Monday, February 05, 2007

199. நான் ஏன் இப்படி ... ?

*

*

சாமிகளா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

எல்லாம் என்னைப் பத்தின விஷயம்தான். இதுல என்மேல என்ன தப்புன்னு நீங்கதான் சொல்லணும். நான் சரியா, இல்லையான்னு எனக்குத் தெரியவில்லை. நீங்களாவது சொல்லுவீங்கன்னு நினச்சு கேக்கிறேன்.

அது என்னன்னு தெரியலைங்க. சில ஆளுங்கள பாத்தாலே, நினச்சாலே சும்மா 'கும்முன்னு' ஏறுது மனசுக்குள்ள. ரொம்ப கடுப்பாயிருது. இப்ப பாருங்க நம்ம இளைய தளபதி - அவரு நடிச்சதில காதலுக்கு மரியாதை, அப்புறம் இன்னொரு படம், நம்ம சிம்ரனுக்குக் கூட கண்ணு தெரியாம போய் கடைசியில ஐ.ஏ.எஸ். கூட ஆயிருவாங்களே அந்த மாதிரி சில படத்தில நல்லாவே நடிச்சிருப்பார். ஆனா இப்போ அவரை அப்படியே தூக்கி சாப்பிடுறது மாதிரி சூர்யா, விக்ரம் எல்லாம் தூள் கிளப்புறாங்க. (இதுவரை நம்ம சிவாஜியில இருந்து பலர் போலீஸ் வேஷம் கட்டி நடிச்சதைப் பார்த்தாச்சு; ஆனா காக்க காக்க படத்தில சூர்யா பண்ணினது மாதிரி வேற யாரும் நடிச்சதில்லைன்னு எனக்குத் தோணுது.) கான்செப்ட் கிறுக்குத்தனமா எனக்குத் தெரிந்தாலும் விக்ரம் அந்நியன்ல மாத்தி, மாத்தி நடிச்சதோ, இல்ல சேதுல பிச்சு வாங்குனது மாதிரியோ நம்ம ஆளு இளைய தளபதி, அவரே அடிக்கடி சொல்லிக்கிறது மாதிரி அந்த மாதிரி 'தப்பு' பண்றதில்லை. ஆனாலும் பாருங்க எந்தப் படம் வந்தாலும் பிச்சுக்கிட்டு போகுது. இதில நாளைய சூப்பர் ஸ்டார்னு மக்களெல்லாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்துட்டாங்களாமே, நேத்து ஸ்டார் டிவியில் சொன்னாங்க.

என் கேள்வி என்னன்னு சொல்லலையே .. ரெண்டு கேள்வி இருக்கு:

முதல் கேள்வி: அந்தக் காலத்தில இருந்தே நம்ம சினிமா உலகத்தில எப்பவுமே நல்லா நடிக்கிறவங்கவளை விடவும் காசுக்குப் பெறாததுகள் எப்பவுமே டாப்ல இருக்குதுகளே, அது எப்படி? சிவாஜி - எம்.ஜி.ஆர்.; கமல் - ரஜினி; அங்க வடக்கில எனக்கு என்னவோ அந்த big B அப்படி ஒண்ணும் நடிப்பில சொல்லிக்கிறது மாதிரி இருந்ததில்லை (நான் இப்போ கடைசியா பார்த்த Black தவிர; அதைப் பத்தி பிறகு ஒரு தடவை பேசுவோம்.) ஆனால் ராஜேஷ் கன்னா, அதைவிட இன்னொருத்தர்; பேருகூட மறந்து போச்சு; ரொம்ப நல்லா நடிப்பார்; ஒரு பெரிய நடிகை மேல் ஒரே காதலா இருந்து, தேவதாஸாகி, சின்ன வயசிலேயே போய்ட்டார். பிறவி செவிட்டு ஊமையாக அமிதாபோட வீட்டுக்கார அம்மாகூட தூள் கிளப்பியிருப்பார் ஒரு படத்தில. அவரு முன்னால் big B ஒண்ணுமே கிடையாதுதான் இருந்தாலும் இப்ப என்னடான்னா, நூற்றாண்டின் சிறந்த / பாப்புலர் நடிகர் அப்டிங்கிறாங்க.
அட நம்ம மணிரத்தினத்தைக் கூட எடுத்துக்குவோமே. அவர தலைக்கு மேல தூக்கி வைக்கிற அளவுக்கு எந்த படம் சொந்தக் கதையோடு, creativity-யோடு, - அட, நம்ம 'சேது' பாலாவோடு compare செஞ்சு பார்த்தால் - நல்லா இருந்திருக்கு. just a media-made man அப்டின்றதுதான் என் மதிப்பீடு. அவரைப் பத்தி மட்டும் இன்னொரு பதிவு பின்னால போடணும்தான்.

இப்போ மறுபடி விஷயத்துக்கு வருவோம். ஏன் இப்படி இரண்டாம் தரம் -அல்லது தரமே இல்லாததுகள், நம்ம எம்.ஜி.ஆர். மாதிரி; ரஜினியை அதோடு சேர்க்க மாட்டேன் - ஓவரா தூக்கி வைக்கப்படுகிறார்கள்? charisma அப்டின்னு ஒண்ணு சொல்லுவாங்க. காரணம் தெரியாமலேயே, சிலருக்கு சுக்கிரதசை அடிக்கிறதுன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி.

இது எப்படி? ஏன் அப்படி? - சாமிகளா! எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகணும்.


இரண்டாவது: சரி, யார் மேல இருந்தா உனக்கென்னன்னு கேக்குறீங்களா? அதையேதான் நானும் என்னையே கேட்டுக்கிறேன். அது மாதிரி இருக்க முடியலையே; ஏன்? எல்லோருக்கும் சின்ன வயசில எம்.ஜி.ஆர். மேல ஒரு 'இது'வும், பின்னாளில் வயசும், புத்தியும் ஏறுன பிறகு சிவாஜியும் பிடிக்கும்னு அந்தக் காலத்தில நிறைய பேரு சொன்னது ஞாபகத்துக்கு வருது. ஆனா அது என்னவோ சின்ன வயசிலேயே சிவாஜிய பிடிச்சதை விடவும் எம்.ஜி.ஆரை. திரையில் மட்டுமல்ல எங்க பாத்தாலும் பிடிக்காது. அட, இப்ப பாருங்க.. நம்ம இளைய தளபதி மேல் ஒரு வெறுப்பு வந்தது இப்போ கொஞ்ச நாளாதான். அவரது இமாலய வெற்றிகளுக்குப் பிறகுதான். நான் இப்படித்தான் நடிப்பேன்; பார்க்குறது உங்க தலைவிதின்னு சொல்லியே செய்றாரே அதுக்குப் பிறகுதான். அமிதாப் மேலேயும் அந்த எரிச்சல் உண்டு. ரஜினி கொஞ்சம் விதி விலக்கு. அந்த மனுஷன் மேல் வர்ர எரிச்சலைவிட அவரது ரசிகர்கள் மேலதான் வரும் (?) அவரு என்ன செஞ்சாலும் -சினிமாவில தான் - கைதட்டுற நம்ம ரசிகர்கள் மேல்தான் எரிச்சல். அது என்னங்க, அவரு வேல் கம்பை தரையில் நட்டு வச்சா, அது அப்படி எதிரிங்களை வட்டம் கட்டி அவர்ட்டயே திரும்பி வருது.. அதுக்கும் நியு ஜெர்ஸி,லாஸ் ஏஞ்சல்ஸ் தியேட்டர்ல உக்காந்து கிட்டு கைதட்டுறீங்க.. என்னமோ போங்க ..

இப்போ இரண்டாவது கேள்வி: ஏன் பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் பிடித்த ஆட்கள் எனக்குக் கொஞ்சமும் பிடிக்காமல் போய் விடுகிறார்கள்? பெரும்பான்மையினருக்கு 'டேஸ்ட்' இல்லை என்று சொல்ல முடியாது. அப்போ, தப்பு என்னிடம்தான் இருக்க வேண்டும். அது என்ன?
நான் தரமில்லாதவர்கள் என்று நினைப்பவர்கள் 'டாப்'ல இருந்தா, இருந்துவிட்டுப் போகட்டும் என்று இல்லாமல் எரிச்சல் படுவது தப்புத்தான். ஆனாலும் அப்படித்தான் இருக்கிறேனே. ஏன்? இதுவும் ஒரு வகை மனோவியாதியா? இல்லை, ஏதும் குணக்கேடோ?

சாமிகளா! எனக்கு அந்த உண்மைகள் தெரிஞ்சாகணும்.


*

*

28 comments:

நாடோடி said...

அப்படிலாம் ஓன்னும் இல்லைங்க. வெள்ளைகாக்கா பறக்குதுனு 10பேரு சொன்னா 11வது ஆளும் ஆமா அது வெள்ளகாக்கானுதான் சொல்லுவான். ஆந்த மாதிரி 10 பேரை செட்டப்பண்ணா போதும். கருப்பு காக்காவை உலகத்துல பாதிபேர வெள்ளகாக்கானு சொல்ல வச்சுரலாம்.

:))))))

Hariharan # 03985177737685368452 said...

தருமி சார்,

வெகுஜன ரசிகர்களில் பெரும்பான்மையோர் சராசரியான திறமை உடையவர்கள் எதாவது "உட்டாலக்கடி"செய்து உயரம் வர ஆசைப்படுபவர்கள் தானே அதிகம் இருக்கின்றார்கள்.

ஒருவேளை தம்மையே இந்த "உட்டாலக்கடி" இரண்டாம் தர/இட சினிமா ஆட்கள் பிரதிபலிக்கின்றதாக உணர்வதால் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றார்களோ? :-))

பங்காளி... said...

ஹி..ஹி...வயசாயிடுச்சில்ல....அதான்....

தருமி said...

பங்ஸ்,
//ஹி..ஹி...வயசாயிடுச்சில்ல....அதான்.... //

நல்லா படிச்சுப் பாருங்க... சின்ன வயசில இருந்து 'இப்படி' இருக்குதுன்னுல சொல்லியிருக்கேன். :(

பங்காளி... said...

ஆஹா...நுனிப்புல் மேஞ்சத வாத்தியார் கண்டுபிடிச்சிட்டார்...ஹி..ஹி..

அதாவது உங்களுக்கு அந்த வயசிலயே அப்படி ஒரு ஞானம்னு எல்லாருக்கும் தெரியும்ல...அதான்...ஹி..ஹி...

Barath said...

ரொம்ப தரமான சினிமா படமா பார்த்து கெட்டுப் போய்ட்டீங்க. அதுனால உங்களுக்கு விஜய் படம் பிடிக்கலை. கொஞ்ச நாள் விஜய் படமா தேடி பிடிச்சி பாருங்க தெளிஞ்சிடும்

தருமி said...

நாடோடி,
ஒரு வகையில சரிதான். ஆனாலும் உலகத்துல பாதி பேரு இல்லீங்க ..அதைவிட அதிகமா எல்லாரும் வெள்ளைக் காக்காதான் அதுன்னு சொல்லும்போது // உதைக்குதே..!

தருமி said...

ஹரிஹரன்,
அப்படி எல்லாரையும் டக்குன்னு "இரண்டாம் தர .. ஆட்கள்" அப்டின்னு சொல்லிட முடியலை அப்டிங்கிறது தான் இங்க பிரச்சனை.

தருமி said...

அடடா,
நாம எப்பவுமே எல்லா குப்பையையும் பார்க்கிற ஆளுதாங்க. ஆனா இன்னும் தலைவர் சிம்பு படம் மட்டும் பார்த்ததில்லை. பார்க்கிறதா ஐடியாவும் இப்போதைக்கு இல்லை.

ஜோ/Joe said...

//இன்னும் தலைவர் சிம்பு படம் மட்டும் பார்த்ததில்லை. பார்க்கிறதா ஐடியாவும் இப்போதைக்கு இல்லை.//

உங்களை வேண்டி விரும்பி கேட்டுகிறேன் .மறந்தும் அந்த பக்கம் தலை வச்சு படுத்துறாதீங்க ...அவனும் அவனுக்க தத்துவமும் ..சகிக்கல்ல.

இலவசக்கொத்தனார் said...

200ஆவது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

bala said...

தருமி அய்யா,
நீங்க சொல்வது சரி தான்.இது ஒரு புதிர் தான்.எம்.ஜீ.ஆர் அவர்களுக்கு புரட்சி நடிகர்னு பட்டம் கொடுத்ததே,அவர் சுத்தமாக நடிக்கத் தெரியாமல் நடித்து புரட்சி பண்ணினதல் தான்.ஆனாலும் நம்ம செல்வன் அய்யா சொன்னாப் போல எம்.ஜீ.ஆர் அவர்கள் மக்கள் நாடியை புரிந்து கொண்டவராகத்தான் இருக்க வேண்டும்.
அரசியலிலும் பாருங்க.காமராசர் எங்கே.மஞ்ச துண்டு,பச்சை புடவை எங்கே?காமராசரை துரத்திட்டாங்க மக்கள்.
தமிழன் என்றோர் இனமுண்டு,தனியோர் அதற்க்கு குணமுண்டு.அவ்வளவு தான்.

பாலா

தருமி said...

ஜோ,
//அவனும் அவனுக்க தத்துவமும் ..சகிக்கல்ல. //

அப்போ நீங்க ஏற்கெனவே மாட்டிக்கிட்டீங்களோ .. :(

தருமி said...

வாழ்த்துக்களை முந்தி தருவது கொத்ஸ்!

அப்டின்னா இருநூறுக்கு வந்து வாழ்த்து சொல்ல மாட்டீங்களா?
இலவசம்தானே ... காசா, பணமா ... வந்திருங்க..மறந்திடாதீங்க..

Radha Sriram said...

பேருகூட மறந்து போச்சு; ரொம்ப நல்லா நடிப்பார்; ஒரு பெரிய நடிகை மேல் ஒரே காதலா இருந்து, தேவதாஸாகி, சின்ன வயசிலேயே போய்ட்டார். பிறவி செவிட்டு ஊமையாக அமிதாபோட வீட்டுக்கார அம்மாகூட தூள் கிளப்பியிருப்பார் ஒரு படத்தில//

That is Sanjeev kumar!!

otherwisae to answer your questions!!
I think what you have is "USS"-ie.."underdog sympathy syndrome" a unnatural overdose of sympathy towards the predicted loser!!

For example...when Federer and Roddick are competing in a grand slam finals...eventhough you know that Federer is going to win you unconsciously support Roddick..and try to jusstify his mistakes by adding to your vocabulary, phrases such as ""oh that was a bad call"", " today is not his day""and so on...
Persons with this kind of syndrome are perpertual loners!!!!!

POOffffffff

i was just kidding!!!!!!

தருமி said...

ராதா ஸ்ரீராம்,
//That is Sanjeev kumar!!//
அதே! பதிவு போட்டு பத்தாவது நிமிசம் ஒரு ஆபத்பாந்தவர் பெயரை எடுத்துக் கொடுத்தார்.

நீங்க சொல்றமாதிரி நான் ஒரு USS அப்டின்னே வச்சுக்குவோம். ஆனா அதில ஒண்ணு சரியா இல்லையே! predicted loser பத்தி சொல்றீங்களே .. சிவாஜி - எம்.ஜி.ஆர்.ல யாரு predicted loser ஆக இருக்கணும்.

ஒருவேளை predicted loser ஆக வேண்டியவங்க, திடீர்னு அடிக்கிற காத்துல குப்பைக் காகிதம் கோபுரத்து உச்சிக்கு போயிர்ரது மாதிரி போறதுனால வர்ர எரிச்சல் அப்டின்னு சொன்னீங்கன்னா தானே சரியா இருக்கும்?

எல்லாம் சொல்லிட்டு just kidding அப்டின்னா எப்டிங்க ... ?! :)

Anonymous said...

ஹி ஹி நானும் உங்கள போலவே கேள்விதான் கேட்கிறேன்.

(உங்க டெம்பள்ட் நல்லா இருக்கு.. லேபில்ஸ் கீழே போய் இருக்கு..மேலே போடுங்க)

G.Ragavan said...

தருமி, எனக்கு ஒரு சந்தேகம். இந்தப் பதிவ நீங்க எழுதுனீங்களா? நான் எழுதுனேனா? நான் நெனைக்கிறத அப்படியே சொல்றாப்புல இருக்கே! ஒரு இடத்துல கூட மாத்தம் தேவையில்லை. ஏன்? நீங்க ஏன் இப்படி...?

ஜெயபச்சனும் சஞ்சீவ்குமாரும் செவிட்டூமையா கலக்கிய படம் தமிழ்லயும் வந்தது. கமலும் சுஜாதாவும் நடிச்சிருந்தாங்க. "இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அந்த இரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட" என்ற கவியரசரின் பாடல் மிகவும் பிரபலம். வாணி ஜெயராம் பாடியது. பேசாத பெற்றோருக்காக "உங்களுக்காக நானே கேட்பேன். உங்களுக்காக நானே சொல்வேன்." என்ற வரிகள் மிகச் சிறப்பு. குழந்தை பிறந்ததும் குழந்தை அழுகிறதா இல்லை தம்மைப் போல செவிட்டூமையா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாமல் ஜெயா பச்சனும் சஞ்சீவ்குமாரும் தடுமாறி வருந்தும் காட்சியும்..பிறகு நண்பரொருவர் சொல்லி உண்மை தெரிந்து மகிழும் காட்சியும்.....உண்மையைச் சொல்லப் போனால் நான் பார்த்த சிறந்த இந்திப் படங்களில் அதற்குத்தான் முதலிடம். இத்தனை தெரிகிறது. படத்தின் பெயர் தெரியவில்லை. கோரா காகஸ்?

பாலராஜன்கீதா said...

அன்புள்ள ஜிரா,

தமிழில் - உயர்ந்தவர்கள்

ஹிந்தியில் - கோஷிஷ்

நன்றி - http://www.vanijairam.com/Pages/Vani1977.html

தருமி said...

balarajangeetha,
கொடுத்த விவரங்களுக்கு மிக்க நன்றி . உங்க பெயரை பிரித்து வாசிப்பதற்குள் ...ஸ்ஸ்..ஸ் .. அப்பாடா!

தருமி said...

ஜிரா,
இதைத்தான் alter ego என்பார்களோ?

பேசாமல் தலைப்பை 'நாம் ஏன் இப்படி?" என்று மாற்றி விடுவோமா?

எப்படி உயர்ந்தவர்கள் பார்க்காமல் விட்டுப் போச்சுன்னு தெரியலை. கோசிஷில் நீங்கள் சொன்ன அந்தக் காட்சி .. இன்னும் நினைவில் நிற்கும் காட்சி. .. ம்ம்.. ம் ஆனால் இன்றைக்கு டப்பா டான்ஸ் ஆடுன ஆளுதான் எல்லாத்துக்கும் தெரியுது.

மிக்க நன்றி ஜிரா.

dondu(#11168674346665545885) said...

பார்க்கவும்: http://dondu.blogspot.com/2006/12/blog-post_05.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Prabhakar said...

Sir, There is no harm in being somebody's fan or not. I rag my son about his being a Vijay fan and he makes fun of my being a Clint Eastwood and Ilaiyaraja fan. I like Bala's films for their exploration of the sick mind. Critics have not done justice to his handling of metaphors,in his second film. We need an enlightened audience and honest critics

Aravindhan said...

dharumi sir,ilayathalapathy vijay pathi fulla analayse panni oru super topic eluthunga....avaroda punnagai poove(address vangi kudutha mothal padam) athuku munnadi avaroda appa directionla avaru panna arajagangal...try pannuveengala??

தருமி said...

Cinna,
//Critics have not done justice to his handling of metaphors//

why not you wirte about them?

நானும் தெரிஞ்சுக்குவேனே ..!

தருமி said...

aravindhan,

மாட்டி உடுறீங்களே, பாஸூ !

கண்மணி/kanmani said...

இதெல்லாம் கூட பொறுத்துக்கலாம்.ஆனா டாக்டர் பட்டம் குடுத்தாங்களே அவங்களை என்ன சொல்ல?
5 வருஷம் படிக்கிற மருத்துவம்,செய்யற ஆராய்ச்சிக்குக்கூட மதிப்பில்லையே குத்துப் பாட்டு முன்னால.
உயிரைக் கொடுத்து ரிஸ்க் எடுக்கும் சூர்யா,விக்ரம் முன் இதுகள் 'பச்சா' தான்.
ம்ம்ம் ஆமா நீங்க ஏன் இப்படி....இதுகளைப் பத்தி ஆராய்ச்சி?ஏதாச்சும் புராஜெக்டா?

Unknown said...

தருமி சார் இதெல்லாம் ரொம்ப சாதரண மனித உணர்வு தான்...

உங்களுக்கு எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் மேலக் கோபம் வருவது போல் பல பேருக்கு சிவாஜி, கமல், மேல எல்லாம் கோபம் வர்றது உண்டு... அதுன்னால்ல கவலையை விடுங்க...

இங்கேன்னு இல்லை உலகமெங்கும் இந்த விருப்பு வெறுப்புக்கள் உள்ளன.

Post a Comment