Friday, December 05, 2014

805. பெங்களூரு உலா - 2 -- லால் பாக்



30 ஆண்டுகளுக்கு முன் லால் பாக்  மாணவர்களோடு சுற்றிப் பார்த்தது. அன்று மறைந்த பாலுமகேந்திரா  ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருந்தார், அவரோடு படம் எல்லோரும் எடுத்துக் கொண்டோம்.  

அதன் பிறகு இப்போது தான் இந்த பூங்காவிற்குள் நுழைந்துள்ளேன். இதில் நுழைந்ததும் இலங்கையில் சமீபத்தில் பார்த்த கண்டி பூங்கா நினைவுக்கு வந்தது. எவ்வளவு வித்தியாசம். அந்தப் பூங்கா வெகு அழகாக வைக்கப்பட்டிருந்தது. சாலைகள் எல்லாம் அவ்வளவு சுத்தம். குப்பையில்லை ... எங்கும் பச்சை ... சில அழகான மனித உருவாக்கங்கள்... ஆர்க்கிட் மலர்களுக்கென்று ஒரு அழகிய தனியிடம்.... அந்தப் பூங்கா போல் இதையும் மாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணமே இருந்தது.



இலங்கை கண்டிப் பூங்காவின் சுத்தம் .. அழகு ... 



கண்டிப் பூங்காவினொரு அழகிய அமைப்பு
***






***


ஏரி



***







                                        ***                                       


முன்னூறு ஆண்டு வயதான இலவம் பஞ்சு மரமாம்
***

இலங்கையில் ஆர்க்கிட் பூக்களுக்குத் தனியிடம். இங்கு போன்சாய் மரங்களுக்கென்று ஒரு தனியிடம். சில செடிகளோடு சண்டை போட்டு போன்சாய் வளர்க்க பட்ட பாடும், தோல்வியும் நினைவுக்கு வந்தது.


***




***
ஒவ்வொரு போன்சாய் மரத்தையும் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டுமென்பார்கள். இங்கே பெருந்தோட்டத்தில் அவை இருந்தன. அதைக் கவனிக்கும் காவலரிடம் இவை பற்றிய எந்த தகவலும் இல்லை.

வாழ்க்கை போல் பின்னிப் படர்ந்திருக்கிறது!!



***





***




***

கண்ணாடி மாளிகைக்கு அருகில் ...




8 comments:

KILLERGEE Devakottai said...

அழகான புகைப்படங்கள் வாழ்த்துகள் ஐயா.

ப.கந்தசாமி said...

இதுக்காகத்தான் வெளி நாடுகளுக்குப் போகப்படாதுங்கறது. அங்கன போய்ட்டு வந்துட்டு இங்க அப்படி இல்லயேன்னு பொலம்பறது. சில நாட்கள் போய்ட்டு வந்த உங்களுக்கே இப்படீன்னா, அமெரிக்காவில போயி குடியேறின நம்ம ஆட்கள் மனப்பான்மை எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. Dirty India ன்னுதான் சொல்வானுங்க.

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் ஒவ்வொன்றும் அழகு ஐயா
நன்றி

ராமலக்ஷ்மி said...

ஆம். பராமரிப்பிலும் ஆங்காங்கே தோட்டங்கள் அமைப்பதிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். கண்காட்சி சமயங்களில் ஆங்காங்கே வைப்பதற்கு பல ஊர்களிலிருந்து மலர்செடிகளைத் தருவிக்கிறார்கள். நிரந்தரமாய் இருப்பவை என நினைத்து, கூட்டத்தைத் தவிர்க்க ஒருசில நாட்கள் கழித்துச் சென்றால் எதுவும் இருக்காது.

Meltling Pot of Culture பொலிவுடன் இருந்த சமயத்தில் எடுத்த படம்: இங்கே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புகைப்படங்கள் எங்களை நிகழ்விடத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டன. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.......

வேகநரி said...

இலங்கையில் கண்டி பூங்காவில் நிற்றபோ எனக்கும் மற்றவங்களுக்கும் உங்களுக்கு வந்த அதே எண்ணம் தான் வந்தது (சாலைகள் எல்லாம் அவ்வளவு சுத்தம். குப்பையில்லை எங்கும் பச்சை)
பயண கட்டுரை மிக பிடிக்கும், நான் போன ஊரு பயணகட்டுரை இன்னும் பிடிக்கும், அதனாலே இலங்கைப் பயணம் - 6 - கண்டி பூங்கா உங்க கட்டுரைக்கு மறுபடியும் சுற்றுலா சென்று வந்தேன்.

துளசி கோபால் said...

வாவ்!!!!!

Post a Comment