Tuesday, September 24, 2013

683. நான் ஏன் இந்து அல்ல ...1


*
*
தொடர் பதிவுகள்:   1 ......     2 .....     3 .....  4..........  5..............  6 ...........  7..................

*

காஞ்சா அய்லய்யா 


*

முனைவர்  காஞ்சா அய்லய்யா உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கும் பேராசிரியர். ’தலித் பகுஜன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி தலித் - மற்றும் பெரும்பான்மை மக்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள தொடர்பையோ, தொடர்பின்மையையோ இந்த நூலில் விளக்குகிறார். ‘இந்தியாவை இந்து மயமாக்குவோம்’ என்ற ஒரு புது முழக்கத்தோடு கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் நடக்கும் முயற்சிக்களுக்கு எதிராக அறிவுத் தளத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சியே இந்த நூல்.

மதங்களை மறுப்பவன் என்ற முறையில் இந்த நூல் எனக்கு அதிகம் பயனளிப்பதில்லை. ஆயினும் மதங்கள் எப்படி ஒர் சமூகத்தை அடிமைப்படுத்தி, அதனை பல வடிவங்களில் காலப்போக்கில் மாற்றுகின்றன என்ற உண்மையை காஞ்சா இந்நூலில் கூறியதால் இந்து மதத்திற்கே எதிராக இக்கருத்துகள் எனக்குப் பயன்படும் என்பதால் இந்த நூலில் உள்ள முக்கிய கருத்துக்களை இங்கே கொடுக்க விரும்புகிறேன்.

இந்நூலுக்கு அ. மார்க்ஸ் அறிமுகம் அளித்துள்ளார். அவரது பல கருத்துக்கள் தமிழ்ச்சமுதாயத்தோடு ஒட்டியிருப்பதால் அதிலிருந்தும் சில பகுதிகளைத் தொகுத்துள்ளேன்.

**************************


அறிமுகம் - அ. மார்க்ஸ்

ரஸ்ஸல் தன்னைக் கிறிஸ்துவன் அல்ல என அறிவித்துக் கொண்டார். அய்லய்யாவோ தனது பிறப்பே இந்து மதத்திற்குள் நிகழவில்லை என்கிறார்.(9)

’பகுஜன்’ என்னும் அடையாளம் எண்பதுகளின் மத்தியில் கன்ஷிராம் அவர்களால் முன்னிறுத்தப்பட்டது. சூத்திர சாதியினரையும்,  பல்வேறு தலித் சாதியினரையும்’தலித் பகுஜன்கள்’ என அழைக்கின்றார் அல்லய்யா.(11)

இந்துக் கடவுளின் ஆயுதந்தாங்கிய வன்முறையின் தோற்றத்தை வெகுமக்கள் வழிபடும் சிறு தெய்வங்களோடு ஒப்பிடும் அல்லய்யா இந்துக் கடவுளர் கையில் ஏந்திய விற்களும், சக்கரங்களும் வெகு ஜனங்களை ஒடுக்கி அவர்களை இந்து மதப்படுத்தும் நோக்கிற்காகத்தான் என விளக்குகிறார். அவதாரக் கதைகளெல்லாம் அப்படிதான். வாமன அவதாரம் வெகுமக்கள் தலைவனகிய பாலி மன்னனை (மகாபலி)க் கொன்றொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. இராமயணக் கதையே தென்னிந்தியரைப் பார்ப்பனமயமாக்கிய கதைதான். (12)

தலித் பகுஜன்கள் மத்தியில் தனிச்சொத்து என்கிற கண்ணோட்டமே இல்லை என்பது அல்லய்யாவின் முன்வைக்கும் கருத்து. .... தமிழகத்தில் வசித்து வந்த ஆதிப் பழங்குடி மக்களிடையே இருந்த இந்தப் பொதுமைப் பண்பை அழித்த திருப்பணியைச் செய்து முடித்தது பார்ப்பனீயம். ... அம்மக்களின் நிலங்களைத் தனிச்சொத்துகளாக்கிப் பார்ப்பன, வேளாளக் குடும்பங்களுக்கோ கோயில்களுக்கோ தாரை வார்த்தது தான். பார்ப்பனர்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட நிலத்தைப் ’பிரம்மதேயம்’ அல்லது ‘சதுர்வேதி மங்கலம்; என்பர். தம் நிலங்களில் தங்கி உழைத்து அதன் விளை பொருடளில் பெரும் பகுதியை இத்தகைய ப்பர்ர்பன வேளாள உரிமையாளர்களுக்கு மேல்வாரமாக அளித்து, எஞ்சிய கொஞ்ச நஞ்சத்தைக் கீழ்வாரமாக அனுபவித்து, வறுமையில் உழல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயினர் இந்த மண்ணின் மைந்தர்கள்.(13)

தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகிய 
வேள்விக்குடிச் செப்பேடும் (கி.பி.6-ம் நூ.) இதனைத் தெளிவாகச் சொல்கிறது. 

செப்பேட்டில் வரும் கதை: நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனிடம் கொற்கைக் கிழான் நற்சிங்கன் என்ற பார்ப்பனன் தன் முன்னோரு ஒருவர் செய்த யாகத்திற்காகக் கிடைத்த வேள்விக்குடி என்ற ஊரை அதன் பின் வந்த களப்பிரர் ஆட்சிக்காலத்தில் இழந்து விட்டதாகவும், அதனைத் திருப்பித் தரவேண்டுமென்ற வேண்டுகோளோடு வந்தான். பாண்டிய மன்னனும் வேள்விக்குடியைத் திரும்பத் தந்து விடுகிறான். 

இச்செப்பேட்டில் நான் காணவேண்டியவைகள் இவை:
பாண்டிய மன்னனின் வம்சப் பெருமையாக -- பரவரைப் பாழ்படுத்தியது; குறுநாட்டவர் குலங் கெடுத்தது; செந்நிலங்களைச் செறு வென்றது; துலாபாரம், இரண்ய கர்ப்பம் முதலான இந்து யாகங்களைச் செய்தது; பார்ப்பனருக்கு ஈந்தளித்தது; மகீதலம் பொது நீக்கி அரசாண்டது; பரவர், குறுநாட்டவர் முதலான பழங்குடி மக்களைப் பாழ்படுத்திக் குலங்கெடுத்து அவர்களது செந்நிலங்களைக் கைப்பற்றி, யாகம் செய்த பார்ப்பனர்களுக்கு ஈந்தளித்தது .... (14)
இவ்வாறு பொதுத்த்தன்மை அழிக்கப்பட்டு தனிவுடைமையை தமிழ்நாட்டு மன்னர்கள் நிலைநாட்டியது; முன்பு தாரை வார்க்கப்பட்ட நிலங்கள் களப்பிரர் காலத்தில் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

களப்பிரர் காலத்தை, சோழர் காலம் குறித்து ஆய்வுகள் நடத்திய வரலாற்றாசிரியர் பர்ட்டன் ஸ்டெய்ன் மீண்டும் பழங்குடியினர் மேலெழுந்து ஆட்சியைக் கைப்பற்றிய காலம் என்று கூறுகிறார். இதனை இன்றுவரை பார்ப்பன வேளாள வரலாற்றாசிரியர்கள் இருண்ட காலம் எனத் தூற்றி வந்துள்ளனர்.(15)

காலனிய ஆட்சியை எதிர்த்த இந்து மேல்சாதியினர் இரட்டை நிலையை எடுத்தனர்; ஒரு பக்கம் நவீன நிறுவனங்களைத் தங்களின் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல். இன்னொரு பக்கம் காலனியத்திற்கு எதிராக இந்துத்துவத்தைக் காப்பது என்கிற நிலை எடுத்து, நவீனத்துவத்தின் இன்றியமையாத கூறாகிய மதநீக்கம், பகுத்தறிவாக்கம் என்பவற்றைத் தடுத்து நிறுத்தினர்..(16)

காலனியத்திற்குப் பிந்திய நிறுவனங்களெல்லாம் மதக் கறைபடிந்து போயுள்ளன எனச் சொல்லும்  அல்லய்யா பள்ளிக்கூடமும் கல்வியும் எப்படி இந்துத் தன்மையாக உள்ளதென்பதையும், வெகுமக்களின் குழந்தைகள் எவ்வாறு இதிலிருந்து அன்னியப்பட வேண்டியதுள்ளது என்பதையும் விரிவாக விளக்குகிறார்.... சாதியப் பயிற்சியே இங்கு அளிக்கப்படுகிறது. சாதி மொழியே இதற்குக் கையாளப்படுகிறது என்கிறார் அல்லய்யா.(17)

பாடநூற்களில் எங்காவது விளிம்பு நிலை மனிதர்களின் பண்பாடுகள் பேசப்பட்டதுண்டா?  ... ஏன் எங்களுக்குக் கதையாடல்கள் கிடையாதா? பெருங்கதையாடல்களுக்கு மட்டும்தான்  உங்கள் பாட நூற்களில் இடமுண்டா? அல்லய்யாவின் இந்தக் கேள்விகள் தமிழ்ச்சூழலுக்கு அப்படியே பொருந்தும் என்பதில் அய்யமில்லை. (18)

தரப்படுத்துதல் என்கிற பெயரில் மய்யங்களில் வீற்றிருந்து ஆட்சி செலுத்தக் கூடியவர்கள் தமது பண்பாட்டுக் கூறுகளை விளிம்பு நிலையினர் மீது திணிக்கும் ஆபத்தையும் அய்லய்யா சுட்டிக் காட்டுகிறார். ‘பிராமண போஜன ஓட்டல்கள்’ என்கிற பெயரில் பார்ப்பன உணவையும், சுவையையும் பொதுமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அவர் அடையாளம் காட்டுகிறார். சுவை, விருப்பு ஆகிய தளங்களிலும் வெகுமக்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு அரசியல் முயற்சியாக நாம் இதனை அணுக வேண்டி இருக்கிறது.(19)

இந்து மயப்பாட்டிற்கு எதிராக தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிறப்டுத்தப்பட்டோர், சிறு பான்மையினர் ஆகியோரின் அய்க்கிய முன்னணி மட்டுமே நமது ஒரே நம்பிக்கையாக உள்ளது என்று முடிக்கிறார் அய்லய்யா. ஏனிந்த நூல் - அய்லய்யா

திடீரென்று தொண்ணூறுகளில் இந்தியாவில் இருக்கிற முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் அல்லாத எல்லோரும் இந்துக்கள் என்ற பொருளில் இந்துத்வா என்ற வார்த்தை நமது காதுகளில் ஒலித்தது.
உண்மையில் இவர்கள் முன் வைக்கிற இந்தக் குங்குமப் பொட்டுக் கலாச்சாரத்தின் தோற்றமே எங்களை அலைக்கழிப்பதாய் உள்ளது. (23)

இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் பெயராலோ ஒரு மதம் என்கிற அடிப்படையிலோ இந்து என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள் இவர்களிலிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்று சொல்ல மட்டும் கேட்டிருக்கிறோம். இந்த நான்கு வகைகளில் பார்ப்பானும், பனியாவுமே முற்றிலும் வேறுபாடானவர்கள்.

தலித் பகுஜன்கள் முற்றிலுமாக இந்துக் கலாச்சாரத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் .(25)

                                                                                        ....... தொடரும்
=============================================================


என் வார்த்தைகள் சில: 

என் 680-வது பதிவில் கூறிய சில விஷயங்கள்: 

//  பிராமணத் தமிழ் அன்றும் இன்றும் ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கிறது. வரும் விளம்பரங்களில் அறுபது எழுபது விழுக்காட்டில் பிராமணத் தமிழ் ஒலிக்கிறது. காரணம் புரியவில்லை. இதெல்லாம் விளம்பரப் படம் எடுப்பவர்கள் செய்யும் கோமாளித் தனமா?  இல்லை விளம்பரதாரர்களின் ‘புத்திசாலித்தனமா’? இந்த மொழியைப் பயன்படுத்துவதால் எதிர்ப்புகள் ஏதும் இருக்காது என்று விளம்பரதாரர்கள் ஏன் நினைப்பதில்லை?//

காரணம் புரியவில்லை - என்று கூறியுள்ளேன். ஆனால் இப்பதிவில் இறுதியாக சிகப்பு வண்ணத்தில் வரும் பத்திகள் இதைப் பற்றியே பேசுகின்றன. இது வெளியே பேசப்படாத ஒரு அரசியலாக இருந்து வருகிறது. இது ஒரு மெளனமான சாதி ஆக்கிரமிப்பு அரசியலோ?
சுவை, விருப்பு ஆகிய தளங்களிலும் வெகுமக்களைக் கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு அரசியல் முயற்சியாக நாம் இதனை அணுக வேண்டி இருக்கிறது. இதுதான் அந்தக் காரணமா...?


நம் தொலைக்காட்சிகளில் சில நிகழ்வுகள்:

சமையல் போட்டி ... கறியும், கோழியும் கருவாடும் கூட சமைக்க வேண்டுமாம். ஆனால் மூன்று ஜட்ஜ்களில் இருவர் அதைத் தொடவும் மாட்டார்களாம்.

பாட்டுப் போட்டி ... சிறுவயதிலிருந்தே சில மக்கள் கர்நாடக சங்கீதம் கற்பார்கள்; ஆனால் நீங்கள் எப்படி இஸ்லாமியராக இருந்தும் நன்றாகப் பாடுகிறீர்கள் என்று ரிஸ்வானைப் பார்த்து ஒரு கேள்வியை நடத்துனர் க.கா.பா.கேட்டார். ரொம்ப நியாயமான கேள்விதான்!

பாட்டுப் போட்டி ... தெய்வீகப்பாடல்கள் என்று ஒரு பிரிவு; பாவம் .. இதில் அல்கேட்ஸ், ரிஸ்வான், ரமேஷ் போன்ற முறையான சங்கீதம் - அது என்ன முறையான சங்கீதம என்றாலே கர்நாடக இசைதானா என்பதும் ஒரு கேள்வி - கற்காத இவர்களைத் தோல்வி தருவதற்கே இப்போட்டிகளோ? சூப்பர் சிங்கர் தானே... சூப்பர் கர்நாடக சிங்கரா இது?
யார் கேள்வி கேட்பது இவைகளை?

பாட்டுப் போட்டி ... பாட்டு பாடவே பிறவி எடுத்த குழந்தைகள் பாட வருதுகள். அதோடு வேறு சில அபிஷ்டுகளும் போட்டிக்கு வந்திட்டாங்க. நடுவர்களிலும் ‘எல்லோரும்’ இருக்கலாமே? 
எங்கள் கல்லூரி போட்டிகளில் எங்கள் மாணவர்கள் இருந்தால் நாங்கள் நீதிபதிகளாக இருப்பதில்லை என்பது போல் இங்கும் ‘பொதுவான’ நடுவர்கள் இருக்கலாமே! அல்லது இசை தெரிந்த ‘பொதுவானவர்கள்’  என்று யாருமேயில்லையோ?

பிராமணர் அல்லாதவர் பலர் பரிசுகளைப் பாட்டுப் போட்டியில் வாங்கினார்கள். என்றாலும் ... 
இதெல்லாமே நான் சொன்ன மெளனமான சாதி ஆக்கிரமிப்பு அரசியலோ?
இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டுமா ... கூடாதா?

எனக்குத் தெரியவில்லை; சொல்லிக் கொடுங்கள்.

மேலே எழுதியவைகளை எழுத மனம் சிறிது கூசியது. casteist என்ற  பழி வந்து சேருமே என்றும் தோன்றுகிறது. ஆனாலும் ...I want to call a spade a spade ! Just belling the cat !!

============================


34 comments:

டிபிஆர்.ஜோசப் said...

.I want to call a spade a spade ! Just belling the cat !! //

தருமின்னு பேர் வச்சிக்கிட்டு இதுக்கெல்லாம் பயந்தா எப்படி?

ஸ்பேட்னா ஸ்பேட்தான்..

தருமி said...

அப்போ நான் எழுதியது சரிதான் என்கிறீர்களா?

பயம் இல்லை; கூச்சம். சாதிக் கழுதையைப் பற்றிப் பேசிக்கிட்டு ....

G.M Balasubramaniam said...

எனக்கென்னவோ சொல்ல வந்த விஷயங்கள் திசை திரும்பிப் போகின்றன என்றே தோன்றுகிறது. நானும் நிலவும் ஏற்ற தாழ்வுகள் குறித்தும் அதற்கான probable காரணங்கள் குறித்தும் , அதைத் தவிர்க்க என்ன வழிமுறைகளைக் கையாளலாம் என்றும் அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். belling the cat is ok. but where and who is the cat.? சாதிக்கழுதையையே பேசிட்டு என்று நீங்கள் எழுதுவதில் இருந்தே தெரிகிறது, உங்களுக்கே எழுதியது எல்லாமே உடன்பாடு இல்லையென்று. காரணங்களை நீங்கள் எதிலெல்லாமோ தேடுகிறீர்கள். chasing a crooked shadow. ?

சிந்திக்கமாட்டார்களா said...

வணக்கம் ஐயாசாதி மதஒழிப்பு தொடரப்படவேண்டும் சமதர்மசமுதாயம் உருவாக பாடுபடுவோம் நன்றி

அ. வேல்முருகன் said...

சாதி மட்டுமே பயன்படுத்தும் தமிழ் உச்சரிப்புகளை சமாதிக்கு அனுப்புவதில் தவறில்லை.

வட்டார வழக்கை புரிந்து கொள்ளும் போது இது சற்று புரியும் என நினைக்கிறேன். பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் பேச்சு வழக்கும் குரலும் அந்த பகுதியை சார்ந்திருக்கும்.

ஆயினும், இந்த பிராமண மொழி மட்டும் தனித்திருக்கும்.

தனித்திருந்து பெரும்பான்மையான நம்மை மட்டும் தட்டுவதால் அதை ஒழிப்போம்.

ஏற்கனவே சொன்ன மாதிரி தொலைக்காட்சி என்பது அவாளோட ஆட்சி.

சங்கீதம் என்பதே தமிழ் வார்த்தையில்லை என்பதால் அது கர்நாடகமாக இருக்கிறது.

தமிழிசை மக்கள் தொலைகாட்சியில் சற்று பார்க்கலாம். மற்ற தொலைகாட்சிகள் அவாள் காட்சி

அப்புறம் எனக்கும் பாமகவிற்கும் சம்பந்தமில்லை

தருமி said...

G.M Balasubramaniam,

//எனக்கென்னவோ சொல்ல வந்த விஷயங்கள் திசை திரும்பிப் போகின்றன என்றே தோன்றுகிறது.//

உண்மை. இப்பதிவு இரு பகுதிகளோடு உள்ளது. ஒன்று நூலில் நான் பார்த்த பிடித்த பகுதிகள். நூலில் சொல்வதைநேரில் வாழ்க்கையில் பார்த்ததினால் வந்த பிரதிபலிப்பு இரண்டாம் பாகம்.

//உங்களுக்கே எழுதியது எல்லாமே உடன்பாடு இல்லையென்று. ...//

தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். பார்ப்பவை, அவைகள் எனக்கு ஏற்பட்ட எரிச்சல் எல்லாம் உண்மை. இப்படியும் நம்மைச் சுற்றி இப்படியெல்லாம் நடக்கிறதே என்ற ஆதங்கம் நிறைய. எலலோரும் பணிந்து விலகிச் செல்வது குறித்து வருத்தம். இதன் மொத்த விளைவு தான் இரண்டாம் பகுதி.

hariharan said...

சிறுதெய்வ வழிபாடு கொண்டவர்கள் பெருந்தெய்வங்கள் நோக்கி நகர்கிறார்கள், தமிழகத்தில் பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி கொண்டாட்டம் மத்தியத்ர வர்க்கத்திடம் நட்சத்திரப் பிறந்தநாள் கொண்டாடுவது புகுந்திருக்கிறது.

Rajasankar said...
This comment has been removed by the author.
தருமி said...

Raja sankar
கொஞ்சம் வாசித்து விட்டு அதன் மேல் உங்கள் கருத்துக்களைக் கூறினால் நன்கிருக்குமே.

//இந்து மதம் என்பதை ஒரு சாரார் நிறுவியதாகவே நோக்குகிறார்கள்//

சான்று ஏதுமுண்டா?
‘இந்து மதம்’ ஆங்கில கணக்கெடுக்கில் எப்படிப் பிறந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே. ஒரே ‘போர்வைக்குள் எல்லோரையும்’ பொதிந்து விட்டு, இன்று யாரையோ குறை சொல்வது போல் தெரிகிறது.

//இந்து மதம் பன்மைத்தன்மையுடையது என ஒப்புக்கொண்டாலே...//

ஒரு மதம என்பது எப்படி பன்முகத் தன்மை கொண்டதாக மாறியது என்பதை நீங்கள் ரூம் போடாமலேயே யோசித்துப் பாருங்களேன். இது ஒரு ‘கூட்டுக் குவியல்’ என்பது தெரியும்.

//இந்து மதம் என்பதையே பார்பனியம் மதம் என வலிந்து திணிக்கிறார்கள்.//

இல்லை .. இல்லை .. இந்து மதம் இதுதான் என்பதையே பாப்பனியம் வலிந்து திணிக்கிறது என்பதே உண்மை.

//ஒரு நூற்றாண்டு வரை எல்லா சாதிகளிடமும் சொத்து பிரிவினை என்பதே இல்லாமல் தான் இருந்தது. //

அப்படியா??!!!!!!! அந்த வேள்விக்குடிச் செப்பேடு கூறுவதை வாசித்த பின் இப்படி ஒரு கருத்து கூற எப்படி முடிகிறது?

தருமி said...

Raja sankar
//எல்லா சாதிகளிடமும் சொத்து பிரிவினை என்பதே இல்லாமல் தான் இருந்தது.//

’பிரம்மதேயம்’ அல்லது ‘சதுர்வேதி மங்கலம் -- இதெல்லாம் என்னங்க?

Rajasankar said...
This comment has been removed by the author.
தருமி said...

//கருப்பண்ணசாமிக்கு கிடாவெட்டி பொங்கல் வைக்கும் ஆட்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்? என்ற கேள்விக்கு பதில் தேடுங்கள்//

ஆமாம் .. பதில் தேடுங்கள். கருப்பண்ண சாமி சிவபெருமானின் இன்னொரு அவதாரம் என்று சொல்லி விடாதீர்கள்; கருப்பண்ண சாமிக்கும் இந்து மததிற்கும் என்ன தொடர்பு என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்;

//ஒரு சாதிக்கு கொடுக்கப்பட்ட சொத்தையும் //

ஓ! ‘கொற்கைக் கிழான் நற்சிங்கன்’ என்பவன் ஒருவன்தானே...! அவன் சொத்துக்காக அவன் பிராது கொடுத்துள்ளான்.

//அவர்களுக்கு மட்டும் தான் அனுபோகம்...//

நிலம் வைத்திருந்த ஜமீன்களும் தனி மனிதர்கள்தானே,... உங்கள் இஷ்டத்திற்கு விஷயங்களை வளைக்க முயற்சிக்கிறீர்களே!

//சமூக பழக்க வழக்கங்களையும் மதத்தையும் ஏன் சேர்க்கவேண்டும்//

மிக மிக நல்ல கேள்வி. பார்ப்பனியத்தின் மீதுள்ள பெரிய குற்றச்சாட்டே இது தானே. மதக் கொள்கைகள், கோட்பாடுகள் என்று சொல்லி வர்ணம், சாதி, என்று ஆயிரத்தெட்டு விஷயங்களைச் சமூகத்தில் “திணித்தது” உண்மையில்லையோ?

//பார்ப்பான் மட்டும் வைச்சிருந்தால் அது சாதிக்கொடுமையா? //

பார்ப்பான் ஆட்சி செய்யலாம் என்று “இந்து தர்மம்” சொல்லுகிறதோ? எனக்குத் தெரியாதே!

தருமி said...


//தீயும், காற்றும், பசுவும் அன்னப்பறவையும் அவனுக்கு வேத அறிவை சொல்லித்தருகின்றன.//

அடப் பாவமே! -ஜாபாலனுக்கு பசுவும் அன்ன்பப்றவையும் தான் குருக்கள்; மனிதர்களல்ல...!

//யக்ஞவல்கியர் மேல் அவருடைய குரு கோபித்துக்கொண்டு நான் சொல்லித்தந்த வேதத்தை திரும்ப கொடுத்துவிடு என கேட்கிறார்.//
ஏகலைவனுக்குக் கிடைத்த குரு மாதிரி போலும். என்ன வகை குருக்கள் இவர்கள். முறையற்ற குருக்கள் .......!

//....அதை சொல்லிய மறுகணமே பார்த்தாயா உடன்பிறப்பே பார்ப்பான் உனக்கு வேதம் சொல்லிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டான் அவனிடம் இன்னுமா ஏமாறுகிறாய் என்பது. //

ஆஹா ... நல்ல பாய்ண்டாக இருக்கிறதே. நன்றி

//ஆமாம் ஏன் வேதம் சொல்லித்தரவில்லை என கேட்கிறார்கள்?-//

-அப்புறம் அப்படிக் கேட்க மாட்டார்களா .. என்ன?


தருமி said...

/./பார்பனியம் வலிந்து திணிக்கவில்லை, //

அப்படியா? பார்ப்பனியம் எதையும் வலிந்து திணிக்கவில்லையா? அப்படியானால் இதை வாசித்துப் பாருங்கள்:
[ Manu IX.132 ]
al-B.ii.127 Ch.LXIV ]//" Supporting the caste system he [ Gandhi ] said: "I believe that caste has saved Hinduism from disintegration." He also said, "To destroy the caste system and adopt the Western European social system means that Hindus must give up the principle of hereditary occupation, which is the soul of the caste system.//

தருமி said...

மேலே கொடுத்த இரு தொடுப்புப் பதிவுகள் இங்கே:

http://sixth-finger.blogspot.in/2006/05/13-history-and-plight-of-dalits-of.html

http://sixth-finger.blogspot.in/2006/05/14-history-and-plight-of-dalits-of.html

வாசித்துப் பாருங்கள்.........

தருமி said...

காந்தி //principle of hereditary occupation, which is the soul of the caste system.// இப்படி சொல்லியிருக்கிறாரே - principle of hereditary occupation - அப்டின்னா என்னங்க?

தருமி said...

http://sixth-finger.blogspot.in/2006/05/13-history-and-plight-of-dalits-of.html - இப்பதிவில் -- மனுசாஸ்திர வசனங்கள் .....இங்கேயே கொடுத்து விடுகிறேனே .....

//Following quotes from their manushastra will prove the level of cruelty they showed towards the low caste and outcaste people:

" Having killed a cat, an ichneumon, a blue jay, a frog, a dog, an iguana, an owl, or a crow, he shall perform the penance for the murder of a Sudra." -- [ Manu IX.132 ]

" Every act that is considered the privilege of the Brahman, such as saying prayers, the reciting of the Veda, and offering of sacrifices to the fire, is forbidden to him, to such a degree that when, a Sudra or a Vaisya is proved to have recited the Veda, he is accused by the Brahmans before the ruler, and the latter will order his tongue to be cut off. However, the meditation on God is not prohibited.-- [ al-B.ii.127 Ch.LXIV ] "

· " A once-born man (Sudra) who insults a twice-born man (Aryan) with gross invective, shall have his tongue cut out; for he is of low origin." -- [ Manu VIII.270 ]

· " If he mentions the names and castes (Jati) of the (twice-born) contumely, an iron nail, 10 fingers long, shall be thrust red-hot into his mouth." -- [ Manu VIII.271 ]

· " If he arrogantly teaches Brahmins their duty, the king shall cause hot oil to be poured into his mouth and into his ears. " -- [ Manu VIII.272

The great distinctions of caste are to be maintained not only in the earthly life, but also after death. According to Markandaya Purana, after death, the virtuous Brahman goes to the abode of Brahma, the good Kshatriya to that of Indra, the worthy Vashya to that of the Maruts, and the dutiful Sudra to that of the Gandharvas. Apparently, the Untouchable (Dalit) does not deserve any place in any heaven, may be because of his untouchability even by gods themselves!//

Rajasankar said...
This comment has been removed by the author.
தருமி said...

Raja sankar
கொஞ்சம் வாசித்து விட்டு அதன் மேல் உங்கள் கருத்துக்களைக் கூறினால் நன்கிருக்குமே என்று கூறியிருந்தேன். மீண்டும் அதையே திரும்பச் சொல்ல வேண்டியதுள்ளது....

//இந்து மதம் என்பதை ஆங்கிலேயன் தான் கட்டமைத்தான் //

கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள்: ”எவைகளெல்லாம் இந்து மதம் என்பதை ஆங்கிலேயன கட்டமைத்தான்”. இல்லை என்கிறீர்களா?

//கருப்பண்னசாமியை வழிபடும் ஆட்கள் எந்த மதம் சேர்ந்தவர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை//

இந்த ஒரு பதில் உங்கள் கேள்விகள் எல்லாவற்றிற்குமான பதில்.

கண்களை மூடிய பூனைக் கதை நமக்கெதெற்கு!!!

தருமி said...


//கருப்பண்னசாமியை வழிபடும் ஆட்கள் எந்த மதம் சேர்ந்தவர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை//

இந்த ஒரு பதில் உங்கள் கேள்விகள் எல்லாவற்றிற்குமான பதில்.இன்னொரு பதிலும் தந்திருக்கிறீர்கள். நன்றி.
அப்பதில்:
மனுஸ்மிருதியில் இந்து எனும் சொல் உண்டா? :-)
-----------
//மனுஸ்மிருதி அப்போதைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்த சட்டம். //
ஆட்சியாளர்கள் இல்லை. மதக்காரர்கள் கொடுத்த சட்டம்.

ஒரு துணைக்கதை: இந்திய நாட்டுக்கு மதவாரியாக சட்டங்கள் போட்ட ஜேம்ஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி இந்து மதச்சட்டமாக எடுத்தது மனு சாஸ்திரம். மனு சாஸ்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது போல் இன்றும் இங்கிலாந்தில் இவருக்குச் சிலை உண்டு.


தருமி said...

//அது என்ன மற்ற சாதிகளில் கிடையாதா? //

ஆஹா ... கட்டாயமாக இருந்தது - அனைத்து “சாதி இந்துக்களிடம்” இருந்தது. தலித் பகுஜன்களுக்கு அந்த ‘வக்கு’ இல்லை / கொடுக்கப்ப்டவில்லை. உண்மைகளை மறைக்க வேண்டாமே!

Rajasankar said...
This comment has been removed by the author.
தருமி said...

//இந்துக்கள் அதை சொல்லவில்லை//

உங்களுக்கு continuity மறந்து போச்சு போலும். அந்த ‘வெறியாளர்கள்’ ஒரே போர்வைக்குள் சேர்த்ததை வைத்ததை வைத்துக் கொண்டு தான் இன்று ‘எல்லோரும் இந்துக்கள்’ என்ற பாடலைத் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கிறீர்கள் என்கிறேன்.

நீங்களே ஒப்புக்கொண்டமைக்கு நன்றி

//கருப்பண்ணசாமி இந்து மதத்தை சேர்ந்தவர் தான் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். இதற்கு இன்னோர் நன்றி. :-)//

அடப்பாவமே! எங்க மூதாதையர் கருப்பண்ண சாமியை இந்து சாமியாக்கியது நீங்கள் தானே. நான் அது இந்து சாமி இல்லை என்கிறேன். நன்றி .. கின்றியெல்லாம் எனக்கெதற்கு!!

//மனுஸ்மிருதி //

ஐயா! மனுஸ்மிருதியை அவனாகவா எடுத்துக் கொண்டான். எடுத்துக் கொடுத்ததை - யார் எடுத்துக் கொடுத்திருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா .. என்ன?! - அவன் வாங்கிக் கொண்டான்.

ஆக மற்ற மதத்தினரான கி., இ.,சீ. பு. மதக்காரர்களைத் தவிர எல்லாவற்றையும் ஒரே “மூட்டையில்” போட்டுக் கட்டு என்றீர்கள். கட்டி விட்டான். எல்லோரையும் ‘இந்து என்று சொல்லு என்றீர்கள். சொல்லி விட்டான். வெற்றி தங்களுக்கே ...

//15 ஆம் நூற்றாண்டில் பார்பானியம் காணாமல் போயிருக்குமோ? :-) //

அதற்கு முன்பே ‘களப்பிரர்’ காலத்தில் காணாமல் போயிருந்திருக்கிறார்கள். கேள்விப்படவில்லையா?Rajasankar said...
This comment has been removed by the author.
தருமி said...

//ஆமாம் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இந்துக்கள் அல்லாமல் வேறு யார்? //

back to square one! பூனை நல்லாவே கண்ணை மூடிக்கொண்டது, ஒண்ணும் பண்ண முடியாது பூனையை!

//இந்து என்ற சொல் மனுஸ்மிருதியில் உண்டா? //

இதைத் தானே அய்யா நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன்!

//அப்படியானால் கருப்பண்ணசாமி என்ன கி,இ,சீ,பு மதத்தை சேர்ந்த சாமியா?//
கருப்பண்ண சாமியும், சுடலை மாடனும், மாரியாத்தாளும் உங்க சாமியா? உங்க மூணு சாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் சொல்லுங்க... (வழக்கம் போல) கேட்டுக்கிறேன்.

இங்கே ‘டுபாக்கூர்’ வேலை நீங்களல்லவா செய்து கொண்டிருக்கிறீர்கள்.

தருமி said...

//வழக்கமாக அரசர்களைத்தான் பெண்களை காட்டி மயக்கினார்கள் என கதை எழுதுவது வழக்கம் இதிலே வெள்ளைக்காரனையும் சேர்த்தாயிற்றா? //

நீங்களே சொல்லுகிறீர்கள்.நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!

Rajasankar said...
This comment has been removed by the author.
தருமி said...

//அவர்கள் எங்கள் சாமியில்லாமல் வேறு யாருடைய சாமிகள்? //

எப்டிங்க இப்படி கூசாம பொய் சொல்றீங்க! இது இந்து சாமிகளல்ல என்று எல்லோருக்கும் தெரிந்ததை இப்படி மறுக்கிறீர்களே! ancestral worship அல்லவா இவைகள். தங்களுக்கு உதவிய, தங்களைக் காப்பாற்றியவர்களை (சிறு) தெய்வமாக்கி வணங்கியதை ஏன் மறைக்கிறீர்களோ! ஒவ்வொரு கருப்பண சாமிக்கும் ஒவ்வொரு கதை உண்டு.

//ஒரு பக்கம் இந்து மதம் கிடையாது என பூனை வாதம் இன்னோர் பக்கம் யாரெல்லாம் இந்து மதம் யாரெல்லாம் இல்லை என தீர்மானிக்கும் பணி//

தெரிந்தே, புரிந்தே பேசுகிறீர்களா இல்லையா என்றே தெரியவில்லை. சாதியாலும் வழிபடு முறையாலும் மாறுபட்ட குழுவினரை ஒரே மூட்டைக்குள் கொண்டு வந்து அனைவரும் இந்துவாக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. இதைத்தான் காஞ்சா சொல்கிறார். நானும் அது சரியென்றே நினைக்கிறேன்.

//எனவே அது இந்து மத நூல் அல்ல //

கடவுளே! இந்த இந்து மத மூட்டை பின்னால வந்தது என்று தானே சொல்லிக்கொண்டே இருக்கிறேன். சனாதன மதமா .. ஆர்ய மதமா ... அதற்கு முன்னால் அதற்கு என்ன பெயர் என்று நீங்களல்லவா சொல்ல வேண்டும்.

தருமி said...
This comment has been removed by the author.
தருமி said...

//கொஞ்சம் மாற்றத்துக்கு அடுத்தவர்கள் சொல்லுவதையும் கேட்கலாம் தப்பில்லை. :-) //

தப்பேயில்லை. நல்ல கதையாக இருக்கிறது. மிகவும் பிடிக்கிறது. இது போல நிறைய சொல்லுங்கள் .. சொல்லிக்கொண்டே இருங்கள் ..,,,,,,, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

Rajasankar said...
This comment has been removed by the author.
Rajasankar said...
This comment has been removed by the author.
தருமி said...

//பின்னூட்டம் ஏன் வெளியிடவிடல்லை என தெரிந்து கொள்ளலாமா?//

சரியான ‘அவசரக் குடுக்கை’யாக இருப்பீர்கள் போலும்!

தருமி said...

//எல்லோருக்குமா? எந்த எல்லோருக்கும்?//

இருவரில் ஒன்று பூனை. யாரது?

//வேறு எந்த மதத்தினர் வழிபடுகீறார்கள் என சொல்லுங்கள்? //

again back to damn square one! OMG! i dont have this much patience!!

//அப்புறம் என்ன எல்லோரையும் இந்துவாக்கினார்கள் என்ற கட்டுக்கதை? //

போங்க .. போங்க... காஞ்சா மாதிரி சொல்லும் பல இந்துக்களை எனக்குத் தெரியும். நீங்களும் சுத்தி நாலு பக்கம் விசாரிச்சி பாருங்க. ஏதாவது ஒரே சாதிக்காரர்கள் என்றில்லாமல் பலரை விசாரித்து விவரம் சொல்லுங்கள்.

//கதாசிரியர் சரியில்லையோ? //

காத்சிரியர் எப்படியோ ... வாசகர் நல்லா ‘திருச்சி’ வாசிக்கிறார்.

//இந்து மதம் என்பதே பன்முகத்தன்மை கொண்டது தான்//

யாரும் மறுக்கவில்லையே.......

கடைசிப் பத்தியில் உங்கள் ‘அறிவாளித் தனம்’ மிளிர்கிறது.

Post a Comment