Saturday, February 06, 2010

373.குழந்தைகள் மனநலம் - நன்றியுரை


*
பொதுவாக கூட்டங்களின் முடிவில் நன்றி சொல்றது ரொம்ப ஈசியான விஷயம்தான். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் நன்றி சொல்றதுகூட கஷ்டமா போகுது.

ஏன்னா டாக்டர் ஷாலினியின் பேச்சுக்குப் பிறகு நான் வந்து என்ன சொன்னாலும் அதைக்கேக்கிற மூடில் நீங்க இருக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு அவங்களோட பேச்சு உங்களைக் கட்டிப் போட்டிருக்கும்னு தெரிகிறது. இந்த அளவு எங்களைக் கட்டிப்போட்டு வைத்ததற்கு முதலில் டாக்டர் ஷாலினிக்கு மிக்க நன்றி. பேச்சு மட்டுமின்றி, நாங்கள் எப்படிப்பட்ட host-ஆக இருந்தோமோ தெரியாது; ஆனால், அவர்கள் மிக நல்ல  guest-ஆக இருந்தார்கள். அதற்கும் எங்களின் இனிய நன்றி …







கூட்டம் நடத்த மட்டுமின்றி சிறப்புப் பேச்சாளர் தங்கவும் நல்ல ஏற்பாடுகளைக் கொடுத்தமைக்காக அமெரிக்கன் கல்லூரிக்கும், அதன் முதல்வர் முனைவர் சின்னராஜ் ஜோசப் அவர்களுக்கும் எங்கள் இனிய நன்றி …






இன்று வர நினைத்தும் வரமுடியாமல் போனதால் இங்கில்லாத பேரா. ப்ரபாகர் இக்கூட்டம் நன்கு நடக்க எல்லா வசதிகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ் அனுப்புதல் என பல உதவிகளைச் செய்தமைக்காக அவருக்கு எங்கள் இனிய நன்றி


டாக்டர் ஷாலினி அவர்களைத் தொடர்பு கொண்டு இக்கூட்டத்தை நடத்துவதற்கான முதல் முயற்சிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்த, ஜெர்மனியில் உள்ள பதிவர் எஸ்.கே. என்ற குமார் அவர்களுக்கு எங்களின் இனிய நன்றி

 
விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை மதியம், தொலைக்காட்சி, சினிமா, Australian open tennis match final, இப்படிப் பல தடங்கல்கள் இருந்த போதும் இந்த மாலை வேளையில் அதிகமாகத் திரண்டு வந்து, ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் கலந்து கொண்டு கூட்டத்தை மிக வெற்றிகரமான ஒன்றாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் எங்களின் இனிய நன்றி …
 

பதிவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை; இருப்பினும் வெளியூரிலிருந்து வந்து எங்களைச் சிறப்பித்த நம் பதிவர்களுக்கு எங்களின் இனிய நன்றி …







*

9 comments:

Ganesan said...

சாமி,
அந்த வீடியோவ போட்டு வுடுங்க, உங்களுக்கு புண்ணியமா போகும்.

Ganesan said...

ஜயா,

புகைப்படங்கள் நேர்த்தியாக எடுத்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா.. இது என்ன அதிரடி மாற்றம் டேம்பிளேட்ல? சூப்பரா இருக்கு.. அப்புறம்.. படங்கள் எல்லாமே ரொம்ப நல்லா வந்திருக்கு..

Thekkikattan|தெகா said...

வாழ்த்துக்கள், தருமி! அற்புதமான வேலை செய்திருக்கிறீர்கள். அப்படியே கா. கணேஷ் கேட்டுக் கொண்ட மாதிரி விடீயோவையும் யுட்யூப்லயாவாது ஏத்திடுங்க.

தருமி said...

கா.கணேஷ்,
தெக்ஸ் ............. நன்றி.

அம்புட்டு ஈசியா ..........தேர்ர கேசுகள் தேருதுங்க. மற்றதெல்லாம் 'காத்தோடு போயாச்சு" ........

தருமி said...

கா.கணேஷ்,
தெக்ஸ் ............. நன்றி.

அம்புட்டு ஈசியா ..........தேர்ர கேசுகள் தேருதுங்க. மற்றதெல்லாம் 'காத்தோடு போயாச்சு" ........

☼ வெயிலான் said...

// வெளியூரிலிருந்து வந்து எங்களைச் சிறப்பித்த நம் பதிவர்களுக்கு எங்களின் இனிய நன்றி … //

என்னைத் தானே? :)

தருமி said...

//விடீயோவையும் யுட்யூப்லயாவாது ஏத்திடுங்க//

எடுத்திடுறேன். ஆனா எதுக்கு முதல்ல போடணும் ???????

செல்வநாயகி said...

அற்புதமான வேலை செய்திருக்கிறீர்கள்.

Post a Comment