After Taseer's death, bloggers campaign on
இஸ்லாமியத்தைக் கேள்விக்கு உட்படுத்தி நானெழுதிய சில பதிவுகளுக்கு எதிர்ப்பாக வந்த பதிவுகளில் இருந்த சினம், மொழி நடை, சிந்தனை ஓட்டம், கொடுத்த பதில்கள் எல்லாம் முதலில் நெருடலாக இருந்தன. மற்ற மதங்களைப் பற்றி எழுதும்போது வராத எதிர்ப்புகள், அதுவும் மிகவும் க்டுமையான எதிர்ப்புகள், இஸ்லாமைப் பற்றி எழுதும்போது மட்டும் வரவே அதற்காகவே மேலும் மேலும் இஸ்லாமைப் பற்றிய அறிந்து கொள்ள ஆவல் எழுந்தது. அதுவே ஒரு தொடர்கதையாகப் போனது. ஆனாலும் ஏன் இந்த அளவு எதிர்ப்புகள் என்ற நினைவுக்கு இன்றைய செய்தி ஒன்று சிறிது பதிலளித்தது.
பாகிஸ்தானின் பஞ்சாப் கவர்னர் சல்மான் தஸீர் அவரது பாதுகாவலனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தேவ தூஷணம் (blasphemy) என்ற குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஆதரவாக இவர் பேசினார் என்பதால் 'வலது சாரி'களால், (மதத் தீவிரவாதிகளால்) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சி பாகிஸ்தானின் இணையப் பதிவர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.'Citizens for Democracy' என்ற ஓரமைப்பு இந்த கடும் சட்டத்தை நீக்க வேண்டுமென்கிறது. ஒரு பதிவாளர் தன் பதிவில் சொன்னது: "63 ஆண்டுகளுக்கு முன் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட நெருப்புக் கிடங்கில் இன்னும் நாம் வெந்து சாகிறோம். அறிவற்ற, பகுத்தறிவில்லாத, மிகவும் மோசமான இச்சூழலை தக்கவைக்கவே மதம் துணை போகிறது. சல்மான் இந்தப் பைத்தியக்காரத்தனத்திற்கு இரையானார். யாருக்கும் இங்கு பாதுகாப்பில்லை ... "
சுட்டுக் கொன்ற பாதுகாப்பாளனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஒரு குழு குரலெழுப்புகிறது. ஆனாலும், இன்னொரு குரல் ...
"அனுபவித்தவை போதும். இன்னொரு வீர மரணம் .. அவரது மரணம் ஒரு தியாகியின் மரணம். இந்த மூடத்தனம் முடிய வேண்டும். தேவதூஷணச் சட்டங்களும் அதனோடு இணைந்த மற்ற கருப்புச் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும். இறந்த தஸீரின் மரணம் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது. தஸீர் இறந்து விடவில்லை ... இன்னும் நம்முடன் தானிருக்கிறார். அவர் நம்மைப் பார்த்து விடும் அறைகூவல், "நான் என் கடமையைச் செய்து விட்டேன்; நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?"
கடவுளைக் காப்பாற்றும் இந்த நிலை எந்த ஒரு நாட்டுக்கும் எதற்கு? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அந்தப் பாவப்பட்ட கடவுள்?
கடவுளை விட்டு விடுங்கள். மனிதனைப் பாருங்கள்.
-----------------
இந்து - 6.1.2011
http://www.thehindu.com/news/international/article1034830.ece
http://hindu.com/2011/01/06/stories/2011010655861700.htm
மிக நல்ல "சாமியார்கள்" .. இவர்களை நம்பி ஒரு ஆட்டுமந்தைக் கூட்டம்!
For most, it (this murder) represented not just growing intolerance but shrinking of space for any kind of discourse.
-----------------------------
07.01.2011
http://www.thehindu.com/opinion/op-ed/article1045862.ece
//Yesterday on Twitter, the medium beloved of Taseer, liberal Pakistanis bemoaned the disappearance of "Jinnah's Pakistan" – the tolerant, pluralistic country envisioned by its founder, the lawyer Muhammad Ali Jinnah, in 1947. Still others struggled to remember when it truly existed.//
பாவம் ஜின்னா ...
//And in the streets outside, Pakistan's silent majority — the ordinary, moderate people who do not favour extremism or violence, and only want their society to thrive — were saying nothing. But in Pakistan, that is no longer good enough. Silence kills.//
--------------------
இந்தப் பதிவில் உள்ளது போல் அரசும் மதமும் ஒன்றாக இருக்கக்கூடாது என்பதற்காக நான் எழுதிய முந்திய பதிவு இப்போது வாசிக்கப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
----------------------------------
16 comments:
தம்மை மறுப்பவனுக்கு நரகத்தில் இடம் இருக்கு என்பது தானே பல கடவுளின் வாக்கு, அதாவது அதற்கு அர்த்தம் தண்டனை.
பின் இவர்கள் ஏன் கடவுளின் வேலையை செய்கிறார்கள், தம்மையே கடவுளாக நினைத்து கொள்வதாலா!?
//நான் என் கடமையைச் செய்து விட்டேன்; நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?//
நாமும் நம் கடமையை தொடர்ந்து செய்வோம் சார், எதற்காகவும் பின்வாங்க வேண்டாம்!
//63 ஆண்டுகளுக்கு முன் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட நெருப்புக் கிடங்கில் இன்னும் நாம் வெந்து சாகிறோம். //
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைய சொல்றாங்களா? ப்ளாக்ஸ்பாட்டுக்கு தடையில்லயா?
//கடவுளைக் காப்பாற்றும் இந்த நிலை எந்த ஒரு நாட்டுக்கும் எதற்கு? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவரா அந்தப் பாவப்பட்ட கடவுள்?
// :)))
//கடவுளை விட்டு விடுங்கள். மனிதனைப் பாருங்கள்.//
ஏன் இந்த பஞ்ச் டயலாக் இல்ல அட்வைஸ் அருணாச்சலம் அவதாரம்? :))
//மற்ற மதங்களைப் பற்றி எழுதும்போது வராத எதிர்ப்புகள், அதுவும் மிகவும் க்டுமையான எதிர்ப்புகள், இஸ்லாமைப் பற்றி எழுதும்போது மட்டும் வரவே அதற்காகவே மேலும் மேலும் இஸ்லாமைப் பற்றிய அறிந்து கொள்ள ஆவல் எழுந்தது. அதுவே ஒரு தொடர்கதையாகப் போனது. //
நல்ல,மிகவும் அவசியமான பதிவு,
இந்த கொலை மனித நேயம் நாடும் அனைவராலும் கண்டிக்க தக்கது.ஒரு மதத்தின் கொள்கைகளை சிலர் விளங்கிய(விரும்பிய) வண்ணம் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது நாகரிகமான செயல் ஆகாது.
மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம்,அதன் எல்லைகளை ப்ரிந்து கொண்டால் இந்த பிரச்சினைகள் வராது.மத புத்தகங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் இன்று தவறாக,மனித நேயமற்ற் செயல்கள் ஆகி விட்டன.
மற்ற மதங்களும் அதன் பாதுவகாவலர்களும் கூட மதத்தின் எதிரிகளாக கருதியவர்களை கொன்று குவித்த வரலாறு உண்டு.ஆனால் எல்லா மதங்களும் இப்போது அதன் எல்லைகளை புரிந்து கொண்டுவிட்டன.
இஸ்லாம் குறித்த முஸ்லிம்களின் புனிதப் புரிந்துணர்வு அம்மதத்தின தன்னிச்சையான பாதுகாவலர்களால் இன்று கூட எளிதாக எதனை(மனித்ன்,கொள்கை,நாடு) எதிர்த்தும் வழிநடத்தப்படும் சூழ்நிலையிலேயே உள்ளது.இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.
மத சார்புள்ள நாடுகளில் வாழும் பிற மத சிறுபானமையினர்,மத ஈடுபாடு இல்லாதோர் நிலைமை மிகவும் கடினம் என்பதையே காட்டுகிறது.
இன்றைய இந்துவில் வந்த இரு படங்களையும், இரு செய்தித் தொடுப்புகளையும், இரு சொற்றொடரையும் இணைத்துள்ளேன்.
கபீஷ்,
//கடவுளை விட்டு விடுங்கள். மனிதனைப் பாருங்கள்.//
ஏன் இந்த பஞ்ச் டயலாக்//
அங்கேயுள்ள பதிவர்களே இப்படி நன்கு சிந்திக்கிறார்களே என்ற அங்கலாய்ப்பு...
saarvaakan அவர்களின் பின்னூட்டத்தை வழிமொழிகின்றேன்.
:-(((((((((
எனக்கென்னவோ இந்த 21ஆம் நூற்றாண்டில் மனிதனின் மீதான மதத்தின் பிடி இளகாமல் இறுகுவதாகவே தோன்றுகிறது.ஒருவர் மீது ஒருவர் மதத்திற்காக சண்டையிட்டு அனைவரும் செத்துப்போகும்போது உலகத்தின் ஆகச்சிறந்த அமைதியை (மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து)மதங்களும்,கடவுள்களும் உருவாக்கி விடுவார்கள். என் மதம்தான் உண்மை, உன்கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்று கருதும் ஒவ்வொருவரும் அந்தப்பேரமைதிக்கான தங்கள் பங்கை கொடுப்பதாகவே உணர்கிறேன்.
//தேவ தூஷணம் என்ற குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஆதரவாக இவர் பேசினார் என்பதால் மதத் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்//
முதற்கண் பயனுள்ள பதிவிற்கு நன்றி அய்யா. தவறான விமர்சனம் எனக் கருதுவோர்,அது தவறு என்பதை சுட்டிக்காட்டி அதற்கு உண்மை விளக்கம் தரலாமே தவிர, குற்றம் சுமத்துவது,கொலை செய்வது,மிரட்டல் விடுவது,விரட்டியடிப்பது போன்ற செயல்களும் காட்டுமிராண்டி காலத்துச் சிந்தனைகளை இன்னும் சிறை வைத்திருப்பதின் தாக்கமே தவிர வேறில்லை. ஆனாலும் இது போன்று தீவிரத்தன்மையை இஸ்லாம் போதிக்கவில்லை என்று ஒரு பிரிவினர் கூறிக்கொண்டு நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர். எப்படி பார்த்தாலும் எந்த ஒரு மத நூல்களாலும் நாட்டில் நன்னெறி வளராது என்பது மட்டும் உண்மை. "பக்தி வந்தால் புத்தி போகும்" என்ற பெரியாரின் சிந்தனைதான் நினைவுக்கு வருகிறது.
அங்கேயுள்ள பதிவர்களே இப்படி நன்கு சிந்திக்கிறார்களே என்ற அங்கலாய்ப்பு.//
தருமி, பாகிஸ்தான்ல ப்ளாக் எல்லாம் பதியுறாங்களா? :) பெரிய விசயம்தானே அதுவே!!
நல்ல கேள்வியோட அணுகியிருக்கீங்க. யோசிக்க வேண்டிய விசயம்.
சுட்டவர் ஷார்ட் கட்ல சொர்க்கத்திற்கு துண்டு போட்டுட்டார் போல... என்னாத்தை சொல்ல போங்க.
07.01.2011
http://www.thehindu.com/opinion/op-ed/article1045862.ece
//Yesterday on Twitter, the medium beloved of Taseer, liberal Pakistanis bemoaned the disappearance of "Jinnah's Pakistan" – the tolerant, pluralistic country envisioned by its founder, the lawyer Muhammad Ali Jinnah, in 1947. Still others struggled to remember when it truly existed.//
பாவம் ஜின்னா ...
//And in the streets outside, Pakistan's silent majority — the ordinary, moderate people who do not favour extremism or violence, and only want their society to thrive — were saying nothing. But in Pakistan, that is no longer good enough. Silence kills.//
இந்தப் பதிவில் உள்ளது போல் அரசும் மதமும் ஒன்றாக இருக்கக்கூடாது என்பதற்காக நான் எழுதிய முந்திய பதிவு இப்போது வாசிக்கப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
தேவ துஷ்னம் என்றால் என்ன?
யாராவது சொல்லமுடியுமா?
அது என்னன்னே தெரியாம,இதுக்கு கருத்து சொல்ல முடியல...
அன்புடன்
ரஜின்
Post a Comment