Monday, April 27, 2009

307. மம்மி குடுத்த குச்சி முட்டாய்

*

*** மம்மி ஈழ நாடு வாங்கித் தரப்போறாங்களாம். எங்கிருந்துன்னு தெரியலை; ஒரு வேளை கொடநாட் எஸ்டேட்டுல இருந்து தயார் பண்ணுவாங்களோ என்னவோ?
இப்படி ஒரு குச்சி முட்டாய் மம்மி தர்ரன்னு சொன்னதும்தான் எத்தனை எத்தனை பெயர் வாயில் ஜொள்ளு.

*** தேர்தல் வாக்குறுதின்னா என்ன .. காசா பணமா அவுத்து உட வேண்டியதுதானே... கச்சத்தீவு பத்தி கூட முந்தி ஒரு வாக்குறுதியைத் தூக்கிப் போடலை .. அதுமாதிரி இதுவும் ஒண்ணு இருந்திட்டு போவுது.

*** போன தேர்தலில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்னும் போதுகூட ஒண்ணும் தோணலை. ஆனா, வீட்டுக்கொரு கலர் டிவி என்றதும் .. இந்த ஒரு தேர்தல் அறிக்கைக்காகவே திமுக தோற்று விடும். இது நடக்கிற காரியமா? அதைவிட நடக்க வேண்டிய காரியமா? வரிப்பணத்தை இப்படி சூறை விடலாமா? நிச்சயமா இந்த ஒரு வாக்குறுதியாலேயே மக்களுக்கு எரிச்சல் வந்து, அதனால திமுக வீட்டுக்குப் போகப் போகுதுன்னு அறியாப்பிள்ளையா நினச்சேன்.

ஆனா பாருங்க.. நாடே, அதாவது நம் தமிழ்நாடே இந்த வாக்குறுதியால் ஆடிப் போக, அடுத்து மம்மியும் நானும் குடுப்பேனே அப்டின்னு சொல்லிப் பாக்க, நம்ம மக்கள் அதெல்லாம் அழுவுணி ஆட்டம்; முதல்ல சொன்னவங்களுக்குத்தான் ஓட்டு அப்டின்னு செம குத்து குத்திட்டாங்க.

*** ஆனா இந்த தடவை மம்மி சுதாரிச்சிக்கிட்டாங்க. அவங்கதான் தமிழ் ஈழம்னு முதல்ல் சவுண்டு உட்டுருக்காங்க. அதனால் நமது ஓட்டு மம்மிக்கே அப்டின்னு நம்ம பதிவர்களில் பலரும் களத்தில் குதிச்சாச்சு.

*** அது என்னமோ, தலையில் பேன் கடிச்சா கொள்ளிக்கட்டைய வச்சா சொறிஞ்சிக்கிறது அப்டின்ற பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்குது.

*** இந்த தடவை திமுகவிற்கு என் ஓட்டு இல்லை என்று முதல்லேயே முடிவு பண்ணியாச்சு. யாருக்குப் போடலாம்னு இன்னும் யோசிச்சி முடிக்கலை.


*** ஆனால் எப்பவும் அதிமுகவிற்கு என் ஓட்டு இல்லைன்னு எப்போதோ தீர்மானித்ததுதான். basic decency - அடிப்படை நாகரீகம்னு சொல்லுவோமே - அது ஒவ்வொருவருக்கும் மாறும். நான் வச்சிருக்கிற அளவு கோலுக்கு மம்மி எப்பவும் வரப்போறதில்லை. அதினால எப்பவோ, எப்பவுமே இல்லை அப்டின்ற முடிவெடுத்தாச்சி.

*** ஆனா இப்ப நம் பதிவுகளில் அடிக்கிற 'மம்மி அலை'ய நினச்சா பயமாத்தானிருக்கு.


*** ஆனாலும் என்ன,

நாம் எவ்வளவோ பாத்துட்டோம்; இதையும் பாத்திர மாட்டமா ...!

63 comments:

Thekkikattan|தெகா said...

மண்டையை பிச்சுகிட்டு தமிழக மக்கள் திரியப் போறாங்க, ஒண்ணுமே விளங்கல போங்க. நாளுக்கு நாள் நேரத்திற்கு நேரம் காட்சிகள் மாறிகிட்டே வருது. சொல்ற எல்லாம் வெறும் வெற்று வார்த்தைகளாவும், போலி நாடகங்களாகவும் செய்திட்டே வந்தா பின்பொரு சமயம் சுத்தமாக எந்த விதமான வார்த்தைக்கும், செயலுக்கும் பொருளே இல்லாமல், மரத்துப் போகத்தான் உதவும்.

நடப்பவையும் அனைத்தும் அந்த பாதையில்தான் மக்களை இட்டுச் செல்வதாக படுகிறது. ம்ம் என்னாத்தை ஒண்ணும் சொல்ற மாதிரி இல்ல.

புரியுது நீங்க சொல்ல வாரது... பொறுத்திருந்து பார்ப்போம்

குறும்பன் said...

//இப்படி ஒரு குச்சி முட்டாய் மம்மி தர்ரன்னு சொன்னதும்தான் எத்தனை எத்தனை பெயர் வாயில் ஜொள்ளு.//

தாத்தா நல்லா கிண்டி திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவா கொடுத்துக்கிட்டே இருக்கார். அது தெரியலையா உங்களுக்கு?

\\அதனால் நமது ஓட்டு மம்மிக்கே அப்டின்னு நம்ம பதிவர்களில் பலரும் களத்தில் குதிச்சாச்சு.\\
என்பதை விட தாத்தாவுக்கு வாக்கு இல்லை என்பது தான் குதிச்ச பலரின் வாதம்.

\\*** அது என்னமோ, தலையில் பேன் கடிச்சா கொள்ளிக்கட்டைய வச்சா சொறிஞ்சிக்கிறது அப்டின்ற பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்குது.\\ இப்ப பாடம் புகுட்டுனா தான் வர்ர சட்டமன்ற தேர்தலில் ஒழுங்கா இருப்பார். (நம்பிக்கைதான்)\\இந்த தடவை திமுகவிற்கு என் ஓட்டு இல்லை என்று முதல்லேயே முடிவு பண்ணியாச்சு\\ என்ன தெகிரியம் உங்களுக்கு.. அஞ்சா நெஞ்சனுக்கே உங்கள் வாக்கு இல்லைன்னு வெளிப்படையா சொல்லறிங்க?

தருமி said...

//தாத்தா நல்லா கிண்டி திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவா கொடுத்துக்கிட்டே இருக்கார்.//

தாத்தா மட்டும்தானா ... எல்லாரும் அதத்தான பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவர்ட்டி நீங்க எதிர்பார்க்கிறது அதிகம். அதுக்கு தாத்தா என்ன பண்ண முடியும்?

//தாத்தாவுக்கு வாக்கு இல்லை என்பது தான் குதிச்ச பலரின் வாதம். //

அப்படி இருந்திருந்தா இந்தப் பதிவையே போட்டிருக்க மாட்டேனே... குச்சி மிட்டாய் வேணும்னு மக்கள்ஸ் அழ ஆரம்பிச்சதினாலதான் இப்பதிவு.

//இப்ப பாடம் புகுட்டுனா தான் ..//

அப்படியெல்லாம் அவரும் சரி, நாமளும் சரி திருந்துற சென்மங்களா? அப்படியெல்லாம் நடந்திட்டாதான் எப்பவோ தேறி இருப்போமே!

Anandha Loganathan said...

//நான் வச்சிருக்கிற அளவு கோலுக்கு மம்மி எப்பவும் வரப்போறதில்லை.
---------
*** இந்த தடவை திமுகவிற்கு என் ஓட்டு இல்லை என்று முதல்லேயே முடிவு பண்ணியாச்சு. யாருக்குப் போடலாம்னு இன்னும் யோசிச்சி முடிக்கலை.
//

If you had set a benchmark like that then you would never vote for any party in this election (or any election !!!) .

The leaders are taking new actions to keep them in the lime light. Did they know that public are got frustrated by their actions?.


Sometime I feel that we are lack of leaders to follow them ?. and our leaders are working like corporate managers who cares himself and his family and not others.

மணிகண்டன் said...

:)-

G.Ragavan said...

அதென்னெங்க நான் நெனைச்சத அப்படியே பதிவா எழுதுறீங்க.

http://www.luckylookonline.com/2009/04/blog-post_27.html

லக்கி, ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க...

தாமரை சொன்னாப்புல ஜெயலலிதா அம்மாவாசை.... கருணாநிதி அதுக்கு அடுத்த நாள். இவங்க ரெண்டு பேரும் அத மாறி மாறி நிரூபிக்கிறாங்க.

வசனம் மட்டுமில்ல நடிப்பும் வரும்னு கருணாநிதி காட்டுறாரு. நடிப்பு மட்டும் இல்ல... வசனமும் வரும்னு ஜெயலலிதா காட்டுறாங்க.

கடப்பாரை said...

யாருக்கு போடறதுனு அப்புறம் தீர்மானிக்கலாம்.....

முதல்ல, படிச்ச அறிவுஜீவிகள் ஓட்டு போட வரட்டும்.....அப்புறம் பார்க்கலாம் மம்மியா, தாத்தாவா, அய்யாவா, சிறுத்தையா, கறுந்துண்டு புலியா, செஞ்சட்டை தோழர்களா, கறுப்பு எம் ஜி ஆரா, நமீதாவா, குஷ்புவா, வடிவேலுவா, இன்ன பிற சில்வண்டுகளானு......

வால்பையன் said...

//எவ்வளவோ பாத்துட்டோம்; இதையும் பாத்திர மாட்டமா ...!//

அதானே! நாம் தான் எல்லா மட்டத்திலையும் இறங்கி பார்ப்போமே!

வோட்டாண்டி said...

adhaan namakku ellam 49(O) irukke

49(O)la kuthunga..nimadhiya thookam varum

Bharath said...

//*** மம்மி ஈழ நாடு வாங்கித் தரப்போறாங்களாம். எங்கிருந்துன்னு தெரியலை; ஒரு வேளை கொடநாட் எஸ்டேட்டுல இருந்து தயார் பண்ணுவாங்களோ என்னவோ? //

சூப்பர்..

//*** இந்த தடவை திமுகவிற்கு என் ஓட்டு இல்லை என்று முதல்லேயே முடிவு பண்ணியாச்சு. யாருக்குப் போடலாம்னு இன்னும் யோசிச்சி முடிக்கலை. //

அழகிரி ராஜ்யத்தில் இப்படியெல்லாம் பேச செம தில்லுதான்.. ஆட்டோ வரப்போகுது.

//*** ஆனா இப்ப நம் பதிவுகளில் அடிக்கிற 'மம்மி அலை'ய நினச்சா பயமாத்தானிருக்கு. //

‘டாடி & family ’ அந்த அளவுக்கு நோகடிச்சுட்டாங்க..

தருமி said...

ஜிரா,

லக்கி சொன்னதுல ஒண்ணு ரொம்ப சரியா தோணுது. இங்க பதிவுலகத்தில்தான் இலங்கைப் பிரச்சனையை மட்டுமே வைத்து நம் தமிழ்கூறு நல்லுலகம் வாக்களிக்கப் போறது மாதிரி தோணுது. ஊர்ல நாட்ல அப்படி ஒண்ணும் தெரியலை. நாங்கல்லாம் டிவி கொடுக்கலையான்னு ஒரு குரூப் கேக்குது. இன்னொரு குரூப் பருப்பு விலையா பாத்தீங்களான்னு கேக்குது. அம்புடுதான் ....

Chill-Peer said...

அனைத்தும் ஏற்றுக்கொள்ளும்படியான கருத்துக்கள்.

//*** ஆனாலும் என்ன,...//

கோவி.கண்ணன் said...

மதுரையைப் போல் எல்லா ஊரும் வளர்ச்சிப் பெறவில்லை என்கிற கோவத்தில் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள், என்றே நினைக்கிறேன்.

இல்லாட்டி அட்டாக் பாண்டியன் உங்க பதிவைப் படிக்கலாம் என்று நினைத்திருக்கலாம், அல்லது அட்டாக் பாண்டி உங்க வீட்டுக்கு பக்கத்து வீடாக்க் கூட இருக்கலாம், யார் கண்டா ?

:)

******

வெறும் தேர்தல் வாக்குறுதியை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதி இருக்கிறீர்கள், அதை மட்டுமே ஆய்ந்திருக்கிறீர்கள்.

ஊழல், ரவுடித்தனம், பதவி வெறி இவற்றை ஒப்பிட்டும் எழுதி இருக்கலாம்.

தருமி said...

//ஊழல், ரவுடித்தனம், பதவி வெறி இவற்றை ஒப்பிட்டும் எழுதி இருக்கலாம்.//

கோவி,
என்னென்னமோவெல்லாம் எழுதியிருக்கலாம்தான். ஆனால் சொல்ல நினைத்தது..ரெண்டே ரெண்டு விஷயம்;

1.குச்சி முட்டாய் மம்மி தர்ரன்னு சொன்னதும்தான் எத்தனை எத்தனை பெயர் வாயில் ஜொள்ளு.

2.நம் பதிவுகளில் அடிக்கிற 'மம்மி அலை'ய நினச்சா பயமாத்தானிருக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

//அது என்னமோ, தலையில் பேன் கடிச்சா கொள்ளிக்கட்டைய வச்சா சொறிஞ்சிக்கிறது அப்டின்ற பழமொழி நினைவுக்கு வந்து தொலைக்குது.//

சரியா சொன்னீங்க.. மழைக்கு பயந்து நெருப்புக்குள்ள விழ முடியுமா சொல்லுங்க.. அந்த அம்மாவோட லூசுத்தனம் எல்லாம் தெரிஞ்சும் நம்ம ஆளுங்க எப்படி இப்படி பேசுராங்கன்னுதான் புரிய மாட்டேங்குது..

கோவி.கண்ணன் said...

//தருமி said...
//ஊழல், ரவுடித்தனம், பதவி வெறி இவற்றை ஒப்பிட்டும் எழுதி இருக்கலாம்.//

கோவி,
என்னென்னமோவெல்லாம் எழுதியிருக்கலாம்தான். ஆனால் சொல்ல நினைத்தது..ரெண்டே ரெண்டு விஷயம்;

1.குச்சி முட்டாய் மம்மி தர்ரன்னு சொன்னதும்தான் எத்தனை எத்தனை பெயர் வாயில் ஜொள்ளு.

2.நம் பதிவுகளில் அடிக்கிற 'மம்மி அலை'ய நினச்சா பயமாத்தானிருக்கு.
//

ம் சரிங்க, கருணாநிதி பாணியில் இந்த தேர்தலில் ஈழம் பெரிய பிரச்சனையே இல்லை என்று தமிழ் நாட்டு மக்களின் காங்கிரசுக்கு எதிர்ப்பான ஒன்று திரளுவதை கொச்சைப் படுத்தியது போல், ஈழம் தவிர்த்து,

கருணாநிதி - சோனியா கூட்டணி என்ன என்ன தகுதியின் படி வாக்களிக்க வேண்டும், ஏன் அந்த தகுதி ஜெவுக்கு இல்லை என்று எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா ?

இதை ஒரு உளவியல் ரீதியாகச் சொன்னால்,

ஒரு பெண் ஆண்களுக்கு இணையான ஊழல், அதிகார துஷ்பிரோயாகம் ஆகியவற்றைச் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால் எதிர்க்கிறேன் என்ற ஒரு ஆணிய மனப்பாண்மையைப் பற்றித் தான் சொல்ல முடியும்.

மற்றபடி ஜெவைப் போலவோ, அல்லது அதைவிட மோசமாகவே திமுக நடந்து கொள்கிறது என்றே சொல்வேன்

தருமி said...

//ஒரு உளவியல் ரீதியாகச் சொன்னால்,..//
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எப்போதும் சரியாக இருப்பதில்லை, கோவி.

//...ஆணிய மனப்பாண்மையை..//
அந்த ஈயமெல்லாம் கிடையாது'ங்க. சும்மா பொத்தாம் பொதுவா அடிச்சு உடக்கூடாது. இந்த மம்மியின் ம்ஏலும், அவரை ஆளாக்கி விட்ட 'ஆணின்' மேலும் நான் வைத்திருந்த 'மரியாதை'யைப் பற்றி பல இடத்தில் எழுதியுள்ளேன்; உங்களுக்கு ஒரு வேளை அது தெரியாதிருந்தால் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தருமி said...

//அந்த தகுதி ஜெவுக்கு இல்லை என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்..//

என் எதிர்பார்ப்புகளைத் தெளிவாக பதிவில் சொல்லியிருக்கிறேனே ...

கோவி.கண்ணன் said...

//என் எதிர்பார்ப்புகளைத் தெளிவாக பதிவில் சொல்லியிருக்கிறேனே ...//

மம்மி ஆதரவுக்கு ஈழம் மட்டுமே காரணமும் இல்லை. அதைத்தான் நான் குறிப்பிடுகிறேன். நானும் ஈழம் பற்றிய மம்மியின் சித்தாந்தங்கள் சரி என்று சொல்லவில்லை.

தருமி said...

//மம்மி ஆதரவுக்கு ஈழம் மட்டுமே காரணமும் இல்லை. ..//

ஓ! அதையும் தாண்டி புனிதமான அவரது முந்திய பணிகள்தான் காரணமோ...?
இருக்கட்டும்... இருக்கட்டும்...

உங்களுக்குப் பிடித்ததெல்லாம் எல்லோருக்கும் பிடித்தாக வேண்டியதில்லையே.

என் நிலையை நான் கூறியுள்ளேன். நீங்கள் உங்களது மம்மி ஆதரவு நிலைக்கான 'காரணங்களை' கூறியுள்ளீர்கள்; நல்லது; நடத்துங்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அவங்க பாட்டுக்கு அங்க இருக்க.. உங்களுக்குள்ள ஏன் இந்த காரசாரம்? அதே நேரத்துல இந்த ரெண்டு கட்சிய மட்டுமே ஏன் முன்னிருத்துறீங்க.. தப்பான தலைவன தேர்ந்து எடுக்குற மக்கள் தான் மிகப் பெரிய முட்டாள்கள்.. ஏன் வேற யாருக்காவது ஓட்டு போடக் கூடாது? DMK இல்லன்னா ADMK.. இதை மாத்தவே முடியாதா?

தருமி said...

அய்யோடா! காரசாரம் எல்லாம் ஒன்றுமில்லை. இல்லையா, கோவி?

//ஏன் வேற யாருக்காவது ஓட்டு போடக் கூடாது?//

நானும் இதைத்தான் சொல்கிறேன்.

வோட்டாண்டி said...

andha vera oruthar 49(o) va en irukka koodadhu??

தருமி said...

வோட்டாண்டி,

so many options are there ...

இப்போ தென் சென்னையில மாதிரி ஒரு வேட்பாளர் இருந்தா அவரையும் கவனிக்கலாமே ..

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.. மதுரைல நான் "O" போட்டா.. என் வீட்டுக்கு ஆட்டோ மட்டுமில்லாம சகல் வாகனமும் வரதுக்கு வாய்ப்பு இருக்கேன்னே.. அவ்வ்வ்வ்வ்..

தருமி said...

கா.பா. சொல்றது மாதிரி ரகசியமா 49 'ஓ' போடும் காலம் வரை காத்திருந்து அதைப் பயன்படுத்துவதே சரியாக இருக்கும். நம்ம பூத்துகளில் இருப்பவர்கள் அனைவருக்குமே இதைப் பற்றி இந்த முறையாவது தெரிந்திருக்குமோ என்னவோ?

அபி அப்பா said...

சார் நீங்க நினைச்சா கூட ஜெக்கு போட முடியாது ஏன்னா அங்க ஜெக்கு பதிலா தோழர்கள் தான் ஏந்திகிட்டு இருக்காங்க கையை!

தருமி said...

அய்ய! அவுங்க 'கையை' இல்லைங்க .. 'இலையை' அல்லவா ஏந்திக்கிட்டு இருக்காங்க

:)

அபி அப்பா said...

சார் நீங்க ஜெக்கு ஓட்டு போட மாட்டேன்னு சொன்னதும் சரிதான். ஒரு வேளை கம்யூனிஸ்ட்க்கு நீங்க ஓட்டு போட்டும் ஒரு பிரயோசனமும் இல்லை என ப்பின்னூட்டம் வழியா தெரியுது. என்ன மோகன் எம்பியை 'வீட்டிலே கோழி முட்டை போட்டுச்சு வந்து ஒரு பேர் வச்சிட்டு போங்கன்னா வருவார்"அப்படின்னு ரேஞ்சிலே பிரச்சாரம் நடக்குது.

கோழி முட்டைக்கு பேர் வைப்பதுக்கு ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க வேண்டுமா?

ஆனா அழகிரி தன் பிரச்சாரத்திலே அழுத்தம் திருத்தமா அரசியல்வாதி போல எல்லாம் பேசலை "ஏங்க நீங்க கேட்டதை எல்லாம் செஞ்சி தரேன். எது வேனுமோ கேளுங்க, எனக்கு ஓட்டு போடுங்க. நான் மத்திய அரசு மாநில அரசு எல்லாத்தையும் கேட்டு உங்களுக்கு என்ன வேணுமோ கண்டிப்பா செய்யிறேன்" அப்படின்னு சொல்லும் வார்த்தையிலே உண்மை தெரியுது!

ஆக ஒன்னு புரியுது படிச்ச ஒருத்தர் வாக்கு வேஸ்ட்டா போக போகுது ஒரு கோழிமுட்டைக்கு பேர் வைக்க வேண்டி!

வால்பையன் said...

//கோழி முட்டைக்கு பேர் வைப்பதுக்கு ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க வேண்டுமா?//

அதானே! ஊரு இப்படியே அமைதியா இருந்தா எப்படி பொழுது போகும்!
வாரம் நாலு கொலை நடந்தா தானே நாமளும் பரபரப்பா இருக்க முடியும்!

அதனால உதயசூனா(சுருக்கிட்டேன்) சின்னத்துலயே குத்துங்க! எசமான் குத்துங்க!

தருமி said...

வாயை ரொம்பவே நோண்டுறீங்க .. மோகனுக்குப் போட்டாலும் அது இலைக்கும் போய்ச் சேரும் அப்டின்றதால அருவாளுக்கு இல்லை. அதுனால //ஒருத்தர் வாக்கு வேஸ்ட்டா போக போகுது ஒரு கோழிமுட்டைக்கு பேர் வைக்க வேண்டி!// அப்டின்னு கவலைப் பட வேண்டாம்.

//...சொல்லும் வார்த்தையிலே உண்மை தெரியுது!...// என்னங்க பண்றது .. செத்த மூணு பேரு ஆவி அப்பப்ப வந்து முன்னால நிக்குதுங்களே ..

அபி அப்பா said...

ஹி ஹி என்ன சார் வாலு தான் இப்படின்னா நீங்களுமா இப்படி? ராஜீவை கொன்றது கலைஞர் தான் அப்படின்னு அப்ப சொன்ன ஊடகங்கள் பத்தியும் உங்களுக்கு தெரியாதா? இப்ப அதே ஊடகங்கள் என்ன சொல்லுது கலைஞரா கொன்னாருன்னு சொல்லுது?

ஜானகிதான் மோரில் விஷம் கலந்து கொடுத்தார் என ஜெ சொன்னார். அப்ப அந்த ஊடகங்கள் சொன்னது என்ன?

அய்யோ சார்!

வால்பையன் said...

//ராஜீவை கொன்றது கலைஞர் தான் அப்படின்னு அப்ப சொன்ன ஊடகங்கள் பத்தியும் உங்களுக்கு தெரியாதா? //

ஊடகங்கள் சொல்வதையெல்லாம் உண்மையென்றும், அல்லது பொய்யென்றும் நம்பும் அளுவுக்கு இன்னும் அறிவு வளரவில்லை!

சாத்தியபாடுகளையும், அதிகாரமையத்தின் பதில்களையும் வைத்தே சம்பவத்தின் ஊழ்வினையை யூகிக்கிறோம்.

தருமி said...

ஆமாங்க.. நீங்க சொல்றதும் சரிதான். இப்ப பாருங்களேன் ..
நகர்வாலா கொலை வழக்கில் இந்திராவுக்குத் தொடர்பில்லை;
போபர்ஸ் வழக்கில் ராஜீவுக்குத் தொடர்பில்லை; ராபர்ட் மெயின்ஸ் வழக்கில் காளிமுத்துவுக்குத் தொடர்பில்லை; ப்ளசெண்ட் டே ஹோட்டல் .. டான்ஸி நில வழக்கு ..இதிலெல்லாம் மம்மிக்குத் தொடர்பில்லை.

அது மாதிரி நீங்க சொல்றதும் உண்மையாகத்தான் இருக்கணும்.

:-(

அபி அப்பா said...

அப்ப நீதி துறை மீதே குத்தமா? சுமத்துங்க சுமத்துங்க!அப்ப மக்கள் தான் தண்டிக்கனும். நேரா தென்சென்னை போய் யாரோ சரத்பாபுவாம் அவருக்கு போடுங்க ஓட்டை!

அபி அப்பா said...

சார் வாலுதம்பி பின்நவீனத்துவமா பதில் சொல்றான் நான் ஒத்துக்க மாட்டேன்! தமிழ்ல பேச சொல்லுங்க! ஆமா சொல்லிட்டேன்!

தருமி said...

என்ன சாதாரணமா சரத்பாபு பத்தி சொல்லிட்டீங்க. முடிஞ்ச அளவுக்கு அவருக்காக, நீங்க எங்க ஆளுக்குப் பண்ற வேலைய நான் அவருக்குப் பண்ணிக்கிட்டு இருக்கோம்ல ...

சரத்பாபு candidature உங்களுக்கு விளையாட்டா இருக்கலாம், எனக்கு அப்படி தோணலைங்க..

அபி அப்பா said...

ஓ சார் அப்படியா! அரச்சியல்வாதி என்பவன் பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருப்பவன். அதை படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன். ஆனா ஒரு IBM மானவன் அதை பாடமா படிப்பவன். ஒரு தடவையாவது ஆசையா கிளாஸ் கட் அடிப்பவன்.

ஒன்னு தெரியுமா அமரிக்க நாராயனன் என்று ஒருத்தர். அமரிக்கா பேங்ல பெரிய உத்யோகம். அப்பவே மாதம் 1 கோடி ச்சம்பளம். அந்த பெரிய புஷ் கூப்பிட்டு எக்கனாமிக் ஆலோசனை கேட்டுக்கும் அளவு பெர்ரிய ஆள் அப்படின்னு ஆவி ஜூவி எல்லா கந்தாயமும் கத்தை கட்டிகிட்டு வந்துச்சு.

அந்த ஆள் சுயேச்சையா நின்னா சரியா வராதுன்னு சத்தியமூர்த்தி பவன்ல ஐக்கியமானாரு.
போச்சு போச்சு இன்னிக்கு சோத்துக்கே சும்மா இருக்காரு. அதே வாசல்ல உட்காந்துகிட்டு

தருமி said...

//சோத்துக்கே சும்மா இருக்காரு. //

அது அவரு தப்புங்களா ,, இல்ல .. என்ன பண்ணுனாலும் உங்கள மாதிரி ஆளுக நான் என் கட்சியை, அதன் தலைவரை விட்டுக் கொடுக்கவே மாட்டேன் என்று சொல்லும் 'கட்சிக்காரர்கள்' நிறைய பேர் இருப்பதாலான்னு யோசிச்சி பாருங்க.

அரசியல்வாதிகளுக்கு அரசியல் முழு நேர தொழிலுங்க.. அதுல முன்ன பின்னதான் இருப்பாங்க; அவங்கள குத்தம் சொல்லி பிரயோசனம் இல்லைங்க.

நாமதாங்க ஒரே ஆளுக்கு எப்பவுமே அடிமையா இல்லாம, அப்பப்ப எந்த ஆளு சரின்னு படுதோ அந்த ஆளை சப்போர்ட் பண்ணணுமுங்க .. அப்பதான் கொஞ்சமாவது் விடிவு காலம் வருமுங்க

அமெரிக்கா ஜனதிபதி, secretary of state இப்படியெல்லாம் இருந்துட்டு பதவி முடிஞ்சதும் காலேஜ்ல வாத்தியாரா போய் உக்கார்ராங்க பாருங்க (கிஸ்ஸிஞ்சர் மாதிரி) அது மாதிரி நம்ம அரசியல் வாதிகளும் இருக்கணும்னு எனக்கு ஆசைங்க.

ஒரு தடவை தோளுல துண்டைப் போட்டுட்டா அப்புறம் இறக்குறதேயில்லை. இப்ப பாருங்க, நம்ம மருத்துவர்.. அவருக்கு இப்ப ஸ்டெத் தொடக்கூட மறந்து போயிருக்கும். இனிம ஆயுசுக்கும் சின்ன மருத்துவர் எந்த தொழில் பார்ப்பார் அப்டின்னு நினைக்கிறீங்க...

எல்லாம் நம்ம தலைவிதி .. யாரை நொந்து என்ன பண்றது?

தருமி said...

அரசியல்வாதிக்கு நீங்க கொடுக்குற definition ரொம்ப தப்புங்க ..

//இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருப்பவன். அதை படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன். //

அந்த "படிப்பு" என்னன்னு சொல்லுங்க பார்ப்போம். எல்லா அரசியல் வாதிகளும் உண்மையிலேயே வியாதிகள் தாங்க. எங்கோ ஒரு காமராஜர், கக்கன், நல்ல கண்ணு இருக்கலாம்.

மற்ற எந்த அரசியல்வாதியும் கேடுகெட்ட மனுஷங்க அப்டின்றதுதான் நான் இதுவரை படிச்ச படிப்புங்க எந்த கட்டுக்குள்ளும் வராத தனி கேடு கெட்ட "ஜாதி'ங்க அவங்க.

அபி அப்பா said...

சார் இதிலே உங்க மேலயும் தப்பு இல்லை. என் பேர்லயும் தப்பில்லை. டக்குன்னு கோவணத்தை உருவி போட்டுட்டு வாங்க இது நிர்வாண நாடு. முடிஞ்சு அவங்க பாணியிலே நிர்வாணமா நின்னு பாடம் நடத்துங்க.


குறிப்பு: இது மனிதருள் மாமனி பூண்டி துளசி அய்யா வாண்டையார் அய்யா அவரின் கூற்று!

அபி அப்பா said...

அய்யோ சார் ஒரு அரசியல் வாதியை லெஷ்மிய பத்திதான் நீங்க எடை போடுவீங்களா? தப்பு சரஸ்வதிய பத்தியும் எடை போடனும் நீங்க! இதே நல்லகன்னு நல்லவர் தான்.எதிலே தன் மனைவி ஒரு டீச்சர். அவங்க லோன் போட்டு கட்டின வீட்டிலே இருக்கார். கட்சி த்ஹனக்கு கொடுத்த 1 கோடியை கட்சிக்கே கொடுத்தார். ஆனா சரஸ்வதி அதாவது அவர் நாக்கு இன்னிக்கு புரட்சி தலைவிக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்லுதே 4 மாச கேப்பிலே! அதுக்கு என்ன சொல்றீங்க! 4 மாசம் முன்ன அவர் அந்தம்மா பத்தி விட்ட அறிக்கையையும் இப்ப மனசு நொந்து சொல்லும் வார்த்தையும் பாருங்க.

ஆனா நான் தா. பாண்டியன் என்னும் நபரை பத்தி இங்க பேசலை இங்க!

கல்வெட்டு said...

// அரச்சியல்வாதி என்பவன் பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருப்பவன். அதை படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன்.//

கொடுமைப்பா...

அரசியலையும் கடவுள் ரேஞ்சுக்கு புனிதப்படுத்தாமல் விடமாட்டாங்கபோல.

அதிகாரபூர்வமாக அரசியல் அமைப்புச்சட்டப்படி அரசில் பங்கேற்க யாரும் முயற்சி எடுக்கலாம். ஜெயிப்பது என்பதும் மட்டும் அரசியல் அல்ல.

போட்டியில் பங்கேற்பது என்பதும் தனது அரசியல் உரிமையை பயனபடுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வு.

சரத்பாபு ஐஐடி யில் படித்தாலும் ஆட்டுக்குட்டி மேய்தாலும் யாருக்கு என்ன கவலை? எதுவும் அவரை வெற்றிபெறவைக்க உதவாது. மக்களின் ஆதரவைப் பெறுவதே முக்கியம்.

ஆனால், பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருந்து, படிப்பா படிக்காம சுவாசமா நினைக்கும் ரராக்களைத் தவிர மற்றவர்கள் போட்டியில் பங்கு கொள்ளக்கூட தகுதியில்லை என்று நினைக்கும் நவீன பார்ப்பனீயம்தான் இவர் பேச்சில் தெரிகிறது. *****

சமுதாயத்தில் அனைவருக்கும் அனைத்திலும் போட்டியிட வாய்ப்பு வேண்டும். ஏற்கனவே போட்டியில் அதிகம் பங்கு பெறுபவர்களுடன் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றவரையும் சேர்க்கவே இட ஒதுக்கீடும் முக்கியமாக பெரியாரின் போராட்டங்களின் நோக்கமாகவும் இருக்கும்.

அரசியல் என்றாலே கருணாநிதி,ஸ்டாலின்,தயாநிதி,அழகிரி,கனிமொழி என்று பிறந்தது முதல் அரசியல் படிப்பவன், இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருந்து, படிப்பா படிக்காம சுவாசமா நினைக்கும் மக்களைத் தவிர மற்றவர்கள் பங்கேற்க நினைப்பது நகைப்பிற்கிடமானது என்றால்............பிறந்தது முதல் வேதம் படிப்பவன்,இரத்தத்திலே அந்த வேதப்படிப்பை வச்சிருந்து, படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன் மட்டுமே மணியாட்டலாம் என்று சொல்லும் அதே பார்ப்பணீயச் சிந்தனைகளே இவர்களுக்கும் உள்ளது.****

தனது கட்சிக்கு ஆதரவு என்பதும் பிற கட்சிகளை விமர்சிப்பதும் சரியான ஒன்று. ஆனால், தான் நல்லது என்று நினைக்கும் வட்டத்தைத் தாண்டி யாராவது வந்தால் பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருந்து, படிப்பா படிக்காம சுவாசமா நினைக்கும் ..... என்று வசனம் பேசுவது எந்த வகை?


இவரைப் போலவே இன்னொரு பேரறிவாளி Independents are a 'spoiler' ,என்று டயலாக் விட்டிருக்கிறார். பார்க்க.. http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html

Suresh said...

மிக அருமையான பதிவு

அபி அப்பா said...

ஆகா! கல்வெட்டு என்கிற பலூன் மாமா அய்யா! நான் என்னை எப்பவும் பேரறிவாளனா சொல்லிகிட்ட்டது இல்லை. ஆனா IIMல படிச்சது தான் தனக்கு ஒரே தகுதி அப்படின்னு மத்தவங்களை சரத்பாபு நம்ப வச்சதுதப்பு, மத்தவங்க நம்புனதும் தப்புன்னு தான் சொன்னேன். அவர் தேர்தல் அறிக்கையை பாருங்க அப்ப தெரியும்.

உடனே டபார்ன்னு என்னை நவீன பார்ப்பனீயம் அப்படீன்னு ஏன் சொல்றீங்க? உடனே கனிமொழி, தயாநிதி, அழகிரி எல்லாரையும் ஏன் இங்க இழுக்குறீங்க?

உங்க பல பின்னூட்டத்தால் நான் ஆச்சர்யப்பட்டு போவேன். ஒரு நல்ல அறிவாளின்னு. இப்பவும் ஆச்சர்யப்படுகின்றேன் இந்த உங்க நவீன பார்ப்பனீய பின்னூட்டத்தினால்!

தருமி said...

//இது நிர்வாண நாடு. முடிஞ்சு அவங்க பாணியிலே நிர்வாணமா நின்னு பாடம் நடத்துங்க. //

இதுல மூணாவது கட்டளைய வாசிச்சிக்கிங்க. அதுதான் என் வழி!

என்னய மாதிரி மாறுங்கன்னு - கோவணம் கட்டிக்கங்கன்னு - சொல்றேன்.

நீங்க என்னடான்னா என்னைய மாதிரி அவுத்துப் போடுங்றீங்க ..

எதுசரி? நீங்களே தீர்ப்பு சொல்லிக்கிங்க.

தருமி said...

//லெஷ்மிய பத்திதான் நீங்க எடை போடுவீங்களா? தப்பு சரஸ்வதிய பத்தியும் எடை போடனும் நீங்க!//

அதாவது இன்னைக்கி களத்தில் இருக்கிற நம்ம அரசியல்வாதிகளின் 'சரஸ்வதி'யை எடை போடணும் அப்டின்றீங்க. அப்படித்தாங்க மன்மோகன் மன்மோகன்னு ஒரு ஆளுடைய சரஸ்வதி நல்லா இருக்கேன்னு நினச்சோம்; என்ன் ஆச்சு?

இல்ல நம்ம ஊர்ல இருக்கிற அரசியல்வாதிகளின் சரஸ்வதி பெருசாவா இருக்கு? are they all doctorates in political science / admin / HR.........?

தருமி said...

//தனக்கு ஒரே தகுதி அப்படின்னு மத்தவங்களை சரத்பாபு நம்ப வச்சதுதப்பு, மத்தவங்க நம்புனதும் தப்புன்னு தான் சொன்னேன். //

விட்டா அவர் M.B.A. படிச்சதே தப்புன்னு சொல்லிடுவீங்க போலும். அப்படி ஒரு படிப்பு படிச்சிருந்தும், நல்ல பல வேலை வாய்ப்புகளிருந்தும். தன் முயற்சியால் மற்ற இளைஞர்களுக்கும் ஆர்வம் ஊட்டும் வண்ணம் சுயதொழில் செய்து அதிலும் வெற்றி கண்ட பின்னும் தன் எளிய வாழ்க்கையை நினைவில் வைத்திருக்கும் காரணங்களால்தான் எனக்குப் பிடிக்கிறது.

ரஜினி பழைய காலத்து செல்போனை கையில் வைத்திருந்தால் அதைப் பார்த்து அவர் புகழ் பாடும் போது இது அதைவிட எனக்குப் பெரிதாகத் தெரிகிறதே .. என்ன செய்ய?

லக்கிலுக் said...

//G.Ragavan said...
அதென்னெங்க நான் நெனைச்சத அப்படியே பதிவா எழுதுறீங்க.

http://www.luckylookonline.com/2009/04/blog-post_27.html

லக்கி, ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க...

தாமரை சொன்னாப்புல ஜெயலலிதா அம்மாவாசை.... கருணாநிதி அதுக்கு அடுத்த நாள். இவங்க ரெண்டு பேரும் அத மாறி மாறி நிரூபிக்கிறாங்க.

வசனம் மட்டுமில்ல நடிப்பும் வரும்னு கருணாநிதி காட்டுறாரு. நடிப்பு மட்டும் இல்ல... வசனமும் வரும்னு ஜெயலலிதா காட்டுறாங்க.
//

ஜிரா!

நீங்கள் நல்லவர், வல்லவர், நடுநிலையாளர்னு ரெண்டு வருஷம் முன்னாடியே ஒத்துக்கிட்டோம்.

திரும்ப திரும்ப நிரூபிக்கணுமா?

நானும் திரும்ப திரும்ப இதையே பின்னூட்டமா போடணுமா? :-(

லக்கிலுக் said...

உ.சூக்கு. ஓட்டு போட்டே ஆவணும்னு சொல்லலை. ஆனா எலைக்கு போடாதீங்கன்னு ஒரே லைனுலே நச்சுன்னு சொல்லிட்டிருக்கலாம் :-)

அபி அப்பா said...

ஹஹ்ஹா தருமி சார்! எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்ல கூடாது!

100 பெண்களுக்கு அதுவும் விதவை, கனவனால் கைவிடப்பட்ட பெண்கள் அப்படின்னு வேலை கொடுத்து அவர்களுக்கு மதிய உணவும் கொடுத்து தகுதியான சம்பளமும் கொடுத்து ஒரு பையன் எம் பி சீட்டுக்காக வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கான். ஆனா திமுக விலே. அந்த தொகுதி மாயவரத்துக்கு ஒதுக்கும் போது அவனுக்கு கிடைக்கும். அது வரை களப்பணி தான். தன் வார்டு, தன் நகரம், தன்னை நாடி வந்தவங்களுக்கு ரேஷன் கார்டு, எல்லா உதவியும் பண்ணிகிட்டு இருக்கான். இது தான் பாலபாடம் அரசியல்ல.

கிடைக்கும் கிடைக்காட்டியும் பரவாயில்லை. சாகும் வரை மக்கள் சேவை. இது ஒரு வகை.

அடுத்து என் ஊரை சேர்ந்த நம் வலைஉலக என் அண்ணன் ஒரு சுமாரா 1 கோடிக்கு செஞ்சிருப்பார் பள்ளிகூடத்துக்கும் சுடுகாட்டு கூறைகளுக்கும் அவருக்கு ஏன் வேர்த்து வடியனும்? அவர் ஜஸ்ட் லைக் தட் போன்ல எம் பி, எம் எல் ஏ கிட்ட பேசுவார். இவங்க எல்லாம் தன் சேவையை செஞ்சுட்டு காத்துகிட்டு இருக்கும் போது டபார்ன்னு அய்யய்யோ என்னை எம் பி ஆக்கு நான் மணலை கயிறா திரிக்கிறேன் என்பது எல்லாம் சும்மா விளம்பரத்துக்கு தான்!

தருமி said...

லக்கி ல்யூக்,

எல்லோருமே உங்கள மாதிரி 'நச்சு'ன்னு சொல்லிட்டா எப்படி? அப்டியே கொஞ்சம் சுத்தி வளச்சி சொல்றது தான் ...

அபி அப்பா said...

\\ஜிரா!

நீங்கள் நல்லவர், வல்லவர், நடுநிலையாளர்னு ரெண்டு வருஷம் முன்னாடியே ஒத்துக்கிட்டோம்.

திரும்ப திரும்ப நிரூபிக்கணுமா?

நானும் திரும்ப திரும்ப இதையே பின்னூட்டமா போடணுமா? :-(
\\

ஆகா லக்கி இது என்ன கூத்து நடுநிலைன்னா என்னன்னு இப்ப தான் தெரிஞ்சுது!

என் ரூம் மெட் அப்படித்தான். அவன் சமையல் டேர்ன் வந்தா பாத்திரம் கழுவ ஆரம்பிக்கும் போது முத்துவேலர் முதல் ஆரம்பிச்சு சமைச்சு முடிச்சு கொண்டு வந்து வைக்கும் போது ஆதித்யாவிலே முடிப்பான்,

அது போல என் சமையல் அன்று செயலலிதாவிம் முப்பாட்டில ஆரம்பிப்ப்பான் நான் பாத்திரம் கழுவும் போது சமைச்சு முடிக்கும்போது ஜெயலலிதாவின் ஊட்டி பெண் கிட்ட வந்து முடிப்பான்(அதாவது என்னை ஊக்குவிக்கிறானாமாம்)

அவன் தன்னை நடுநிலையாளன் அப்படின்னு சொல்லிக்க ரொம்ப பிரயத்தனப்படுவான்!

நல்ல கூத்தா இருக்கே!

தருமி said...

//ஒரு பையன் எம் பி சீட்டுக்காக வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கான். //
//நம் வலைஉலக என் அண்ணன் ஒரு சுமாரா 1 கோடிக்கு செஞ்சிருப்பார் //

எனக்குத் தெரிஞ்ச அரசியல் படி இவங்க ரெண்டுபேரும் முதல் போட்டு வியாபாரத்தை ஆரம்பிச்சிருக்காங்க...வியாபாரம் சூடு பிடிக்கணும் இனிமதான்.

//இவங்க எல்லாம் தன் சேவையை செஞ்சுட்டு காத்துகிட்டு இருக்கும் போது ...//

மேல சொன்னவங்களுக்கு மக்களுக்கு சேவை செய்ய அம்புட்டு ஆசை அப்டின்றீங்க, நல்லதுங்க. அதான் சேவை பண்ணிக்கிட்டு இருக்காங்கல்லா...பொறவு எதுக்கு காத்துகிட்டு இருக்காங்க. உறுமீனுக்கா ... ?//நான் மணலை கயிறா திரிக்கிறேன் என்பது எல்லாம் சும்மா விளம்பரத்துக்கு தான்!//

ஓ! சரத்பாபு சொன்னா கயிறு திரிக்கிறத(அவரும் நான் உங்களுக்கு டிவி தர்ரேன்; கேபிள் கனெக்ஷன் தர்ரேன்னு எல்லாம் சொல்லலையே..) ஆனால் நம்ம அரசியல்வாதிகள் சொன்னா ...அப்படியே சொன்னபடியே செஞ்சிர்ராங்க ..இல்லைங்களா...

தருமி said...

அபி அப்பா.

//முத்துவேலர் முதல் ஆரம்பிச்சு சமைச்சு முடிச்சு கொண்டு வந்து வைக்கும் போது ஆதித்யாவிலே முடிப்பான்,

அது போல என் சமையல் அன்று செயலலிதாவிம் முப்பாட்டில ஆரம்பிப்ப்பான் நான் பாத்திரம் கழுவும் போது சமைச்சு முடிக்கும்போது ஜெயலலிதாவின் ஊட்டி பெண் கிட்ட வந்து முடிப்பான்//

இது ஜிராவுக்குப் புரியுமான்னு தெரியாது. ஆனா சுத்தமா இது எனக்குப் புரியவில்லை.

கல்வெட்டு said...

//உடனே டபார்ன்னு என்னை நவீன பார்ப்பனீயம் அப்படீன்னு ஏன் சொல்றீங்க? //

அபி அப்பா,
அரசியல்வாதியின் தகுதியாக நீங்கள் கொடுத்துள்ள இந்த ஒரு வாக்கியத்துக்கு மட்டுமே எனது எதிர்வினை.

// அரசியல்வாதி என்பவன் பிறந்தது முதல் அரசியல் படிப்பவன். இரத்தத்திலே அந்த படிப்பை வச்சிருப்பவன். அதை படிப்பா படிக்காம சுவாசமா நினைப்பவன்.//

என்ன சொல்லவருகிறீர்கள்?
மேலே சொன்ன தகுதிகளை எப்படி அளப்பது?

இது அப்படியே "பிறப்பில் இருந்து மணியாட்டினால்தான் அர்ச்சகராக முடியும்" எனது போல இல்லையா?

அரசியலில் பங்குபெற அரசியல் சட்டம் வகுத்துள்ள தேர்தல் வழிகாட்டுதல்கள் போதுமானது. நீங்கள் சொல்லும் "...சுவாசமா நினைப்பவன்...." டயலாக் உணர்ச்சிவசப்பட்டதாக தெரியவில்லை?

மக்களிடம் தனது கருத்துக்களைக் கொண்டுசெல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு மீடியம் தேவைப்படுகிறது. ஒருவகைப் பிரச்சாரயுத்தி.சரத் போகும் இடமெல்லாம் நான் ஏழை/குடிசை/இட்லி/ஐஐடி/ஐஐஎம் என்று சொல்லி கவன ஈர்ப்பு செய்கிறார். அது உண்மைதான். அறிமுகமாக இந்த யுத்தி தேவை. யாருக்கும் பாதிப்பில்லாத யுத்தி. நாம் முதலில் அவரை வரவேற்க வேண்டும். விமர்சனங்கள் அவரின் தேர்தல் அறிக்கையை ஒட்டியதாக இருக்க வேண்டும்.

தடாலடியாக "நீ எல்லாம் ஒரு அரசியல்வாதியா?" என்று ஏளனத் தொணியில் சொல்வது , இடஒதுக்கீட்டின் வழி பயனடைந்து கல்லூரி வருபவனை "கோட்டா கேஸ வந்துட்டானுக, இதுக வந்துதான்..." என்று சொல்வது போன்ற ஒரு வகைச் செயலே.

****

அரசியலில் மட்டுமே நிறைய மக்களுக்குச் செய்யமுடியும். குத்தம்பாக்கம் இளங்கோ சாதித்ததும் கிராம அரசியல்மூலமாகத்தான். ரராக்களைவிட யாருக்கும் எந்த தகுதிக் குறைவும் இல்லை.


****

சரத்தும் கலாம்போல ஒரு கார்ப்போரேட் கனவு வியாபாரியாக ஆக வாய்ப்புண்டு. ஆனால் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளவே விருப்பம் இல்லாமல் "பிறப்பு...சுவாசமா நினைப்பவன்...." போன்ற டயலாக்குகளைச் சொல்லும்போது அது ஒரு பார்ப்பனீயச் சிந்தனைதான்.

*******************************
//உடனே கனிமொழி, தயாநிதி, அழகிரி எல்லாரையும் ஏன் இங்க இழுக்குறீங்க?//

இவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் இந்த அதிகாரங்களைப் பெற்றார்கள் தெரியுமா? நீங்கள் சொல்லும் அதே "பிறப்பு...சுவாசமா நினைப்பவன்...." தகுதிகளால்தான். இவர்கள் மட்டும் அல்ல ராகுல் , அன்புமணி போல குலக்கல்வி வழியாக வந்தால் மக்கள் சகஜமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். மாற்று முயற்சி என்று வரும்போது ஏளனத் தொனியே தெரிகிறது.

மருத புல்லட் பாண்டி said...

vayasasu achunna ella peruchukallukkum mummyya pidikathulla athan iyya intha kachu kachi irrukeega.. onga computer ottaiya pogattum appuram pathukkeeren

அபி அப்பா said...

பலூன் மாமா! எந்த அடிப்படையில் அழகிரி, ஸ்டாலின் , தயாநிதி அரசியல் கத்துகுட்டின்னு சொல்வீங்க? நீங்க சொன்னது கனிமொழிக்கு ஓக்கே!

தவிர நீங்க சொல்வது எல்லாம் எனக்கு சிரிப்பா இருக்கு! நீங்க முதன் முதலா பின்னூட்ட சண்டையிலே தோத்துட்ட மாதிரி இருக்கு, போய் ரெஸ்ட் எடுங்க!

கல்வெட்டு said...

//தவிர நீங்க சொல்வது எல்லாம் எனக்கு சிரிப்பா இருக்கு! நீங்க முதன் முதலா பின்னூட்ட சண்டையிலே தோத்துட்ட மாதிரி இருக்கு, போய் ரெஸ்ட் எடுங்க!//

பின்னூட்டத்தை சண்டையென கேவலமாக‌ நினைக்கும் மனப்பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை.வலையுலகில் கருத்துப் பரிமாற்றங்கள் ஒரு உரையாடல் மட்டுமே என்ற நிலையில் சொன்னவையே யாவையும். தோல்வி வெற்றி என்ற ஒன்று உரையாடலில் இல்லை.

உங்களுக்கு ஒரு விமர்சனம் இருப்பது போல எனக்கு ஒரு விமர்சனம்.

பார்ப்பனீயம் என்பது நாசிசம்,ரேசிசம் போல ஒரு சீழ்பிடித்த ஒன்று.அது எந்த வகையில் வந்தாலும் தவறு. புதியதாக ஒருவன் களத்திற்கு வருவதை அரசியல் குலக்கல்விதான் மேன்மையானது என்று சொல்வது எனது பார்வையில் பார்ப்பனீயச் சிந்தனையே. அப்படியே தவறாகப் பட்டாலும் நான் சொன்னதை நீங்கள் மறுக்க , உங்கள் பார்வையில் தோன்றிய கருத்தை நீங்கள் பதியலாம்.

" எனக்கு இப்படித் தோன்றுகிறது, உங்களுக்கு எப்படி?" என்று பேசுவது ஒரு உரையாடல். அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.

நிறையப் பேசலாம்,உங்கள் பார்வையில் இது விவாதமாக மன்னிக்க சண்டையாக‌ப்பட்டு அதில் நீஙகள் வெற்றி அடைந்ததாக நினைத்தால். வாழ்த்துகள் உங்களின் வெற்றிக்கு.

கையைக் கொடுங்கள் நேரெமெடுத்து உரையாடியதற்கு மன்னிக்க சண்டையிட்டமைக்கு நன்றி!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

முருகா..

இந்தப் பதிவு ஏன் என் கண்ணுல படவேயில்லை..

திட்டமிட்ட சதியாக இருக்குமோ..?

அதான் அபியப்பா நாலு நாளா மொக்கை பக்கம்கூட வராம இங்கிட்டே சுத்துக்கிட்டிருந்தாரா..? சரியாப் போச்சு..

பேராசிரியரே.. நீங்க மோகனுக்கு போடலைன்னா அந்த மூணு பேர் ஆவிக்கு நீங்கதான் பதில் சொல்ல வேண்டி வரும்..

அழகிரி அண்ணனுக்கு போடலைன்னா எத்தனை பேர் ஆவிக்கு பதில் சொல்லணும் தெரியுமா..?

அதனால உங்களுக்கும் வேணாம்.. எங்களுக்கும் வேணாம்.. பேசாம 49 ஓ போட்டு்ட்டு நல்ல புள்ளையா வீட்டுக்கு வந்திருங்க..

இல்லாட்டி.. எனக்கு வீட்டு அட்ரஸ் தெரியும்.. இங்கேயிருந்தே ஆட்டோ அனுப்பி வைப்பேன்..!

இப்பல்லாம் பேஷன் இதுதான்.. அம்மாவுக்கு இல்லாட்டி ஐயாவுக்குத்தான் என் ஓட்டு.. ஐயாவுக்கு இல்லாட்டி அம்மாவுக்குத்தான் என் ஓட்டு..

தேசிய கீதம் மாதிரி ஆயிப் போச்சு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சொல்ல மறந்துட்டேன்..

ஒரே ஒரு தமிழ்மண வாக்கை நான்தான் மொதல் மொதல்லா குத்தியிருக்கேன்..

மனசுல வைச்சுக்குங்க.. மதுரைக்கு வரும்போது பில்லை நீட்டுறேன்..

தருமி said...

//இந்தப் பதிவு ஏன் என் கண்ணுல படவேயில்லை..//

ஏதோ இப்பவாவது முருகர் உங்களுக்கு இதக் காமிச்சாரே அதச் சொல்லுங்க.

மோகனுக்குப் போட்டா 'எல்லாப் புகழும் மம்மிக்கே'ன்னு ஆயிரும். அது எனக்குத் தாங்காது. அதனால் கிடையாது.

//அதனால உங்களுக்கும் வேணாம்.. எங்களுக்கும் வேணாம்.. பேசாம 49 ஓ போட்டு்ட்டு நல்ல புள்ளையா வீட்டுக்கு வந்திருங்க.. //

அத அடுத்த தேர்தல்ல மின்னணு எந்திரத்தில் சேர்த்த பொறவாட்டிதான்.

தருமி said...

அட! நீங்க சொன்ன பிறகுதான் பாக்கிறேன். ஏற்கெனவே அஞ்சு பேரு - மைனஸ் குத்து குத்தியிருந்தாங்களா .. அத்தனை பேருக்கு மம்மி மேல அம்புட்டு லவ்ஸா?

ஆச்சரியந்தாங்கோவ் .. என்ன சொல்ல .. எல்லாம் உங்க முருகன் திருவிளையாடல்தான் போலும் ........

Post a Comment