Monday, March 05, 2007

203. நானும் பெரியாரும்

அனேகமாக எட்டிலிருந்து பத்து பன்னிரண்டு வயதிற்குள் நடந்த விஷயங்கள் இரண்டு நன்கு நினைவில் உண்டு.

முதல் விஷயம்:

மதுரை தெற்கு வாசலில் இருந்த பள்ளி வாசலுக்கு அடுத்தாற்போல் 'தர்பார் ஹோட்டல்', அதற்கு எதிர்த்தாற்போல் ஒரு ப்ராமணாள் உணவு விடுதி - பெயர் மறந்து போச்சு; ஏதோ ஒரு பெண் சாமி பெயர்; சரஸ்வதி ஹோட்டல் என்று வைத்துக் கொள்வோமே - இருந்தன. ஆடிக்கொருதடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை இந்த இரு உணவு விடுதிகளுக்குள் போனதுண்டு. என்ன, யாராவது ஊரிலிருந்து வீட்டுக்கு வரும் விருந்தினர் அவர்கள் ஆசைக்கு என்னைத் துணைக்கழைத்துப் போனதுதான் அதிகமாக இருந்திருக்கும். அப்போது முதலில் எனக்கு இரண்டு இடங்களிலும் உள்ள ஒரு வித்தியாசம்தான் கண்ணில் பட்டது. யாருக்கும் தண்ணீர் கொடுக்கும்போது தம்ளருக்குள் விரல் படாமல் தண்ணீர் எடுத்துக் கொடுக்கவேண்டுமென்று அம்மா சொல்லிக் கொடுத்திருக்க, இங்கே அந்த இரண்டாவது ஹோட்டலில் அந்த சுத்த பத்தம் இல்லாமல் இருந்ததும், தர்பார் ஹோட்டலில் எண்ணெய் பிசுக்கில்லாத கண்ணடி தம்ளரில் விரல் முக்காமல் தண்ணீர் தருவதும் முதல் வித்தியாசம். இரண்டாவது, தர்பார் ஹோட்டலில் பரிமாறுபவர்கள் வெள்ளைச் சீருடை அணிந்து இருப்பதும், அடுத்த ஹோட்டலில் சட்டை போடாமல் தோளில் ஒரு அழுக்குத் துண்டும், இடையில் தூக்கிக் கட்டிய அழுக்கு வேட்டியுமாக இருப்பது கூட பெரிய வித்தியாசமாகத் தோன்றியதில்லை. ஆனால் தர்பார் ஹோட்டல் பரிமாறுபவர்களை சாப்பிட வருபவர்கள் பெயர் சொல்லியோ, 'சர்வர்' என்றோ அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் அந்த அடுத்த ஹோட்டலில் இருப்பவரை எல்லோரும் ஒன்று போல் 'சாமி' என்றும் அழைப்பதும், ஏன் அப்படி அழைக்கிறார்கள் என்ற கேள்வியும் மனசில் எழும்பியதுண்டு.

கொஞ்சம் வயசானதும் தனியாகக் கூட இந்த இரு கடைகளுக்கும் சில முறை சென்றதுண்டு. இப்போது ஒரு பெரிய வித்தியாசத்தைப் பார்த்தேன். இப்போதெல்லாம் ப்ராமணாள் ஹோட்டலில் பரிமாறுபவரையும் எல்லோரும் 'சர்வர்' என்று கூப்பிடுவதைப் பார்த்தேன். யாரும் இப்போது 'சாமி' என்று கூப்பிடுவதில்லை.

எப்படி இந்த மாற்றம் நடந்தது என்று எனக்கு அப்போது புரியவேயில்லை.


இரண்டாவது விஷயம்:

வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த தங்கம் ஹேர்கட்டிங் சலூனுக்குத்தான் அப்பா முடிவெட்ட கூப்பிட்டுப் போவார்கள். எப்போதும் அவர்களோடு சென்றுதான் பழக்கம். முடிவெட்டுபவரின் பெயர் தங்கம். எப்போதும் வெள்ளை வெளேரென்று வேட்டி சட்டையில் இருப்பார். நல்ல கருத்த சிரித்த முகம்; சிரிக்கும்போது பளீரென்று தெரியும் பல்வரிசை. அதிர்ந்து பேசிப் பார்த்ததில்லை. அவரது கடையே கொஞ்சம் வித்தியாசம்தான். அப்போதிருந்த சலூன்கள் எல்லாவற்றிலுமே முடிவெட்ட வரும் ஆட்களை விடவும் ஓசிக்கு தலை சீவ, பத்திரிகைகள் படிக்க, அரட்டை அடிக்க என்று ஆட்கள் நிறைந்திருப்பதுதான் வழக்கம். தங்கம் கடையில் அநாவசியமான ஆட்களைப் பார்க்க முடியாது. அதோடு மற்ற சலூன்களில் அப்போதெல்லாம் சுவரே தெரியாத படி அரைகுறை ஆடையில் நிற்கும், படுத்திருக்கும், இன்னும் என்னென்னவோ செய்து கொண்டிருக்கும் பெண்களின் படங்களால் நிரப்பப் பட்டிருக்கும். தங்கம் கடையில் ஒரே ஒரு படம் மட்டும் நடுவில் மாட்டப் பட்டிருக்கும். அது யாரோ அவருடைய சொந்தக்காரர் படம் என்று நினைத்திருந்தேன். முக்கியமாக இன்னும் நினைவில் இருப்பது அவரது கடையின் உயரம். ரோட்டிலிருந்து என் உயரத்திற்கும் மேல் கடையிருக்கும். படிகள் ஏதும் இருக்காது. இரண்டு மூன்று பெரிய கற்கள் போட்டிருக்கும். முதலில் நான் போகும் போதெல்லாம் தங்கம் கீழே நிற்கும் என்னைக் கையைப் பிடித்து மேலேற்றுவார்.

ஏறக்குறைய பத்து பதினொரு வயது இருக்கும்போது முதல் முறையாக அப்பா என்னைத் தனியாக முடிவெட்ட அனுப்பினார்கள். எப்படி என்ன சொல்ல வேண்டும், எப்படி வெட்ட சொல்ல வேண்டுமென்றெல்லாம் instructions கொடுத்து அனுப்பினார்கள். அப்பா கடைக்குக் கூட்டிப் போனபோதும் சரி, இப்போது என்னென்ன சொல்ல வேண்டுமென்று சொன்னபோதும் தங்கத்தை ஒருமையில் பேசிதான் பார்த்திருக்கிறேன். அதனால் நானும் கடைக்குப் போய் முடிவெட்ட நாற்காலியில் உட்கார வைக்கப் பட்டதும் அப்பா சொன்னவைகளை நானும் தங்கத்திடம் சொன்னேன். சொல்லும்போது அப்பா மாதிரியே நானும் ஒருமையில் பேசினேன்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின், தங்கம் ' இப்போது எந்த வகுப்பில் படிக்கிறாய்:' என்றார். அப்போது அனேகமாக ஐந்தாம் வகுப்பில் படித்திருந்திருப்பேன். அதைச் சொன்னேன். 'இப்படித்தான் உங்க பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுதாங்களா? வயசுக்கு மூத்தவங்களை இப்படி 'வா', 'போ'ன்னு பேசலாமா?' என்றார். மண்டையில் 'நறுக்'குன்னு ஒரு கொட்டு வச்சது மாதிரி இருந்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் முகத்தைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. ஆனால் அவரோ இதைச் சொல்லிவிட்டு அவர் போக்கில் முடிவெட்டிவிட ஆரம்பித்திருந்தார். அவர் முன்னால் நான் குறுகிப் போனதாக அன்றும் உணர்ந்தேன்; இன்று திரும்பிப் பார்க்கும்போதும் அதை உணர்கிறேன். ஆனால், அன்றிலிருந்து தங்கத்தை மட்டுமல்ல வயதுக்கு மூத்தவர்கள் யாராக இருந்தாலும் மரியாதையோடு பேசும் பழக்கம் வந்தது.

சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டு விஷயங்கள் புரிந்தன. தங்கத்தின் கடையின் நடுவில் பிரதானமாய் மாட்டியிருந்த படத்தில் இருந்தவர் தங்கத்தின் சொந்தக்காரர் இல்லை, அவர்தான் ஈ.வே.ரா.பெரியார் என்று தெரிந்து கொண்டேன். அது மட்டுமல்லாது, தங்கம் தனது தன்மானத்தைக் காத்துக்கொள்ள காரணமாய் இருந்தவரும், 'சாமி'களை சர்வர்களாக ஆக்கியதிற்குக் காரணமாய் இருந்தவரும் அவர்தான் என்பதும் பின்னாளில் புரிந்தது.

74 comments:

thiru said...

அய்யா,

நல்ல ஒரு பதிவு! இதை படித்து சிறிய வயது அனுபவங்களுக்கு போயிட்டேன். எங்க ஊரிலும் இதே அனுபவத்தை பார்த்திருக்கிறேன். ஒரு வேறுபாடு இங்கு நாயர் ஓட்டல்.

சாமி என அழைப்பதன் பின்னால் இவ்வளவு விசயம் இருப்பது தெரிய காலமானது. ஒரு முறை கேரளாவில் நண்பன் ஒருவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். நண்பரது குடும்பத்தில் தகப்பனார், பெரியப்பா...என ஆண்கள் பலர் அர்ச்சகர்கள். நாங்கள் போன இடமெங்கும் நண்பனை 'திருமேனி' என அழைப்பதை கவனித்தேன். அதுபற்றி பெருமையாக நண்பன் சொன்னபோது தான் இந்த 'உயர்த்தலில்' இருக்கும் சுகம் விளங்கியது.

Thamizhan said...

தந்தை பெரியார் அவர்களைப் பற்றி சிலர் தரக்குறைவாக எழுதுகிறார்கள்.பெரியார் அவர்கள் நேருக்கு நேர் பட்ட அவமானங்களின் கால் தூசிக்குக்கூட இதுகளின் அவமான வார்த்தைகள் வராது.அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பெரியார் அவர்கள் அனைவர்க்கும் பதி்லளித்தார்கள்.சிந்திக்கச் சொன்னார்கள்.
சில "ஜென்மங்"களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை,ஆனால் சிலர் பரவலாக நம்பும் செய்திகளில் சில பற்றிய விவரங்கள்.
பாமபையும் பார்ப்பானையும் பார்த்தால் பார்ப்பனை முதலில் அடி என்பது வட நாட்டுப் பழ மொழி.பெரியார் சொன்னது அல்ல.அதைத் தமிழ் நாட்டில் சொன்னார்கள் அவ்வள்வுதான்.
சேலம் மாநாட்டில் ஊர்வல்த்தில் சென்று கொண்டிருந்த போது சில விஷமிகள் பெரியார் மீது செருப்பு வீசினார்கள்.அந்தச் செருப்புகளை எடுத்து ஊர்வலத்தில் வந்த தோழர்கள் அவர்கள் ஊர்வல்த்தில் கொண்டுவந்த ராமன் படத்தை அடித்தனர்.அதைப் பார்ப்பனர்கள் பெரிய தேர்தல் எதிர்ப்பாக்கினர்,ஆனால் தி.மு.க அமோக வெற்றி பெற்றது.
சிலர் பெரியார் சொன்னதை முழுதும் சொல்லாது நாய் அசிங்கத்தைத் தின்பது போன்று இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சொல்லிக் குழப்புவார்கள்.அது மாதிரிதான் பெரியார் கற்பு பற்றி சொன்னது.நன்கு விளக்கமாகச் சொல்லியுள்ளார்.பெண்களும்,முக்கிய
மாகப்பெண்ணடிமை எண்ணமுள்ள ஆண்களும் அவசியம் "பெண் ஏன் அடிமையானாள்" புத்தகம் படிக்க வேண்டும்.கற்பு பெண்ணுக்கு மட்டுந்தானா?ஆணுக்கும் இருக்கவேண்டும்.மனைவியை அழகை அனுபவிப்பதற்கும்,பிள்ளை பெறும் இயந்திரமாகவும் கருதக்கூடாது.மனைவியிடம் அவளது விருப்பமில்லாமல் புணர்ந்தால் அதுவும் கற்பழிப்பே என்று பல்வேறு மனிதநேயக் கருத்துக்களைப் பெண்ணுரிமை வேண்டும் என்று
சொல்லியுள்ளார்.
பெண்களையும் சிறுவர்களையுங்கூட வாங்க போங்க என்று மரியாதயுடன் பேசினார்.சொந்த அம்மாவையே வாடி போடி என்று பேசுவோரும் மனுதர்ம வாசிகள் அதில் ஆண் யாரை வேண்டுமானாலும் புணரலாம் என்று படிக்கும் மேல்தாவிகளும் தயவு செய்து பெரியார் பற்றிப் பேசி அவமானப்பட வேண்டாம்.

Anonymous said...

நல்ல பதிவு வாத்தியாரைய்யா!

பெரியார் காலம் ஆகிப்போனதிலிருந்து பின்னோக்கிப் போனால்.. கடைசி கால் நூற்றாண்டுகள் மட்டுமே அவர் தீவிர நாத்திகராக இருந்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் அவர் செய்த கலகம் தான் இன்றளவும் பலரை கலங்க வைத்தபடி இருக்கிறது.

தோழன்

பாலா
(ப்ளாகர் சொதப்புது)

தருமி said...

யெஸ்பா,
தயவு செய்து ஒரு உதவி ..
நீங்கள் 'பாலா'ன்னு கையெழுத்திடாதீங்களேன். கொஞ்ச நாளா அந்தப் பேரைப் பார்த்தாலே ...
நீங்கள் 'யெஸ்பா' வாக இப்போதைக்காவது இருங்களேன்.

தருமி said...

திரு,
//'உயர்த்தலில்' இருக்கும் சுகம் விளங்கியது.//

உயர்த்தலில் சுகமென்றால் இறக்கம் கவலை தருவது தானே...

தருமி said...

தமிழன்,
//பெண்களையும் சிறுவர்களையுங்கூட வாங்க போங்க என்று மரியாதயுடன் பேசினார்//
இதைப் பற்றியும் ஒரு தடவை எழுதினேன்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி

Priya said...

Well...Oops I do not know typing in Tamil other wise I would have left my comment in Tamil..Gr8 to read ur blog...Understood how time changes everthing along with what men do...hmmm good work...Keep up...It is so nice to see dat u r frm Madurai..

Fantasy said...

Simply...Deep Thinking....

மா சிவகுமார் said...

மலரும் நினைவுகள், வரலாற்றுப் பதிவுகளுக்கு நன்றி. பெரியார் இந்த மண்ணில் நடந்த நாட்களின் அதிர்வுகளை உணர்ந்தவர்கள் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள்.

இன்னும் இது போல வரலாற்றுப் பதிவுகளை எழுதுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

தருமி said...

shanmugapriya,
//It is so nice to see dat u r frm Madurai..//

are you too?

Unknown said...

'அடிமை வாழ்வே விதி' என விதிக்கப்பட்டிருந்த மனிதனை, தன்மானம் கொள்ளச்செய்து, அவன்தன் சுயமரியாதைக்கு இழுக்கு வரும்போது, துணிவுடன் பேசக் கற்றுக் கொடுத்ததில், ஐயாவின் பங்கு மகத்தானது. போற்றுதற்குரியது.

படிப்பினை தரும் நல்ல அனுபவங்கள் ஐயா.

Jazeela said...

நல்ல பதிவு. நன்றி.

Thangamani said...

இன்றுதான் வாசித்தேன் தருமி. இயல்பாக நேர்மையாக எழுதப்பட்டிருக்கிறது. பெரியாரின் மேல் சிலருக்கு தோன்றும் இத்தனை வெறுப்புக்கும், துவேசமும் சொல்வதெல்லாம் அவர்கள் இழந்தது என்ன என்பதையே காட்டுகிறது. இத்தனை துவேசமும் அத்தனை அதிகாரமாய், அடக்குமுறையாய், திமிராய் இருந்தவைகள் தான். உங்களிடமிருந்து இது போன்ற பதிவுக்கு பதிவுகள் காலத்தின் பதிவுகளாகவும் இருக்கும். நன்றி.

ஓகை said...

விரல் படாமல் தண்ணீர் எடுப்பது என்பது தமிழர் மரபன்று. எந்த பாத்திரத்திலிருந்தும் தண்ணீர் மோந்து எடுக்கும்போது பாத்திரத்தின் விளிம்பைப் பிடித்தே செய்வது தமிழரின் வழக்கம். நீர் நிறைந்த குடத்ததினுள் கையை விட்டு அதன் விளிம்பைப் பிடித்து லாவகமாக தன் இடுப்பில் ஏற்றி வைத்துக் கொள்வது தமிழ்ப் பெண்டிர் வழக்கம். இன்றளவும். கண்ணாடி பாத்திரங்கள் புழங்குவது பெரும்பாலும் டீக்கடைகளில்தான். சைவ உணவகங்களில் குளிர்பாணங்களுக்கு மட்டுமே கண்ணாடி பாத்திரங்கள் பயன்படுத்தப்படும்.

(சீருடை அணிந்த சேவர்களை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கொண்ட உணவகங்கள்!)
நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் மேற்தட்டு உணவகங்களைத் தவிர்த்த உண்வகங்களில் பரிமாறுபவர்களை சர்வர் என்று அழைப்பது அவர்களை அவமானப் படுத்துவதாக உணரப்படும்.

வயது முதிர்ந்த நாவிதரை (பத்து வயது சிறுவனாக நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு) நான் ஒருமையில் அழைத்ததில்லை. என் வீட்டில் அனைவரும் அவ்வாறே. ஆனால் பொதுவாக எல்லா ஜாதியினரும் அவர்களை ஒருமையில் அழைப்பது அப்போது வழக்கம். இப்போது படித்திருந்தும் நாகரீகம் அடைந்திருந்தும் பலரும் அவ்வாறு அழைப்பது நின்றபாடில்லை. இன்று எந்தெந்த ஜாதியினர் மற்றவர்களை ஒருமையில் அழைக்கிறார்கள் என்று ஓர் ஒப்பீடு செய்தால் அது பல உண்மைகளை புலப்படுத்தும்.

தருமி said...

FANTASY,ஜெசிலா, சிவக்குமார், சுல்தான் ... மிக்க நன்றி

தருமி said...

தங்கமணி,

//இத்தனை வெறுப்பும், துவேசமும் சொல்வதெல்லாம் அவர்கள் இழந்தது என்ன என்பதையே காட்டுகிறது.//

திரு சொன்னதும் அதற்குப் பதிலாக நான் சொன்னதையும் திருப்பிச் சொல்கிறேன்:
//'உயர்த்தலில்' இருக்கும் சுகம் விளங்கியது........திரு சொன்னது//

//உயர்த்தலில் சுகமென்றால் இறக்கம் கவலை தருவது தானே... //

நன்றி

தருமி said...

ஓகை,
//விரல் படாமல் தண்ணீர் எடுப்பது என்பது தமிழர் மரபன்று.//

அப்படியா சொல்லுகிறீர்கள். எங்கள் வீட்டில் அந்த மரபு இருந்ததே.. எத்தனை முறை கொட்டு வாங்கியிருப்பேன்!

//(சீருடை அணிந்த சேவர்களை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கொண்ட உணவகங்கள்!)//
அதிகமாகக் கற்பனை செய்து விடாதீர்கள்.

//நாற்பது (அதையும் தாண்டி ..ஐம்பது?) ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் மேற்தட்டு (அப்படியெல்லாம் இல்லை; நானெல்லாம் அங்கு எப்படி அப்போது போயிருக்க முடியும்?!)உணவகங்களைத் தவிர்த்த உண்வகங்களில் பரிமாறுபவர்களை சர்வர் என்று அழைப்பது அவர்களை அவமானப் படுத்துவதாக உணரப்படும். //
நீங்கள் சொல்லும் waiter வந்ததெல்லாம் ரொம்ப நாள் கழித்து வந்ததாகத்தான் நினைவு.

//என் வீட்டில் அனைவரும் அவ்வாறே. ..//
ஒவ்வொரு வீட்டில் ஒவ்வொரு மரபு போலும். உங்கள் வீட்டில் இருந்த மரபை நான் அப்படி வெளியே "அடி" வாங்கித்தான் தெரிந்து கொண்டேன்.

நன்றி.

கருப்பு said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

விடாதுகருப்பு said...
எல்லாம் விதி என்று சொல்லி மதியைப் பயன்படுத்தாமல் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு பகுத்தறிவினைப் புகட்டி மனிதனாக்கிய பார் போற்றும் சீலர் எங்கள் பெரியார்.

அறுபுதமான பதிவு தருமி அய்யா.

மற்றபடி .......(கத்திரி..) ... சிலர் இங்கே தடவிப்பேச வந்திருக்கிறார்கள். எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது.

வழக்கம்போல இந்தப் பின்னூட்டத்தினையும் குப்பைக்கு அனுப்பி தாங்கள் மிகப்பெரிய அறிவுஜீவி என்று காட்டிக் கொள்ளுங்கள் தருமி சார்!

தருமி said...

வி.க.,
குப்பைக்கு அனுப்பினால் 'அறிவுஜீவி'ன்னா இப்போ என்ன? :)

நன்றி

கருப்பு said...

இதனைப் படியுங்கள் தருமி என்கிற அறிவு ஜீவி அவர்களே.

தருமி said...

மிஸ்டர் ஓகை,

நான் எழுதியதில் உங்களுக்குக் கருத்து வேறுபாடு இருப்பின் இங்கேயே அதை எழுதி அழகாக ஒரு விவாதம் செய்திருக்கலாம்; செய்திருக்க வேண்டும் நீங்கள். அதை விட்டு விட்டு வேறெங்கோ போய் பிலாக்கணம் பாடியிருப்பது அவ்வளவு அழகாகத் தெரியவில்லை. உங்கள் மேல் வைத்திருந்த கணிப்பும், மதிப்பும் தவறிப் போய்விட்டன.

//சமீபத்திய பதிவொன்றில் ஒரு பதிவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சீருடை அணிந்த சேவகர்கள் இருக்கும் உணவகத்துடன் ஒரு பிராமண உணவகத்தை ஒப்பிட்டு கண்ணாடிப் பாத்திர நாகரீகத்தை சிலாகிக்கிறார். இது மென்மையாகச் செய்யப்படும் வன்மையான பொய்ப் பிரச்சாரம்.// தடித்த எழுத்துக்கள் என்னுடையவைதான்.

* பெயரைச் சொல்லியே எழுதியிருக்க வேண்டியதுதானே?
* இரு உணவகங்களை ஒப்பிடுவதே தவறென்கிறீர்களோ? ஒருவேளை இரண்டில் ஒன்று 'ஒப்புவமை இல்லாத' ஒன்று என்ற நினைப்போ? எழுதியுள்ளதிலிருந்தே தெரியும் இரண்டுமே என் போன்றோர் போகும் சாதாரணக் கடைகள் என்று.
* கண்ணாடிப் பாத்திரத்தில் நாகரீகம் இல்லையா? இல்லை, அது டபாரா-தம்ளரில் தான் இருக்கிறதா என்ன?
* இதில் 'விரல் படாமல் தண்ணீர் எடுப்பது (கொடுப்பது) என்பது தமிழர் மரபன்று' என்று ஒரு விளக்கம் வேறு. வீட்டுக்கு வரும் ஒருவருக்கு விரல் முக்கியபடி தம்ளரில் தண்ணீர் கொடுப்பதுதான் மரபு என்பதே கொஞ்சம் வேடிக்கைதான்.
* சிலாகிக்க வேண்டியதைச் சிலாகிப்பதில் என்ன தவறு?

உங்கள் கடைசிப் பத்தியில் நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லியுள்ளது போல் அல்லாமல் தவறு செய்து திருந்தியவன் நான்; திருத்தப் பட்டவன் நான். திருந்தியதுக்குக் காரணம் என் மனது; திருத்தியவரின் மனதுக்குக் காரணம் நிச்சயமாக பெரியார் என்பது என் துணிபு. அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.

நான் எழுதியவைகளில் எதில் 'வன்மையான பொய்ப் பிரச்சாரம்'? இதில் எதெல்லாம் வன்மையான விஷயங்கள்; எவையெல்லாம் பொய்யென்று கூற முடியுமா? அப்படி நீங்கள் நினைத்திருக்கும் பட்சத்தில் அதை என் முகத்துக்கெதிராகவே கேட்டிருக்க வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு ஏனிந்த புறங்கூறல்? நன்றாகவா இருக்கிறது இது? என்ன பண்போ இது?

இதையெல்லாம் விடவும் அந்த உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் இட்டிருக்கும் மேற்கோள்: //இதையெல்லாம் பார்க்கும்போது, இத்தகைய பதிவுகள் ஒரு திட்டத்துடன் செயல்படுகின்றனவோ என்று ஐயுறுகிறேன். //

எழுதியவைகள் என் சொந்த அனுபவங்கள். இதில் மிகைப் படுத்தல் இல்லை; யாரையும் குற்றப் படுத்தவோ, குறைப்படுத்தவோ எடுத்த முயற்சியுமல்ல. என் கண்முன்னே நான் பார்த்த விஷயங்கள்; அதிலிருந்து நான் கற்ற விஷய்ங்கள். அவ்வளவே .. இதில் ஏன் உங்களுக்கு இப்படி ஒரு கோபம்?

காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் ...

சந்திப்பு said...

தருமி அய்யா அவர்களே, வணக்கம். தங்களது இளமைகால சிந்தானையோட்டம் வளமானது. வளமையானது. இனிமையானது. தற்காலத்தில் ஈ.வே.ரா.வை திராவிட இயக்க சுவர் விளம்பரங்களிலும், போ°டர்களிலும் கூட காண முடிவதில்லை என்பது முரண்பாடு. அதைவிட கொடுமையானது, பாபாவிடம் வித்தைகளை கற்றுக் கொண்டிருக்கிறது இளைய திராவிடத் தலைமுறை, இதற்கு நிச்சயம் ஈ.வே.ரா. காரணமாக இருக்க முடியாது! அம்மாவின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவது வரை சுயமரியாதை இன்றைக்கு படாத பாடுபடுகிறது. சாமிகளை தற்போது சர்வர் என்று அழைப்பதற்கு விஞ்ஞான வளர்ச்சியும், கல்வியறிவும், நவீன சிந்தனைகளுமே இதற்கு பெரும் துணை புரிந்திருக்கிறது என்பது விஞ்ஞானப்பூர்வ உண்மை! இதற்காக ஈ.வே.ரா.வை குறைத்து மதிப்பிடுகிறேன் என்று அர்த்தமல்ல; அவர் காலத்தில், சமூக வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகள் பெரும் பங்காற்றியுள்ளன என்பது மறுப்பதற்கில்லை.

G.Ragavan said...

எவரையும் மதிப்பாகச் சொல்வது சரியே. நீங்க வாங்க போங்க என்று..ஆனால் உயர்வாகச் சொல்வது? ஏதேனும் நல்லது செய்திருந்தால் சொல்லல் சரி. இல்லாமல் வெறும் பிறப்பு, தொழிலின் அடிப்படையில் மட்டும் உயர்வு தாழ்வு சொல்வது மிகத்தவறு. இதைக் கண்டிக்கும் எவரையும் பாராட்டத்தான் வேண்டும்.

எங்கள் தலைமுறையில் இது குறைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இன்னும் நிறைய செல்ல வேண்டும்.

ஓகை said...

//நான் எழுதியதில் உங்களுக்குக் கருத்து வேறுபாடு இருப்பின் இங்கேயே அதை எழுதி அழகாக ஒரு விவாதம் செய்திருக்கலாம்; செய்திருக்க வேண்டும் நீங்கள். அதை விட்டு விட்டு வேறெங்கோ போய் பிலாக்கணம் பாடியிருப்பது அவ்வளவு அழகாகத் தெரியவில்லை. உங்கள் மேல் வைத்திருந்த கணிப்பும், மதிப்பும் தவறிப் போய்விட்டன.//

உங்கள் பதிவில் நான் வைக்க வேண்டிய விவாதங்களை வைத்துவிட்டேன். நீங்களும் பதில் சொல்லியிருக்கிறீர்கள். அந்தப் பதிவுக்கு நான் இன்னும் போகவில்லை. நீங்கள் இந்தக் கேள்விகளை அங்கே கேட்டீர்களானால் பதில் சொல்ல கடைமைப் பட்டிருக்கிறேன். இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் செய்தியைப் பற்றிதான் நான் அங்கு எழுதியிருந்தாலும் அந்த விமர்சனம் அந்தப் பதிவின் பொருளுக்கு ஏற்பவே செய்யப்பட்டது.

உங்கள் மதிப்பிலும் கணிப்பிலும் நான் தாழ்ந்து போனது என் துர்-அதிர்ஷ்டம்தான்.

// பெயரைச் சொல்லியே எழுதியிருக்க வேண்டியதுதானே?//

நான் கூறிய கருத்துகளுக்கு உங்கள் பெயரைக் குறிப்பிட அவசியமில்லை என்று நான் எண்ணினேன்.

//என் முகத்துக்கெதிராகவே கேட்டிருக்க வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு ஏனிந்த புறங்கூறல்?//

உங்கள் கருத்துடன் இங்கு ஒத்துப் போய்விட்டு அங்கு மாறுபடவில்லை. இரண்டு பதிவுகளிலும் மாற்றுக் கருத்துதான். இரண்டு பதிவுகளிலும் பதிவுக்குத் தொடர்பானதயே எழுதியிருக்கிறேன்.

அந்த பதிவு தொடர்பான உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

ஜோ/Joe said...

தருமி,
வயது காரணமாக பெரியாரை நேரடியாக பார்த்த்து கேட்டறியாத என்னைப்போன்றோர் இன்று பெரியாரை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் பெரிதும் உதவியிருப்பவர்கள் பெரியார் தொண்டர்கள் அல்ல .மாறாக பெரியார் எதிர்ப்பாளர்கள் . எப்படிப்பட்ட மனிதர்களின் வசவுக்கும் சொல்லடிக்கும் ஒரு மனிதன் ஆளாகிறான் என்பதை வைத்தே சில நேரங்களின் அம்மனிதனின் தனிச்சிறப்பை அறிந்து கொள்ள முடியும் .அந்த வகையில் வாழ்க வசவாளர்கள்.

சிவபாலன் said...

தருமி அய்யா

நல்ல பதிவு!

பங்காளி... said...

பெரியாரும், அம்பேத்கரும் இல்லாது போயிருப்பின் நான் இன்றைக்கு இருக்கும் நிலமையையோ/வாழ்க்கைத் தரத்தினையோ கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.....

அவமானங்களை நான் சந்திக்க்காவிட்டாலும்.....என் தந்தையாரின் அனுபவங்கள்...எனக்குள் வாழ்நாள் முழுக்க வடுவாய் இருக்கும்.......

முயற்சியும், உழைப்பும் இருந்தால் யாரும் மேலே வரலாம்...ஆனால் அதற்கு வாய்ப்பேற்படுத்திக் கொடுத்த இவர்கள் மஹாத்மாக்களிலும் மேலானவர்கள்....

Boston Bala said...

பகிர்விற்கு நன்றி

heritage said...

இந்தப் பதிவுக்கு நன்றி

சாரா

செல்வநாயகி said...

பதிவுக்கு நன்றி.

அரவிந்தன் நீலகண்டன் said...

சாமி சர்வர் ஆனதுக்கு ஈவெரா காரணமா? இதுதான் பகுத்தறிவின் லட்சணமா? ஹும்...ஒரு இனவாத வெறுப்பியலுக்கு வெளியே ஈவெரா என்ன ஐயா சாதித்தார்? அவரது 'பகுத்தறிவு' பிரச்சாரமே பகுத்தறிவற்ற பொய்யின் அடிப்படையில் உருவானதுதானே ஐயா. எல்லா பாரம்பரிய சமுதாயங்களிலும் இத்தகைய மரியாதை விளிகள் இருக்கும். இதற்கும் சுயமரியாதைக்கும் என்ன தொடர்பு? இன்னும் சொன்னால் கீழ்வெண்மணியில் தலித்துகளை எரித்தவர்களுக்கு வக்காலத்து வாங்காத குறையாக அறிக்கை விட்ட ஒருவன் சுயமரியாதையும் பகுத்தறிவும் பேசி ஊரை ஏமாற்றி போன இடமெல்லாம் பைசா பார்த்திருக்கிறான். அந்த ஆளின் பெயர் பெரியார் என்றால் அது போல மடத்தனம் எதுவுமில்லை. தருமியின் சிந்தனையின் பகுத்தறிவின்மையை காட்டும் பதிவு இது.

தருமி said...

அரவிந்தன்,

//சாமி சர்வர் ஆனதுக்கு ஈவெரா காரணமா?//

ஆம்.

//தருமியின் சிந்தனையின் பகுத்தறிவின்மையை காட்டும் பதிவு இது.//

நல்லது.

//இதுதான் பகுத்தறிவின் லட்சணமா?
அந்த ஆளின் பெயர் பெரியார் என்றால் அது போல மடத்தனம் எதுவுமில்லை.//

முன்பெல்லாம் இந்த நடையில் நீங்கள் எழுதியதாக நினைவில்லையே. கோபம் அதிகமாகி விட்டதோ? அப்படித்தான் இருக்கணும்.

கருப்பு said...

//சாமி சர்வர் ஆனதுக்கு ஈவெரா காரணமா? இதுதான் பகுத்தறிவின் லட்சணமா?//

§ÅÚ º¡¾¢Â¢ø À¢Èó¾¡ø º÷Å÷ ±ýÚõ À¡ôÀ¡Ã ƒ¡¾¢Â¢ø À¢Èó¾¡ø º¡Á¢ ±ýÚõ «¨Æì¸î ¦º¡ø¸¢È¡Ã¡ «¨ÃÅ¢ó¾ý?

±ÉìÌì ¸ÕòÐò ¦¾Ã¢óÐ ±ý 㾡¨¾Â÷¸û ŨÃìÌõ À¡÷ôÀɨà º¡Á¢ ±ý§È «¨Æò¾É÷. ±ÉÐ ¸¡Äò¾¢ø þý¨ÈìÌ ¿¡ý ´Õ À¡ôÀ¡¨É ¼¡ §À¡ðÎ §À͸¢§Èý ±ýÈ¡ø ±í¸û «ö¡ ¦Àâ¡÷ ±í¸ÙìÌì ¸üÚò ¾ó¾ À¡¼õ¾¡ý.


//ஹும்...ஒரு இனவாத வெறுப்பியலுக்கு வெளியே ஈவெரா என்ன ஐயா சாதித்தார்?//

¦ÀñÏâ¨Á ÀüÈ¢ «Å÷ §Àº¢ÂÐ þó¾ ¦Åí¸¡ÂòÐìÌ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä¡? ±ØòÐî º£÷¾¢Õò¾õ ¦¸¡ñÎ Åó¾Ð þó¾ ¦ÅûÇô âñÎìÌ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä¡? ¯¼ý ¸ð¨¼ ²Ú¾¨Ä ´Æ¢ì¸ À¡ÎÀ𼡧Ã? Á¾¢¨Â À¡ôÀ¡É¢¼õ «¼Ì ¨ÅòÐÅ¢ðÎ Áó¨¾Â¡ö þÕó¾ Üð¼ò¨¾ ÁÉ¢¾Ã¡ö Á¡üÈ¢ì ¸¡ðʧ¾ ±í¸û «ö¡¾¡§É?

//அவரது 'பகுத்தறிவு' பிரச்சாரமே பகுத்தறிவற்ற பொய்யின் அடிப்படையில் உருவானதுதானே ஐயா.//

¬Á¡õ ¦Àâ¡÷ ¦À¡ö ¦º¡ýÉ¡÷. სƒ¢ ÌÄì¸øÅ¢¨Â ¬¾Ã¢ò¾¾ý ãÄõ ¾ý ÌÄÓõ ƒ¡¾¢Ôõ ¦ºÆ¢òÐ ÅÇà §ÅñÎõ ±É ¿¢¨Éò¾¡÷. ÅóÐð¼¡Ûí¸.

//எல்லா பாரம்பரிய சமுதாயங்களிலும் இத்தகைய மரியாதை விளிகள் இருக்கும். இதற்கும் சுயமரியாதைக்கும் என்ன தொடர்பு?//

¬Á¡õ ±øÄ¡ ƒ¡¾¢Â¢Öõ þÕìÌõ. ¬É¡ø §¾Å÷, ¦ºÇáŠÊà ºÓ¾¡Âò¾¢Öõ ÁüÈ À¡ôÀ¡Ã «ÊÅÕʸǢý ºÓ¾¡Âò¾¢Öõ Á⡨¾ þÕìÌõ. «ó¾ Á⡨¾Â¢ý °üÚì ¸ñ½¡¸ò¾¡ý ƒ¡øá §À¡Î¸¢È¡÷¸û À¡ôÀ¡ÛìÌ!


//இன்னும் சொன்னால் கீழ்வெண்மணியில் தலித்துகளை எரித்தவர்களுக்கு வக்காலத்து வாங்காத குறையாக அறிக்கை விட்ட ஒருவன் சுயமரியாதையும் பகுத்தறிவும் பேசி ஊரை ஏமாற்றி போன இடமெல்லாம் பைசா பார்த்திருக்கிறான். அந்த ஆளின் பெயர் பெரியார் என்றால் அது போல மடத்தனம் எதுவுமில்லை.//

«¼ ¦Åñ¨½. ÅÃÄ¡Ú ¦¾Ã¢ó¾¡ø §ÀÍ. þø¨Ä ±ýÈ¡ø ¦À¡ò¾¢¸¢ðÎ §À¡¼¡ ¦À¡Èõ§À¡ìÌ ¿¡¾¡È¢. ¯É즸øÄ¡õ ±ýÉ ¦¾Ã¢Ôõ? ¯ý ƒ¡¾¢¨Â ¾£ñ¼ò ¾¸¡¾ÅýÛ ´Ð츢 ¨Åò¾¢Õó¾¡§É À¡ôÀ¡ý «Ð §¿¡ìÌ ¦¾Ã¢ÔÁ¡? ¿£ ¦ºýÚ «Á÷ó¾¡Öõ ¾¢ñ¨½¨Â À¡ôÀ¡ý ¸Ø×Å¡ý ±ýÀÐ ¦¾Ã¢ÔÁ¡ «¨Ã§Å측Î?

//தருமியின் சிந்தனையின் பகுத்தறிவின்மையை காட்டும் பதிவு இது.

//

«Á¡õ ¾ÕÁ¢ìÌ ÀÌò¾È¢× þø¨Ä. ¬É¡ø À¡ôÀ¡É¢ý Ìñʨ ¿ìÌõ «ÊÅÕÊ ¿¡ö¸ÙìÌ þÕ츢ÈÐ ÀÌò¾È¢×. §À¡í¸¼¡ §À¡ì¸ò¾ Àºí¸Ç¡!

இலவசக்கொத்தனார் said...

தருமி,

இந்தப் பதிவு எப்படியோ கண்ணில் படாமல் போய்விட்டது. இன்று சிவா சொல்லித்தான் வந்தேன்.

என் எண்ணங்கள்.

பொதுவாக நான் கண்டது என்னவென்றால் நெடு நாட்கள் இருக்கும் சிறிய கடைகளில் சுகாதாரம் கொஞ்சம் கம்மிதான் அது நீங்கள் சொல்லும் சரஸ்வதி பவனாக இருக்கட்டும் அல்லது நான் ஒரு காலத்தில் விரும்பிச் செல்லும் (வீட்டுக்குத் தெரியாமல்!) புரோட்டா சால்னா கடையாகட்டும் அப்படித்தான். அப்படி இருந்தும் அவர்களுக்கு என்று ஒரு வாடிக்கையாளர் கூட்டம் இருக்கும். என் நினைவு தெரிந்து நானே அய்யரே என்றும் பாய் என்றும்தான் அங்கு வேலை பார்ப்பவர்களை விளித்திருக்கிறேன். அதற்குக் காரணம் அங்கு வேலையில் இருப்பவர்கள் அவர்கள்தான், பலசரக்குக் கடைகளில் அண்ணாச்சி என விளிப்பது போல்தான் அது.

ஆனால் அதற்குப் பின் வந்த கடைகளிலும் சரி, கொஞ்சம் பெரிய ஹோட்டலாய் இருந்தாலும் சரி. சுகாதாரமும் மேலாக இருக்கிறது. அதற்கான விழிப்புணர்ச்சியும் அதிகமாகி விட்டது. பலதரப்பட்ட மக்கள் வேலை செய்வதால் ஹலோ என்றும் எக்ஸ்கியூஸ் மி என்றும் விளிக்கத் தொடங்கிவிட்டோம். இன்று சர்வர் என்றும் வாட்டர் பாய் என்றும் கூப்பிட்டால் அவர்களுக்கு எவ்வளவு கோபம் வரும் இல்லையா?

அடுத்தது எங்கள் வீட்டில் வேலை செய்தவரை நானும் எனது குடும்பத்தினர் போலவே ஒருமையில்தான் விளித்திருக்கிறேன். அப்பொழுது என் நண்பர்கள் எல்லார் வீட்டிலும் அப்படித்தான். (மற்றவர்கள் முத்திரை குத்தும் முன் சொல்கிறேன் - அவர்களில் எல்லா மதத்தினரும் பல ஜாதியினரும் உண்டு.) அந்த வயதில் அது தவறென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அது போல் என் பையன் யாரையாவது கூப்பிட்டால் நான் அவன் மண்டையில் ஒன்று போடுவேன்.

இவையெல்லாம் படிப்பறிவாலும் அனுபவத்தாலும் வருவதுதான். என்னைப் பொறுத்த வரையில் இதற்கு திராவிட இயக்கமோ, பகுத்தறிவு இயக்கமோ, பெரியாரோ எந்த விதத்திலும் தேவைப்படவில்லை.

இந்த தமிழ்மணம் வரும் வரையில் இவற்றுடன் எனக்கு மிகக் குறைந்த அளவு பரிச்சியமே. உங்கள் மாற்றத்திற்கு அவர்களுடைய பங்கு அதிகமாக இருந்திருக்கலாம். என் மாற்றத்தில் அவர்களுடைய பங்கு இல்லவே இல்லை.

என் போன்று பலரும் இருக்கலாம். நானாக அறிந்து கொண்டு என்னை மாற்றிக் கொண்டதுக்கு வேறு யாருக்கும் க்ரெடிட் கொடுக்க மனம் ஒப்பவில்லை. அதனால் இந்த மாற்றங்களுக்கு பெரியார் மட்டுமே காரணம் என்ற கருத்து (நீங்கள் அப்படிச் சொல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தால் எனக்கு அப்படித் தோன்றுவதால்தான் இந்த விளக்கம்.) என்னைப் பொறுத்த வரை சரி இல்லை.

வெற்றி said...

உங்களின் இளம்பிராயத்து அனுபவத்தை மிகவும் அழகாக, இரசிக்கும் வண்ணம் சொல்லியுள்ளீர்கள்.

தருமி said...

நன்றி வெற்றி

தருமி said...

கொத்ஸ்,
ஒரு வித்தியாசம் நீங்கள் உணரவில்லை. நீங்கள் சொல்வது 70களின் கடைசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சொல்வது 50ன் ஆரம்பக் கட்டம்.
எதற்கும் சித்தப்பா, அப்பா, பெரியப்பா இவர்களிடம் கேட்டுப் பாருங்களேன்.

குழலி / Kuzhali said...

//இவையெல்லாம் படிப்பறிவாலும் அனுபவத்தாலும் வருவதுதான். என்னைப் பொறுத்த வரையில் இதற்கு திராவிட இயக்கமோ, பகுத்தறிவு இயக்கமோ, பெரியாரோ எந்த விதத்திலும் தேவைப்படவில்லை.
//
என்ன செய்வது பிற சாதியினருக்கு வேண்டுமானால் படிப்பறிவு தற்போது சில ஆண்டுகளாக(ஒரு 20 அட 30 வேணாம் 50 வருடங்கள்னு வைத்துக்கொள்வோம்) ஆனால் காலம் காலமாக சில சமூகத்தினருக்கு படிப்பறிவு இருந்ததே அப்போது குறைந்தது அந்த படிப்பறிவு மிக்கவர்களாவது மரியாதை கொடுத்து பேசினார்களா?

படிப்பு என்பதையெல்லாம் விட இது அளிக்கப்பட்டது இது என் தலைவிதி, இப்படி அவர்கள் கூப்பிட்ட்டால் தப்பில்லை என்பது மாறி சுயமரியாதை உணரப்பட்டதே இதற்கு காரணம், அந்த சுயமரியாதையை உணரவைத்ததில் பெரியார் மற்றும் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிக மிக அதிகம்....

arunagiri said...

தருமி,

நீங்கள் எழுதிய இரண்டாவது விஷயத்தைப்பற்றி பேசுகிறேன்:
நீங்கள் செய்த ஒரு மரியாதைக்குறைவை சுட்டிக்காட்டிய தொழிலாளர் கடையில் பெரியார் படத்தைப்பார்த்ததனால் இவ்வாறு எழுதினீர்கள், அவர் உங்களைத் திருத்தியதற்கும் பெரியாருக்கும் முடிச்சுப்போடுகிறீர்கள்.

இதுபோல வேறு ஒரு நல்லவர் வீட்டில் சங்கராசாரியார் படத்தையோ சாய்பாபா படத்தையோ பார்த்து, "ஆஹா, இந்த ஆட்களால்தான் இவர் நல்லவராக இருக்க முடிகிறது" என்று சொன்னால் அதனையும் ஒப்புக்கொள்வீர்களா?

சிறுவயதில் எனது பார்ப்பன நண்பனின் வீட்டிற்கு விளையாடச் செல்கையில் கவனித்திருக்கிறேன்: "காய்கறிக்காரன் வந்திருக்கிறான் என்றோ, கீரைக்காரி வந்திருக்கா என்றோ" சொன்னால் வேப்ப விளாரால் பின்னி விடுவார். "காய்கறிக்காரர் வந்திருக்கார், கீரைக்காரம்மா வந்திருக்காங்க"னு சொல்லு என்பார். அவர் வீட்டில் சங்கராசாரியார் படம்தான் பார்த்திருக்கிறேன். அதே சமயம்,
"கலப்படக்கடை" என்றும் "அளவுகளில் ஏமாற்றுபவர்" என்றும் ஊராரால் அறியப்பட்ட எண்ணெய்க்கடை செட்டியார் கடையில் ஈவேரா படம் பார்த்திருக்கிறேன். கறுப்புசட்டை போட்டுக்கொண்டு ஊர்வலம் போவார்; அந்த ஊர்வலத்தில் பார்ப்பனப்பெண்கள் பற்றி ஆபாச கோஷங்கள் எழுப்பப்படுவதைக் கேட்டிருக்கிறேன். தாசில்தார் அய்யர் வீட்டின் பக்கம் ஊர்வலம் வருகையில் அவ்வீட்டின்மேல் சரமாறியாக சரளைக்கல்கள் வீசியெறியப்பட்டதை அவ்வீட்டெதிரே இருந்த மருந்துக்கடையில் இருந்து பார்த்தேன். மருந்துக்காரர் என்னை உள்ளே இழுத்து ஷட்டர் போட்டார். சரளைக்கல்கள் அவ்வீதியில் இருக்கவில்லை, எனவே வேறு எங்கிருந்தோ திட்டமிட்டு எடுத்துவரப்பட்டது என மருந்துக்கடை ஊழியர்கள் பேசிக்கொண்டார்கள்.

நீங்கள் சொன்ன நிகழ்ச்சிக்கும் ஈவேராவிற்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையோ - நான் கண்ட நிகழ்ச்சியை வைத்துப்பார்க்கையில், இன்று நடக்கும் தெரு வன்முறை ரவுடி அரசியலிற்கும், அரசியலில் ஆபாசக்கூச்சல்கள் மலிந்து போனதற்கும், ஈவேராவிற்கும் அதிகத்தொடர்பு உண்டென்ற முடிவுக்குக்கூட வரமுடியும்தான், இல்லையா?

Unknown said...

தருமி அவர்களே

உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்
கேரள குடிவார மசோதா பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள்
சமிபத்தில் திண்ணையில் கூட அதை பற்றிய வெளியீடு வந்துள்ளது.
இந்த சங்கதிகள் அறியும்போது பெரியாரின் பணி எவ்வளவு கடுமையான பாதிப்பை பிராமணர்களுக்கு கொடுக்கும்
என புரிகிறது.

வோட்டாண்டி said...

//பெண்ணைத் திருமணம் செய்வது முக்கியமாகச் சந்ததி விருத்திக்கும் இல்லறத் துணைக்கும்.

என் நிறுத்திடீங்க.. வீட்டு வேலை செய்ய..சமைக்க..துணி துவைக்க..ஆசைகள தணிசிக்க..
ஒரு comma போட்டு வைங்க.. இப்பதான் புரியுது குழந்தை பிறக்கவில்லைன ஏன் ஆண்கள்(அது ஆண் மேலய குறை இருந்தாலும்) இன்னொரு திருமணம் பண்ணிகிராங்கனு தெரியுது.. சந்ததி விருத்தி ஆவணும்ல

//தனது பொன்னையும், பொருளையும், புகழையும் காட்டி ஓர் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை நாசாமாக்கியவர். //
அப்படி பெரியார் திருமணம் பண்ணாட்டி மணியம்மை வேறு ஒருவரை திருமணம் பண்ணிக்கிற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை.. பெரியார் திருமணம் செய்வதற்கு முன்பும் பின்பும் பெரியாருக்கு ஒரு செவிலியகவே அவர் செய்யல்ப்பட்டார்..

ஒண்ணு சொல்ல உட்டீங்க..ஐயோ பாவம் அன்னை தெரசா..நோய் நோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரிடம் sympathy(பரிதாபம்) உருவாக்கி அவரை social servicela ஈடுபட வச்சிடாங்க.. இல்லன அவங்க திருமணம் பண்ணிட்டு சந்தோஷமா இருந்திருப்பாங்க..பின்குறிப்பு: wednesday படத்தில் நாயகன் இறுதிவரை பெயரை கூற மாட்டார். காரணம் பெயரின் மூலம் அவரது மதம் தெரிந்து விடும்.. அப்பறம் அதை வைத்து அரசியல் செய்வார்கள்.. இதே காரணத்தினால் தான் நான் முகமூடி அணிந்திருக்கேன்..

Jayabarathan said...

ஜெயபாரதன் சொல்வது:

to வோட்டாண்டி

நண்பரே

நீங்களும் முகமூடி போட்டு ஏன் தர்க்கம் செய்கிறீர்கள் ?


/// மகள் வெளியே என்று கூறிக் கொண்டு தனக்குப் பணிசெய்த 21 வயது மணியம்மையாரை 70 வயது பெரியார் மணந்து கொண்டது. பெரியாரின் சொத்துக்கள் மணியம்மைக்குச் சேர வேண்டும் என்பது அவரது ஒரு நோக்கம்.//

/// கரணம் காமம் இல்லை..சொத்து சேர வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடீர்கள்.. என்ன செய்ய..தத்து மகுளுக்கு சொத்துக்கள் போய் சேராது என்று அந்த காலத்தில் சட்டம் இருந்தது..அதனால் தான் சட்டப்படி (மட்டுமே) மனைவி ஆக்கினார்.///

++++++++++

பெண்ணைத் திருமணம் செய்வது முக்கியமாகச் சந்ததி விருத்திக்கும் இல்லறத் துணைக்கும். பகுத்தறிவுப் பெரியார் ஒருவர்தான் உலக வரலாற்றில் இப்படி வேடிக்கையான சொத்துத் திருமணம் செய்து ஒரு வாலிபப் பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்தவர் !!! தனது பொன்னையும், பொருளையும், புகழையும் காட்டி ஓர் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையை நாசாமாக்கியவர்.

அதை வெறுத்து அவரது பிரதான சீடரான அண்ணாத்துரையும் அவரது தம்பிமார்களும் பெரியாரை விட்டு விலகிப் போனதும் வரலாற்று முதன்மை யாகும்.


சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பரே,

ஈ.வே. ராமசாமி நாயக்கரே தன் பெயரை மறைக்காமல், மாற்றாமல் தைரியமாய் தான் இந்து மதத்திலிருந்து விலக வில்லை என்றும் இஸ்லாமிய மதத்தில் சேர விரும்ப வில்லை என்றும் கூறியவர்.

அன்னை தெரேஸா வேலைக்கு வைத்துக் கொண்ட எல்லாப் பெண்களும் அநாதைகள். கள்ளப் பிள்ளைகள் என்று "கண்ணிய" ஆண்கள் யாரும் கலியாணம் செய்ய ஏற்றுக் கொள்ளப்படாதவர்.


சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

அன்பு நண்பர் தருமி,

தமிழகத்தின் பெரியார் தி.க. வில் எந்த ஒழுக்க நெறியும் இல்லாததால் அவரது பிரதான சீடர் அண்ணாத்துரை முதன்முதலில் "கடமை, கன்ணியம், கட்டுப்பாடு" என்னும் தாரக மந்திரத்தைக் கொண்டு வந்து விலகி தி.மு.க. உண்டாக்கினார். அண்ணாவுக்குப் பிறகு அந்த மந்திர நெறிகள் காணாமல் போயின. ஐன்ஸ்டைன் அவ்வித ஒழுக்க நெறிகள் இல்லாமல் போனதைத்தான் குறிப்பிடுகிறார்.

பெரியாரின் சீடர்கள்தான் மெய்யாகப் பெரியாரைப் பிரதிபலிக்கிறார். சாக்ரெடிஸ் ஞானியின் சீடர்களைப்
பார்த்தால் சாக்ரெடிஸ் யாரென்று சொல்லி விடலாம்.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

சி. ஜெயபாரதன் கேட்கிறார் ..

நண்பர்களே

தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத, இன, கடவுள் ஒழிப்புக்கு மிகவும் பாடுபட்டார்.

எந்த ஜாதி, எந்த மதம், எந்த இனம், எந்தக் கடவுள் இதுவரைத் தமிழ் நாட்டில் ஒழிந்துபோய் உள்ளது ?


சி. ஜெயபாரதன்.

Jayabarathan said...

சி. ஜெயபாரதன் கேட்கிறார் ..

நண்பர்களே

தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாதி, மத, இன, கடவுள் ஒழிப்புக்கு மிகவும் பாடுபட்டார்.

எந்த ஜாதி, எந்த மதம், எந்த இனம், எந்தக் கடவுள் இதுவரைத் தமிழ் நாட்டில் ஒழிந்துபோய் உள்ளது ?


சி. ஜெயபாரதன்.

Jayabarathan said...

ஜெயபாரதன் சொல்கிறார்:

மனித குலத்தில் பெரும்பான்மையான மனிதர் மனித நேயத்துடன் உலகில் இருப்பதற்கு ஏசுவும், நபியும், புத்தரும், வள்ளுவரும் காரணம் என்பது என் கருத்து.

பைபிளும், குர்ரானும், கீதையும், குறளும் இல்லாமல் வேறு நீதி புகட்டும் நூல்கள்
தந்தை பெரியார் எழுதியிருக்கிறரா ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி,


தந்தை பெரியாரைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள்:

1. தமிழரிடையே இருந்த மூடப் பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டினார். ஆனால் அவர் கையாண்ட முறைகள் கடூரமானவை. பிள்ளையார் சிலையை உடைத்தல், கம்ப ராமாயண இலக்கியத்தை எரித்தல், திருக்குறளைப் பார்ப்பனர் நூல் என்று இகழ்தல், தமிழைக் காட்டுமிராண்டிகள் மொழி என்று அவமானப் படுத்தல், பார்ப்பனத் தமிழரை எல்லாவற்றுக்கும் காரணமாகத் திட்டுவது, கடவுளை நம்புவோரை எல்லாம் "முட்டாள்" என்று பட்டம் கொடுப்பது. இவை அநாகரீகச் செயல்கள். இவை அனைத்தும் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்.

2. இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்காது பெரியாரும் அவரது சீடர்களும் எதிர்த்து வேலை செய்தார்கள். இந்திய சுதந்திர தினத்தைத் "துக்க தினமாகக்" கொண்டாடிய பகுத்தறிவாளி பெரியார் !!! பெரியாருக்கு இந்தியப் பாராளு மன்றக் குடியாட்சி முறையில் நம்பிக்கை இல்லாமல் போனது.

3. நாடு விடுதலை பெற்ற பிறகு, எல்லை தெரியாத "திராவிட நாடு" பிரிவினைக்குத் திட்டமிட்டுத் தோல்வி யடைந்தவர்.

4. மகள் வெளியே என்று கூறிக் கொண்டு தனக்குப் பணிசெய்த 21 வயது மணியம்மையாரை 70 வயது பெரியார் மணந்து கொண்டது. பெரியாரின் சொத்துக்கள் மணியம்மைக்குச் சேர வேண்டும் என்பது அவரது ஒரு நோக்கம்.

5. நாலாவது காரணத்தால் சீடர்கள் குருவை விட்டுப் பிரிந்து அவருக்கு எதிராய் "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று திருமூலர் பாக்களின் வரிகளை கூறிவந்தார்.


சி. ஜெயபாரதன், கனடா

Jayabarathan said...

நண்பர் தருமி,


தந்தை பெரியாரைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள்:

1. தமிழரிடையே இருந்த மூடப் பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டினார். ஆனால் அவர் கையாண்ட முறைகள் கடூரமானவை. பிள்ளையார் சிலையை உடைத்தல், கம்ப ராமாயண இலக்கியத்தை எரித்தல், திருக்குறளைப் பார்ப்பனர் நூல் என்று இகழ்தல், தமிழைக் காட்டுமிராண்டிகள் மொழி என்று அவமானப் படுத்தல், பார்ப்பனத் தமிழரை எல்லாவற்றுக்கும் காரணமாகத் திட்டுவது, கடவுளை நம்புவோரை எல்லாம் "முட்டாள்" என்று பட்டம் கொடுப்பது. இவை அநாகரீகச் செயல்கள். இவை அனைத்தும் நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்.

2. இருபதாம் நூற்றாண்டில் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்காது பெரியாரும் அவரது சீடர்களும் எதிர்த்து வேலை செய்தார்கள். இந்திய சுதந்திர தினத்தைத் "துக்க தினமாகக்" கொண்டாடிய பகுத்தறிவாளி பெரியார் !!! பெரியாருக்கு இந்தியப் பாராளு மன்றக் குடியாட்சி முறையில் நம்பிக்கை இல்லாமல் போனது.

3. நாடு விடுதலை பெற்ற பிறகு, எல்லை தெரியாத "திராவிட நாடு" பிரிவினைக்குத் திட்டமிட்டுத் தோல்வி யடைந்தவர்.

4. மகள் வெளியே என்று கூறிக் கொண்டு தனக்குப் பணிசெய்த 21 வயது மணியம்மையாரை 70 வயது பெரியார் மணந்து கொண்டது. பெரியாரின் சொத்துக்கள் மணியம்மைக்குச் சேர வேண்டும் என்பது அவரது ஒரு நோக்கம்.

5. நாலாவது காரணத்தால் சீடர்கள் குருவை விட்டுப் பிரிந்து அவருக்கு எதிராய் "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்று திருமூலர் பாக்களின் வரிகளை கூறிவந்தார்.


சி. ஜெயபாரதன், கனடா

Jayabarathan said...

மதங்களைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள் : நான் ஒரு மதவாதி விஞ்ஞானி அல்லன். இந்துவாயினும் பிற மதத்தாரைச் சகோதரராய் மதிப்பவன். அதாவது நான் ஒரு மதச் சகிப்பாளி. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், சகிப்புத்தனம் ஆகியவற்றை விடுதலை இந்தியாவில் ஏற்றுக் கொள்பவன்.


http://en.wikipedia.org/wiki/Major_religious_groups [உலக மதங்களைப் பற்றி ஓரிழை]

World Population: 6,706,993,152 (6.7 பில்லியன்) (July 2008 est.)

The Christian Science Monitor, in a 1998 article "Top 10 Organized Religions in the World," provides a listing of the largest "organized religions":[4]

# Religion Number of Adherents

1
Christianity 1.9 billion
2 Islam 1.1 billion
3 Hinduism 781 million
4 Buddhism 324 million
5 Sikhism 19 million
6 Judaism 14 million
7 Bahá'í Faith 6.1 million
8 Confucianism 5.3 million
9 Jainism 4.9 million
10 Shinto 2.8 million

Other major religions, not found on the above lists, are:

Chinese traditional (including Taoism and Confucianism): 394 million
Tribal religions (Shamanism, Animism): roughly 300 million
African traditional and diasporic (including Vodou): roughly 100 million[5]
Juche (North Korean state ideology): 19 million
Cao Dai: 4 million
Tenrikyo: 2 million
Neopaganism: 1 million
Unitarian Universalism: 800,000
Rastafarianism: 600,000
Scientology: 500,000
++++++++++++++

The world's principal religions and spiritual traditions may be classified into a small number of major groups or world religions. According to the 2005 survey of Encyclopædia Britannica, the vast majority of religious and spiritual adherents follow Christianity (33% of world population), Islam (20%), Hinduism (13%), Chinese folk religion (6.3%) or Buddhism (5.9%). The irreligious and atheists make up about 14%, and about 4% follow indigenous tribal religions.

A number of classical "world religions" (including Sikhism, Judaism, Bahá'í, Jainism, Shinto and others) are each followed by under 0.5% of the world's population; they are sometimes considered world religions in terms of cultural significance and historic recognition, but are not deemed to be "major religious groups" due to their size.

++++++++++++++++++++++++

The Universal (80% - 20%) Theory

கடந்த 4000 ஆண்டுகளாக [பழைய ஏற்பாடு மோஸஸ் முதலாக] மதப்போர்கள், இனப்போர்கள், குழுப்போர்கள் பல நடந்து வந்துள்ளன. இப்போதும் மதப்போர்கள், இனப்போர்கள், ஜாதிப்போர்கள் மாநிலப் போர்கள் பல நடக்கின்றன. எதிர்காலத்திலும் நடக்கும் அவை. இப்போர்கள் எப்போதும் நிறுத்தம் அடையா !!!

ஆனால் இந்த மத, இனப் போர்கள் நடந்தாலும் மதங்கள் அழிய வில்லை. அவற்றை அழிக்கவும் முடிய வில்லை. காரணம் மதம் என்பது மனிதக் குருதியில் இரண்டறக் கலந்துவிட்ட ஓர் அழியா ரசம்.

ஆனால் இந்த மதப்போர்களை உண்டாக்குவோர் சமூகத்தில் உள்ள 20% (சுமார்) அடிப்படை மூர்க்க வர்க்கத்தினர். மீதியுள்ள 80% மதத்தார் அடிப்படை வன்முறை மூர்க்கரால் இன்னல் அடைகிறார். இந்த 80% மதத்தார் பொதுவாக மனித நேய முள்ளவர். அவர்கள்தான் விடாமல் மதங்களைக் கடைப்பிடித்து வருகிறார்.

கற்கால காட்டுமிராண்டிகளைத் தற்கால நாகரீக மாந்தராய் ஆக்கியவை மதங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இது வரலாறு. உலக இனங்களை இணைக்கும் உன்னத சக்தி வாய்ந்தவை மதங்கள் என்று பண்டித நேரு கூறுகிறார். வெறும் பகுத்தறிவு வாதங்கள் மட்டும் மக்களை இணைக்க முடியாது. உதாரணம் தி.க, திமுக, அதிமுக போன்ற பெரியாரின் சின்னா பின்னமான சந்ததிகள்.

பைபிள், குர்ரான், பகவத் கீதை போல் உன்னத ஒழுக்க நெறி மதநூல்களே உலக இனங்களை இதுவரை ஒன்று சேர்த்து வைத்துள்ளன.

மதங்கள் மாந்தரைப் பிரிக்கும் சக்தி போல் தெரிந்தாலும் அவை மக்களை ஒன்றாய்ப் பிணைப்பவை. அதாவது மதங்கள் "பிரிக்கும் பிணைப்புகள்." Another example of your Oxymoron Theory.


சி. ஜெயபாரதன், கனடா.

Jayabarathan said...

நண்பர் தருமி,

[ //அது என்ன மனிதனுக்கு மட்டும் கடவுள்!//

இதைப்பற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன். ஒரு மேற்கோள்: If triangles have god, it would be a mega-triangle.

நான் அதைக் கொஞ்சம் மாற்றி: எருமை மாடுகளின் கடவுள் ஒரு பெரிய எருமை மாடாகத்தான் இருக்கும்.

மனிதன் தன்னைப் போலவேதான் தன் கடவுளைப் 'படைக்க' முடியும். ]

++++++++++++++

நான் படித்த நூல்களில் மனிதன் ஆறறிவு படைத்தவன் என்று படித்தவன். தன்னைப் படைத்த கடவுளையும், சக்தி, ஆத்மா, உயிர் என்றால் என்ன என்று ஆழ்ந்து ஆராயும் தன்மை உள்ளவன் என்று அறிந்தேன்.

எருமை மாடுகள் கடவுளைப் பற்றிச் சிந்திக்கும் என்று நான் படித்ததில்லை.

கடவுளுக்கு விளக்கம் இதுதான் :

God is Omnipotent - எல்லாம் வல்லது கடவுள்
God is Omnipresent - எங்கும் நிறைந்தது கடவுள்
God is Omniscient - எல்லா ஞானமும் உள்ளது கடவுள்

இந்தக் கடவுளை மனிதா படைத்தான் ? கடவுள் எப்படி இருக்கும் என்று மனிதன் கற்பனையில் கண்ட மெய்ப்பாடு.

சி. ஜெயபாரதன்.

Jayabarathan said...

நண்பர் தருமி,

/// அதென்னவோ, ஏன் எப்படி என்று தெரியவில்லை. தனிமனித ஒழுக்கத்திற்காகப் படைக்கப்பட்ட மதங்கள் இப்போது இனத் துவேஷத்திற்கான காரணிகளாக மாறி, இனங்களுக்கு எதிராக இனங்கள் இருக்கும் அழிவு நிலைக்குக் கொண்டுவந்து விட்டன என்பதே பெரிய சோகம். ///

நான் கூறிய (80%--20%) நியதிப்படி ஆம், நீங்கள் மேலே குறிப்பிட்டது உண்மை. எந்த உலக ஏற்பாடுகளிலும் சுமார் 20% கோளாது மனிதர் இருப்பார். 80% மனிதர் மனித நேயமுடன் இருப்பார். சகட்டு மேனிக்கு எல்லோரையும் மதம் காட்டுமிராண்டிகளாக உருவாக்கி உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் தேவை.

///// நீங்கள் சொல்லும் omniscience etc... எல்லாம் காலாவதியாகிப் போன விஷயங்கள்... very much self contradictory and self defeating points என்பது என் கருத்து. ////

மதங்கள் யாவும் நாலாயிரம் வருடங்களாக இன்றுவரை நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாகப் பெருகி வந்துள்ளன, வருகின்றன.

பெரியாரின் தீவிரச் சீர்திருத்தக் கொள்கைகள்தான் காலாவதியாகிக் கொண்டி ருக்கின்றன !!! மதங்கள் பாறைகளில் வேரூன்றி உள்ளன !!!

நான் மதங்களைப் பற்றிய புள்ளி விபரங்களைப் பாருங்கள்.

சி. ஜெயபாரதன்.

Jayabarathan said...

நண்பர் தருமி,

//உலக இனங்களை இணைக்கும் உன்னத(!!??) சக்தி வாய்ந்தவை மதங்கள் //

\\\ இனங்களை இணைத்தது சரி; ஆனால் அதன் "உன்னதத்தை' நித்தம் நித்தம் தரிசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்! \\\


இந்த மதப்போர்களை உண்டாக்குவோர் சமூகத்தில் உள்ள 20% (சுமார்) அடிப்படை மூர்க்க வர்க்கத்தினர். மீதியுள்ள 80% மதத்தார் அடிப்படை வன்முறை மூர்க்கரால் இன்னல் அடைகிறார். இந்த 80% மதத்தார் பொதுவாக மனித நேய முள்ளவர். அவர்கள்தான் விடாமல் மதங்களைக் கடைப்பிடித்து வருகிறார்.

சகட்டு மேனிக்கு எல்லோரையும் குற்றவாளிகளாய் எடைபோடுவது ஒரு பிரச்சனையை முழுமையாக நோக்காமல் நுனிப் புல் மேய்ந்து நியாயப் படுத்துவது.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி, கோவி. கண்ணன்


//// carrot & donkey, carrot & stick principles பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ; முதலாவதற்கு ஒரு கதை சொல்வதுண்டு. கழுதை மேல் ஏறி உட்கார்ந்தவன் கழுதை அவனைத் தூக்கிச் செல்ல தயங்கியதும், ஒரு குச்சியின் முனையில் ஒரு காரட்டைக் கட்டி, அந்தக் குச்சியைக் கழுதைக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டானாம். முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.\\\\

//// எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. ஜைனம், புத்தம், தாவோயிஸம் என்ற சமயங்கள் இறுதி நிலையை 'நிர்வாண நிலை' என்றழைக்கின்றன. அதுவும் இந்நிலை உயிருள்ளபோதே எய்யும் நிலையாம். ////

மனிதன் பிறக்கும் போது மூர்க்கர் மத்தியிலே பிறந்தால் மூர்க்கனாகிறான். நல்லவர் மத்தில் பிறந்தால் நல்லவனாகிறான். அந்த Raw Material நிலையில் இருப்பவன் மனிதன். தற்போதுள்ள வெறும் பள்ளிப் படிப்பு மட்டும் மனிதனைக் கலாச்சார நாகரீக மனிதனாக மாற்றாது. இதுவரை மாற்றவில்லை.

"காரட் ஏற்பாட்டின்படி" சொர்க்க லோகம், நரக லோகம் என்று பயங்காட்டி மதங்கள் ஒழுக்கம் புகட்ட வில்லை என்றால் மனிதன் ஒருநாளும் ஒழுக்க நெறி கற்றுக் கொள்ளப் போவதில்லை. நமது கல்வி முறை மனிதனை மனித நேயனாக மாற்ற முடிய வில்லை. காரணம் அதில் தண்டிப்பு முறைகள் கிடையா !!! படியாதவனும் மூர்க்கனாக இருக்கிறான். படித்தவனும் மூர்க்கனாக இருக்கிறான். விடுதலை நாட்டில் காவல் துறையும், நீதித் துறையும் கடைசியில் அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளது.

இங்குதான் உலக மதங்கள் நற்சேவை புரிய வாய்ப்புள்ளன. புத்தர், ஏசு, முகமது நபி, விவேகானந்தர் போன்ற மதக் குருமார்கள் தமக்குக் கீழிருக்கும் பைபிள், குர்ரான், கீதை, குறள் ஆகிய அறநெறி நூல்கள் மூலம் உலக அமைதி நிலைநாட்ட வசதிகள் வழிமுறைகள் உள்ளன.

மதக் குறைபாடுகளைக் காலத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள மதக் குருமார்கள் முன்வர வேண்டும். மதம் ஒரு மனிதக் கருவியே. அதை ஆக்க வழிகளுக்குப் பயன் படுத்த குருமார் சமூகத்தில் பங்கேற்க வேண்டும். பெரியார் போல் பாமரரை "முட்டாள்" என்று திட்டி வெறுப்பூட்டி இந்தக் காலத்தில் மக்களுக்கு அறநெறிகள் புகட்ட முடியாது.

அரசியல்வாதிகள், பள்ளி ஆசிரியர்கள், அறிஞர்கள், அனுபவ முதியவர் யாரும் மனித நேயப் பணிகள் எங்கும் செய்வதில்லை !


சி. ஜெயபாரதன்.

Jayabarathan said...

நண்பர்களே !

மதங்களைப் பற்றி என் தனிப்பட்ட கருத்துக்கள் : நான் ஒரு மதவாதி விஞ்ஞானி அல்லன். இந்துவாயினும் பிற மதத்தாரைச் சகோதரராய் மதிப்பவன். அதாவது நான் ஒரு மதச் சகிப்பாளி. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், சகிப்புத்தனம் ஆகியவற்றை விடுதலை இந்தியாவில் ஏற்றுக் கொள்பவன்.

21 ஆம் நூற்றாண்டில் ஆம் மதச் சீர்திருத்தங்கள் தேவை. ஆனால் குறைபாடுகளைக் குருமார் நிவர்த்தி செய்யாமல், மதத்தை ஒழிப்போம் என்று சமூகப் புரட்சியாளர் தடியுடன் முற்படுவது நிகழக் கூடிய சம்பவம் இல்லை !!!

உலகப் பிரச்சனைகள் வெறும் விஞ்ஞானத்தில் மட்டும் தீரக் கூடியவை அல்ல. மதங்களும், விஞ்ஞானம் இணைந்துதான் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்று மேதை ஐன்ஸ்டைன் கூறுகிறார். அதுவே எனது கருத்தும்.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி,

புத்தர், விவேகனந்தர் போன்றோர் இந்து மதத்தைச் செப்பணிட்டார். மார்டின் லூதர் கிறித்துவ மதத்தைச் சீர்திருத்தினார்.

அரசியல் அறிஞர் என்றாலே வஞ்சகர், லஞ்சகர், அஞ்சுபவர் என்று பொருள். 45 ஆண்டு காலமாகப் பெரியாரின் சீடர்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார் அவர்கள் தமிழகத்தில் என்ன செய்தார்கள் என்று பட்டியில் இடுங்களேன்.

தெய்வத்தின் வார்த்தைகள் என்றால் என்ன ?

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பர் தருமி,

உலகெங்கும் தமிழகம் உட்படச் சமூகக் கலாச்சாரமும், பின்பற்றும் மதமும் இரண்டறக் கலந்துள்ளன. இரண்டில் ஒன்றை எப்படி நீக்க முடியும் ? மக்களின் உதிரத்தில் ஓடுவது கலாச்சாரம்.

சீர்திருத்தம் அடையும் மதங்கள் 21 ஆம் நூற்றாண்டில் மக்களை நேய மனிதராய் ஆக்க முடியும் என்பது என் கருத்து.

ஒழுக்க நெறியில்லாத அரசியல் வாதிகள் அடிப்படை மதவாதிகளை விடக் கொடுமையானவர்.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

பெரியாரின் சீடர்களே! நண்பர்களே !

தமிழகத்தில் ஒரு ஜாதி அல்லது ஒரு மதத்தை எப்படி ஒழிப்பது என்பதற்கு 10 அல்லது 20 கருத்துக்களை எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.

எந்த ஜாதியை முதலில் ஒழிப்பது அல்லது எந்த மதத்தை முதலில் ஒழிப்பது என்றும் குறிப்பிடுங்கள்.

தமிழகத்தில் மட்டும் இவற்றை ஒழித்தால் போதுமா ? அல்லது தமிழகம் ஒட்டிக் கொண்டுள்ள இந்தியா பூராவும் இவை ஒழிய வேண்டுமா ?

உலகெலாம் தமிழர் பரவி யுள்ளதையும் மறந்து விடாதீர்கள்.

சி. ஜெயபாரதன், கனடா

Jayabarathan said...

பெரியாரின் சீடர்களே! நண்பர்களே !

தமிழகத்தில் ஒரு ஜாதி அல்லது ஒரு மதத்தை எப்படி ஒழிப்பது என்பதற்கு 10 அல்லது 20 கருத்துக்களை எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.

எந்த ஜாதியை முதலில் ஒழிப்பது அல்லது எந்த மதத்தை முதலில் ஒழிப்பது என்றும் குறிப்பிடுங்கள்.

தமிழகத்தில் மட்டும் இவற்றை ஒழித்தால் போதுமா ? அல்லது தமிழகம் ஒட்டிக் கொண்டுள்ள இந்தியா பூராவும் இவை ஒழிய வேண்டுமா ?

உலகெலாம் தமிழர் பரவி யுள்ளதையும் மறந்து விடாதீர்கள்.

சி. ஜெயபாரதன், கனடா

தருமி said...

thank you, jeyabharathan. yep.. this is the place for your arguments. go ahead.....

வோட்டாண்டி said...

//தமிழகத்தில் ஒரு ஜாதி அல்லது ஒரு மதத்தை எப்படி ஒழிப்பது என்பதற்கு 10 அல்லது 20 கருத்துக்களை எழுதிக் காட்டுங்கள் பார்ப்போம்.

ரொம்ப சிம்பிள்..அடுத்த தலைமுறைக்கு உங்க ஜாதியையும் மதத்தையும் சொல்லாதீங்க.. ஜாதி சான்றிதள்ல ஜாதி பெய்ற குறிக்காம BC,MBC,SC,ST இத மட்டும் குறிப்பிடுங்க. இட ஒதுக்கீடுக்கு தேவை படும்.. இட ஒதுக்கீடு கொஞ்ச காலத்துக்கு அப்பறம் ஜாதி சார்ந்த இட ஒதுக்கீடு-- பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடா மாறிவிடும்.. ஜாதிகளும் மதங்களும் மெல்ல ஒழியும்

//சீர்திருத்தம் அடையும் மதங்கள் 21 ஆம் நூற்றாண்டில் மக்களை நேய மனிதராய் ஆக்க முடியும் என்பது என் கருத்து.

சீர்திருத்தம் அடையும்னு" நீங்களே சொல்லிடீங்களே.. மதமே இன்னும் சீர்திருத்தம் அடையிலான அது எங்க மனிதனுக்கு ஒழுக்க நெறிய புகட்ட போது ??

//அதாவது நான் ஒரு மதச் சகிப்பாளி
என்னமோ அசிங்கத்த சகிசிகிர்ற மாதிரி சலிசிக்குரீங்கலே...உங்க வார்த்தையில் இருந்தே தெரிகிறது நீங்கள் மற்ற மதங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு..

//தமிழகத்தில் என்ன செய்தார்கள் என்று பட்டியில் இடுங்களேன்.
கொஞ்சம் தமிழகத்தில் இருந்து வெளிய சென்று மதங்களின் பெயரால் கட்சி நடத்துபவர்கள், UP,MP,Bihar,Rajasthan இந்த மாநிலங்களை எப்படி குட்டிச்சவர் ஆக்கி வைத்து இருகிறார்கள் என்று பாருங்கள்..

மதப்போரை உண்டாக்குபவர்கள் 20% சதவீதம் தான ? அப்ப மதத்துல இருக்குற மீதி 80% அந்த 20% அ அடக்கி இருக்கலாமே!! ஆனா நடக்குற கலவரத்தை எல்லாம் பார்த்த பிறகும் அந்த கலவரங்களை நடத்திய கட்சிகளுக்கு உங்கள மாதிரி மீதி 80% வாக்களித்து மீண்டும் அடுத்த ஆட்சியில் இந்த கலவரங்கள் நடக்க ஏற்பாடு செய்கிறீர்களே ??

//பைபிளும், குர்ரானும், கீதையும், குறளும் இல்லாமல் வேறு நீதி புகட்டும் நூல்கள்
தந்தை பெரியார் எழுதியிருக்கிறரா ?//
இந்த மத நூல்களில் இருக்கும் அநீதிகளை எதிர்த்ததே ஒரு பெரிய நீதி புகட்டும் வேலை தான??

உலகில் நடக்கும்(நடந்த) அனைத்து யுத்தங்களையும் பாருங்கள். அதன் பின்னால் மதங்களே இருக்கும்.. சமூக மக்களிடையே இருக்கும் உயர்வு- தாழ்வு, பெண்களின் அடிமை நிலை, இப்படி மதங்கள் 2000 வருடமாக சமூகத்தில் செய்து வைத்த அட்டகாசங்களை அடுக்கி கொண்டே போலாம்..

எல்லாம் பிரச்சனைகளுக்கும் கரணம் மதங்கள்ளும், கடவுளும் தான் என்பது தெளிவாக தெரிகிறது..
நீங்க என்னன்னா மதங்கள் சீர்திருத்தும், முடிதிருத்தும்னு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க..

Jayabarathan said...

நண்பரே

//// தசரதன் 100 பெண்கள திருமணம் பண்ணிகிட்டது, கிருஷ்ணர் 48(சரியான கணக்கு எந்த புரானதுலையும் இல்ல) பெண்கள திருமணம் பண்ணிகிட்டது.. முருகர் leftla ஒண்ணு rightla ஒண்ணோட இருக்குறது.. நபிகள்(இது எனக்கு 100% சரியாய் தெரியல) எட்டு வயது பொண்ண திருமணம் பண்ணிகிட்டது ////

கழுதை எது ? குதிரை எது ? கோவேறு கழுதை எது என்று ஆறறிவுடன் ஆராயத்தான் மனிதன் பிறந்துள்ளான்.

பெரியார் பகுத்தறிவுத் தந்தை. தசரத மன்னன், கிருஷ்ணன், முருகன், சாலமன், டேவிட், நபி நாயகம் இவர் அனைவரும் பெரியாரின் பூர்வீகப் பகைவர். பெரியார் கொள்கைப் பட்டியலில் முட்டாள் என்று பெயர் வாங்கியவர்.

பகுத்தறிவுப் பெரியாரும் அவர்களும் ஒன்றா ? இதிகாசக் கடவுள்கள், புராண மன்னர்கள், மதத் தலைவர் ஆகியோரைப் பெரியாருக்குச் சமமாக ஒப்பிட்டு அவரது பெயரில் நீங்களே கரியைப் பூசுகிறீர்கள் !

கிழவர்-குமரி வேடிக்கைத் திருமணங்கள் உலகெங்கும் இகழப் படுகின்றன !!! அவ்விதம் ஒரு பகுத்தறிவுத் தந்தை செய்ததை அவரது பிரதான சீடர் அண்ணாத்துரை முதல் ஆயிரம் தம்பிமார் வெறுத்த போது நீங்கள் ஆதரவு அளிப்பது வியப்பாக உள்ளது !!!!

இப்படித்தான் டாக்டர் அம்பேத்காரும் இந்து மதத்தையும், பிராமணரையும் வாழ்நாள் பூராவும் திட்டிக் கொண்டு இறுதியில் அவரும் ஒரு பிராமணப் பெண்ணை மணந்து கொண்டார்.

சி. ஜெயபாரதன்

வோட்டாண்டி said...

நான் பெரியார் பண்ண திருமணத்தையும் புராணத்துல நடந்த திருமணங்களையும் ஒப்பிடல.. நீங்க அவர் திருமணத்தை மட்டும் கேள்வி கேக்கும் போது, சின்ன வயசுல நீங்க கதையாக கேட்ட புராண திருமணங்களையும் இதே போல எதிர்த்து கேள்வி கேட்டு இருபீன்களோ என்ற ஒரு சின்ன ஆர்வம்..அம்புட்டுதேன்..

பெரியாரை பற்றி விமர்சனம் செய்யும் அனைவரும் அவரின் கடவுள் எதிர்ப்பு விவாதங்களில் நுழைந்து அடிவாங்கிய பின்பு அவருடைய திருமணத்தை பிடித்து கொண்டு தொங்குவது வேடிக்கையாக உள்ளது..

நான் மீண்டும் சொன்னதை தான் சொல்ல போகிறேன்.. மணியம்மையை அவர் திருமணம் செய்யாதிருந்தால் மணியம்மை வேறு ஒருவரை மணந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தி இருப்பார் என்பது வறட்டு வாதமே..அண்ணா தனி கட்சி தொடங்குவதற்கு தி.க அரசியலில் பங்கேற்காமல் இருந்தது தான் பிரதான காரணம்.. இதை பெரியார் முன்பே உணர்ந்து ராஜாஜியிடம் சென்று அணைத்து விவரங்களையும் கூறி விட்டு பிறகே திருமணம் செய்து கொண்டார்.. இது வரலாற்று உண்மை..
பிறகு தி.க விற்கு எதிராக அரசியியல் மேடைகளில் பிரச்சாரம் செய்வதற்கு பெரியாரின் திருமணத்தையும் தி.மூ.க வினர் உபயோக படுத்தி கொண்டனர்.

பெரியாரின் திருமணம் just for name sake என்பதும் வரலாறு..அதை மற்ற கிழவர்-குமரி திருமணங்களோடு ஒப்பிடுவதும் வறட்டு வாதம் தான்...
நான் இவ்வளவு கூறிய பின்பும் பெரியார் ஒரு பெண்ணின் வாழ்கையை ஆசை காட்டி நாசமாக்கிடார், அதனால் அவர் சீடர்கள் பிரிந்து தனி கட்சி தொடங்கினார்கள் என்று தான் நீங்கள் கூறபோகிறீர்கள்.
நானும் அது திருமணம் அல்ல, கட்சி சொத்து மணியம்மையிடம் சேர்வதர்க்காகவே அவர் திருமணம் செய்து கொண்டார் என்று சொல்ல போகிறேன்..
அண்ணா தனி கட்சி தொடங்கியது அரசியலில் பங்கேர்க்கவே..பெரியார் காங்கிரஸ் காக பிரச்சாரம் செய்தபோது பெரியாரை எதிர்க்க அவர் திருமணத்தை அரசியல் ஆயுதமாக பயன் படுத்தி கொண்டனர்னு சொல்ல போறேன்..
பிறகு நீங்கள் கிளிபுள்ளை மாதிரி சொத்த காட்டி ஒரு குமரி வாழ்கைய நாசமகிடார்னு நீங்க சொல்ல போறீங்க..

எதுக்கு தேவை இல்லாம.. விட்டுருவோமே..

Jayabarathan said...

நண்பரே,

/// ரொம்ப சிம்பிள்..அடுத்த தலைமுறைக்கு உங்க ஜாதியையும் மதத்தையும் சொல்லாதீங்க.. ஜாதி சான்றிதள்ல ஜாதி பெய்ற குறிக்காம BC,MBC,SC,ST இத மட்டும் குறிப்பிடுங்க. இட ஒதுக்கீடுக்கு தேவை படும்.. இட ஒதுக்கீடு கொஞ்ச காலத்துக்கு அப்பறம் ஜாதி சார்ந்த இட ஒதுக்கீடு-- பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடா மாறிவிடும்.. ஜாதிகளும் மதங்களும் மெல்ல ஒழியும் ///

சிக்கலான பிரச்சனையைச் சிம்பிளாகச் செய்ய முடியும் என்று மேலோடி தொட்டும் தொடாமலும் சொல்லியுருக்கிறீர்கள்.

"மலையை நான் தூக்கி விடுவேன்" என்று ஒர் பைல்வான் சவால் விட்டாராம்.

"சரி மலையத் தூக்கிக் காட்டு" என்று அருகில் இருந்தோர் காட்டச் சொன்னாராம்.

"மலையைத் தூக்கி என் தலைமேல் வை. நான் தூக்கிக் காட்டுகிறேன்" என்றாராம் பைல்வான்.

நண்பரே ! 100 கோடி மக்களுக்கு விடுதலை இந்தியாவில் இதை எப்படிப் புகட்டுவது அல்லது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படிச் செய்து காட்டுவது என்று சட்டப்படி எழுதிக் காட்டுங்கள்.

உங்கள் "பார்முலா" மூலம் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இந்த குறிப்பீடுகளில் BC,MBC,SC,ST பிராமணரைத் தவிர ஏறக்குறைய எல்லா ஜாதிகளும் வந்து விடுகின்றன.
ஜாதிகளின் பெயர்கள் இல்லாமல் BC,MBC,SC,ST ஆகியவற்றை எப்படி அடையாளம் காணுவீர் ?

//தமிழகத்தில் என்ன செய்தார்கள் என்று பட்டியில் இடுங்களேன்.
கொஞ்சம் தமிழகத்தில் இருந்து வெளிய சென்று மதங்களின் பெயரால் கட்சி நடத்துபவர்கள், UP,MP,Bihar, Rajasthan இந்த மாநிலங்களை எப்படி குட்டிச்சவர் ஆக்கி வைத்து இருகிறார்கள் என்று பாருங்கள்..///

நண்பரே நான் வட இந்தியாவில் 16 வருடங்கள் பணி செய்தவன். என் வலையில் என்னைப் பற்றி உள்ளது. படித்துப் பாருங்கள் :

http://jayabarathan.wordpress.com/

45 வருட தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டு நகரங்களில் காலிப் பயல்கள் பெருத்து விட்டார்கள். உங்களுடைய தாய், தாரம், தமக்கை, புதல்விகள் யாரும் தனியாக வீதியில் நடக்க முடியாது.
பஸ்ஸில் தனியே போக முடியாது. என் குடும்பத்தாருக்கு மதுரையில் அக்கதி ஏற்பட்டது.

/// மதப்போரை உண்டாக்குபவர்கள் 20% சதவீதம் தான ? அப்ப மதத்துல இருக்குற மீதி 80% அந்த 20% அடக்கி இருக்கலாமே!! ///

இதைத்தான் ஆற்றல் மிக்க அமெரிக்க நாடு 7 வருடங்களாக ஈராக்கிலும், ஆஃப்கானிலும், பாகிஸ்தானிலும் செய்து ஏமாந்து வருகிறது.

/// இந்த மத நூல்களில் இருக்கும் அநீதிகளை எதிர்த்ததே ஒரு பெரிய நீதி புகட்டும் வேலை தான?? ///

அதாவது தி.க. திமுக விடம் பைபிள், குர்ரான், கீதை போல் கைநெறி அல்லது மெய்நெறி நூல் எதுவும் கிடையாது.

அவரது ஆட்சியில் மனிதன் மீண்டும் காட்டுமிராண்டி ஆகலாம். எந்த மாநிலத்தில் எம்ஜியார் (ஆந்திரா ராமாராவ் தவிர)போன்ற சினிமா கூத்தாடியும், ஜெயலலிதா போன்ற நாட்டியராணியும் முதல் அமைச்சராக
வரமுடியும் ? எந்த மாநிலத்தில் பகுத்தறிவுத் தம்பிகள் தரையில் விழுந்து தான் வெளியே திட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பன ஜாதி அம்மையாரை வணங்கி வருகிறார்?

/// ஜாதிகளும் மதங்களும் மெல்ல ஒழியும் ///

ஜாதிகள் பாம்புகள் என்றால் மதங்கள் வேங்கைகள். மதங்களை எப்படி ஒழிப்பது என்று சொல்லாமல் போய் விட்டீர்களே !!! ஜாதியும் மதமும் இணை பிரியாதவை.

சி. ஜெயபாரதன்

வோட்டாண்டி said...

முதலில் சில விஷயங்களை தெளிவு படுத்தி விடுகிறேன்
1. நான் தி.மூ.க. ஆதரவாளன் அல்ல
2. பெரியாரின் சீடன் அல்ல.
3. கடவுள் இல்லை கட்சியை சார்ந்தவன் அல்ல
4. மதங்களை மட்டுமே எதிர்ப்பவன்

//நண்பரே ! 100 கோடி மக்களுக்கு விடுதலை இந்தியாவில் இதை எப்படிப் புகட்டுவது அல்லது தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படிச் செய்து காட்டுவது என்று சட்டப்படி எழுதிக் காட்டுங்கள்.//

சட்டம் இயற்றுவது என் வேலை இல்லை. 1000 ஜாதிகளை வெறும் நான்கு அல்ல ஐந்து category கீழ் கொண்டு வர முடியும். ஜாதி பெயரை தலைமுறை தலைமுறையாக எடுத்து செல்வதை தவிர்க்க இது உதவும். ஜாதி சார்ந்த தொழில்களை இன்று 99% மக்கள் செய்வது இல்லை.

//ஜாதிகளின் பெயர்கள் இல்லாமல் BC,MBC,SC,ST ஆகியவற்றை எப்படி அடையாளம் காணுவீர் ?//
என்ன கேள்வி இது?? பிறந்த குழந்தை எந்த ஜாதி என்று எப்படி அடையாளம் காண்கிறீர்கள். அப்பாவின் ஜாதியை வைத்து தானே.. அதே போல் அப்பா BC என்றால் மகனும் BC.. 10 வருடத்துக்கு ஒரு முறை committee அமைத்து பின்தங்கிய வகுப்புகளை review செய்யுங்கள். ஜாதி சார்ந்த தொழில்கள் அழிந்து வருவதால். ஒரு ஜாதி முழுவதுமாக பின் தங்கியது என்று கூற முடியாது. ஒரே ஜாதியில் பிந்தங்கிய்வரும் இருக்கலாம், முன்னேறியவரும் இருக்கலாம். இதை எல்லாம் 5 அல்லது 10 வருடத்துக்கு ஒரு முறை ஒரு குழு வைத்து review செய்ய வேண்டும்.. எனக்கு என் ஜாதி என்ன என்று என் பெற்றோர்கள் சொல்லியது இல்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஜாதி சான்றிதளை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அந்த சான்றிதழில் ஜாதி பெயர் இல்லாமல், வெறும் OC,BC,MBC,SC,ST என்று இருந்திருந்தால் இன்று வரை எனக்கு என் ஜாதி பெயர் தெரிந்திருக்காது

உங்கள் வார்த்தைகளில் இருந்து தமிழகத்தின் மீது காரணம் அற்ற வெறுப்பு இருப்பது தெரிகிறது.. அது ஒரு வேளை கடவுள் இல்லை என்ற கட்சிகள் ஆண்டு வருவதால் இருக்கலாம்.. u r viewing tamilnadu with a jaundiced eye.. எங்க தவறு நடக்கிறது என்பதை மட்டுமே பாக்குறீங்க.. மீண்டும் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன்.. நான் தமிழகம் no.1 மாநிலம் என்றோ, சொர்கபுரி என்றோ வாதிட போவதில்லை. உண்மை தான் அட்சி செய்த கட்சிகள் தமிழகத்துக்கு பெருசாக எதுவும் செய்து விடவில்லை. ஆனால் north-south comparision என்று வந்துவிட்டால் தமிழகம் எவ்ளவோ சிறந்தது.. உங்கள் பதிவில் இருந்து நீங்கள் வட இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை.. நான் 16 வயதில் இருந்து வாடா இந்தியாவில் இருந்து வருபவன். வாடா இந்திய வருவதற்கு முன்பு வரை.. இந்தி எதிர்ப்பு, south-discrimination, வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது, தனி திராவிட நாடு போன்றவை என் என்று புரியவில்லை. ஆனால் வட இந்திய்வைனுள் நுழைந்த அடுத்த கணமே புரிந்தது. இருந்தாலும் என் சொந்த அனுபவங்களை கூறி வடக்கு ஒழிக என்று நான் சொல்ல போறது இல்லை..
1. வட இந்தியாவில் குஜராத், பஞ்சாப் தவிர அணைத்து மாநிலங்களின் பொருளாதர நிலையும் தென் மாநிலங்களை விட குறைவே. டில்லியை பற்றி எனக்கு தெரியவில்லை. Every southern state has a double டிகிட் GDP growth rate. The northern states other than Gujarat and punjab have a GDP rate less than nation's GDP. This implies the tax payers money from southern states are eaten away by backward states of north india..
2. Bihar is the most illiterate state of india
3. Madhyapradesh and UP are competing to secure the last position in malnutrition deaths
4. MP is the last state in HDI
இன்னும் தேவை என்றல் அடுக்குகிறேன்..
இதை எல்லாம் நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. The recent survey of India today taken two months back clearly shows how the constituencies in south have developed far more compared to constituencies in the north.
ஒரு தமிழன் வட இந்தியா தான் தென் இந்தியவை விட வளர்ந்தது, சிறந்தது என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால்
1. அவை பொய்யான தகவல்கள்
2. முதன் முதலாக ஒரு தமிழன் வட இந்தியாவை புகழ்வதை இப்போது தான் நான் பார்கிறேன்

நீங்கள் இஸ்லாம் மதத்தை எவ்வளவு கஷ்டப்பட்டு சகித்து கொண்டு இருகிறீர்கள் என்பது உங்கள் அமெரிக்க அதரவு நிலையே காட்டுகிறது

//யாரும் தனியாக வீதியில் நடக்க முடியாது.
இதெல்லாம் வெட்டி பேச்சு. வட இந்தியாவில் உள்ள எல்லா வீதிகளில் வெற்றிகரமாக நடந்து வந்த மாதிரி பேசுறீங்க??
when u take the security issue, Tamilnadu is far better than bihar,up. Thr was no big riot against the minorities as it is taking place every yr in one or other north indian state..and this year it was north indian state orissa.. it seems tat u havent read news reg Nithari killings, Plight of women working during night hours in delhi, states ruled bu criminals etc..
Have u ever heard of Sati being committed in tamilnadu?? I can show u a place in MP where people have built a temple for the women who committed sati!!

//பைபிள், குர்ரான், கீதை போல் கைநெறி அல்லது மெய்நெறி
இவை எல்லாம் கைநெறி நூல்களா? மருந்துக்கு கூட எனக்கு இந்த புத்தகங்களில் நெறி கெடைகவில்லை.. பெண் அடிமைத்தனமும், ஆரிய சொறிகளும் தான் கிடைத்தது..
நெறி புகட்டுவது கட்சிகளின் வேலை இல்லை.. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கடை பிடித்தாலே போதும். மத்தபடி பொண்டாட்டி பத்தினியானு test பண்ண தீக்குளிக்க சொல்றது, இந்த மாதிரி நெறிஎல்லாம் நெறியே அல்லன்னு சொல்றதே ஒரு நெறி புகடுர்ற வேலை தான்..

//எம்ஜியார் (ஆந்திரா ராமாராவ் தவிர)போன்ற சினிமா கூத்தாடியும், ஜெயலலிதா போன்ற நாட்டியராணியும்//
நடிப்பும், நாட்டியமும் தொழில் தான், வாத்தியார் வேலையும் தொழில் தான்,நீங்கள் பார்பதும் தொழில் தான், நான் பார்பதும் ஒரு தொழில் தான். நடிகர்கள்ன அவ்வளவு கேவலமா?? வட இந்தியாவில் படிக்காதவன், மசூதிய இடிச்சவன், மாட்டு தீவன ஊழல் பண்ணவன், முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள தூண்டி உட்டவன், இவன் எல்லாம் முதல அமைச்சரா இருந்திருக்காங்களே?? அப்பறம் உங்க கண்ணுக்கு TADA நீதிமன்றம் தண்டனை வழங்கிய sanjay dutt, SP கட்சில இருக்குற jaya bachan, jayapradha, இவங்கலாம் தெரிய மாட்டாங்களா??

//ஜாதிகள் பாம்புகள் என்றால் மதங்கள் வேங்கைகள். மதங்களை எப்படி ஒழிப்பது என்று சொல்லாமல் போய் விட்டீர்களே !!!
முதலில் ஜாதிகளும், மதங்களும் ஒழிய வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் விதையுங்கள்,
ஜாதிகள் இட ஒதுக்கீடு கோரும் தருணத்திலும், மதங்கள் ஆலயங்களில் உள்ளே மட்டும் மனதில் இருக்க வேண்டும் என்பது என் கருத்து..

ஜாதி கட்சிகளும், மத கட்சிகளும் தான் சிறந்தது என்று நீங்கள் வாதிட்டால், இந்தியா கற்காலத்துக்கு மீண்டும் செல்வது தவிர வேறு வழி இல்லை..

Jayabarathan said...

தமிழகத்தில் காலித்தனம், வன்முறை பெருகி வருகின்றன் என்பதற்குச் சில வலை எழுத்துச் சான்றுகள் :

தமிழ் அகிலவலைப் பக்கங்கங்களில் முகமூடி அணிந்து கொண்டு வேடிக்கையான புனை பெயர்கள் வைத்துக் கொண்டு "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கலாச்சார மின்றி" எழுதி வரும் தமிழர்களைப் பார்த்து வேதனைப் படுகிறேன்.

மூர்க்கப் பட்டாளம்தான் முகமூடி அணியும் !!!

அவர்கள்தான் வன்முறையிலும், வாய் வார்த்தைகளிலும் வசைபாடி வலைகளில் மறைந்து கொண்டு எழுதி வருகிறார்.

சி. ஜெயபாரதன்

Jayabarathan said...

நண்பரே !


/// 1000 ஜாதிகளை வெறும் நான்கு அல்ல ஐந்து category கீழ் கொண்டு வர முடியும். ஜாதி பெயரை தலைமுறை தலைமுறையாக எடுத்து செல்வதை தவிர்க்க இது உதவும். ஜாதி சார்ந்த தொழில்களை இன்று 99% மக்கள் செய்வது இல்லை. \\\

//ஜாதிகளின் பெயர்கள் இல்லாமல் BC,MBC,SC,ST ஆகியவற்றை எப்படி அடையாளம் காணுவீர் ?//

/// ஜாதி சார்ந்த தொழில்கள் அழிந்து வருவதால். ஒரு ஜாதி முழுவதுமாக பின் தங்கியது என்று கூற முடியாது. ஒரே ஜாதியில் பிந்தங்கிய்வரும் இருக்கலாம், முன்னேறியவரும் இருக்கலாம். இதை எல்லாம் 5 அல்லது 10 வருடத்துக்கு ஒரு முறை ஒரு குழு வைத்து review செய்ய வேண்டும்.. எனக்கு என் ஜாதி என்ன என்று என் பெற்றோர்கள் சொல்லியது இல்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஜாதி சான்றிதளை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அந்த சான்றிதழில் ஜாதி பெயர் இல்லாமல், வெறும் OC,BC,MBC,SC,ST என்று இருந்திருந்தால் இன்று வரை எனக்கு என் ஜாதி பெயர் தெரிந்திருக்காது ////

"கொக்கைப் பிடிக்க கொக்கு தலையில் வெண்ணையை வைத்துப் பிடிக்கலாம்", என்று ஓர் அறிவாளி சொன்னானாம். அந்த முறைதான் உங்கள் கோட்பாடு !!!

முற்காலத்தில் தொழிலை வைத்து நான்கு ஜாதிகளை மனு சாஸ்திரம் கொண்டு வந்து நான்கு ஜாதிகள் நாலாயிரம் ஜாதிகளாய்ப் புற்று நோய் போல் நாடெங்கும் பரவி விட்டன !

இப்போது நீங்கள் விடுதலை இந்தியாவில் பராளுமன்றச் சட்டங்களின்றி எப்படி ஆயிரம் ஜாதிகள் (?) கொண்ட 100 கோடி மக்களை ஐந்து பிரிவுக்குள் கொண்டு வரப் போகிறீர்கள் ? இது இமாலய முயற்சி !!! ஜாதிப் பெருக்கம் ஒருபோதும் ஜாதிச் சுருக்கமாகாது. இது ஒரு மீளா இயக்கம் (Irreversible Process)

++++++++++++++++

/// நான் 16 வயதில் இருந்து வாடா இந்தியாவில் இருந்து வருபவன். வாடா இந்திய வருவதற்கு முன்பு வரை.. இந்தி எதிர்ப்பு, south-discrimination, வடக்கு வாழ்கிறது-தெற்கு தேய்கிறது, தனி திராவிட நாடு போன்றவை என் என்று புரியவில்லை. ஆனால் வட இந்திய்வைனுள் நுழைந்த அடுத்த கணமே புரிந்தது. இருந்தாலும் என் சொந்த அனுபவங்களை கூறி வடக்கு ஒழிக என்று நான் சொல்ல போறது இல்லை.. ///

நீங்கள் தமிழர். தைரியமாய் இத்தனை பேசும் நீங்கள் யாருக்குப் பயந்து முகமூடி அணிந்துள்ளீர்கள் ? தமிழகத்தின் முற்போக்குத் தமிழராகக் காட்டிக் கொள்ளும் நீங்கள் ஏன் உங்கள் பெயரைச் சொல்ல அவமானப் படுகிறீர்கள் ?

+++++++++++++++++

/// பைபிள், குர்ரான், கீதை போல் கைநெறி அல்லது மெய்நெறி இவை எல்லாம் கைநெறி நூல்களா? மருந்துக்கு கூட எனக்கு இந்த புத்தகங்களில் நெறி கெடைக வில்லை.. பெண் அடிமைத்தனமும், ஆரிய சொறிகளும் தான் கிடைத்தது.. நெறி புகட்டுவது கட்சிகளின் வேலை இல்லை.. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கடை பிடித்தாலே போதும். மத்தபடி பொண்டாட்டி பத்தினியானு test பண்ண தீக்குளிக்க சொல்றது, இந்த மாதிரி நெறிஎல்லாம் நெறியே அல்லன்னு சொல்றதே ஒரு நெறி புகடுர்ற வேலை தான்..///

நீங்கள் மெய்யாகக் குர்ரானையும், பைபிளையும், கீதையும் படிக்காமல் பிறர் சொல்லியதைச் சொல்லி வருவது தெளிவாகத் தெரிகிறது.

++++++++++++++++++

//எம்ஜியார் (ஆந்திரா ராமாராவ் தவிர)போன்ற சினிமா கூத்தாடியும், ஜெயலலிதா போன்ற நாட்டியராணியும்//

நடிப்பும், நாட்டியமும் தொழில் தான், வாத்தியார் வேலையும் தொழில் தான்,நீங்கள் பார்பதும் தொழில் தான், நான் பார்பதும் ஒரு தொழில் தான். நடிகர்கள்ன அவ்வளவு கேவலமா?? வட இந்தியாவில் படிக்காதவன், மசூதிய இடிச்சவன், மாட்டு தீவன ஊழல் பண்ணவன், முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்கள தூண்டி உட்டவன், இவன் எல்லாம் முதல அமைச்சரா இருந்திருக்காங்களே?? அப்பறம் உங்க கண்ணுக்கு TADA நீதிமன்றம் தண்டனை வழங்கிய sanjay dutt, SP கட்சில இருக்குற jaya bachan, jayapradha, இவங்கலாம் தெரிய மாட்டாங்களா??

விடுதலை நாட்டில் யாரும் தேர்தலில் நிற்கலாம். ஆனால் முதல் அமைச்சர் பதவிக்குப் படிப்புத் தகுதி, பண்பாடு, அனுபவம், தேசீயப் பற்று, உயர்ந்த குறிக்கோள் போன்ற நெறிப்பாடுகள் இல்லாமல் யார் வேண்டு மானாலும் இருக்கலாம் என்பது உங்கள் கருத்து. ஒப்புக்கொள்ள முடியாத கருத்து நண்பரே !!!

+++++++++++

உங்கள் பார்முலாவில் ஜாதிகளும் ஒழியா ! மதங்களும் ஒழியா ! ஜாதிகள் நாட்டுக்குத் தேவை யில்லை ! ஆனால் செம்மைப் படுத்தப்பட்ட மதங்கள் சமூகத்துக்குத் தேவை என்பது என் கருத்து. கற்காலத்துப் பெரும்பான்மை காட்டுமிராண்டி மனிதரைத் தற்கால நாகரீக மனிதராக மாற்றியவை மத நெறிகளே ! மதங்கள் மனிதரை நன்னெறியில் மாற்ற வில்லை என்று நீங்கள் கருதினால் வேறு யார் அல்லது முறைகள் உலக மனிதரைக் கலாச்சார மாந்தராய் ஆக்கின என்று ஆதாரங்களுடன் கூறுங்கள்.

சி. ஜெயபாரதன்

வோட்டாண்டி said...

//எப்படி ஆயிரம் ஜாதிகள் (?) கொண்ட 100 கோடி மக்களை ஐந்து பிரிவுக்குள் கொண்டு வரப் போகிறீர்கள் ? இது இமாலய முயற்சி !!! ஜாதிப் பெருக்கம் ஒருபோதும் ஜாதிச் சுருக்கமாகாது. இது ஒரு மீளா இயக்கம் (Irreversible Process)//

உங்களுக்கு சரியாய் புரியவில்லைன்னு நெனைக்கிறேன். 1000 ஜாதிகளை OC,BC,MBC,SC,ST என்று பிரிக்கும் போது, ஜாதிகள் பெயர் எதற்கு?? அதை நீக்கிவிட்டால் ஜாதிகள் மெல்ல ஒழியும் என்பதே என் வாதம்..நல்ல தெளிவா தான சொல்லி இருந்தேன்..
தருமி ஐயா நான் சொன்னது உங்களுக்காவது புரிஞ்சிதா?? இல்ல ஒரு வேளை ஜெயபாரதன் புரிஞ்சிக்க/தெரிஞ்சிக்க வேண்டாம்னு நினைகிராரா??

//ஏன் உங்கள் பெயரைச் சொல்ல அவமானப் படுகிறீர்கள் ?
பெயரும், மதமும் தருமி வெளிய சொன்னதினால் அவர் படுர்ற கஷ்டம் என்னனு எனக்கு தெரியும்.. என் பெயரை வைத்து கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். பயத்தின் காரணமாக தான் முகமூடி என்று முன்னமே சொல்லி விட்டேனே.. கோழைகளுடுன் விவாதிப்பதில்லை என்று நீங்கள் நினைத்தால், தாரளமாக எனக்கு பதில் அனுப்புவதை நிருதித்க் கொள்ளலாம்..

//மெய்யாகக் குர்ரானையும், பைபிளையும், கீதையும்
முழுவதாக படிக்கியாவில்லை என்பது உண்மை தான்.. அதற்கு நேரமும் இல்லை.
பேரரசு என்ற இயக்குனர் எடுக்கும் எல்லா படங்களையும் முழுமையாக பார்த்த பிறகு தான் சொல்ல வேண்டுமா அவர் சிறந்த இயக்குனர இல்லையா என்று?? சரி நான் அரைகுறையா தான் படிச்சி இருக்கேன்னு வச்சிகுவோமே.. நான் இந்த நூல்களை பத்தி சொன்னதுல எதாவது தப்பு இருந்தா சொல்லுங்க பாக்கலாம். இப்படி தான் தருமியையும் குர்ரான முழுசா படிச்சிட்டு பேசுங்கன்னு சில முஸ்லிம் பதிவர்கள் toruture பண்ணாங்க.
Wat a great advertisement strategy.. இப்படியாவது கொஞ்சம் பேர இந்த புத்தகங்களை படிக்க வசிர்ற வேண்டியது!!

//ஆனால் முதல் அமைச்சர் பதவிக்குப் படிப்புத் தகுதி, பண்பாடு, அனுபவம், தேசீயப் பற்று, உயர்ந்த குறிக்கோள் போன்ற நெறிப்பாடுகள் இல்லாமல் யார் வேண்டு மானாலும் இருக்கலாம் என்பது உங்கள் கருத்து//
அப்படின்னு நான் சொல்லவே இல்லையே.. காமராஜர் படிக்காதவர்.. அதுக்காக அவர் சிறந்த முதல்வர் இல்லையா?? நீங்க சொன்ன வட இந்தியாவுல இருக்குற வங்களையும் தென் இந்தியால இருக்குறவங்களையும் ஒப்பிட்டு சொன்னேன் அவ்வளவ்வு தான்.. MGR பாரத ரத்னா வாங்கியவர்.. அதற்காக அவர் சிறந்த முதல்வர்ன்னு நான் சொல்லலை.. உங்க வட இந்தியவுல என்னத்த வெட்டி முரிசிடீங்கனு தான் கேக்கறேன்..

//மதங்கள் மனிதரை நன்னெறியில் மாற்ற வில்லை
இருந்த நெறிகல்யயும் குழி தோண்டி புதிதான என்பது என் கருத்து.. ஒரு குழந்தை வளரும் சூழலை பொருத்து தான் அதன் மனதில் நெறிகள் விதைக்க படும்..

//செம்மைப் படுத்தப்பட்ட மதங்கள்
நீங்களே சொல்லிடீங்களே.. இனிமே தான் செம்மை படுத்தனும்னு.. அப்பறம் இந்த செம்மை படுத்த படாத மதங்கள்(கண்றாவி) எப்படி மனிதனுக்குள் நல்ல நெறிகளை விதைத்து அவனை நாகரிமாக ஆக்கியது..

//வேறு யார் அல்லது முறைகள் உலக மனிதரைக் கலாச்சார மாந்தராய் ஆக்கின//
மனசாட்சி... மனசாட்சி இல்லமா மத்த மட்டும் கடைபிடிக்கிரவன்..ஒண்ணு தாலிபானா இருக்கணும் ..இல்ல RSS,VHP,Bajrang dal,Ram sene போன்ற வற்றில் உறிபினராக இருக்கணும்

Jayabarathan said...

நண்பரே

நான் வட இந்தியாவில் புரிந்த பொறியியற் பணிகளை என் வலைத் தளத்தில் படிக்க வில்லையா ? உங்களைப் போன்ற தமிழர் பலர் தமிழில் நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி, இலக்கணப் பிழையின்றி எழுத முடியவில்லை என்பதைக் கண்டு வருத்தம் அடைகிறேன். தமிழருக்குத் தமிழும் செம்மையாக எழுத வராது. ஆங்கிலமும் செம்மையாக வராது. இதுதான் பெரும்பான்மைத் தமிழரின் குறுக்கு வெட்டு எழுத்துத் திறமை. நண்பர் தருமியின் வலையில் வந்துள்ள படித்த தமிழரின் பின்னூட்டங்களே அவற்றுக்குச் சான்றுகள்.


சி. ஜெயபாரதன்

வோட்டாண்டி said...

//நான் வட இந்தியாவில் புரிந்த பொறியியற் பணிகளை என் வலைத் தளத்தில் படிக்க வில்லையா ?

உங்கள் எல்லா பதிவுகளையும் படிபதற்கு எனக்கு நேரம் இல்லை.. வாடா இந்தியாவுல எங்க வேலை பார்த்தேன்னு type அடிக்க எவளவு நேரம் ஆவும்?? இங்க பின்னூடத்துல சொரதுள்ள எதாவது பிரச்னை இருக்கா?? நீங்க வேலை மட்டும் தானே பாத்தீங்க.. நான் 16 வயசுலேந்து வட இந்தியவுல இருக்கேன்.. கல்லூரி படிப்பே வட இந்தியாவுல தான். experience அதிகம்தான்..

//தமிழில் நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி, இலக்கணப் பிழையின்றி எழுத முடியவில்லை என்பதைக் கண்டு வருத்தம் அடைகிறேன்//
மன்னிக்கணும்.. என்கிட்டே உங்க கணிபொறில இருக்குற மாதிரி பெரிய பெரிய மென்பொருள் எல்லாம் இல்ல.. தமிழ்ல எழுதுவதற்கு. google.com/transliterate தான் உபயோக படுதுர்றேன்.. அதுவும் பேச்சு தமிழ்ல நான் எழுதுவதால, சில வார்த்தைகள் தவறாக transliterate ஆகிவிடுகிறது.. சில வார்த்தைகள தமிழில் transliterate ஆகா மறுப்பதால், அதற்க்கு மாறாக வேறு ஒரு வார்த்தையை உபயோக படுத்த வேண்டியும் வரும்.. இதனால் இலக்கணம், எழுத்து பிழை எல்லாம் சகஜம்..
குற்றம் கண்டுபிடிப்பது தான் உங்கள் வேலையா?? பொருள் குற்றம் கண்டுபிடிக்க முடியாம சொல் குற்றம் கண்டுபிட்கிறீங்க போல இருக்கு..

Jayabarathan said...

நண்பரே,

மதங்களில் உள்ள நன்னெறிகளை விட்டுக் குறைகளையும், குற்றத்தைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள். எதிலும் உள்ள குறைபாடுகளைக் கண்டால்தான் நிறைபாடு செய்யலாம்.


சி. ஜெயபாரதன்

வோட்டாண்டி said...

மதங்களில் குறைபாடு உண்டு என்று ஒப்புகொண்டதற்கு நன்றி
குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு வாயிபில்லை.
குறைபாடு இருக்குன்னு சொன்னாலே.. என் கடவுள் எழுதுனதுல குறைபாடான்னு அடிக்க வராங்க... நீங்க எந்த மதம்னு கேட்டா நான் "செம்மை படுத்த பட்ட ஒரு மதத்தை சேர்ந்தவன்னு" சொல்றதுக்கு பதிலா "எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லைன்னு" சொல்றது நல்லா இருக்கு... என்னா செம்மை படுத்த முடியாத மாதிரி copyright வாங்கி வச்சிருகாங்க.. அறிவியலில் ஒரு கண்டுபிடிப்பு தவறு என்று நிரூபிக்க படலாம். ஆதனால் அறிவியலே குப்பை என்று ஆகி விடாது.. ஆனால் மதத்தின் ஒரு கூற்று தவறு என்று கூறப்பட்டால் (தவறு என்று அந்த மத தலைவர் ஒப்பு கொள்ள மாட்டார் அது வேற விஷயம் ) அந்த மதமே குப்பை என்று ஏளனம் செய்ய படும்..ஒருவரின் நெறி மற்றவருக்கு தவறாக படும்.. ஆகவே மனசாட்சி சொல்லு நெறி படி வாழ்வோம்.. மதமும் ஒரு மனிதனால் தான் எழுதபட்டது என்பது என் கருத்து(என்னா கடவுள் இவ்வளவு கேவலமான கூற்ற எல்லாம் சொல்ல மாட்டார்) .. தவறு செய்வது மனிதனின் இயல்பு.. இன்னொரு மனிதன் எழுதிய மதத்தை கடைபிடிபதை தவிர்த்து, மனசாட்சியின் சொல் படி நடப்பதே சிறந்தது

Jayabarathan said...

அன்புமிக்க தமிழச்சி,

மனிதன் செத்தால் பிறகு..?

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=04&article=998

/// இந்த காற்றுப் போக்குவரத்திற்குக் காரணமான உடலிலிருக்கும் சக்தி வேலை செய்யச் சக்தியற்றுப் போய்விட்டால் சுவாசம் நின்று விடுகிறது. இந்த நிலையைத்தான் மதவாதிகள், மூடநம்பிக்கைக்காரர்கள் ஆத்மா உடலை விட்டுப் பிரிந்து போய்விட்டது என்று சொல்லுகிறார்கள். ஆத்மா என்றாலே சுவாசம் (காற்று) என்று தான் பொருள். அது பிரிவதும் இல்லை. பிரிந்து எங்கும் போவதுமில்லை. ///


ஆத்மா (Soul) என்றால் என்ன என்று ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியைப் பாருங்கள். வெறும் காற்றுதான் சுவாசம் என்பது எந்த அறிவு நூலிலும் கிடையாது.

மனித ஆத்மா ஓர் ஆன்மீக இயக்க சக்தி. ஓர் உதாரணம். தாயின் வயிற்றில் சிசுவை உருவாக்கிப் பத்து மாதம் வரை வளர்த்துக் குழந்தை யாக்கிப் பிறக்க வைக்கிறது. தாயின் ஆத்மாதான் சிசுவுக்கு ஆத்மாவை அளித்து உயிர்ப் பிறவி ஆக்குகிறது.

டெஸ்ட் டியுப் பேபியைத் தாயின் கருவில் சிசுவாக்கிக் குழந்தை ஆக்குவதும் ஆத்மாதான். ஆத்மா இல்லாத செத்த தாய் சிசுவை உருவாக்க முடியாது.


அன்புடன்,
சி. ஜெயபாரதன்.

Post a Comment