Monday, November 29, 2010

459. அமினா - த.மு.எ.க.சங்கத்தின் விருது பெற்ற விழா

*

அமினாவிற்கு "திசைஎட்டும்" அளித்த விருது விழா ...


*
Image and video hosting by TinyPic




27.11.2010 அன்று மாலை 6 மணிக்கு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் 2009 ஆண்டிற்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழா வெளியலங்காரங்கள் ஏதும் இல்லாமல் ஆனால்  அழகாக, இனிதாக நடந்தது. பதினெட்டு பேருக்கு மேல் பேச இருந்தும் கால அளவுகளை அழகாக அமைத்து கூட்டம் முறையாக நடந்தது.

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic
விழாவில்  விளிம்பு நிலை மக்களுக்கான இலக்கியப் பரிசை திரு. கே. கங்காதரன் அவர்களின் 'யார் அந்த பஞ்சமர்? ஒரு தொலைந்த உலகு' என்ற நூலிற்காக அளிக்கப்பட்டது. இப்பரிசு எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்களின் நினைவுப் பரிசாக அவரின் குடும்பத்தாரால் அளிக்கப்பட்டது. சமுத்திரம் அவர்களின் மகள் திருமதி. அமுதா ரமேஷ் அவர்களுக்கு சங்கத்தின் மரியாதை செய்விக்கப்பட்டது. சமுத்திரத்தின் எழுத்து எப்படி எப்போதும் விளிம்பு நிலை மனிதர்களின் நலன் கருதியே இருந்ததை நினைவூட்டினார்கள். 
Image and video hosting by TinyPic
திருமதி அமுதா ரமேஷ் - தோழர் தமிழ்ச்செல்வன்

திருமதி அமுதா கெளரவிக்கப்பட்ட பின், அவர் திரு. கங்காதரனுக்கு சமுத்திரம் நினைவுப் பரிசை அளித்தார்.
Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic

பரிசு பெற்றோர்:

கே. கங்காதரன்       - யார் அந்த பஞ்சமர்? ஒரு தொலைந்த உலகு
கரன் கார்க்கி            - அறுபடும் விலங்கு
முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் - தமிழிசையும் இசைத்தமிழும்
உதயசங்கர்               - பிறிதொரு மரணம்
பெ. கருணாகரன்    - அமேசான் காடுகளும் சகாரா பாலைவனமும் எப்படித்       
                                           தோன்றின.
தருமி                           - அமினா
பெ. கருணாகரன்    - குளம்பொலி ஞானங்கள்


Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic
தோழர் மயிலை பாலுவிடமிருந்து ...

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic
இடப்பக்கமிருந்து:  
இரா.தெ. முத்து, அரிமளம் சு. பத்மநாபன்; பெ.கருணாகரன்; கரன் கார்த்தி; உதயசங்கர்; கங்காதரன்; எஸ்.ஏ. பெருமாள்; தருமி; தமிழ்ச்செல்வன்; சைதை ஜெ.




விழாவின் ஒரு பகுதியாக ரகு என்ற தோழர் பரிசு பெற்ற நூல்களையும், அதன் ஆசிரியர்களையும் பற்றிய ஒருவிவரணப் படம் ஒன்றைத் தயாரித்து திரையிட்டார். மிக  நல்ல அறிமுகமாக அது அமைந்தது. நல்ல படைப்பு. பொருத்தமான இசையுடன் எல்லோரையும் அது கவர்ந்தது.

Image and video hosting by TinyPic

விழாவின் இறுதியில் பேசிய தோழர் தமிழ்ச்செல்வனின் பேச்சு  கொடுக்கப்பட்ட பரிசின் தரத்தை மிகவும் உயர்த்தியது. ஒவ்வொரு பரிசும் நாங்கள் நடத்தும் கலைவிழாவில், சாதாரண மக்களின் அன்பளிப்பால் வந்தவை. தெருப்புழுதியாக இருக்கும் மக்களின் அன்றாட வியர்வையில் நனைந்த பணத்தில் வந்த பரிசுகள் இவையென்றது மனதைத் தொட்டது. பரிசின் மேன்மையும் புரிந்தது.  இந்தப் பரிசுகள்  மேலும் மேலும் உங்களை எழுதத் தூண்ட வேண்டுமென்றார்.



பி.கு.
கூட்டத்திற்கு நம் பதிவர் யெஸ்பா  வந்திருந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது. என்னைப்  பெருமைப்படுத்தியது.

நன்றி யெஸ்பா (பாலபாரதி)
Image and video hosting by TinyPic

10 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் அய்யா.. இது நல்லதொரு ஆரம்பமாக இருக்கட்டும்..:-)))

உமர் | Umar said...

வாழ்த்துகள். :-)

என்னால் நிகழ்வுக்கு நேரில் வர இயலாதது வருத்தமே. :-(

Unknown said...

Let our friendship continues forever... We are waiting to read your next book... Thanks..
Saidai J....

- யெஸ்.பாலபாரதி said...

சென்னையில் வைத்து விருது, அதுவும் நம்ம வாத்தியாருக்கு! நான் வராட்டி எப்படி? நன்றி சொல்லி அன்னியப்படுத்துறீங்களே!!!

RMD said...

வாழ்த்துகள் அய்யா.

Thekkikattan|தெகா said...

தருமி,

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மென்மேலும் பல படைப்புகளை கொடுங்க :-)

புகைப்படத்தில் you look awesome! அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்...

suneel krishnan said...

தங்களுக்கும் ,கௌரவிக்கப்பட்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள்.அடுத்த படைப்பு எப்பொழுது?

Anna said...

Cool! Congratulations!

ரிஷபன்Meena said...

வாழ்த்துக்கள் சார்.

Post a Comment