Saturday, March 12, 2016

891. VERY GOOD DHARUMI... FOR YOUR PROPHECY!







*
ஒன்பது வருடத்திற்கு முன்பு எழுதிய​ பதிவின் மறுபதிவு

Friday, February 23, 2007

202. பஸ் எரித்த பகத்சிங்குகள் - 2.

போலியோ டயட் புகழ் $செல்வனின் பஸ் எரித்த பகத்சிங்குகள் வாசித்ததும் அவரது 'தவறான' கண்ணோட்டம் பார்த்தேன். அவரைப் போல் இந்த வழக்கு முடிந்து மூவருக்கு தூக்குத் தண்டனை என்றதும் நம் பதிவர்களில் பலருக்கு ரொம்ப சந்தோஷம். அந்த மூன்று பேருக்கு தூக்குத்தண்டனை என்றதும், 'ஆஹா! சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது' என்று சந்தோஷப்பட்டோர்களையும், செல்வனையும் பார்த்து 'அடப் பாவி மக்கா, இப்படி பச்சைப் புள்ளைகளா இருக்கீங்களேன்னு' அவங்களைப் பார்த்து எனக்குத் தோணிச்சி.


ஏன்னா, நான் இப்போ சமீபத்தில தான் வெண்மணியைப் பற்றிய குறும் படம் "ராமையாவின் குடிசை"யைப் பார்த்து வயிறெரிந்திருந்தேன். எனக்கு என்ன நினைப்பு வந்ததென்றால், இன்னும் பதினைந்து இருவது வருஷம் கழிச்சி ஒரு செய்திப் படமோ, குறும்படமோ எடுக்கப் படலாம். 'தர்மபுரி பஸ் எரிப்பு - நடந்தது என்ன?' என்ற தலைப்பிலோ, பார்ட்னர் செல்வன் சொன்னது போல் 'பஸ் எரித்த பகத்சிங்குகள்' என்றோ தலைப்பு இருக்கலாம். அதில வயசாயிப் போனாலும், முறுக்கு விடாத 3 ஆட்கள் அவங்க அரண்மனை மாதிரி வீட்ல உக்காந்து கிட்டு படம் எடுக்கிறவரிடம் ஒரு நேர்காணல் கொடுத்திட்டு இருப்பங்களாயிருக்கும்.

இன்னும் இந்த கால இடைவெளிக்குள் ஒரே ஒருதடவை 'ஜெ' ஆட்சி வந்திருந்தாலும் போதும்; பெயர் தெரியாத இந்த மூன்று பேருமே பதினைந்து வருஷத்தில் பெரிய 'பிஸ்தா' ஆயிருப்பார்கள். ஏன்னா, ஜெ இவர்களின் 'விசுவாசத்தை' மெச்சி இவர்களுக்கு அமைச்சர் பதவி, இல்ல at least வட்ட, மாவட்ட தலைவர்களாக ஆக்கி விட்டுருப்பார். அது போதாதா? அப்போ ரொம்ப தெனாவட்டாகவே அவர்களின் பேச்சு அந்த குறும்படத்தில் இருக்கும். எப்படி தாங்கள் தங்கள் தங்கத் தலைவியிடம் விசுவாசத்தோடு இருந்தார்கள் என்பதைப் பற்றி விலாவாரியாகவும், இந்தக் கல்லூரி மாணவர்கள் கொஞ்சம் கூட வருத்தமில்லாமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்ததாலேயே தங்களுக்கு மிகவும் வருத்தம் வந்ததாகவும், அதனால் அந்த வருத்தத்தில்தான் பஸ்ஸுக்குத் தீவைத்தோம்; அதில் என்ன தவறு? என்றும் பேட்டியளிப்பார்கள்

ஆகவே மக்களே 'சட்டம் தன் கடமையைச் செய்து விட்டது என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்காதீங்க... ஏனென்றால், எப்போதுமே தெரியுமே நம்ம ஊர்ல என்ன நடக்கும்னு. இன்னும்இந்த தீர்ப்போடு எல்லாம் முடியவில்லை. இனி இந்த 'பகத்சிங்குகள்' மேல் முறையீடு செய்வார்கள். சட்டம் அடிக்கடி சட்டையை மாத்த வேண்டியதிருக்கும். இந்த கேஸ் விஷயத்தில் - ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற கருத்தினாலும், இது rarest of rare case என்று கொள்ள முடியாததாலும் நம் நீதியரசர்கள் இந்தக் கேஸை ஒட்டுமொத்தமாக மேல் முறையீட்டில் தள்ளிவிடும் வாய்ப்பு நிறையவே உள்ளது.


அப்படியெல்லாம் நடந்து விடாது என்று சொல்லி விடாதீர்கள். வெண்மணி வெண்மணின்னு ஒரு பயங்கர சம்பவம் நினைவில் இருக்கிறதா? மூணு பேர் இல்லை முப்பது பேர். என்ன ஆச்சு அந்தக் கேஸ்? இப்பவும் அதில் சம்பந்தப் பட்டவர்கள் அந்த நிகழ்வை மய்யமாக வைத்து எடுத்த செய்திப் படத்திற்கு கம்பீரமாக உட்கார்ந்து நேர்காணல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் முதல் பாதியை மட்டுமாவது நம் நீதி மன்றங்கள் முழுமையாகக் கடைப் பிடித்து வருகின்றன என்பது நமக்குத் தெரியாதா என்ன? சில பல ஆண்டுகள் நடந்து -அதற்குள் தண்டிக்கப் பட வேண்டியவர்களின் ஆயுட்காலமே கூட முடிஞ்சிரலாம் - அதன் பின் தண்டனை வெகுவாகக் குறைக்கப் பட்டு, சில ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பிடப்பட்டு, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக 'பாவம், இந்த மூன்று குழந்தைகளும்ஏற்கெனவே சில காலம் சிறையில் இருந்து விட்டதால் அவர்கள் தண்டனை முடிந்ததாக'க் கருதப் படுகிறது; ஆதலால் அவர்களுக்குத் தண்டனை ஏதும் இல்லை எனவும் மேல் கோர்ட் முடிவு செய்துவிடலாம்.

அன்னைகளும், அய்யாக்களும் அப்சலின் தூக்குத்தண்டனை பற்றி பக்கம் பக்கமாக எழுதியவர்கள், பேசியவர்கள் இந்த தூக்குத் தண்டனை பற்றிய கருத்து ஏதும் சொல்லாமல் இருக்கிறார்களே என்று செல்வன் கேட்கிறார். எப்படியும் அவர்கள் விடுதலையாகி வரப் போகிறார்களே என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால் அன்னைகளும், அய்யாக்களும் ஏதும் எழுதாமலோ, பேசாமலோ இருக்கலாமல்லவா ..?

========================================

இன்னொரு விஷயத்தில் எனக்குத் தெளிவில்லை; தெரிந்தவர்கள் பதில் கூறினால் நன்றாக இருக்கும்.

 இந்த வழக்கின் ஆரம்பமே ப்ள்சண்ட் டே ஹோட்டல் விதி முறைகளை மீறி இரண்டு அடுக்கு மாடிகள் கட்டப்பட்டு விட்டன; அதனால் ஜெ ஒரு குற்றவாளி என்பதோடு, இரண்டு மாடிகளில் ஒன்றை இடித்து விட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து வேடிக்கையான ஒரு வழக்கு குற்றவாளிகள் பக்கத்திலிருந்து போடப்பட்டதாம். எந்த மாடியை இடிக்க வேண்டுமென்று அந்த நீதி மன்றம் குறிக்காததால், அது எந்த மாடியை இடிக்கவேண்டுமெனக் கேட்டு இன்னொரு வழக்கு போடப்பட்டதாக அறிந்தேன். (நான் நீதிபதியாக இருந்திருந்தால் ரொம்ப சிம்பிள் தீர்ப்பு கொடுத்திருப்பேன்; கீழ்த்தளத்தை மட்டும் இடித்தால் போதும் என்று! திமிர்த்தனமாக வழக்குப் போட்டால், நீதிபதிக்குக் கோபம் வரவேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு.) அப்படி போடப்பட்ட வழக்கு பின் என்னாயிற்று? விதிமீறலோடு கட்டப்பட்ட இரண்டு தளங்களோடுதான் இன்னும் இருக்கிறது என்று கேள்விப் படுகிறேன். அப்படியானால், அந்த வழக்கு, தீர்ப்பை நிறைவேற்றாததால் நடந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு, இதை இன்னும் கண்டு கொள்ளாத அடுத்த கட்சியின் அரசு, அப்படி கண்டு கொள்ளாமைக்குரிய காரணங்கள் - இவைகள் எல்லாம் என் போன்ற சாதாரண குடிமகனுக்குப் புரியவே இல்லையே!


*



10 comments:

ப.கந்தசாமி said...

சாதாரண குடிமகன்களுக்கு இது எல்லாம் எப்படிப் புரியும்?

தருமி said...

தருமபுரியில் இப்படி மூன்று மாணவிகளை எரித்துக் கொன்ற போதும் அடுத்தத் தேர்தலில் அங்கே அ.தி.மு.க. தான் வெற்றி பெற்றது. உங்கள் பின்னூட்டம் அதைத் தான் சொல்கிறது.

சார்லஸ் said...

உண்மைதான். ஆயிரம் அநீதிகள் இழைக்கப்பட்டாலும் இன்னும் அந்தக் கட்சிக்கு அதிக ஓட்டு சதவீதம் இருப்பதாக ஊடகங்கள் ஒரு மாயையை மக்களிடத்தில் தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. விஜயகாந்துக்கு குறைந்து போய்விட்டதாம். அவங்களுக்கு அப்படியே இருக்காம். கேட்பார் கேனயன் என்றால்....!

சார்லஸ் said...

என்ன சார் ரொம்ப நாளாக உங்களைக் காணவில்லையே!? வேலைப்பளுவா?

தருமி said...

இல்லை... முழுச் சோம்பேறித்தனம் .....

வேகநரி said...

//இந்த மூன்று குழந்தைகளும்ஏற்கெனவே சில காலம் சிறையில் இருந்து விட்டதால் அவர்கள் தண்டனை முடிந்ததாக'க் கருதப் படுகிறது; ஆதலால் அவர்களுக்குத் தண்டனை ஏதும் இல்லை எனவும் மேல் கோர்ட் முடிவு செய்துவிடலாம்.//

இப்படியும் கொடுமை நடக்கலாம், மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்.

சார்லஸ் said...

தருமி அவர்களுக்கு கேள்வி கேட்கும் நேரம் 19 ந்தேதிக்குப் பிறகு வந்து விட்டது என நினைக்கிறேன் . தங்களின் அமைதிக்குக் காரணம் என்னவோ !?

தருமி said...

வந்துட்டேன் … வந்துட்டேன்…….

வேகநரி said...

வாங்கோ. நாளை மறுநாள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள போகும் உற்சாகம் தெரிகிறது!

தருமி said...

ஆமா …போங்க … ஒரே உற்சாகம் தான். கொளுத்திப் போடுறீங்களே…

Post a Comment