Thursday, January 05, 2012

545. வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்



*
அவைநாயகன் எனும் நா.சபாபதி என்ற பதிவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை உங்களிடம் சேர்ப்பிக்க இப்பதிவு.

அவர் கூறியிருப்பதில் உள்ள //என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்//  என்ற வார்த்தைகளுக்கு மரியாதை அளிக்க இப்பதிவு.

*

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்





சாலை பாதுகாப்பு வாரம்- 5 ஆம் நாள்
வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும், தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை என்று எழுதியிருந்தேன்.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது – வலைப் பதிவர்கள் அனைவரும் ஒரே நாளில் இந்த சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும் என்பதே அந்த யோசனை.
எனவே சாலை பாதுகாப்பு வார கடைசி நாளான 7-1-2012 அன்று அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?


அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி



*

11 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

மித வேகம் மிக நன்று....

லைசன்ஸ் வாங்க எட்டு போடு!!! உயிரை காக்க ஹெல்மெட் போடு!!!!!

சார்வாகன் said...

Thank you

மருத புல்லட் பாண்டி said...

oru valiya pathivu potturarunga facebooklla remba neran selavu panreengala MottaBoss

MaduraiGovindaraj said...

சாலை வரி வாங்கினால், நல்ல சாலை போடணும் !
பாதுகாப்பாகா வாழ்வோம்

ப.கந்தசாமி said...

சாலை பாதுகாப்பு பற்றி ஒரு பதிவு இட்டுள்ளேன். அதனுடைய லிங்க்:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு முயற்சி...

முனைவர் இரா.குணசீலன் said...

பயணம் இது பந்தயமல்ல..

http://gunathamizh.blogspot.com/2012/01/blog-post_06.html

தருமி said...

பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எப்போதும் நம் மனதுக்குள் ஓடும் திமிர்த்தனமே முக்கிய காரணமாக ஓடுகிறது.

சாலைகளில் செம egoists நாமெல்லோரும்!

நாகை சிவா said...

என்னுடைய பங்காக வேகம் ரொம்ப முக்கியம்

ராஜ நடராஜன் said...

//சாலைகளில் செம egoists நாமெல்லோரும்! //

தருமி ஐயா! உலகில் வாகனம் ஓட்டும் அத்தனை பேரும் வாகன ஈகோன் மட்டுமே!

நம்மாளுகளாவது நெருக்கடியான சாலைகளில் டர்புர்ன்னு வண்டி ஓட்டி வேண்டியிருக்குது.நல்ல சாலை,நான்கு வழித்தடமிருந்தும் பொறுமையில்லாமல் வண்டி ஓட்டுவதும்,ஒரு வழிப் பாதையில் வழிய உட்றான்னு கீ...கீ போடறதைப் பார்க்கும் போது நம்மாளுக நல்ல ரோடு இல்லாமலே நெரிசலில் அவஸ்தைபடுறாங்கன்னு நினைக்கிறேன்.கூடவே கொஞ்சம் ஒழுக்கம் சார்ந்த பழக்க குறைபாடும் எனலாம்.

தருமி said...

http://sixth-finger.blogspot.com/2006/03/2-traffic-indian-us-styles.html

Post a Comment