பெருசுக எல்லாரும் நடக்கும் போது கவனமாக நடக்கணும்னு
சொல்லியிருக்காங்க. நானும் அப்படித்தான் நடந்தேன். ஆனாலும் ஒரு சில மாதத்திற்கு
முன் முகம் குப்புற விழப் பார்த்தேன். நல்ல வேளையா விழாமல் தடுமாறிப் பிழைத்தேன்.
ஆனாலும் ஓரிரு வாரங்களுக்கு முன் நடைபாதியில் புதிதாக முளைத்து மேடாக இருந்த man hole ஒன்றும் தடை போட்டது. மீண்டும் பிழைத்தேன். இருமுறை பிழைத்தேனா ...
இப்போது நான்கைந்து நாட்களுக்கு முன் நடக்குமிடத்தில் கையில் காய்கறிப் பையோடு
படாரென்று முகம் குப்புற விழுந்தேன். நெற்றி பூமித் தாயை வேகமாக முட்டி
விழுந்தேன். ஒருவர் ஓடிவந்து உதவினார். நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். ரத்தக்
காயமில்லை. எனக்கே கொஞ்சம் ஆச்சரியம்தான். தூக்கி விட்டவரும் பார்த்து ஒன்றுமில்லை
என்றார். ‘பரவாயில்லை ..hard nut to crack’ என்றேன். பக்கத்தில் தான் லிப்ட். நடக்க உதவி செய்தார். வீடு வரை
வருகின்றேன். என்றார். யாருங்க போய் அடி வாங்கிறது .. நான் மட்டும் போகிறேன் என்றேன்..
என் அனுபவம்தான் அவருக்கும் இருக்கும் போலும். சரியென்றவர் லிப்டில் மேலே வந்து,
நான் வீடு வரை செல்வதைப் பார்த்து விட்டு சென்றார்..
வீட்டம்மாவிடம் முதலில் சொல்லாமல் மெல்ல சொல்லலாமென
நினைத்து உள்ளே நுழைந்தேன். என்னைப் பார்த்ததும், வீட்டம்மா, ‘கீழே விழுந்திட்டீங்களா?” என்றார்கள். என்னடா இது..
ஏதாவது சாமி ஏதும் வந்து அவங்ககிட்ட சொல்லியிருக்குமோன்னு நினச்சேன். நான் கீழே
விழுந்ததை அடுத்த லிப்டில் இருந்தவர் பார்த்திருக்கிறார் அவ்ருக்கு என்னைத்
தெரியும் போலும். அவர் லிப்டில் இறங்கியதும் அவர் வீட்டம்மாவிடம் சொல்ல, பல மைல் தொலைவில் இருக்கும் என் இளைய மகளுக்குத் தொலைபேசியில் உடனே
சொல்லியிர்ருக்கிறார்கள். அவள் என் மூத்த மகளுக்குத் தகவல் சொல்லிவிட்டு, உடனே அம்மாவுக்கு ஒரு போன். What a telecommunication! நான் 12 மாடிக்குச் செல்வதற்குள் மூன்றாவது மாடிக்காரர் சொன்ன செய்தி பல
மைல்கள் கடந்து, அங்கிருந்து என் வீட்டுக்குள் சேர்வதற்குள் நான்
விழுந்த சேதி வந்து சேர்ந்து விட்டது. சும்மா சொல்லக்கூடாது. விஞ்ஞானம் அப்படி
வளர்ந்து விட்டது.
விஞ்ஞானம வளர்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இரண்டு
மூட்டுகளிலும் வலி. சரி .. விழுந்தால் வலிக்கத்தானே செய்யும் என்று நினைத்துக்
கொண்டேன். ஆனால் அடுத்த நாள் காலையில் கட்டிலிலிருந்து எழுந்து நடக்க முடியவில்லை.
இடது முழங்காலுக்குப் பின்புறம் (அந்த இடத்திற்குத் தமிழில், ஆங்கிலத்தில்
என்னங்க சரியான சொல்?) சரியான வலி. வீட்டுக்காரம்மாவிற்காக
வாங்கிய நடைக் குச்சி – walking stick – கொஞ்சம் உதவியது.
இருந்தாலும் நடக்க அத்தனை சிரமம். ஆனால் வீக்கம் ஏதுமில்லாததால் எலும்பில் ஏதும்
தகராறு இல்லை என்று தெரிந்து கொண்டேன். கால் வலிக்கு என்ன செய்யலாம்?
அண்மையில் எங்கள் அடுக்குமாடியில் இருந்த நண்பர் ஒருவர்
வாட்சப் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். DOCZO –
Doctors2home, evening clinic பற்றிய செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். சில மருத்துவர்கள்
இணைந்து இதை நடத்துவதாகவும், தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால்
வீட்டிற்கே வந்து மருத்துவம் செய்வதாக அச்செய்தி சொன்னது. வாசித்த அன்று அதை நான்
முற்றிலுகாக நமபவேயில்லை. மருத்துவம் வியாபாரமாக மாறிவிட்ட நிலையில் எந்த
மருத்துவர்கள் இது போன்ற சேவை செய்யத் தயாராக இருப்பார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் இன்று ஒரு trial கொடுப்போமே என்று நினைத்து தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
ஒரு பெண் பேசினார். எனக்கு என்னப் பிரச்சனை என்று கேட்டார். சொன்னேன். அப்போது
காலை 11 மணியிருக்கும். பேசியவர் மிகக் கனிவாகப் பேசியதே ஆச்சரியமாக இருந்தது. 5-9
அவர்களின் உதவி நேரம். மால 4 மணிக்குள் உங்களுக்கு இன்று வரமுடியுமாவென்று
சொல்கிறேன். என்றார். வழக்கமாக இல்லை .. முடியாது .. என்று சொல்வதற்குப் பதிலாக
நாம் இப்படித்த்தானே சொல்வோம். அதுமாதிரி சொல்கிறார்கள் என்று நினைத்துக்
கொண்டேன். சரியாக 4 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புயுள்ளார்கள். 5.30-6
மணிக்குள் வருவோம் என்ற செய்தி. 5.30 மணிக்குத் தயாரானேன். 6 மணியாயிற்று. யாரும்
வரவில்லை. ஓரிரு நிமிடங்களில் தொலைபேசி
ஒலித்தது. காலையில் பேசிய பெண் வழி கேட்டார். சொன்னேன். அவர் எங்கள்
குடியிருப்புக்கு அருகில் வந்த பிறகே அழைத்திருக்கிறார்.
முப்பதுகளின் கடைநிலையில் இருந்த வாட்ட சாட்டமான
மருத்துவர். உடம்பை நன்கு பேணியிருந்தார். அந்தப் பெண்ணுடன் வந்தார். மருத்துவரின் பெயர்: Dr. S. Muralishankar MBBS., DLO., CCEBDM(Diab).,இருவருக்கும்
இருக்கை அமைத்திருந்தும் அந்தப் பெண் இறுதி வரை உட்காரவில்லை. மருத்துவர் என்னிடம்
பேசிவிட்டு, கால்களையும் சிறு கீறல்களையும் (ஆனாலும் வலித்தது) பார்த்து
விட்டு, விழுந்ததால் ஏற்பட்ட வலிதான் என்று கூறி மருந்து
எழுதித் தருகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்; அல்லது
எங்களிடமும் மருந்து உள்ளது. அவருக்கான கட்டணம் 499 + மருந்துக்கு 500+ ஆக
மொத்த்தம் 1054 என்றார்கள்.
அத்தனை ஆச்சரியம். அதை அவரோடு பகிர்ந்து கொண்டேன். .நாங்கள்
சில மருத்துவர்கள் இணைந்து இதைச் செய்கிறோம். எதிர்ப்புகளும் பல
மருந்தகங்களிடமிருந்து வருகிறது. எங்களோடு முதலில் இணைந்த இரு மருத்துவர்கள்
அதனால் இதிலிருந்து விலகி விட்டார்கள் என்றார். ஆனால் மிகவும் ஆச்சரியத்துக்குரிய
சேவை என்றேன். அவரும் எங்களுக்கு இது நல்லதொரு திருப்தியையும், மகிழ்ச்சியையும்
தருகிறது என்றார்.
பாலவனங்களிலும் ஆங்காங்கே சில பூக்கள் மலரத்தான்
செய்கின்றன.
மலர்களுக்க்கு என் பாராட்டுகளும், நன்றியும்.
எனக்கு வந்த குறுஞ்செய்தி இதோ:
Good news for our Chennai people!
Now, government doctors and a few like-minded fellow doctors from
Saraswathi Polyclinic@Ashok Nagar & Mass Polyclinic@Virugambakkam in
Chennai have come together with a
service mindset and started a service called
“DOCZO – Doctors2Home”
Evening Clinic @ Your Home for just Rs.499 only
(70% discount from Rs.1600 of home doctor visit)
With this initiative, for common health issues like fever, cold, cough,
stomach pain, diabetes, BP, etc., patients no longer needed to go to nearby
clinic/hospital by inconvenience of travel & its cost, long waiting in
clinic and accompanying a relative/ friend to the clinic.
Just one phone / watsapp msg r call, your qualified, experienced, friendly
MBBS/MD doctors along with a staff nurse will directly come to your home and
provide treatment between 5pm to 9pm @ just Rs.499 only.
This service is for all patients especially for kids, working people,
Elders etc who are finding difficulty to go to nearby clinic/ hospital. It
saves not only health complications, but also time and money of the patient
family.
All medicines / injections / IV fluids / lab test are given at 10% discount
(If patient needs and available with us)
In short, An evening clinic running right inside our home!
To avail this new home health service
DOCZO – Doctors2Home
Evening Clinic@ your Home at Just Rs.499 only( 5pm to 9pm)
Call / WhatsApp
📞 7338830305 /
7338830905
(For Enquiry and appointment booking)
Areas where your friendly MBBS/MD doctors are currently providing service
in Chennai:
Virugambakkam, Valasaravakkam, Ramapuram, KK Nagar, Ashok Nagar, Koyambedu,
Arumbakkam, Kodambakkam, Nerkundram, Vadapalani, Anna Nagar, Mogappair, West
Mambalam, Ekkattuthangal.
If you share (forward) this message to all your whatsapp groups and chennai
based friends personally , it might be a big help and useful to someone else….

No comments:
Post a Comment