*
2008ம் ஆண்டு மேலே உள்ள தலைப்பில் ஒரு இணையப் பூ ஒன்றை நாங்கள் ஆறு பேர் இணைந்து ஆரம்பித்தோம்.
SurveySan
O.R.B Raja
தருமி
Santhosh Kumar
Anandha Loganathan
நக்கீரன்
சமுக நல சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கேட்கவும், மத்திய அரசாங்கத்திடம் நம் கருத்துகளை, வேண்டுகோள்களைப் பதிய ஒரு இணைய தளம் இருந்ததைக் கண்டதும் அதை முறையாக தமிழ்ப் பதிவர்கள் பயன்படுத்த ஒரு இணையப் பூஒன்றை நாங்கள் ஆறு பேரும் ஆரம்பித்தோம். சில பதிவுகளை அந்த ஆண்டில் தொடர்ந்து இட்டோம். அதன்பின் அப்பதிவை நாங்கள் தொடர்ந்து பயபடுத்தாமல் விட்டு விட்டோம். இந்த இணையத்திற்கான logo ஒன்றினை SurveySan அவர்கள் படைத்தார். ( I MISS YOU, SURVEY SAN). இப்போது அந்த ஐவரும் இணையத்தில் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை! :(
இந்த இணைய இதழில் எங்களின் பல கருத்துகளைப் பதிவிட்டோம்.
ரயில்களில் கழிப்பறைகள் தொடர்பாக... என்ற தலைப்பில் நான் இப்பதிவுகளை ஆரம்பிப்பதற்கு முன்பே அரசுக்கு ஒரு விண்ணப்பம் ஒன்றை எழுதியிருந்தேன்(30.12.2007 - ( Registration No. DARPG/E/2007/08851) இந்தவிவரங்களை என் பதிவுகளிலும் பதிவிட்டிருந்தேன். - http://dharumi.blogspot.in/2007/12/246.html
இதற்குப் பதில் அரசிடமிருந்து வந்திருந்தது.http://fixmyindia.blogspot.in/2008/02/blog-post_1634.html- முயற்சி எடுப்பதாக அதில் தகவல் வந்திருந்தது.
ஆனால் அப்படி ஏதும் நடைமுறைக்கு வரவில்லை.
ஆனால் சென்னைக்கு சென்ற சில தினங்களுக்கு முன் செல்லும் போது பாண்டியன் துரித வண்டியில் கழிவறைக் கதவில் BIO-BATHROOM என்பதைப் போன்ற ஒரு அறிக்கை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. பெய்த சிறு நீர் வழக்கம் போல் கீழே விழுந்து மதுரை மண்ணை அசிங்கம் செய்யாம்ல் அமைக்கப்பட்டிருந்தது.
என்றோ எழுதிய ஒரு விண்ணப்பத்திற்கு இன்று பதில் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி வந்தது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் இது. இருந்தாலும் நாம் என்றோ எடுத்த ஒரு முயற்சி இன்று பலனடைந்திருப்பது பார்த்து ம்கிழ்ச்சி.
நம் கடன் பணி செய்து (சும்மா) கிடப்பது கூட ஒரு மகிழ்ச்சி தான் போலும்.
விட்டதை விட்ட இடத்தில் தானே தேட வேண்டும். ஆகவே மீண்டும் அந்த பழைய்ய்ய்ய்ய இணையப் பூவில் இன்றைய தேவையான, பார்களை ஒழிப்பதற்கான தமிழக அரசிற்கான விண்ணப்பத்தையும் இதில் பதிவிட்டுள்ளேன். - http://fixmyindia.blogspot.in/2014/11/blog-post.html
இளைஞர்கள் யாரேனும் (அல்லது மனதில் இளையோரான முதியவர்களும்) இப்படி பதிவெழுத விரும்பினால் இப்பதிவில் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறேன்.
ஏதாவது எழுதுவோமே .... நடப்பது நடக்கட்டுமே .....!
*
பழைய பதிவர்கள் அந்த ஐந்து பேரும் இங்கே இப்பதிவிற்கு வருகை தந்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் ........!
*
இதே போன்ற கருத்தை வைத்தபோது எத்தனைத் தமிழ்ப் பதிவர்கள் ஆவலோடு இதில் கலந்து கொண்டார்கள் என்பதை இப்பதிவையும் பின்னூட்டங்களையும் பார்த்துப் புரிந்து கொள்ளுங்களேன்...........
8 comments:
நல்ல தொண்டு வாழ்த்துக்கள்
தங்களின் முயற்சிக்கு வெற்றி கிட்டியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா
தங்களின் நல் முயற்சிகள் தொடரட்டும்
அருமையான முயற்சி! வாழ்த்துக்கள்!
ரொம்ப மகிழ்ச்சி அய்யா! கால ஓட்டத்தில் முன்னுரிமைகள் மாறியதால் அந்த வலைப்பூவில் தொடர்ந்து இயங்க முடியவில்லை. ஆனாலும், மனதின் ஒரு ஓரத்தில் 'ஏதாவது செய்யவேண்டும்' என்பது இன்னும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது :))
அட போங்க ராஜா .... புத்தர் மாதிரியா இப்படி ஓடிப் போறது! அங்க கொஞ்சம் .. இங்க கொஞ்சம்னு தலையைக் காமிக்கலாமே.... barbecue மாதிரி இதையும் தொட்டுக்க வேண்டியது தானே!
வாங்க ........
தருமி சார்
'பார்' ஒழிந்தால் நமது டாஸ்மாக் வசூல் குறைந்துவிடுமே ! மக்களுக்கு அந்த வருமானத்தைக் கொண்டுதானே இலவசங்கள் கொடுத்து ஏழ்மையை தீர்க்க முடியும் . 'பார்' நல்லது (கறை நல்லது மாதிரி) ..... !? கொஞ்சம் 'பார்'த்துச் செய்ங்க.
ஊர்கூடி தேரிழுக்க வேண்டிய விஷயம்.....
dharumi sir, for this
http://fixmyindia.blogspot.in/2008/08/blog-post.html
this is the result :) it took 7 years. still, it worked :)
https://www.facebook.com/Chitlapakkam.Rising/posts/1539887313003849
Post a Comment