THE HINDU Monday, MAY 2, 2005 pp11
DALITS all over the world have something to rejoice about. Durban was not in vain. On April 19, 2005, the U.N. Commission on Human Rights adopted a Resolution to appoint two Special Rapporteurs to tackle caste-based discrimination.
--------------------------------------------------------
பள்ளத்தில் இருப்பவர்களைத் தூக்கிவிட வெளியிலிருந்து தூக்கிப்போடும் கயிறு போல இது. தேவைதான். அதைவிடவும் உள்ளிருந்து சில முயற்சிகள் அவசரமாகத் தேவை.
1. சில தொழில்களுக்கு என்று சிலரை ஒதுக்கிவைத்து, அதை சாதியாக்கி...கீழிறக்கி, தாழ்த்தி 'வர்ண'மயமாக்கியாயிற்று. இது நடந்துபோனது. இனி நடக்கவேண்டியது - இந்தத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். பரம்பரையாகச் செய்துவரும் தொழில்களை விட்டேயாகவேண்டும். சில தொழில்களை கலை என்ற பெயர் சூட்டி (தப்பாட்டம்,பறையாட்டம்) தலையில் கட்டியுள்ளார்கள்; இன்னும் சிலவற்றை இவர்கள்தான்செய்யவேண்டும் என்று 'பட்டயம்' கட்டியுள்ளார்கள்.
யாருக்கும் யார் வேண்டுமென்றாலும் சவக்குழி வெட்டமுடியும்.
சங்கு யார் ஊதினாலும் சத்தம் வரும். வேண்டுமென்பவர்கள் ஊதிக்கொள்ளட்டுமே.
2. மேலேவந்து விட்டவர்கள் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு நான்கு பேரை கைதூக்கி விடவேண்டும். ப்ண உதவியைச்சொல்லவில்லை; விழிப்புணர்வைத்தர வேண்டும் - தங்கள் உரிமைகளையும், அரசு தரும் சலுகைகளைப் பற்றியும்கூட தெரியாமல் இருக்கும் தலித்துகள் அநேகம்.
3. லாப நோக்கிலாக இருந்தாலும் பரவாயில்லை; வசதியுள்ளவர்கள் கல்வி நிறுவனங்கள் துவங்க வேண்டும்.
4.எந்த அரசியல் தலைவனையோ கட்சியையோ நம்பக்கூடாது.
இவையெல்லாம் நடக்குமா...? ஒரு சமூகத்தலைவன் தோன்றுவானா?

4 comments:
//2. மேலேவந்து விட்டவர்கள் ஒவ்வொருவரும் தன் பங்குக்கு நான்கு பேரை கைதூக்கி விடவேண்டும். ப்ண உதவியைச்சொல்லவில்லை; விழிப்புணர்வைத்தர வேண்டும் - தங்கள் உரிமைகளையும், அரசு தரும் சலுகைகளைப் பற்றியும்கூட தெரியாமல் இருக்கும் தலித்துகள் அநேகம்.
//
//இவையெல்லாம் நடக்குமா...? ஒரு சமூகத்தலைவன் தோன்றுவானா?//
இதற்கு சமூகத்தலைவன் வர வேண்டுமென்ற அவசியமில்லை, அவரவர்களே ஆரம்பிக்கலாம்,
இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒருவர் முன்னேறிவிட்டால், அவரது வாரிசுகள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவதற்கு இது வரை தடையில்லை எனினும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துதல் கூடாது என்கிற எண்ணம் அவரவர்களுக்கு வரவேண்டும்
"இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒருவர் முன்னேறிவிட்டால், அவரது வாரிசுகள் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துவதற்கு இது வரை தடையில்லை எனினும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்துதல் கூடாது என்கிற எண்ணம் அவரவர்களுக்கு வரவேண்டும் "
குழலி..
நீங்கள் சொல்வது நடக்கக்கூடியதா? இங்கே சட்டங்களே மீறப்படும்போது, தனிமனித ஒழுக்கங்களுக்குள் இதைக் கொண்டுவந்து பின்பற்ற முடியுமா, என்ன?
எல்லாவற்றையும் விட 'குலத்தொழில்'களை விட்டுவிடுதலே முதலிடம் பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.
தருமி அவர்களே,
தலித்துகள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளை பற்றி நான் இரண்டு பதிவு போட்டுள்ளேன். முதலாவது டீக்கடைகளில் இரட்டை கிளாஸ் முறையைப் பற்றியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_28.html
இரண்டாவது காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பற்றியது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post.html
இரண்டு பதிவுகளை மட்டும் பார்க்காமல் அவற்றில் வந்த பின்னூட்டங்களையும் பாருங்கள். யார் யார் எப்படி எதிர்வினை செய்தார்கள் என்று பார்த்தால் ரொம்ப சுவாரசியமாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
test
Post a Comment