
ரொம்ப நாளாச்சே கால்பந்து விளையாட்டைப்
பார்க்கணும்னு ஒரு நினைப்பு. சேத்ரியின் கடைசிக் கால்பந்தாட்டம் என்பதால் பார்க்கணும்னு
ஒரு ஆசை. அதோடு குவைத்தை இந்தியா வென்றால் பிபா அடுத்த ரவுண்டுக்குப் போக வாய்ப்பிருக்கு
என்றார்களே .. அதனால் பார்க்கலாம்னு நினைச்சேன்.
நினச்சதெல்லாம் தப்பில்லை; ஆட்டத்தைப் பார்த்ததுதான் தப்பா போச்சு. சரி ..ஒரு international
game ஆச்சேன்னு பார்த்தால், ஏகப்பட்ட ஏமாற்றம்.
செயிண்ட் மேரிஸ் பள்ளியில அந்தக் காலத்தில நாங்க ஆடும் போது பண்ணியதை இன்றைய international
ஆட்டக்காரங்க ஆடினாங்க.
அப்போவெல்லாம் நாங்கல்லாம் 11க்கு 11
அப்டின்னா விளையாடினோம்? வர்ரவனெல்லாம் வாடான்னு
விளையாடுவோம். பந்து எங்க இருக்கோ அங்க கோலியைத் தவிர எல்லோரும் சுத்தி நின்னு ஆடுவோம்.
மற்ற இடத்தில ஒரு ஆட்டக்காரனும் இருக்க மாட்டான். இந்த இந்தியா-குவைத் ஆட்டத்திலேயும்
ஏறத்தாழ அதே மாதிரி தான் விளையாடினாங்க. பந்து இருக்க இடத்தைச் சுத்தி ஆட்டக்காரங்க.
Positional play அப்டின்னு சொல்லுவாங்களே .. அது சுத்தமா இல்லை.
Stimac என்ன சொல்லிக் கொடுத்தாரோ தெரியலை.
கால்பந்துவின் விளையாட்டே Positional playதான் அழகா, விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கும் ஆர்வத்தைக் கொடுக்கும். பந்தை எடுத்து நம்ம பக்கம் வந்தா, கோல் முனையில என்னென்னமோ நடக்கும். ஆவலா பாத்துக்கிட்டு nervous ஆக இருப்போம். பந்து அவுட்ல போகுதுன்னு வச்சுக்குவோம். கோல் கீப்பர் பந்தை அங்கிருந்து எத்துவார். அப்படியே எதிர் முனைக்கு பந்து பறக்கும். அங்கே left wing, right wing-ன்னு நம்ம ஆளுக நிப்பாங்க. அவங்க பந்தை வாங்கிக்கிட்டு எதிரி கோல் பொட்டிக்குள்ள போனா .. நமக்குப் பொங்கிக்கிட்டு வராதா?
அங்க கொஞ்சம் அமளி துமளி. போன நிமிடம் நம்ம கோல் தாங்குமான்னு தவிச்சிக்கிட்டு இருப்போம்; அடுத்த நிமிடம் அவங்களுக்கு கோல் போட்டிருவோமான்னு துடிச்சிக் கிட்டு இருப்போம். கால்பந்து விளையாட்டு துடிப்போடு ஒவ்வொரு நிமிடமும் இருக்க இதுதானே காரணம். அப்படியேதும் இந்தியா-குவைத் விளையாட்டில் ஏதும் காணோம். நாம் இன்னும் முன்னேற பல படிகள் ஏறணும். அன்று சேத்திரி கூட தனிப்பட்டுத் தெரியவில்லையே. ஆயினும் அவருக்கு என் நன்றிகள். ஓரளவாவது இந்தியாவின் பெயரை கால்பந்துலகில் முன்னெடுத்து வைத்தாரே... அதற்கு என் பாராட்டு. அவரைப் போல் நிறைய சேத்திரிகள் இன்னும் நம் டீமில் வரணும்.
இப்படி ஒரு மேட்ச் பார்த்து ஏமாந்து போய் நின்னேன்னா.. இந்த சமயத்தில் EURO,2024 இன்னைக்கி ஆரம்பமாகுது. 6.30க்கு ஓர் ஆட்டம்; 10.30க்கு இன்னொன்று. முதல் 6.30ஆட்டத்தையாவது அவ்வப்போது பார்க்கணும்னு ஒரு மூட் செட்டாயிருச்சி.
ரொனால்டோவை விட M.B.A. ஆளு ஒருத்தரு இருக்காரே – Mbappe – உலகக் கால்பந்தாட்டத்தில் மெஸ்ஸி கண்ணுல விரல விட்டு ஆட்டினாரே ... அவரைப் பார்க்க அதிக ஆவல். அவர் பெயரை எப்படித் தமிழில் எழுதணும்னு தெரியல. ஆண்டவரிடம் கேட்டேன். அவரு எம்-பா-பே – எம்பாபே – அப்டின்னு சொல்லிக் கொடுத்தாரு. அவரைப் பார்க்கணும்.
வரட்டா ...
No comments:
Post a Comment