Thursday, January 15, 2015

817. ஒரு எழுத்தாளனின் தற்கொலை








*



 ”எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்து விட்டான். அவன் கடவுள் அல்ல. ஆகவே, உயிர்த்தெழப்போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. இனி, ஆசிரியனாகிய பெ. முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.”

பெருமாள் முருகன் இவ்வாறு தன் எண்ணங்களை வெளியிட்டு, அதன் கீழ் ”அவனை விட்டு விடுங்கள்.” என்று எழுதி பெ. முருகன் (பெருமாள்முருகன் என்பவனுக்காக) என்று கையொப்பமிட்டிருக்கிறார்.

இது ஒரு எழுத்தாளனின் தற்கொலையன்றி வேறில்லை. பெருமாள் முருகனோ /முருகனோ இனி ஏதும் எழுத மாட்டேன்; வெறும் ஆசிரியனாக மட்டும் இருப்பேன் என்றும் எழுதியுள்ளார்.

பெருமாள் முருகன் இனி எழுத மாட்டேன் என்றால் அது ஒரு எழுத்தாளனின் தற்கொலையன்றி வேறில்லை. பெருமாள் முருகன் தன்னுள் இருக்கும் ஒரு எழுத்தாளனைக் கொன்று விடுவது ஒரு தற்கொலை என்றால், ஏதோ பேனா பிடித்து (அல்லது) கணினியின் மூலம் எழுதும் ஒவ்வொருவரும், அப்படி எழுதப்பட்டவைகளை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

சாதி, மதங்களின் பெயரால் படைப்புகளைத் தடை செய்யும் போக்கு கட்டாயம் மாறியாக வேண்டும். இந்த நிலையில் பெருமாள் முருகனின் முடிவு ஒரு எழுத்தாளனின் முடிவாக இருக்க முடியாது. எழுத்தாளனுக்குப் பொறுமையை விட போராட்டம் அதிகமாக இருக்க வேண்டும். அவரின் பழிப்புக்குரிய அந்த நூலை நான் வாசிக்கவில்லை. செவிவழி செய்தியோ, உண்மையான வரலாறோ... தான் அறிந்த ஒரு செய்தியை எழுதியுள்ளார். எழுதிய செய்தி மனமறிந்து எழுதியிருந்தால் அந்தச் சொற்களை அவர் விழுங்க வேண்டியதில்லை. எழுத்தையே மூட்டை கட்டி வைக்க வேண்டிய தேவையும் இல்லை.

நான் வாசித்தவைகளில் இருந்து ஒரு சான்று:

கிறித்துவர்களின் வேத நூலில் மகதலேனா ஒரு நடத்தை கெட்ட பெண் என்றுள்ளது. ஆனால் இவைகளை மறுத்து சில சான்றுகளோடு, மகதலேனா ஏசுவின் மனைவி; ஏசுவின் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள்; அச்சத்தோடு தப்பி குழந்தையோடு ஓடினார் என்று சில ’வரலாற்று’ நூல்கள் வெளி வந்துள்ளன. இதை எழுதிய ஆசிரியர்கள் இதுவரை பயமுறுத்தப் படவில்லை. அவர்கள் மேலோ அவர்களது நூல்கள் மீதோ எவ்வித நடவடிக்கைகளும் வரவில்லை. அந்த ஆசிரியர்களும் அச்சத்தாலோ, வெறுப்பாலோ தங்கள் படைப்பாற்றலை மூட்டை கட்டி ஓரம் கட்டவில்லை. 


இந்தியாவில்,  அதுவும் தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் இந்த சாதி, சமய அராஜகப் போராட்டங்களுக்கு வாசிப்பாளர்கள் அனைவரும் திரண்டு தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டும். பெருமாள் முருகன் தவறாக எழுதியிருந்தால், அவரை எதிர்ப்பவர்கள் அதை முதலில் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதுவும் முறையான வழியில் வரவேண்டும். கூட்டம் கூடி, குரலெழுப்பி படைப்பாளர்களை சந்தியில் நிறுத்தக் கூடாது; அதைப் பொறுமையோடு வாசகர்கள் கைகட்டிப் பார்க்கக் கூடாது.

பெருமாள் முருகன் சொல்வது போல் அவர் கடவுள் அல்ல; ஆனால் அவரால் உயிர்த்தெழ முடியும். அவரை உயிர்த்தெழ வைப்பது வாசகர்களின் முதல் கடமை.


 பெருமாள் முருகனை உயிர்த்தெழ வைப்போமா ....?





*


13 comments:

yathavan64@gmail.com said...

தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

துளசி கோபால் said...

ரொம்பவே மன வருத்தமான நிகழ்வு :(

பேச்சு , எழுத்து சுதந்திரமுள்ள ஜனநாயக நாடுன்னு சொல்றாங்களே.... அப்படின்னா என்ன?

வேகநரி said...

நன்றாக சொல்லியுள்ளீர்கள். படைப்புகள் மட்டுமல்ல, இனம், சாதி, மதங்களின் பெயரால் திரைபடங்களை திரையிடாம தடை செய்யும் போக்கும் கட்டாயம் மாறியாக வேண்டும்.

ப.கந்தசாமி said...

வைப்போம்.

கரந்தை ஜெயக்குமார் said...

பெருமாள் முருகனின் கதையினைப் படித்தேன் ஐயா
கதையில் எனக்கு உடன்பாடில்லை
ஆனாலும் எழுத்தாளரின் முடிவு தவறானது என்பதே என் கருத்து

எம்.ஞானசேகரன் said...

ஆம் எதையாவது செய்யவேண்டும். இல்லையென்றால் யாருமே எதையுமே சுதந்தரமாக எழுத முடியாது.

Seshadri said...

Dear

in General who is committing suicide

1. Who did a mistake and feel shame on his part and fear to face the society again and making dismissing them self


or

2. they felt the current society is not capable of allow him to survive / living comfort. they are changing the shirt by touching the reset button.


in this case no. 1 is the choice for P. Murugan. and he felt shame on his thought how it hurt the others. so he is deserve to his action.

if he is having confident on him "i can write which you are all accept it again". but is he will ?????


and one more i noticed , if brahmins are critised (even you take janakiraman in amma vanthal , marapasu about women teasing but it is called master pieces of him, even though it is deeply wounding / questioning women character), they are not reacting and crossing the bridge by ignore, but others are not like that.

it may be the nature of sahtriya. it should be like that

Seshan / Dubai

arul said...

ayya permal muruganin book online:

https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf
Naanum innum padikkavillai ayya

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எழுத்தாளர் பெருமாள் முருகன் உயிர்த்தெழ காத்திருப்போம். வரலாறு படைக்கும் ஒருவரை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து எடுக்க முயற்சிக்கும் இவ்வாறான நடப்புகள் அரங்கேறுவது தடுக்கப்படவேண்டும். பயனுள்ள பகிர்வு. நன்றி.

தருமி said...

arul
thanks for the link; read it. lovely novel having all the ingredients of the soil, culture, and life, great ...........

சார்லஸ் said...

சார்

சமீபத்துத் திரைப்படமான பி. கே படம் சில மத வெறியர்களால் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டு தடை செய்ய வேண்டுமெனவும் சில வார்த்தைகள் நீக்க வேண்டுமெனவும் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிபதி விசாரித்து ' மத துவேச கருத்துக்கள் இருந்து மக்கள் அதை வெறுத்திருந்தால் படம் படுத்திருந்திருக்கும் . ஆனால் 500 கோடிக்கும் மேல் சம்பாதித்துக் கொடுக்கக் காரணம் அது மக்களின் தீர்ப்பு . படத்தில் எதையும் மாற்றத் தேவையில்லை ' என தீர்ப்பு வழங்கியிருக்கிறார். மக்கள் நினைத்தால் கடவுளின் தீர்ப்பையே மாற்ற முடியும் . பெருமாளுக்கே இந்த கதியா!?

இராய செல்லப்பா said...

உள்ளூர் மக்கள் ஏன் எழுத்தாளருக்கு ஆதரவாகப் பொங்கி எழவில்லை? குறிப்பாக மாணவர்கள்?

தருமி said...

பொங்கி எழுவதா ... நம்ம ஊர் மக்களா...? நல்ல வேடிக்கை.

மாணவர்கள் எப்போதோ “புத்திசாலி” ஆகி விட்டார்கள். அவர்கள் ரத்தத்தில் இருந்த ‘சிகப்பை’ யாரோ திருடி விட்டதாக எங்கள் கல்லூரிப் பிரச்சனையில் புரிந்து கொண்டேன் - http://americancoll.blogspot.in/search/label/MUST%20READ

Post a Comment