Monday, December 04, 2017

957. BIBLE STUDY - பழைய ஏற்பாடு .... 5






*
பழைய ஏற்பாடு

1. தொடக்க நூல்


இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை மனித இனத்தின் தோற்றத்துடன் இணைத்துக் காட்டுகின்றது. – எல்லா மதங்களுமே அம்மதங்கள் தோன்றிய ஒரு குறிப்பிட்ட இடத்தையும், அதன் சாதி சனத்தையும் தான் மய்யப் புள்ளியாக வைத்து கற்பனையின் அடிப்படைகளில் எழுதப்பட்டவை என்ற என் விவாதத்திற்கு உரம் சேர்க்கிறது மேற் சொன்ன வரிகள்: ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறே இங்கு ஒரு மதமாக உருவெடுக்கிறது..

கடவுள் மனைதன் மேல் தொடர்ந்து கனிவு காட்டுகிறார் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது.  இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் இவை; ஆனால் வாசித்துப் பார்த்தால் நோவாவை மட்டும் விட்டு விட்டு மற்ற உயிரனங்கள் அனைத்தையும் தண்ணீரால் இந்தக் கடவுள் அழித்தொழித்ததையும், பின்பு இது போல் இனி செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு அதன் பின் நெருப்பால் சோதோம், கொமோராவினை அழிக்கிறார். தான் கொடுத்த உறுதிமொழியைக் கடவுள் இப்படியாக முறியடிக்கிறார் நியாயாவதியான கடவுள்! இந்தப் பகுதியில் கடவுளை ஒரு “அழிக்கும்” கடவுளாக மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நூலில் கடவுள் கனிவு காட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது வேடிக்கையாகத்தான் உள்ளது.


கடவுள் ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து, அவர் தம் வழி மரம்பினர் வரலாற்றில் தாமே செயல் பட்டுமீட்புப் பணியைத் தொடர்ந்தாற்றுகிறார் என்று இந்த நூலின் துவக்க உரை கூறுகிறது.


                                             ***



விவிலியத்தில் வரும் சில வசனங்களும், 
என் கேள்விகளும்

1: 16   கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும்,
இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும்
மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.
எனது கேள்வி:  இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பு ..அது என்ன? நிலவையா சொல்கிறார்கள்?ய்

1:30   – பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன் என்றார். அது அவ்வாறே ஆயிற்று.
2:5    --    வயல்வெளியில் எவ்விதச் செடியும்;முளைத்திருக்கவில்லை.

எனது கேள்வி: முதலில் ‘அவ்வாறே ஆனது” ஆனால் இரண்டாம் வசனத்தில் எவ்வித செடியும் முளைத்திருக்கவில்லை.????


நோவா வெள்ளப் பெருக்கின் முடிவில் …

7:23   மண்ணில் உயிர் வாழ்ந்த அனைத்தும் அழிந்தன.  .. நோவாவும் அவருடன் பேழையில் இருந்தவர்களுமே எஞ்சி இருந்தனர்.


நோவா பலி செலுத்திய பிறகு …
8: 20, 21   மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்க மாட்டேன் . … இப்போழுது நான் செய்தது போல் இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன்.


என் கேள்வி:  எல்லாவற்றையும் அழித்தவர் தனது இரண்டாம் யோசனையில்  (on second thoughts) இனி இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று ஒரு சபதமெடுக்கிறார். மனித சிந்தனை போலவே உள்ள ஒரு கற்பனை இது.


9: 11   நோவா வெள்ளப் பெருகிற்குப் பின் …
சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது
.
அப்படியா? உடைக்கப்படுவதற்காகவே உறுதிமொழிகள் மனிதர்களால் மட்டுமல்ல கடவுளாலும் கொடுக்கப்படுகிறது போலும்!


17: 10, 11  உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும். …இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.

எப்படி ஏற்பாட்டில் கூறப்பட்ட ஒரு கட்டளை கிறித்துவத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டது.


19: 5 (சோதோமின் தீச்செயல் என்ற தலைப்பில் வரும் ‘கதை’ மிகவும் விரசமான ஒன்றாக உள்ளது.) லோத்தைக் கூப்பிட்டு, “இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே? நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு அவர்களை எங்களிடம் கொண்டு வா” என்றனர். 

இதற்கு லோத் ஆண் தொடர்பில்லாத தன் இரு புதல்வியரை அதற்குப் பதிலாகத் தயாராக இருக்கிறார். மிக மட்டமான கதை. இந்துப் புராணங்களைப் பார்த்து கிறித்துவர்கள் முகம் சுழிப்பதுண்டு. இக்கதை பற்றி எத்தனை கிறித்துவர்களுக்குத் தெரியுமோ… தெரிந்த கிறித்துவர்கள் இதற்குக் கொடுக்கும் விளக்கம் என்னவோ?!


19: 12-22 சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. என்று 9:11ல் கடவுள் வாக்களித்தார். ஆனால் இங்கு நெருப்பால் சோதோம், கொமோராவினை நெருப்பினால் அழிக்கிறார்.

எதற்காக அழிக்கிறார்… ஏன் அழிக்கிறார் போன்ற கேள்விக:ளைக் கேட்பதே விரையம் தான். இதெல்லாம் கடவுளுக்கு just like that மட்டும் தான் போலும். அதே போல் அவர் அழித்ததைத் திரும்பிப் பார்த்ததால் பாவம் அந்த லோத்தின் மனைவி. உப்புத்தூணாக மாறினாள். எல்லாம் நம் அகல்யா கதை போல் இங்கு இன்னொரு கதை. புராணங்களின் அடி மட்ட அழுக்குகள்!

இதன் பின் வரும் ஆபிரகாமின் கதை அடுத்த ஒரு மிகக் கேவலமான கதை. (முந்திய பதிவில் அதைப் பற்றி எழுதியாகி விட்டது. 20 அதிகாரம்.)


47: 22  அர்ச்சகர்களின் வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான்.


ஊருக்கு ஊர் இதே கதை தான் போலும். அர்ச்சகர்கள் என்றாலே மானியம் தானா?



  *


10 comments:

வேகநரி said...

ஆமென்.

எல்லா மதங்களுமே அம்மதங்கள் தோன்றிய ஒரு குறிப்பிட்ட இடத்தையும், அதன் சாதி சனத்தையும் தான் மய்யப் புள்ளியாக வைத்து கற்பனையின் அடிப்படைகளில் எழுதப்பட்டவை என்பது தர்மி சார் சொன்ன உண்மைகள் மறுக்கபட முடியாதவை.
சில மதங்கள் தான் தோன்றிய இடத்து, தனது இனத்து காலாசாரத்தை, பிற மக்களிடம் திணித்து அவர்களை தன் இனத்தவனாக மாற்றும் கடுமையான முயற்ச்சிகள் செய்தன, செய்கின்றன. தற்போதைய நவீன காலகட்டத்திலேயும் தான் தோன்றிய இனத்து காலாசாரத்தை பிற மக்களிடம் திணிப்பேன் என்கின்ற கொடுமையை, மதநல்லிணக்கம் என்ற பெயரில் ஏற்க முடியாது.
போப்பாண்டவர் மியான்மருக்கு சென்ற போது நடந்த நிகழ்சிகள் செய்திகளை தொலைகாட்சியில் பார்த்தேன். வேறு இன மதமக்கள் அவரை சந்தித்தார்கள்.அவர்களிடம் அந்த மியான்மர்ரை, ஆசிய நாட்டவர்களை காண முடிந்தது.ரோஹிங்கியா இஸ்லாமிய தம்பதிகள் வருகிறர்கள் என்று சொல்லபட்டது.ஆனால் வந்தவர்களோ அரபு தம்பதிகள் போன்றே காட்சியளித்தார்கள். அரபு தம்பதிகளாக வேஷம் போட்ட ரோஹிங்கியா தம்பதி.

G.M Balasubramaniam said...

மதங்களே பலரின் நம்பிக்கைகளில் துளிர்க்கிறது பல செய்திகள் இந்து மதத்துக்கும்பொருந்தும் பிரளயம் என்பது போல்

Unknown said...

கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்,

உங்களுக்கு இருக்கும் இந்த விவிலிய ஆர்வத்தை கண்டு மெச்சுகறேண். அனால் நீங்கள் ஆய்வு செய்கின்றபோது அங்கங்கு நீங்கள் படித்த வசனத்தில் உங்களுக்கு மனதில் எழும் கேள்விகளை விமர்சனங்களாக எழுதுகிறீர்கள். இந்த விமர்சனங்களும், கேள்விகள் அனைத்தும் முதிர்ந்த தெரிவான ஆய்வு முடிவு அள்ள, இவை அனைத்தையும் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எழும் சந்தேகங்கள் பெண்றதே. உங்களுக்கு கேள்விகள் எழுகிறபோது அதை உடனே விமர்சனமாக மாற்ற நீங்கள் காட்டும் அதே வேகத்தை உங்கள் சந்தேகங்களை தெழிவுபடத்திய பின்னர் விமர்சனமாக்க வேண்டும். அதுவே முறையாகும்.

எனவே நீங்கள் விவிலியத்தை விமர்சனம் செய்யும் முன், வேதாகமத்தின் நோக்கம், தன்மை, புத்தகங்களின் தெகுப்பு, பிறிவு, எழுதியவர்கள், எழுதப்பட்ட காலம், சூழல் போண்ற அனைத்தும் உணர்ந்து பின்னர் நீங்கள் தரும் விமர்சனம்தான் சரியானதும், முதிர்ந்து, அங்கிகாரமுள்ளதாய் எடுத்துகெள்ளபடும்.

6 இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார், இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
எரேமியா 18:6

7 பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
எரேமியா 18:7

8 நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
எரேமியா 18:8

9 கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.
எரேமியா 18:9

10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
எரேமியா 18:10

நன்றி...!

Unknown said...

6 இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார், இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
எரேமியா 18:6

7 பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
எரேமியா 18:7

8 நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
எரேமியா 18:8

9 கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.
எரேமியா 18:9

10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
எரேமியா 18:10

தருமி said...

//உங்களுக்கு இருக்கும் இந்த விவிலிய ஆர்வத்தை கண்டு மெச்சுகறேண்.// நன்றி

6-10 வரை எண்களிடப்பட்டுள்ளன. எதற்கு அந்த எண்கள்?

//அனைத்தும் உணர்ந்து பின்னர் நீங்கள் தரும் விமர்சனம்தான் சரியானதும், முதிர்ந்து, அங்கிகாரமுள்ளதாய் எடுத்துகெள்ளபடும்.// ஓ! அப்படியா?

//இவை அனைத்தையும் 8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எழும் சந்தேகங்கள் பெண்றதே.// ... அடப்பாவமே நான் அம்புட்டு சின்ன புள்ளையா? ஆமாம் ... எனக்கு என்னதான் தெரியும்? இல்லையா? இருந்தாலும் ப.ஏ. கதைகள் எல்லாமே 8 வயது குழந்தைகளுக்குக் கூட சந்தேகம் வருவது போலுள்ளது என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றியப்பா!

ஆனால் கேட்ட எந்த கேள்விக்கும் விடையில்லையா?

தருமி said...

நீல வண்ணத்தில் உள்ளவை எல்லாம் என் கேள்விகள் அல்லது நான் காணும் தவறுகள்.
உதாரணமாக .. லோத் கதை. இது வேத நூலில் இருக்கலாமா என்பதே முதல் கேள்வி.

Unknown said...

நான் தங்களைவிட மிக சிறியவன்தான் எனவே நான் கேட்டுக்கும் கேள்விகளால் கோபம் கொல்ல வேண்டாம்.

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் நான் மேலே சுட்டுக்காட்டியுள்ள வசனங்களில் உள்ளது.

தேவன் மிக அன்பு நிறைந்தவரே ஆவார் எனினும் மனிதனின் பாவச் செயல்கள் எல்லைமீறும்போது அவர் நீதியுள்ளவராய் நீதி செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.

மக்கள் மனம் திறுந்தி தங்கள் மீதுள்ள குற்றங்களை உனர்ந்து அவரிடம் மன்னிப்பு கேட்டால் தன் கோபத்தை விட்டு திரும்பி மன்னிக்க அவர் தயவுபெறுத்தவராகவே உள்ளர். இதர்க்கான உதாரணம் யோனா புஸ்தகத்தில் காணலாம்.

//நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.
யோனா 1:2//

என்று தேவன் முதலில் கூறினாலும், பின்னர் அந்த பட்டணத்தின் மக்கள் மனம் திறுந்தி.

//யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம் என்று கூறினான்.
யோனா 3:4

அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள்.
யோனா 3:5

இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தை விட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப் போட்டு, இரட்டை உடுத்திக் கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.
யோனா 3:6

மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமல் இருக்கவும்,
யோனா 3:7

மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
யோனா 3:8

யாருக்குத் தெரியும். நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிரகோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச் சொன்னான்.
யோனா 3:9

அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.
யோனா 3:10//

பின்னும் கர்த்தர் யோனா இறை தூதரிடம் தான் எவ்வளவாய் இந்த மக்களை நேசிக்கிறேன் என்பதை வெளிப்படுத்த இவ்வாறு கூறியுள்ளார் //அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்து போனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே.
யோனா 4:10
வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
யோனா 4:11

மற்றொன்றயும் இந்த சம்பவத்தின் மூலம் நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். தேவன் யோனாவை இஸ்ரேல் கோத்திர மக்களுக்கு அனுப்பி அவர்களுக்காக பரிதபிக்கவில்லை மாறாக இஸ்ரேலுக்கு அன்னியரான பிற மக்களுக்காக பரிதபித்தார். அதேபோல இயேசு இஸ்ரேலருக்காக மட்டும் உலகம் வரவில்லை உலகத்தில் உள்ள எல்லா மக்களும் இரட்சிக்கப்பட வந்தார். உங்களையும் இயேசு நேசிக்கிறார்.

ஆம்..! இயேசு உங்களை நேசிக்கிறார்...!






தருமி said...

இப்பகுதியில் நான் கேட்ட கேள்விகளின் பட்டியல் இது. இதற்கு ஏதும் பதில் சொல்லாமல் வேறு கதைகள் இங்கெதற்கு என்று புரியவில்லை.
1. ஒரு குறிப்பிட்ட மக்களின் வரலாறே இங்கு ஒரு மதமாக உருவெடுக்கிறது..
2. இந்தப் பகுதியில் கடவுளை ஒரு “அழிக்கும்” கடவுளாக மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நூலில் கடவுள் கனிவு காட்டுகிறார் என்று கூறப்பட்டுள்ளது வேடிக்கையாகத்தான் உள்ளது.
3. எல்லாவற்றையும் அழித்தவர் தனது இரண்டாம் யோசனையில் (on second thoughts) இனி இப்படியெல்லாம் செய்ய மாட்டேன் என்று ஒரு சபதமெடுக்கிறார். மனித சிந்தனை போலவே உள்ள ஒரு கற்பனை இது.
4. இதற்கு லோத் ஆண் தொடர்பில்லாத தன் இரு புதல்வியரை அதற்குப் பதிலாகத் தயாராக இருக்கிறார்.எப்படி இப்படிப்பட்ட மிக மட்டமான கதை வேத நூலில் வருகிறது என்று கேட்கிறேன்.
5. விருத்த சேதனம் - எப்படி பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட ஒரு கட்டளை கிறித்துவத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டது.

Unknown said...

உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் நான் மேல கொடுத்துள்ள விளக்கங்களிள் உள்ளது பேருமையுடன் படித்தால் புரியும்...!

தருமி said...

இது எப்படிப்பா?முன்பு இஸ்லாமைப் பற்றிக் கேள்விகள் எழுப்பும்போது அவர்களும் இதே போல் பதில் சொல்லாமல் வேறு ஏதாவது பேசுவார்கள். அதன் பின் “உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதில் நான் மேல கொடுத்துள்ள விளக்கங்களிள் உள்ளது பொறுமையுடன் படித்தால் புரியும்...!” என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள். இன்னொன்றும் சொல்வார்கள் .. குரானை முழுவதும் படித்து விட்டு கேளுங்கள் என்பார்கள். அதே “விளக்கங்களை” தான நீயும் கொடுத்துள்ளாய்.

நான் கேள்விகளையும் பட்டியலிட்ட பிறகும் பதில் சொல்லியாச்சுன்னு ஒரே வார்த்தையில் முடிக்கிற அந்த நேர்மை நல்லா இருக்கு .

இந்த “நேர்மை” எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா.

Post a Comment