*
கொஞ்ச நாளைக்கு முன் ஒரு ’நீயா நானா?’ நிகழ்ச்சி பார்த்தேன். கல்லூரி மாணவர்கள் vs சமூகவியலாளர்கள் என்று ஒரு நிகழ்ச்சி. எங்கிருந்து தான் இப்படி ஒரு மாணவர் ‘படையை’ப் பிடித்தார்களோ. இவ்வளவு முட்டாள்தனமான மாணவர் கூட்டத்தை நான் பார்த்ததில்லை. சரி .. நம் இளைஞர்கள் இப்படித்தான் என்று முடிவு கட்டியிருந்தேன்.
ஆனால் இன்றைய தினசரி - 22.5.13; T.O.I. -ல் ஒரு செய்தி. - 2006 லிருந்து அமெரிக்காவில் கண்டுபிடிக்கும் ஹை டெக் விஷயங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்களின் பங்களிப்பாம். இப்போது அது உயர்ந்து பாதிக்குப் பாதியாக ஆகி விட்டார்களாம்.
ஒண்ணுமே புரியலை.
* மெக்காலே சிஸ்டம் எதற்கு என்று சொல்லிக்கொண்டே இன்றும் அதைத் தான் கட்டியழுகிறோம்.
* தாய்மொழிக் கல்வியென்று அடிக்கடி பேசுகிறோம். அதுவும் நடப்பதில்லை.
* தாய்மொழியில் படித்தால் தான் படிப்பதை நன்கு புரிந்து, முன்னேற முடியும் என்கிறோம். ஆனாலும் அதுவும் நடப்பில் இல்லை.
இந்த இக்கட்டுகளைத் தாண்டியும் எப்படி நாம் ‘உயர்ந்து விட்டோம்’ என்ற கேள்வி எனக்கு.
*****************************
விமல் நல்லா நிறைய படங்களில் நடிச்சிக்கிட்டு இருக்காரே .. வண்டி நல்லாதானே போகுது. பின் ஏன் விமல் அப்டின்ற பெயரை Vimel அப்டின்னு போட்டுக்கிட்டாரு. வண்டி இன்னும் வேகமா போகணும்னா ...?!
சாரு ஹாசன் அப்டின்னா கிளி மேல் இருக்கிற கடவுளாம்; அதே போல் கமல ஹாசன் அப்டின்னா தாமரையில் இருக்கிற கடவுளம்மான்னு அர்த்தமாம். ஆனால் கமல் ஹாசன் அப்டின்னு பெயர் மாற்றி, அது அப்பாவோட இஸ்லாமிய நண்பர் பெயர் அப்டின்னார். நானும் கமல் கூட numerology பக்கம் போய்ட்டாரோன்னு நினச்சேன்!
ஆனாலும் இப்பவும் இஸ்லாமிய நண்பர் பெயர் / numerology எது சரின்னு எனக்குத் தெரியலை. உங்களுக்கு ...?
********************
இந்த சாக்லெட் விளம்பரங்களில் நல்ல இசை; ஆனால் வாயில் வழிய வழிய விட்டுக்கொண்டு அவர்கள் சாப்பிடுவதைப் பார்ப்பது அருவருப்பு மட்டுமல்ல நம்ம வீட்டுச் சின்னப் பிள்ளைகளும் இதைப் போல் ‘ஸ்டைலாக’ சாப்பிடப் பழகி விடுமோ என்று ஒரு பயம் வருகிறது.
**********************
ஆஷிர்வாத் கோதுமை மாவிற்கு சினேகாவும் அவரது ‘மாமியாரும்’ வருகிறார்களே. அதில் வரும் மாமியார், சினேகா வயதில் மருமகளை விட அழகாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். (வயசுக்கேத்த புத்தி ...!)
**********************
பீட்சா, ந.சி.ப. காணோம், சூது கவ்வும் - இந்த படங்களைப் பார்த்த பிறகு, தொலைக்காட்சியில் சிங்கம் 2 படத்திற்கு வரும் விளம்பரத்தில் சூர்யா பயங்கரமா ஒரு வசனம் அடிச்சிப் பேசுறாரே ... அதைப் பார்க்கும் போது ’அடப் பாவிகளா ...’ அப்டின்னு சிரிப்பா வருது. படம் வந்தாலும் அப்படித்தான் இருக்குமோ?
சமீபத்தில் வரும் படங்கள் மாதிரி நிறைய வந்து so called ’பிரமாண்ட stupid படங்கள்’ ஊத்திக்கிட்டா சந்தோஷமாகவும் இருக்கும். ’ஐ’ன்னு சொல்லிக் குதிக்கலாம்.75 வருடமாக ஒரே மாதிரியாகத் தொடர்ந்து வந்து கழுத்தை அறுக்கும் படங்களும் மாறும்.
இல்லீங்களா...?
************************
*
11 comments:
சின்ன சின்ன கேள்விகள் அனைத்தும் சிந்திக்க வைத்த கேள்விகள்! பகிர்வுக்கு நன்றி!
எத்தனை எத்தனை இக்கட்டுகளைத் தாண்டியும் எப்படி நாம் ‘உயர்ந்து விட்டோம்’..! ஆச்சரியம் தான் ..!
தருமிய்யா,
வெளிநாட்டில் பள்ளிப்படிப்பு எளிது,கல்லூரிப்படிப்பு கஷ்டம்.
"ஓ"லெவலுக்கு அப்புறம் பிரிமெடிகல்,எஞ்சினியரிங்கு பிரிஞ்சிடனும்.
அதாவது 10 ஆம் வகுப்புக்கு அப்புறமே மெடிக்கல்,எஞ்சினியரிங் எனத்தேர்வு செய்து அதுக்கு மட்டும் படிச்சிக்கனும், பிரிமெடிக்கல் சேர்ந்துவிட்டால் மருத்துவம் சேர்ந்தாச்சுனு எடுத்துக்கல்லாம்.
இங்கே 12க்கு பிறகு தான் என்ன படிக்கப்போரோம்னே முடிவு செய்வோம் அது வரைக்கும் எல்லா பாடமும் படிச்சு மண்டை குழம்பிடுறோம் :-))
கல்லூரியில் நிறைய செய்முறையில் வரும். இங்கே எல்லாம் தியரி தான். மனப்பாடம் தான்.
யுஜீ செய்றவங்க எல்லாம் ரிசர்ச் ஸ்காலருக்கு அப்ரண்டிசா 2 ஆம் ஆண்டில் இருந்து வேலை செய்வாங்க,அதுக்கு மார்க் உண்டாம்,எனவே யுஜிலவே ஆய்வு அறிவு கிடைச்சிடும்.
ஸ்பைடர் மேன் படத்தில் பார்த்தாலே தெரியும் ,பீட்டர் பார்க்கர் யுஜி படிக்கும் போதே ரிசர்ச் பண்ற சயிண்டிஸ்ட்டிடம் சேரப்போவார்.
நம்ம நண்பர்கள் எல்லாம் வெளிநாட்டில் குப்பை கொட்டுதுங்க,நான் மட்டும் இங்கெ குப்பை பொருக்கிங்ஸ் :-))
------------
# சாரு= அழகான, ஹாசன் ,சிரிப்புடையவன், அழகான சிரிப்பு,புன்னகை உடையவர் சாருஹாசன்,
சந்திரன் =நிலா,
சந்திர ஹாசன் ,நிலாப்போல குளிர்ச்சியான புன்னகை கொண்டவன்.
கமல்/ல ஹாசன் ,தாமரைப்போன்ற புன்னகைக்கொண்டவன்.
சுஹாசினி- சிறப்பான,உயர்ந்த புன்னகை செய்பவள்.
ஹாஸ்யம்= சிரிப்பு,நகைப்பு,
மந்தஹாசம் = மென்மையான சிரிப்பு.
விஹசிப்பு = புன்முறுவல்.
இப்படியான பொருளும் வருதுங்கய்யா,இனிமே இஸ்லாமிய நண்பரின் பெயரானு நீங்களே முடிவு செய்துக்கோங்க :-))
பயமும் புத்தியும் ரசிக்க வைத்தது...
சி 2 அப்படித்தான் தோணுது...!
// 2006 லிருந்து அமெரிக்காவில் கண்டுபிடிக்கும் ஹை டெக் விஷயங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்களின் பங்களிப்பாம். இப்போது அது உயர்ந்து பாதிக்குப் பாதியாக ஆகி விட்டார்களாம். //
இந்த இணைய காலத்திலும்க் 'அப்படியாம்' 'இப்படியாம்'னு hearsay-ஆ பேசிட்டிருந்தா எப்படி சார்? :-)
ஆசியர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்னு பலதரப்பட்ட இனத்தவரும் கலந்த நவீன சமுதாயம். நாமா சும்மானாச்சுக்கும் 'இந்தியரோட பங்களிப்பு'ன்னு முதுகு சொறிஞ்சிக்கலாம். உண்மையில் ஆராய்ச்சி படிப்பில் இந்திய வம்சாவளியினர் அவ்வளவு (proportionate) ஆர்வம் காண்பிப்பதில்லை என்பதுதான் உண்மை :-)
சாருஹாசன் - அழகிய புன்னகை உடையவன்.
கமலஹாசன் - தாமரை போன்ற மலர்ந்த சிரிப்புடையவன்.
கமலஹாசன், கமால் ஹசன் என்னும் பெயர் ஒற்றுமைகள் காரணமாக அந்தப் பெயரை அவர் தந்தையார் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் ஆரம்பகாலத்தில் ஒற்றைப்பெயராக 'கமலஹாசன்' என்றுதான் அவர் பெயர் இருந்தது.
தமிழர்களிடையே 'குடும்பப் பெயர்' வைத்துக் கொள்ளும் பழக்கம் சென்ற தலைமுறையில் பெரும்பாலும் கிடையாது. ஊர்ப்பெயரோ, தந்தை பெயரோ, சாதிப் பெயரோ பின்னொட்டாக வரும். பின்னாளில் 'ஹாசன் பிரதர்ஸ்' என்று தயாரிப்பு நிறுவனம் தொடங்குபோது தனது பெயரிலிருந்து 'ஹாசனை' தனியே surnameஆக வைத்துக் கொண்டார். இன்றைக்கு அவர் பிள்ளைகள் அதையே surnameஆக தொடர்வதற்கு வசதியாக இருக்கிறது.
சேட்டன்மார் தங்கள் வீட்டுப் (தரவாடு) பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்வார்கள்.
வவ்வால்,
எண் கணிதம் அதில் உண்டா இல்லையா என்பது என் கேள்வி.
//பயமும் புத்தியும் ரசிக்க வைத்தது...
சி 2 அப்படித்தான் தோணுது...!//
ஒண்ணும் புரியலையே!
//இந்த இணைய காலத்திலும்க் 'அப்படியாம்' 'இப்படியாம்'னு hearsay-ஆ பேசிட்டிருந்தா எப்படி சார்? :-)//
தப்பு தான் ..
தினசரியில் கொடுத்த செய்தியைச் சுருக்கியதால் அப்படி ஆயிற்றோ?
செய்தியில் கொஞ்சம்: A recent Kauffman Foundation study says that 33% of the co-founders of engineering and technology startups in the US since 2006 have been indians, leaving other immigrant communities far behind. the past 18 months have seen a slew of startups- with at least one indian co-founder - being acquired by the biggies.
ஆசிரியரே சுருக்கத்தை தப்பாக கொடுக்கலாமா?
A recent Kauffman Foundation study says that 33% of the co-founders of engineering and technology startups in the US since 2006 have been Indians
சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமே அமெரிக்கா அல்ல. விழுக்காடு கணக்கில் வேண்டுமானால் அங்கு நிறைய startups தொடங்கலாம்\இருக்கலாம்.
குறும்பன்,
அங்கே சொல்லியிருப்பது - startups in the US - சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல .. முழு US!
அமெரிக்க இந்தியர்கள் தற்போது வளமாக இருப்பதின் காரணம், போன தலைமுறையில் குடியேறிய இந்தியர்கள் பொதுவாக மொத்த படித்த புத்திசாலிகள். டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் என. இவர்களது குழந்தைகளும் தற்போது வளர்ந்து பின்னி எடுக்கிறார்கள். இதற்கு குடும்ப மரபணுக்கள், சூழ்நிலை இரண்டும் காரணம். இப்போதும் ஐஐடியில் படித்தவர்கள் பெரும்பாலும் இங்குதானே வருகிறார்கள். ஆனால் பிற்காலத்தில் குறிப்பாக கணனி துறை வளர்ந்ததற்கு பிறகு சுமாரான & மட்டமான ஆட்களும் வரத்தொடங்கிவிட்டார்கள். மேலும் ஆங்கிலம் கூட பேசத்தெரியாத பல கள்ள-நுழைவு ஆசாமிகளும் நுழைந்துள்ளார்கள். முந்தய தலைமுறை புத்தசாலிகள் குறிப்பாக மருத்துவர்கள் காரணமாக வெள்ளை இனத்தவர் அவர்களுக்கு அடுத்தான மரியாதையை இந்தியர்களுக்கு வழங்குவார்கள்.இனி எப்படி மாறும் என்பதை இனித்தான் பார்க்க வேண்டும்.
இந்தியர் பற்றி டைம் பத்திரிக்கையில் பத்திரிக்கையளர் ஜோயல் ஸ்டீன் எழுதிய கட்டுரை பிரபலம்... /
After the law passed, when I was a kid, a few engineers and doctors from Gujarat moved to Edison because of its proximity to AT&T, good schools and reasonably priced, if slightly deteriorating, post–WW II housing. For a while, we assumed all Indians were geniuses. Then, in the 1980s, the doctors and engineers brought over their merchant cousins, and we were no longer so sure about the genius thing. In the 1990s, the not-as-brilliant merchants brought their even-less-bright cousins, and we started to understand why India is so damn poor.
ஸ்டீன் எழுதிய கட்டுரை பிரபலம். இதற்காக அவரை மன்னிப்பு கோரவைத்தார்கள் இந்தியர்கள் (நமக்குத்தான் நகைச்சுவை உணர்வு கம்மியாயிற்றே!
Post a Comment