Saturday, June 27, 2015

846. ஒரு வாத்தியானின் கோபமும், சாபமும்







*




முத்துலட்சுமி என்றொரு மாணவி. தலித். 10ம் வகுப்பு மாணவி. காது கேட்கும் கருவி வைத்திருந்தாள். தண்ணீர் பட்டு கெட்டு விட்டது. வகுப்பில் ஆசிரியை பேசியது சரியாகக் கேட்கவில்லை. இதற்காக பள்ளி அவளை வெளியே அனுப்பி விட்டது.  நல்ல பள்ளிக்கூடம் ... நல்ல ஆசிரியர்கள் ...

மாற்று உதவிகளுக்காக அவள் அரசிடம் போனாள். செய்தித் தாளில் வந்த இந்த செய்தியைப் படித்த Chief Educational Officer ஜெயக்கண்ணு அதே பள்ளியில் மீண்டும் அவளை சேர்த்திருக்கிறார். அரை மனதோடு அந்தப் பள்ளிக்குத் திரும்ப சென்றிருக்கிறாள் முத்துலட்சுமி. இவருக்கு உதவ நினைப்பவர்கள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பி. கனகராணி - 9486559888 - என்பவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று தினசரியில் வந்துள்ளது.

இதில் எனக்குப் புரியாத ஒரே ஒரு விஷயம். இப்பெண்ணுக்குள்ள பிரச்சனை ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. அவளுடைய அப்போதைய தேவை ஒரு hearing aid. அப்பெண்ணின் ஆசிரியைக்கு இது தெரிந்திருக்காதா? இப்போது அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டுமானால் என்று தலைமை ஆசிரியை எண் கொடுத்திருக்கிறார்கள். அந்தத் தலைமை ஆசிரியைக்குத் தெரியாமல் போயிருக்குமா? தனிப்பட்ட ஒரு ஆசிரியர் கூட வேண்டாம். நான்கு, ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து அந்த பாவப்பட்ட பிள்ளைக்கு உதவ ஏன் அவர்களுக்கு மனம் வரவில்லை. அந்த அளவிற்கு -நல்ல சம்பளம் இப்போது வாங்கும் - ஆசிரியைகளுக்கு வரவில்லை என்றால் இவர்கள் என்னதை சொல்லிக் கொடுத்து கிழித்து விடுவார்கள் என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இது ஒரு அரசுப் பள்ளி. ரிசல்ட் நூறு விழுக்காடு வராவிட்டால் தனியார் பள்ளிகளில் போல் இங்கே யார் கழுத்தையும் வெட்ட மாட்டார்கள். ஆனால் ஆசிரிய “சேவை’ செய்யும் ஆசிரியைகளும், தலைமை ஆசிரியையும் அந்தப் பெண்ணுக்கு அளித்த முதல் “உதவி” - அவளை பள்ளியிலிருந்து வெளியே அனுப்பியது.

இதே போல் முன்பு ஒரு செய்தி வந்தது. ஒரு பையனுக்கு வெண்குஷ்டம் என்று தவறாக தமிழில் ஒரு பெயர் வைத்துத் தொலைத்து விட்டார்களே அந்த leucoderma. அதனால் அவனைப் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பினார்கள். படித்த மேதாவிகளான அந்தப் பள்ளி ஆசிரியப் “பெருமக்களுக்கு” இது ஒரு வியாதி அல்ல; பரவவும் செய்யாது என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவ்வளவு பெரிய முட்டாள்களா என்ற ஆச்சரியம் எனக்கு.

அந்த தலைமை ஆசிரியைக்கு உடனே ஒரு sms அனுப்ப முயற்சித்தேன். என்ன எழவோ.... அது போகவில்லை. அந்த sms:

Madam
I am a retired teacher.
Through you i want to talk to the teachers of Muthulakshmi, the expelled student.
Wonder how come all of them were so inhuman & heartless. Had i been in their shoes with the help from some more teachers i would have got a new hearing aid.
If teachers dont show this much humanness they are not only bad teachers - they are worthless dirty and lousy creatures or even less than that.
I request you to pass this sms to those (in)human beings.
So sad about the teaching community.
thanks



மாணவர்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத இது போன்ற ஜென்மங்கள் ஆசிரியர்களானால் ... இவர்கள் எதைக் கற்றுக் கொடுத்து கிழித்து விடுவார்கள். இவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு எப்படி இவர்களின் மீது என்ன மரியாதை இருக்கும். இது போன்ற ஆசிரியர்களை நினைத்துப் பார்த்தாலே வயிறு எரிகிறது.

தாகத்துக்கு தண்ணி தராத கழிசடைகள்.
இந்த லட்சணத்தில் ஆசிரியத் தொழில் பெரிய உயர்ந்த தொழிலாம் ...

மனதில் தோன்றும் ஒரே எண்ணம்:

Chief Educational Officer ஜெயக்கண்ணு - உங்களுக்கு ஒரு வார்த்தை. நீங்க பிள்ளை குட்டியோடு நல்லா இருக்கணும். உங்கள் நல்ல மனதிற்கு என் நன்றியும் பாராட்டும்.

ஆனால், இது போன்ற ஆசிரியர்கள் எல்லோரும் பிள்ளை குட்டியோடு நல்லா இருப்பாங்களா.....?



*




12 comments:

Mahesh said...

வசதி இல்லாத குழந்தைகள்தான் அரசு பள்ளிக்கூடம் செல்கிரார்கள்.
அங்கு இது போன்ற சம்பவங்கள் நடப்பது
வருத்தமான விஷயம் சார்.
சம்பளம் (பணம்தான்) அவர்கள் நோக்கம்.

உண்மையான, முழுமையான, மகிழ்ச்சியைத் தருவது
கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கைகொடுப்பது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தாங்கள் கோபமும் சாபமும் நியாயமானதே!ஆசிரியர்கள் நினைத்தால் செய்யலாம் . பல ஆசிரியர்கள் நமக்கென்ன என்று இருக்கத்தான் செய்கிறார்கள்.
நான் பார்வை மற்றும் ஆய்வு செய்யும் சில பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு புகைப்படம் கொடுக்கவில்லை என்ற காரணத்தை சொல்லி இலவச பேருந்து பயண சீட்டுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தனர்."பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க 50 ரூபாய் செலவழிக்கும் நிலையில் இருப்பவன் நம் பள்ளிக்கு வருவதில்லை. மொத்தமாக எடுத்தால் ஒரு மாணவனுக்கு 10 ரூபாய் கூட செலவாகாது. அதை நீங்கள் ஏன் செய்யக் கூடாது?" என்று என்று தலைமை ஆசிரியர் கூட்டத்தில் நான் கடுமையாக கடிந்து கொண்டபின் இப்போது அதனை செய்து வருகிறார்கள்.

அரசு பள்ளிகளிலும் 80 % குறைந்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. தேர்ச்சியை அதிகரிக்க தேர்ச்சி பெறமாட்டார்கள் என்று கருதுபவர்களை சாமார்த்தியமாக வெளியே அனுப்ப வாய்மொழி உத்தரவிடப் படுவது பலருக்கு தெரியாது. சேர்க்கைக்கு உத்தரவிட அதிகாரமுள்ள அதிகாரிகள்தான் ரகசிய உத்தரவும் பிறப்பிக்கிறார்கள் . பிரச்சனை பொது வெளிக்கு வந்து விட்டால் இது போன்ற நடவடிக்கைகள் எடுத்து நல்ல பெயர் எடுத்துக் கொள்ளும் சாமர்த்தியம் நம் உயர் அதிகாரிகளைப் போல் வேறு யாருக்கும் கிடையாது. தவறு நடந்தால் கீழ் அலுவலர்களை பொறுப்பாக்கிவிட்டு தப்பித்துக் கொள்வார்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆசிரியர்களின் செயல் வருத்தத்திற்கு உரியது ஐயா

தருமி said...

//ஆசிரியர்களின் செயல் வருத்தத்திற்கு உரியது//

கண்டனத்துக்கு உரியது, ஐயா.

”தளிர் சுரேஷ்” said...

காது கேட்கவில்லை என்று எல்லாம் பள்ளியை விட்டு விலக்குவது அநியாயமான ஒன்று. அந்த ஆசிரியர்களுக்கு கண்டனங்கள்! சி.இ.ஒ அவர்களுக்கு பாராட்டுக்கள்! பகிர்வுக்கு நன்றி!

வேகநரி said...

ஆசிரியர்களை கடவுள் ரேஞ்சுக்கு போற்றும் ஊரில் தான் இது போன்ற ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இந்த செய்தியை நாளிதழ்களில் படித்தேன். மறுபடியும் அவரை பள்ளியில் சேர்க்க முயற்சி எடுத்து சேர்த்த தலைமைக்கல்வி அலுவலர்ப் பெருமகனார் மனித நேயமுள்ளவர் என்பதை நன்கு உணரமுடிகிறது.

சார்லஸ் said...

தற்போது சிலர் ஆசிரியர் பணி செய்வதில்லை. 'சம்பள' த்திற்கு ஆசிரியர் வேலைதான் செய்கிறார்கள். கருணையும் காருண்யமும் அவர்களிடம் எதிர்பார்ப்பது நமது தவறோ என எண்ணத் தோன்றுகிறது.

தமிழன்பு said...

அரசுப் பள்ளியாகட்டும் தனியார் பள்ளியாகட்டும்,கல்லூரியாகட்டும் ஒன்று இரண்டு ஆசிரியர்கள் தான் ஆசிரியர் வேலையை விரும்பி ஏற்று வந்தவர்கள் பலர் மற்ற வேலை கிடைக்காமல் ஆசிரியர் வேலை பார்க்கின்றனர் மேலும் அவர்கள் தானும் ஒரு மாணவனாக இருந்து வந்தவர்கள் என்பதை மறந்துவிடுகின்றனர் அவர்கள் பார்வையில் அனைவரும் மாணவர்கள் இன்றைய ஆசிரியர்கள்
அவர்களுடைய சூழல் ,ஆரோக்கியம் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை.இப்போது இருக்கும் ஆசிரியர்கள்
மாணவர்கள் எனும் இயந்திரத்தை மார்க் எடுக்க வைக்க வைக்கும் மேனேஜர் .இயந்திரத்தைக் கூட பராமரிக்கின்றனர் மாணவர்களை!

Dr.Radha krishnan says " teacher teaches,good teacher narrates,better teacher explains,excellent teacher motivates".

But today there is one of the thousand teachers motivates,five of the thousand teachers explains, fifty of the thousand teacher narrates,100 of the thousand teacher teaches,remaining teacher either giving pattern and important questions or hurting the students.

in those days ther is no worst or bad teachers so Dr.Radha krishnan didn't add how bad and worst teacher is
but now we need words for bad teacher and worst teacher.

in today's view excellent teacher treat student with empathy ,good teacher treat student with sympathy,bad teacher treat student like slaves, worst teachers always hurts specially challenged,mentally disabled children .


எனது கவிதை இன்றைய ஆசிரியர்கள் கல்வியைப் பற்றி
http://eluthu.com/kavithai/249231.html

Thulasidharan V Thillaiakathu said...

தனிப்பட்ட ஒரு ஆசிரியர் கூட வேண்டாம். நான்கு, ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து அந்த பாவப்பட்ட பிள்ளைக்கு உதவ ஏன் அவர்களுக்கு மனம் வரவில்லை. அந்த அளவிற்கு -நல்ல சம்பளம் இப்போது வாங்கும் - ஆசிரியைகளுக்கு வரவில்லை என்றால் இவர்கள் என்னதை சொல்லிக் கொடுத்து கிழித்து விடுவார்கள் என்று தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இது ஒரு அரசுப் பள்ளி. /

ஐயா! இது மிகவும் அசிங்கமான, மனிதாபிமானமற்ற அதுவும் இந்த உலகின் நோபிள் சேவை என்று சொல்லக் கூடிய ஆசிரிய உலகில் நடக்கிறது என்பது கண்டனத்திற்கு உரியது....காது கேட்கவில்லை என்பதால் பள்ளியிலிருந்து நீக்கம்...எந்தப் பள்ளியுமே இதைச் செய்யக் கூடாது அப்படி இருக்க அரசுப் பள்ளியில் இருந்து...கல்விக் கண் நன்றாகத் திறக்கப்படுகிறது!!

அந்த தலைமைக் கல்வியாளரின் செயல் பாராட்டத்தக்கதுதான் என்றாலும் அவருமே அந்த மாணவிக்கு ஹியரின் எய்ட் வாங்கிக் கொடுக்க முயன்றிருக்கலாம் பள்ளி தலைமை ஆசிரியருடன் பேசி....

தங்கள் கோபம் மிகவும் நியாயமானது ஐயா!

MatureDurai said...

“If teachers don’t show this much humanness they are not only good teachers - they are worthless dirty and lousy creatures or even less than that.”

May I point out a typo here?

Should it not read as follows?

“If teachers don’t show this much humanness they are not only bad teachers- they are worthless dirty and lousy creatures or even less than that.”
No offence meant: just saying.

தருமி said...

MatureDurai
made the correction. thanks a lot.

Post a Comment