*
இன்று நடந்த பெண்கள்
ஒற்றையர் இறுதியாட்டம் பார்க்கும் போது பழைய்ய்ய ஞாபகம் ஒன்று வந்தது.
இன்று முதலாட்டத்தில்
ஜப்பானிய ஓசாகாவின் கை ஓங்கியிருந்தது. வெற்றி பெற்றார். அடுத்த ஆட்டமும் வேகமாக நடந்தது.
இரண்டாவது செட்டில் எதிராளியைத் தோற்கடிக்கும் நிலைக்கு வந்தார். 5:4 என்ற முன்னிலையில் 40:0 என்ற நிலைக்கு வந்தார், மூன்று
செர்வ்கள் இருந்தன. மூன்றில் ஒன்றை ஒழுங்காக விளையாடியிருந்தால் வெற்றி அவருடையதே.
ஆனால் ஒவ்வொரு பாய்ண்ட்டும் கை நழுவிப் போய்க் கொண்டிருந்தது. எதிராளி - விட்டோவா
- இரண்டாம் செட்டைக் கவ்விக் கொண்டு போனார்,
அடுத்த செட் ஆரம்பித்த
போது அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த சபாட்டினி இதே போல் ஒரு ஆட்டத்தில் 6
: 1, அடுத்த ஆட்டத்தில் 5- 1 என்ற நிலையில் செர்வ் செய்ய ஆரம்பித்து பெர்னாண்டஸ் என்ற
எதிராளியிடம் தோல்வியுற்றார். அப்போது ’’till you win the last ball, the game is anybody's என்று தினசரியில் வாசித்த நினைவு. அதே நினைவு மீண்டும் வந்தது. மூன்றாம்
செட்டின் ஆரம்பமும் விட்டோவாவிற்குச் சாதகமாகவே ஆரம்பித்தது.
அவ்வளவு தான்...
ஒசாகா தோற்றுவிடுவார் என்று தோன்றியது. போட்டியையும் தொடர்ந்து பார்க்க முடியாது போனது.
ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் போது போட்டி முடிவு என்ன என்று ஆண்டவரிடம் கேட்டேன்.
கூகுள் ஆண்டவர் ஒசாகா வென்று விட்டதாகச் சொன்னார்.
மகிழ்ச்சி .......
*
No comments:
Post a Comment