Thursday, April 06, 2006

149.கேளிர், ஒரு சொல் கேளீர்..

இப்பதிவின் நோக்கம் நம் வலைஞர்களுள் ஒருவரான பிரேமலதா நல்லதொரு முயற்சி ஒன்று மேற்கொண்டுள்ளார். அதனை இப்பதிவின் மூலம் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதே.

NDTV-ல் வெளிவந்த சேதி ஒன்று மதுரையில் ஏழைப் பெண்களுக்காக நடத்தப்படும் விடுதி ஒன்றில் கடைப்பிடிக்கப்படும் வேதனையான ஒரு பழக்கம் பற்றியது. அதனை இங்கே பாருங்களேன்.

இந்த வழக்கத்தை மாற்றி அப்பெண்களின் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிடும் அந்த விடுதியாளர்களின் போக்கை மாற்ற ‘ஏதாவது’ செய்ய வேண்டும் என்று பிரேமலதா சொன்ன போது, எனக்கும் பலரைப்போல் ‘நாம் மாற்ற வேண்டிய காரியங்கள் - இதைவிடவும் பெரிய, மோசமான காரியங்கள் - நிறைய இருக்கும்போது இது என்ன ஒரு பெரிய விஷயமா?’ என்றுதான் தோன்றியது. ஆனால் பிரேமலதா அதற்காகவே கொடுத்துள்ள ஒரு பதில் எனக்கு மிகவும் பிடித்ததால் நானும் என்னாலானதைச் செய்ய, அவர்களோடு சேர நினைத்தேன். அந்த பதில்கள் இதோ:

1) Less serious issue means less complications for us.
2) not politicised
3) we can have a small but focussed objective. for example: improving the facilities, i.e. building few more toilets for the girls.
4) as it is a “small” objective, there is a possibility of us seeing it happening in real sense. “small” means less “money” needed. So, there is a possibility of “making this happen” in real sense.

Premalatha continues:
We are also planning to collect some fund ourselves. It might be a fund raising event. Nothing is finalised yet. Your suggestions are welcome.

இம்முயற்சிக்கு அவர்களின் முதல் கோரிக்கை - spread the word.

அவர்களின் தனி முகவரி: http://premalatha_balan@yahoo.co.uk

அவர்களின் ப்ளாக் முகவரி: http://premalathakombai.blogspot.com
அவர்தம் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

Š

Premalatha is gathering signatures for a petition and is trying to find a way of helping to build toilets for the girls. Please sign on.Pathivu Toolbar ©2005thamizmanam.com


Apr 06 2006 09:10 am | Uncategorized |
11 Responses
வெளிகண்ட நாதர் Says:
April 6th, 2006 at 9:56 am
இது போன்ற அவலங்கள் எப்பொழுது ஒழியும் சார் நம் நாட்டில்?

தருமி Says:
April 6th, 2006 at 11:15 am
நாம் எல்லோரும் சேர்ந்து “பிள்ளையார் சுழி” போட ஆரம்பிக்கிறது வரையோ..

திரு Says:
April 6th, 2006 at 11:41 am
இந்த சமூகக்கொடுமையை கண்டிப்பதிலும் இதற்கு எதிரான முயற்சியிலும் உங்களோடு நானும் இணைந்து கொள்கிறேன்.

நிதி திரட்டுவது இந்த கொடுமைகளை கண்டித்து அரசு மற்றும் அதன் சம்பந்தப்பட்ட துறைகளை செயல்படுத்த உதவினால் மிகவும் நல்லது. மற்றபடி கழிவறைகள் கட்டப்போகிறோம் என்ற சேவை மனதில் இறங்கினால் எனக்கு மாற்று கருத்து உண்டு. இப்படி பல ஆயிரம் விடுதிகள் நடந்து வருகிறது அவைகளை பராமரிப்பதும், கண்காணிப்பதும், தரத்தை உயர்த்துவதும் அரசின் சமூகக்கடமை. அந்த கடமையை தனியார் (நபரோ, நிறுவனமோ) கையில் எடுப்பது என்பது சரியானதா தெரியவில்லை. இப்படிப்பட்ட அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அரசு துறைகளை செயல்பட வைக்கும் பணியை கையில் எடுப்போம் என்பது என் தனிப்பட்ட கருத்து. தயவு செய்து இதை விவாத பொருளாக கருதவேண்டாம்.

இந்த கொடுமை மனிததன்மையற்ற செயல்.

premalatha Says:
April 6th, 2006 at 3:46 pm
திரு,

உங்கள் கருத்தை முற்றிலும் நான் ஆமோதிக்கிறேன். சிலசமயம் செய்து காட்டித்தான் செய்யவைக்கமுடியும். ரோட்டில ஒரு பெரிய பாறாங்கல்லு இருக்கு. எல்லோரும் சொல்லிக்கிட்டே இருப்போம். நிறையப்பேர் தள்ளி நடந்து போவாங்க. நிறையப்பேர் இடிச்சுக்கிட்டு, நம்ம ஆளுங்க சரியே இல்ல. அப்படின்னு “யாரையோ” திட்டுவாங்க. ஒருத்தன் குனிஞ்சு தள்ள ஆரம்பிக்கணும். கல்லு பெரிசா இருக்கும். ஒரு ஆளால முடியாது. சிலர் சிரிக்கவும் சிரிக்கலாம், முட்டாள், இவ்வளவு பெரிய கல்ல இப்படி லூஸுத்தனமா முட்டித்தள்ள முயற்சிக்கறானேன்னு. பஞ்சாயத்தைக் கூப்பிடுன்னுவான் நாலு பேரு. யார் கூப்பிடறது? எனக்கு அலுவலகத்துக்கு நேரமாச்சு இல்லாட்டி கண்டிப்பா நான் செய்வேன், இப்படி நாலு பேரு. பாருங்க, முட்டி முட்டி மூச்சு வாங்கினாலும், யாராவது தண்ணி குடிச்சுட்டு முட்டேன்னு தண்ணி கொடுக்கமாட்டாங்களான்னு ஒரு ஏக்கத்தோட, தாகத்தோட பார்க்கும்போது பாருங்க, அந்தப்பக்கம் இன்னொரு தல முட்டிக்கிட்டிருக்கும். அப்புறம் பாருங்க, இன்னும் நாலுபேரு. அடுத்து, டேய், கம்பும் சின்னக்கல்லும் அடிக்கொடுத்து நகர்த்தினா-ன்னு பெரிய நுட்பவியல் கல்லூரில படிச்சதுகூட உதவிக்கு வரும். அப்புறம் பாருங்க, பஞ்சாயத்துக்கு சேதி போகும்.

Please note that we are also organising a pettition to CM. if you are interested you can directly write to CM
at cmcell@tn.gov.in (dharumi, please update this in your main post itself, thank you)

Dadoji has already written to CM. have a look at

http://mumbaigirl.blogspot.com/2006/04/forced-to-maintain-public-register-of.html#c114424440059335287

முட்டனும். முதல் முட்டு ரெம்ப முக்கியம். அதேபோல அந்த தண்ணி ரெம்ப ரெம்ப முக்கியம். தண்ணி கொடுத்ததுக்கு நன்றி தருமி.

premalatha Says:
April 7th, 2006 at 2:32 pm
http://premalathakombai.blogspot.com/2006/04/my-letter-to-cm.html

http://dadojikondke.blogspot.com/2006/04/hand-that-rocks-cradle.html

தருமி Says:
April 7th, 2006 at 3:25 pm
நான் செய்தது பெரிய காரிஅய்ம் ஒன்றுமில்லை; பிரேமலதா எழுதிய மயிலின் நகலை எடுத்து, முன்னூட்டமாகக் கீழ்காணும் மயிலைச் சேர்த்து நம் முதலமைச்சருக்கு அனுப்பி விட்டேன்.

From
G.Sam George,
(Former Lecturer in
The American College,
Madurai)

To
Hon’ble Chief Minister, J. Jayalalitha
The Chief Minister of Tamil Nadu

Dear Chief Minister,
Since I vouch for every word in the following mail sent to you by a blogger like me, I feel that it is not necessary to repeat the same matter again. Instead I just forward it.

I fervently hope that in spite of your busy schedule, you would attend to this and help the young girls get a better life.

Thanking you,

Sincerely yours,

G.SAM GEORGE
7th April, ‘06

குமரன் (Kumaran) Says:
April 8th, 2006 at 11:08 am
பிரேமலதா அருமையாகச் சொல்லியிருக்கிறார். இந்தியக் கனவு 2020 குழுவினரும் இதே எண்ணத்தில் தான் நம் சமூகக் கடமையைச் செய்ய இறங்கியுள்ளோம்.

premalatha Says:
April 8th, 2006 at 3:07 pm
அவ்வளாவு சீக்கிரமே முடிஞ்சிருமா? பரவயில்லையே! நான்கூட கொஞ்சம் நாளாகும், அதனால, இப்பவே ஆரம்பிச்சுட்டோம்னா-ன்னு முட்ட ஆரம்பிச்சிருக்கேன். ரெம்ப நன்றிங்க, முட்டு, முட்டு வேகமா முட்டு……..(யாருப்பா அது, முட்டுற தலைல அடிக்க முயற்சிக்கறது? ஒண்ணுமில்ல, வேறபக்கம் அடி, கையோ, காலோ பாத்து அடி, மண்ட கொஞ்சம் முட்றதுக்கு வேணும். அதனாலதான்).

premalatha Says:
April 8th, 2006 at 3:31 pm
In case it IS true that you do have such a group,
I APOLOGISE.

குமரன் (Kumaran) Says:
April 10th, 2006 at 12:19 am
//In case it IS true that you do have such a group,
I APOLOGISE.

//

I dont know whether you are telling me or to someone else. If you are wondering about DreamIndia 2020 group, please visit my blog http://abtdreamindia2020.blogspot.com/

ஞானவெட்டியான் Says:
April 10th, 2006 at 10:36 am
தங்கை பிரேமலதாவின் முயற்ச்சி
வாழ்க! வளர்க!!
நானும் இன்று மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன்.

No comments:

Post a Comment