Monday, April 25, 2005

2. நம் CIVIC SENSE பற்றி தருமிக்கு சில கேள்விகள்...

நம் CIVIC SENSE பற்றி தருமிக்கு சில கேள்விகள்...


1. நாராயண் கார்த்திகேயனுக்கே ஃபார்முலா1 பந்தயத்தில் starting problem இருக்குதாம். பச்சை விளக்கு விழுந்ததும் புறப்படுவதில் பிரச்சனை. அவர் நம்ம ஊரில் அதிகமாக கார் ஓட்டியதில்லை போலும்! இங்கேயே நல்லா ஓட்டிப் பழகியிருந்தால் இந்த பிரச்சனை இருக்காது !

சாதாரணமாகவே நம்ம ஆட்கள் ஆரஞ்சு நிறம் இருக்கும்போதே, பச்சை விழுவதற்கு முன்பே பாய்ந்து புறப்பட்டு விடுகிறார்கள். அதுவும் போலீசுக்காரரே போகச்சொல்லி விடுகிறார். பச்சை விளக்குக்குக் காத்திருந்தால் நம்மை எல்லோருமே ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

இது ரொம்ப சின்ன விஷயமாக எனக்குப் படவில்லை. போலீசுக்காரரே விதியை மீற அனுமதி அளிப்பதால், விதிகளே மீறப்பட வேண்டியவைகள்தான் என்ற நிலைப்பாடே மக்கள் மனதில் ஊறி விடாதா? இந்த சின்ன அத்து மீறல்கள் சட்டங்களை மதிக்கத் தேவையில்லை என்ற மன நிலையை எல்லோருக்கும் பொதுவாக தந்து விடுமே. அப்படி இருந்தும் இப்படியே நடக்கிறதே.
அது ஏங்க...?
2. 'உபகாரம் இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாம இருக்கணும்' - இது நம்ம ஓர் பழமொழி. ஆனால் நம்ம ஊர்ல இதை கடைப்பிடிப்பவர்கள் யார்? படித்தவர்களும் சரி, பாமரர்களும் சரி, சிறுசு பெருசு என்ற எந்த பாகுபாடுமின்றி நாம் எல்லோருமே ஒட்டு மொத்தமாக இதில் ஒற்றுமையாக இருக்கிறோம்.

தானியங்கு கதவைத் திறந்தால் பின்னால் வருபவர்களுக்காகக் காத்திருந்து கதவைப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும், சாலையைக் கடக்க வேண்டுமாயின் எதிர் வரும் வண்டிகள் பிரேக் போடவேண்டிய நிலையைத் தரக்கூடாது என்றும் வெளிநாட்டில் (அட, அமெரிக்காதான்) சிறு குழந்தைக்கும் சொல்லித்தந்து விட்டார்களே.

நம்மில் எத்தனை பேர் நம் இருசக்கர வண்டிகளை நிறுத்தும்போது அது மற்றவர்க்குத் தொல்லை தராது நிறுத்தவேண்டும் என்று ஒரு நிமிடமாவது யோசித்து செயல்படுகிறோம்? ரொம்ப கம்மிதானே.
அது ஏங்க...?
3. பெரியவங்க இறந்துபோனால் we have to celebrate their lives அப்டின்னு சொல்லுவாங்க. கொட்டு, மேளம் even வெடி கூட போடுங்க; வேண்டாங்கலை.ஆனால் முழுதாய் சாலையைமறித்துக் கொண்டு - நான் சொல்றது பெரிய ஊர்களில், முக்கிய சாலைகளில் - எல்லோரையும் நடுங்க வைப்பது என்ன நாகரீகமோ தெரியவில்லை.
ஓரத்தில் நல்ல பிள்ளையாய் நின்றாலும் எந்த நேரத்தில் நமக்கு என்ன நடக்குமோ என்ற பயம். நம் மீது பூ விழுமோ, வேட்டு விழுமோ, ஆள் விழுமோ அடி விழுமோ இல்லை போனவரோடு நம்மையும் சேர்த்து அனுப்பபோகிறார்களோ என்ற நிலை.
யாரும் கேட்க முடியாத நிலை. ஆனால், அப்படி ஆடிப்போகும் கூட்டம் எல்லாம் முடிந்து வரும்போது 'ஆடும் வரை ஆட்டம்....' என்று ரொம்பவே philosophical-ஆக, நல்ல பிள்ளைகளாக திரும்புகிறார்கள். நனி நாகரீகம் என்று பேசுவதெல்லாம் என்ன வகைப் பிதற்றல்கள். இன்னும் கற்காலத்து மனிதர்களாகவே இருக்கிறோமே.

அது ஏங்க..?

தருமி இன்னும் கேட்பான்.....

1 comment:

தருமி said...

ஒரு ஆச்சரியமான விஷயம் என்னன்னா, நம்ம traffic cops பெரிய ஞானிகள்தான்(stoics). எதையும் கண்டு கொள்வதேயில்லை. 5 செகண்டுகள் இருக்கும்போதே மக்கள் கிளம்பினாலும் நாம் நிற்கும்போதே இப்படியா என்று எந்தவித ego-ம் இல்லாமல், நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று நின்று கொண்டிருக்கிறார்கள்.

Post a Comment