Sunday, August 26, 2012

588. ஆசிரியர்களும் மாணவர்களும் பார்க்கணும் ...

*


சும்மா சொல்லக்கூடாது .. விஜய் தொலைக்காட்சி நல்ல சில விஷயங்களைத் தொடர்ந்து தருகிறார்கள்.

சூப்பர் ஜூனியர் நிகழ்ச்சி .. ரொம்ப ஜவ்வாக இழுக்கிறார்கள். ஆனாலும் கடைசி ஏழு பேருக்கு ஏழு பெரிய இசை விற்பன்னர்களை வைத்து ஒரு நிகழ்ச்சி. அதுவும் கெளதம் பாடியதும் அனைவரும் இசைக்கு அளித்த மரியாதையையும், அந்தப் பாடலைப் பாடிய பையனைப் பாராட்டியதும் (இது ஒரு ரியாலிட்டி ஷோ என்ற உண்மை ஒரு பக்கம் இருந்தாலும்) மிக அழகாக இருந்தது.   நல்ல பில்ட் அப் ...

சரவணன் மீனாட்சி .. சும்மா சொல்லக்கூடாது. அழகான கதாநாயகி; விளையாட்டுக்கார கதாநாயகன்; அசத்தலான அப்பா .. நிறைய இளைஞர்களுக்குப் பிடித்த காதல் ...இதையெல்லாம் விட எனக்குப் பிடித்தவைகள் - ஆரம்பத்திலேயே ஜாதகத்திற்கு கொடுத்த அடி ரொம்ப பிடித்தது. எனக்குத் தெரிந்து ஜாதகத்தைத் தூக்கி எறிந்த முதல் நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது. அதனாலேயே ரொம்ப பிடிச்சிப் போச்சு. அடுத்து வரதட்சணை - அந்த விஷயத்தைக் கையாண்ட வகை பிடிக்காவிட்டாலும் அதையும் அழகர் - இயக்குனர் - ஒரு பிடி பிடித்திருந்தார். ஏமாற்றிய கணவனைத் தூக்கி எறிவது, விவாகரத்து பெற்ற பெண்ணின் அடுத்த திருமணத்தை எளிதான ஒரு நிகழ்வாகக் காட்டியிருப்பது ... எல்லாம் கொஞ்சம் புதிதுதான்.  ஒரு சில சீன்களில் மட்டும் வந்த நண்பன் சுப்பையா, இன்னொரு மீசைக்காரர் ... அசத்தல் நடிப்பு; பாராட்டு.  TRP rating என்பதற்காக இரு பொது நிகழ்ச்சிகளைக் கொண்டாடி சீரியலைப் புது மெருகேற்றியது நல்ல  உத்தி. 

இதையெல்லாம் தாண்டி இப்போது வரும் 7-ம் வகுப்பு C பிரிவு ரொம்ப நல்லா இருக்கு. ஆசிரியர்களும், இளம் மாணவர்களும் கட்டாயம் பார்க்கணும். Sydney Poitier நடித்த TO SIR WITH LOVE படத்தை மிகப் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். சரி .. அதைப் பார்த்து ஏதோ உல்டா பண்ணப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நிச்சயமாக அந்தப் படத்தை விட இந்த சீரியல் நன்றாக இருக்கிறது.

அங்கே தன்னோடு குத்துச்சண்டை போட வரும் மாணவனை ஆசிரியர் குத்துச்சண்டை பழக்குபவனாக ஆக்குவார். ஆனால் இங்கே சண்டைக்காரப் பையனை ஆசிரியர் அஹிம்சாவாதியாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் நலன் பேரில் எடுக்கும் முயற்சிகள், அவர் மாணவர்களை நடத்தும் முறை ... நன்குள்ளன. நிகழ்வுகளை மிக இயல்பாக வருவதாக அமைத்துள்ள இயக்குனர் ராம் விநாயக்கிற்கு வாழ்த்து. நடிகர்கள் தேர்வும் மிகச் சரியாக உள்ளது. ’இளைய பாரதிராஜா’ மாதிரி வரும் கதாநாயகன் சாதாரணத் தோற்றத்தோடு வந்து, அழகாக, இயல்பாக நடிக்கிறார்.  சரியான  வயதுக்குரிய பிள்ளைகளை நடிக்க வைத்திருப்பது பாராட்டுதற்குரியது. குருவியும், தலைமை ஆசிரியரும் நல்லா செஞ்சிருக்காங்க.  கொஞ்சம் ட்ராமாட்டிக்காக சில காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் எனக்கு மிகவும் பிடித்த சீரியல் இப்போது இதுதான்.

வித்தியாசமான, பாராட்டுகுரிய சீரியல். இந்த சீரியலை எடுத்து அளிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டு.





















*





 

17 comments:

துளசி கோபால் said...

அட! டிவியே சரணமா!!!!!!!!!!

Rasan said...

// இங்கே சண்டைக்காரப் பையனை ஆசிரியர் அஹிம்சாவாதியாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் நலன் பேரில் எடுக்கும் முயற்சிகள், அவர் மாணவர்களை நடத்தும் முறை ... நன்குள்ளன. //
விஜய் டி.வி மட்டும் தானா?
என்னுடைய தளத்தில்
ஏணிப்படி

தன்னம்பிக்கை

நம்பிக்கை

தொடருங்கள்.

Rasan said...

// இங்கே சண்டைக்காரப் பையனை ஆசிரியர் அஹிம்சாவாதியாக மாற்றுகிறார். ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களின் நலன் பேரில் எடுக்கும் முயற்சிகள், அவர் மாணவர்களை நடத்தும் முறை ... நன்குள்ளன. //
விஜய் டி.வி மட்டும் தானா?
என்னுடைய தளத்தில்
ஏணிப்படி

தன்னம்பிக்கை

நம்பிக்கை

தொடருங்கள்.

Anonymous said...

நீங்களும் எம்மைப் போல விஜய் டிவிக்கு அடிமையாக விட்டீர்கள் போல !!!

சூப்பர் சிங்கரில் சில நல்ல பாடல்களை கேட்டாலும், பல சமயங்களில் அதிகப்படியான போலித் தனம் மிளிர்கின்றது.

சரவணன் மீனாட்சி எப்போதாவது பார்ப்பதுண்டு, நீங்கள் சொல்லும் விடயங்கள் இருக்கத் தான் செய்கின்றது. அவை பாராட்டத் தக்கவையே.

7-C பார்ப்பதுண்டு உண்மையில் நல்லக் கதையை எடுத்துள்ளார்கள்.. அனைவரின் நடிப்பும் நன்றாக உள்ளன, என சில நேரங்களில் நீண்ட வசனங்கள் போர் அடிக்கச் செய்பவை.. மற்றப்படி பரவாயில்லை.

அத்தோடு பெரிதினும் பெரிது கேள் மற்றும் நீயா நானா மிக நல்ல நிகழ்ச்சிகள்.

அப்புறம் மத நிகழ்ச்சிகள் பல சலிப்பைத் தட்டுவன, அழைக்கிறான் கண்ணன் என மொக்கைப் போடுகின்றார்கள் ....

கனா காலும் காலங்கள் ஐயோ செமைக் கொடுமையான ஒரு தொடர்.. காஞ்சனா ஐயோக் கொடுமையில் கொடுமை ... !!!

அவள் ஒரு தொடர்கதை பார்த்ததில்லை, ஆனால் அவர்கள் காட்டும் வீடுகளும், மொழிப்பெயர்ப்பும் அழகாக இருந்தன.

புதிதாக தொடங்கியுள்ள தர்மயுத்தம் பற்றி இன்னும் கருத்துச் சொல்ல முடியவில்லை.

விஜய் டிவி சன் டிவி மட்டுமே இங்கு கிடைக்கும். சன் டிவியில் பெரிதாக ஒன்றுமே பார்ப்பதில்லை .. பார்ப்பதற்கும் ஒன்றும் இல்லை !

Victor Suresh said...

தற்காலத் தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கான நிகழ்ச்சிகளைத் தருவதில் விஜய்-தான் முன்னே நிற்கிறது. பள்ளிக்கூடப் பின்னணியில் முன்பு வந்த "கனாக் காணும் காலங்கள்" சில காலம் நன்றாக இருந்தது. நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சியை இது வரை பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். அமெரிக்காவில் நீதித் துறையைப் பின்புலமாகக் கொண்டு வெளிவரும் "லா & ஆர்டர்" போன்ற தொடர்களின் பரம் ரசிகனாக "தர்மயுத்தம்" தொடரில் அதிகம் எதிர்பார்த்தேன். ஏமாற்றமளிக்கிறது.

தருமி said...

//சன் டிவியில் பெரிதாக ஒன்றுமே பார்ப்பதில்லை .. பார்ப்பதற்கும் ஒன்றும் இல்லை !//

அதே!

தருமி said...

துளசி,
நன்றி


ரசன்,
//விஜய் டி.வி மட்டும் தானா?//

பார்ப்பது அது மட்டுமே!

தருமி said...

ஏவிஎஸ்,

தர்மயுத்தம்" முதல் நாள் மட்டும் பார்த்தேன். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

ராஜ நடராஜன் said...

என்னது சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டீர்களா!விடு ஜூட்.

தருமி said...

ராஜ நட்ஸ்,

//என்னது சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டீர்களா!விடு ஜூட். //

ஏங்க .. கல்யாணம் பண்ணாமல் இருக்க முடியுதுங்களா ....!

தருமி said...

//திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...//

எதைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் ...!!

:-)

Vijaiy from colombo said...

பேராசிரியர் தருமி அய்யா ,

சிறப்பான பதிவு ...தமிழ் சின்னத்திரை உலகம் கண் முன் விரிகிறது ...முன்பு சில காலம் வரை அழுகை சீரியல்களில் மூழ்கி கிடந்த தமிழ் மக்களை வேறு விதமான நிகழ்ச்சிகள் மூலம் தன் பக்கம் ஈர்த்த விஜய் டிவி தட் பொழுது பழைய பஞ்சாங்கமாய் சன் டிவி யை விட அதிகமாக அழுகாச்சி சீரியல்கலை குறிவைக்கிறதோ என தோன்றுகிறது ...
மாமியார் மருமகள் சண்டை,பழிவாங்கல் .குரோதம் இப்படியே தான் இப்போ விஜய் டிவி நிகழ்ச்சிகள் போகுது ....அதிலயும் கனா காணும் காலங்கள் முத்த காட்சி,உடை மாற்றும் போது எட்டி பார்த்தல் என பல புதிய "பரிணாமங்களை " எட்டியுள்ளது

Vijaiy from colombo said...
This comment has been removed by the author.
ரிஷபன்Meena said...

7சி பார்க்கும் போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆரம்பபள்ளி என்ற நகராட்சிப் பள்ளியில் இருந்த இருதயராஜ் என்ற ஆசிரியர் தான் நினைவுக்கு வருவார். ஆற்றலும் நேர்மையும் ஒரு சேர வாய்க்கப் பெற்றவர். பள்ளியின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியவர்.

சரவணன் மீனாட்சி இடையிடையே இழுத்தாலும் சன் சீரியல்களுக்கு எவ்வளவோ பரவாயில்லை. வசனங்களும் காட்சியமைப்புகளும் ஜனரஞ்சகமானவை.

Rasan said...

இன்று 7 மணி நேரத்திற்கு முன்பு உங்களின் "589. ராஜா .. காணாமல் போகலை; இல்லாமல் போய்ட்டான்" உங்களின் பதிவை முதலில் படித்துக் கொண்டிருந்தேன். லிங்க் பயன்படுத்தி படிக்க தொடங்கிய போது நண்பரின் வருகையால் உங்களின் பதிவை படிக்காமால் இணையசேவையை துண்டித்து விட்டு சென்று விட்டேன். மீண்டும் வந்து உங்கள் தளத்தில் இந்த பதிவு இல்லையே.

முதன் முதலில் பதிவுலகில் தாங்கள் தான் என்னை முதன் முறையாக சரியாக ரசன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா.


தருமி said...

ரசன்

அப்பதிவு ‘அதீதம்’ இதழில் ஒன்றாம் தேதிதான் போட்டிருந்தார்கள். உடனே என்பதிவில் வேண்டாமே ..ஓரிரு நாட்கள் கழித்து என்றிருந்தேன். தவறுதலாக ஏற்றி பின் ‘இறக்கி’ விட்டேன். இன்னும் இரு நாளில் என் பதிவில் ...

தடங்கலுக்கு வருந்துகிறேன்.

Post a Comment