Monday, March 08, 2021

1155. இன்றைய “தலைவலி” .......

உழவர் போராட்டத்தில் என்னென்ன கோரிக்கைகள், அவர்கள் போராட்டத்தின் அடிப்படையான காரணம், என்னவாகப் போகிறது இந்த நீண்ட நெடும் போராட்டம், ஏன் சில மாநிலங்கள் மட்டுமே இப்போராட்டத்தில் மிகத் தீவிரமாக உள்ளார்கள் … இது போன்ற பல கேள்விகள் மனதிற்குள் அலைபாய்கின்றன.

சரியான நிலவரம் எனக்குத் தெரியவில்லை என்பது தான் முழு உண்மை.

ஆனால் இன்று (8.3.21) காலை T.O.I. செய்தித் தாளில் உச்ச வளர்ச்சி பெற்ற, நம் கனவு நாடான அமெரிக்காவில் 40 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட நிலச் சீர்திருத்தங்களின் விளைவு இன்று என்னவாக இருக்கிறது என்று நம் நாட்டைச் சேர்ந்த நால்வர் பத்தாயிரம் மைல்கள் பயணித்து, தாங்கள் கண்டவற்றை எழுதியுள்ளார்கள்.

v சிறு நில விவாசாயிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளனர்.

v விவசாயிகளின் தற்கொலை நம் நாட்டில் மட்டுமல்ல - அங்கேயும் கணிசமாக நடக்கின்றன.

v விவசாயத்தின் பல்வேறு அமைப்புகளும் அதிகாரங்களும் கார்ப்பரேட்டுகளின் கையில் முழுமையாகச் சென்றடைந்து விட்டன.

v நிலங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி மக்கள் நகர ஆரம்பித்து விட்டனர். 

 

இது போன்றும் இன்னும் பல ....


முடிந்தால் படித்துப் பாருங்கள் - எத்தனை பெரிய பூதம் நம் முன் இன்று நம்மை முழுவதாக முழுங்க நிற்கிறது என்பது புரியும். 



ஒரு வேளை முழுக் கட்டுரையை வாசிக்க முடியாது போனால் / வாசிக்க மனமில்லாது போனால், கீழே கடைசிப் பத்தி மட்டும் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்.





$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



v இந்து தமிழ் திசை  செய்தித் தாளில் ஒரு சிறப்புக் கட்டுரை. கட்டுரையின் தலைப்பு:

 

தனியார்மயம் 

ஏன் பயமுறுத்துகிறது?

 

இரு பக்க விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்த்து எழுதப்பட்ட ஒரு நல்ல கட்டுரை. நமது தற்போதைய மத்திய அரசின் கொள்கைகள் சீர்தூக்கிப் பார்க்கப் படுகின்றன.

அச்சத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

வாசித்துப் பாருங்களேன்.

 


 






















No comments:

Post a Comment