Tuesday, February 20, 2007

201. சுடரோட்டம்.

சுடரை ஏற்றி வைத்து, நமக்காக தேன்கூட்டைத் தந்து இன்று நம்மிடமிருந்து பிரிந்து விட்ட சாகரன் அவர்களுக்கு என் மரியாதையோடு, இந்த சுடரோட்டப் பதிவையும் சமர்ப்பிக்கிறேன்.



சிபி,

நீங்கள் உங்களை சுடரோட்டத்தில் இணைத்த குமரனுக்கு நன்றி சொன்னது போல் நான் உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. அவர் உங்களை இணைத்தார்; நானோ மாட்டி விடப்பட்டேன். பொருத்தமான ஆளாகக் குமரன் தேடிப் பிடித்தார். நீங்கள் மட்டும் ஏன் இப்படி? இதெல்லாம் உங்களுக்கே நல்லாவா இருக்கு. சரி, விடுங்க. தனியா மண்டபத்தில நின்னு புலம்பணும் அப்டிங்கிறது என் தலையெழுத்து.

கீழ்க்காண்பனவற்றுள் எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விரிவான விடையளிக்கவும். 18 x 5 = 90

இதுவரை வாத்தியாரா இருந்து கேள்வி மட்டும் கேட்டுக்கிட்டு இருந்த எனக்கு இப்போ இப்படி ஏமாற்றுத் தேர்வு – சாய்ஸே இல்லாம கேள்வி கேட்டா அது ஏமாற்றுத் தேர்வுதானே. ‘எவையேனும் ஐந்து வினாக்களுக்கு ..’ அப்டின்னு கொடுத்துட்டு சாய்ஸே இல்லைன்னா .. இது அநியாயம் இல்லையா, சிபி. இதில ரெண்டு செக்ஷன் வேற! அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வியும் உண்டு. சரி… தலையக் குடுத்தாச்சு… இனிம ஆகுறது ஆகட்டும்னு பார்க்கிறேன். ஆனா கேள்விகளை உங்க ஆர்டர்படி இல்லாம கொஞ்சம் மாத்திக்கிறேன்.

முதல்ல, உங்க 4-வது கேள்வி:
4: "இல்லறமல்லது நல்லறமன்று" - சிறு குறிப்பு வரைக.

இந்தக் கேள்விக்குப் பதில் : தெரியாது.

நமக்குத் தெரிஞ்சா பதில் சொல்லணும்; இல்லாட்டி சாய்ஸ்ல விட்டுரணும் – இதுதான் நம்ம பாலிஸி. ஆனா இந்தக் கேள்விக்கு ஏன் பதில் தெரியலை அப்டின்றதை மட்டும் சொல்லிடறேன்.

நமக்கு (அதாவது, எனக்கு) தெரிஞ்சதே இல்லறம் மட்டும்தான். இதுவரை சாமியாரா ஆனது இல்லை; இனிம ஆகிறதாகவும் ஐடியா கிடையாது. பிரம்மச்சாரிகளைப் பார்க்கும்போது சில சமயம் பொறாமையாகூட இருக்கும். ஆனா, அவங்க செருப்புக்குள்ள (அதாங்க, being in their shoes ) நாம இருந்தது இல்லை. அதனால அது அவங்களுக்கு எப்படி இருக்குது அப்டிங்கிறது நமக்குத் தெரியாது. நம்ம கஷ்ட நஷ்டம் அவங்களுக்குத் தெரியாது. இப்போ என்னடான்னா, புதுசா ‘ஒன்றாய் வாழ்தல்’ – cohabitation அப்டின்னு ஒண்ணு வேற வந்திருக்கு. வெளிய இருந்து பார்க்கிறதுக்கு, 'பரவாயில்லையே, மீசையையும் வச்சிக்கிறாங்க; கூழையும் குடிக்கிறாங்களே' அப்டின்னு நமக்குத் தோணுது. அதில என்ன கஷ்ட நஷ்டம் என்னன்னு நமக்குத் தெரியுமோ!

நான் இல்லற வாசி; அது பிடிச்சிருக்கு; நல்லா இருக்கு அப்டின்னு சொல்றதோடு நிப்பாட்டிக்கணும்; அதை விட்டுட்டு இதுதான் எல்லாத்தையும் விட டாப்புன்னு அடிச்சி விடக்கூடாது; இல்லீங்களா?

----------------------------------------------------------------------------
(வேற ஒண்ணும் இல்லீங்க; தேர்வு எழுதும்போதும் இப்படித்தான் ஒழுங்கா கோடு போட்டு எழுதுற வழக்கம்; அதனாலதான் கோடு எல்லாம் போட்டுட்டேன்.)
-----------------------------------------------------------------------------

2: கூட்டுக் குடும்பம், தனிக் குடும்பம் - ஒப்பிடுக.

இந்தப் பெருசுங்க எல்லார்ட்டயும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ‘எங்க காலத்தில எல்லாம் …’ அப்டின்னு ஒரு பெருமூச்சோடு பேச ஆரம்பிச்சி பெரிய ரோதனை பண்ணிடுங்க .. அது மாதிரி விஷயத்தில இந்தக் கூட்டுக் குடும்ப விஷயம் ஒண்ணு. நம்ம பண்பாடு, வழமை அது இதுன்னு பேசி, கூட்டுக் குடும்பத்துக்கு ஒரேயடியா வக்காலத்து வாங்குவாங்க. அதெல்லாம் 50 வருஷத்துக்கு முந்திய கதை. எப்போ நம்ம சமூகம் விவசாய சமூகமா இருந்தது மாறியதோ அப்பவே வாழ்க்கை முறைகளும் மாறும்; மாறணும்; மாறியாச்சி. கூட்டுக் குடும்பம் என்பதெல்லாம் இனிமே சினிமாவில பாத்துக்க வேண்டியதுதான்.

அதில இன்னொண்ணு, நாம எல்லோருமே கொஞ்சம் சென்டி டைப்புகள்தான். என் பிள்ளை என் பக்கத்திலேயே இருக்கணும்; நான் எப்படி சீராட்டி வளர்த்தேன் அதனால அவன்/அவள்/அவர்கள் வயசான காலத்தில என்னை அப்படி வச்சுக்கணும்; இப்படி வச்சுக்கணும் என்ற பெருசுகளின் வாழ்க்கைக் கணக்கு எனக்குப் பிடிப்பதில்லை. ரெக்கை முளைச்சாச்சா… பறவை பறக்க வேண்டியதுதான். அதைவிட்டுட்டு பாவம் அதுக ரெக்கையை வெட்டி என்கூடவே இரு அப்டின்றது அன்பில்லை; தவறான ஆளுமை.

இதில இன்னொரு ஜோக் என்னென்னா, என் பிள்ளை என்னோடு இருக்கணும் அப்டின்னு சொல்ற பெற்றோர்கள் தங்களைப் பெத்தவங்க பக்கத்தில உக்காந்துகிட்டு இருந்திருக்க மாட்டங்க. அதை நினைச்சும் பார்க்கிறதில்லை. ஜெயகாந்தன் சொன்னது மாதிரி ‘உறவுகள் முன்னோக்கியே நீளுகின்றன’.
--------------------------------------------------------------------------------

5: இறை மறுப்பு என்பது எப்போதும் இறை நம்பிக்கை என்ற ஒன்றைச் சார்ந்தே இருக்கிறது என்கிறேன் நான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிபி, இந்தக் கேள்விக்கு நியாயமா ஒரே வரியில் பதில் சொல்லிட முடியும். அதுக்கு நியாயமா பார்த்தா நீங்க ஃபுல் மார்க் பதினெட்டும் கொடுக்கணும். பொதுவா எடை பார்த்து ஆசிரியர்கள் மார்க் போடுறதா பசங்க எல்லோரும் சொல்றது உண்டு. அதனால் நீங்களும் அப்படி கொடுப்பீங்களான்னு தெரியாததால கூட கொஞ்சம் ரீல் விட்டுக்கிறேன்.

ஒரு வரிப் பதில்: “ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!”.

ரீல் : இறை நம்பிக்கை என்ற ஒன்றை எந்தக் கேள்வியும் இன்றி, ஊட்டப் பட்டதை அரைகுறையாய் செரித்துக் கொண்டு பலரும் இருப்பதாலேயே ‘ஏன், எப்படி, சரியா, தவறா என்றெல்லாம் கேள்வி கேட்கும் சிலர் மட்டும் தங்கள் முடிவாக இறை மறுப்புக் கொள்கையை கைக் கொள்கிறார்கள். ‘அவனை நிப்பாட்டச் சொல்; நான் நிப்பாட்டி விடுகிறேன்’ என்ற தத்துவம் தான்.

விளையாடுகிற குழந்தை தன் முன்னால் இருக்கும் பள்ளத்தைப் பார்க்காமல் போகும்போது பள்ளத்தை பார்த்தவன் பதட்டப் படாமல் இருக்க முடியுமா என்ன?
---------------------------------------------------------------------------

3: இசங்கள், ஈயங்கள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருந்தாலும், அனைவருக்கும் ஏற்புடைய ஒத்த கருத்து இதுவரை கிடைத்தபாடில்லையெ! அல்லது விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் நன்மை பயக்குமா?

ஒருத்தர் சொல்லி இருப்பாரே தன் tag line-ல: “நான் தனித்துவமானவன்; உங்களைப் போலவே” அப்டின்னு. I think; so I am அப்டின்னு பெரிய தத்துவ ஞானி ஒருவர் சொன்னதாகச் சொல்லுவாங்களே; What is meat for the goose may be poison for gander – அப்டின்னும் சொல்லுவாங்களே அது மாதிரி ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். அது அதுபாட்டுக்கு போகுது. “என் வழி தனி வழி”ன்னு சூப்பர் சொன்னாருன்னா அது அவருக்கு மட்டுமில்லீங்க; நம்ம எல்லாத்துக்கும் பொருந்தும். என்ன பிரச்சனைனா, எல்லோருமே ‘என் வழி தனி வழி; அதுவே மிகச் சரியான வழி’ அப்டிங்றாங்க.. அங்கதான் எல்லாமே உதைக்குது!

இது நன்மை பயக்குமா அப்டின்னு கேட்டீங்கன்னா, அங்க ஒண்ணு இங்க ஒண்ணு அப்டின்னு நடக்கலாம். தீப்பொறி எப்போ எங்க எப்படி பத்திக்கும்னு தெரியாதது மாதிரிதான். ஆனாலும் இந்த தத்துவ விவாதங்கள் எல்லாமே அனேகமாக ஒரு வித ego tripsதான்!
----------------------------------------------------------------------------

1 : ஒரு ஆசிரியரின் ஆத்ம திருப்தி என்பது எதில் அடங்கியிருக்கிறது? அதன் எல்லைகள் யாவை?

இது பெரிய கேள்விங்க; சொல்லப் போனா சுயசரிதை எழுதினால்தான் முழுசா பதில் சொல்ல முடியும் அப்டின்னு தோணுது.

நாப்பது பசங்க முன்னால நின்னு க்ளாஸ் எடுக்கிற எல்லோருமே ஆசிரியர் இல்லைன்னு இப்போ இந்த நிமிஷத்தில் தோணுது. க்ளாஸ் எடுக்கிறதோடு, every teacher should leave his stamp on every one of his students அப்டின்ற ‘தத்துவம்’ என்னுடையது. படிச்சி முடிச்சி போனபிறகும் ஒரு மாணவன் தன் ஆசிரியனிடம் காட்டும் அன்பு – மரியாதையோ பயமோ அல்ல – அதில் மட்டுமே ஓர் ஆசிரியருக்கு நீங்கள் சொல்லும் ஆத்ம திருப்தி இருக்கும்.

முதல் முதல் எடுத்த வகுப்பிலிருந்த மாணவன் இன்றும் ஆசிரியனைப் பெயர் சொல்லி அழைத்து நட்போடு பழகி ஆசிரியரின் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறானே அதுவும், கல்லூரியில் படித்து முடித்து பின் Ph.D. பட்டம் வாங்கும்போது தன் thesis-ஐ ஆசிரியனுக்கு சமர்ப்பணமாக்கினானே அதுவும், புதுவீடு கட்டியாக வேண்டிய நிலையில் வங்கிக் கடன் இன்னும் வரவில்லை என்று அதை எதிர் நோக்கியிருப்பது தெரிந்ததும் எதுவும் கேட்காமல் என் பணத்தில் முதலில் ஆரம்பியுங்கள் என்று ஆசிரியருக்குப் பணம் அனுப்பியதும், நல்ல நிலைக்கு வந்த பழைய மாணவன் தன் உயர்வுக்கு காரணம் என்று எல்லோரிடமும் எப்போதும் தன் ஆசிரியர் பெயரைச் சொல்லும்போதும், அதெல்லாவற்றையும் தாண்டி, ஒருகாலத்தில் மாணவனாக இருந்து இப்போது நண்பனாகி, மகனாகி ஆசிரியரின் வாழ்க்கையில் தொடர்ந்து வருவதும்…. இது போல் நிறைய சொல்லலாம். இப்படி நடந்ததெல்லாம் எந்த ஆசிரியருக்கும் நடந்ததா, எனக்கு நடந்ததா என்பதா முக்கியம்? ஆனால், இப்படிப்பட்ட நடப்புகள் தரும் ஆத்ம திருப்தி வேறு எந்த தொழிலிலும் கிடைக்காது என்பதை மட்டும் உறுதியாக நம்புகிறேன்.
----------------------------------------------------------------------------

சிறப்புக் கேள்வி :
கீழ்க்காண்பனவற்றுள் எவையேனும் ஒன்றினுக்கு மட்டும் விரிவான விடையளிக்கவும். 1 x 10 = 10
தங்களை ஜோதிடர் என நினைத்து ஒருவர் ஜாதகத்தில் சந்தேகம் கேட்டாராமே. உண்மையா? :)


ஆமாங்க … ஆமாம் …
அதில் இருந்து என்ன தெரியுது? நிறைய பேர் பதிவுகளின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டுப் போய் விடுகிறார்கள்; எழுதியிருப்பதை வாசிப்பதே இல்லை என்றே தெரிகிறது.
Moral: உள்ளே சரக்கு என்ன இருக்கோ இல்லியோ, தலைப்பை சும்மா ‘கும்’முன்னு வச்சா, கவுண்டருக்குக் கவலையே இல்லை; பிச்சுக்கிட்டு போகும். அதனால் --

கவுண்டர் கணக்கெல்லாம் கணக்கல்ல வாசித்தவர்
கணக்கே நல்ல கணக்கு.
------------------------------------------------------------------------

சிபி சார், ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மார்க் போடுங்க. என் பசங்கட்ட சொல்றது மாதிரி: An answer paper can be either corrected or simply valued. Now I prefer the former.

அப்புறம், நான் யார்ட்ட இந்த சுடரைக் கொண்டு சேர்க்கப் போகிறேன் அப்டிங்கிறதையும் சொல்லணுமே. None other than … the only one… who else .. but ..இளவஞ்சி … சரி..சரி … கைதட்டுனது போதும். . இதோ வரச் சொல்லிர்ரேன்.

இளவஞ்சியின் முன் நான் வைக்கும் நாலு கேள்விகள்:

1. காதல் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது; சின்னது பெரியது என்று எவ்வளவோ இருப்பதை நம் தமிழ் சினிமா டைரக்டர்கள் எப்போதாவது கண்டுபிடிப்பார்களா?

2. அடுத்த ஒலிம்பிக்கில் சீனா அனேகமாக முதலிடம் பெற்று விடும். நமக்கு ஒரு தங்கமாவது கிடைக்குமா? ஏன் நாம் விளையாட்டரங்குகளில் இப்படி மங்குணிகளாக இருக்கிறோம்?

3. vicious circle என்று சொல்வார்களே – அதற்கு உங்கள் அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.

4. மத வேற்றுமைகள் ஒழியாது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், சாதி பேதங்களாவது என்றாவது நமது சமூகத்திலிருந்து ஒழியுமா?

நான் சுடரை சொத்ப்பியிருந்தாலும் நல்ல ஆளுகிட்ட கொண்டு போய் சேர்த்த திருப்தி இருக்கு.


அப்போ நான் விடை வாங்கிக்கிறேன்.
வர்ட்டா ….

56 comments:

பொன்ஸ்~~Poorna said...

//பிரம்மச்சாரிகளைப் பார்க்கும்போது சில சமயம் பொறாமையாகூட இருக்கும். ஆனா, அவங்க செருப்புக்குள்ள (அதாங்க, being in their shoes ) நாம இருந்தது இல்லை.//
ஏன்? உங்களுது குழந்தைத் திருமணமா வாத்தியார்? :))))

தருமி said...

'இப்பகூட' அப்டின்னு வேண்ணா சேத்துக்கங்க, பொன்ஸ்.

துளசி கோபால் said...

சுடர் ஏத்துங்கன்னு சொன்னா இப்படி தீவட்டியா எரியவுட்டீங்களே:-))))))

அதி சூப்பர்.

வாத்தியாரா கொக்கா? :-))))

Unknown said...

தருமி சார் ஆசிரியரின் ஆத்தும திருப்திக் குறித்தக் கேள்விக்கான விடையைப் படித்தேன்.. மனம் தானாய் என்னுடைய ஆசிரியர்களின் பால் விரைந்துச் செல்கிறது..

என்னைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு மாணவனும் ஒரு சிற்பி.. அந்தச் சிற்பியையேச் செதுக்கி உலகுக்கு அளிக்கும் உன்னதமானப் பணி ஆசிரியப் பணி...

இரு ஆசிரியர்கள் போட்டச் சோற்றில் வளர்ந்து ஆளானதாலோ என்னவோ இந்தப் பதில் என்னை நெகிழச் செய்கிறது.

தருமி said...

டீச்சர் திட்டலைன்னு திடமா நம்புறேன்!

பாரதி தம்பி said...

சிபி கேட்க மறந்த கேள்வி....

உங்களிடம் படித்த மாணவர்கள் யாராவது வலைப்பதிவு மூலம் தங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்களா..?

குறிப்பு: 'என் கிட்ட படிச்சவன் எங்கேருந்து வெளங்குவான்..?' என்பது மாதிரியான பதிலோ, 'வாத்தியார்.. நானே இப்பதான் பிளாக்குறேன். என்கிட்ட படிச்ச பையன் எங்கேருந்து பிளாக்குறது..?' என்பது மாதிரியான பதிலோ கட்டாயம் நிராகரிக்கப்படும்.

தாணு said...

என்னங்க நடக்குது ப்ளாக்லே. நீண்ட விடுப்பில் இருப்பவர்களுக்கு அட்லீஸ்ட் மயில் மூலமாவது சொல்லலாமில்லே?

பாரதி தம்பி said...

ஆசிரியரின் ஆத்ம திருப்தி பற்றிய உங்கள் பதில் ஒசத்தி கண்ணா ஒசத்தி...

தருமி said...

தேவ்,
அந்த இரு பெருமகனார்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

தருமி said...

//உங்களிடம் படித்த மாணவர்கள் யாராவது வலைப்பதிவு மூலம் தங்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்களா..?//

ரொம்பவும் குறைவே.படித்ததாக சிலர் சொன்னதுண்டு; பின்னூட்டம் இடத்தான் ஆட்களைக் காணோம்.

சொன்ன நல்ல வார்த்தைக்கு நன்றி

தருமி said...

தாணு,
உங்க விடுப்பில் இன்னும் ஒரு மாசம் இருக்கே ... அதான் சொல்லலை. ஆனாலும் எப்படியோ வந்து சேர்ந்திட்டீங்களே அதுக்கு நன்றி

Gurusamy Thangavel said...

சூப்பரோ சூப்பர், இது மெய்யாலுமே மூளையிலிருந்து வர்ற வார்த்தைங்கண்ணா.

தருமி said...

என்ன சொல்றீங்க தங்கவேல் ..சூப்பரோ சூப்பர் அப்டின்றது மெய்யாலுமே உங்கள்மூளையிலிருந்து வர்ற வார்த்தைன்னு சொல்றீங்களாண்ணா?
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்குமுங்க

Gurusamy Thangavel said...

//மெய்யாலுமே உங்கள்மூளையிலிருந்து வர்ற வார்த்தைன்னு சொல்றீங்களாண்ணா//

என்கால வாரீட்டீங்களே சார்

Hariharan # 03985177737685368452 said...

தருமிசார்,

நல்ல ஆசிரியர்களால் மட்டுமே ரத்த உறவு இல்லை என்றாலும் ரத்தம் சுண்டும்வரை ஒருவனை அவன் நினைவில் இருந்தபடியே நெறிப்படுத்த இயலும்.

ஒரு ஆசிரியத் தந்தையின் மகன் என்பதால் ஆசிரியரின் ஆத்ம திருப்தி கண்டு கூடுதல் நெகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. அருமையான கேள்விகள். சிறப்பான பதில்கள்.

//ஒரு வரிப் பதில்: “ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!”.
//

இது நல்ல பதில். இரசித்தேன். :-)

ஒவ்வொரு கேள்விக்கும் அருமையான பதில்களா சொல்லியிருக்கீங்க.

நான் ஆசிரியரா வேலையே பார்த்ததில்லை என்றாலும் சிலருக்கு ஆசிரியர் 'மாதிரி' வாழ்க்கைக்கு வேண்டிய சிலவற்றைக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அதனால் நீங்கள் கேள்வி 1க்கு கொடுத்திருக்கும் பதிலை உளப்பூர்வமாக அனுபவிக்க முடிந்தது (அதனால மத்த பதில்கள் எல்லாம் உளப்பூர்வமாக ஒத்துக்கொள்ள முடியலையான்னு கேக்காதீங்க. :-) )

அடுத்து சுடர் ஏந்துவதற்கு நீங்கள் தேர்ந்தெடுத்தவர் மிக அருமையான பதிவர். எத்தனை பதிவுகளில் கண் கலங்க வைத்திருக்கிறார். அவரை நீங்கள் தேர்ந்தெடுத்தது மிகச் சிறப்பு. இப்போதெல்லாம் அவ்வளவாக அவர் பதிவுகள் இடுவதில்லை. Out of sight, out of mind என்று இல்லாமல் அவரை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது அவரின் எழுத்துகள் தந்த தாக்கத்தையும் யாரையும் மறந்துவிடாத உங்கள் நேசத்தையும் காட்டுகிறது.

இளவஞ்சிக்கு நீங்கள் எந்த விவகாரமான கேள்விகளும் கேட்கவில்லையே?! ஏன்?

குமரன் (Kumaran) said...

முதல் + குத்து என்னோடது.

VSK said...

சிறப்பான பதிலகள் மூலம் சீர்ரக எரிய விட்டிருக்கிறீர்கள் சுடரை!

என்ன இருந்தாலும் ஆசிரியர் அல்லவா?
எப்போது, எப்படி பாடம் நடத்தணும்னு சொல்லியா தரணும்!

:))

அது குழந்தைத் திருமணமாகத்தான் இருக்கணுமா, பொன்ஸ்?

:))

வல்லிசிம்ஹன் said...

இன்னுமொரு நல்ல வகுப்பில் பாடம் கற்ற உணர்வு.
நன்றி தருமி சார்.
நேர்மையான வார்த்தைகள் .
கூட்டுக் குடும்பம் பற்றி உங்கள் கருத்து சூப்பர்.

சிவபாலன் said...

தருமி அய்யா,

//விளையாடுகிற குழந்தை தன் முன்னால் இருக்கும் பள்ளத்தைப் பார்க்காமல் போகும்போது பள்ளத்தை பார்த்தவன் பதட்டப் படாமல் இருக்க முடியுமா என்ன? //



மிக அருமை!

இரத்தின் சுருக்கம்.

நன்றி!

thiru said...

சுடர் அருமை.

//ரெக்கை முளைச்சாச்சா… பறவை பறக்க வேண்டியதுதான். அதைவிட்டுட்டு பாவம் அதுக ரெக்கையை வெட்டி என்கூடவே இரு அப்டின்றது அன்பில்லை; தவறான ஆளுமை.//

நல்ல உவமை அய்யா.

தருமி said...

தங்கவேல்,
//என்கால வாரீட்டீங்களே சார் //
என்ன அப்படி சொல்லீட்டீங்க .. நாம என்ன அப்படியா பழகியிருக்கோம் :)

தருமி said...

ஹரிஹரன்,
வாத்தியார் பிள்ளை மக்கு என்பதற்கேற்ப நானெல்லாம் இருக்கேனே; நீங்கள் எப்படி தப்பித்தீர்கள்?

தருமி said...

குமரன்,
//எத்தனை பதிவுகளில் கண் கலங்க வைத்திருக்கிறார்//
முதல் பாதியில் சிரித்தே கண்கலங்க வைத்துவிட்டு, கடைசியில் சென்டியாக அழவைக்கிற திறமை ..ஆள அசரவைக்கிற திறமையில்லையா? அதை மறக்க முடியுமா என்ன?

நல்ல வார்த்தைகளுக்கு நன்றி குமரன்.

தருமி said...

குமரன்,
//முதல் + குத்து என்னோடது. //

அதெல்லாம் மறந்தே போச்சு.
எனக்கு மட்டும்தானா இல்லை பொதுவாக அந்தக் குத்தை நிறைய பேர் மறந்து விட்டோமோ? ஒருவேளை இப்போதெல்லாம் உள்குத்து, வெளிக்குத்து கொடுக்கிறதினால இந்தக் குத்தை எல்லோரும் மறந்து விட்டோமென நினைக்கிறேன்.

தருமி said...

SK,
//எப்போது, எப்படி பாடம் நடத்தணும்னு சொல்லியா தரணும்!//

இதெல்லாம் அப்பவே அவருக்குத் தெரிஞ்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் அப்டின்னு என் பசங்க சொல்றது மாதிரி ஒரு அசரீரி கேக்குதே!

தருமி said...

வல்லி சிம்ஹன்,
அப்போ 'ஹமாம்' வார்த்தைகள் அப்டின்னு சொல்றீங்க.. நன்றி. (சும்மானாச்சுக்கும் நடுவில ஒரு கடி!)

ஜோ/Joe said...

//இரு ஆசிரியர்கள் போட்டச் சோற்றில் வளர்ந்து ஆளானதாலோ என்னவோ இந்தப் பதில் என்னை நெகிழச் செய்கிறது.//

ரிப்பீட்டே.

தருமி said...

சிவபாலன்,
ரத்தினச் சுருக்க பாராட்டுக்கு மிக்க
நன்றி

தருமி said...

திரு,
சிவபாலனுக்கு சொன்னதே உங்களுக்கும்.
நன்றி

ramachandranusha(உஷா) said...

ஒரு வரிப் பதில்: ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!//
ஹூஹூம் வாத்தியார் சொன்னதை பிள்ளைகள் தவறாய் புரிஞ்சிக்கப்போறாங்க. எது இருட்டு ,எது வெளிச்சம் :-)))))

ஜோ/Joe said...

//இரு ஆசிரியர்கள் போட்டச் சோற்றில் வளர்ந்து ஆளானதாலோ என்னவோ இந்தப் பதில் என்னை நெகிழச் செய்கிறது.//

ரிப்பீட்டே.

தருமி said...

ஜோ,
அப்டின்னா தேவுக்குச் சொன்னது -
ரிப்பீட்டே

தருமி said...

உஷா,
"என்" பிள்ளைகள் தப்பா புரிஞ்சுக்க மாட்டாங்க. எனக்கு அந்த நம்பிக்கையுண்டு.

ஜோ/Joe said...

தருமி,
பல விடயங்களில் உங்களுக்கும் எனக்கு ஒரே ரசனை இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .உங்களைப் போல நானும் இளவஞ்சி ரசிகன் என்பது நீங்கள் அறிந்தது தானே!

தருமி said...

ஜோ,
//உங்களுக்கும் எனக்கு ஒரே ரசனை இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது//

சிலர் வருத்தப்படவும் இதே காரணம் இருக்கலாம் இல்லையா?!!
ஜோ, முந்திய ஒரு பதிவில் ஜிரா பின்னூட்டத்தை வாசியுங்களேன்.

"இன்றோடு மூவரானோம்" - (கம்ப ராமாயணம்)

முத்துகுமரன் said...

தருமி அய்யா,
உளப்பூர்வமாக பதிலளித்து சுடரேற்றி இருக்கிறீர்கள். இன்னும் ஓரிரு முறை வாசிக்க தூண்டுகிறது.

தருமி said...

வாங்க முத்துக் குமரன்.
நாம ஒருவரை ஒருவர் 'பாத்துக்கிட்டதே' ரொம்ப நாளாகிப் போச்சே.

நன்றி

இராம்/Raam said...

உள்ளேன் ஐயா..... :)

ஓகை said...

ம், எப்படி இதெல்லாம்? ஒருவர் கூட எதிர் கருத்து வைக்கவில்லை! அட, மாற்றுக் கருத்துகூட வைக்கவில்லை!!

மாணவராக சேர்ந்துவிட வேண்டியதுதான். ஏகலைவன் மாதிரியாவது மாணவனாக சேர்ந்துவிடவேண்டியதுதான்.

ம், எப்படி இதெல்லாம்? ஒருவர் கூட எதிர் கருத்து வைக்கவில்லை! அட, மாற்றுக் கருத்துகூட வைக்கவில்லை!!
நாமாவது வைத்து பார்ப்போம்.

// விளையாடுகிற குழந்தை தன் முன்னால் இருக்கும் பள்ளத்தைப் பார்க்காமல் போகும்போது பள்ளத்தை பார்த்தவன் பதட்டப் படாமல் இருக்க முடியுமா என்ன?//

உங்கள் பக்கமிருந்தால் உவக்க வேண்டிய உவமை!

ஆனால்,

விளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்.
விளையாடுகிற குழந்தைகள் அத்தனை அத்தனை பேர்
வீழ்த்திவிடுமாறாய் அத்தனை அத்தனை பள்ளங்கள்
வினையுணர்ந்தோராய் வெகு சிலர்!
விளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்.
உணர்ந்தோர்க்கு மட்டும்
தெரிந்துகொண்டே இருக்கின்றன பள்ளங்கள்
அவர்கள் பதட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!
சுழல்வதை நிறுத்தாத உலகத்தில்
விளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்.

ilavanji said...

//ஒரு வரிப் பதில்: “ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!”.
//

அருமையான பதில். ஆனால், என்ன ஆச்சரியம்! இதே பதிலை குமரன் சொல்லியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும் போல! :)

தருமிசார்,

அழைப்பிற்கு நன்றி. ரெண்டுமூனு நாள் லேட்டானா கோச்சுக்காதீங்க!

Anonymous said...

ஹிம்ம்ம்ம்ம்...ஒருதரம் வாசித்தேன்...புரியவில்லையே...மறுபடி படிச்சிட்டு வாறேன்..

சுடரேற்றியதற்கு வாழ்த்துக்கள் :)

Osai Chella said...

நன்றாக நகைச்சுவையோடுஏற்றி இருக்கிறீர்கள்! படித்தேன் ரசித்தேன்! உதாரணங்கள் ரொம்ப சூப்பர்! நீங்க வாத்தியாரா!? மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

தருமி said...

ராம்,
மனசில என்ன நினச்சிக்கிட்டு இருக்கீங்க? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை. நீங்க பாட்டுக்கு ராஜா மாதிரி வர்ரீங்க ... அட்டெண்டன்ஸ் மட்டும்கொடுத்துட்டு போறீங்க ... இது என்ன .. என் க்ளாஸ் மாதிரி நினச்சுக்கிட்டீங்களா? ம்ம்..ம்..

தருமி said...

ஓகை,
மாற்றுக் கருத்து சொல்றேன் அப்டின்னுட்டு,
குழந்தை - பள்ளம் - வினையுணர்ந்தோரின்படபடப்பு என்று நான் சொன்னதை உறுதிப் படுத்திதானே இருக்கிறீர்கள்!
//அவர்கள் பதட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்!
சுழல்வதை நிறுத்தாத உலகத்தில்
விளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்// நானும் வேறு ஏதும் சொல்லவில்லையே!

தருமி said...

இளவஞ்சி,
//இதே பதிலை குமரன் சொல்லியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும் போல! :) //

அதுதான் நான் அப்பப்போ பயன்படுத்துற perspective பற்றிய விஷயம். யார் யாருக்கு எந்த கோணமோ அதை எடுத்துக்கொள்ளட்டுமே ..

தருமி said...

என்ன தூயா இப்படி நிஜமாவா சொல்றீங்க..? பொதுவா நோட்ஸ் கொடுக்கிறதில்லை .. வேணும்னா விளக்கம் கொடுத்திருவோம்...

தருமி said...

செல்லா,
//நீங்க வாத்தியாரா!? //
ஆமாம். ஆனால் - ex

அதுசரி, நீங்க வாத்தியாரா என்பதற்கு அடுத்து ? சரி; இது எதுக்கு !
என்ன வச்சி காமெடி எதுவும் பண்ணலையே?!!

வரவனையான் said...

அதெல்லாம் சரி, நீங்களே பிட் அடிக்கிறது எந்த ஊரு நியாயம்


:))))))))))))

ஓகை said...

உங்கள் பக்கமிருந்தால் உவக்க வேண்டிய உவமை


விளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்
விளையாடுகிற குழந்தைகள் அத்தனை அத்தனை பேர்
வீழ்த்திவிடுமாறாய் அத்தனை அத்தனை பள்ளங்கள்
வினையுணர்ந்தோராய் வெகு சிலர்
விளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்
உணர்ந்தோர்க்கு மட்டும்
தெரிந்துகொண்டே இருக்கின்றன பள்ளங்கள்
அவர்கள் பதட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்
சுழல்வதை நிறுத்தாத உலகத்தில்
விளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்!

உணர்ந்தோருக்கு மட்டுமே தெரிகின்ற
அதிசய பள்ளங்கள்
கருப்புத் தரைத்திட்டுகளை
கண்டும் கானாமலும்
விளையாடிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்!!

தருமி said...

வரவனையான்,
//அதெல்லாம் சரி, நீங்களே பிட் அடிக்கிறது எந்த ஊரு நியாயம்//

இதென்னங்க உங்களோடு அநியாயமா இருக்கு ... சரியான flying squad மாதிரி! நான் எங்கேங்க பிட் அடிச்சேன்.

நீங்க இனிம எப்போ ட்ரவுசர் பாண்டி எழுதுவீங்க ..? அந்த சீரிஸ் விடாம எழுதுறது...?

தருமி said...

//ஒரு வரிப் பதில்: “ஆம்; இருட்டு என்று ஒன்று இருப்பதால்தானே விளக்குக்கு அவசியம் இருக்கிறது!”.
//

அருமையான பதில். ஆனால், என்ன ஆச்சரியம்! இதே பதிலை குமரன் சொல்லியிருந்தாலும் பொருத்தமாக இருந்திருக்கும் போல! :) //

இளவஞ்சி,
யோசித்துப் பார்த்ததில் முமரன் சொன்னால் அது பொருத்தமாக இருந்திருக்காது என்று எண்ணுகிறேன். ஏனெனில் முதலில் நம்பிக்கைகளும் அதன் பின்பே அந்த நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களும் வந்திருக்க முடியும். இல்லையா?

ilavanji said...

தருமிசார்,

// முதலில் நம்பிக்கைகளும் அதன் பின்பே அந்த நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களும் வந்திருக்க முடியும். இல்லையா? //

அடடா! நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. இருட்டு என்பதனை நாத்திகமாகவும் வெளிச்சம் என்பதனை ஆத்திகமாவும் கொண்டு குமரன் அதே வரியை சொல்லாமென்ற முறையில் சொன்னது. உங்கள் கருத்துக்கு எதிர்ப்பதமாக அதை சொல்லவில்லை.

வழக்கம்போல அரைகுறையா சொல்லி செதப்பிட்டேன் பாருங்க...

தருமி said...

இளவஞ்சி,
அடடே! நான் தான் //வழக்கம்போல அரைகுறையா சொல்லி செதப்பிட்டேன்// என்று நினைக்கிறேன்.

//யோசித்துப் பார்த்ததில் குமரன் சொன்னால் அது பொருத்தமாக இருந்திருக்காது// என்று நீங்கள் சொன்னதைப் புரிந்துதான் சொன்னேன்.
அப்படியா, இல்லை ரெண்டுபேரும் ஒரே விஷயத்தைதான் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ? விடுங்க, தலைசுத்துது....

viswa said...

கல்லூரியில் படித்து முடித்து பின் Ph.D. பட்டம் வாங்கும்போது தன் thesis-ஐ ஆசிரியனுக்கு சமர்ப்பணமாக்கினானே

தருமி said...

என்ன சொல்ல வர்ரீங்க, விஸ்வா? புரியலையே? கொஞ்சம் நோட்ஸ் போடுங்களேன்...

Post a Comment