Sunday, November 13, 2016

915. அசோகர் -- "குங்குமம்" இதழில் ஒரு அறிமுகம்





*
18.11.16
குங்குமம் ஜங்ஷன்
புத்தகம் அறிமுகம்
பேரரசன் அசோகன்

சார்லஸ் ஆலன் / தமிழில்: தருமி
(எதிர் வெளியீடு, 96 நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002. விலை ரூ. 400.
தொடர்புக்கு; 98650 05084)


“சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்” என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அததகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.

அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவரது மனச்சித்திரங்களாகக் காணக்கிடைப்பது ஆச்சரியமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்து போகிற அளவுக்குப் பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவு கூரத்தக்கது. வரலாற்றைப் புறக்கணித்து விட்டு நாம் வந்துவிட இயலாது. மக்களின் மகிழ்ச்சி, அவர்களின் வாழ்க்கைத் தரம் என அவர் எப்போதும் கவனம் செலுத்தி வந்திருப்பது அழகு, சிறப்பு. வாசகனைச் சென்றடைய வேண்டிய முயற்சிகளை சார்லஸ் ஆலன் திறம்பட உழைத்து அமைத்திருக்கிறார்.


மொழியாக்கத்தில் தருமியின் செயல்பாடு மனதுக்கு நெருக்கமானது. முன்னோர்களை அறிய முயல்வது நம்மை அறிவது போன்றதே.








***

இவ்வார குங்குமத்தில் வந்த அறிமுகம்.

மகிழ்ச்சிக்குரிய ஒன்றை இந்த அறிமுகத்தில் பார்த்து  மகிழ்ச்சி அடைந்தேன். அசோகர் நூலை வாசிக்கும் போதே நான் ஆச்சரியப்பட்ட செய்தி அது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே இன்றும் நம்முடன் இருக்கவேண்டிய சமய நல்லிணக்கமும் மதத் தீவிரவாதத்திற்கு எதிரான கருத்துகளும் அன்றே அவரது மனதில் தோன்றி அதனைக் கல்வெட்டுகளில் அடித்து வைத்த அந்த மாமன்னனின் தீர்க்கப்பார்வை இன்னும் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. 

சார்லஸ் ஆலனின் முழுமையான அர்ப்பணிப்பும் என்னை ஆச்சரியப்பட வைத்த இன்னெரு விஷயம்.

இவை இரண்டையும் இந்த அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.  

நன்றி



அசோகரின் மலைக் கல்வெட்டுகள்

எல்லோரும் என் குழந்தைகளே...  என் குழந்தைகளுக்கு நான் என்ன விரும்புகிறேனோ அவர்களின் நலமும் மகிழ்ச்சியும் இந்த உலகத்தில் மட்டுமல்லாது மறு வாழ்விலும் வேண்டியது போல் எல்லோருக்கும் அவை கிடைக்க வேண்டுமென்று  ஆசைப்படுகிறேன்.  எனது இந்த ஆசை எவ்வளவு பெரியதென்று உங்களுக்குத் தெரியாது.


***


எல்லா சமயங்களின் கருத்துகளும் நன்கு வளர வேண்டும். 

... தன் சமயத்தைத் தானே  புகழ்வதும், ஏனைய சமயங்களைக் காரணமின்றி குறைகூறுவதும் தவறு. 

....  யாரெல்லாம் தங்கள் மதத்தின்மீது கொண்ட தீவிரமான பற்றில் அதனைப் போற்றி ஏனைய மதங்களைக் குறை சொல்கிறார்களோ அவர்கள் உண்மையில் தன் மதத்தை தாங்களே தாழ்த்திவிடுகிறார்கள்.  

ஆகவே சமயங்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வது மிக நல்லது. ஒவ்வொருவரும் அடுத்த மதங்களில் சொல்லப்படும் கொள்கைகளைக் கட்டாயம் கேட்கவேண்டும். 


****


9 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள்.

Unknown said...

கடின உழைப்பின் பலனாக வெளிக்கொணர்ந்த 'அசோகர்' புத்தகத்திர்க்குக் கிடைத்த அறிமுகம் அருமை. அசோகர் பரந்தமனமும் பண்பட்ட குணமும் உள்ளவர் என்பதை அவர் கல்வெட்டுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இன்றைய மத தீவிரவாதிகள் இப்புத்தகத்தைப் படிக்கவேண்டும். வாழ்த்துக்கள்.

சார்லஸ் said...

சார்லஸ் ஆலன் அவர்கள் எழுதியிருந்தாலும் வாசகர்களின் மனதுக்கு நெருக்கமாக கொண்டு செல்வது உங்களின் மொழியாக்கம் என்று பாராட்டப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் இது போன்ற எத்தனை புத்தகங்கள் மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்?

தருமி said...

சார்லஸ்
முதல் நூல் ஒரு நவீனம் - நைஜீரியக் கதை - அமினா
இரண்டாம் நூல் - வரலாறு - அசோகர்
மூன்றம் நூல் - "என் முதல் குழ்ந்தை" - மதங்களும் சில விவாதங்களும்
நான்காவது இன்னொரு நவீனம் - ஜனவரியில் எதிர்பார்க்கிறேன்.
ஐந்தாவது - இரண்டாவது குழந்தை - மதங்களைப் பற்றிய நூல் - விரைவில் வரும்

தருமி said...

ஒரு ரஷ்ய குறும் புதினமும், ஒரு கட்டுரையும் தயார் நிலையில் ....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களது நூல் பட்டியலைப் பார்த்து வியந்தேன். குங்குமத்தில் அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

சார்லஸ் said...

ஆசிரிய பணியல்லாமல் முழு நேர எழுத்தாளராக மாறியிருந்தால் எப்போதோ சிகரம் தொட்டிருப்பீர்கள். பல காலமாக இந்தத் தமிழுலகம் உங்களை இழந்திருக்கிறது. அடுத்தடுத்த படைப்புகளுக்கு வாழ்த்துகள் .

வேகநரி said...

உங்க செயல்பாடுகளையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.
அசோகரின் மலைக் கல்வெட்டுகள்-
யாரெல்லாம் தங்கள் மதத்தின்மீது கொண்ட தீவிரமான பற்றில் அதனைப் போற்றி ஏனைய மதங்களைக் குறை சொல்கிறார்களோ அவர்கள் உண்மையில் தன் மதத்தை தாங்களே தாழ்த்திவிடுகிறார்கள்.
அசோர் மிகவும் அழகாக சொன்னார்.இது எனது கடவுளே உலகத்தில் ஒரே ஒரு one கடவுள் என்கின்ற மத வெவெறி கொண்டவர்களுக்கு.

Senthil kumar Annamalai said...

ஐயா, பேரரசன் அசோகன் இப்போது தான் படித்து முடித்தேன், இந்திய வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் ஒவ்வொருவரும் படித்தறிய வேண்டிய ஆவனம் இந்த புத்தகம்... நன்றி தங்களுக்கும், சார்லஸ் ஆலனுக்கும்...

Post a Comment