Saturday, May 09, 2009

310. மூன்று இந்திப் படங்கள்

*

A WEDNESDAY - NEERAJ PANDEY - UTV PRODUCTION

TAHAAN - SANTOSH SIVAN - DREAM PRODUCTION & SANTOSH SIVAN FILMS


MUMBAI MERI JAAN - KESSANT KAMAL - UTV PRIDUCTION




எல்லாமே சென்ற வாரம் பார்த்த படங்கள்.

எல்லாமே நல்ல படங்கள்தான். முதல் படம் எனக்கு மிகப் பிரமாதமாகத் தெரியவில்லை. நம் ஊர் பெரிய நடிகர் கமலும், அதைவிடப் 'பெரிய' இயக்குனருமான மணியும் இன்னும் தமிழ்ப்படங்களில் பாட்டு வேண்டுமா என்று கேட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார்களே என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ள முடிந்தது. மற்றபடி எனக்கு மிகவும் பெரிய படமாகத் தெரியவில்லை. (நம்ம ஊர் தமிழில் மனுஷ்யபுத்திரன் பாட்டு எழுதியிருக்கிறாராமே .. நம்ம எங்க மாறப் போறோம்?)


இரண்டாவது படம் ஒரு அழகான சின்னப் பையன்; ஒரு சின்னக் கழுதை. இதுதான் கதை.கழுதைக்காக எதையும் செய்யத் துணியும் அந்தச் சின்னப் பையன். அனுபம் கெர் இருக்கிறார். மிக மிக அழகான காமிரா. இறுதி சீன் மனதைத் தொடுகிறது. பாட்டும் ஒரு மண்ணும் கிடையாது. மிக நல்ல படம்.

ஆனால் அடுத்த படம் ...?

என்னங்க இது? யாருக்கும் உபதேசமில்லை. அழகான ஒரு படம். intermission சமயத்தில் ஒரு பாட்டு மாதிரி ஒண்ணு இருந்தது. போனா போகட்டும்; கடைசியில் டைட்டில் போடும் நேரத்தில் ஒரு பழைய பாட்டு ஒன்று. போனா போகட்டும்.

ஆனால் மற்றபடி என்னமாதிரியான படம். ஒரே நேரத்தில் ஏழு இடத்தில் பம்பாயில் ஒரு விபத்து - குண்டு வெடிப்புதான். முகத்தை ஒரே இறுக்கமாக வைத்திருக்கும் மாதவன், தன் காதலனை இழந்த ஒரு பெண், இரு போலீஸ்காரர்கள், ஒரு டீ விக்கும் (Irfaan Khan) தமிழன் (?), ஒரு சந்தேகப் பிராணி, --- அடடே .. என்ன பாத்திரங்கள்.

ஒவ்வொருவருக்குள்ளும் எழும் எண்ணங்கள் .. அவைகள் மாறும் நேரங்கள் .. அந்தக் கடைசி நேரத்து இரு நிமிடத் துளியளவு மெளனம் ... இதுதான் உலகம் என்று உணரும் மாதவன்; தன் கடைசி போலீஸ்கார வாழ்க்கையைத் துறக்கும் அந்த வயதான போலீஸ்காரர், அவரது ஜூனியரோடான அவரது கடைசிச் சந்திப்பு; தன் தவறால் உயிரழந்து போய்விடுவாரோ என்று நினைத்த அந்தப் பெரியவருக்குக் கார் பிடித்து ஒரு பூ கொடுக்கும் அந்தத் தமிழன்; தன் சந்தேகத்தால் பலரை இழக்க நினைத்த அந்த சந்தேகப் பிராணி, அவரது சந்தேகம் அந்த முஸ்லீமின் தாயைச் சந்தித்த நிமிடத்திலேயே கறைந்த அவனுக்கு தனக்கு பிஸினஸ் தரும் அந்த முஸ்லீம்; ஒரு முஸ்லீமை வழக்காமச் சந்திக்கும் டீக்கடை ... ஒவ்வொன்றும் அருமையான சித்தரிப்பு. இது படம்... இல்லை, இதுதான் படம்.


பேசாமல் இனி தமிழ்ப்படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்திப் படம் மட்டும் பார்க்கலாமோவென்று தோன்றிவிட்டது. பல்லாண்டுகளாக இந்திப் படம் பார்க்காமல் இருந்துவிட்டு Black பார்த்தவுடனேயே இந்த எண்ணம் வந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று படங்களுமே மிக நேர்த்தி. இந்த மூன்று படங்களில் இரண்டு படம் தயாரித்த UTV-க்கு என் மரியாதை.

நாம் எப்பதான் உயரப் போகிறோமோ?



*

15 comments:

வெங்காயம் said...

நம்ம தமிழ் படங்களும் மாறிட்டு தான் சார் இருக்கு. தமிழ்ல கூட நல்ல படங்கள வரத்தான் செய்யுது. ஹிந்திலயும் பல மட்டமான படங்கள் இருக்கு. ஒரேடியா 'நாம உயருவமானு' கேட்குற அளவுக்கு நிலைமை மோசமில்லை.

http://vengaayam.wordpress.com/

தருமி said...

இப்போ கடைசியா வந்த படங்களில் பூ, வெயில், மொழி நல்ல படங்கள்தான். ஆனாலும் இதுமாதிரி ஒரு படம் நம்ம தமிழ்ப்படங்களில் சொல்லுங்க பார்ப்போம்.

Narayanaswamy G said...

அதெல்லாம் சரித்தேன்..... நீங்க எப்பவுமே ஒரு 8 மாசம் பின்னாடிதேன் இருப்பீயளா?
எப்ப வந்த படத்த இப்ப பாத்துருக்கீக? நல்ல டிவிடி பார்த்தீயளா இல்லை திருட்டு டிவிடியா?

Narayanaswamy G said...

அது இருக்கட்டும்....
பசங்க ரொம்ப நல்லா இருக்காமே?? நெசமா??

வோட்டாண்டி said...

this mindset comes after we see a couple of hindi films which are gud..having seen nearly every tamil movie and after seeing 2 gud -other language movies we get a mentality tat tamil film industry is bad. Some persons in bollywood admire kollywood because they might have seen every bull shit movie in hollywood and would have seen a couple of gud movies in kollywood.


I can give u a list of gud movies in bollywood but got flopped like taare zammen par.. and according to me in the year 2008 only a few movies were gud in bollywood and kollywood also made a few gud movies like anjadhey, vaaranam ayiram(to name a few)


bollywood has copied hell lot of movies,music and stories from kollywood but the vice versa is comparitvely less..

overall i can say kollywood(tamil) is better than hollywood(hindi) when it comes to talent in any art oriented field

tamila hindiku munnadi mattam thatuna..(adhu thappi thavari mattamave irundhalum) enakku ketta kovam varum solliputten..

veetuku auto anuppi vaikiren perusu:)

தருமி said...

வோட்டாண்டி,

மேலே வெங்காயத்துக்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்.

வோட்டாண்டி said...

sir,

its not necessary to make a movie related to mumbai blasts in kollywood..
thr are lot of gud movies made realted to terrorism..kurudhipunal,kanathil muthamitaal etc..u cant get these kind of movies in bollywood..
mozhi slightly deals with the mentality of a physically challenged woman and her confidence like the movie black..

thr is no movie in bollywood which u can name against movies like paruthiveeran, anbe sivam etc which are all time hits..

thr are promising directors in this generation like vetrimaaran, venkatprabhu,mishkin etc.. but thr r not many new talents emerging these days in bollywood
they gave a big hype to a movie om shanti om which is just a compilation of our lollu sabha...

they also gave too much publicity to ghajini which was a remake of the tamil one...
u pls see the movie "dasvihaniya" also.. its an excellent movie and I havent heard of the story in the movie anywhere..
thr r talents in both bolly and kollywood and our ppl's talents r getting recognized in hollywood also..
other than aamir khan, no hero even supports making of a gud movie..
we hav pl like kamal and prakashraj who r investing their money in cine field itself...thr may be a few vijays and vijayakanths here and vijay type ppl r also thr in bollywood..

ok now lets continue our debate.
other than aamir khan name one person who tries to elevate the std of bollywood like wat kamal and prakashraj are doing here..even shankar has gn oppurtunities to new ppl who created veyil and few other gud movies..

சுந்தர் said...

வணக்கம் அய்யா,

தருமி said...

வோட்டாண்டி,
நீங்களும் சரி, வெங்காயமும் சரி இன்னும் என் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை; போகட்டும்.

வெற்றிமாறன், வெங்கட்பிரபு, - இவங்க எல்லாம் இனிமேதான் பேரு வாங்கணும். இதில வெற்றிமாறன் பெயரெல்லாம் வருதே .. ஆச்சரியம்.

நீங்க சொன்னதுல குருதிப்புனல், அன்பே சிவம் நல்லா இருந்திச்சி.

ஆனா என் கேள்வி இன்னும் நிக்குது; எனக்கு இந்திப் படங்கள் மேல் ரொம்ப மரியாதை இல்லாமல் இருந்தும் black இப்போ பார்த்த படங்கள் தனியா நல்லா இருக்கு. அதுக்கு நம்மட்ட பதில் இருக்கான்னு தெரியலை.
எங்க ஆளு சிவாஜி ஒரே ஒரு படம் black மாதிரி பண்ண முடியாம போச்சேன்னு ஒரு கவலை.

வால்பையன் said...

ரெண்டு குத்துபாட்டு!

பறந்து ப்றந்து அடிக்குற மாதிரி நாலு சண்டை

இது இல்லாம எப்படி தான் படம் பாக்குறிங்களோ!

தருமி said...

வால்ஸ்,
எப்படிதான் matrixஅப்டின்னு ஒரு படம் வந்துச்சோ தெரியலை. நம்ம ஊர்ல எல்லா ஆளுகளும் பாய்ஞ்சு பாய்ஞ்சு விழுகுறான்கள் - கயித்த கட்டி அப்படி இழுக்குறானுவ ..

அந்த சீனா படம் ஒண்ணு - Crouching Tiger Hidden Dragon - அப்டின்னு ஒரு படத்துக்குப் பரிசுவேற குடுத்தானுங்க .. அதில இருந்துதான் இந்த கயித்து சண்டை .. ம்ம்..

வோட்டாண்டி said...

wats ur question..
why r we not able to create a movie like black??

தருமி said...

S.
and also why not a movie like: MUMBAI MERI JAAN

Narayanaswamy G said...

Mr.Votu....

Venkat Prabhu oru Kadhai Kalavani
Vetri Maran oru Masala Parotta Master

Idhula vera Taare Zameen Par Flopnu vera solreenga.....

neenga solra edhuvumae oppama irukkeppa....

Tamil cinemala tharamana padangal varudhu....othukkaren. aana, innum nalla vandhirukkum, balachandar, barathiraja vagayarakkal iyalbaana nadippai anumadhithirundhal.

Nalla gavanicheenganna, eppo iyalbana nadippukku mariyadhai kuduthu padangal vara aarambichudho, appo irundhudhan tharaman thamizh padangal vara aarambichirukku. as you said, Kurudhipunal is a good example. Which was nothing but a stream of events.

Hindi industry is slowly migrating to that stream only now which we did couple of years back. Adhanaladhan namakku hindi romba pramadhama theriyudhu.

வோட்டாண்டி said...

//Venkat Prabhu oru Kadhai Kalavani

i m not commenting on this..

thr r a certain compromises to be done to reach every secn of the audience..tats whr even gud dirs compromise..like including song,off-track comedy

but thr r certain compromises whr it is done to satisfy the hero..tats done in vijay..vijayakanth type of movies..

ivanungala yaaravadhu nadu kadathungappa..kollywood innum mela varum

atleast i expect a consensus for accepting bala-ammer-raam-sasikumar as promising dirs..

adhukaaga bollywood kollywooda vida supera irukkunu solradhulaam romba over..

ayiram dhaan sollunga lollu sabhala indha vijay padatha pottu thalikirappa varra sandoshame thani..

Post a Comment