Saturday, March 22, 2008

254. இடப் பங்கீட்டின் "வருடாந்திரத் திருவிழா"

எனக்கு இதே பொழப்பா போச்சு. வருஷா வருஷம் தீபாவளி வருதோ என்னமோ, U.P.S.C. தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் எல்லாம் ஒரு பிரச்சனை; அது செய்தித்தாள்களில் வர, அதைப் பற்றி நானும் பதிவெழுத ... மெகா சீரியலாகிப் போச்சு. ஆனால் கவலைப் படவேண்டியவர்களும், கவலைப்பட்டு ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யக் கூடிய நிலையில் இருப்பவர்களும் ஏதும் செய்யாமல் இருப்பதும் மகா மெகா சீரியலாக தொடருது; இன்னும் எத்தனை காலமோ நம் மக்கள் விழிப்பதற்கு?


பாருங்க, இன்று : மார்ச் 22, 2008
இதே விஷயத்தை : ஜுலை14, 2007 எழுதியிருக்கிறேன்.
அதற்கு முன்பு : : ஜூலை 05, 2006


அடுத்த ஆண்டும் இதே விஷயத்தை எழுத வேண்டி வரலாம். எழுத நான் இருந்தால் எழுதிவிடுகிறேன். இல்லைன்னா தயவுசெஞ்சு யாராவது இதைத் தொடரவும் - இப்படி ஒரு முதல் "பதிவுலக உயில்" எழுதி வைக்கலாம்ன்னு தோணுது. அட போங்கய்யா!

***********************************************

சரி, சேதியைச் சொல்லிவிடுகிறேன். இன்றைய The Hindu நாளிதழில் வந்த செய்தி கீழே ஆங்கிலத்தில் உள்ளது. அதில் உள்ள முக்கிய இரு பகுதிகளைத் தமிழில் தருகிறேன்:


(மெரிட்)தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றிருந்தும் ( O.C.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்பட வேண்டிய) 31 OBC & 1 SC போட்டியாளர்களுக்கு அந்த அடிப்படையில் வேலை கொடுக்கப்படவில்லை.

... இதனால் .. 31 OBC & 1 SC போட்டியாளர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப் பட்டுள்ளது.


இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள கீழே இரு ஆண்டுகளுக்கு முன் இட்ட பதிவில் ஒரு பகுதியையும், என் மற்றொரு பதிவுக்கு வந்த ப்ரபு ராஜதுரையின் பின்னூட்டத்தின் ஒரு பகுதியையும் கொடுத்துள்ளேன்; வாசித்துக் கொள்ளுங்கள்.

***********************************************************


Saturday, July 14, 2007 -
அன்று எழுதியதில் முதல் பத்தி:

சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (05.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.


**********************************************************


Thursday, August 03, 2006

I.A.S., I.P.S. என்பதற்கான UPSC தேர்வுகள் எந்தக் குழறுபடி இல்லாமல், ஊழல் இல்லாமல் மிகச் சரியாக சிறப்பாக நடந்து வருவதாகத்தான் நானும் பலரைப்போல் நினைத்திருந்தேன் - இந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படும்வரை.

Prelims, Mains தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் பின் நடக்கும் நேர்முகத்தேர்வில் பெறும் மொத்த மதிப்பெண்களை வைத்து rank செய்யப் பட்டு அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை OC (open competition) -ல் சாதி எதுவும் பார்க்காது தேர்ந்தெடுக்க வேண்டும். OC quota முடிந்தபின் B.C., S.C., S.T. என்ற சாதிவாரியான மாணவர்களை அவர்களது rankபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.இதுவே முறை. ஆனால் எத்தனை ஆண்டுகளாகவோ தெரியாது; என்ன நடந்திருக்கிறது என்றால் O.C. என்றால் (F.C. என்ற கணக்கில்) அது முற்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே உரியது போல், top rankers-ல் உள்ள Forward Community மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு, மற்ற சாதி அடிப்படையான இடங்களுக்கு மட்டுமே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். They were hoodwinking everybody and kept their portal safe and secure. இதனால் பிறபடுத்தப் பட்டோர் 25%க்கு மேலும், தாழ்த்தப்பட்டோர் மொத்தமே 18%க்கு மேலும் வரமுடியாது. இது ஒரு பயங்கர மோசடி.



**************************

ஜூன்05, 2006ல் எழுதிய பதிவில் திரு. ப்ரபு ராஜதுரை இட்ட பின்னூட்டத்தின் ஒரு பகுதி:

Monday, June 05, 2006
PRABHU RAJADURAI said…

உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக(வே) ஒதுக்கப்பட்டது

********************************************************

இந்துவில் இன்றைய செய்தி:

Merit lists of civil services exam quashed

K.T. Sangameswaran
--------------------------------------------------------------------------------

Court declares Rule 16 (2) of examination rules unconstitutional


--------------------------------------------------------------------------------

CHENNAI: Declaring Rule 16 (2) of the Examination Rules for Civil Services Examination 2005 “unconstitutional, null and void,” the Madras High Court has quashed the merit lists prepared by the Centre and the Union Public Service Commission (UPSC).

A Division Bench, comprising Justices Elipe Dharma Rao and S.R. Singharavelu, said instead of being affirmative, progressive and pragmatic in achieving social justice, the impugned rule ran counter to the benefit of SC/ST/OBC candidates.

The Bench directed the Centre and the UPSC to proceed with the selection from the stage of announcement of results for all the 457 posts in 21 services notified in December 2004, re-work the allocation dehors(?) the impugned rule and treat the reserved candidates, who got selected on merit without availing themselves of relaxed standards, as unreserved candidates.

They should fill the posts of ‘reserved category’ with the candidates who availed themselves of the relaxed standards after preparing the merit list for each category by following the Supreme Court’s judgments in the R.K. Sabharwal’s case and Satya Prakash’s case.

Considering the fact that there was a considerable delay in making the selection, the court directed the official respondents to complete the entire exercise within 12 weeks.

The UPSC had issued a notification in December 2004 to fill 457 posts in 21 different cadres. It published a list of 425 candidates who were successful in the main examination in the first phase and remaining 32 in the second phase along with a consolidated reserve list of 64 candidates. Thirty-one OBC candidates and one SC candidate, whose names were in the merit list, did not choose to get the posting as per the unreserved category. They chose to avail themselves of the higher services under the reserved quota.

Two selected candidates, R. Arulanandan and Ramesh Ram, filed petitions before the Central Administrative Tribunal seeking to declare Rule 16 (2) as unconstitutional and a direction to the respondents to make allocation to various services on the basis of the civil services examinations 2005 by treating the 31 OBC candidates, selected on merit, as general category candidates.

The tribunal disposed of the petitions with certain directions. Aggrieved, the writ petitions were filed.

In the common order, the Bench said the Supreme Court had held that a reserved category candidate getting selected on his own merit should be considered only as an unreserved candidate and not as a reserved category candidate. However, subsequent to the judgment, the impugned amended rule came into effect.

By resorting to Rule 16 (2), the official respondents had deprived 31 OBCs and one SC candidate from getting their postings. It was seen that such vacancies created by the meritorious reserved candidates were then filled with other unreserved candidates.

24 comments:

Bruno_புருனோ said...

அவர்கள் (UPSC) FCக்கு இடஒதுக்கீடு செய்வது காலம் காலமாக நடப்பது தான். இது குறித்து திரு உமாசங்கர் இ.ஆ.ப அவர்கள் ஒரு முறை ஒரு விளக்கமான கட்டுரை எழுதியிருந்தார்கள்

இதே போலத்தான் AIIMSஸிலும் FCக்கு 77.5 சதவிதம் இட ஒதுக்கீடு உள்ளது.

பூனைக்கு யார் மணிகட்டுவது என்று தெரியவில்லை.

Badri Seshadri said...

அன்புள்ள தருமி. நீங்கள் ஆங்கிலத்த்லிருந்து தமிழுக்கு மொழிமாற்றும்போது உங்களுக்கு விருப்பமான கருத்துகளைச் சேர்த்து தவறாக மொழிமாற்றிவிட்டீர்கள்.

ஆங்கிலத்தில் இருந்தது இது: ”Thirty-one OBC candidates and one SC candidate, whose names were in the merit list, did not choose to get the posting as per the unreserved category.”

தமிழில் நீங்கள் மாற்றியது இது: ”(மெரிட்)தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றிருந்தும் ( O.C.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்பட வேண்டிய) 31 OBC & 1 SC போட்டியாளர்களுக்கு அந்த அடிப்படையில் வேலை கொடுக்கப்படவில்லை.”

உண்மை என்னவென்றால், இந்த 31+1 பிற்படுத்தப்பட்டோர், தங்களை பொது கேட்டகரியில் சேர்க்காமல் இட ஒதுக்கீடு கேட்டகரியில் சேர்க்குமாறு அவர்களே விரும்பிக் கேட்டுள்ளனர். அதாவது முற்படுத்தப்பட்ட சாதியினர் சேர்ந்து அவர்களை அப்படிச் செய்யத் தூண்டவில்லை. அல்லது அரசாங்க இயந்திரத்தில் உள்ள முன்னேறிய சாதியினர் அடியிலிருந்து குழிபறிக்கவில்லை. இந்தப் பிறபடுத்தப்பட்ட மாணவர்கள் தங்களது சுயநினைவுடன் தாங்களாகவே இப்படிச் செய்ய விரும்பினார்கள்!

ஏன்?

ஏனென்றால் பொது கேட்டகரியில் இவரது ரேங்க் 40 என்று இருக்கும் (என்று வைத்துக்கொள்வோம்). இவர் கேட்கும் இடம் இவருக்குக் கிடைக்காது. ஆனால் இட ஒதுக்கீட்டு கேட்டகரியில் இவரது ரேங்க் 1 என்று இருக்கும். அப்போது இவர் கேட்கும் இடம் இவருக்குக் கிடைக்கும்.

எனவே தன் சுயநலத்துக்காக (அதில் தவறொன்றும் இல்லை), பிறபடுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர் இந்த முடிவை எடுக்கிறார். இதில் அடுத்தவனை வைது ஒரு பிரயோசனமும் இல்லை. இதுபற்றிய முழுப் புரிதல் வேண்டுமானால் குழலியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!

பாதிக்கப்படுவது நிச்சயம் பிற்படுத்தப்பட்ட 'சாதியினர்'. ஆனால் இதற்குக் காரணம் அதே சாதிகளைச் சேர்ந்தவர்களே. அடுத்தவர்கள் இல்லை. அடுத்தவன்மீது குற்றம் சாட்டி, தங்களது சாதியில் உள்ள மாணவர்களின் சுயநலத்தை மறைப்பது அவசியமற்றது. எல்லாப் பிரச்னையும் உயர்சாதியினரால் என்ற வாதம் முட்டாள்தனமானது.

தருமி said...

பத்ரி,
கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.

ஆனாலும் நான் குறிப்பிட்ட பிரச்சனைகள் மறுக்கப்படமுடியாதெனவே நினைக்கிறேன். அத்தகைய சூழலில் உங்களின் கடைசி சொற்றொடர் வருத்தமளிக்கிறது; அதற்கு என் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

Bruno_புருனோ said...

பத்ரி சார்,
நீங்கள் சொன்னதும் சரிதான்.
ஆனால் சில விளக்கங்கள்.
இப்படி பிரச்சனை வருவதற்கு காரணமே, UPSC கடைபிடிக்கும் percentage distribution.
அவர்கள் அப்படி யில்லாமல் Roster முறை கடைபிடித்தால் எந்த பிரச்சனையும் கிடையாது
AIPG ல் Roster முறை கடைபிடிக்கிறார்கள். ஆனாலும் அதில் ஒரு சின்ன தவறு செய்கிறார்கள். (affecting the general category as well as the reserved category, but affects the general category more than reserved)

TNPSC Roster தான் எந்த சிக்கலும் இல்லாதது.

This form of roster is the best for every one.

Bruno_புருனோ said...

பாரதத்தில் இட ஒதுக்கீடு பல வகையாக கடைபிடிக்கப்படுகிரது

1. விகிதாசார முறை - உதாரணம் - தமிழக மருத்துவக்கல்லூரி MBBS தேர்வு முறை.
2. 100 புள்ளி ரொஸ்டர் - உதாரணம் -, TNPSC, All India PG, (http://www.targetpg.net/2007/02/3200-point-reservation-roster-rank-0001.html)
இது சிறந்த முரை. ஆனால் தற்பொழுது AIPGல் ஒரு சிறு குழப்பம் செய்து விட்டார்கள்

இதில் விகிதாசார முறையில் குழப்பம் செய்யலாம்.

எப்படி என்றால்

தமிழகத்தில் 17 மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன.
ஒரு கல்லூரியில் 100 இடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். (சும்மா ஒரு கணக்கிற்கு. உண்மையில் சில கல்லூரிகளில் 200 இடங்கள் கூட இருக்கின்றன)

மொத்தம் 1700 இடங்கள்
இதில் இட ஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டுமென்றால்

இரண்டு முறைகள் உள்ளன

1. முறை 1

ஒவ்வொரு கல்லூரியிலும்
31 இடங்கள் பொது பிரிவு
30 இடங்கள் BC
20 இடங்கள் MBC / DC
18 இடங்கள் SC
01 இடங்கள் ST

என்று பிரித்துவிடுவது

2. முறை 2

மொத்தமாக
527 இடங்கள் பொது பிரிவு
510 இடங்கள் BC
340 இடங்கள் MBC / DC
306 இடங்கள் SC
17 இடங்கள் ST
என்று பிரிப்பது

இரண்டிலும் 69 % இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது
ஆனால் பலன் வேறு வேறு :) :) :)

--

The main problem is that student community are not aware of the nitty gritties and some times even the administrators are totally ignorant

Bruno_புருனோ said...

பாரதத்தில் இட ஒதுக்கீடு பல வகையாக கடைபிடிக்கப்படுகிரது

1. விகிதாசார முறை - உதாரணம் - தமிழக மருத்துவக்கல்லூரி MBBS தேர்வு முறை.
2. 100 புள்ளி ரொஸ்டர் - உதாரணம் -, TNPSC, All India PG, (http://www.targetpg.net/2007/02/3200-point-reservation-roster-rank-0001.html)
இது சிறந்த முரை. ஆனால் தற்பொழுது AIPGல் ஒரு சிறு குழப்பம் செய்து விட்டார்கள்

இதில் விகிதாசார முறையில் குழப்பம் செய்யலாம்.

எப்படி என்றால்

தமிழகத்தில் 17 மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன.
ஒரு கல்லூரியில் 100 இடங்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். (சும்மா ஒரு கணக்கிற்கு. உண்மையில் சில கல்லூரிகளில் 200 இடங்கள் கூட இருக்கின்றன)

மொத்தம் 1700 இடங்கள்
இதில் இட ஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டுமென்றால்

இரண்டு முறைகள் உள்ளன

1. முறை 1

ஒவ்வொரு கல்லூரியிலும்
31 இடங்கள் பொது பிரிவு
30 இடங்கள் BC
20 இடங்கள் MBC / DC
18 இடங்கள் SC
01 இடங்கள் ST

என்று பிரித்துவிடுவது

2. முறை 2

மொத்தமாக
527 இடங்கள் பொது பிரிவு
510 இடங்கள் BC
340 இடங்கள் MBC / DC
306 இடங்கள் SC
17 இடங்கள் ST
என்று பிரிப்பது

இரண்டிலும் 69 % இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது
ஆனால் பலன் வேறு வேறு :) :) :)


100 புள்ளி ரோஸ்டரில் 100 வது ரேங்க எடுத்த SC மாணவரும், 19 வது ரேங்க் எடுத்த பொது பிரிவு மானவரும் சமமாக பாவிக்கப்படுவார்கள்


இது இரண்டும் இல்லாத Rotation Roster என்று ஒரு உருப்படாத முறை இருக்கிறது
AIIMS மேற்படிப்பிற்கு அதைத்தான் உபயோகிக்கிறார்கள்
இதனால் பொது வகுப்பினருக்கும் நஷ்டம். Reserved மாணவர்களுக்கும் நஷ்டம்.

Rotation ரோஸ்டரில் 1வது ரேங்க் வாங்கிய பொது பிரிவு மாணவரை விட 100 வது ரேங்க எடுத்த SC மாணவருக்கு அதிக லாபமும்
1வது ரேங்க் வாங்கிய SC மாணவரை விட 100 வது ரேங்க எடுத்த பொது பிரிவு மாணவருக்கு அதிக லாபமும் வரலாம் ??? வராமலும் போகலாம் !!!! That is a totally unscientific method followed in institutes like AIIMS, JIPMER...


இந்த பல வகை இட ஒதுக்கீடு குறித்து ஒரு விபரமான பதிவு எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.

தருமி said...

நன்றி ப்ருனோ.

//இட ஒதுக்கீடு குறித்து ஒரு விபரமான பதிவு எழுதவேண்டும் என்று நினைக்கிறேன்.//

நான் செய்த தவறு நீங்கள் அந்தப் பதிவை எழுதுவதற்குத் தூண்டுகோலாக அமைந்ததாக இருக்கட்டுமே. விரைவில் எழுதுங்கள்.

அதற்கு முன் இதைக் கொஞ்சம் பாருங்கள்.

Bruno_புருனோ said...

//ஏனென்றால் பொது கேட்டகரியில் இவரது ரேங்க் 40 என்று இருக்கும் (என்று வைத்துக்கொள்வோம்). இவர் கேட்கும் இடம் இவருக்குக் கிடைக்காது. ஆனால் இட ஒதுக்கீட்டு கேட்டகரியில் இவரது ரேங்க் 1 என்று இருக்கும். அப்போது இவர் கேட்கும் இடம் இவருக்குக் கிடைக்கும்.//

பத்ரி சார்...

100 புள்ளி ரோஸ்டரில் இந்த சிக்கல் கிடையாது

ஏனென்றால்,
மத்திய அரசில் (22.5 % ஒதுக்கீடு இருக்கும் இடத்தில் ) அவர்
SC என்றால் 7ஆவது நபராக அழைக்கப்படுவார்

ST என்றால் 7ஆவது நபராக அழைக்கப்படுவார்



தமிழக அரசில் (69 % ஒதுக்கீடு இருக்கும் இடத்தில் ) அவர்
SC என்றால் 2ஆவது நபராக அழைக்கப்படுவார்

MBC என்றால் 3ஆவது நபராக அழைக்கப்படுவார்

BC என்றால் 4ஆவது நபராக அழைக்கப்படுவார்

ST என்றால் 50ஆவது நபராக அழைக்கப்படுவார்

Bruno_புருனோ said...

//விரைவில் எழுதுங்கள்.//

இந்தியாவில் இத்தனை விதமாக இடப்பங்கீடு அளிக்கப்படுகிறது என்பதே பலருக்கு தெரியாது

இதில்

பொது பிரிவினருக்கு லாபமும், மற்றவர்களுக்கு நஷ்டமும் உள்ள வகைகள் உள்ளன - உதாரணம் UPSC கடைபிடிக்கப்படும் முறை
மற்றவர்களுக்கு லாபமும், பொது பிரிவினருக்கு நஷ்டமும் உள்ள வகைகள் உள்ளன - உதாரணமாக இந்த வருடம் AIPGல் கடைபிடிக்கப்படும் முறை - 100 புள்ளி ரோஸ்டரில் ஒரு சிறு தவறு செய்துவிட்டார்கள் :(
மற்றவர்களுக்கு நஷ்டமும், பொது பிரிவினருக்கு நஷ்டமும் உள்ள வகைகள் உள்ளன - உதாரணம் நாம் ஏற்கனவே பார்த்த சுழற்சி ரோஸ்டர்
பொது பிரிவினருக்கு லாபமும், மற்றவர்களுக்கு லாபமும் உள்ள வகைகள் உள்ளன - உதாரணம் நாம் ஏற்கனவே பார்த்த 100 புள்ளி ரோஸ்டர்

தருமி said...

ப்ரூனோ,
கொஞ்சூண்டுதான் தலை சுத்துது. விளக்கமா எழுதின பிறகு புரியும்னு நினைக்கிறேன்.

தருமி said...

ப்ரூனோ,
உடனே 'இடப்பங்கீடு' என்று மாற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி.

Bruno_புருனோ said...

ஒரு பேருந்தில் 50 இருக்கைகள் உள்ளன என்று வைத்துக்கொள்வோம். (10 வரிசையில்)

இடப்பக்கம் 20
வலப்பக்கம் 30

பேருந்தில் இடப்பக்கம் உள்ள இருக்கைகள் (20) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன
வலப்பக்கம் உள்ள இருக்கைகளில் (30) யாரும் உக்காரலாம்

எனவே பெண்கள் 20க்கு மேலும் வரலாம்

இப்பொழுது

1. முதலில் நீங்கள் பெண்களை ஏற அனுமதித்தீர்கள் என்றால் அவர்கள் எங்கு அமர்வார்கள். வலப்பக்கத்திலா, இடப்பக்கத்திலா, இரு பக்கங்களிலுமா
2. ஒரு பத்து ஆண்களை முதலில் ஏறி வலப்பக்கம் உள்ள 10 வரிசைகளுலும் ஜன்னல் இருக்கைகளில் உக்கார்ந்து விட்டால் , நம் (தமிழ் பண்பாட்டில் ஊறிய !!) பெண்கள் வலப்பக்கம் அமர்வார்களா, இடப்பக்கம் அமர்வார்களா

???

Bruno_புருனோ said...

//கொஞ்சூண்டுதான் தலை சுத்துது//

மேலே உள்ள உதாரணத்தை படியுங்கள் .... இன்னும் சுத்தும் :) :) :)

Bruno_புருனோ said...
This comment has been removed by a blog administrator.
Bruno_புருனோ said...

எனவே முக்கியமான விஷயம் - கடைபிடிக்கப்படும் முறை

-oOo--
இடபங்கீட்டில் சதவீதத்தை விட அதை எந்த வகையில் கடை பிடிக்கிறார்கள் என்பது முக்கியம்

Bruno_புருனோ said...

நான் மாணவனாக இருந்த வரை இடப்பங்கீட்டில் நடக்கும் குழப்பங்கள் அனைத்துமே திட்டமிட்டு நடப்பதாக நம்பிக்கொண்டிருந்தேன்

இப்பொழுது தான் தெரிகிறது பல குழப்பங்களுக்கு காரணம், நிர்வாகத்தில் இருப்பவர்களின் அறியாமை மற்றும் அசட்டுத்த்னம்.

சில இடங்களில் (உதாரணம் AIIMS) வேண்டுமென்றே குழப்பம் செய்தாலும் பல இடங்களில் (உதாரணம் AIPG)அறியாமை தான் முக்கிய காரணம்

Thamizhan said...

துணிச்சலாகக் கண்டித்து நீதி வழங்கிய இரண்டு நீதிபதிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் சேர்க்கையில் திரு.முத்தைய்யா வரும் வரை பொதுத் தேர்வில் வந்த பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப் பட்ட மாணவர்கள் ஒதுக்கப் பட்ட எண்ணிக்கைக்கு அனுப்பப் பட்டனர்.

இன்று AIIMS ல் நடந்த இன்னொரு அநியாயம் டில்லி உயர்நீதி மன்றத்தால் தடுக்கப் பட்டிருக்கிறது.சரியான விவரங்கள் தராமல் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வரவில்லையென்று வந்தவர்களை கல்ந்துரைப்பில் கலந்து கொள்ளாமல் தடுத்துள்ளது நிர்வாகம்.

அடுத்து பிரணாப் முகர்ஜி போன்றோர் தாழ்த்தப் பட்ட இடங்களை நிறப்பாத அதிகாரிகளைக் கண்டித்துத் தண்டனை தர வேண்டும் என்பதை நீக்க முயற்சித்துள்ளனர்.நிறப்பப் படாத இடங்களைத் தள்ளி விட வேண்டும் என்று ஒருவருக்கும்தெரியாமல் புகுத்தியுள்ளனர்.அதைக் கண்டு பிடித்த மீரா(ஜெகஜீவன்ராம் மகள்),ராம்விலாஸ் பஸ்வான் அதை நீக்கியுள்ளனர்.
ஒரு நாளில் இத்தனை அநியாயம்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பெரிய அரசு அயோக்கியத் தனமே டில்லியில் இதுவரை நடந்து வந்து கொண்டிருக்கிறது.

வெட்டிப்பயல் said...

புருனோ,
கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருக்கு. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்

-/சுடலை மாடன்/- said...

இங்கு பிற்படுத்தப்பட்டோர் தங்களது சுயநலத்துக்காக இத்தவறைச் செய்தாலும், இடப்பங்கீட்டுக் கொள்கையை மீறிய செயலாக/குற்றமாக அமையாதா?

இது போன்ற தவ்று/மீறல் தங்களுடைய பிரிவினருக்குப் பாதகமாக அமைந்தால், அரசாங்கத்திலுள்ள முன்னேறிய சாதியினர் நிறைந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்ளாமல் இப்படியான தவறை அனுமதிக்குமா? அல்லது இத்தவறு நடக்காமலிருக்க தெளிவான சட்டதிருத்தத்தை/வரையறையைக் கொண்டு வர முயற்சி செய்யுமா?

இப்படியான குளறுபடியான நிலையில் குளிர்காய்ந்து கொண்டிருப்பதுதான் இடப்பங்கீட்டில் முழுமனதில்லாத முன்னேறியசாதி ஆதிக்கத்தின் உத்தி. பிற்படுத்தப் பட்டோரோ அல்லது தாழ்த்தப் பட்டோரோ யாருமே அரசின் இடப்பங்கீட்டு அடிப்படை விதிகளை மீறாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

வோட்டாண்டி said...

OC rank 40 = SC rank-1
OC rank 50 = SC rank -2

இப்ப SC rank -1 கு IAS seat
OC rank 40 - கு IPS seat

இப்ப OC rank 40 -- OC quotala IPS தான் எடுக்க முடியும் அப்படி எடுத்தா OC 50--SC quotala IAS...

தலைவர் (OC-40) எங்க போவாரு IAS seatku தானே

இடப் பங்கீட இன்னும் ஒழுங்கா அமல் படுத்தவே இல்லை.. அதுக்குள்ள எதிர்ப்பு, 27% OBC in educational institutions..... இது எல்லாம் தேவையா.? 69% இடப் பங்கீடு இருக்குற தமிழ்நாடில்யே இப்படியா???(மருத்துவ படிப்புக்கான பங்கீட்டு முறை)

தகவல்களுக்கு நன்றி.

Bruno_புருனோ said...

//இப்ப OC rank 40 -- OC quotala IPS தான் எடுக்க முடியும் அப்படி எடுத்தா OC 50--SC quotala IAS...

தலைவர் (OC-40) எங்க போவாரு IAS seatku தானே //

இதற்கு காரணம் UPSC கடைபிடிக்கும் முறை. அது தான் சிக்கல் TNPSC போல் 100 புள்ளி ரோஸ்டர் கடைபிடித்தால் இந்த சிக்கல் கிடையாது

மேலே உள்ள உதாரணங்களை பாருங்களேன்



//69% இடப் பங்கீடு இருக்குற தமிழ்நாடில்யே இப்படியா?//

தமிழ்நாட்டில் குழப்பம் கிடையாது.

வோட்டாண்டி said...

//தமிழ்நாட்டில் குழப்பம் கிடையாது//

தமிழ்நாடு பொறியியல் counsellingla பிரச்சனை இல்லை. மருத்துவ counselling ல UPSC system தான kadaippidikkiraanga.

வோட்டாண்டி said...

தமிழ்நாடு பொறியியல் counsellingla பிரச்சனை இல்லை. மருத்துவ counselling ல UPSC system தான kadaippidikkiraanga.

Unknown said...

சுப்ரீம்கோர்ட்டில் தடை கொடுத்திருகிறார்கள். OBCக்களுக்கு
நல்லது செய்யவே அப்படி செய்தோம்
என்கிறார்கள். அது பற்றி
நீங்கள் எழுதுவீர்களா.

Post a Comment