Wednesday, February 20, 2019

1033. மதுரை கலைத் திருவிழா .....




*

மதுரைக் கலை விழா .. ஒரு புதிய ஆரம்பம்.
நண்பன் பிரபாகர் வெற்றிகரமாக வழிநடத்தி வரும் “கலைடாஸ்கோ’ அமைப்பின் மூலம் இரு நாட்கள் மதுரை ECO PARKல் அழகாக ஒரு கலைவிழா நடந்தேறியது.
நிச்சயம் மதுரை வாழ் மக்களுக்கு இது ஒரு நல்ல புதிய ஆரம்பம். இது போன்ற அரசின் பொதுவிடங்களில் கலைநிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்தும் வாய்ப்பு நம் மதுரைக் கலைஞர்களுக்குக் கிடைத்தால் ”காய்ந்து கிடக்கும்” பொதுமக்களுக்குத் திகட்டாத கலைப் படைப்புகள் கிடைக்கும்.
புது ஆணையர் மதுரைக்கு வந்துள்ளார், மதுரையிலும் SMART CITY ஆவதில் தீவிரமான மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அரசு நல்லதொரு கண்ணோட்டத்துடன் இது போன்ற அமைப்புகளைப் பொதுவிடங்களில் ஆரம்பித்தால் -- amphi-theatre என்பார்களே... அதைப் போல் ஆரம்பித்தால் - மதுரை மக்களுக்கு அது ஓர் அழகான பரிசாக இருக்கும்.
பெங்களூரில் ஆண்டுக்கொரு முறை ஒரு கலைத் திருவிழா. ஒரு நடைபாதையின் இரு புறமும் ஓவியக்காரர்களுக்கு இடம் கொடுத்து விடுகிறார்கள். படைப்புகள் காட்சிப் பொருளாகின்றன. நல்ல விற்பனையும் நடக்கிறது. அதே போல், நமது மதுரையின் ECO PARK & அதை ஒட்டியுள்ள ‘ட’ வடிவப் பாதையில் கலைக் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பித்
தால்.... மதுரை நிச்சயமாக SMART CITY ஆக மாறிவிடும்.






























2 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

மிகவும் வரவேற்கத்தகுந்த செய்தி! புகைப்படங்கள் செய்திக்கு நன்றி தருமி சார்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கலைத் திருவிழா ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும். விழா நிகழ்வுப் பகிர்வுகள் அருமை.

Post a Comment