியாயங்களை உஸ்மான் (ரலி) வரிசைப்படுத்தினார்கள்.

suvanappiriyan said...

சில இடங்களில் வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு சிறிய அத்தியாயங்களை முன்னாலும், பெரிய அத்தியாயங்களைப் பின்னாலும் வைத்தார்கள். இந்தக் காரணங்கள் நமக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் இதை உஸ்மான் (ரலி) அவர்கள் தான் வரிசைப்படுத்தி னார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஒரு ஒழுங்குக்குள் இருந்தால் தான் குழப்பம் ஏற்படாது என்பதற்காக உஸ்மான் (ரலி) செய்த அந்த ஏற்பாட்டை உலக முஸ்லிம் சமுதாயம் எந்தக் கருத்து வேறுபாடுமின்றி ஒப்புக் கொண்டு விட்டது.
இந்த வரிசைப்படுத்துதல் இறைவன் புறத்திலிருந்து சொல்லப்பட்டதல்ல. இறைத் தூதரின் வழி காட்டுதலின்படியும் அமைக்கப்பட்டது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

நான் முன்பே குறிப்பிட்டது போல் இஸலாமிய சமூகத்தைப் பொறுத்தவரையில் குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது என்பதிலோ அந்த குர்ஆன் அருளப்பட்ட வகையிலேயே இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை.

Nanjil said...

தருமி சார்!
அதன் அருகில் இன்னுமொன்று கவனித்தீர்களா? http://suvanathendral.com/portal/?p=1340)
"முஸ்லிம்கள் அறிய வேண்டிய முக்கிய பாடங்கள் – Part 1 : இஸ்லாம் – இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் ." - என்று போடப்பட்டிருக்கிறது.
இதன் அர்த்தம் என்ன? அதாவது முகம்மது என்பவருடைய தயாரிப்பை அல்லா ஏற்றுக்கொண்டாரம். அப்படிதானே?

அதாவது மற்ற மதத்தலைவர்கள் தயாரித்த தயாரிப்பை சந்தையில் கொண்டு போனபோது அல்லா ஏற்றுக்கொண்டது முகம்மதுவினுடைய தயாரிப்பை மட்டுமே.

Anonymous said...

me the 100th!

பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை
என்ற சிறு பதிவில் மார்க்க சகோ சுவனப்பிரியன் எழுதியதற்கு மேல் சில விஷயங்கள் இருக்கின்றன

வால்பையன் said...

முகமதுவுக்கு, குரானில் எந்த மாற்றமும் வராது என உத்திரவாதம் அளித்த அல்லா ஏன் அதற்கு முன் வந்த தூதர்களுக்கு அளிக்க முடியவில்லை?

அதற்கு முன் அல்லா கூமுட்டையாக இருந்தாரா!?

தருமி said...

வால்ஸ்,

ஏற்கெனவே சொன்னதுதான். திருப்பியும் சொல்கிறேன். இப்போது நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்விதான். ஆனால் பதில் சொல்ல வருபவர் கடைசி வரிக்குத்தான் பதில் சொல்லும்படி வைக்கிறீர்களே தவிர உங்கள் கேள்விக்கே வர விடுவதில்லை.

பொதுவாக உங்கள் கேள்விகள் மிக நல்ல கேள்விகள் என்பதில் எனக்கு ஐயமில்லை. அந்தக் கேள்விகள் சரியாகப் போய்ச் சேருவதும் முக்கியம்.

சிந்தும் வார்த்தைகள் மிக முக்கியம். அதில் கண்ணியம் பேணுவோம். விவாதங்களுக்கு அது மரியாதையைக் கூட்டும்.

வால்பையன் said...

சார், முட்டாளாக இருந்தாரா என்பதை பேச்சு தமிழில் கேட்டு விட்டேன்,

இதற்கு முன் சுவன!?பிரியனுக்கு அளித்த பதிலில் நீங்க கண்ட நியாயத்திற்காக நான் இவ்வாறு கேள்வி கேட்பதை தவிர்த்து கொள்கிறேன்!,

நான் தண்ணி அடித்து கேள்வி கேட்கிறேன் என்பவர்கள் ஏன் சொர்க்கத்தில் அதை அனுமதித்திருக்கிறார்கள் என்பதற்கும், அங்கே அனுமதித்த அல்லா ஏன் இங்கே அடிக்க கூடாது என்ற சொன்ன காரணம் என்ன என்பதற்கும் பதில் சொன்னால் நான் அதையும் தெரிந்து கொள்வேன்,

தண்ணி அடிச்சிருந்தாலும் பரவாயில்ல, சும்மா இருக்குறவனை சொறிஞ்சுவிட்டா நான் என்ன தான் சார் பண்றது!

தருமி said...

//தண்ணி அடிச்சிருந்தாலும் பரவாயில்ல, சும்மா இருக்குறவனை ..//

இதுக்குத்தான் சொன்னேன். நீங்க தண்ணியடிச்சது எல்லாத்துக்கும் தெரியும். நிறுத்தியது பலருக்கும் தெரியாது.
சோகம் தான்.

Nanjil said...

சுவனப்பிரியன் said... //திருக்குறள் முழுவதையும் மனனமிட்ட தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் தமிழக கிராமங்களில் குர்ஆன் முழுவதையும் மனனமிட்ட (ஹாபிழ்கள்) இஸ்லாமிய தமிழ் இளைஞர்களை பல ஆயிரங்களை பார்க்க முடியும். எங்கள் ஊரில் வருடத்துக்கு 7, 8 மாணவர்கள் குர்ஆனை மனனம் இட்டவர்கள் வெளியாவார்கள்//


உண்மைதான்.குரானைப்படித்து மனனம் செய்யவில்லையென்றால் கால் உடைக்கப்படும்.

Muslim Cleric Breaks Child's Leg for Forgetting Quran Verse...
http://www.liveleak.com/view?i=b17_1320365945

Nanjil said...

சுவனப்பிரியன் said... //வேற்று மொழியான அரபியில் உள்ள குர்ஆனையே ஆயிரக்கணக்கில் மனனமிட ஆட்கள் இருக்கும் போது முகமது நபிக்கு வஹி இறங்கும் நேரிடையாக பார்த்த அந்த தோழர்கள் எந்த அளவு ஈடுபாட்டோடு சிரத்தையோடு மனனமிட்டும் குறித்தும் வைத்திருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை.//

முகமது வஹி வந்ததாக சொல்லி சொன்னதை தோழர்கள் சிரத்தையோடு மனனமிட்டும் குறித்து வைக்கவில்லையென்றால் முகமதுவின் வாள் பேசியிருக்கும். இதற்கு முந்தின பின்னூட்டமே சாட்சி. முகமதுவினுடைய வஹி எல்லாமே யூதர்களிடம் இருந்து களவாடியது.

suvanappiriyan said...

தருமி சார்!

http://www.youtube.com/watch?v=GtCbTxS9UvU

இந்த யுடியூபில் வரும் இந்த பிராமணரைப் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

Anonymous said...

காஃபிர் தருமி அவர்களே

நபித்துவம் தொடர்வது பற்றி ஒரு சிறிய பதிவு எழுதியிருக்கிறேன். உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்

லேட்டஸ்ட் நபி மிர்ஸா குலாம் அஹமது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் சாவு

ய்ய்ய்யாஆ அல்லாஆஆஅஹ்

naren said...

@சுவனப்பிரியன். சிரத்தையுடன் பதிலுக்கு நன்றி.

//இயேசு உபதேசித்த இன்ஜிலை (பைபிளை) மறைத்து விட்டு மற்றவர்களின் செவி வழி செய்திகளையே பைபிள் என்று நமக்கு காட்டுகிறது கிறித்தவ உலகம்.// என்ற உங்கள் வார்த்தையில் மூலம்தான், நான் சொன்னது குரானும் செவிவழி செய்திதான் என்று.

உங்கள் பதில் மூலம் குரானின் தற்போதைய தொகுப்பு, வடிவம் செவி வழிச் செய்தி இல்லை என்று அதீஸ் ஆதாரம் மூலம் என்று சொல்கிறீர். அதீஸே ஒரு செவி வழி செய்திதானே.

அதைப் போல கிருத்துவர்களும் நீங்கள் கூறிய கூற்றை மறுத்து பைபிளும் செவிவழிச்செய்தியல்ல அது உண்மையான செய்திதான் என்கிறார்கள்.
//லூக்கா:

மூன்றாவதாக, லூக்கா என்பவர் ஒரு மருத்துவர், இவர் பேதுரு மற்றும் பவுலையும் அறிந்தவர். பவுலோடு பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர், மாற்கும் லூக்காவும் ஒருமித்து பவுலோடு ஊழியம் செய்துள்ளார்கள். இவர் அனேக விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதியுள்ளார். இந்த லூக்கா இயேசுவின் அனேக சீடர்களை கண்டவர் அவர்களிடம் உரையாடி அனேக விவரங்களை சேகரித்தவர். லூக்கா என்பவர் ஏதோ கண்மூடித்தனமாக எழுதவில்லை, அனேக சாட்சிகளை சந்தித்து, ஆய்வு செய்து எழுதியதாக லூக்கா முதல் அத்தியாயத்தின் முதல் சில வசனங்களில் கூறுகிறார்:
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,

ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,

அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4)
மேற்கண்ட நான்கு வசனங்களில் லூக்கா "ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே" என்று கூறுகிறார். அதாவது இந்த வசனத்தில் அவர் குறிப்பிடுவது, இயேசுவோடு இருந்த சீடர்கள் மற்றும் அவரது தாய் மற்றும் அவரிடமிருந்து அற்புதங்களை பெற்றவர்களைத் தான். மட்டுமல்ல, தாம் சேகரித்த விவரங்களை அவரும் "ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்" என்று எழுதுகிறார், அதாவது திட்டமாய் விசாரித்து அறிந்துக்கொண்டு தான் இவைகளை எழுதுகிறேன் என்று கூறுகிறார். எனவே, அருமை பீஜே அவர்களே இயேசுவை கண்ணார கண்டு அவரோடு இருந்த சீடர்கள் மற்றும் மற்றவர்களின் நேரடி சாட்சிகளை விசாரித்து தான் லூக்கா எழுதினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.//
நன்றி http://isakoran.blogspot.com/2011/11/answering-pj-2.html

நான் சொல்ல வந்தது என்னவென்றால், சொல்லும் விளக்கத்தின் “நம்பிக்கையின்” அடிப்படையில் குரானும், பைபிளும் செவி வழி செய்தியல்ல. ஒன்றை செவி வழி செய்தியென்று கூறினால் இதுவும் செவிவழிசெய்திதான். இந்து மதப் பத்தகங்களையும் செவி வழி செய்தியல்ல உண்மையென்று விளக்கங்களும் இருக்கின்றன.

எந்த ஒரு சம்பவத்திற்கும், கூற்றுக்கும், கதைக்கும் விளக்கங்கள் உண்டு. அது அந்த விளக்கங்களை தருபவரின் சாமார்த்தியத்தை பொருத்தது.

என் வாதம் என்னவென்றால், நீங்கள் மற்ற புத்தகங்களை செவி வழி செய்தியென்றால் அதே அளவுகோளில் குரானும் செவி வழி செய்திதான் என்றேன், இதில் குரானை சிறுமைபடுத்துவது எங்கு வந்தது. மற்றவைகளை சிறுமை என்றால் அவைகளும் நீயும் சிறுமையென்னும்.

அதனால் எல்லா மதநம்பிக்கைகளும், மத புத்தகங்களும் ”நம்பிக்கை” என்னும் ஒரே தட்டில் ஒரே தராசில் தான் இருக்கின்றன. அது பெருமை அது சிறுமை என்பது கிடையது
Contd…

naren said...

அடுத்து நீங்கள் அளித்த பதில்களில் சில சந்தேகங்கள்...

//உஸ்மான் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்படும் போது அனைத்து ஹாபிழ்களும் அதனை சரிபார்த்தார்கள். அதன் பிறகே இவை அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டன. இந்த வரலாறுகள் அனைத்தும் இன்றும் ஆவணங்களாக பாதுகாக்கப்படுகினறன.// அதீஸை தவிர்த்து வேறு ஏதாவது வரலாறு ஆவணங்கள் உள்ளதா?

//எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும், கூறியவுடனே ஒலி நாடாவில் பதிவது போல் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.// இந்த ஆற்றல் வந்தபிறகு முகமது ஒரு வசனத்தை மறந்து, அதை ஒரு தோழர் ஓதும்போது அவருக்கு நினைவு வநததாக ஒரு அதீஸ் இருப்பதாக நினைக்கிறேன்.

//அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும்// அதீஸ்களை படிக்கும்போது அவ்வாறு தெரியவில்லை. சவுதி தீபகர்ப்பத்தில் வியாபார ஸ்தலமாக இருக்கும் ஒரு இடத்தில் வாழும் மக்கள் நீங்கள் சொல்வதைப் போல இருப்பார்களா. இந்த கூற்று அந்தக் காலகட்டத்தில் உலகத்தில் வாழ்ந்த அத்தனை சமுதாயதிற்கு பொருந்தும்.

//கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப் போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.// இது மேலே சொன்ன செய்திக்கு எதிர்மறையாக உள்ளதே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அந்தக் காலத்தில் எல்லா சமுதாயத்திலும் குறைவாக இருந்திருக்கின்றனர்.

//இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.// எழுதியவை அனைத்தும் வீட்டில் வைக்கப்பட்டதா?? சிலவற்றை மட்டும் தானா?

//நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது.//
//பொறுத்த வரை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாமல் இருந்தது என்பதற்கு மேற்கண்ட 98:2 வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.//
//(பார்க்க: திர்மிதீ 3011)இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில், எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது. // அந்த அதீஸில் அத்தியாயங்களின் பெயர்கள் இருக்கின்றதா???

//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள்// வீட்டில் வைத்திருப்பார் என்று சொன்னது???

//உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில்//

contd......

naren said...

கடைசியாக, நீங்கள் சொன்ன செய்தியின் முடிவு, மற்றும் நீங்கள் முன்னரே கூறியது //அவருக்கு பிறகு ஆட்சியாளர் உஸ்மான் அதனை பல பிரதிகள் எடுக்கிறார். குர்ஆன் மனனம் செய்தவர்கள் அதனை ஒப்பிடுகிறார்கள். அதன்பிறகு தான் உலகின் பல நாடுகளுக்கும் அந்த பிரதிகள் அனுப்பப்படுகிறது. அந்த பிரதிகளில் இரண்டுதான் துருக்கியிலும் தாஸ்கண்டிலும் இன்றும் உள்ளது. பல நபித்தேழர்கள் ஒப்பிட்டு பார்த்து சரி செய்ததனால் இடைச் செருகல் வர வாய்ப்பே இல்லை.//

மேலே சொன்னதிற்கு பதிலாக..
1) துருக்கியிலும் தாஸ்கண்டிலும் இருக்கும் குரான பிரதிகள் உஸ்மானால் எடுக்கப்பட்ட பிரதிகள் அல்ல.
2) அந்த பிரதிகள் முழுமையான பிரதிகள் அல்ல. ஆய்வுகள் செய்து அது உஸ்மானால் எடுக்கபபட்ட பிர்தகள் என்று கண்டுப்பிடிப்பு இல்லை.
3) அந்த இரு பிரதிகளின் எழுத்து நடை முகமது காலத்து எழுத்து நடையாக இல்லை.

என்று இவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகின்றனவே இதற்கு பதில் இருக்குமா என்று கேட்டேன். நீங்கள் இட்ட பின்னூட்டத்தில் பதில் சொல்லவில்லை.

suvanappiriyan said...

மார்கண்டேய கட்ஜு: இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.

இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது?

ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.

யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

கரன் தாப்பர்: மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?

மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

= கரன் தாப்பர்: மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

மார்கண்டேய கட்ஜு: குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?

Anna said...

திரு. சுவனப்பிரியனின் கருத்துகளை வாசித்ததும் மனதில் எழுந்த சில random கருத்துகள்/கேள்விகள்
1. about those 72 virgins and young boys? கடவுள் எமது உணர்ச்சிகளையும் மதிக்க வேண்டும் என நினைப்பது மிகக் கூடுதலான எதிர்பார்ப்பு என விளங்கினாலும், can't stop wondering. சொர்க்கம் புகுந்தவர்களுக்குப் பணிவிடை செய்வது அவர்களின் மனதிற்குப் பிடித்தமானதா என இந்தப் இளம் பெண்களுடமும் பையன்களிடமும் கடவுள் கேட்பாரா? அல்லது அவர்கள் உணர்ச்சிகளே இல்லாத ரோபோட்ஸ் ஆ? I would hate to be one of those 72 virgins.

2. நீங்கள் நிரூபிக்க நினைப்பதையே அதற்குச் சான்றாக வைக்க முடியாது. இந்தப் புத்தகம் கடவுள் அருளியது. அதற்கான சான்று எங்கே? புத்தகத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது - Not good enough. Extraordinary claims need extraordinary evidence.

3. மனிதரின் மனனம் செய்யும் சக்தியை நம்பவே முடியாது எனப் பல ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன/நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. No matter how good anyone's memory is, It's still neither reliable nor objective. உலகம் முழுதுக்கும் அவசியமான வாழ்வியல் புத்தகத்தை கொடுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு வேறு வழியே இருக்கவில்லையா?

4. கடவுள் நல்லதென்றால் எதுவும் நல்லது/கூடாதென்றால் கூடாது, சரிதானா? குரான் இல்லாவிடில் உங்களுக்கு நல்லது எது கெட்டது எதெனத் தெரிந்திருக்காதா? நீங்கள் விபச்சாரம் செய்யாமல் / மது அருந்தாமல் இருப்பதற்கு ஒரே காரணம் அல்லா வேண்டாம் என்றது மட்டும் தான், உங்களின் சொந்த முடிவு இல்லையெனில், அந்த எல்லாம் வல்ல கடவுளுக்கு நீங்கள் உண்மையிலேயே நல்லவரில்லை, just trying to deceive him to win the jackpot in heaven என்று விளங்காதா? அல்லது அல்லாவிற்கு நீங்கள் எந்தளவுக்கு நல்ல அடிமையாக இருக்கிறீர்கள் என்பது தான் முக்கியமே ஒழிய, நீங்கள் உண்மையில் நல்ல உள்ளம் கொண்டவரா இல்லையா என்பதைப் பற்றிக் கவலை இல்லையா?

Anna said...

இது இங்கு நடக்கும் விவாதத்திற்கு நேரடியாகத் தொடர்புடையதில்லாவிடினும், I really wanted to share this. குரானில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட 'மிகச் சிறந்த நிலைகளை' ப்பற்றி அநேகமானோருக்குத் தெரியும்.
அதற்குப் பதிலாக இந்தப் புதிதாக இயற்றப்பட்ட சுரா மிக நன்றாக இருக்கிறது. Council of Ex-Muslims of Britain இன் ஒரு அங்கத்தவர் இயற்றியது. English translation follows the arabic recital. Maryam Namazie இன் புது blog வாசித்தபோது கிடைத்தது.

suvanappiriyan said...

நரேன்!

//என் வாதம் என்னவென்றால், நீங்கள் மற்ற புத்தகங்களை செவி வழி செய்தியென்றால் அதே அளவுகோளில் குரானும் செவி வழி செய்திதான் என்றேன், இதில் குரானை சிறுமைபடுத்துவது எங்கு வந்தது. மற்றவைகளை சிறுமை என்றால் அவைகளும் நீயும் சிறுமையென்னும்.//

செவி வழி செய்தியாக வந்தாலும் குர்ஆனில் அறிவியலோடு மோதக்கூடிய வசனங்களை காண முடியாது. முரண்பாடுகளும் இருக்காது. இதை பைபிளில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். அதே போல் இந்து மத வேதங்களிலும் ஏக தெய்வ வணக்கமும் வரும். பல தெய்வ வணக்கத்தை ஆதரிக்கும் வசனங்களும் வரும். இந்த முரண்பாடுகள் வேதங்களில் வந்தால் இறைவனின் வல்லமைக்கே சவாலாக அமையும். இதைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.

//இது மேலே சொன்ன செய்திக்கு எதிர்மறையாக உள்ளதே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அந்தக் காலத்தில் எல்லா சமுதாயத்திலும் குறைவாக இருந்திருக்கின்றனர்.//

முகமது நபி பிறப்பதற்கு முன்பே அரபுலகில் அரபி மொழியில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. பட்டிமன்றங்கள் கூட கவிதை நடையிலேயே நடத்தப்படும். ஒரு அரபி குர்ஆனக்கு போட்டியாக ஒரு கவிதையை எழுதி அதை எல்லோரிடமும் படித்துக் காட்டி 'இது தான் குர்ஆனுக்கு போடடியா?' என்று அங்குள்ளவர்கள் சிரித்த வரலாறும் உண்டு.

//1) துருக்கியிலும் தாஸ்கண்டிலும் இருக்கும் குரான பிரதிகள் உஸ்மானால் எடுக்கப்பட்ட பிரதிகள் அல்ல.
2) அந்த பிரதிகள் முழுமையான பிரதிகள் அல்ல. ஆய்வுகள் செய்து அது உஸ்மானால் எடுக்கபபட்ட பிர்தகள் என்று கண்டுப்பிடிப்பு இல்லை.
3) அந்த இரு பிரதிகளின் எழுத்து நடை முகமது காலத்து எழுத்து நடையாக இல்லை.//

எழத்துக்கள் காலப்போக்கில் மாற்றம் அடைவது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் ஓலைச்சுவடிகள் நாம் எழுதும் தமிழை ஒத்தில்லை. நம்மால் படிக்கவும் முடியாது. ஆனால் வசனத்திலோ பொருளிலோ இன்று வரை திருக்குறளில் எந்த மாற்றமும் வரவில்லை. இதே அளவு கோலை குர்ஆனுக்கும் வைத்துப் பாருங்கள்.

முகமது நபி காலத்தில் புள்ளிகள் இல்லாமலேயே எழுவாய் பயனிலையை வைத்து அன்றைய அரபுகளும் இன்றைய அரபுகளும் குர்ஆனை சரளமாக படித்து விடுவர். ஆனால் என்னைப் போன்ற அரபு அல்லாதவர்களுக்கு புள்ளிகள் இல்லாமல் குர்ஆனை ஓதுவது சற்று சிரமம். தொடர்ந்து முயற்ச்சித்தால் படித்து விடலாம்.

suvanappiriyan said...

அனலைஸ்ட்!

//சொர்க்கம் புகுந்தவர்களுக்குப் பணிவிடை செய்வது அவர்களின் மனதிற்குப் பிடித்தமானதா என இந்தப் இளம் பெண்களுடமும் பையன்களிடமும் கடவுள் கேட்பாரா? அல்லது அவர்கள் உணர்ச்சிகளே இல்லாத ரோபோட்ஸ் ஆ? I would hate to be one of those 72 virgins.//

இஸ்லாத்தில் மலக்குகள் என்ற ஒரு படைப்பு உண்டு. இதையேதான் தேவதைகள் என்றும் தேவர்கள் என்றும் இந்து மதம் சொல்கிறது. இவர்கள் அனைவரும் இறைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதனை உடன் நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பர். இறைவன் எதை எண்ணுகிறானோ அதனை நிறைவேற்றி முடிப்பர். சொர்க்கத்துக்கு சென்றவுடன் அங்கு எல்லாமே இன்பமாக இருக்கும் போது வெறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இப்பொழுது சொர்க்கம் செல்ல உங்களுக்கும ஆசை வருகிறதல்லவா? :-)

//2. நீங்கள் நிரூபிக்க நினைப்பதையே அதற்குச் சான்றாக வைக்க முடியாது. இந்தப் புத்தகம் கடவுள் அருளியது. அதற்கான சான்று எங்கே? புத்தகத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது - Not good enough. Extraordinary claims need extraordinary evidence.//

அதுதான் குர்ஆனிலேயே நூற்றுக்கணக்கான வசனங்கள் சொல்லப்பட்டிருக்கிறதே! ஒரு வசனத்தை எடுதது 'இந்த வசனம் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு முரண்படுகிறது.' என்று ஒரு வசனத்தை உங்களால ஏன் காட்டமுடியவில்லை? இனியாவது முயற்ச்சித்துப் பாருங்களேன்.
extraordinary evidence= இதற்கு இறைவனே நேரில்தான் வர வேண்டும்.

//3. மனிதரின் மனனம் செய்யும் சக்தியை நம்பவே முடியாது எனப் பல ஆராய்ச்சிகள் நிரூபித்துவிட்டன/நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. No matter how good anyone's memory is, It's still neither reliable nor objective. உலகம் முழுதுக்கும் அவசியமான வாழ்வியல் புத்தகத்தை கொடுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு வேறு வழியே இருக்கவில்லையா?//

மனனம் இங்கு ஒருவர் மடடும் செய்யவில்லை. வஹி வருவதை கேட்டுக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்த அனைத்து நபித்தோழர்களும் குர்ஆனை மனனம் இடுபவர்களாக இருந்தனர். சுவனப்பிரியனான எனக்கே கூட சில அத்தியாயங்கள் முற்றிலும் மனப்பாடமாக தெரியும்.

செவி வழியாக இல்லாமல் வேறு மார்க்கமாக வேதத்தைக் கொடுத்தாலும் அங்கும் உங்களின் கேள்வி வந்து நிற்கும்.

//4. கடவுள் நல்லதென்றால் எதுவும் நல்லது/கூடாதென்றால் கூடாது, சரிதானா? குரான் இல்லாவிடில் உங்களுக்கு நல்லது எது கெட்டது எதெனத் தெரிந்திருக்காதா? நீங்கள் விபச்சாரம் செய்யாமல் / மது அருந்தாமல் இருப்பதற்கு ஒரே காரணம் அல்லா வேண்டாம் என்றது மட்டும் தான், உங்களின் சொந்த முடிவு இல்லையெனில், அந்த எல்லாம் வல்ல கடவுளுக்கு நீங்கள் உண்மையிலேயே நல்லவரில்லை,//

ஐந்து வேளை தொழுது கொண்டு தாடியும் வைத்திருக்கும் பல முஸ்லிம்கள் தவறுகள் செய்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் மனமும் தவறை நோக்கியே ஆர்வப்படும். சமூகம் சொந்த பந்தம் இவற்றை கணக்கில் கொண்டு நேர்மையாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இந்து மதத்திலும் கிறித்தவர்களிலும் நாத்திகர்களிலும் நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அதோடு கடவுள் பக்தியும் சேர்ந்து கொண்டால் மனிதர்களிலேயே சிறந்தவனாக இறைவனால் பார்க்கப்படுகிறான்.

உலகில் தீமைகள் மது,மாது,சூது,கொள்ளை,நம்பிக்கை துரோகம் போன்றவை பலருக்கு அழகாக தெரிவது தனது மனதுக்கு அடிமையானதாலேயே! அந்த மனதை வென்று இறைவனையும் வணங்குபவனே மனிதர்களில் புனிதனாகிறான்.

NO said...

//இளம் பெண்களுடமும் பையன்களிடமும் கடவுள் கேட்பாரா? அல்லது அவர்கள் உணர்ச்சிகளே இல்லாத ரோபோட்ஸ் ஆ? I //

இந்த 72 கன்னிகள் விடயத்தில் அந்த காலத்து மொழிகள் இவை ஆதலால் அதன் அர்த்தம் வேறு எதையோ குறிக்கும், ஆதலால் அதை சீரியசாக எடுத்து கொள்ள கூடாது என்று சொன்னால் அது வேறு விடயம். அதை பற்றி பேச வேண்டியதே இல்லை!

ஆனால் சொல்லப்பட்டதே உண்மை, எழுபத்தி இரண்டும் எங்களுக்காக எங்கள் கடவுள் கொடுக்கும் பரிசு என்று சொன்னால் (சொல்லுகிறார்கள்) அதன் பெயர்
கடைந்தெடுத்த சாடிசம்! அசிங்கம்!! என்ன, இதற்கும் ஒரு காரணம் சொல்லுவார்கள். அதாவது எங்கள் கடவுள் எல்லாவற்றை காட்டிலும் பெரிதானதால் இதை
புரிந்து இதனால் வரும் அவமானம் எந்த ஒரு கன்னியையும் பாதிக்காது என்றே படைத்திருப்பார். அவரின் ஆளுமையை பற்றி யார் கேள்வி கேட்க்க முடியும் என்று காரணம் அள்ளிப்பார்கள்!!! அப்படி என்றால் நாம் சொல்லுவது ஒன்றுதான்! அப்படி பட்ட ஒரு கடவுள் சாடிஸ்ட்டிலேயும் மிக மோசமான சாடிஸ்ட் மட்டுமே!! ஏனென்றால் விபசாரத்திற்கு தகுந்த compensation ருபாய் நோட்டுக்கள் என்று இந்த உலகில் கூறுவதற்கும், imaginary சொர்க்கத்தில் இதே விபச்சாரத்தை செய்யும் ஒருவருக்கு compensation அவர் செய்வது தவறில்லை என்ற மனநிலையில் அவரை பிரைன் வாஷ் செய்து வைத்துகொள்ளுவதும் ஒன்றே! முதலாம் ஒன்றிலிருந்து
விடுபடலாம், மேலும் காசு இல்லையென்றால் விபச்சாரம் செய்யாமல் இருக்கலாம்! ஆனால் இவர்களின் சொர்க்கத்தில் அதற்க்கு வழியே இல்லை!

//Extraordinary claims need extraordinary evidence.//
Evidence for them is also a claim that does not hold validity. High decibel assertions about the truth and holiness of their faith is alone a good enough proof to maintain claim of the truthfulness of their religion, god and prophet! Anything contrary can be dismissed as unworthy evidence! Evidence is an evidence only if it confirms to their assertions.

// உலகம் முழுதுக்கும் அவசியமான வாழ்வியல் புத்தகத்தை கொடுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு வேறு வழியே இருக்கவில்லையா?//

யார் கண்டது எண்பதுகளில் ஒரு மதம் தோன்றியிருந்தால், கம்ப்யூட்டர் மூலமாக அதன் கடவுள் செய்திகளை கொடுத்திருப்பார்! ஆனால் அந்த காலம் ஆனதால் பாலைவன சூழலை தவிர வேறொன்றும் அறியாத சில பழகுடி நாடோடிகளுக்கு என்ன தெரியுமோ, வேண்டுமோ, விருப்பமோ அதைதானே சொல்ல முடியும்!

//கடவுள் நல்லதென்றால் எதுவும் நல்லது/கூடாதென்றால் கூடாது, சரிதானா? குரான் இல்லாவிடில் உங்களுக்கு நல்லது எது கெட்டது எதெனத் தெரிந்திருக்காதா? //

நன் லஞ்சம் வாங்குவதில்லை. மாற்றாரின் பணத்திற்கோ சொத்துக்கோ ஒரு போதும் ஆசை பட்டதில்லை! யாரையும் ஏமாற்றியது இல்லை. யாரையும் துன்புறுத்துவது இல்லை! அந்த எண்ணமே தவறு என்னும் நிலை என்னுடையது! என் மனைவியத்தவிர எந்த பெண்ணிடமும் உருவு வைத்துக்கொண்டதில்லை. என் தாய் தந்தையரை மிக்க மதித்து அவர்களுக்கு வேண்டியதை செய்கிறேன்! எல்லா வரிகளையும் கட்டுகிறேன். முடிந்தவரை உதவும் கரங்கள் போன்ற இல்லங்களுக்கு உதவி செய்கிறேன் (நான் அதை யாருக்கும் சொல்லுவதில்லை, இப்பொழுது சொல்லுகிறேன் ஏனென்றால் நான் யாரென்று யாருக்கும் தெரியாது). இதை போன்ற குணங்களை எல்லாம் இருந்தால் அவன் பெரிய மனிதன் என்று சொல்ல வில்லை. ஒரு சராசிரி
மனிதனுக்கு உள்ள குணங்கள்தான் அதுவும் என்கிறேன்! அதையும் ஏன் சொல்லுகிறேன் என்றால், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லவே இல்லை. ஆதலால் என் மனநிலைக்கு காரணம் கடவுள் நம்பிக்கையாக இருக்க முடியாது என்பதுதான் அந்த பாய்ன்ட்! குரான், கீதை, பைபிள் சொல்லுவதால் மட்டும் நான்
நல்லவனாக இருக்கிறேன் என்று சொல்லுபவன் தன்னை புரிந்து கொள்ளாதவன், மனிதத்தன்மையை புரிந்து கொள்ளாதவன், ஒரு விதத்தில் பயத்தால் நல்லவனாக நடிப்பவன் (இது மிகையான ஒரு சொல்லேன்றாலும் ஒரு பேச்சுக்கு சொல்லுகிறேன்), கடவுளால் போலியாக ஆக்கப்பட்டவன்! அப்படிப்பட்ட நல்லவர்கள் பொல்லாதவர்களாக மாறுவதுதான் எளிது!

NO said...

இந்த 72 கன்னிகள் விடயத்தில் நான் எழுதிய பின்னூட்டம் -
// என்ன, இதற்கும் ஒரு காரணம் சொல்லுவார்கள். அதாவது எங்கள் கடவுள் எல்லாவற்றை காட்டிலும் பெரிதானதால் இதை புரிந்து இதனால் வரும் அவமானம் எந்த ஒரு கன்னியையும் பாதிக்காது என்றே படைத்திருப்பார். அவரின் ஆளுமையை பற்றி யார் கேள்வி கேட்க்க முடியும் என்று காரணம் அள்ளிப்பார்கள்!!//

அன்பிற்குரிய நண்பர் திரு மதவெறியர் அவர்கள் அதே விடயத்திற்கு இட்ட பின்னூட்டம் -
// இவர்கள் அனைவரும் இறைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதனை உடன் நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பர். இறைவன் எதை எண்ணுகிறானோ அதனை நிறைவேற்றி முடிப்பர். சொர்க்கத்துக்கு சென்றவுடன் அங்கு எல்லாமே இன்பமாக இருக்கும் போது வெறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.//

நான் அவரின் பின்னூட்டத்தை பார்க்காமல் இட்ட பின்னூட்டம்! பாருங்கள். Its vindicated! Straight and simple.

suvanappiriyan said...

நோ!

//இந்த 72 கன்னிகள் விடயத்தில் அந்த காலத்து மொழிகள் இவை ஆதலால் அதன் அர்த்தம் வேறு எதையோ குறிக்கும், ஆதலால் அதை சீரியசாக எடுத்து கொள்ள கூடாது என்று சொன்னால் அது வேறு விடயம். அதை பற்றி பேச வேண்டியதே இல்லை!//

'அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்க சோலைகளில் நுழைவார்கள்.'
-குர்ஆன் 13:23

இங்கு இறைவன் நல்லறம் புரிந்து தனது குடும்பத்தவரையும் நல் வழியில் கொண்டு சென்ற ஒரு மனிதன் தனது குடும்பத்தாரோடு சொர்க்கத்தில் நுழைவதாக கூறுகிறான். எனவே ஹூருல் ஈன்கள் என்ற படைப்பு எப்படி பட்டது? அந்த படைப்பின் சேவை சொர்க்கவாசிகளுக்கு எவ்வாறு இருக்கும் என்பதை இறைவனே அறிவான். அல்லது சொர்க்கத்துக்கு சென்றவர்கள்தான் நம்மிடம் வநது சொல்ல முடியும். அதுவும் தற்போதைக்கு முடியாத ஒன்று. ஒரே வழி ஹூருல் ஈன்கள் என்றால் அரபி அகராதியில் என்ன வருகிறது என்று பார்ப்போம்.

Mates - தோழமையானவர்கள் அல்லது துணையானவர்கள்

Modest Gaze - அடக்கமான பார்வையுடையவர்கள்

Most Beautiful of Eye - அழகிய கண்களையுடைவர்கள்

Well-matched - மிகவும் பொருத்தமான துணையாளர்கள்

Neither man nor invisible being will have touched ere then – களங்கமற்றவர்கள்

வெறும் பாலியல் நோக்கிலேயே நாம் பார்ப்பதால் இந்த வசனங்கள் நமக்கு வித்தியாசமாக தெரிகிறது. 'ஹூருல் ஈன்கள்' என்ற அரபி பதத்துக்கு அரபி அகராதியும், குர்ஆன் விரிவுரையாளர்களும் தரும் விளக்கமே மேலே நாம் பார்ப்பது. அவர்கள் எந்த வகையில் சொர்க்கவாசிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அது பெண்ணாகவும் இருக்கலாம், சொர்க்கத்துக்கென்றே பிரத்தியேகமாக படைக்கப்பட்ட படைப்பாகவும் இருக்கலாம். அவர்கள் யாரென்று அறியும் ஆவல் அதிகரித்தால் சொர்க்கத்துக்கு செல்ல என்ன அமல்களை செய்ய வேண்டுமோ அதை செய்து அதனை பெற்று 'ஹூருல்ஈன்களை' நமது கண்களால் பார்ப்போம். பலரது கேள்விக்கு அன்றுதான் விடை கிட்டும்.

என்ன தருமி சார்? இந்த உலகில் நற்காரியங்கள் செய்து சொர்க்கத்தை அடைய நான் ரெடி! நீங்க ரெடியா?

தருமி said...

//இந்த உலகில் நற்காரியங்கள் செய்து சொர்க்கத்தை அடைய நான் ரெடி! நீங்க ரெடியா? //

உலகில் நற்காரியங்கள் செய்ய ரெடி.

சொர்க்கத்தை அடைய நீங்கள் ரெடி -ஏனெனில் அது உங்களுக்கு இனிக்கும். எனக்கு கசக்கும் என்று சொல்லிவிட்டேனே .. அந்த அசிங்கமெல்லாம் வேண்டாமுங்க!

தருமி said...

பல நேரங்களில் பூசி மெழுகிவிடுகிறீர்கள் என்று சொல்வேனே அது இதுதான் --

//வெறும் பாலியல் நோக்கிலேயே நாம் பார்ப்பதால் இந்த வசனங்கள் நமக்கு வித்தியாசமாக தெரிகிறது. '//
//அவர்கள் எந்த வகையில் சொர்க்கவாசிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது.//


உங்கள் வசனங்கள் -மிக வெளிப்படையான வசனங்கள் - உள்ளன. பின்னும் ஏன் மெழுகுகிறீர்கள்?! கொஞ்சூண்டு உதாரணங்கள்:

The Holy Prophet (Mohammed) said: “The believer will be given tremendous strength in Paradise for sexual intercourse”. It was questioned: “O prophet of Allah! can he do that?” He said: “He will be given the strength of one hundred persons.’” (Mishkat al-Masabih 4:42:24; Sunan al-Tirmidhi 2536).

Hadith: Al hadiths, Vol. 4, Page-172, No.34: Hozrot Ali (r.a) "There is in paradise an open market ...When a man desires a beauty, at once he will have intercourse with them as desired.

Quran:(47:15): "The description of Paradise ... rivers of wine delicious

Quran: (44:51-55): Yes and we shall wed them to dark-eyed houris (beautiful virgins)

Quran-(52:17-20): "They will recline (with ease) on thrones arranged in ranks. And We shall marry them to Huris

Mohammed said: “The least reward for the people of paradise is 80,000 servants and 72 wives” – Al-Tirmidhi 2562, 2687.

இவ்வளவு போதுமா ..? இன்னும் கொஞ்சம் வேணுமா?

இவ்வளவையும் வச்சிக்கிட்டு வஞ்சகம் பண்றீங்களே!(எந்த வகையில் சொர்க்கவாசிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது)

Maa said...

நான் தெரிந்து கொள்ள வேண்டும் நோக்கிலேயே கேட்க்கிறேன் இஸ்லாமிய நண்பர்களே... நீங்கள் எதற்க்கும் ஈடிணையில்லாதது என்று எப்பொழுதும் கூறுவதால்..

திருக்குறள்,ஆத்திச்சூடியை விட உயற்வான அல்லது நிகரான அற்ங்கள் திருக்குரானில் உள்ளது.இருந்தால் நிருபிக்கவும் அது பகவத்கீதையாகயிருந்துலும், பைபுளாகயிருந்தாலும் சரி தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றேன்.

Maa said...

நான் தெரிந்து கொள்ள வேண்டும் நோக்கிலேயே கேட்க்கிறேன் இஸ்லாமிய நண்பர்களே... நீங்கள் எதற்க்கும் ஈடிணையில்லாதது என்று எப்பொழுதும் கூறுவதால்..

திருக்குறள்,ஆத்திச்சூடியை விட உயற்வான அல்லது நிகரான அறங்கள் திருக்குரானில் உள்ளது.இருந்தால் நிருபிக்கவும் அது பகவத்கீதையாகயிருந்துலும், பைபுளாகயிருந்தாலும் சரி தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றேன்.

Anonymous said...

காஃபிர் தருமி,
why I am not a christian பதிவை why I am not a muslim பதிவாக ஆக்கியிருக்கும் மார்க்க சகோ சுவனப்பிரியன் பதிவில் போய், சகோ. என்னுடைய பதிவில் மிர்ஸா குலாம் (அலை) பற்றி எழுதியிருக்கிறேன். வந்து உங்கள் கமெண்டை போடுங்கள் என்று கூப்பிட்டேன். கமெண்டை கூட அனுமதிக்கவில்லை. ஈமானுக்காக உழைத்து பொய் நபிகளை அடையாளம் காட்டுவதற்கு கூட உதவமாட்டேன் என்கிறார்.

இருந்தாலும் நீங்கள் கிடுக்கிப்பிடி போடுவதற்கு ஏற்கெனவே படித்திருப்பதுதான் காரணம். இவ்வளவு காலமாக சுவனத்தென்றல்கள் வீசிய புளுகு காற்றை இப்படி நிறுத்துவது நியாயமா? சிந்தித்து பாருங்கள்.

ஒவ்வொரு மொழியிலும் சுவனத்தில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று ஒரு ஆபாச புத்தக ரேஞ்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் புத்தகம் போடுவார்கள். தமிழிலும் புத்தகம் இருக்கிறது. தமிழில் பல புத்தகங்கள் இருக்கின்றன.
72 கன்னிகளை என்னவெல்லாம் செய்யலாம், கில்மான்களை என்னவெல்லாம் செய்ய சொல்லலாம் என்ற ரேஞ்சில் சரோஜாதேவிக்கு சவால்விடும் அளவுக்கு இருக்கும். எங்கள் கண்களிலேயே அந்த புத்தகத்தை காட்ட மாட்டார்கள். ஆனால், நாங்களெல்லாம் சும்மாவா. திருடி எடுத்துகொண்டுவந்து படித்து.. சரி அதெல்லாம் இங்க வேண்டாம்

முடிஞ்சா அந்த பக்கங்களை வலையேற்றுகிறேன். நம்ம பதிவை ஆபாச பதிவுன்னு மார்க் பண்ணீடுவங்களேன்னு யோசிக்கிறேன்.


அதெல்லாம் நம்ம சுவனப்பிரியர் படிச்சிருக்கமாட்டாரா என்ன?

ய்ய்யாஅல்லாஹ்.

Anonymous said...

சூப்பர் சகோ சுவனப்பிரியர்,

//இந்த முரண்பாடுகள் வேதங்களில் வந்தால் இறைவனின் வல்லமைக்கே சவாலாக அமையும்.//

குரானில் முரண்பாடுகள் வந்தால் பூசி மொழுகிடும்ல?

பாருங்க.. அல்லாஹ் தவிர வேறெது மேலயும் ஆணையாக என்று வைக்கக்கூடாது என்று நபிஹள் நாயகம் சொல்வார். ஆனால், அல்குரானே நிலவின் மீது ஆணையாக, சூரியன் மீது ஆணையாக என்றுலிஸ்டு போட்டு ஆணையாக வைக்கும்.

ய்ய்யாஅல்லாஹ்

தருமி said...

//கமெண்டை கூட அனுமதிக்கவில்லை. ஈமானுக்காக உழைத்து பொய் நபிகளை அடையாளம் காட்டுவதற்கு கூட உதவமாட்டேன் என்கிறார்.//

”டொக்”

இது என்னன்னு கேக்றீங்களா, இப்னு பஷீர்? என் மனசும் உங்க மனசு மாதிரியே ‘டொக்’ அப்டீன்னு உடஞ்சிருச்சி ...

//ஆபாச புத்தக ரேஞ்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் புத்தகம் போடுவார்கள். தமிழிலும் புத்தகம் இருக்கிறது.//

மூமின்களுக்கானதை காபிருக்கும் கொடுங்களேன், please!

suvanappiriyan said...

மா!

//திருக்குறள்,ஆத்திச்சூடியை விட உயற்வான அல்லது நிகரான அற்ங்கள் திருக்குரானில் உள்ளது.இருந்தால் நிருபிக்கவும் அது பகவத்கீதையாகயிருந்துலும், பைபுளாகயிருந்தாலும் சரி தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றேன்.//

தமிழ் காப்பியங்கள் இலக்கியங்களிலேயே மிகவும் உயர்தரமாக வைத்துப் பார்க்கப்பட வேண்டியவற்றுள் ஒன்று நமது திருக்குறள். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் இங்கும் அறிவியலோடு மோதக் கூடிய ஒன்றிரண்டு குறள்கள் வந்து விடுகின்றன. திருவள்ளுவர் தூதராகவோ திருக்குறள் வேதமாகவோ அந்த காலத்தில் இருந்திருக்கலாம். வழக்கம் போல் சில இடைச் செருகல்களும் ஏறபட்டிருக்கலாம். இறைவனே அறிவான். இனி அந்த குறள்களைப் பார்ப்போம்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று
115 - அதிகாரம்: களவியல்

நான் என் காதலரைக் கண்டது ஒருநாள் தான். ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைப் பாம்பு கௌவியது போல் என் உடல்எங்கும் பரவியுள்ளது.

இந்த இடத்தில் வள்ளுவர் சிவன் தலையைக் கற்பனை செய்து அன்றைய மக்களின் கிரகணக் கதையை தன் குறளில் எடுத்தெழுதியுள்ளார். அந்த கால மக்களின் நம்பிக்கைக்கு அது சரி. இப்பொழுதும் அந்த கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா?

இது போன்று பல குறள்களை என்னால் காட்ட முடியும்.


இப்னு சாகீர் ;- சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது இடையில் இந்த காமெடி பீஸ் வேற... ஒளிந்து கொண்டு எழுதுவது நரேனாகவோ அல்லது சார்வாகனாகவோ இருக்க வாய்ப்புண்டு நடத்துங்கள்......:-)

தருமி!

//உங்கள் வசனங்கள் -மிக வெளிப்படையான வசனங்கள் - உள்ளன. பின்னும் ஏன் மெழுகுகிறீர்கள்?!//

முன்பே நான் சொன்னது போல் அது பெண்ணாகவும் இருக்கலாம். சுவனத்தில வருபவருக்கு பரிசாகவும் தரலாம். அதை அடைய முஸ்லிம்கள் விருப்பமும் படலாம். இதில் என்ன தவறைக் கண்டீர்கள்?

தருமி said...

//அதை அடைய முஸ்லிம்கள் விருப்பமும் படலாம். இதில் என்ன தவறைக் கண்டீர்கள்? //

சாமிகளா! உங்களுக்கு சாமி எது தந்தாலும் இனிக்கும். நீங்கள் விருப்பமும் படலாம். அதற்காக எதுவும் செய்ய ஊக்கமாகலாம் ... அதெல்லாமே உங்க விஷயமுங்க.

நான் சொல்றது எனக்கு இது கேவலம்; அசிங்கம்; தவறானது.

நான் ஒரு ஆசிரியனாக இருந்து ஒரு தேர்வு நடத்துகிறேன். மாணவர்களுக்குப் பல நல்ல கட்டளைகள் இடுகிறேன். மாணவர்கள் என் கட்டளைகளை மேற்கொண்டால், அடுத்த தேர்வுக்கு நான் வினாத்தாள்களை முதிலிலேயே கொடுத்து, அதோடு தேர்வு சமயத்தில் பார்த்து எழுத புத்தகமும் கொடுத்து, நானும் பக்கத்தில் நின்று உதவி ...

எப்படிப்பட்ட ஆசிரியன் நான்!! உங்க சாமி இதைவிட மோசமா இருக்கேன்னு ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் இந்த வாழ்க்கையில் தவறென்று விலக்கப்பட்டதை, அடுத்த நீண்ட பிறவியில் பரிசாகக் கொடுப்பது ‘எந்த சாமிக்கும் பொருத்தமில்லா’ திருவிளையாட்டு!

இதுக்குப் பதில் சாமிட்ட மறுஜென்ம சமயத்தில் கேட்டுக்கோ என்பது நல்ல ஜோக்!
நான் சொல்வது எதுவும் உங்களுக்குப் புரியாது. ஏனெனில் வஹி என்ற தத்துவத்தை இத்தனைக் கண்மூடித்தனமாக நம்பும் அடிப்படைவாதிகளுக்கு முன்னால் எந்த எளிய விளக்கமும் செல்லாது. ஒரே பிடி .. மூணே மூணு கால்!

நடத்துங்க அய்யா ... என்னைக் கூப்பிடாதீங்க. நீங்க சொன்ன அந்த 3 பேர் ... பாவம் அவர்களையும் விட்டு விடுங்கள். சரியா?

தருமி said...

//அது பெண்ணாகவும் இருக்கலாம். சுவனத்தில வருபவருக்கு பரிசாகவும் தரலாம்.//

ஒரு தடவை சொன்னால் பற்றாதா? பூசி மெழுகாதீர்கள். அந்தப் பரிசுகள் என்னவென்று லிஸ்ட் போட்டு உங்க சாமி சொல்லியிருக்குல்ல... அதையும் மேற்கோளாகக் காண்பித்தாகி விட்டேனே. அப்புறம் என்ன.. அதாகவும் இருக்கலாம்... இதாகவும் இருக்கலாம்னு கதை சொல்றீங்க! அசிங்கமா இருக்கு இதைப் பற்றிப் பேசவே. கூச்சமாக இருக்குங்க.

தருமி said...

//இதில் என்ன தவறைக் கண்டீர்கள்? //

தவறே இல்லை அய்யா! உங்க சாமி கொடுக்குது; நீங்க அதை இனிப்பா வாங்கிக்கிறீங்க. இதில் என்னங்க தவறு!!!!!

ஏதாவது ஒரு கடவுளே! இந்த மாதிரிக் கடவுளிடமிருந்து என்னைக் காப்பாற்று’ப்பா!

Anonymous said...

//ஏதாவது ஒரு கடவுளே! இந்த மாதிரிக் கடவுளிடமிருந்து என்னைக் காப்பாற்று’ப்பா!//

சூப்பர்
வாய்விட்டு சிரித்தேன்..

naren said...

@சுவனப்பிரியன்.
சுவனப்பிரியன்!!!!

//இப்னு சாகீர் ;- சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது இடையில் இந்த காமெடி பீஸ் வேற... ஒளிந்து கொண்டு எழுதுவது நரேனாகவோ அல்லது சார்வாகனாகவோ இருக்க வாய்ப்புண்டு நடத்துங்கள்......:-)//

நான் அவ்வளவு ”சதி”காரன் கிடையாது. என் “சதி” யை விட கடவுளின் “சதி” அளவற்றது. சிறந்த ”சதி” காரனிடம் கொஞ்சம் பயமிருப்பதால்...ஹா...ஹா... என்னால் இப்னு சாகிர் அவதாராம் எடுக்கமுடியாது.

seriously...what i am will be reflected in my blog. no need for me to go incognito.

நான் இப்னு சாகிர் கிடையாது. சார்வாகனும் தானும் கிடையாது என்று சொல்லியிருக்கிறார். சதிகளை பார்க்காமல் உண்மை என்று நம்பவும்.

இப்னு சாகிர் என்றால் சாகிரின் மகன் என்று அர்த்தம். அந்த மாதிரி வேற்று மதத்தவர் தன்மானம் மறந்து பெயர் வைப்பார்களா என சிந்திக்க வேண்டுகிறேன்...நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

naren said...

மூமின் இ.சா.

//முடிஞ்சா அந்த பக்கங்களை வலையேற்றுகிறேன். நம்ம பதிவை ஆபாச பதிவுன்னு மார்க் பண்ணீடுவங்களேன்னு யோசிக்கிறேன்.//

சட்டதிற்கு உட்பட்டு அச்சிடப்பட்டிருக்கும் புத்தகங்கள் எப்படி ஆபாசமாகும்.

அதனால், அந்த “penthouse letters" யை தைரியமாக பதிவேற்றலாம்.

Nanjil said...

//மூமின்களுக்கானதை காபிருக்கும் கொடுங்களேன், please!//

தருமி சார்! இது உங்களுக்கே நல்லாருக்கா. மும்மீன்களின் சுவனம் வேண்டாங்கறீங்க. இத மட்டும் கேக்குறீங்களே. சுவனம் வேணுமுண்ணு சொல்லுங்க. உங்க வீடு தேடி வந்து புக்க குடுப்பாய்ங்க.

தருமி said...

padmapadan,
கண்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருப்பதால்தான் கண்தானம் நடக்கிறது போன்ற பல உண்மைகளை அறிந்தேன்.
:(

ஆனாலும் மிகுந்த பொறுமை வேண்டும் இதனை முழுமையாகக் கேட்க!

நன்றி

Anna said...

In solidarity with Arab-speaking athiests and agnostics

தருமி said...

the analyst,

thanks for the video. so astonishing many of our ideas are just replicated there .. almost word to word!

தருமி said...

//ஒரு வசனத்தை எடுதது 'இந்த வசனம் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு முரண்படுகிறது.' என்று ஒரு வசனத்தை உங்களால ஏன் காட்டமுடியவில்லை?//

நாங்கள் காட்டுகிறோம். அதை நீங்கள் எப்போதும் ஒத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று தெரிந்தும் காட்டுகிறோம். ஒரே ஒரு சான்று: விந்து பற்றிய நமது விவாதங்கள்.

தருமி said...

1400 வருடங்களுக்கும் மேலாக (//ஒரு வசனத்தை எடுதது 'இந்த வசனம் நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு முரண்படுகிறது.' என்று ஒரு வசனத்தை உங்களால ஏன் காட்டமுடியவில்லை?//) இப்படி ஒரு வசனத்தை வைத்து காலம் தள்ளிவிடுகிறீர்கள். நல்லா இருக்கு. :(

Anonymous said...

தருமி அய்யா

2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்
என்ற அல்குரான் வசனத்துக்கு வீடியோ விளக்கம் அளித்திருக்கிறேன்.

குரான் வீடியோ விளக்கம்: ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்

அல்ஹம்துலில்லாஹ்

yasir said...

சுவனப்பிரியன்

//திருவள்ளுவர் தூதராகவோ திருக்குறள் வேதமாகவோ அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம்....///

ஆஹா...நல்ல கற்பனை இப்படித்தான் அந்தக் காலத்தில் நல்லவர்களாக வாழ்ந்த மனிதர்களையெல்லாம் மனித தெய்வங்களாகக் கருதி வந்தவர்கள் அவர்கள் மறைந்த பிறகு சிலை எழுப்பி அதற்கு பூஜை செய்து கோவில் கட்டியவர்களெல்லாம் இன்றும் உண்டு. அது போல் நல்ல கருத்துக்களைத் தந்தவர்களை தூதர்கள் என்றும் அக்கருத்துக்களை புத்தகங்களாக வெளியிட்டால் அவைகளை வேதங்கள் என்றும் கூறும் தங்களுக்கும் மேற்கூறியவர்களுக்கும் என்ன வேறுபாடோ??

//நிலாவை பாம்பு கவ்விய திருக்குறள் கருத்தை அந்தக் கால மக்களின் நம்பிக்கைக்கு அதுசரி,இப்பொழுதும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வீர்களா?//
இதையேதான் நாங்களும் கேட்கிறோம் நிலவை இரண்டாக பிளந்தது,கடல் நீர் விலகி பாதை அமைத்தது,போன்ற அந்தக் காலக் கருத்தை இப்பொழுதும் ஏன் எற்றுக் கொள்கிறீர்கள்?

தருமி said...

//நிலாவை பாம்பு கவ்விய திருக்குறள் கருத்தை ...//

இது சொன்னது திருவள்ளுவர்.

//நிலவை இரண்டாக பிளந்தது,கட

இதைச் சொன்னது நபி.

அய்யோ யாசிர் .. இப்போவாவது உங்களுக்கு எது சரியென்பது புரிந்தால் சரி! உங்களுக்கு ஏன் தான் ஒண்ணுமே புரிவதேயில்லை ...!

:(

Post a Comment