Friday, April 02, 2010

387.பத்துத் தமிழ்ப்படங்கள்

*
என் வாழ்வில் நான் பார்த்த மிகச் சிறந்த பத்து தமிழ்ப் படங்களின் வரிசையில் கண்டிப்பாக அங்காடித் தெருவும் இருக்கும்.


இப்டி நம்ம கா.பா. சொன்னதும் மீதி ஒன்பது படம் எதுவாக  இருக்கும்னு ஒரு நினைப்பு வந்திச்சி.
சரி... அதை அவரிடமே கேட்டிருவோம்னு நினச்சதும், நாம அப்படி கேட்டா அவர் திருப்பி நம்மிடமே அதே கேள்வியை கேட்டுட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சி ... அப்படியே கேட்டால் என்ன பதில் சொல்றதுன்னு யோசிச்சேன். பத்து படம் வரலை .. ஒன்பதுதான் வந்தது. சரி பத்தை ஒரு கேள்விக்குறியோடு சேத்துக்குவோம். சேத்துட்டு அவரையும் இன்னொருத்தரையும் அந்தக் கேள்வி கேட்டு ஒரு தொடர்பதிவை நாம் தொடங்கி வைப்போமேன்னு நினச்சேன்.

எனக்குப் பிடித்த பத்து(?) தமிழ்ப்படங்கள்:

1. சபாபதி

2. அடுத்த வீட்டுப் பெண்

3. காதலிக்க நேரமில்லை

4.மைக்கிள் மதன காம ராசன்

5. பாசமலர்

6. கப்பலோட்டிய தமிழன்

7. அந்த நாள்

8. குணா

9. அன்பே சிவம்

10. மொழி



(இப்போதைக்கு இவை.)



கா.பா. ,
நீங்கள் இப்பதிவைத் தொடர அழைக்கிறேன். உங்களோடு ஜோவையும் சேர்த்தழைக்கிறேன்.மேலும் ஏதாவது விதிகள் சேர்க்கவோ, எத்தனைபேரை அழைப்பது என்பதையோ நீங்களே முடிவு செய்து சொல்லிவிடுங்கள்.


*
ஜோ-வின் பதிவு

*



பி.கு. பத்து படம் கைவசம் இருந்தால் இங்கேயே பின்னூட்டத்தில் அதைப் போட்டுட்டு போனீங்கன்னா ஒரு லிஸ்ட் போட்டுறலாமே ...






14 comments:

மதுரை சரவணன் said...

உங்களுக்கும் தொடர்பதிவு மேகம் தொற்றிக் கொண்டதா! நல்லப் படங்களை வரிசைப்படுத்தியுள்ளீர்கள்.

ப.கந்தசாமி said...

இதில் 6 படங்கள்தான் நான் பார்த்தவை. பாசமலர் படத்தை நெ. 1 ல் நான் வைப்பேன்.

தருமி said...

சரவணா,
'உசுப்பி உட்டதே' கா.பா.வின் வார்த்தைகள்தான்!!

எல்லோர் விருப்பத்தையும் தொகுத்தால் டாப் 10/100 கிடைக்காதான்னு ஒரு ஆசை.

மாலை பார்ப்போம்

தருமி said...

டாக். கந்தசாமி,

நான் தர வரிசையில் வைக்கவில்லை. முதலில் நகைச்சுவைப்படங்களின் தொகுப்பாகக் கொடுத்தேன்.

உண்மைத்தமிழன் said...

செல்லாது.. செல்லாது..!

மைக்கேல் மதனகாமராசனையெல்லாம் ரசிச்சிருக்கீங்கன்னா நீங்க...!

யூத்தா..? அன் யூத்தா..?

iskcon said...

இதில் காதலிக்க நேரமில்லை மற்றும் அடுத்த வீட்டு பெண் இந்த இரு படங்களையும் நீக்கி விடுங்கள். மற்ற அனைத்தும் அருமையான காவியங்கள்.

தருமி said...

iskcon

உங்களுக்காகவே அந்தப் பி.கு. போட்டிருக்கேன். தொகுப்பு கொடுங்க ..

sriram said...

1. அன்பே சிவம்

2. மொழி

3. மூன்றாம் பிறை

4. நாயகன்

5. எதிர் நீச்சல்

6. தவமாய் தவமிருந்து

7. பாட்ஷா - இத விட சிறந்த எண்டர்டெயினர் தமிழில் நான் இதுவரை பார்க்கவில்லை

8. ஆண் பாவம்

9. முதல்வன்

10.ரிதம்.

பம்பாய், சேது, மைக்கேல் மதன காம ராஜன், சலங்கை ஒலி, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களும் நான் மிகவும் ரசித்தவை. But they did not make it to my top 10.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஜோ/Joe said...

வாத்தியாரே,
தாமதத்திற்கு மன்னிக்கவும்
http://cdjm.blogspot.com/2010/04/10.html

தருமி said...

ஜோ சொன்னது:
1. அந்த நாள்
2. ரத்தக் கண்ணீர்
3. கர்ணன்
4. தில்லானா மோகனாம்பாள்
5. நாயகன்
6. தேவர்மகன்7.
7. மகாநதி
8. சதி லீலாவதி
9. அன்பே சிவம்
10. குருதிப் புனல்

தருமி said...

bகா.பா. சொல்றார்..../b

முள்ளும் மலரும்
முதல் மரியாதை
முகவரி
பூவே உனக்காக
உள்ளம் கொள்ளை போகுதே
சேது
அன்பே சிவம்
நந்தா
தவமாய் தவமிருந்து
பொற்காலம்

சாலிசம்பர் said...

1.பராசக்தி
2.குணா
3.மைக்கேல் மதனகாமராசன்
4.பேசும்படம்
5.திருவிளையாடல் (சிவாசி படம்)
6.ஓர் இரவு
7.சானி (ரசினிக்காக)
8.வறுமையின் நிறம் சிகப்பு (சிரீதேவிக்காக)
9.நரசிம்மா (கொடூர நகைச்சுவைக்காக)
10.அரிதாசு

அண்ணாவின் வேலைக்காரி,சொர்க்கவாசல் படங்களை இன்னும் பார்க்கமுடியவில்லை.பார்த்துவிட்டால்மேலேயுள்ள பட்டியலில் இருந்து சில படங்களை கழற்றி விட நேரிடும் என்று நினைக்கிறேன்.

கொடூரநகைச்சுவை பிரிவிலாவது புரட்சித்தலைவரின் படம் ஏதாவது தேறுமா என்று பார்த்தால் ஒன்றும் தேறவில்லை.

தருமி said...

அன்பு சொன்னது ...

எனக்கு பிடித்த, நான் அதிகம் பார்த்த பத்து படங்கள்:-

1.விண்ணைத்தாண்டி வருவாயா...
2.காக்க காக்க..
3.சேது..
4.பிதாமகன்..
5.அயன்...
6.வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
7.மௌனம் பேசியதே..
8.காதல்
9.சுப்ரமணியபுரம்..
10.நாடோடிகள்..

கபீஷ் said...

1. தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
2. உன்னால் முடியும் தம்பி
3. அன்பே சிவம்
4. மவுன ராகம்
5. பூவே பூச்சுட வா
6. முள்ளும் மலரும்
7. பூ
8 வெண்ணிலா கபடி குழு
9 ம்காநதி
10 அங்காடித் தெரு.

எந்த விதத்திலும வரிசைப்படி இல்லை.
இன்னும் யோசிச்சா கொஞ்சம் படம் சொல்லலாம் :)

Post a Comment