Saturday, September 18, 2010

438. தருமியின் சின்னச் சின்ன கேள்விகள்

*

கெட்ட வார்த்தை எதுவும் இல்லாமல் இந்த இடுகையை இட வேண்டுமென்ற முழு முயற்சியோடுதான் ஆரம்பித்துள்ளேன். ஒரு வேளை ஏதாவது வார்த்தை வந்து விழுந்து தொலைத்தால் அது 'காலத்தின் கட்டாயம்'!


16.09.2010 இந்துவில் ஒரு செய்தி.  
ஏதோ சனியன் பிடித்த ஒரு ஊர் - மதுரை பக்கத்தில் வில்லூர். இங்குள்ள "சாதி இந்துக்கள்" - தினசரியில் OBC  என்று போட்டிருக்கிறது. என்ன எழவு பிடித்த சாதியோ அந்த சாதி. அந்த எழவு சாதி மக்கள்  தங்கள் ஊர்ச்சாலைகளில்  தலித்துகள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்ல அனுமதிப்பதில்லையாம் - காலங்காலமாய். இப்போதும் அதை நிறுவப் பார்க்கிறார்கள். ஒரு தலித் தன்  பைக்கில் சென்றதும் அந்த எழவு பிடித்த சாதியினருக்கு அது எங்கேயோ நெருப்பு வைத்தது போல் ஆகி, அந்த ஆளை அடித்திருக்கிறார்கள். காவல் துறைக்குச் சென்றால் - வழக்கம் போலவே - அந்த கேசை எடுக்க மறுத்திருக்கின்றனர். தொடர்ந்த போராட்டம்.போலீசும் அந்த எழவெடுத்த சாதியினரும் ஒருமித்து ஒரு தனிப்பாதையை தலித்துகளின் வண்டிகள் போவதற்கு குறிப்பிட்டிருக்கிறார்கள். அது ஒரு சுற்றுவழிப்பாதை. காவல் துறைக்கு இது என்ன வேலை? சாலை எல்லோருக்கும் பொது என்று சொல்லாமல் தனி வழியை "சாதி  இந்துக்களோடு" சேர்ந்து தேர்ந்தெடுத்தால் அது என்ன நியாயமோ? இதில் வருவாய்த் துறையும் இணைந்து இந்த "நல்ல முடிவை" எடுத்துள்ளனர்! இந்த தலித்துகள் அந்த எழவெடுத்த சாதி இந்துக்களின் வயல்களில் வேலை செய்யும் பாவப்பட்ட மக்கள்.

எனக்கு வரும் கேள்விகள்:

அரசு போட்டிருக்கும் சாலைகளில் நீ வரக்கூடாது என்று தலித்துகளைச் சொல்வதற்கு எந்த இழி சாதிக்காரனுக்கும் என்ன உரிமை?

இந்த உரிமையை அந்த எழவெடுத்த சாதியினர் எடுக்கும்போது காவல் துறையும், மற்ற அரசு அமைப்புகளும் ஏன் ஜால்ரா அடிக்கின்றனர்?

இதுபோன்ற நிகழ்வுகளில் காவல்துறை எப்போதும் தலித்துகளுக்கு எதிராகவே செயல்படுவது ஏன்? 

ஒரு ஆதங்கம்:  அந்த OBC சாதிதான் அந்த வில்லூரில் மெஜாரிட்டியாம்.  அந்த கேடுகெட்ட சாதியில் அவ்வளவு பேர் இருப்பவர்களில்  மனித நியாயம், சாதியைப் புறந்தள்ளும் உணர்வு, சமுதாய நியாயம் போன்ற ஏதாவது நல்லுணர்வு  ஒரு நாலைந்து பேருக்காவது இருக்கக் கூடாதா?

நான் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து இப்படி ஒரு வழக்கு வந்தால் ரொம்ப சிம்பிள்: நாலு தலித காவல்துறை ஆட்களை ஒரு வாரத்திற்காவது அந்த சாலையில் நித்தம் காலையில் வண்டிகளை ஓட்டி வரச் சொல்வேன். மாலையில் நல்ல 'திகிடுதத்தமான' தலித்துகளை  ஓட்டி வரச் சொல்வேன். இது போல் ஏற்கெனவே ஒரு பதிவில் இன்னும் சில 'வேலை'களைச் செய்வேன் என்று ஒரு பதிவிட்டேன். பாருங்கள் அதையும் ...



மயிலே மயிலே இறகு போடுன்னா மயில் என்ன ***த்துக்கு இறகு போடும்?

இந்த தலித்துகளும் முதலில் காவல் துறை வேலைகளுக்கு முன்னுரிமை எடுத்து அதில் சேர வேண்டும். அப்போதுதான் வேலியே பயிரை மேயும் ஆபத்திலிருந்து வெளிவர முடியும்.

இவைகளில் எதுவும் இப்போது நடக்கிற மாதிரியும் தெரியலைன்னு நினைக்கும்போது .....



25 comments:

தருமி said...

test

Thekkikattan|தெகா said...

தருமி, செம கடுப்பாகி இருக்கீங்கன்னு தெரியுது. இது மாதிரி வார்த்தைகளோடு நான் வேற எந்த பதிவும் படிச்ச மாதிரி தெரியல.

நியாயமான கோபம்தான். இதுக்குமேல பண்போடு இந்த விசயத்தை பேச முடியாது. இது மாதிரி இன்னும் எத்தனை ஊர்கள்ல நாடு முழுக்க நடக்கும். கடவுள்னு ஒருத்தரு இருந்தா ஒவர்நைட் இவிங்கள அவிங்களாவும், அவிங்கள இவிங்களாவும் மாத்தட்டும்னு சொல்லி வைங்க...

cheena (சீனா) said...

அன்பின் தருமி

கோபத்தின உச்சத்தில் இருக்கிறது
போலத் தெரிகிறது. என்ன செய்வது ... நமது நாட்டில் இது போன்ற கொடுமைகள் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. காலம் தான் மாற்ற வேண்டும்.

நல்ல கோபத்தில் எழுந்த நல்ல சிந்தனை - நலமாக முடிய நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

PB Raj said...

தருமி

காட்டுமிராண்டிதனம் ஆனால் காவல் து
றை அதிகம் இருபது தலித்துகள்தான் என்பது என் என்னம்

தருமி said...

//காவல் துறையில் அதிகம் இருப்பது தலித்துகள்தான் என்பது என் எண்ணம்//

இல்லையென்றே நான் நினைக்கிறேன்.

கல்வெட்டு said...

.

//இந்த தலித்துகளும் முதலில் காவல் துறை வேலைகளுக்கு முன்னுரிமை எடுத்து அதில் சேர வேண்டும். அப்போதுதான் வேலியே பயிரை மேயும் ஆபத்திலிருந்து வெளிவர முடியும். //

ரொம்ப கஸ்டம் பேராசான்

நவ பார்ப்பனர்கள் என்ற ஒன்று உண்டு..
நம்ம இளையராசா போல. ஒரு நிலைக்கு வந்ததும் வேரில் இருந்து விலக்கிக்கொண்டுவிடுவார்கள்.

எம் எஸ் சுப்புலட்சுமி என்ற மதுரைக்காரர் நல்லா பாடுவார். அவர் மணமானபின்னால் அவரின் ஒரிஜினல் சாதி (தலித் அல்ல ஏதோ ஒரு ஆதிக்கச் சாதி (உத்தப்புரம் வகையறாவோ??) மாறி (மறந்து) புதுச்சாதிய அடையாளம் வந்துவிட்டது.

திருமாவளவன் என்ற ஒருவர். இன்னும் சிதம்பரம் பிரச்சனைக்கு மற்ற இயக்கங்கள்தான் போராட்ட முன்னனியில் உள்ளது. உத்தப்புரம் பற்றி திருமாவளவன் அய்யா எவ்வளவு முறை பேசியுள்ளார் போராடியுள்ளார்?

திருமாவளவன் அல்லது தலித்துகளுக்கு மட்டுமான போராட்டம் எனவே அவர்கள்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. சுரணையுள்ள மனிதன் யாரும் செய்யலாம். நான் சொல்லவருவது அதே தலித்துகள் நல்ல நிலைக்கு அதிகாரம் /பணம் வந்தவுடன் நவ பார்ப்பணராகிவிடும் கொடுமை சகிக்கமுடியாதது.


பெரியாருக்கு அப்புறம் உண்மையான வழிகாட்டி (தலைவர் அல்ல) இல்லை.
.

ஜோ/Joe said...

நியாயமான கோபம்.

அ.வெற்றிவேல் said...

மதுரைக்குப் பக்கத்தில் தான் இது மாதிரி அடிக்கடி நடக்கது.. காவல் துறையில் அடிமட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்து பயனில்லை. மதுரை மாவட்ட பொறுப்பாளராக தாழ்ததப்பட்டவர் வர வேண்டும் அல்லது ஆட்சியர். யார் யார் அப்ப்டி வழி மறைத்தார்களோ அனவைரையும் சட்டதிபடி தண்டிக்க வழி இருக்கு.ஆனால் மேல்ஜாதி ஒட்டு போய்விடும்..எதிர்கட்சிகள் கலவரத்தை தூண்டி விடுவர்கள்.. அடுத்த தலமுறையை யோசிக்கும் நல்ல அரசு அதிகாரிகள்,அமைச்சர்கள் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்

துளசி கோபால் said...

இது என்ன அக்கிரமம்?

சாலை, எல்லோருக்கும் பொது இல்லையா?

அப்புறம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்று சொல்வது.......????

subra said...

இந்த எளவு மாரும்மின்னு நினைகிறிங்க.நம்பபயங்க
பயந்தகொலிங்க .படத்துல இவங்க நாயகன்க ஒரே
நாளுல இப்படிபட்ட பிரச்சனைய திர்திடுவரு ,அவங்களுக்கு
பாலபிசேகம் பண்ணத்தான் இவங்களுக்கு நேரம் இருக்கும்
தன்னை எவன் எந்த எழவு பண்ணிலாலும் இவனுக்கு
சுடு சொரணை வராது ஆசானே .

மாசிலா said...

//என்ன எழவு பிடித்த சாதியோ அந்த சாதி. அந்த எழவு சாதி //
நியாயமான கேள்விகள் மற்றும் நியாயமான கோபம்.
இவை அத்தனையும் இந்தியாவின் அவலங்கள். இன்னும் எத்தனை காலங்கள்தான் சாதிகள் அடிப்படையில் சக மக்களை பிரித்து ஒதுக்கி வாழ்வோர்களோ? மத கோட்பாடுகள் மனிதனின் மனங்களை ஒரு சிறு வட்டத்திற்குள் குறுகி கொடூரனாக மாற்றிவிடுகிறது. அந்த எழவு பிடித்த உயர்சாதி மக்கள் இயற்கையிலேயே கொடூர புத்தி உடையவகளே. தங்களின் அராஜக வெறியை தீர்த்துக் கொள்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட களமும் ஆயுதமுமே இந்து மதமும் அது வகுத்து கொடுத்த சாதி பிரிவினைகளும்.

மதுரையாம், வில்லூராம்... அதற்கென காவல் நிலையமாம்! தூ ... நாத்தமடிக்குது.

தருமி said...

//காவல் துறையில் அடிமட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்து பயனில்லை. //

மேல்மட்டத்தில் உத்தரவு போடுவார்கள். நிறைவேற்றுவது அடிமட்ட மக்கள்தானே.மேல்மட்டத்து ஆளுகளால் ஒரு பயனுமிருக்காது. field personnelதான் முக்கியமாகப் படுகிறது.களத்தில் இருப்பது அடிமட்ட மக்கள்தானே.

Anonymous said...

உங்கள் கேள்விகளுக்குப் பதில்கள் உங்கள் பதிவிலேயே இருக்கின்றன !

Cue words from your post:-

:தங்கள் ஊர்ச்சாலைகளில்”

You dont question this. But you question only the roads which you say, were laid by the Government.

தங்கள் ஊர். ஏனப்படிச்சொல்கிறார்கள்? அது சரியா என்பதை ஏன் ஆராயவைல்லை?

”போலீசும் அந்த எழவெடுத்த சாதியினரும் ஒருமித்து...”

ஏன் போலீசு அவர்களிடம் கூட்டுச்சேர்கிறது? ஆராயின் உங்களுக்கு பதில் சரியாக கிடைக்கும்.

போலீசு என்பவர்கள் ஆர் என்பதிலுருந்திலிந்து தொடங்குங்கள். வெறும் அரசு ஊழியனா?

“வழக்கம் போலவே”

So, only now people like you have awakened!

எப்படி அந்த வழக்கம் வந்தது? எப்போதிலிருந்து? ஏன் இப்போது மட்டும் அந்த வழக்கம் சர்ச்சைக்குள்ளாகிறது?

The most crucial words are these:

"இந்த தலித்துகள் அந்த எழவெடுத்த சாதி இந்துக்களின் வயல்களில் வேலை செய்யும் பாவப்பட்ட மக்கள்.
"

உங்கள் கேள்விகள் எழுந்திருக்கவே முடியாது if you could change the above equation of dalits slaving under the Caste Hindus.

"அந்த வில்லூரில் மெஜாரிட்டியாம்."

Exactly. The majority overules anything anywhere. Universal phenomenon. It is the minority who should adjust. If the minority are willing slaves, or by circumstances beyond their control, the adjustiment is compulsory.

அதுதான் இன்கே நடக்கிறது.

“இந்த தலித்துகளும் முதலில் காவல் துறை வேலைகளுக்கு முன்னுரிமை எடுத்து அதில் சேர வேண்டும்”

It will lead to reverse discrimination. I dont want to go into it for want of space. You can.

சமூகப்பிர்ச்னையை கோபக்காரர்களால் புரிந்து கொள்ள, அவர்கள் கோபம் தடுக்கும்

தருமி said...

ஜோ அமலன்,

நீங்கள் என்ன சொல்ல வர்ரீங்கன்னே எனக்குப் புரியலை. அந்த சாதிக்காரர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்; சரியா?

//It is the minority who should adjust.//
அதாவது கிறித்துவர்கள், இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் தவறு என்கிறீர்களா?

பொதுவாக, நீங்கள் சொல்வதை இன்னும் தெளிவாகச் சொன்னால் புரிந்து கொள்கிறேன். இப்போது ஒன்றும் புரியவில்லை.

ஆ.ஞானசேகரன் said...

இது போல பல நடந்துகொண்டே இருக்குங்க ஐயா!.... அதனால்தான் என்னவோ என்னால் தொடர்ந்து பதிவு எழுத முடியாமல் இருக்கின்றேன்.... என்னத்த எழுதி என்னத்த கிழிக்க? ஒன்னும் ஆகா போறது இல்லையே.. கடைசியில் அதே சாக்கடைதான் ஜெயிக்கின்றது......


ம்ம்ம்ம்ம்
ஆ.ஞானசேகரன்

உமர் | Umar said...

காமராஜர் 1954 ல் முதல்வரானபோது, தனது அமைச்சரவையில் பரமேஸ்வரன் என்பவரையும் சேர்த்து, அவருக்கு அறநிலையத்துறை பொறுப்பையும் வழங்கியிருந்தார். பரமேஸ்வரன் தாழ்த்தப்பட்டவர் வகுப்பைச் சார்ந்தவர். அதனால், அதிருப்தியுற்ற பலரும் காமராஜரிடம் கேட்டபோது, அவர் கூறினார். "ஆமான்னேன்... பரமேஸ்வரன் எஸ். சி. ன்னு தெரிஞ்சிதான் போட்டிருக்கேன்னேன். ஹரிஜனங்களை ஒரு காலத்துல கோவிலுக்குள்ளேயே விடமாட்டேன்னுட்டான். அவுங்களைஎல்லாம் கோவிலுக்குள்ளே அழைச்சிட்டுப் போறதுக்காகத்தான் காந்திஜி 'ஆலயப் பிரவேசம்' போராட்டம் நடத்தினார். இப்போ சுதந்திரம் வந்திடுச்சி. நம்ம ஜனங்களை உள்ளே வந்து சாமி கும்பிட வச்சிருக்கானே தவிர, கர்ப்ப கிரகத்துக்குள்ளே போயி சாமிக்குப் பூஜை பண்ண விட்டுருக்கானா? முதல்லே மனுஷாளைத் தொட்டா தீட்டாயிடும்னு சொன்னான். இப்போ சாமியைத் தோட்டா தீட்டாயிடும்கிறான். கர்ப்ப கிரகத்துக்குள்ளே போற உரிமை அவனுக்கு மட்டும்தான் இருக்கு... அவன் ஒசந்த சாதின்னு சொல்றான். இப்போ நான் என்ன சொல்றேன்னா, ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனை மந்திரியாக்கிப்புட்டா, எந்த நாலாஞ்சாதியை நீ உள்ளே விடமாட்டேன்னு சொன்னியோ, அதே நாலாஞ்சாதிக்காரனுக்குப் பூரண கும்பமரியாதை காட்டி, பரிவட்டம் கட்டி உள்ளே அழைச்சுக்கிட்டுப் போவியா இல்லியா? பரமேஸ்வரனை மந்திரியாக்கி, ஒரு பறையனுக்குப் பரிவட்டம் கட்ட வக்கிறேன்னேன்."

இதுபோன்ற அணுகுமுறை (தலைமைப் பொறுப்பில் தலித்துகள்) பலனளிக்கும் என்றே தோன்றுகிறது; (கல்வெட்டு கூறியபடி, நவ பார்ப்பனர்களாக மாறாமல் இருந்தால்.)

----
காமராஜர் பற்றிய தகவல் உதவி: 'ஆகட்டும் பார்க்கலாம்' நூல். பக்கம் 47-48.

உமர் | Umar said...

காமராஜர் 1954 ல் முதல்வரானபோது, தனது அமைச்சரவையில் பரமேஸ்வரன் என்பவரையும் சேர்த்து, அவருக்கு அறநிலையத்துறை பொறுப்பையும் வழங்கியிருந்தார். பரமேஸ்வரன் தாழ்த்தப்பட்டவர் வகுப்பைச் சார்ந்தவர். அதனால், அதிருப்தியுற்ற பலரும் காமராஜரிடம் கேட்டபோது, அவர் கூறினார். "ஆமான்னேன்... பரமேஸ்வரன் எஸ். சி. ன்னு தெரிஞ்சிதான் போட்டிருக்கேன்னேன். ஹரிஜனங்களை ஒரு காலத்துல கோவிலுக்குள்ளேயே விடமாட்டேன்னுட்டான். அவுங்களைஎல்லாம் கோவிலுக்குள்ளே அழைச்சிட்டுப் போறதுக்காகத்தான் காந்திஜி 'ஆலயப் பிரவேசம்' போராட்டம் நடத்தினார். இப்போ சுதந்திரம் வந்திடுச்சி. நம்ம ஜனங்களை உள்ளே வந்து சாமி கும்பிட வச்சிருக்கானே தவிர, கர்ப்ப கிரகத்துக்குள்ளே போயி சாமிக்குப் பூஜை பண்ண விட்டுருக்கானா? முதல்லே மனுஷாளைத் தொட்டா தீட்டாயிடும்னு சொன்னான். இப்போ சாமியைத் தோட்டா தீட்டாயிடும்கிறான். கர்ப்ப கிரகத்துக்குள்ளே போற உரிமை அவனுக்கு மட்டும்தான் இருக்கு... அவன் ஒசந்த சாதின்னு சொல்றான். இப்போ நான் என்ன சொல்றேன்னா, ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரனை மந்திரியாக்கிப்புட்டா, எந்த நாலாஞ்சாதியை நீ உள்ளே விடமாட்டேன்னு சொன்னியோ, அதே நாலாஞ்சாதிக்காரனுக்குப் பூரண கும்பமரியாதை காட்டி, பரிவட்டம் கட்டி உள்ளே அழைச்சுக்கிட்டுப் போவியா இல்லியா? பரமேஸ்வரனை மந்திரியாக்கி, ஒரு பறையனுக்குப் பரிவட்டம் கட்ட வக்கிறேன்னேன்."

இதுபோன்ற அணுகுமுறை (தலைமைப் பொறுப்பில் தலித்துகள்) பலனளிக்கும் என்றே தோன்றுகிறது; (கல்வெட்டு கூறியபடி, நவ பார்ப்பனர்களாக மாறாமல் இருந்தால்.)

----
காமராஜர் பற்றிய தகவல் உதவி: 'ஆகட்டும் பார்க்கலாம்' நூல். பக்கம் 47-48.

Anonymous said...

You asked my points in a nutshell.

In this village, the employers are the caste hindus, the employees are dalits. This is the equation. The employment is not governed by labor laws and human rights. The dalits have to accept what is given as cooly; and work as the employers wish. In other words, it is a world where they have no rights and they are slaves out and out.

Beggars cant be choosers. இல்லையா?

இந்த ஈக்குவேசன் மாறாதவரை ஜாதி இந்துகள் அப்படித்தான் இருப்பார்கள். அடிமைகள் அடங்கித்தான் போகனும். இது இயற்கையின் நியதி.

உங்களால் மாற்றமுடியுமா? அவர்களுக்கு வேலையின் உரிமைகளத்தரவியலுமா? ஆராலும் முடியாது.

ஏனென்றால், இங்கே தலித்துகள், unorganised labour. In our county, unorganised labour have no help of laws. They dont come under any law.

cont'd

Anonymous said...

'தங்கள் ஊர்”, மெஜாரிட்டி போன்றவை.

பொதுப்பாதையை அமுக்கிக்கொண்டாலன்றி வேறு விட்யங்களில் ஜாதி இணந்துக்கள் செய்தது சரியே.

தங்கள் ஊர் என்கிறார்கள். ஏனெனில் காலம்காலமாக அவர்கள் அங்கு இருக்க, தலித்துகள் அவர்கள் ஊரில் அவர்களின் அடிமைகளாக இருந்து வருகிறார்கள். எனவே அவர்கள் ஊர் அங்கு மற்றவர்கள் எப்படி இருக்கவேண்டுமோ, அல்லது இருந்தார்களோ அப்படித்தான் இருக்கவேண்டும்.

But I agree with you in objcting to caste hindus's act of 'abusing' the public property, ie. road here..which rightfully belong to all.

Anonymous said...

போலீசு.

They are part and parcel of this very society. A society which discriminates against dalits. You want the police to be different. How can they be?

By inducting dalits into the force, there is no guarantee that the police will hear the dalits. Because of two facts:

Police will always be on the side of power and money. ஆரிடம் இவையிரண்டும் இருக்கிறதோ அங்கே. காரணம். போலிசாரும் அவர்களுக்குப்பயப்படவேண்டும். இல்லயெனறால், பணம், பதவி போன்றவற்றைவைத்து, போலீசாரின் பத்விக்கே வேட்டுவைத்து விடுவார்கள்.

Next, as pointed out by Kalvettu.
i.e. The dalits once got power and post, or more money and standards of life, wont like to associate with their former poor dalit brethren. இளையராஜாவும் அவர்கள் சகோதரர்களும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

Dalits in police force will side with Caste Hindus. If you dont accept me, there are many IPS dalit officers, who are, and were, and they occupied even the top posts. They used their time and power to be close to Caste Hindu politicians and others.

தயவு செய்து இந்த வசனத்தை எழுதுவதற்கு மன்னிக்கவும்.

‘ஒரு மயித்தையும் புடுங்க முடியாது”

If you dont accept me, please read kalvettu's message posted here.

Anonymous said...

சரி..என்னதான் முடிவு?

Urbanise villages. If not destroy the equation. If not, empower dalits with education and awareness of human rights. Give them land to till on their own. Buy their produce. Take all steps to make them their own employers. Tell them to live within their own community in the village. Dont look askance at the CHs.

If dalits come up this way, they will get their self respect and wont look unto others for help. Even they may outrun others.

The sad EQUATION is the main culprit.

DESTROY IT.

Deserve before you desire.

If you ask for respect, first become worthy of respect.

I cant respect a slave. Do you, Mr Dharumi? I think, you too.

But you now wish, the CHs in that village should respect their own slaves.

மதுரை சரவணன் said...

அய்யா கோபம் கொப்பளிக்கிறது.... எனக்கு தெரிந்து பல விசயங்கள் இது போன்று பல இடங்களில் நடக்கிறது . இருப்பினும் நாம் ஒன்றும் செய்ய இயலவில்லை. பூனைக்கு பலர் மணிகட்ட பிறந்தாலும் ,அவர்கள் ஆதிக்கச் சாதியால் அழிகின்றனர். அதானாலே பய்ப்ப்டுகின்றன்ர். சாதி அரசியல் மிகவும் முக்கியமானதாக தெரிவதால்,நம்மால் முடியாது என்று தான் நினைக்கிறேன்.

SurveySan said...

Jo Amalan சொல்வது நியாயமாகத் தெரிகிறது.

அடிமட்டத்தில் இருப்பவர்களை empower செய்வதைத் தவிர இந்த கேடுகெட்ட நிலைக்கு வேறு எந்த ஒரு தீர்வும் இல்லை.

நீங்க சொல்ற மாதிரி சாதியத் திமிர் கொண்ட கும்பலில் இருக்கும் நாலஞ்சு நல்லவர்கள், போனா போகுது, சாலையை உபயோகிச்சுக்கட்டும்னு சொன்னாலும், நிரந்தர தீர்வு இல்லை அது. 'பிச்சை' போடுவது போல், உரிமையை கொடுப்பதும் அதை பெருவதும் சரியாய் படலை.

கூலி வேலை செய்பவர்களுக்கு எந்த ஊரிலும் மதிப்பு இருப்பதில்லை. நோயாளிகள் போல்தான் மதிக்கப்படுகிறார்கள்.

கல்வெட்டு கூறும் நவ பார்ப்பனர்கள் பலரும் (or government), தங்கள் சமூகத்துக்கு உதவாவிட்டால், அரசு, நிலம் தந்து, கொள்முதல் செய்து, ஏத்தி விட்டாத்தான் உண்டு.

Anonymous said...

a few words more

aathikka sakthikal. i.e power blocs.

Since ancient times, in districts madurai and below, excepting the coastal villages which are left to fisherfolk, rest of the land are with the following power blocs:

Thevars
Pillais

Other castes are not dominant. Nadars were not a power bloc in Nellai and KK distrcts. They were mildly untouchable according to socio historians. They became a power bloc equal to Thevars and Pillais in these districts only after independence.

Power comes from ownership of land; and money got from the produce. and today, governance - not necessarily in Fort St George, but in local levels which are so many.

In Tirunelveli constituencies, candidates from all parties are always from these power blocs. In KK, between Nadars and Pillais earlier times. But today it is between Nadar and Nadar i.e Christians Nadars vs. Hindu Nadars. CNadars on the ascendant today - so powerful that they could mame the new bus station of nagercoil after a Bishop Christopher, unlike in other cities and towns in TN where either names of Anna, or Periyaar, or Rajaji (rarely), or Kamaraj, or any other political leader are chosen. The incumbent MP Mrs Helen Davidson defeated other Hindu Nadars who were fielded under different parties.

As the power blocs needed slaves to till their soils and produce their goods, and do other cleaning work for them, they needed Dalits large in number always: so you found them everywhere in distcs Madurai and below. But never was a power bloc.

One power bloc wont treat the other power bloc as slaves, but only as enemy. On the contrary, all power blocs will treat the dalits as slaves.

Therefore, if you find instances like the village in your post, it is due to the fact that the powerful vs the powerless.

By empowerment through various means, dalits can be made into a power bloc. Things will get automatically resolved.

In the village you cited, the incidents came to light. That does not mean in other places, the dalits are well as equals. Not at all. There, it is tacitly understood that they are not equals and the dalits themselves have resigned to their fate. Like a scavenger's son internalised the stench of human exreta so much so that he cant differentiate between foul and fair in smells, so also, the dalits everywhere in India have internalised their slavish mentality; so they are unable to be aware of their low status: the slavery. Subconsiously they fell low and powerless; and ashamed of themselves. Only after independence we come across their uprisings here and there; but for thousands of years they accepted their lot.

My question to you: Why do you want to use my money to empower my slaves to become my equals or peers? Go and collect money from dalits to empower them - ask the members of power blocs

Unless you can cut the root cause, you cant settle things right. And your anger is, as Bharati would call, pettaippulambal ithu. pirarkku thunaiaamo?

JO AMALAN RAYEN FERNANDO

ஆனந்தி.. said...

அண்ணா...எனக்கு மத்த ஊரு பத்தி தெரியலே..ஆனால்..இது நம்ம ஊரில் ஜாஸ்தி..அதுவும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இன்னும் ரொம்பவே ஜாஸ்தி..நல்லா படிச்சவங்க கூட இன்னும் இந்த நிலையில் தான் இருக்காங்க..நம்ம ஊரில் தான் ஜாதி பார்த்து வீடு கூட வாடகைக்கு விடுவாங்க...உத்தப்புரம் மற்றும் சுத்து வட்டார கிராமங்கள் எல்லாவற்றிலும் நாம் ஒரு 50 வருஷதிருக்கு முன்னாடி கேள்வி பட்ட தீண்டாமை இன்னும் இருக்கு...மதுரை பக்கம் சில kiramaangalil இன்னும் ஜாதி வாரியாக தெருக்களே இருக்கு..தலித்துக்கள் அந்த தெருக்குள்ளேயே நுழைய கூடாது..நுழைஞ்சால் செருப்பு கழட்டிட்டு தான் நடக்கணும்...மதுரை கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமா மக்கள் காலியாகுறாங்க அண்ணா..அவர்களால் முன்னேறவும் முடிவதில்லை...முன்னேற விடுவதும் இல்லை..எல்லாமே ஜாதிகள் தான்..சென்னை,பெங்களூர் போன்ற பேரு நகரங்களில் நீங்கள் கூலி தொழிலாளர்கள் கிட்டே எந்த ஊருன்னு கேட்டு பார்த்தால்..பெரும்பாலும் அவர்கள் மதுரை சுத்து வட்டாரமாகவும்,தலித் மக்காளவும் இருக்க வாய்ப்பு இருக்கு அண்ணா..என்னவோ எதுவும் சரியில்லை..

Post a Comment