Friday, November 23, 2012

607. இலங்கைப் பயணம்

 *
பயணப் பதிவுகள்;








*

முதல் பதிவு

இரண்டாம் பதிவு

மூன்றாம் பதிவு 

நான்காம் பதிவு

ஐந்தாம் பதிவு

ஆறாம் பதிவு

ஏழாம் பதிவு

எட்டாம் பதிவு

ஒன்பதாம் பதிவு

பத்தாம் பதிவு

பதினொன்றாம் பதிவு

பன்னிரெண்டாம் பதிவு




*




1960-களில் வாசித்த கதை. 

Irving Wallace எழுதிய ‘THE MAN’ என்ற புதினம். ஒன்றிலிருந்து ஒன்றாக அந்த ஆசிரியரின் நூல்களை வாசித்து வந்த காலம். இந்தப் புதினத்தில் நாட்டின் ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் திடீரென்று இறந்து போக, கறுப்பு அமெரிக்கன் ஒருவர் ஜனாதிபதியாகிறார். (அப்போதெல்லாம் ஒரு கறுப்பு அமெரிக்கர் ஜனாதிபதியாக முடியும் என்பது கனவிலும் யாரும் நினைக்காத காலம்!) புதிய அமெரிக்க அதிபருக்கு பல இடைஞ்சல்கள்; அவை ஒவ்வொன்றையும் அவர் சமாளிப்பது தான் கதை.
MY GOOD FRIEND, SUHASNI














அதில் அவரது மகள் வெள்ளை நிறப் பெண்ணாக - mulatto - இருப்பாள். இதை வைத்து அதிபரின் மனைவியைக் கேலி பேசும் கேள்விகள் ஊடகங்களில் எழுப்பப்படும். அதிபர் கறுப்பு அமெரிக்கர்களின் பழைய வாழ்க்கையைப் பற்றியெல்லாம் எழுதி, எப்படியெல்லாம் அவர்கள் வெள்ளைத்தோல்காரர்களால் அலைக்கழிக்கப்பட்டனர்; பாலியல் தொல்லைகளுகு உள்ளானார்கள் என்பதையெல்லாம் எழுதி, அன்று நடந்த கொடூரங்களால் கறுப்பு அமெரிக்கர்கள் பல தலைமுறை கடந்த பின்னும் வெள்ளைத் தோலுடன் பிறக்க இருக்கும் வாய்ப்பு பற்றி எழுதுவார்.

மனிதர்களுக்குள் ஏது inbreeding....?


1960-களில் வாசித்த ஒரு பேட்டி.


லா.ச. ராமாமிர்தம் தன் விடுமுறையில் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து விட்டு திரும்பியுள்ளார். பேட்டி எடுப்பவர் அவர் பார்த்த இடங்களைப் பற்றிக் கேட்கிறார். லா.ச.ரா. எனக்கு இடங்களைப் பார்ப்பதை விட மனிதர்களின் முகங்களைப் பார்க்கவே பிடிக்கிறது என்கிறார். பார்த்த முகங்களைப் பற்றிக் கூறுகிறார். மணக்கும் பூ; மணக்காத பூ. மலர்ந்த பூ; மலராத பூ. வண்ணப் பூ; வண்ணமில்லாத பூ ..... இப்படியே சொல்லிக் கொண்டு இறுதியில் ‘ஒரு குடம் தண்ணீர் வார்த்து ஒரே பூ; ஒரே குடம் தண்ணீர் வார்த்து ஒரு பூ’ என்று சொல்லி முடிப்பார். (இந்த ஒரு சொற்றொடரை வைத்து அந்தக் காலத்தில் வகுப்பில் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.)

எனக்கும் முகங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். புது ஊர்களுக்குப் போகும்போது வித விதமாய் தெரியும் முகங்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் சின்ன வ்யதில் இரவு ரயில் பயணங்களில் போகும் போது சன்னலருகே இருந்து, ஒவ்வொரு ஸ்டேஷனுக்குள்ளும் ரயில் நுழையும் போது ஒரு சாவியை ஓட்டுனருக்குக் கொடுப்பதற்காக ஒருத்தர் ஒரு பிரம்பு வளையத்தைப் பிடித்தபடி நிற்பார். இரவில் அவர் நிற்பது ஓட்டுனருக்குத் தெரியணுமே, அதற்காக வளையத்தைப் பிடித்து நிற்பவர் இன்னொரு கையில் ஒரு தீவட்டியைப் பிடித்தபடி நிற்பார். ஓடும் ரயிலில் இருந்து அந்த இருளில் தீவட்டியில் தெரியும் அந்த முகத்தைப் பார்ப்பதில் எனக்கு அப்படி ஒரு ஆசை. 






சென்ற மாதம் ஒரு வாரம் இலங்கைச் சுற்றுலா. இரு ‘மீனவ நண்பர்களோடு’, அவர்கள் மீன் பிடிக்கும் ஆட்களல்ல .. aquaculture ஆட்கள், ஊர் சுற்றி வந்தேன்.  முதலில் பார்த்ததும் தெரிந்த ஒன்று - எல்லா முகங்களும் நம்மூர் முகங்கள் மாதிரிதான்   இருந்தன. நம் முகங்களுக்கும் அவர்கள் முகங்களுக்கும் எந்த வித்தியாசமும் அதிகமாகத் தெரியவில்லை.

பெண்களைப் பார்த்தால் நிறைய கேரளப் பெண்களைப் போல்  இருந்தார்கள். ஆண்களில் நம்மூரை விட மீசை வைத்திருப்போர் குறைவு. வேறு பெரிய வித்தியாசங்களை முகங்களில் காணவில்லை;









 .


இங்கே சில படங்களைப் பார்க்கிறீர்கள். அதில் ’நம்ம’ மூஞ்சுகள், ‘அயல்
நாட்டு’ மூஞ்சுகள் என்று
ஏதும் அடையாளம் தெரியுதான்னு சொல்லுங்களேன் ...



மனித ுழுவினர்க்குள் ஏது inbreeding....? என்றுதான் தோன்றியது.


*

அந்த நாட்டுக்குப் போகும் போது ஒரு பெரும் சோகத்தோடு செல்வது போன்ற உணர்வுகள் வருவதைத் தடை செய்ய முடியவில்லை.




இன்னும் கஞ்சம் பங்கள் .. ங்கே ...


*

11 comments:

Unknown said...

நன்று! எழவு வீட்டிற்குச் செல்வதுபோல் உணர்வு! உண்மையே!

வல்லிசிம்ஹன் said...

நாவலகள் ...இர்விங் வாலஸ்,த மேன், தெ ப்ரைஸ் எல்லா நினைவுகளிலும்மூழ்கடிக்கிறீர்கள்.
முகங்களில் வேறுபாடு இல்லை.மனங்களில் தன் கலக்கம் குடியேறுகிறது.
அவன் என்னை அடித்துவிடுவானா. அதற்கு முன் நான் அவனை அடித்துவிடுகிறேன்.
நீங்கள் சொல்வது உண்மை .

”தளிர் சுரேஷ்” said...

அருமையான பகிர்வு! நன்றி!

வேகநரி said...

முகங்களுக்கிடையே வித்தியாசம் கண்டு பிடிப்பது சிரமானது.வேற்று மொழிக்காரர் தங்கள் மொழியில் என்னிடம் பேசிவிட்டு சாரி சொன்ன அனுபவம் உண்டு.
//அந்த நாட்டுக்குப் போகும் போது ஒரு பெரும் சோகத்தோடு செல்வது போன்ற உணர்வுகள் வருவதை//
ம்... தமிழர்கள் வாழும் டொரோண்டோ, இலங்கை போயிருக்கிறேன். சோக உணர்வு வரவில்லை.

Unknown said...

அன்று ஒரு நாள் தங்களிடம் எங்கள் ஊரை பற்றியும் பதிவிட கேட்டிருந்தேன்..சிறப்பான பதிவை தந்தமைக்கு நன்றிகள் ...

ஒரு சில சின்ஹலவர் ஆரிய தோற்றத்தை கொண்டு இருப்பர்....மற்ற படி ஆண்,பெண் நட்பு ,மேலைத்தேய பாணி கவர்ச்சி ஆடைகள் சர்வ சாதாரணம்..தமிழர்கள் அதிகமாக மீசை வளர்ப்பதால் இலகுவில் அடையாளம் கண்டு விடலாம்..

Unknown said...

சிங்களவர் வட -இந்திய ஆரிய வம்சத்தினர் என்ற மகா வம்ச கதையை முறியடிக்க "கங்க்னம்" சாரி கங்கணம் கட்டி உள்ளனர்..அதாவது இலங்கையின் பூர்வ குடிகள் சின்ஹல மக்களே என்றும் ,இராவணன் தான் இலங்கையின் முதல் மன்னனும் ,மூத்த குடிமகனும் ஆவான்..(ஹீ ஹீ )...
இதற்காக ஏதோ ஒரு காட்டு மலை பகுதியில் காணப்படும் சமவெளி பகுதியை இராவணன் புட்பக விமானம் இறக்க பயன்படுத்திய ஓடு பாதை என உறுதி (!!!!!) படுத்தி உள்ளனர் ...

இனி யாரவது இராமர் பாலம் பொய் னு சொன்னீங்க.......இங்க இருந்து ஆள் வரும் .....BE CAREFUL .....

naren said...

எனக்கும் முகங்களை பார்க்க பிடிக்கும். அதை வைத்து மற்றதை யூகம் செய்வது பிடிக்கும். பழகும் போது சரியா தவறா என்று அறிய வரும்போது நமது திறமையின்?? வெற்றியை அறியலாம்.
amateur anthropolgists???

தருமி said...

//அதை வைத்து மற்றதை யூகம் செய்வது பிடிக்கும்//

இந்தக் ‘கெட்ட’ பழக்கம் என்னிடமும் உண்டு! சில சமயங்களில் இவரின்பெயர் இதுவாக இருக்குமோ என்ரு எண்ணூவதுண்டு. ஆனாலும் இது ‘ரொம்ப அதிகம்’ என்பதால் அவைகளை டெஸ்ட் செய்ததில்லை!

ஓலை said...

இரண்டாவது படத்திலுள்ள தாடி வைத்துள்ளவரைப் பார்க்கும் போது டில்லிபாபு MLA கல்லூரியில் படிக்கிற காலத்திலிருந்த உருவச் சாயல் இருக்கிறது. 

ராமலக்ஷ்மி said...

தொடருகிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என் நாடு சென்றீர்களா?
அழகான நாடு, சிங்கள மக்கள் எல்லோரும் கெட்டவர்களில்லை.
விஜே கூறுவதுபோல் தமிழ் ஆண்கள் மீசை அதிகம் வைத்திருப்பார்கள்.
உடையிலும் வேறுபாடு உண்டு.
சிங்களப் பெண்கள் பாரம்பரிய முறையில் சேலை கட்டுவது, கேரளப் பெண்கள் போல் முந்தானை இருக்காது.
இப்போ அவர்களும் சேலையை தமிழ்
முறையில் கட்டுகிறார்கள்.
அனுபவம் நன்றாக உள்ளது.

Post a Comment