*
இன்று - 22.6.21 - இந்து தினசரியில் ஒரு கடிதம்.
இந்துவின் ‘Property Plus’ supplement (April 7, 2012)-ல் ஒரு விளம்பரம். வீடுகள் விறபனைக்கு வந்த விளம்பரத்தில் “only Brahmins” என்றிருந்திருக்கிறது. இது சட்டப்படி தவறானது; முறையற்ற விளம்பரம் என்று இனியன் இளங்கோ என்று ஒருவர் எழுதியுள்ளார்.
Your ‘Property Plus’ supplement (April 7, 2012) carried an advertisement for the sale of flats with a caption stating “only Brahmins,” excluding non-Brahmin castes, Dalits and religious minorities such as Muslims, Christians, Jains, Buddhists, Sikhs, etc., from buying or residing in the flats, thus discriminating against people on the basis of caste and religion, thereby violating the letter and spirit of Articles 15 and 17 of the Constitution. Excluding Dalits from buying the advertised flats can only be construed as an expression of untouchability against them.
Excluding people based on caste or religion from the sale, rental or residence of housing facilities is a blatant act of bigotry and oppression that causes great distress to the victims apart from leading to social balkanisation of our nation due to caste segregation and religious polarisation. Such advertisements and business practices which exclude people on the basis of caste or religion should be proscribed.
Iniyan Elango, Chennai
இந்துவும் இது தன் தவறுதான் என்று குறிப்பிட்டுள்ளது. எங்கள் பார்வையையும் மீறி வந்த விளம்ப்ரம் என்று சொல்லியுள்ளது.
சரவணா மீனாட்சி சீரியல் பார்த்ததும் வழக்கமாக தொலைப்பெட்டியிலிருந்து ஓடி வந்து விடுவேன். சூப்பர் சிங்கர்னு ஒரு வருஷமா ஒரு போட்டி நடக்குமே ..பாவிகளா .. இப்படியா இழுப்பாங்கன்னு நோகணுமே .. அந்த காட்சி ஆரம்பிக்கிறதுக்கு முந்தியே இடத்தைக் காலி பண்ணிடுவேன். அப்படிப் போன பிறகு தங்ஸ் அந்த நிகழ்ச்சி பார்த்துட்டு போங்கன்னு கூப்பிட்டாங்கன்னு போய்ப் பார்த்தேன்.
அடப் பாவமே .. ஈஷ்வரா ... எல்லோருமே ‘அவாளா’ மாறிண்டிருந்தா. பாடரவா எல்லோரும் அவா மாதிரி ட்ரஸ் பண்ணிண்டிருந்தா... compere பண்றவாளும் அப்படித்தான் ... அந்தப் பொம்மனாட்டி ஒண்ணு இருக்குமே .. லோகத்தில எல்லா மனுஷ மூஞ்சையும் உத்துப் பாத்தா சில மிருகங்களோட மூஞ்சு மாதிரி தெரியும்னு சொல்லுவா .. தெரியுமோ? அது மாதிரி அந்தப் பொம்மனாட்டியைப் பாத்தா ஒரு ஒட்டகம் மாதிரி எனக்குத் தோணும். நடக்கிறப்போ கூட ஒட்டகம் நடக்குறாப்ல தான் தோணும். இன்னைக்கி மூஞ்சு பூரா பவுடரை ஈஷிண்டு, மூக்குல பில்லாக்கு மாட்டிண்டு அலைய்றப்போ ஒரு ஒட்டகம் அசமஞ்சமா பில்லாக்கு போட்டு நடக்குறது மாதிரி நேக்கு தெரிஞ்சது. அதுவும் அந்த அம்பி இருக்கானோ இல்லியோ .. அவன் பரட்டையா குடுமி, தாடி வச்சுண்டு ... அப்டியே அபிஷ்டு மாதிரி இருந்தான். காணச் சகிக்கலை .. அடுத்து... ஜட்ஜஸ் எல்லோரும் மாமி மாதிரி, மாமா மாதிரி வந்திருந்தா ... இம்புட்டுதான் நினச்சிண்டிருந்தேன். ஆனா பாருங்கோ ... சின்னப் புள்ளைகளோட தோப்பனார், அம்மா எல்லோரும் அதே மாதிரி ‘அவாளா’ வந்திருந்தா ... அதுக்கு மேல பார்க்க தோணலை... என்ன பாடினாளோ ... என்ன பண்ணினாளோ தெரியலை.
சும்மா சொல்லப்படாது ... விஜய் டிவி நல்ல நிகழ்ச்சியெல்லாம் கொடுப்பா. ஆனா ஏனிப்படி ஒரு நிகழ்ச்சி பண்றான்னு புரியலை. இன்னொரு புதுசா ஒரு நிகழ்ச்சி தர்ரா ...’ ஆஹா!’ன்னு ஒண்ணு.... ஏன்னு நேக்கு தெரியலை .. அதுவும் அப்படியே அவாளோட நிகழ்ச்சி. நேக்கு என்ன தோண்றதுன்னா ...’அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சந்தேகம் எப்போதும் உண்டு. . இருந்தும் ஆளாளுக்கு இப்படி நடத்துறாளே .. ஏன்? யாருக்காக இப்படில்லாம் பண்றா? இப்படிப் பண்றவா எல்லோரும் அவாளும் கிடையாதுன்னு நான் நினச்சுண்டு இருக்கேன். பின் ஏன் இப்டி பண்றா...?
ஒரு வேளை அடுத்த வாரம் சூப்பர் சிங்கரை வன்னியருக்கு ..அதுக்கடுத்த வாரம் முதலியாருக்கு ... அதுக்கடுத்த வாரம் தலித்துக்கு, தேவருக்குன்னு பிரிச்சு கொடுப்பாளோ என்னவோ ... யாராவது தெரிஞ்சவா இருந்தா கொஞ்சம் கேட்டு சொன்னேள்னா ரொம்ப நன்னியாருக்கும்.
சொல்றேளா ....?
*
பி.கு. (10.7.12):
வீடுகள் விற்பதில் இப்படி ஒரு சாதிப்பிரச்சனை. சிலருக்கு இது தவறு; சிலருக்கு இது சரி. ஆனால் மதுரை திடீர் நகர் - நகரின் சுத்தம் பேணுவோருக்கான வீடுகள் - பகுதியில் உள்ள குடியிருப்புகள் ஒரே சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது அதாவது அந்தக் குடியிருப்புகள் ஒரு சாதியினருக்கே ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன. . ஆனால் இதில் யாருக்கும் வருத்தமோ கோபமோ ஏதுமில்லை ! எல்லோருக்கும் அது சரியாகவே படுகிறது !!
*
49 comments:
வணக்கம் அய்யா,
இந்துவில் வந்த விளம்பரம் அதிர்ச்சி தந்தது.உடனே பதிலடி கொடுத்த சகோ இனியன் இளங்காவுக்கு பாராட்டுகள்.
உயர் சாதியினரில் பிராமணர்கள் தங்கள் அடையாளத்தை பேணுவதற்கு உரிமை உண்டு எனினும் பொது இடங்களில் தவிர்த்தால் நலம்.குறைந்த பட்சம் பேச்சு முறையை தவிர்ப்பது பல்ருக்கு எரிச்சலை தவிர்க்கும்.
தமிழில் தேர்வு எழுதினால் எப்படி முறையான தமிழில் எழுத முடிகிறதோ அது போல் அனைவராலும் முறையாக தமிழ் பேச முடியும்.வீட்டுக்குள் வேறு மொழி பேசுபவர்கள் கூட வெளியில் ஒழுங்கான தமிழ் பேசும் போது தமிழை தாய்மொழியாக் கொண்டவர்கள் இபடி செய்வது நிச்சயம் எரிச்சல் ஊட்டுகிறது.
சாதி சார்ந்த பேச்சு வழக்கு மொழி பொது இடங்களில் பேசுவது அநாகரிகம்.
தன் சாதியை வெளிச்சம் போட்டு காட்டும் குறுகிய புத்தியே!
இதுக்குத்தான் நான் இப்படி நிகழ்ச்சிகளை பார்ப்பதே இல்லை.எனினும் இசைப் பொடிகளில் கர்நாடக் இசை அறிந்தவர்கள் மட்டுமே முன்னேற முடியும் என்ற சூழல் இருப்பதால் முறையான் பயிற்சி அற்ற சிறந்ட்த பாடகர்கள் கூட அடுத்த சுற்றுக்கு செல்ல முடிவது இல்லை.
சில குறிப்பிட்ட இனத்தவர்கள் பரம்பரையாக கர்நாடக இசை பயிற்றுவிக்கும் பழக்கம் கொண்டு இருப்பதால் அவர்களே இசைப்போட்டிகளில் அதிகம் வெற்றி பெறுகிறார்கள் என நினைக்கிறேன்.
இது மாற வேண்டும் எனில் பள்ளிகளில் தமிழிசை முறைப்படி கற்றுக் கொடுக்கலாம் என்பது நம் கருத்து.
நன்றி
சகோ. செமக் கடி .. இந்த அவாக்கள் எங்கே போனாலும் தம்மோட கலாச்சாரத்த புகுத்திபுடுறா என்ன செய்ய ? தி ஹிந்துவில் வந்த விளம்பரம் ஒரு பக்க RACISM ... கனடாவாக இருந்தால் கிழிகிழியென கிழித்திருப்பார்கள் ... !!!
விஜய் டிவி செய்கின்ற அலம்பல் தாங்க முடியவில்லை ... அடுத்த வாரம் நிச்சயம் வன்னியர் வாரமாக இருக்கலாம் என நினைக்கின்றேன் .. ஹிஹி !!!
இந்திய சமூகமே ஒரு நைந்த துணியாகப் போச்சு. ஒரு பக்கம் தைத்தா இன்னொரு பக்கம் கிழியுது.
இங்க, கோவையில, ஒரு முதியோர் இல்லம் இருக்கு. அவாளுக்கு மட்டும். பிராமின் எக்ஸ்டன்ஷன் அப்படீன்னே ஒரு புறநகர் 50 வருஷத்திற்கு முன் உருவாச்சு. அப்புறமா அதை ராம்நகர்னு மாத்தினா.
இப்படி எத்தனையோ இருக்குங்க. நம்ம காலம் முடிஞ்சு போச்சு. வருங்காலம் எப்படி ஆகுமோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இன்றும் பிரிவினை பார்த்தாலோ, தாங்கள் உயர்ந்தவர் என உளரினாலோ கண்டிக்கப் படவேண்டும். இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்து தான் அனைவரும் பதிலளிக்க வேண்டும்.
ஒரு பிரிவினரின் பாரம்பரிய உடையை அணியவைத்து ஆனால் கேவலமான அங்க அசைவுகள், ஆட்டங்கள், பாரம்பரியத்தை கேலி செய்தல் என இழிவு படுத்தியதே.
இது போல பிற மதத்தினர் ஆடி பாடி செய்வது போல செய்ய முடியுமா.
கண்டிக்க தக்கது! இருப்பினும், பல பிரிவினரும் தங்கள் வகுப்பினருக்கு விற்க/வாங்க முன்னுரிமை அளிக்கிறார்கள்.நாம் நேரில் கண்டும்/கேட்டும் இருக்கிறோம்! பேச்சு மொழிலும் //அவாளை''மட்டும் குரூபிட இயலவில்லை.பல்வேறு பிரிவனர் வழக்கும் மாறுபடுகின்றது.''அவாள்'' வழக்கும்!!.இருப்பினும் தவிர்த்தல் நலம்!!!
எழுத்தாளர் ஜெயகாந்தன், அவரைப் பத்தி எடுத்த ஒரு குறும்படத்தில பேசுறாரு..இன்னும் பிராமண எதிர்ப்பு தேவையில்லை, ஒருகாலத்தில பக்கத்தில வராதடான்னு சொன்ன காலம் போச்சுன்னாரு. இன்னக்கி அப்படி சொல்லாம வடிவம் மாறியிருக்கு. ஜெயகாந்தன் அன்னிக்கு சமூக அக்கறையோடு எழுதுனாரு, மக்கள் வரவேற்றார்கள். புகழ்பெற்றார். இன்னைக்கு சங்கரமடத்துக்கு காவடி துக்குறாரு. என்ன செய்ய.. சாதி செத்தாலும் வுடாது.
விஜய் டி.வி. தெளிவாக உணர்த்திவிட்டது. அந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அவாளுக்கு மட்டும்தான். நிகழ்ச்சியின் target audienceம் அவர்களே. உலகத்தில் உள்ள எல்லா பாடல்களும் கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்தது என்கிற கூட்டம் அவர்களது.
கர்நாடக சங்கீதம் என்பதுதான் உண்மையான சங்கீதம் என்று வகுத்து அதை மற்றவர்களுக்கு எட்டாகணியாக்கி, அதை அவர்களுக்குள் வைத்து அவர்களின் கலாச்சாரமாக்கிவிட்டார்கள்.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை, fashionயை நிர்ணயிப்பது யார் என்பது அனைவரும் அறிந்ததே.
அதனால், அவாளுக்கானதை நாம் அடைய முடியாவிட்டாலும், அவ்வாறு அவாள் மாதிரி ஆக ஆசைபடுவதால், இந்த நிகழ்ச்சியை நம்மாளுக விடாமல் பார்க்கிறார்கள்.
அந்த ஹிந்து பத்திரிக்கை விளம்பரத்தில் only for vegetarians என்று எழுதியிருந்தால் எல்லோருக்கும் நோகாமல் புரிந்திருக்கும்.
//’அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சம்சயம். .//
இதுக்கு எனக்கு பதில் வேணுமே...!
விஜய் டீவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வரவர மாமியா கழுதை போல ஆன நிகழ்ச்சி. நீங்க சொன்ன வாரத்தில் கொஞ்சம் நானும் பாத்தேன். மாமிகளை எல்லாம் மேடையேற விட்டு ஆடவிட்டு... ஆச்சாரம் எங்க போச்சோ தெரியலை.
வீடு/மனை விக்குறதுல கூட சாதிதான். :) நடக்குறது நடந்தே தீரும் :)
சாதியை மூடநம்பிக்கையாக, பிரிவினை உன்டாக்கும் மூடத்தனமாக உணர்ந்த(இங்கே பின்னூட்டம் இட்டுள்ள) பலரும், மதம் என்று வந்துவிட்டால் தன் மதம் தூய இறைவனின் பரிசு என்று கூறும்போது... சாதிப்பிரியர்கள்(சாதி நம்பிக்கை பற்றி) என்ன நினைப்பார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது!!
மந்தைவெளியில் வசித்து வரும் எனக்கும் இதே தொல்லைதான். இந்த விளம்பரங்கள் தெரிந்தேதான் வருகின்றன.
நான் பிராமணன் இல்லை என்பதற்காக வீடு மறுக்கப்பட்ட நிகழ்வுகள் எத்தனையோ. வாடகை மட்டும் குறியாக உள்ள ஒரு பிராமணன்தான் வீட்டில் அசைவம் சமைக்க கூடாது என்ற நிபந்தனையோடு வாடகைக்கு வீடு கொடுத்தான்.
சொந்தமாக வீடு வாங்கலாம் என்று நினைத்தபோது கோடியில்தான் தொகை ஆயினும் அவாளா என்று கேட்டனர் இல்லை வீடு என்றனர்.
என் பணம் உரிய விலை தருவதாக இருந்தாலும் வாங்குவதற்கு தடை செய்யப்படுகிறோம்.
ஆம் நாம் இன்றும் ஒதுக்கப்படுகிறோம்.
எங்க ஆத்துல டிவி பொட்டி இல்லை
இருந்தாலும் சொல்றேன். சூத்திரன் நடத்தும் தொலைகாட்சி ஆயினும் அவாளோட ஆட்சிதான்.
லாபம் மட்டுமே குறி, அதுக்கு அத்திம்பேர் help செய்வா...... நீங்க செய்வேளா
//மதம் என்று வந்துவிட்டால் தன் மதம் தூய இறைவனின் பரிசு என்று கூறும்போது... ..//
TIMON,
அப்படி யாரும் இங்கே- இப்பதிவில் -இல்லையென்றே நினைக்கிறேன்.
TIMON,
அப்படி யாரும் இங்கே- "இப்பதிவில்" -இல்லையென்றே நினைக்கிறேன்.
ஆம் ஐயா எனது தவறு தான்!! ஆனால், ஜாதியை மறுக்க தொடங்கிய போது எனது மதம் பொருள் பொதிந்த பொக்கிஷம் என்றே எண்ணி இருந்தேன்!! பிறந்த மதத்தில் இருந்து வெளிவருவது கடினம் என குறிப்பிட விரும்பினேன்.
//பிறந்த மதத்தில் இருந்து வெளிவருவது கடினம் என குறிப்பிட விரும்பினேன். //
கடினம்தான் .. ஆனால் முடியாததல்ல... நான் வெளிவந்து விட்டேன்.
ஜாதி, மதவெறியை ஒழிக்கவே முடியாதா? அவ்வப்பொழுது ஏதாவது உருவத்தில் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.
ஜாதி, மதவெறியை ஒழிக்கவே முடியாதா? அவ்வப்பொழுது ஏதாவது உருவத்தில் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.
//அந்தப் பொம்மனாட்டியைப் பாத்தா ஒரு ஒட்டகம் மாதிரி எனக்குத் தோணும். நடக்கிறப்போ கூட ஒட்டகம் நடக்குறாப்ல தான் தோணும். இன்னைக்கி மூஞ்சு பூரா பவுடரை ஈஷிண்டு, மூக்குல பில்லாக்கு மாட்டிண்டு அலைய்றப்போ ஒரு ஒட்டகம் அசமஞ்சமா பில்லாக்கு போட்டு நடக்குறது மாதிரி நேக்கு தெரிஞ்சது. //
ஹ ஹ....ஹ !!நக்கல் திலகமே!!....கும்புடுறேன் சாமி:-))))
//’அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சம்சயம் எப்போதும் உண்டு. . //
எல்லாம் டி.ஆர்.பி ரேட்டிங் பண்ற வேலை...ஒரு சமூகத்தை திருப்தி பண்ற மாயத்தோற்றம் குடுத்தால்...அந்த நிகழ்ச்சி ஒருவேளை ஹை ஸ்டாண்டர்ட் ன்னு !? ன்னு காமிச்சுக்குறான்களோ??
/’அவாளுக்கே’ இந்த மாதிரி நிகழ்ச்சி நடத்துறது பிடிக்குமோ இல்லையோன்னு நேக்கு ஒரு சம்சயம். .//
இதுக்கு எனக்கு பதில் வேணுமே...!
who cares whether "avaal" like this or not? "Avaal" don't bother about these since this is being done in Tamil movies in different forms for many years, and they are used to this. At my home we see this program since one of the participants is from our neighborhood. Otherwise our interest in this type of programs is more towards counting the n number of mistakes done in talking "avaal" language and dressing like "avaal".
//one of the participants is from our neighborhood//
எப்படிப்பா ... இந்த மாதிரி பிள்ளைகளை உங்க ஊர்ல இருந்து சென்னைக்கு அடிக்கடி கூட்டிட்டு வந்துக்கிட்டே இருப்பாங்களா..? எத்தனை மாதத்திற்கு..? வெளிநாட்டுப் பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டுட்டு இங்கு வந்து ... தங்கி ... அம்மாடி!
Saar: Yes. Since the beginning of the program the girl has not attended the school almost every week. Channel pays for the transport, food, costume etc. School also supports this. Whether she wins or not, she is already famous in TN. Wherever she goes in Chennai, she is recognized by almost everybody. And according to her parents, whether she wins or not, the exposure and the voice training by that bearded guy is invaluable. And going by the chances got by the previous winners and runners in similar programs, it is worth trying they say.
//Channel pays for the transport, food, costume etc. //
not bad!!
//Whether she wins or not, she is already famous in TN. //
ஆருப்பா அது?
{{{{{இந்திய தேசிய லீக், தாருல் இஸ்லாம் ஃபவுண்டேன் டிரஸ்ட் போன்றோர், சாதிவாரி கணக்கெடுப்பில் மதம் இஸ்லாம் என்றும் சாதி முஸ்லிம் என்றும் மட்டுமே பதிவு செய்யுங்கள் எனப் பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதற்கு மாறாக தமுமுக, ததஜ அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும் பெற மதம்: முஸ்லிம் என்றும், சாதி 1.தக்னி, 2.தூதுகோலா, 3.லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், 4.மாப்பிள்ளா இந்த நான்கு பிரிவுகளில் ஒன்றையும் குறிப்பிடுமாறு பிரசுரம் வெளியிட்டுள்ளனர். }}}} இது ஒரு முஸ்லிம் நன்பரின் கேள்வி முஸ்லிம் வலைதளத்தில் படித்தேன்!! அந்த தளத்தினர் (குரான் சொன்னபடி)வேண்டாம் என கூறினாலும் சாதியினால் லாபம் என்றால் பார்பணர் முதல் மாப்பைள்ளா வரை எல்லோரும் சாதியை உயிரைவிட மேலாக கருதுவர்!!
{{{{{இந்திய தேசிய லீக், தாருல் இஸ்லாம் ஃபவுண்டேன் டிரஸ்ட் போன்றோர், சாதிவாரி கணக்கெடுப்பில் மதம் இஸ்லாம் என்றும் சாதி முஸ்லிம் என்றும் மட்டுமே பதிவு செய்யுங்கள் எனப் பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதற்கு மாறாக தமுமுக, ததஜ அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும் பெற மதம்: முஸ்லிம் என்றும், சாதி 1.தக்னி, 2.தூதுகோலா, 3.லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், 4.மாப்பிள்ளா இந்த நான்கு பிரிவுகளில் ஒன்றையும் குறிப்பிடுமாறு பிரசுரம் வெளியிட்டுள்ளனர். }}}} இது ஒரு முஸ்லிம் நன்பரின் கேள்வி முஸ்லிம் வலைதளத்தில் படித்தேன்!! அந்த தளத்தினர் (குரான் சொன்னபடி)வேண்டாம் என கூறினாலும், சாதி ஒரு மாபெரும் அரசியல் ஆயுதம் எனபது புரிகிறது!!
அ. வேல்முருகன்,
//எங்க ஆத்துல டிவி பொட்டி இல்லை//
அடக் கடவுளே! ரொம்ப ஆச்சரியம். வாழ்க ....
தருமி சார் உங்க பதிவில் இக்பால் செல்வனுக்கு பதிலளிக்க அனுமதி அளிப்பீர்களா? கனடாவில் Peace Village என்ற கம்யூனிட்டி இருக்கிறது. இங்கே முஸ்லிம்கள் மட்டும் தாம் வீடு வாங்க முடியும். அவாள் மாதிரி அசமஞ்சமாக முஸ்லிம்களுக்கு மட்டும் என அவர்கள் அட்வர்டைஸ் செய்யவில்லை. யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் முஸ்லிம் கம்யூனிட்டி என்பார்கள் பார்க்க http://afp.google.com/article/ALeqM5inwDY9e4xZy5O9nnDwlsIdzNe1kg
இப்போது நான் இருக்கும் டெக்ஸாஸ் மாநிலத்தில் WASP (White Anglo Saxon Protestant) இவர்கள் வசிக்கும் ஏரியாவில் கறுப்பினத்தவரோ, ஹிஸ்பானிக்கோ, ஆசியரோ இந்தியரோ நிலம் வாங்க முடியாது.
ஆகையால் அவா செய்வது நியாயம் என சொல்ல வரவில்லை
பிறப்பின் அடிப்படையில் மக்களை டிஸ்கிரிமினேட் செய்வது ஒழிக்கப் பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. இந்த கருத்து நாட்டுக்கு நாடு மாறுபடகூடாது.
//இப்போது நான் இருக்கும் டெக்ஸாஸ் மாநிலத்தில் ..//
அப்போ நீங்க இப்போ ‘கால்கரி’ சிவா இல்லையா? பேசாம ’பந்தடி சிவா’ன்னு பேரு வச்சிருந்திருக்கலாமோ?!
சார், நல்ல பேர் சூட்டுகிறீர்கள். பந்தடி சிவா பார்க்கிறேன் யாராவது அல்ரெடி க்ளைம் செய்து விட்டார்களா என்று
போட்டின்னு வந்துச்சினா அது உங்களுக்கும் குமரனுக்கும் மட்டும் தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்!
@ கால்கரி சிவா - பீஸ் விள்ளகே மட்டுமல்ல சீனா டவுன், லிட்டில் இத்தாலி, கிரீக் டவுன், என்றெல்லாம் பல இடங்கள் உண்டு. ஆனால் இவை எவற்றிலுமே இன்ன ஆட்கள் மட்டும் தான் நிலம் வாங்க முடியும், வீடு தர முடியும் என சொல்லவில்லையே. அப்படி விளம்பரங்களும் கொடுக்கப்படுவதில்லையே. அவர்களாகவே பகுதி பகுதியாக பிரிந்து வாழ்வதை நானும் எதிர்கின்றேன். ஆனால் இவாக்களுக்கு மட்டும் தான் வீடு தருவோம் என சொல்வது நியாயமில்லையே.
கால்கரி சிவா
மேலை நாடுகளில் ஈக்வல் ஹவுசிங் ஆப்பர்டியூனிட்டி சட்டங்கள் இவைகளை தடை செய்கின்றன, ஆனால் இந்தியாவில் அப்படி இருக்கிறதா? சவுதி அரேபியா போன்ற முஸ்லீம்களுக்கு முன்னுரிமை என்று இந்தியாவில் சட்டம் இருக்கிறதா என்ன?
நானும் டெக்ஸாஸ்தான்:)
உங்கள் அணுகுமுறை சரியில்லை; நீங்கள் அரைக் கிணறு தாண்டுகிற ஆட்கள்.
//நீங்கள் அரைக் கிணறு தாண்டுகிற ஆட்கள். //
உங்கள் முழுக் கிணற்றைப் பார்த்து விட்டேன். நல்லாருக்கு! நன்றி.
ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா, அவாளுக்கு இதில் விருப்பம் இருக்கோ இல்லியோ ஊடகங்களில் அவர்களை ’வளைய வருவது’ ஊடகக்காரர்களுக்குப் பிடிக்குது போலும்.
பார்ப்பனர்கள் தங்களை வைத்து கேலி செய்வதற்காக நடத்தப்படும் இது போன்ற திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை ரசிப்பதில்லை.
பார்ப்பனர்களில் இப்பொழுது அசைவம் சாப்பிடுபவர்கள் 25% அளவு இருந்தாலும் வீடுகளில் அசைவம் சமைப்பது மிகவும் குறைந்த சதவிகிதம்தான் இருக்கும். ஆதலால் வீடு வாடகைக்கு விடும்பொழுது எதிர்காலத்தை மனதில் கொண்டு வீட்டில் சைவம் மட்டும் சமைப்பவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
வீட்டில் சைவம் மட்டும் சமைக்கும் மற்ற சாதியினரைக் கண்டுபிடிப்பது சிரமம் என்பதால் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களையே எதிர்பார்க்கின்றனர். ஒரு தனிப்பட்ட நபர் சொத்தை வாடகைக்கு விடும்போது, விற்கும்போது அவர் அரசாங்கக் கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை.
மேலும் அரசாங்கம் பார்ப்பனர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதால் பார்ப்பனர்களிடையே ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை கடந்த இருபது ஆண்டுகளில் பெருகியுள்ளது. அதுவும் இதற்கு ஒரு காரணம்.
நான் பார்த்தவரை மற்ற சாதிகளில் படித்தவர்கள் பலர் சமூக ரீதியாக முன்னேறும்போது பார்ப்பனர்களின் வாழ்க்கை முறையையே கடைபிடிக்க, பிரதியெடுக்க முயற்சிக்கின்றனர். 1970 களில் ரமேஷ், சுரேஷ் என்று பெயர்களில் தொடங்கி, பார்ப்பனர்கள் என்னென்ன படிக்கிறார்களோ அதையே படிப்பது என்ற ரீதியில் போகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளும் அதன் வெளிப்பாடே.
ஜகன்நாதம்,
// 1970 களில் ரமேஷ், சுரேஷ் என்று பெயர்களில் தொடங்கி, பார்ப்பனர்கள் என்னென்ன படிக்கிறார்களோ அதையே படிப்பது என்ற ரீதியில் போகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளும் அதன் வெளிப்பாடே.//
அவை இந்து பெயர்களே எனவே இந்துவாக கருதுபவர்கள் வைத்துக்கொண்டால் என்ன தவறு? அப்படியானால் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் "மிலேச்சர்கள்" பார்ப்பணர்கள் மட்டுமே இந்துக்கள் என சொல்லிவிட வேண்டும், ஏன் மற்றவர்களையும் இந்து என சொல்லவேண்டும், உண்டியல் வருமானத்திற்காகவா :-))
-------
தருமிண்ணா,
ஆனாலும் பாருங்க இந்த அதிசயத்த ,இதே அவாளே, அமெரிக்காவில பதவியுயர்வு கொடுக்க நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கிறாங்க, என வழக்கு போட்டு பதவியுயர்வு வாங்கிடுறாங்க தெரியுமோ?
இதை எல்லாம் கண்காணிக்க அங்கே எல்லாம் ஒரு குழு இருக்கு, எனவே அவாளே அங்கே பெட்டிஷன் போட்டு சலுகை வாங்கிக்கிறா, வெள்ளைக்காரனுக்கு ஈக்குவலா எங்களை நடத்தனும் சொல்லுறா,ஆனால் இந்தியா வந்துட்டா அவாள் மீண்டும் வர்ணாசிரமம் பேசுறா :-))
ஒரு அம்பி ,வெள்ளைக்காரன் பிளாட் விக்க மாட்டேன்னு சொன்னதுக்கு வழக்கெல்லாம் போட்டதாக முன்னர் படித்தேன். வெளிநாடு போனால் மட்டும் ஈக்குவல் ரைட்ஸ்னு அவாள் பேசுவாப்போல :-))
ஆனாலும் இப்போவும் வெளிநாட்டில இருக்க ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்கள் எத்தினிக் ஆர்ஜின் அடிப்படையில் செக்ரிகேஷன் செய்வது உண்டு, இதனை Social steering /Racial steering என சொல்வார்கள், வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அவாள் அங்கே போய் அனுபவிக்கட்டும் இதை எல்லாம் :-))
அவை இந்து பெயர்களே எனவே இந்துவாக கருதுபவர்கள் வைத்துக்கொண்டால் என்ன தவறு?//
தவறு என்று சொல்லவில்லை. மற்ற சாதியினர் தங்கள் அடையாளத்தை இழந்து விட்டு பார்ப்பனர்களாக முயற்சிக்கிறார்கள் என்கிறேன். எனக்குத் தெரிந்த கோனார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரின் பெயர் முத்தையா. அவர் தன் மகன்களுக்கு பட்டாபி, ராமானுஜம் என்று பெயர் வைத்தார். ஏன் என்று கேட்டால் இந்த மாதிரி பேரைக் கேட்டாலே அறிவாளின்னு ஒரு தோற்றம் வருதுங்க என்பார்.
எங்கள் கிராமத்து வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர் ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவர். அவர் மகன் மர வியாபாரத்தில் கை தேர்ந்தவன். +2 முடித்துவிட்டு கடையைக் கவனிக்கலாம் என்றிருந்தான். +2 முடித்தபோது அவன் தந்தை அய்யர் பசங்களைப் பாரு கம்ப்யூட்டர் படிச்சிட்டு எப்படி சம்பாதிக்கறாங்கன்னு. ஒழுங்கா கம்ப்யூட்டர் படி என்றார். மகனுக்குப் பெரிதாக ஆர்வம் இல்லை. சுமாராகப் படித்து ஒரு வேலை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். வருமானமும் பெரிய அளவிற்கு இல்லை. இப்பொழுது இதற்கு வியாபாரத்தையே ஒழுங்காகப் பார்த்திருக்கலாம் என்று வருத்தப்படுகிறார்.
என்னுடைய கருத்து என்னவென்றால் மற்ற சாதியினர் பார்ப்பனர்கள் அறிவாளிகள் என்றோ அவர்கள் செய்வதுதான் உயர்ந்தது என்ற மாயையில் மூழ்காமல் தங்கள் தனித்தன்மையைப் பேண முயற்சிக்க வேண்டும்.
தருமி அவர்களுக்கு என் நன்றி.
பார்க்க: http://dondu.blogspot.com/2012/07/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய அரசியல் சட்டத்தின் 15,16 பிரிவுகள் இங்கு செல்லுபடியாகாது.ஏனெனில் ஒருவரின் வீடு பொது இடம் (உ-ம் சாலை,குளம்) அல்ல,அது அரசின் உடமையும் அல்ல.100% அரசு உதவி பெற்று சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை இருக்கிறது.அதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.ஹிந்துவின் கருத்தும், விளம்பரம் தருவோரின் கருத்தும் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்.என் வீட்டை யாருக்கு விற்க வேண்டும்,யாருக்கு வாடகைக்க்கு விட வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கும் உரிமை எனக்கு உண்டு.
இதில் இன்னாருக்கு விற்க வேண்டும் என்றெல்லாம் பிறர் கட்டளையிட முடியாது.
அரசு வேலை,கல்வி என்றால் இட ஒதுக்கீடு என்று சமத்துவத்தை மறுக்கிற பேர்வழிகள்,அதை ஆதரிக்கிற பேர்வழிகள் முதலில் அதற்கு வழி வகுக்கும் அரசியல் சட்டம்தான் ஒருவர் தன் விருப்பப்படி தன் சொத்தை விற்க/பயன்படுத்த உரிமை தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
பிராமணர்களுக்கு எதிராக ஒரு கோடி தருமிகள் வந்தாலும் பிராமணர்கள் அத்தனை தடைகளையும் மீறித்தான்
சாதிக்கிறார்கள்.பெரியாரின் செல்வாக்கு இந்தியாவில்தான், பிராமணர்களுக்கு உலகமே வீடு என்றான பின் தருமிகள்,பெரியார் போன்ற விரோதிகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இருக்கிறார்களோ இல்லையோ,தமிழ் பிராமணர்கள் ஸ்டான்போர்டிலும் இருப்பார்கள்,நாசாவில் இருப்பார்கள்,மெல்போர்ன் பல்கலையிலும் இருப்பார்கள்,சீனாவிலும் மென்பொருள் நிறுவனத்தில் இருப்பார்கள்.உங்களின் இட ஒதுக்கீடு இங்கெல்லாம் செல்லுபடியாகாது.
தருமி தமிழ்நாடு மதுரையை விட பெரியது, உலகம் தமிழ்நாட்டை விட பெரியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்திய அரசியல் சட்டத்தின் 15,16 பிரிவுகள் இங்கு செல்லுபடியாகாது.ஏனெனில் ஒருவரின் வீடு பொது இடம் (உ-ம் சாலை,குளம்) அல்ல,அது அரசின் உடமையும் அல்ல.100% அரசு உதவி பெற்று சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை இருக்கிறது.அதை அரசியல் சட்டம் அனுமதிக்கிறது.ஹிந்துவின் கருத்தும், விளம்பரம் தருவோரின் கருத்தும் ஏன் ஒன்றாக இருக்க வேண்டும்.என் வீட்டை யாருக்கு விற்க வேண்டும்,யாருக்கு வாடகைக்க்கு விட வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கும் உரிமை எனக்கு உண்டு.
இதில் இன்னாருக்கு விற்க வேண்டும் என்றெல்லாம் பிறர் கட்டளையிட முடியாது.
அரசு வேலை,கல்வி என்றால் இட ஒதுக்கீடு என்று சமத்துவத்தை மறுக்கிற பேர்வழிகள்,அதை ஆதரிக்கிற பேர்வழிகள் முதலில் அதற்கு வழி வகுக்கும் அரசியல் சட்டம்தான் ஒருவர் தன் விருப்பப்படி தன் சொத்தை விற்க/பயன்படுத்த உரிமை தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
பிராமணர்களுக்கு எதிராக ஒரு கோடி தருமிகள் வந்தாலும் பிராமணர்கள் அத்தனை தடைகளையும் மீறித்தான்
சாதிக்கிறார்கள்.பெரியாரின் செல்வாக்கு இந்தியாவில்தான், பிராமணர்களுக்கு உலகமே வீடு என்றான பின் தருமிகள்,பெரியார் போன்ற விரோதிகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்.மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இருக்கிறார்களோ இல்லையோ,தமிழ் பிராமணர்கள் ஸ்டான்போர்டிலும் இருப்பார்கள்,நாசாவில் இருப்பார்கள்,மெல்போர்ன் பல்கலையிலும் இருப்பார்கள்,சீனாவிலும் மென்பொருள் நிறுவனத்தில் இருப்பார்கள்.உங்களின் இட ஒதுக்கீடு இங்கெல்லாம் செல்லுபடியாகாது.
தருமி ஐயா, தமிழ்நாடு மதுரையை விட பெரியது, உலகம் தமிழ்நாட்டை விட பெரியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
//தருமி தமிழ்நாடு மதுரையை விட பெரியது, உலகம் தமிழ்நாட்டை விட பெரியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். //
புரிந்து கொண்டு விட்டேன்.
அய்யா,
இந்த அவாளோட தொல்லை இங்கும் சில இடங்களில் உண்டு. உதாரணமாக, நம் குழந்தைகளை கர்னாடக சங்கீதம் கற்க என்று அனுப்ப நினைப்போம்..ஆனால் அங்கு அவா குழந்தைகளுக்கு கிடைக்கும் அதே ட்ரீட்மெண்ட் வேறு குழந்தைகளுக்கு கிடைக்காது..கேட்டால்..அவா குழந்தைகள் தவிர மற்ற குழந்தைகளுக்கு சமஸ்கிருத உச்சரிப்பு சரிவரவில்லை, அதனால் பல பாட்டுகள் சொல்லி கொடுக்கவில்லை என்று கூற கேட்டு இருக்கிறேன்.
//புரிந்து கொண்டு விட்டேன். ... //
:))
Abraham Lincoln said..
You can fool some people all the time and all for some time but you can not fool all people all the time..
Professor Murphy said..
If you can fool some people all the time and all for some time that is enough!!..
tamil said..
You can drive out brahmins from Madurai or even from Tamilnadu..
But you can not drive them out from other countries..
Periyar would say...
If brahmins are driven out of Madurai and tamilnadu that is enough..
:-))
வீடுகள் விற்பதில் இப்படி ஒரு சாதிப்பிரச்சனை. சிலருக்கு இது தவறு; சிலருக்கு இது சரி. ஆனால் மதுரை திடீர் நகர் - நகரின் சுத்தம் பேணுவோருக்கான வீடுகள் - பகுதியில் உள்ள குடியிருப்புகள் ஒரே சாதியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாருக்கும் வருத்தமோ கோபமோ ஏதுமில்லை ! எல்லோருக்கும் அது சரியாகவே படுகிறது !!
In Karnataka, there is a temple called Subramanya, where free lunch is served. But for brahmins lunch is arranged separately...
In Karnataka, there is a temple called Subramanya where free lunch is served. But for brahmins lunch is arranged separately....
//மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் இருக்கிறார்களோ இல்லையோ,தமிழ் பிராமணர்கள் ஸ்டான்போர்டிலும் இருப்பார்கள்,நாசாவில் இருப்பார்கள்,மெல்போர்ன் பல்கலையிலும் இருப்பார்கள்,சீனாவிலும் மென்பொருள் நிறுவனத்தில் இருப்பார்கள்.உங்களின் இட ஒதுக்கீடு இங்கெல்லாம் செல்லுபடியாகாது.//
பிராமணரல்லாத இட ஒதுக்கீட்டில் படித்தவர்களுக்கும் இந்த இடங்களில் எல்லாம் இருக்கிறார்களே.
நான் அறுவடை செய்த நெல் இந்த பிராமணன் உண்ண கூடாது சூத்திர சாதிக்காரன்தான் உண்ண வேண்டும் என விவசாயி நினைத்தால் இவர்கள் எங்கு செல்வார்கள், அமெரிக்காவிற்காக, சீனாவிற்கா
இவாள் செல்வதற்காக அமெரிக்காவும் சீனாவும் பொது சொத்தாகி விட்டது ஆனால் அவாள் சொத்து விற்பதாக இருந்தால் தனியுடமை, வாங்குபவனை தீர்மானிப்பது அவர்கள் உரிமை.
ஒரு கோடி தருமிகள் அல்ல அனைத்து மனிதருகளும் தருமியாக மாறும் போது இந்த Tamil காணாமல் போகலாம் அதுவரை பெரியார், மகாத்மா பூலே, நாராயண குரு இவர்களைஅமெரிக்க போனாலும் ஆட்டி படைக்கத்தான் செய்வார்கள்.
குறிப்பு இந்த பதிலை டோண்டுவின் தளத்தில் போடலாம் என்றால் என் போன்றவர்களை அவர்கள் ஆதரித்தில்லை என்பதால் தங்கள் தளத்தில் பதிவிடுகிறேன்
I am a brahmin myself and when i grew up in the late 80s and early 90s,the number of dravidian/communist/anti-brahminical films/opinions/caricatures are innumerable.
I grew up very non-caste,i was often criticised at home for spending too much time in the sun and thus getting darker,not being too clean for refusing to learn mridangam/carnatic music vocals and so on.
I have travelled a lot since then and met a lot of people of every kind and my opinion today is as it goes,
I see nothing wrong in brahmins of TN uniting themselves and helping each other out.The TN government and especially the dravidian movement has been brutal in the way they classify them as outcastes.Is it justified? maybe people have a visceral hatred for us,due to whatever reasons but i dont see reasons to take the hatred to this level whatever maybe the underlying reasons.
Even today a brahmin guy/girl from TN have to suffer immense mental abuse,humiliation and what not to go up in career and do something that is worthwhile to his/her abilities and talent.
Regarding the tamil/slang of brahmins being one way,i personally come from the border areas of TN in kanyakumeri/tirunelveli and frankly in our place everyone speaks tamizh pretty well and we dont misplace our SHs and all and we all say the Zh properly,regardless of caste/religion.
I see so many people in TN who rape the language with brutally bad slang nor do they show inclination to speak the language well and it is all accepted but only the brahmin slang degraded.
with all this background,i see nothing wrong in brahmins refuse houses for rent/sale to anyone.I personally will not give up my house for rent to anyone else not even a non practicing brahmin.
We have a feeling thing,it works if you are a vegetarian,ask the same with tirunelveli pillaimars also,they are as staunch vegetarians as us if not more.
If they ll give their houses for non vegetarians.
Another big reason for renting out only to brahmins,which is actually the real reason is that,i have seen cases of people occupying the house and simply refusing to vacate citing issues like political background,rowdyism and things like that.
whereas when it is a brahmin,it is less likely that this situation ll happen as they have no political power or will to do such things.
Hope this answered your questions.
Post a Comment